Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

60 ஆண்டுகளுக்குமுன் இலங்கையில் இடம்பெற்ற இராணுவப் புரட்சிக்கான சதி முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published on 2022-01-31 16:55:00

 
 

ம.ரூபன்

 

கடந்த 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் 1962 இல் இடம்பெற்ற முதலாவது புரட்சிச்சதி முயற்சி 60 ஆண்டுகளுக்குமுன் இடம்பெற்றது. 

ஜனநாயக ரீதியில் தெரிவான சுதந்திரக்கட்சி ஆட்சியை கவிழ்க்க சில உயர் பொலிஸ், இராணுவ கடற்படை அதிகாரிகள் மேற்கொண்ட இச்சதித்திட்டம் தோல்வியடைந்தது. 

Legacy Of The Sixty Two Coup - Colombo Telegraph

24 எதிரிகளில் 21 கிறிஸ்தவர்கள் இச்சதியுடன் தொடர்பு. இந்துக்கள், முஸ்லிம்களுக்கு தொடர்பு இல்லை. அதனால் இதனை ( CHRISTIAN COUP) என்கின்றனர். இச்சதி குறித்து ஓய்வு பெற்ற பொலிஸ் இராணுவ அதிகாரிகளும், பலரும் பத்திரிகைகளிலும், நூல்களிலும் எழுதியுள்ளனர். அவற்றில் இருந்து சில.

1962 ஜனவரி 25 பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க கதிர்காமம் சென்றுவிட்டு 27 ஆம் திகதி கொழும்பு திரும்பும்போது கைது செய்வதே முக்கிய திட்டம். அவரைப்பிடித்தால் ஏனைய திட்டங்களை சுலபமாக முன்னெடுக்கலாம் என சதியாளர்கள் எண்ணியிருந்தனர். 

ஆனால், அப்பயணம் திடீரென இரத்தானது. கதிர்காமம் சென்றிருந்தால் சதி வெற்றிபெற்றிருக்கும் என அவரின் செயலாளர் பிரட்மன் வீரக்கோன் கூறினார். பிரதமரையும் பிள்ளைகள் சந்திரிகா,சுனீத்திரா, அனுர ஆகியோரை அலரி மாளிகையில் தடுத்து வைத்து ,பின்னர் லண்டனுக்கு அனுப்பிவிடுவதும் திட்டம்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ( DIG- Range 1) சீ.சீ.திசநாயக்கா, ஓய்வுநிலை - கடற்படைத் தளபதி றோய்ஸ் டீ மெல் , அவரது சகோதரர் கேணல் மொரிஸ் டீ மெல், ஓய்வுநிலை-பிரதி பொலிஸ் மா அதிபர் சிட்னி டீ சொய்ஸா, சிவில் அதிகாரி டக்ளஸ் லியனகே (ஜே.ஆர் அரசில் ராஜாங்க அமைச்சு செயலாளர்), கேணல் எப்.டி.சேரம் (பண்டாரநாயக்காவின் மருமகன்),கேணல் மொறிஸ் டீ.மெல்( சிட்னியின் சகோதரர்) ஆகியோரே சதித்திட்டத்தை வகுத்தவர்கள்.

  பிரதி பாதுகாப்பு, நிதி, வெளிவிவகார அமைச்சர் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா, பாதுகாப்பு செயலர் என்.கியூ.டயஸ்,கடற்படைத்தளபதி ராஜன் கதிர் காமர்,( அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் சகோதரர்),பொலிஸ் மா அதிபர் அபயக்கோன், பிரதி பொலிஸ் மா அதிபர்-CID எஸ்.ஏ.திசநாயக்கா (DIG- சீ.சீ.திசநாயக்காவின் சகோதரர்)பொலிஸ் அத்தியட்சகர்-CID ஜோண் அட்டிகல ஆகியோரை பனாகொடை முகாம் நிலவறையில் தடுத்து வைப்பது.

இராணுவத்தளபதி விஜயக்கோன்,விமானப்படைத்தளபதி ஜோண் பார்க்கர்(பறங்கியர்), அரச தரப்பு எம்.பிக்கள்,அமைச்சர்கள்,இடதுசாரி தலைவர்கள் முக்கியமானவர்கள் வீட்டுக்காவலில் வைத்தல். சிராவஸ்தி  விடுதியில் எம்.பிக்கள் தடுத்துவைப்பு.வெளிமாவட்ட எம்.பிக்களை பொலிஸ் நிலையங்களில் தடுத்துவைத்தல் - திட்டம்.

சதிப்புரட்சிக்கு முக்கிய காரணம் -1959 கொழும்பு துறைமுக வேலைநிறுத்தத்தை ஒடுக்க பிரதமர் பண்டாரநாயக்கா பொலிசாரின் உதவியை கோரிய போது பொலிஸ் மா அதிபரான ஒஸ்மன் டீ சில்வா ஜனநாயக விரோதமானது என மறுத்ததால் கட்டாய ஓய்வில் அவரை பதயிலிருந்து விலக்கி சிவில் சேவை அதிகாரியும் தனது நண்பனுமான எம்.டபிள்.யூ.அபயக்கோனை பொலிஸ் மா அதிபராக நியமித்திருந்தார்.பொலிஸ் சேவையில் அரசியல் தலையீடு இங்குதான் முதலில் ஆரம்பம்.

சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் சீ.சீ திசநாயக்கா உட்பட 3 கிறிஸ்தவ சிரேஷ்ட அதிகாரிகளை தவிர்த்து  பொலிஸ் சேவையில் அனுபவமில்லாதவரை (பௌத்தர்) பொலிஸ் மா அதிபராக  நியமித்ததை உயர் பொலிஸ் அதிகாரிகள் எதிர்த்தனர். சீ.சீ.திசநாயக்காவும் சிலரும் பதவி விலக முன்வந்தனர். இதனால் பொலிஸ் துறை பாதிக்கப்படும்  என பலரும் அறிவுறுத்தியதால் அதனை கைவிட்டனர்.

1959 செப்டம்பர் பிரதமர் பண்டாரநாயக்கா படுகொலை - நிதியமைச்சர் ஸ்ரான்லி டீ.சொய்சாவின் சகோதரர் எப்.ஆர் டீ.சொய்சா கைதானதால், நிதியமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். சகோதரர் DIG சிட்னி டீ.சொய்சாவையும்  பதவி விலகுமாறு அரச தரப்பினர் வலியுறுத்தியதால் அவரும் பதவி விலகினார். எனினும் பொலிஸ் திணைக்களத்தில் செல்வாக்கும்,கௌரவமும் சிட்னிக்கு இருந்தது. 

1956 ஜூன் பாராளுமன்றத்தின் முன்பாக சத்தியாக்கிரகம் இருந்த தமிழரசு எம்.பிக்கள், தமிழர்களை சில அரசியல்வாதிகள், குண்டர்கள் தாக்கியபோது பொலிசார் நடவடிக்கை எடுக்காமல் பிரதமர் தடுத்தது. 1958 தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீதும் நடவடிக்க எடுக்காது தடுத்தது. ஊரடங்கு அவசரகால சட்டத்தை உடனும் அமுல் செய்யாததும் இச்சதிக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

1961 சிறிமாவோ அரசு நாடு முழுவதும் சிங்களத்தை அமுல் செய்ய வடக்கு கிழக்கில் சத்தியாக்கிரகம் இருந்த தமிழரசு எம்.பிக்கள்,தமிழர்ககளை இராணுவத்தால் அடித்து விரட்டியதுடன், தமிழ் எம்.பிக்களை விசாரணையின்றி அவசரகால விதிகளில்  பனாகொடை இராணுவ முகாமில் ஆறு மாதங்கள் தடுத்து வைத்தது.சிரேஷ்ட அதிகாரிகளை தவிர்த்து சிறிமாவின் மருமகனான கேணல் ரிச்சர்ட உடுகமவை யாழ்.இணைப்பதிகாரியாக நியமித்தது.

சத்தியாக்கிரம் முடிந்தும் 1962 வரை அவசரகால சட்டத்தை நீடித்ததும் காரணம் (வழக்கு விசாரணையில் கூறப்பட்டது)

 

1961 அரசு 700 கத்தோலிக்க பாடசாலைகளை சுவீகரித்தது. பல கிறிஸ்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். துறைமுகம், இ.போ.ச,வங்கிகள், அரச துறை வேலை நிறுத்தங்களை முறியடிக்க இராணுவம் கடற்படையின் உதவியை அரசு நாடியது. பொருளாதாரம் பாதிப்பு, வாழ்க்கைச்செலவு அதிகரிப்பு பாராளுமன்றத்தில்  பீற்றர் கெனமன், என்.எம்.பெரேரா, தகநாயக்கா இராணுவ ஆட்சி என்றும், அமைச்சர் பீலிக்ஸ் சர்வாதிகாரி எனவும் குற்றம் சாட்டி னார்கள்.(வழக்கு விசாரணயிலும் கூறப்பட்டது)

 

முன்னாள் பிரதமர்கள் டட்லி சேனாநாயக்கா,கொத்தலாவல, தகநாயக்கா ஆகியோர் இணைந்த இடைக்கால சபையை நியமிப்பது. இனமத பேதமில்லாதவாறு சகலருக்கும் பொருத்தமான ஒரு அரசியலமைப்பை ஏற்படுத்துவது,சில காலத்தால் தேர்தலை நடத்தி புதிய அரசை தெரிவுசெய்வதும் ஒரு திட்டம்.பண்டாரநாயக்கா குடும்ப ஆட்சியை ஒழிப்பதே நோக்கம்.

 

இலங்கை வானொலி,ரைம்ஸ் பத்திரிகை,லேக் ஹவுஸ்,தொலைத்தொடர்புகள் நிலையம் ( CTO) போன்றவற்றை சில தினங்கள் இயங்காது மூடுவது. கொழும்பு வீதிகளில் பொலிஸ் வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் ஊரடங்கு சட்டத்தை அறிவிப்பது. நாரஹென்பிட்டி,தெஹிவளை,களனி பாலங்களில் படையினர் நிலைகொண்டு  கொழும்பு நகரை கட்டுப்பாட்டில் வைத்தல்.

சதித்திட்டம் வெளியானது - ஜனவரி 27 காலை  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சீ.சீ.திசநாயக்கா காலிமுகத்திடலில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட போது அங்கு வந்த கொழும்பு பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் (SP) ஸ்ரான்லி சேனாநாயக்காவிடம் சதி திட்டத்தை கூறியிருந்தார். சீ.சீ. திசநாயக்காவின் கொழும்பு-7 லொங்டன் பிளேஸ் இல்லத்துக்கு நண்பகல் சில பொலிஸ் அதிகாரிகளை  (SP,ASP) அழைத்து  செய்யவேண்டிய பணிகளை  தெளிவுபடுத்தினார்.

எஸ்.பி. ஸ்ரான்லியிடம் காலிமுகத்திடலில் காலை கூறியதை நினைவுபடுத்தி "இரவு 10 மணிக்கு உத்தரவுகளை அறிவிப்பேன்.10.30 க்குள் கொழும்பு வீதிகளில் படையினர் நுழைய வெற்றிடமாக்கும் பொறுப்புக்கு  உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP-Traffic) யோண்பிள்ளை. கேணல் எப்.சி.சேரம்,மொறிஸ் டீ.மெல் படையினரை,கவச வாகனங்களை 11 மணிக்கு அனுப்புவார்கள். ஒரு மணி நேரத்தல் நடவடிக்கை முடிவடையும்.சோல்பரி அரசியலமைப் பின் கீழ் தேசாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து பிரதமரை பதவி நீக்குவார்" என்றார்.

SP ஸ்ரான்லி சேனாநாயக்கா இரவு மனைவி மாயாவிடம் இத்தகவல்களை கூறவே,மனைவி தனது தந்தையும் சுதந்திரக்கட்சி எம்.பியுமான பற்றிக் டீ. குலரட்னாவுக்கு தெரிவிக்க அவரும் பொலிஸ் மா அதிபர் அபயக்கோனுக்கு கூற, பொலிஸ் மா அதிபர் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி CID-பிரதிப் பொலிஸ் மா அதிபர்  எஸ்.ஏ.திசநாயக்காவை பணித்தார்.

அலரி மாளிகையில் பிரதமர் சிறிமாவோ, அமைச்சர் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா, இராணுவத்தளபதி,கடற்படைத்தளபதி,விமானப்படைத்தளபதி, DIG எஸ்.ஏ.திசநாயக்கா,SP ஜோண் அட்டிகல(CID) அவசரமாக கூடினர். உடனும் சில சதிகாரர் கைதாகி அங்கு கொண்டுவரப்பட்டனர். அமைச்சர் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்காவே விசாரணைகளை முன்னெடுத்தார். இரவு 9 மணி DIG சீ.சீ திசநாயக்கா சீருடையில் கைதானார். SP ஸ்ரான்லியும் விசாரிக்கப்பட்டு, பதவி இடைநிறுத்தப்பட்டார். 

28 ஞாயிறு காலை இலங்கை வானொலியில் இச்சதி முறியடிக்கப்பட்டதாகவும், சில சதிகாரர் கைதானதாகவும் செய்தி ஒலிபரப்பானது. மாலை ஆங்கில சிங்கள பத்திரிகைகளிலும்  செய்தி வெளியானது. இச்செய்தியால் நாட்டில் ஒரே பரபரப்பு, பதற்றம். அமைச்சர்கள் இல்லங்கள்,அலரி மாளிகை உட்பட முக்கிய இடங்களுக்கு பலத்த பாதுகாப்பு. 1963 பெப்ரவரி 4 சுதந்திர தின நிகழ்வுகள் இரத்தாகின.

DIG-1 சீ.சீ.திசநாயக்காவின் உத்தரவுகளை செயற்படுத்தக்கூடாது! பொலிஸ் மா அதிபரின் கட்டளைகளை செயற்படுத்தவேண்டும் என்று DIG-எஸ்.ஏ திசநாயக்கா சகல பொலிஸ் நிலையங்களுக்கும் உடனும் அறிவித்தார். ஏற்கனவே DIG சீ.சீ.திசநாயக்கா கூறியிருந்த  உத்தரவுகளை செயற்படுத்துவதற்கு காத்திருந்த வெளிமாவட்ட சில பொலிஸ் அதிகாரிகள் (SP,ASP) இத்திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியடைந்தனர். இவர்களில் பலர் இவ்வழக்கில் அரச தரப்பு சாட்சிகள். சிலர் இடைநிறுப்பட்டனர். இதற்கு முன்னர் பத்தேகம எம்.பி நீல் டீ.அல்விஸ் காலியில் கைதாகி விடுவிக்கப்பட்டார்.

மகாதேசாதிபதி சேர் ஒலிவர் குணத்திலக்காவுக்கும் சதியில் தொடர்புள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவரை நீக்கிவிட்டு வில்லியம் கோபல்லாவ (சிறிமாவின் மாமனார்) நியமனம், பிரதமரின் செயலாளர் பிரட்மன் லண்டன் சென்று மகா இராணியிடம் அனுமதி பெற்றுள்ளார் என்று அமைச்சர் பீலிக்ஸ் டயஸ் பெப்ரவரி 18 பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். 20 மார்ச் கோபல்லாவ மகா தேசாதிபதியானார். 1972 இலங்கையின் முதல் ஜனாதிபதி ஒலிவர் மீது விசாரணை இடம்பெறவில்லை.நாட்டைவிட்டு மார்ச் 2 வெளியேறினார்.

 டட்லி சேனாநாயக்காவுக்கும் தொடர்பு எனவும் அமைச்சர் பீலிக்ஸ் பாராளுமன்றத்தில் கூறியபோது டட்லி அதனை மறுத்து, எந்த விசாரணைக்கும் தயார்,ஆளும் தரப்பினர் சிலருக்கும் இதில் பங்குண்டு என்றார். இவ்வழக்கு விசாரணையில் சாட்சியமளித்த SP ஸ்ரான்லி சேனாநாயக்காவும் டட்லி கொத்தலாவலை,ஒலிவருக்கும் தொடர்பு என சீ.சீ.திசநாயக்கா கூறியதாக குறிப்பிட்டார்.

பல பொலிஸ்,இராணுவ அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.சிலர் கட்டாய லீவில் அனுப்பப்பட்டனர்.31 பேரில் 24 பேர் மீது வழக்கு.முதலாவது நீதிமன்றம் விசாரணையை நடத்தாது கலைந்தது. 2 வது நீதிமன்றில் நீதியரசர் ஏ.டபிள்யூ.எச்.அபயசுந்தர சட்டமா அதிபராக பணிபுரிந்தபோது இவ்விசாரணையை நடத்தியதால்,விலகிக்கொண்டார். 3 வது ட்ரயல் அட் பார் விசாரணை 1963 ஜூன் 3 ஆரம்பமாகி 324 நாட்கள் நடைபெற்றது.

 

குற்றம் சுமத்தப்பட்ட 24 பேரில் 13 பேர் இராணுவ லெப்ரினன்ட் ஜெனரல், லெப்ரினன்ட் ,கப்டன்,மேஜர் தரஅதிகாரிகள்.7 பேர்- 2 பொலிஸ் அத்தியட்சகர்கள்- (SP), 3 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள்-(ASP),1-பிரதி பொலிஸ் மா அதிபர்,1-ஓய்வுநிலை பிரதி பொலிஸ் மா அதிபர். மூவரில் ஒருவர் சிவில் அதிகாரி,ஒருவர் ஓய்வுநிலை கடற்படை தளபதி. இருவர் தோட்ட உரிமையாளர்கள்.ஒருவர் விசாரணை காலம் இறந்துவிட்டார். 

 

புகழ்பெற்ற சட்டத்தரணிகள் ஜீ.ஜீ.பொன்னம்பலம்,எச்.டபிள்யூ.ஜெயவர்த்தனா( ஜே.ஆர் சகோதரர்),கே.என்.சொக்சி,எஸ்.ஜே.கதிர்காமர் உட்பட பல சட்டத்தரணிகள் எதிரிகளுக்காக வாதிட்டனர். ஆங்கிலத்தில் விசாரணை சகல பத்திரிகைகளிலும் பக்கம், பக்கமாக வெளியாகின. நவீன ஊடகங்கள் இல்லை.எதிரிகளில் றோய்ஸ் டீ மெல் தலைமறைவானார்.பிடிக்க உதவுபவர்களுக்கு ஒரு தொகை பணம் சன்மானம் என அரசு அறிவித்தது.பொலிசார் பல இடங்களிலும் தேடினார்கள்.

 

அவரது சட்டத்தரணி பொன்னம்பலம் திடீரென ஒரு நாள் நீதிமன்றத்தில் கையில் பிடித்தபடி அழைத்து வந்து முன்னிலைப்படுத்தினார்.இப்படம் அன்று சகல பத்திரிகைகளிலும் முன்பக்கத்தில் வெளியானது. அதேபோல, எதிரிகள் நீதிமன்றம் வரும்போது ஒரு பொலிஸ்காரர் சலூட் அடித்தார். அவரை  நீதிமன்றம் விசாரித்தபோது எனது மூத்த அதிகாரி என்ற நினைப்பில் செய்துவிட்டேன் மன்னிக்கவும் என்றார். இதுவும் செய்தியானது. 

24 எதிரிகளில் 11 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை! சொத்துக்களை பறிமுதல்! என நீதிமன்றம் தீர்ப்பு. எதிரிகள் தீர்ப்பை எதிர்த்து மேன் முறையீடு  லண்டன் பிரிவி கவுன்சில் (Privy Council) மேன் முறையீட்டு விசாரணையின் பின்னர், 11 பேரும் விடுதலையானார்கள்.இப்புரட்சி இடம்பெற்றிருந்தால், இனப்பிரச்சினை, கலவரங்கள், யுத்தம் இடம்பெற்றிருக்காது எனவும் பலரும் கூறினார்கள்.

இலங்கையில் இடம்பெற்ற இராணுவப் புரட்சிக்கான சதி முயற்சி  | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.