Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.நா. அதிகாரி இன்று இலங்கை வருகை: ஊடகங்களுக்கு கட்டுப்பாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. அதிகாரி இன்று இலங்கை வருகை: ஊடகங்களுக்கு கட்டுப்பாடு

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் ஜோன் ஹோல்ம்ஸ் இன்று திங்கட்கிழமை இலங்கைக்கு வருகை தர உள்ளார்.

மூதூரில் படுகொலை செய்யப்பட்ட அரச சார்பற்ற பணியாளர்கள் 17 பேரின் முதலாமாண்டு நினைவு நிகழ்வில் அவர் இன்று பங்கேற்கிறார். அதன் பின்னர் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தில் சிறிலங்காவின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

யாழ்ப்பாணத்துக்கு நாளை பயணம் மேற்கொள்ளும் ஹோல்ம்ஸ் அங்கு மனிதாபிமான நிலைமைகளை ஆராய்கிறார். தொடர்ந்து மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்துக்கு புதன்கிழமை அவர் பயணம் மேற்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து எதிர்வரும் வியாழக்கிழமை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை ஹோல்ம்ஸ் சந்தித்துப் பேசுகிறார்.

ஹோல்ம்ஸின் கிளிநொச்சி பயணத்துக்கான அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் ஏற்கெனவே நிராகரித்து விட்டது.

இந்நிலையில் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெற ஹோல்ம்ஸின் உத்தியோகப்பூர்வ ஊடகவியலாளர்கள் சந்திப்புக்கு முன்னதாக ஊடகவியலாளர்கள் ஹோல்ம்ஸை சந்திப்பதைத் தடுக்க அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக கொழும்பு ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவில் பாரிய மனித உரிமை மீறல்கள் நிகழ்கின்றன என்று சிறிலங்கா அரசாங்கம் மீது ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல்வேறு அனைத்துலக அமைப்புகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் ஹோல்ம்ஸின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Mon Aug 6 7:36:12 EEST 2007

இன்று வரும் ஐ.நா. அதிகாரி யாழ்., மட்டக்களப்புக்கு விஜயம் வன்னிக்குப் போக அனுமதி இல்லை

ஐ.நாவின் மனிதநேய விவகாரங்கள் மற்றும் அவசரகால நிவா ரணப்பணி இணைப்பாளர் பொறுப்புகளை வகிக்கும் கீழ் நிலைச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜய மாக இன்று கொழும்பு வருகின்றார் .

மனிதநேயப் பணிகள் மிக இக்கட்டுக்கு உள்ளாகியிருக்கும் யாழ். குடாநாடு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு அவர் நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிடுவார்.

ஆனால், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பகுதிக்கோ, கிளிநொச்சிக்கோ அவர் செல்வதற்கு அரசு அனுமதி வழங்கவில்லை எனத் தெரிகின்றது.

கடந்த ஆண்டு மூதூரில் படுகொலை செய்யப்பட்ட "பட்டினிக்கு எதிரான இயக் கத்தின்' ஊழியர்களான 17 தொண்டுப் பணியாளர்களினதும் நினைவு நிகழ்வுகளிலும் ஜோன் ஹோம்ஸ் பங்குபற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. (சி)

நன்றி - உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

திங்கள் 06-08-2007 19:42 மணி தமிழீழம் [மயூரன்]

ஜக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி நாளை யாழ் பயணம்

ஜக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதியும், ஜக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான பணிகளுகளின் துணைச் செயலருமான ஜேம்ஸ் ஹொல்ம்ஸ் இன்று காலை கொழும்பை வந்தடைந்துள்ளார்.

கொழும்பு வந்தடைந்த ஜேம்ஸ் ஹொல்ம்ஸ் சிறீலங்காவின் அனர்த்த நிவாரணங்கள் மற்றும் மனித விவகாரங்களுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்கவை சந்தித்துள்ளார்.

சிறீலங்காவின் அனர்த்த நிவாரணங்கள் மற்றும் மனித விவகாரங்களுக்கான அமைச்சரின் அலுவலகத்தில் இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஜக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி ஜேம்ஸ் ஹொல்ம்ஸ் நாளை செவ்வாய்க்கிழமை யாழ் குடாநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

யாழ் செல்லும் ஹொல்ம்ஸ் நாளை மாலை கொழும்புக்குத் திரும்பியதும்

180 நாட்களில் கிழக்கை துரிதகெதியில் அபிவிருத்தி செய்வது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஒன்றுகூடலில் ஜேம்ஸ் ஹொல்ம்ஸ் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

நன்றி - பதிவு

ஜோன் ஹோல்சுக்கு உண்மை நிலையை த.தே.கூ தெளிவுபடுத்த வேண்டும்

யாழ் குடாநாட்டிற்கு இன்று விஜயம் செய்யவுள்ள ஐநாவின் விசேட பிரதிநிதிக்கு குடாநாட்டின் உண்மை நிலையை தெளிவு படுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளின் மத்தியில் குடாநாட்டிற்கு விஜயம் செய்யும் ஜோன் ஹோல்ஸ் அங்கு இடம்பெற்று வரும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து தெளிவாக அறிந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ் மாவட்ட கல்வி சமூகம் மற்றும் சிவில் சமூகம் என்பன எதிர் நோக்கும் பிரச்சினைகளை பாதிக்கப்பட்ட தரப்பினர் மூலமாக ஹோல்சுக்கு எடுத்து விளக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் ஏற்கனவே திட்டமிட்டவாறு இராணுவ வாகனங்களில் ஏற்கனவே ஓழுங்கு படுத்தப்பட்ட சில பிரதேசங்களுக்கு ஜோன் ஹோல்சை அழைத்து செல்வதற்கும் அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரச அதிகாரிகளை சந்தித்து பேசுவதற்கும் ஏற்பாடு செய்துள்ளது.

ஏற்கனவே யாழ் குடாநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள துணை இராணுவக் குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அங்கு தனது கும்பல் மூலம் பலவந்தமாக அழைத்து வரப்படும் மக்களை ஜோன் ஹேர்ல்சிற்கு அறிமுகப்படுத்தி அவர்கள் அனைவரும் அமைதியுடன் வாழ்வதாகவும் குடாநாட்டில் இயல்பு நிலை காணப்படுவதாகவும் ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தப் போவதாகவும் தெரியவந்துள்ளது.

அரசாங்கத்தின் இவ்வாறான சதி முயற்சிகளை முறியடித்து மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் காணப்படும் உண்மை நிலையை ஜோன் ஹேர்ல்சிற்கு உணர்த்த வேண்டியது தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய கடமை என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பதிவு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூதூர் படுகொலை முதலாமாண்டு நினைவு நிகழ்வு: ஐ.நா. அதிகாரி பங்கேற்பு

சிறிலங்கா இராணுவத்தினரால் மூதூரில் பலிகொள்ளப்பட்ட 17 அரச சார்பற்ற பணியாளர்களின் முதலாமாண்டு நினைவு நிகழ்வில் இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் ஜோன் ஹோல்ம்ஸ் நேற்று திங்கட்கிழமை பங்கேற்றார்.

கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகங்களின் வளாகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய ஜோன் ஹோல்ம்ஸ், இத்தகைய நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் தடுக்க சாத்தியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

"அண்மைய வரலாற்றில் மனிதாபிமான பணியாளர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றங்களில் மிகவும் மோசமான ஒரு குற்றமாக மூதூர் படுகொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது" என்றும் ஜோன் ஹோல்ம்ஸ் குறிப்பிட்டார்.

மேலும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித பொகொல்லகாம, வெளிவிவகார செயலாலர் பாலித கோகென்ன உள்ளிட்டோரை ஜோன் ஹோல்ம்ஸ் தலைமையிலான ஐ.நா. குழுவினர் நேற்று சந்தித்துப் பேசினர்.

இச்சந்திப்பின் போது அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்கள் தங்களது மனிதாபிமானப் பணிகளை நிறைவு செய்யவில்லை என்று சிறிலங்கா தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. நேர்மையுடன் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களே கிழக்கு அபிவிருத்திப் பணிகளில் அனுமதிக்கப்படுவர் என்றும் சிறிலங்கா கூறியுள்ளது.

-புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜ.நா விசேட பிரதிநிதிக்கு யாழ் அவலத்தை எடுத்துக் கூறமுடியவில்லை - மக்கள் பிரதிநிதிகள் கவலை

நேற்று செவ்வாய்கிழமை யாழ் குடாநாட்டிற்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி ஜோன் ஹோல்ம்ஸ் துணை ஆயுதக் குழுவின் தலைவரும் அமைச்ருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஸ்ரீலங்கா படைத்துறை உயர் அதிகாரிகள் ஆகியோருடன் சந்திப்புகளை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்புகளின் போது யாழ் குடாநாட்டில் இயல்பு நிலை காணப்படுவதாக ஸ்ரீலங்கா அரசாங்க தரப்பு பிரதிநிதிகள் ஜோன் ஹோல்சுக்கு எடுத்துக் கூறியுள்ளனர்.

அதன் பின்னர் படை அதிகாரிகள் மற்றும் ஈ.பி.டி.பி துணை ஆயுதக் குழுவின் தலைவர் ஆகியோருடன் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் ஆகியோரை ஹோல்ஸ் சந்தித்து பேசியுள்ளார்.

துணை ஆயுதக் குழுவினதும் படை புலனாய்வாளர்களினதும் பிரசன்னத்துடன் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் யாழ் குடாநாட்டின் உண்மை நிலையை ஹோல்சுக்கு எடுத்துக் கூறுவதற்கு தயங்கியதாக தெரியவந்துள்ளது.

மிகக் கவனமாக திட்டமிட்டு ஜோன் ஹோல்ஸ் கலந்து கொண்ட சந்திப்புகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை முக்கிய பிரதிநிதியாக அரசாங்கம் முன்னிலைப்படுத்தியதன் மூலம் யாழ் குடாநாட்டில் அரங்கேறும் மனித அவலங்களை வெளிப்படுத்த முடியாத நிலை மக்கள் பிரதிநிதிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்தில் செயல்படும் ஈ.பி.டி.பி எனப்படும் துணை இராணுவக் குழுவே ஆட்கடத்தல் மற்றும் படுகொலை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில் குடாநாட்டின் மனித உரிமை மீறல்களை கண்டறிவதற்கு அனுப்பி வைக்கப்பட்ட ஐநா செயலாளரின் பிரதிநிதிக்கு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் தரப்பினரே வரவேற்பளித்து அவர் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டமை யாழ் குடாநாட்டில் தமிழ் மக்கள் அனுபவித்து வரும் அவலங்கள் முடிவின்றி தொடரப் போதையே எடுத்துக்காட்டியுள்ளது.

-பதிவு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குடாநாட்டு மக்கள் எதிர்கொள்ளும் அவலங்கள் ஐ.நா. அதிகாரி ஹோல்ம்ஸிடம் விபரமாக எடுத்துரைப்பு

* யாழ். மாவட்ட நீதிபதி, அரச அதிபருடன் கலந்துரையாடல்

யாழ். குடாநாட்டு மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு அவலங்கள் குறித்தும் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்நகருக்கு விஜயம் செய்த ஐ.நா. மனிதாபிமானப் பணிகளுக்கான பிரதிச் செயலாளர் நாயகமும் அதன் நிவாரண ஒருங்கிணைப்பாளருமான ஜோன் ஹோல்ம்ஸிற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

விமானப்படையின் விசேட விமானம் மூலம் நேற்றுக் காலை 8.30 மணிக்கு பலாலி விமானத்தளத்தை வந்தடைந்த ஹேம்ல்ஸ் அங்கிருந்து விசேட ஹெலிகொப்டர் மூலம் யாழ் நகரை வந்தடைந்து, அரச அதிபர் உள்ளிட்ட முக்கிய திணைக்களத் தலைவர்களைச் சந்தித்து குடாநாட்டின் தற்போதைய நிலை குறித்தும் கேட்டறிந்தார்.

நேற்றுக் காலை 9.30 மணிக்கு யாழ். மாவட்ட நீதிமன்றுக்கு விஜயம் செய்த அவர், அங்கு மாவட்ட நீதிபதி இ.த. விக்னராஜாவைச் சந்தித்து சுமார் அரைமணிநேரம் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பில் மாவட்ட நீதிபதி மூன்று முக்கிய விடயங்களை ஐ.நா. வின் பிரதிச் செயலாளரிடம் எடுத்துக் கூறியுள்ளார்.

யாழ். குடாநாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ளபோது படுகொலைகள், காணாமல்போதல்கள் மற்றும் ஆட்கடத்தல்கள் இடம்பெறுகின்றன. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறிக்கு உத்தரவொன்றைப் பிறப்பித்திருந்தார்.

ஊரடங்கு அமுலிலுள்ள போது வீதிகளில் நடமாடுபவர்கள் எவராக இருந்தாலும் அவர்களைக் கைது செய்யுமாறும் அவ்வாறு செய்வதன் மூலம் கடத்தல்கள், படுகொலைகளைக் கட்டுப்படுத்தலாம் என்றும் கூறியிருந்தார்.

எனினும், அவ்வாறான நடைமுறைகள் எதனையும் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேற்கொள்ளவில்லை. அந்த நடைமுறையைப் பின்பற்றினால் கொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமல்போதலை இயன்றவரை கட்டுப்படுத்தலாம்.

இரண்டாவது விடயமாக தெல்லிப்பழை புனர்வாழ்வு நிலையத்தைப் புனரமைத்து குடாநாட்டில் உயிர் அச்சுறுத்தல் காரணமாகச் சரணடைபவர்களை அங்கு பாதுகாப்பாக வைக்குமாறும் அதற்கான பாதுகாப்புச் சூழல் தெல்லிப்பழையில் இல்லாதுபோனால் யாழ்.நகரில் சிறைச்சாலை அல்லது நீதிமன்றங்களையண்டிய பகுதியில் அதனை அமைத்து அச்சுறுத்தல் காரணமாக தஞ்சமடைபவர்களைப் பராமரிக்க நடவடிக்கை எடுக்குமாறும் பிரதம நீதியரசர், நீதியமைச்சின் செயலரும் புனர்வாழ்வு ஆணையாளருமான கம்லத்துக்கு உத்தரவிட்ட அதேநேரம், இதைக் கவனித்துச் செயற்படுத்துமாறு யாழ். கட்டளைத் தளபதிக்கும் உத்தரவிட்டிருந்தார்.

எனினும், இது தொடர்பாக எதுவித கவனமும் செலுத்தப்படவில்லை. இதனால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுபவர்களைத் தங்க வைக்க பாதுகாப்பான இடமில்லாது அல்லல்படுகின்றனர்.

இதன் காரணமாகப் படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் இலகுவாக மேற்கொள்ளப்படுகின்றன.

அத்தோடு, யாழ். குடாநாட்டில் தற்போது பொருட்களின் விலைகள் மிகவும் அதிகரித்திருப்பதற்கு ்ஏ-9ீ நெடுஞ்சாலை மூடப்பட்டு கடல்மார்க்கமாக பொருட்கள் எடுத்துவரப்படுவதே காரணமாகும்.

உண்மையில் யாழ். குடாநாட்டின் தற்போதைய சூழலானது போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு முந்திய சூழலே.

புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு முன்னரும் கடல் மார்க்கமாகவே யாழ்ப்பாணத்துக்கான பொருட்கள் எடுத்துவரப்பட்டு கொழும்பு விலையில் விநியோகிக்கப்பட்டன.

தற்போது மட்டும் பல மடங்கு விலையில் பொருட்கள் விற்கப்படுவதுதான் பேரதிர்ச்சியாக உள்ளது.

இது குறித்து உரிய அதிகாரிகளோடு கலந்தாலோசித்து சுமுகமான நடவடிக்கைகளை மேற்கொண்டால் பொருட்களின் விலை உயர்வை ஓரளவுக்கேனும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று கருதுவதாகவும் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பையடுத்து யாழ். பொது நூல் நிலையத்தில் யாழ். அரச அதிபர் உட்பட பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை முற்பகல் 11 மணியளவில் சந்தித்துப் பேசியுள்ளார்

-தினக்குரல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். வந்த ஐ.நா. உயர் அதிகாரியிடம் அட்டூழியங்களை நிறுத்தக் கோரிக்கை பிரதம நீதியரசரின் உத்தரவுகளை அமுலாக்கினால் சாத்தியமென யாழ். நீதிவான் எடுத்துரைப்பு

குடாநாட்டில் இடம்பெறும் கொலைகள், ஆள்கடத்தல்கள், காணாமற்போதல் ஆகிய அன்றாட அட்டூழியங்களைக் கட்டுப் படுத்த உதவுமாறு நேற்று யாழ்ப்பாணம் வந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரியான ஜோன் ஹோம்சிடம் வேண்டுகோள் விடுக் கப்பட்டது.

பிரதம நீதியரசர் ஏற்கனவே விடுத்த இரண்டு உத்தரவுகளை நடைமுறைப்படுத்தினால் மேற்சொன்ன அட்டூழியங்களை கட்டுப்படுத்தமுடியும் என்றும் அதன்பொருட்டு அவருக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி உதவுமாறும் ஜோன் ஹோம்சிடம், யாழ்மாவட்ட நீதி பதி இ.த.விக்னராஜா வேண்டுகோள் விடுத் தார்.

நேற்று விமõனம் மூலம் யாழ்ப்பாணம் வந்த ஜ.நாவின் மனிதநேய விவகாரங்கள் மற்றும் அவசரகாலப் பணி இணைப்பாளர் பொறுப்புகளை வகிக்கும் கீழ்நிலைச் செய லாளர் ஜோன் ஹோம்ஸ் யாழ்.மாவட்ட நீதிபதி ஆர்.விக்னராஜாவை அவரது அலுவலக அறையில் சந்தித்துப் பேசினார். நேற்றுக் காலை 9.30 மணிக்கு யாழ். நீதிமன்றத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற் றது.

குடாநாட்டில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பாக இந்தச் சந்திப் பில் விரிவாகப் கலந்துரையாடப்பட்டது .

இதன்போது குடாநாட்டில் இடம்பெறும் கொலைகள், ஆள் கடத்தல்கள், காணா மற்போதல் தொடர்பாகச் சில விடயங்களை ஜ.நா அதிகாரிக்கு யாழ். நீதிவான் சுட்டிக்காட்டினார். நீதிவான் அவருக்குத் தெரிவித்த விடயங்கள் வருமாறு: யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கொலைகள், கொள்ளைகள், ஆட்கடத்தல்கள், காணாமல்போதல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா இரண்டு உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்.

ஊரடங்கு அமுலில் உள்ள வேளையில் நடமாடுபவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ். மாவட்ட படைகளின் தளபதிக்கும் உயிர் அச்சுறுத்தல் காரணமாகக் சரணடைவோரைப் பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு யாழ். நீதிமன்றத்திற்கு அருகில் அல்லது யாழ். சிறைச்சாலைக்கு அருகில் பொருத்தமான இடம் ஒன்றைத் தெரிவு செய்து, புனர்வாழ்வு நிலையம் ஒன்றை அமைக்குமாறு சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கும் பிரதம நீதியரசர் உத்தரவிட்டிருந்தார். எனினும் அந்த உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை . கொலைகள், கொள்ளைகள், ஆட்கடத்தல்கள், காணாமற்போதல் என்பன தொடர்ந்த வண்ணமே உள்ள ன.

பிரதம நீதியரசரின் உத்தரவுக்கு அமைய சிறைச்சாலைக்கு அண்மையில் பாதுகாப்பான முறையில் புனர்வாழ்வு நிலையம் ஒன்று அமைக்கப்பட்டால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளோர் அங்கு சரணடைவார்கள். இதன் மூலம் கொலைகள், ஆட்கடத்தல்கள் , காணாமல்போதல் ஆகியவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும்.

இந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு தங்களுக்குள்ள செல்வாக்கைப் பிரயோகித்து உரிய தரப்புகளுடன் தொடர்புகொண்டு நடவடிக்øக எடுக்க வேண்டும் என ஜோன் ஹோம்ஸிடம் நீதிவான் வேண்டு÷காள் விடுத்தார்.

குடாநாட்டு மக்கள் பொருள் விலையேற்றம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு ஆகியவை காரணமாக எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பாகவும் அவர் எடுத்துக் கூறினார்

அரச அதிகாரிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு

இதன் பின்னர் ஜ.நா. அதிகாரி ஜோன்ஸ் ஹோம்ஸ் யாழ். பொது நூலகத்தில் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பில் சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்டப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி, யாழ். அரச அதிபர் கே.கணேஷ், யாழ். பல்கலைக்கழகப் பதில் துணைவேந்தர் பேராசிரியர் கே.குமாரவடிவேல், மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.செல்வரட்ணம் மற்றும் பிரதேச செயலர்கள், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர், கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர், வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பல தரப்பினரும் கலந்துகொண்டனர்.

குடாநாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களின் தேவைகள் மற்றும் அரச திணைக்களங்களுக்கான தேவைகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவிப் பணிகள் ஆகியன தொடர்பாக இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

காலை 10.30 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரை இந்தச் சந்திப்பு இடம்பெற்றமையால், யாழ். நகரப் பகுதியில் முக்கிய வீதிகள் போக்குவரத்துக்குத் தடைசெய்யப்பட்டிருந்தன. ஐ.நா. அதிகாரி நேற்று நண்பகல் சுமார் ஒரு மணியளவில் பலாலி திரும்பி அங்கிருந்து கொழும்பு சென்றார்.

-உதயன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு வந்துள்ள ஜ.நா.வின் மனிதாபிமான விவிகாரங்களுக்கான பிரதி செயலாளர் மட்டக்களப்பு விஜயம்

4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் ஜ.நாவின் மனிதாபிமான விவிகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் ஜோன் றோல்மஸ் இன்று மட்டக்களப்பு விஜயம் செய்துள்ளார்.

மட்டக்களப்பு சென்ற ஜோன் ஹேல்மன் வாகரையில் மீளக் குடியமரத்தப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் கொக்கடிச் சோலையிலும் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களையும் சந்தித்து உரையாடியுள்ளார்.

அத்துடன் மட்டக்களப்பு அரச அதிபடையும் ஜ,நாவின் மநிதாபிமான விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் ஜோன் ஹேர்மன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார் .

நாளைய தினம் ஜனாதிஅப்தி ஜோன் ஹேல் மஸ் சந்திக்கவுள்ளார் . அதேவேளை ஜ.நா பிரதி ஜோன் ஹேல்மஸின் இவ் விஜயமாவை சர்வதேச நீதியி இலங்கையில் மனிதாபிமான பிரச்சனை நிலவுவதாக பரப்புரை செய்யவே என ஜே.வி.பி யின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்

-வீரகேசரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.