Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலகின் எந்த மூலையிலும் தமிழருக்கு ஆபத்தென்றால்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் எந்த மூலையிலும் தமிழருக்கு ஆபத்தென்றால் அவர்களின் பாதுகாப்புக்காக குரல் கொடுக்க அனைத்து தமிழ் அமைப்புகளும் தங்களை வலிமைப்படுத்த வேண்டும்

[23 - Jஉல்ய் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ]

* தமிழர்கள் அதிகம் வாழும் இரண்டாவது பெரிய நாடான ஈழ நாட்டில் தமிழர்கள் எதிர்நோக்குகின்ற அரசியல் பிரச்சினைகளை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். ஈழப் போராட்டத்தின் தோற்றுவாயும் வரலாறும் அப்போராட்டத்தின் வளர்ச்சிக்கட்டமும் தமிழர்கள் மட்டுமல்லாமல் வேற்று மொழியினரும் புரிந்து கொள்ளக் கூடிய விதத்தில் உண்மைத் தகவல்களை உலகின் பார்வைக்கு அடையாளம் காட்டவேண்டும்.

* மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற 10 ஆவது உலகத் தமிழ் பண்பாட்டு மாநாட்டில் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் அமைச்சர் பெ.சந்திரசேகரன் கடந்த சனியன்று ஆற்றிய சிறப்புரை

`அறிவுமைய நூற்றாண்டு தகவல்மைய நூற்றாண்டு என வர்ணிக்கப்படும் புதிய நூற்றாண்டின் பல்வேறு அம்சங்கள், வரலாற்று ரீதியாக தமிழர்கள் இதுவரை காலமும் எதிர்நோக்காத பல புதிய சவால்களை முன்வைத்துள்ளது. அந்நியராட்சிக் காலத்தில் கூட தமிழரின் தனித்துவத்திற்கு இவ்வாறான பயங்கர அச்சுறுத்தல்கள் எதுவும் எழுந்ததில்லை. ஆனால் இன்றைய நிலைமை வேறு. புதிய நூற்றாண்டில் ஏராளமான மொழிகளும் தனித்துவம், பண்பாடு மிக்க பல இனங்களும் அழிந்து வருவதாக யுனெஸ்கோ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல உலக நாடுகள் இந்த சவால்களை பற்றி நன்குணர்ந்து தமது தனித்துவத்தை பேணும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

இப்பின்புலத்தில் உலகளாவிய தமிழர்கள் சோம்பியிருக்க முடியாது. தமது தனித்துவம் மிக்க மொழியையும், பண்பாட்டு அடையாளத்தையும் பேணுவதற்கு அடையாளமாக ஆக்கபூர்வமான சிந்தனைகளும், ஆலோசனைகளும் இன்றைய காலகட்டத்தில் கட்டாயமாகத் தேவைப்படுகின்றது. இந்த அனைத்துலக தமிழ் பண்பாட்டு மாநாடு இந்த அறைகூவலை நிச்சயமாக கருத்திற்கொண்டு செயற்படுமென நான் திட்டவட்டமாக நம்புகின்றேன்.

கோளமயமாக்கத்தின் தாக்கத்தின் காரணமாக சர்வதேசத்தின் குடிமக்களாக வளர்ச்சிபெறும் எமது தமிழ் மக்கள் தமது பண்பாட்டு வரலாற்றுச் சிறப்புகளை உறுதியுடன் பின்னோக்கிப் பார்த்து அவற்றுக்கு புத்துயிரளித்து பேணுவதற்கு திடசங்கற்பம் பூணவேண்டும் என்ற உறுதியுடன் இம்மாநாடு பல புதிய சிந்தனைகளை முன்வைக்க வேண்டும்.

அந்தவகையில் உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் அறிஞர்களையும் ஆர்வலர்களையும் ஓரிடத்தில் கூடச் செய்து தமிழினம் பெருமைப்படும் விதத்தில் மகாநாடொன்றை நடத்துவது எளிதான முயற்சியல்ல.

இத்தகைய பெரும் பணியில் தம்மை ஈடு படுத்திக் கொண்டுள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஆணிவேராக இருந்து செயற்படும் அனைவருக்கும், அதிலும் குறிப்பாக அமைப்பின் தலைவர் திரு.ப.கு. சண்முகம், செயலாளர் நாயகம் துரை.கணேசலிங்கம் ஆகியோருக்கும் தமிழினமே கடமைப்பட்டிருக்கிறது.

இந்த மாநாட்டின் நோக்கம் உலகத் தமிழர்களில் இனங்காணப்பட்டுள்ளோரை அழைத்து கலை விழாவோ, களியாட்ட நிகழ்ச்சியோ நடத்துவதல்ல. தமிழர்களின் மொழி, கலாசாரம், பண்பாடு பாரம்பரிய கலை வடிவங்கள் அனைத்தையும் பாதுகாத்து வளர்த்தெடுப்பதற்கான புதிய அணுகுமுறைகளை உலகத் தமிழர்களுக்கு அடையாளம் காட்டுவதேயாகும்.

இப் பின்புலத்தில் உலகளாவிய தமிழர்கள் சோம்பியிருக்க முடியாது. தமது தனித்துவம் மிக்க மொழியையும் பண்பாட்டு அடையாளத்தையும் பேணுவதற்கு ஆக்கபூர்வமான சிந்தனைகளும், ஆலோசனைகளும் இன்றைய காலகட்டத்தில் கட்டாயமாகத் தேவைப்படுகின்றது. இன்று நடைபெறுகின்றது. இன்று நடைபெறுகின்ற இந்த அனைத்துலக தமிழ்ப் பண்பாட்டு மகாநாடு இந்த அறைகூவலை நிச்சயமாக கருத்திற்கொண்டு செயற்படுமென நான் திட்டவட்டமாக நம்புகின்றேன்.

அறிவுமைய நூற்றாண்டு, தகவல்மைய நூற்றாண்டு என வர்ணிக்கப்படும் புதிய நூற்றாண்டின் பல்வேறு அம்சங்கள், வரலாற்று ரீதியாக தமிழர்கள் இதுவரை காலமும் எதிர்நோக்காத பல புதிய சவால்களை முன்வைத்துள்ளது. அந்நியராட்சிக் காலத்தில் கூட தமிழரின் தனித்துவத்துக்கு இவ்வாறான பயங்கர அச்சுறுத்தல் எதுவும் எழுந்ததில்லை. ஆனால், இன்றைய நிலைமை வேறு. புதிய நூற்றாண்டில் ஏராளமான மொழிகளும் தனித்துவம், பண்பாடுமிக்க பல இனங்களும் அழிந்து வருவதாக யுனெஸ்கோ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல உலக நாடுகள் இந்த சவால்களை பற்றி நன்குணர்ந்து தமது தனித்துவத்தைப் பேணும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.

தமிழ்மொழியின் முதிர்ச்சிக்கும், தமிழ் அறிஞர்களின் சிந்தனைத் திறனுக்கும் பழந்தமிழ் இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. அதைப்போலவே தமிழர்களின் வீரத்தையும், விவேகத்தையும் வெளிக்கொணர கடந்தகால வரலாற்று சாதனைகள் சாட்சிகளாக இருக்கின்றன.

இதுவரை கிடைத்துள்ள தமிழ் இலக்கிய செல்வங்களில் மிகப் பழமையானதாக தொல்காப்பியம் அமைந்துள்ளதென ஆய்வாளர் அறுதியிட்டுக் கூறுகின்றனர்.

அந்த மிகப் பழமையான இலக்கியத்தில் ஊற்றெடுக்கின்ற கற்பனைத் திறனையும், மொழியாட்சியையும், சிந்தனை வளத்தையும் கலாசார முதிர்ச்சியையும் கவனத்திலெடுத்துப் பார்க்கும்போது பழமையான இலக்கியமே இத்தனை தரம் மிக்கதென்றால் தமிழர்களின் நாகரிக வளர்ச்சியும் வாழ்வியல் நெறிமுறைகளும் எங்கே ஆரம்பித்தன என்பது எண்ணிப் பார்க்க முடியாத, காலத்தால் முற்பட்டதாக பிரகாசிக்கின்றன.

வரலாற்றுக் காலத்தில் எத்தனையோ யுத்தங்கள், எவ்வளவோ படையெடுப்புகள், அந்நிய இனத்தின் அளவிடமுடியாத அடக்குமுறைகள் அனைத்தையும் உந்தித்தள்ளிவிட்டு தமிழ் இன்றைக்கும் பெருமையோடு வானுயர நிமிர்ந்து நிற்கின்றதென்றால், நமது மொழியின், இனத்தின் சக்தி எத்தகையது என்பதை மெய்சிலிர்க்க நினைத்துப் பார்க்கின்றோம். இவையெல்லாம் நம் மொழியும் இனமும் கடந்து வந்த பாதைகள், ஆனால், இன்றுள்ள நவீன உலகத்துக்கு தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையும் கட்டாயமும் நமக்கு ஏற்பட்டுள்ளன.

இந்த முயற்சியில் உலகமெங்கும் பல தமிழ் அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. பல மகாநாடுகள் நடத்தப்படுகின்றன. நூற்றுக்கணக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன!.

தமிழ்மொழிக்காகவும் தமிழர்களுக்காகவும் குரல்கொடுக்க பல அமைப்புகள் தம்மை தயார்படுத்திக்கொண்டிருக்கி

  • கருத்துக்கள உறவுகள்

இப்பின்புலத்தில் உலகளாவிய தமிழர்கள் சோம்பியிருக்க முடியாது. தமது தனித்துவம் மிக்க மொழியையும், பண்பாட்டு அடையாளத்தையும் பேணுவதற்கு அடையாளமாக ஆக்கபூர்வமான சிந்தனைகளும், ஆலோசனைகளும் இன்றைய காலகட்டத்தில் கட்டாயமாகத் தேவைப்படுகின்றது. இந்த அனைத்துலக தமிழ் பண்பாட்டு மாநாடு இந்த அறைகூவலை நிச்சயமாக கருத்திற்கொண்டு செயற்படுமென நான் திட்டவட்டமாக நம்புகின்றேன்.

ஐயோ ஐயோ பேசுறது யாரென்று பாருங்கோ! எலும்புத் துண்டுக்காக மகிந்த காலடியில் வாலைச் சுருட்டிப் படுத்திருக்கும் ஜீவராசி. ஏரோப்பிளேனேறி மலேசியா போனதும் பொத்துக் கொண்டு வந்திருக்குத் தமிழுணர்வும் இனவுணர்வும்.இதை இந்த வார நகைச்சுவையாகத் தானே போட்டிருக்கிறீங்கள் நுணாவிலான்? <_<

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரின்

மலையக மக்கள் முன்ணனி சரியோ, பிழையோ செய்வது என்பது தெரியாதது. ஆனால், எம்மவர்கள் காலடியில் நின்று மகிந்தவை நியாயப்படுத்தும்போதோ, அல்லது புலத்தில் சிங்களக் கொடுமைகளை மறைத்து, தமிழரின் போராட்டத்தைப் பலவீனப்படுத்த முயல்வது போன்றோ, மலையக மக்கள் முன்ணனி செய்யவில்லை.

மகிந்தவோடு சேர்ந்திருந்தாலும், எம் போராட்டத்தைப் பற்றி அவர்கள் கொச்சையாகக் கதைக்கவே இல்லை என்பது தான் அவர்களின் சிறப்பு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் பல்டி அடிக்கவேண்டிய நியதியில் மலையக மக்கள் முன்னணி உள்ளது தவிர்க்க முடியாது.அவர்களின் நிலைமையில் முற்று முழுதாக விடுதலை புலியாக இருக்கமுடியாது.திரு வை.கோ போல தேவைக்கேற்ப கட்சி மாற வேண்டிய நிர்ப்பந்தம் சந்திரசேகரனுக்கும் உண்டு.

தமிழர்களின் தானை தலைவன் என்று கூறப்படும் திரு ஜி ஜி பொன்னம்பலம் மலையக தமிழர்கட்கு எதிராக வாக்களித்து அவர்களின் உரிமையை பறித்ததை எந்தமலையக மறக்க மாட்டான் என்று நினைக்கின்றேன்.

திரு சந்திரசேகரன் விடுதலை புலி என கூறி பல முறை சிங்கள வதை முகாமில் வாடியவர் என்பதும்,தலைவரின் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜஸ்டின் சொன்னதில் உண்மை இருக்கு ஒரே தேசியதலமை அது இது என வன்னியில் பினாத்தி விட்டு கொழும்புவந்து அரசில் சேர்ந்தவர்தான் சந்திரசேகரன் அது மட்டுமல்ல அண்மையில் நடந்த கிழக்கின் உதயம் என்னும் மகிந்தவின் வெற்றி விழாவில் மலையக மக்கள் முன்னணியை சேர்ந்த ராதாகிருஸ்ணன் எம்பி கலந்து கொண்டதும் உங்களுக்கு தெரியும் மலயக தலமைகள் என்றும் அந்த மக்களுக்கும் விமோசனத்தை தேடிதரபோவதில்லை.இவர்கள் எல்லாம் சந்தர்பவாத அரசியல் வாதிகள்

சம்பள உயர்வு போராட்டம் என அப்பாவிகளை வேலைக்கு செல்லவிடாமல் தடுத்து மாதகணக்கில் போராடி 1 ரூபா உயர்வை பெரிய உயர்வாக எடுத்து பினாத்துவீனம் ஆனால் அந்த தொழிலாளி வேலை நிறுத்தத்தால் இழப்பதோ 3750 ரூபாய்[ஒரு நாளைக்கு 125 வீதம் 20 நாளைக்கு என எடுகோள்]இந்த ஒரு ரூபாய் சம்பளத்தை ஒருவருட த்துக்கு அவரால் 365 ரூபாய்தான் சேமிக்க முடியும் அவர் வேலை நிறுத்தத்தால் இணைந்த அந்த பணத்தை சேகரிக்க 10 வருடங்கள் உழைக்க வேண்டும் இதை புரியாத அந்த பாமர மக்களை ஏமாற்றி கோடிகளில் புரளுகின்றனர் மலையக அரசியல் தலமைகள்

மகிந்தவோடு சேர்ந்திருந்தாலும், எம் போராட்டத்தைப் பற்றி அவர்கள் கொச்சையாகக் கதைக்கவே இல்லை என்பது தான் அவர்களின் சிறப்பு.

கதை என்பது யாருக்கு வேண்டும் நண்பரே அப்படி பார்க போனால் ஹக்கீம் இவரை விட ஆதரவாக கதைகிறார் என்பது குறிப்பிடதக்கது

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். தமிழர்களுக்காக சிறிலங்காவில் நிறையச் சேவை செய்யும் ஒருவர். மலையகத் தமிழருக்குச் சலுகை பெற இப்படியெல்லாம் நடிக்க வேண்டியிருக்கும் போல. சந்திர சேகரனின் அமைச்சு இளைஞர் வலுவூட்டல் அது இது என்று ஏதோ நீளமான பெயருடன் இருக்கிறது. மலையக கிராம சேவகரின் கிறுக்கல் கடித்ததுடன் மட்டுமே கொழும்பு வந்து பொலிசில் பிடி பட்டு சிறையில் வாடும் மலையக இளையோருக்கு ஒரு அடையாள அட்டை கூட பெற்றுக் கொடுக்கும் வலுவற்ற மாபெரும் மக்கள் சேவையாளன் தான் பேசியிருக்கிறார். ஆறுமுகத்தாரை விடப் பெரிய எலும்புத்துண்டு தனக்குக் கிடைக்க வேண்டும் என்ற காரணத்தால் மலையக மக்களின் சம்பள உயர்வுப் போராட்டத்திலும் ஒரு போட்டியை உருவாக்கி அவர்களின் வயிற்றில் அடித்தது பெரிய சேவை தான்.தற்போது செய்யும் தமிழ் நலனோம்பு சேவைகளில் ஒன்று அவசரகால நீடிப்பு வாக்களிப்பு நாட்களில் கழிப்பறைக்குள் ஓடி ஒளிந்து கொள்வது. மகிந்தவுக்குச் சொல்லும் சாட்டு வயிற்றுக் கோளாறு; மக்களுக்குச் சொல்லும் விளக்கம் தமிழ்ப் பற்று!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.