Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேக்கொங் பகுதியில் கண்டறியப்பட்ட 200க்கும் மேற்பட்ட புதிய உயிரினங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேக்கொங் பகுதியில் கண்டறியப்பட்ட 200க்கும் மேற்பட்ட புதிய உயிரினங்கள்

30 ஜனவரி 2022
புதுப்பிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர்
 

Mekong region

பட மூலாதாரம்,©WWF - MYANMAR VIA PA MEDIA

 

படக்குறிப்பு,

போபா லங்கூர் வகை குரங்கு - பேய் தோற்றம் போன்று அதன் கண்களைச் சுற்றி வெள்ளை வட்டங்களைக் கொண்டுள்ளது.

மேக்கொங் பகுதியில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 224 உயிரினங்களின் பட்டியலை உலக வனவிலங்கு நிதியத்தின் (WWF) பாதுகாப்புக் குழு வெளியிட்டுள்ளது.

அவற்றுள், பேய் தோற்றம் போன்று, கண்களைச் சுற்றி வெள்ளை வட்டங்கள் உடைய குரங்கு, தவளைகள், ஒரு வகையான பல்லி இனங்கள் (Newts) மற்றும் சதைப்பற்றுள்ள மூங்கில் இனங்கள் அடங்கும் என்று டபள்யூ. டபள்யூ.எஃப் அறிக்கை கூறுகிறது.

அப்பகுதியில் உள்ள இந்த உயிரினங்கள், உலகின் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் என அடையாளம் காணப்படுவதற்கு முன்பே, அழிவை எதிர்கொள்கின்றன.

கம்போடியா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகியவை மேக்கொங் பகுதியில் அடங்கும்.

 

A big-headed frog is among the newly-discovered species

பட மூலாதாரம்,©PIOTR NASKRECKI VIA PA MEDIA

 

படக்குறிப்பு,

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இனங்களில் ஒரு பெரிய தலை கொண்ட தவளையும் அடங்கும்

 

A newt with a racing stripe, also known as a crocodile newt

பட மூலாதாரம்,©PORRAWEE POMCHOTE VIA PA MEDIA

 

படக்குறிப்பு,

பட்டையுடன் கூடிய நியூட்டை(ஒரு வகை பல்லி இனம்), முதலை நியூட் என்றும் அழைக்கப்படுகிறது

 

The Amomum foetidum is a plant from the ginger family

பட மூலாதாரம்,© THAWATPHONG BOONMA VIA PA MEDIA

 

படக்குறிப்பு,

அம்மோமம் ஃபோடிடம் (Amomum foetidum) - இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும்.

"இந்த இனங்கள் மில்லியன் கணக்கான ஆண்டுகால பரிணாம வளர்ச்சியின் அசாதாரணமான, அழகான தயாரிப்புகள்" என்று டபள்யூ.டபள்யூ.எஃப்-கிரேட்டர் மேக்கொங்கின் வனவிலங்கு மற்றும் வனவிலங்கு குற்றவியல்களுக்கான பிராந்திய தலைவர் கே.யோகானந்த் ராய்ட்டர்ஸ் செய்திடம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இனங்கள் "அழிவுக்கான உச்சநிலையை ஏட்டியுள்ளன" என்றும், அவற்றில் பல "அவை விவரிக்கப்படுவதற்கு முன்பே அழிந்து போகின்றன" என்றும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

தென்கிழக்கு ஆசியாவில் வளமான பல்லுயிர் நிறைந்த பகுதியில் உள்ள உயிரினங்களுக்கு ஏற்படும் ஆபத்துகளில், வாழ்விட அழிவு, மனிதர்களால் அறிமுகப்படுத்தப்படும் நோய்கள் மற்றும் வனவிலங்குகளின் சட்டவிரோத வர்த்தகம் ஆகியவை அடங்கும் என்று டபள்யூ.டபள்யூ.எஃப் கூறுகிறது.

https://www.bbc.com/tamil/science-60191664

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.