Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை முழுமையாக இருளை அரவணைக்கிறதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை முழுமையாக இருளை அரவணைக்கிறதா?

 

 

 
இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்  , மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கள்ஆகியவை  முரண்பட்டிருப்பதாகத் தென்படுகின்றமை   நெருக்கடியை மேலும் மோசமாக்குகிறது
*சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம்உலை   எண்ணெய் பற்றாக்குறையால் தனது செயற்பாடுகளை நிறுத்தியுள்ளது
*குறைந்தளவு  மழைவீழ்ச்சியால்  நீர்மின் உற்பத்தியும் சவாலாக உள்ளது
*ரந் தெனிகல நீர்த்தேக்கம் ஏற்கனவே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், கொத்மலைக்கும் கடந்த வாரம் முதல் கட்டுப்பாடு  விதிக்கப்பட்டுள்ளது.
 *உலர் வலயத்தில் அமைந்துள்ள வீடுகளின் கூரைகளில் சூரியக்கலன்களை பொருத்துவதே இதற்கு மாற்றாக அமையுமென  நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
*2030 ஆம் ஆண்டிற்குள் மீளப்  புதுப்பிக்கத்தக்கசக்தியை 70%பிறப்பித்து  2050 ஆம் ஆண்டிற்குள் முழுமையாக கார்பன் இல்லாமல்  இருக்க  வேண்டும் என்பதே அரசின் கொள்கை.
 
power-cut--300x175.jpg
00000000000
நிலவும் மின்சார நெருக்கடி இலங்கையர்களை இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் இலங்கை மக்கள் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வது பற்றி தயக்கத்துடனிருந்தனர் , தற்போது நிலவும் எரிபொருள் மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடியுடன் தொடர்ச்சியான மின் தடைகளை எதிர்கொள்ளபொது மக்கள் தயாராகி வருகின்றனர். பொறியிய  லா ளர்கள் மற்றும் நிபுணர்களின் எச்சரிக்கைகளுக்கு மத்தியி ல் அதிகாரிகள் ஏன் இந்த நெருக்கடியை எதிர்கொள்ள தயாராகவில்லை என்பது பற்றி சந்தேகம்  சூழ்ந்திருக்கிறது . எவ்வாறாயினும், இலங்கை மின்சார சபை ), இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்  மற்றும் மின்சக்தி , எரிசக்தி அமைச்சுக்கள் முரண்பட்டிருப்பதாகத்  தெரிகிறது; இது நெருக்கடியை மேலும் மோசமாக்குகிறது. இந்தியஎண்ணெய்  நிறுவனத்திடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்கு 500 மில்லியன் அமெரிக்கடொ லர் கடன் பெற மின்சக்தி  அமைச்சர் திறைசேரியிடம்  உதவி கோரியுள்ளார் . ஆனால் இந்த விடயம் குறித்துதிறைசேரி  இன்னும் பதிலளிக்கவில்லை. இன்ன ரு ம் சில நாட்களுக்கு  சமாளிக்கும்  வகையில் எரிபொருள் கொள்வனவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்தந்த அமைச்சர்கள் உறுதிசெய்துள்ள போதிலும், நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடிக்கு மத்தியில் அத்தகைய கொள்வனவுகளை எவ்வளவு காலத்திற்கு மேற்கொள்ள முடியும் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
00000000
மீண்டும் மின்வெட்டு?
 
power-cut-2-300x169.jpg
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நுரைச் சோலை அனல்மின்நிலையத்தின்அலகு  3 ஆனது மீண்டும் இயங்கவிருந்த போதிலும், அது ஜனவரி 28 ஆம் திகதியே திரும்பவும்  செயற்பாடுகளை ஆரம்பிக்குமென  இலங்கைமின்சாரசபை  அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே 100 மெகாவாட்வலுவுக்கு   பற்றாக்குறை உள்ளது. சப்புகஸ்கந்த எரிபொருள்  சுத்திகரிப்பு நிலையம் உலை எண்ணெய் பற்றாக்குறையால் தனது செயற்பாடுகளை நிறுத்தியுள்ளது. தேசிய மின்சாரசபைக்கு  60 மெகாவாட் வலுவை  வழங்கிய மிதவையில்  பொருத்தப்பட்ட மின் உற்பத்தி நிலையம் திங்கள்கிழமை (ஜனவரி 24) முதல் செயற் பாட்டை  நிறுத்தியுள்ளது . மேலும், களனி திஸ்ஸ மின் உற்பத்தி நிலையம் மேலும் நான்கு நாட்களுக்கு இயங்க முடியும். குறைந்த மழைவீழ்ச்சியால்  நீர்மின் உற்பத்தியும் சவாலாக உள்ளது.
00000000000
“யுகத னவிநிலையத்தில்  உலை எண்ணெய் இருப்பு உள்ளது, அது இன்னும் ஒன்பது நாட்களுக்கு நீடிக்கும்” என்று இலங்கைமின்சாரசபையின்   செயற்குழு உறுப்பினர் எரங்க குடஹேவா  தெரிவித்துள் ளார் . “உலை எண்ணெய் ஏற்றிவரும்  செல்லும் கப்பல் பெ ப்ரவரி 3 ஆம்திகதி  வரவிருந்தது, ஆனால் எங்களிடம் உள்ள தகவலின்படி, நிதி பரிவர்த்தனை செய்வதற்கு நாட்டில் டொ லர்கள் இல்லாததால் இந்தக் கப்பல் வராது.”
0000000000
இந்த நிலையில்ஜனவரி 25முதல் பிற்பகல் 1.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை இரண்டு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். “இருப்பினும் நாங்கள் இன்னும் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற வேண்டும்,” என்று குடஹேவா கூறியுள்ளார்
கடந்த வாரம்,இலங்கைபெற்றோலியக் கூட்டுத்தாபன  அதிகாரிகள், இலங்கைமின்சாரசபை  பெ ப்ரவரி முதல் உலை எண்ணெய்[பெ ர்னஸ்ஒயில் ]  இருப்புக்களை கோரியதாகக் கூறினர். இந்தக் கோரிக்கை குறித்து குடஹேவாவிடம் கேட்டபோது, அ க்டோபர் 21ஆம் திகதி முதல், எரிபொருள் தேவை குறித்த வாராந்த அறிக்கையை மின்சார சபை வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். “எனவே அவர்கள் அத்தகைய கூற்றுக்களை விடுக்க  முடியாது,” என்று அவர் மேலும் கூறியுள்ளார் .பொதுப்பயன்பாட்டுஆணைக்குழு   இன்னும் அனுமதி வழங்கவில்லை என்றும், மேற்கூறிய நேரங்களில் தாமதம் ஏற்படும் என்றும் குடஹேவா மேலும் கூறியிருக்கிறார் “பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு  ஒப்புதல் அளித்தவுடன், நாங்கள் அட்டவணையை ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால், விநியோகம் மற்றும் தேவையைப் பூர்த்தி செய்ய மின்வெட்டு இருக்கும் என்று நாங்கள் உறுதியாக கூறமுடியும் ,” என்று  அவர்  தெரிவித்திருக்கிறார் .
000000000
fuel-minister-300x170.jpg
பெரும் நெருக்கடியை நோக்கி..
காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்க இன்று காற்று இல்லை.சூரிய சக்தி  மின்சாரத்திற்கு சேமிப்பு வசதிகள் இல்லை. தற்போதுள்ள சூழ்நிலையை நிர்வகிக்க நெருக்கடி முகாமைத்துவ  குழு எதுவும் நியமிக்கப்படவில்லை. இலங்கையில் மே வரைபோதிய மழை பெய்யாது என பொறியியலாளர்கள் எதிர்வுகூறுகின்றனர்
-சௌமியா குமாரவ டு
இலங்கை  மின்சாரசபை பொறியிலாளர்  சங்கத் தலைவர்
000000000
நிலைமையை வெளிப்படுத்துகையில் , சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள உலை எண்ணெயின் அளவு ஜனவரி 22 வரை போதுமானது என்றுஇலங்கை மின்சாரசபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமியா  குமாரவடு தெரிவித்திருந்தார் . வர ட்சியான காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைவடைந்து வருவதால், நீர் மட்டம் குறையும் போது, மின்சார சபை, நீர்ப்பாசனத் திணைக்களம், நீர்விநியோகச பை  சபை போன்ற அதிகாரிகளை உள்ளடக்கிய நீர் முகாமைத்துவக் குழுவினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.க ரந் தெனிகல நீர்த்தேக்கம் ஏற்கனவே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன்கடந்த வாரம் கொத்மலையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. விக்டோரியா போன்ற நீர்த்தேக்கங்கள் தானாகவே கட்டுப்படுத்தப்படும். காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்க இன்று காற்று இல்லை.சூரியசக்தி  மின்சாரத்திற்கு  சேமிப்பு வசதிகள் இல்லை. தற்போதுள்ள சூழ்நிலையை நிர்வகிக்க நெருக்கடி முகாமைத்துவ  குழு எதுவும் நியமிக்கப்படவில்லை. மே மாதம் வரை இலங்கையில் போதிய மழை பெய்யாது என பொறியியலாளர்கள் கணித்துள்ளனர். எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டாலும், மார்ச் மாதத்திற்குள் மிகப்பெரிய மின்சார நெருக்கடியை சந்திக்க நேரிடும்”  என்று குமாரவ டு கூறியுள்ளார் .
sapukas.jpg
000000000
அடுத்துவரும் காலத்தில் வர ட்சி ஏற்படும், நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறையும் போது எவ்வாறு  நீர் மின்சாரத்தை  உற்பத்தி செய்வோம்? மழைக்காலத்தில் நீரை சேமித்து இந்த உலைகளிலி ருந்து மின்சாரம் தயாரிக்க வேண்டும். வர ட்சியின் போது, அனல்மின் நிலையங்கள் செயற் பட முடியும்
-ரஞ்சன் ஜெயலால்இலங்கை மின்சாரசபை தொழிற்சங்க தலைவர்
0000000000
மாற்று திட்டம் இல்லை
“மின்சாரசபை நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது, அவசரகாலத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான மாற்றுத் திட்டம் எதுவும் இல்லை” என்று இலங்கைமின்சாரசபை   தொழிற்சங்கத் தலைவர் ரஞ்சன் ஜெயலால் கருத்து தெரிவித்தார். “நுரைச் சோலை மின் உற்பத்தி நிலையம் 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து தொடர்ச்சியான செயலிழப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. இவ்வாறான ஒரு செயலிழப்பு ஏற்படும் போது பொறியியலாளர்கள் சுமார் 20 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. அடுத்துவரும்  காலத்தில் வர ட்சி ஏற்படும், நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறையும் போது எப்படி நீர் மின்சாரத்தை  உற்பத்தி செய்வோம்? மழைக்காலத்தில் நீரை சேமித்து இந்த உலை லைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க வேண்டும். வர ட்சி காலத்தில், அனல்மின் நிலையங்கள் செயல்படலாம்,” எனஅவர்  பரிந்துரைத்திருக்கிறார் .
2016 ஆம் ஆண்டு சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்கும் திட்டம் வெற்றியடையவில்லை என்றும் ஜெயலால் மேலும் தெரிவித்தார். “மற்றொரு மாற்றீ டாக குறிப்பாக உலர் வலயத்தில் அமைந்துள்ள வீடுகளில் கூரைகளில்சூரியக்கல ங்களை  நிறுவுவதாகும்.. இவர்களுக்கு கடன் வழங்கலாம். இரவில் சூரிய சக்தியை சேமிக்கும் தொழில்நுட்பம் இதுவரைஎ ம்மிடம் இல்லை. பகல் நேரத்தில் சூரிய சக்தியை உபயோகிப்பதும், இரவில் நீர் மின்சாரத்தை பயன்படுத்துவதும்தான் செய்ய முடியும். 2030 ஆம் ஆண்டளவில் இலங்கை சக்திவலுவில்   தன்னிறைவு பெற்ற நாடாக மாறுவதை இலக்காகக் கொண்டால் அத்தகைய திட்டங்கள் நடைமுறையில் இருக்க வேண்டும். 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுதந்திர வர்த்தக வலயங்கள் தோன்றிய பின்னர் மின்சாரத்திற்கான தேவை பன்மடங்கு அதிகரித்தது. மாற்று வழிகளுக்கு செல்ல ஏராளமான வாய்ப்புகள் இருந்தபோதிலும், நாங்கள் அவற்றை புறக்கணிக்க விரும்பினோம்.
“நாம் இப்போது மாற்று வழிகளுக்கு செல்லவில்லை என்றால், தொழிற்சாலைகளில் மின்சாரம் தீர்ந்துவிடும், மேலும் அவை செயற் பாடுகளை நிறுத்த வேண்டியிருக்கும். எரிபொருள் மின்சாரத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படாமல், போக்குவரத்து மற்றும் ஏனைய துறைகளுக்கு கொடுக்கப்பட வேண்டும்.
“இந்த மின்சார நெருக்கடிக்கு தீர்வு கிடைத்தால் மட்டுமே அரசு தனது பதவிகாலத்தை தொடர முடியும். காலி, அ ம்பாந்தோட்டை, கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களில் அமைந்துள்ள விசைப்படகுகளில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ளும் திட்டம் அப்போது அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் இருந்தது. ஆனால் இந்த கப்பல்கள் டொ லர்களில் நிதி பரிவர்த்தனைகளை செய்கின்றன,” என்ரூ அவர் கூறியுள்ளார்
இந்தியா போன்ற நாடுகள் பெரிய அளவில் எண்ணெய் சுத்திகரிப்பு செய்கின்றன. இப்போது திருகோணமலை எண்ணெய்குதத்தொகுதி  அவர்களுக்கு எழுதப்பட்டிருப்பதால் , சபுகஸ்கந்த மற்றும் களனி திஸ்ஸ மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கு அரசாங்கம் இந்தியாவின் உதவியை நாடலாம். அப்படியானால் இந்தியா எ மக்கு அதிக விலையில் மின்சாரம் வழங்கும், நாம் குறைந்த விலையில் விநியோகிக்க வேண்டியிருக்கும் ,இதனால்  மேலும் நஷ்டத்தை எதிர்கொள்ள  நேரிடும்.
ஒப்பந்ததவணை  , எரிபொருளுக்கானஉடன்படிக்கை  புதுப்பிக்கப்பட வேண்டிய தேவையுள்ளது
டீசல் மற்றும் பெற்றோல் பெறுவதற்கான ஒப்பந்தங்கள் இம்மாதத்துடன் காலாவதியாகும் என ஐக்கிய தொழிற்சங்கப்சக்தியின்  ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித தெரிவித்தார். “சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளதால்,நுரைசோலையிலிருந்து  300 மெகாவாட் விநியோகம் தடைபட்டுள்ளது. சுமார் 20% மின்சாரம் நீர்மின்சாரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது  காற்றாலை மூலம் சுமார் 1500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. தினமும் சுமார் 2800-3000 மெகாவாட் மின்சாரம் தேவை ஆனால் தற்போது 1300 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. எனினும்  ஒப்பந்தகளுக்கானகாலம்   நிறுத்தப்பட்டுள்ளது . ஜனவரி 8 ஆம் திகதி  40,000 மெட்ரிக் தொன்  டீசலை ஏற்றிக்கொண்டு ஒரு கப்பல் வந்தது, ஆனால் அது ஜனவரி 14 ஆம்திகதி  வரை நங்கூரமிடப்பட்டுள்ளது. ஜனவரி 9 ஆம்திகதி மற்றொரு கப்பல் வந்து அதுவும் கடலில் நிற்கிறது . டொ லர் இல்லாமல் எண்ணெய் வாங்க முடியாது. இந்த கப்பல்கள் ஏல நடைமுறையின்படி எரிபொருளைக் கொண்டு வருகின்றன, மேலும் கடன் வாங்கும் நாடு பரிவர்த்தனையை தாமதப்படுத்தினால், சேதம் அறவிடப்படும் என்று பாலித தெரிவித்திருக்கிறார்
ஸ்தலத் தில்   கேள்விமனுக் கோரல்   மூலம் எண்ணெய் வாங்கப்படுவதாகவும், ஒரு பீப்பாய்க்கான பிரீமியத்திற்கு மட்டும் சுமார் 4 மில்லியன் அமெரிக்கடொ லர்கள் செலவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.ஆனால் இப்போது டீசலுக்கு எந்ததவணை  ஒப்பந்தமும் இல்லை. மின்சார சபையை டொலர்களில் செலுத்துமாறு மின் சக்தி அமைச்சர் கோருகின்றார்.இலங்கை  தனித்தனியாக எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாது மற்றும்மின்சாரசபைக்கு  தேவைப்படும் போதுஇலங்கைபெற்றோலியகூட்டுத்தாபனம் எண்ணெய் வழங்க வேண்டும், ”என்றும்  அவர் மேலும் கூறியுள்ளார்
பெற்றோலியகூட்டுத்தாபனத்தினால்   அறிமுகப்படுத்தப்பட்ட சரியான விலைச் சூத்திரம் எதுவும் இல்லை என்றும் பாலித கூறினார். “ஒரு லீ ற் ற ர் எண்ணெய்  100 ரூபாவானால்  அரசாங்கம் பெற்றோலியகூட்டுத்தாபனதிடம்   அதை  90 ரூபாவுக்கு கொடுக்குமாறு கேட்கிறது என்றால் அரசு மானியம் வழங்க வேண்டும். எங்களுக்கு தினமும் 1000 மெட்ரிக்தொன்  எரிபொருளும், சுமார் 1700 மெட்ரிதொன் ஆட்டோடீசலும் தேவை. மேலும் 300 மெட்ரிக்தொன்  மின் உற்பத்தி நிலையங்களால் பயன்படுத்தப்படுகிறது. நாங்கள் சுமார் 1000 மெட்ரிக்தொன்கள்  மண்ணெண்ணெய் மற்றும் சுமார் 500 மெட்ரிக் தொன்கள்  விமான எரிபொருளை உற்பத்தி செய்கிறோம். இவை அதிக டொ லர்களைப் பெறுவதற்கான வளங்களாக இருந்தன, ஆனால் இவை அனைத்தும் நின்றுவிட்டன என்று அவர் உறுதியாக  கூறியுள்ளார்
பாலித மேலும் கூறுகையில்,கோவிட் காலப்பகுதியில்  மின்சார சபை சுமார்43 பில்லியன்ரூபாவை  செலுத்தப்படாத பில்களில் இருந்துபெற்றுக்கொள்ளவேண்டியிட்டிருந்தது.. “எரிபொருளைப் பெற அந்நிய செலாவணி இல்லை என்றால், நிதி அமைச்சும் திறைசேரியும் தலையிட வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்
மீளப் புதுப்பிக்கத்தக்க சக்தியில்  இலங்கை முழுமையாக தங்கியிருக்க முடியுமா?
உலகம் மீளப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி நகர்ந்தாலும், இலங்கையிடம் இன்னும் சரியான திட்டம் இல்லை என எரிசக்திதுறை  நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். டெய்லி மிரருடன்கதைத்துள்ள  சிரேஷ்ட சக்திவளத்துறை  ஆலோசகர் கே.ஞானலிங்கம், நிலக்கரி மின்சக்திக்குப் பதிலாகப் பயன்படுத்தக்கூடிய மாற்றுத் தொழில்நுட்பங்கள் மற்றும்மீளப்  புதுப்பிக்கத்தக்க சக்தியை  இலங்கை முழுமையாகச் சார்ந்திருக்க முடியுமா என்பது குறித்துகருத்து  தெரிவித்துள்ளார் .
உலகெங்கிலும் அனல்  மின் உற்பத்தி நிலையங்கள் பிரபலமடைந்து வருவதால், நுரைச்  சோலையில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமும் காலாவதியானதொன்று  என்று கூறப்படுகிறது தொடர்ந்து அனல் மின்சக்தியை   பயன்படுத்துவதற்கு ,தெரிவு வுசெய்யக்கூடிய மாற்றுத் தொழில்நுட்பங்கள் என்னஎன்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ஞான லிங்கம் கூறுகையில்,
சாதாரணமாக சுமார் 30 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட இந்த உ லை ஏற்கனவே கிடைத்துவிட்டது , மிக அதிக விலையில் உலை யை பெற்றிருந்தோம் , முடிந்தவரை நிலக்கரி உலை யைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. தற்போது இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலை உ லை தொடங்கப்பட்டபோது இருந்த விலையை விட கிட்டத்தட்ட 3 முதல் 5 மடங்கு அதிகமாக இருப்பது வருத்தமளிக்கிறது. விலையுயர்ந்த நிலக்கரியை வாங்குவதற்கு அமெரிக்க டொ லரின் கடுமையான பற்றாக்குறை இப்போது இந்த உ லையில் இருந்து மின் உற்பத்தியை மிகவும் விலை உயர்ந்ததாக ஆக்குகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்த உ லை மொத்த உற்பத்தித் தேவைகளில் கிட்டத்தட்ட 30 முதல் 40% வரை நாம் மாற்று வழிகளைக் கண்டுபிடிக்கும் வரை எடுக்கும். இந்த மாற்று வழிகள் கண்டுபிடிக்கப்படும் வரை, மிகவும் செலவுகூடிய இந்த உ லையைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். காற்று, சூரிய ஒளி மற்றும் உயிரி போன்ற குறைவான மாசுபடுத்தும்சக்திபிறப்பாக் கத்துக்கு  தேவையான மாற்று முறைகளை சேர்க்கலாம். இலங்கைபிறப்பாக்கத்திற்கான இந்த  வளங்களுடன் நன்கு ஆசீர்வதிக்கப்பட்டுள்ளதாகவிருக்கிறது  அவற்றை அபிவிருத்தி செய்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதை ஒரேநாளில்  செய்ய முடியாது. இது காலம்  எடுக்கும் மற்றும் இந்த  பிறப்பாக்கத்துக்கு  நாம் பரிவர்த்தனை  மற்றும் விநியோக முறையை மேம்படுத்த வேண்டும். 2030 ஆம் ஆண்டிற்குள் மீளப் புதுப்பிக்கத்தக்கவை மூலம் 70% உற்பத்தி செய்து 2050 ஆம் ஆண்டிற்குள் முழுமையாக இல்லாத தாக வேண்டும் என்பதே அரசின் கொள்கை.
பிறப்பாக்கத்துக்கான  இந்த மாற்று வழிகள் உருவாக்கப்படும் விகிதம் மிகவும் மெதுவாக உள்ளது.  நிர்ணயித்த இலக்கைஅரசாங்கம்  அடைவதற்கு  யுத்தம்போன்ற  வழிமுறையில்  பசுமை உற்பத்திக்கான இந்த மாற்று வழிகளை அதிகரிப்பதற்கு  பயனுள்ள வழிகளை நாம்மேற்கொள்ள  வேண்டும். இது இப்போது இடம்பெறவில்லை  என்று அவர்கூறியுள் ளார்.இதேவேளைசம்பந்தப்பட்டவர்களுடனான  கலந்துரையாடலைத் தொடர்ந்து, மின் விநியோகத்தை தடையின்றி தொடர, டீசல் மற்றும்பே ர்னஸ் ஒயிலை   கட்டுப்பாடின்றி  விநியோகிக்கு மாறு பெற்றோலியகூட்டுத்தாபனத்துக்கு ஜனாதிபதி ராஜபக்ச  உத்தரவு பிறப்பித்துள்ளார். “
நிதி அமைச்சும்  தேவையான கொடுப்பனவுகளைச் செய்வதற்கு  நிதியை விடுவிக்கஇணங்கிக்  கொண்டது, ஆனால் அவை சிறிய பிரச்சினைகள். தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு தேவையான எரிபொருள் இருப்புகளைப் பெறுவதே இப்போது முக்கியமானது.
CPC-CEB-300x170.png
திங்களன்று இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து எரிபொருள் கொள்வனவுக்கான நிதியை வழங்குவதற்கு நிதியமைச்சு இணங்கியுள்ளதாகபெற்றோலியக் கூட்டுத்தாபனத்  தலைவர் சுமித் விஜேசிங்கதெரிவித்துள் ளார் . “நாங்கள் இறக்குமதி செய்யப்பட்ட இருப்புகளை ப் பெற்றுக்கொள்ளும்  வரை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்    2000 மெற்றிக்தொன்  டீசலை மின்சாரசபைக்கு  வழங்கும்,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்

https://thinakkural.lk/article/163264

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.