Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரேசிலியக் காட்டு விமானமும் சில படிப்பினைகளும்...

Featured Replies

embraergy6.png

factory2mt9.jpg

பிரேசிலிய அடர் கானகத்தில் இருந்து 'எம்பிரயர்' நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் விமானங்களே 'கானக விமானங்கள்' (jungle jets) என்று செல்லமாக அழைக்கப் படுகின்றன.பிரேசில் ஒரு வளர்முக நாடு, வறுமையும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் இன்னும் இருக்கும் ஒரு நாடு.ஆனால் அதன் ஏற்றுமதிகளில் இன்று முதன்மை வகிப்பது இந்த விமானங்களே.காலனிய ஆதிக்கத்தில் இருந்து விடு பட்ட நாள் முதலாக கோப்பியே அதன் பிரதான ஏற்றுமதிப் பண்டமாக இருந்தது.ஆனால் , 2005 ஆம் ஆண்டு எம்பிரயரின் மொத்த வருவாய் 3.680 பில்லியான் அமெரிக்க டொலர்கள்.2006 ஆம் ஆண்டில் பதியப்பட்ட விற்பனை 14.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள்.உலகில் விமான உற்பத்தி நிறுவனங்களின் வரிசையில் அது போயிங் ,ஏயார்பஸ்சுக்கு அடுத்தாக மூன்றாவது இடத்தை வகிக்கிறது.இன்று அதில் 20,000 பேர் வேலை செய்கிறார்கள்.ஆனால் அதனோடு தொடர்புடைய ஏனய நிறுவனங்களில் இன்னும் பல்லாயிரம் பேர் வரையிலானோர் வேலை செய்கிறார்கள்.இன்று அது உற்பத்தி செய்யும் விமானங்கள் உலகெங்கும் வெகு வேகமாக விற்பனையாகிக் கொண்டு வருகின்றன.

வெறும் பயணர் விமானங்களில் மட்டும் தங்கியிராது இராணுவ விமானங்கள்,வியாபாரிகள் பாவிக்கும் தனி நபர் விமானங்கள்,இராணுவச் சரக்கு விமானங்கள் என்று அது அதன் எல்லைகளை விரிவாக்கி வருகிறது.

இந்த அதிசயிக்கத் தக்க வளர்ச்சி எப்படிச் சாத்தியம் ஆயிற்று, என்பதே வேலை விடயமாக நான் சா பாலோவிற்க்குச்(Sau Paulo) சென்றிருந்த சமயம் என் மனதில் எழுந்த வினாவாக இருந்தது.அங்கு வேலை செய்யும் மேலாளர் முதல் கட்டுமானத் தளத்தில் வேலை செய்யும் தொழிலாளர் வரை ,தமது சாதனை பற்றிய பெருமிதம் முகத்தில் தெரிந்தது.எம்மால் எதுவும் முடியும் என்கிற தன் நம்பிக்கை அவர்களின் ஒவ்வொரு செய்கையிலும் தெரிந்தது.ஆனால் இந்தச் சாதனைகள் திடீரென உருவாகவில்லை.

தூர நோக்கிலான அடித்தளங்கள் 1940 ஆம் ஆண்டளவிலேயே போடப்பட்டு விட்டன. Brazilian General Command for Aerospace Technology (Comando-Geral de Tecnologia Aerospacial - CTA) அதாவது வான்விண்ணியல் தொழில் நுட்பத்திற்கான பிரேசிலிய பொதுத் தலமையகம்,பிரேசிலிய விமானப் படையின் கீழ் அமைக்கப்பட்டது.அதன் கீழ் பல உயர் தொழில்னுடப்ப வளாகங்களும், ஆராச்சி நிறுவனங்களும் அமைக்கப்பட்டன.தேசியப் பாதுகாப்பிற்கான தொழில் நுட்பங்களை உள் வாங்குவதுவும் சுயமாகவே உருவாக்குவதுமே அன்றைய நிலையில் முதன்மையான நோக்கமாக இருந்தது. அதன் பின்னர் வளர்த்தெடுக்கப்பட்ட தொழில் நுட்ப்பங்களை தொழிற்துறை ரீதியாக பிரயோகிப்பதற்காக IPD - Instituto de Pesquisas e Desenvolvimento (Research and Development Institute), ஆராய்வுக்கும் அபிவிரித்திக்குமான நிறுவனம் 1954 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.இந்த நிறுவனம் சுயமாக பல விமான வடிவமைப்பு முயற்ச்சிகளில் ஈடுபட்டது.Max Holste. என்னும் பிரன்ச்சு பொறியியலாளரும் Ozires Silva என்னும் பிரேசிலியப் பொறியியலாளர் தலமையிலான குழுவினரும் சேர்ந்து வடிவமைத்த IPD-6504, or Bandeirante என்னும் விமானமே பிரேசிலின் முதல் முழு விமான வடிவமைப்பாகவும் அதன் பின்னால் வடிவமைக்கப்பட இருக்கும் விமானங்களுக்குமான அடிப்படையாகவும் இருந்தது.இந்த விமானம் முதன் முதலாக October 26, 1968 ஆம் ஆண்டு தனது முதல் பறப்பை மேற் கொண்டது.

800pxemb110jw3.jpg

இருந்தும் மூலதனப் பற்றாக் குறையினால் இந்த வகை விமானங்கள் பெருமளவில் உற்பத்தி ய்யப்படவில்லை.இதனை நிவர்த்தி செய்யும் வகையில் July 29, 1969, ஆம் ஆண்டு பிரேசிலிய அரசினால் எம்ப்ரயர் நிறுவனம் உருவாக்கப்பட்டது. முதல் உருவாக்கப்பட்ட பண்டராந்தி விமானங்கள் பிரெசிலின் விமானப் படையால் வாங்கபட்டன,படிப்படியாக விற்பனை வளர்ச்சி அடைந்து மொத்தமாக 500 வரையிலான பண்டாராந்தி விமானங்கள் 36 நாடுகளால் வாங்கப்பட்டன.பின்னர் பல்வேறு வகையான விமானங்கள் கூட்டு முயற்ச்சிகளினால் உருவாக்கப்பட்டன.

climbrj145arp750pixnb4.jpg

பிரேசிலின் அரசியலில் நிகழ்ந்த பல ஆட்சிக் கவிழ்ப்புக்கள்,அமெரிக்க அரசின் ஆதரவிலான இராணுவ ஆட்சி மற்றும் வேறு நிதி நெருக்கடிகளினால் அரச நிறுவனமான எம்பிரியர் பாதிப்புக்கு உள்ளானது.1994 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினால் எம்ரயர் நிறுவனம் ஒரு தனியார் நிறுவனமாக ஆக்கப்பட்டது. சில மேற்குலக விமான உதிரிப்பாக உற்பத்தி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ERJ 145 என்னும் குறுந்தூர பயணர் விமானம் வடிவமைக்கப்பட்டது.2006 ஆம் ஆண்டு வரையில் 900 விமானங்கள் விற்கப்பட்டன.அமெரிக்காவில் நிகழ்ந்த இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதலின் பின்னர் அமெரிக்ககவின் பல விமான நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளானார்கள்.அமெரிக்கர்கள் பெரிய விமானங்களையும் விமான நிலயங்களளயும் தவிர்த்தனர்.பெரிய விமான நிறுவனங்கள் பல போயிங், ஏயார்பஸ் போன்ற பெரிய விமானங்களை வாங்குவதைத் தவிர்த்துக் கொண்டனர்.குறைந்த செலவை உடைய ரீஜினல் ஜெட்களை சேவையில் ஈடுபடுத்தினர்.ஏறக் குறைய இந்த நேரத்தில் தான் எம்ப்ரயரின் ERJ 145 விற்பனை சூடு பிடித்தது.ஆனால் இது ஒரு நிரந்தரமான தேவையாக இருக்காது என்பதை உணர்ந்த எம்ப்ரயர் நிறுவனம் அதன் அடுத்த வடிவமைப்பைத் துவக்கியது.

embraer17501rf0.jpg

E-Jets Series என்று Embraer 170, 175, 190 , 195 என்னும் விமானங்களை வடைவமைத்தது.இவை 70-110 வரையிலான இருக்கைகளைக் கொண்ட பெரிய விமானங்கள்(அதாவது எம்ப்ரயர் இது நாள் வரை உருவாக்கிய விமானங்களுடன் ஒப்பிடுகையில்).இதன் மூலம் எம்ப்ரயர் போயிங் ஏயார்பஸ் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் B737 மற்றும் A320 விமானங்களின் சந்தையில் நேரடியாகப் போட்டியில் இறங்கியது.

vrealitykg0.jpg

தரமான வடிமைபைக் கொண்டவையாகவும் விலையில் குறைவானவை ஆகவும் இவை இருப்பதால் இந்த வகை விமானங்கள் வெகுவாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.

இந்தக் கானக விமானம் எமக்குத் தரும் படிப்பினைகள் என்ன?

தேசியப் பொருளாதார வளர்ச்சிக்கு தூர நோக்கிலான தொழில்னுட்ப அடித் தளங்கள் எந்தளவிற்க்கு இப்போதே அவசியம் என்பதனையும், விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் அபிவிரித்திக்கும்,வளர்ச்சிக

Edited by அற்புதன்

அற்புதன் கட்டுரைக்கு நன்றி! நன்றாக எழுதி இருக்கிறீங்கள். முதல் பறப்பு வீடியோ நன்றாக உள்ளது. எனினும், பிரேசில் பல பொருளாதார நெருக்கடிகளினுள் சிக்கித்தவிக்கும் நாடு என Economics இல் படித்ததாக நினைவு.

  • தொடங்கியவர்

அற்புதன் கட்டுரைக்கு நன்றி! நன்றாக எழுதி இருக்கிறீங்கள். முதல் பறப்பு வீடியோ நன்றாக உள்ளது. எனினும், பிரேசில் பல பொருளாதார நெருக்கடிகளினுள் சிக்கித்தவிக்கும் நாடு என Economics இல் படித்ததாக நினைவு.

நீங்கள் சொல்வது அர்ஜன்ரீனவாக இருக்க வேண்டும், எந்தக் காலகட்டத்தைப் பற்றிப் படித்தீர்கள்?

  • 4 weeks later...

அப்பு அற்புதன் நேற்றுதான் MAKS2007 தொடங்கினது 1 கிழமைக்கு ஓடும்.

சோவியத்யூனியன் உடைஞ்சாப்பிறகு முதன் முறை அதிகளவு ரஸ்சியத் தயாரிப்பு புதிய இராணுவா சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்க

நல்ல கட்டுரை பயணிகள் விமான உற்பத்தியில் இன்னொரு நிறுவணம் இருப்பது இன்றுதான் தெரிந்தது

கட்டுரைக்கு நன்றிகள்.

அறியியல் ரீதியான கட்டுரைகள் தமிழில் வருவது குறைவு. தொடர்ந்து இப்படியான ஆக்கங்களை எழுத வாழ்த்துகிறேன்.

நல்ல ஒரு கட்டுரை மிகவும் பயனுள்ள பல தகவல்களை உள்ளடக்கியதாக இருகிறது.........தொடர்ந்தும் இவ்வாறான கட்டுரைகளை உங்களிடம் எதிர்பார்கிறோம்........ :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.