Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் அமைச்சுப் பதவிகளை இ.தொ.கா. விரைவில் ஏற்கும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Sat Aug 18 8:06:34 EEST 2007

மீண்டும் அமைச்சுப் பதவிகளை இ.தொ.கா. விரைவில் ஏற்கும்

வீறாப்புடன் அமைச்சுப் பதவிகளை உதறிவிட்டுச் சென்ற இலங்கைத் தொழி லாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் அடுத்த வார இறுதியில் மீண்டும் அமைச்சுப் பதவி களை ஏற்றுக்கொள்ளவிருக்கின்றனர் என அக்கட்சியின் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்விடயம் தொடர்பான திரை மறை வுப் பேச்சுகள் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான் நேற்று இந்தியா புறப்பட்டார்.

வாய்வார்த்தைக்காக வீறாப்புடன் வெளி யேறிய நாம் மீண்டும் போய் மண்டியிடக் கூடாது எனக் கட்சிக்குள் ஒரு சாரார் வலியு றுத்திய போதும், பதவிகளில் இருந்தவர் கள் மீண்டும் அவற்றைப் பெற்றே தீர வேண்டும் என பிடிவாதமாக இருக்கின்ற னர் என்றும் கூறப்படுகிறது.

அமைச்சுப் பதவிகளை துறந்தபின் அது தொடர்பாக இ.தொ.கா. தொடர்ச்சியாக தேசிய சபை, நிர்வாக சபை என தெரிவுசெய் யப்பட்ட முக்கிய உறுப்பினர்களுடன் உள் வீட்டு ஆலோசனைகளை நடத்தியுள்ளது.

இக் கூட்டங்களில் இந்தியத் தூதரகத்தில் செல்வாக்குப் பெற்ற வர்த்தகப் புள்ளிகள் சிலரும் கலந்துகொண்டனர் எனவும் தெரியவந்துள்ளது.

அதன் பின்னரே அரச தலைவர்களு டன் இ.தொ.கா. பேச்சு நடத்தியதாகவும், எந்தவிதமான நிபந்தனையும் இன்றி மீண் டும் அமைச்சுப் பதவிகளில் இ.தொ.கா வினர் இணைந்து கொள்வதில் தமக்கு எவ் வித ஆட்சேபனையும் இல்லை என்று ஜனாதிபதி கூறினார் எனவும் தெரிவிக்கப் படுகின்றது.

""அவர்களாகவே போனார்கள். அவர் களாகவே வருகின்றார்கள். இது வழமை'' என்று ஜனாதிபதி தரப்பில் கூறப்பட் டதாகவும் தெரிகிறது.

தற்பொழுது அமைச்சரவையில் இருக் கும் அமைச்சர் ஒருவர், இ.தொ.காவுக்கும் அரச தலைவருக்கும் இடையில் தற்போது நடைபெற்று முடிந்துள்ள பேச்சுகளை உறுதிப்படுத்தினார்.

அமைச்சுப் பதவிகளைத் துறந்துவிட்டு அரசின் பக்கம் ஒட்டிக் கொண்டு இருப் பதில் ஏதும் அர்த்தம் இல்லை என இ.தொ. காவில் ஒரு தரப்பினர் கட்சித் தலைமைக்கு இடித்துக் காட்டினராம்.

அதேவேளை, நமக்கு அமைச்சுப் பதவி களை வழங்கியவர் ஜனாதிபதி, இக்கட்டான நிலையில் ஜனாதிபதிக்கு கை கொடுக்கவேண் டியது நமது கடமை, எனவே, நாம் மீண் டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மறுசாரார் வாதிட்டுள்ளனர்.

இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அமைச்சுப் பொறுப்பை மீள ஏற்பதை இன்னும் முழுமனதுடன் அங்கீகரிக்காவிட்டாலும் அந்தத் தீர்மானத் துக்கு அவர் தள்ளப்படுவது உறுதியென வும் நம்பகரமான தகவல்கள் தெரிவித்தன.

நன்றி - உதயன்

கட்டாயம் ஏற்கத்தானே வேண்டும் அமைச்சு பதவி இல்லாட்டி இதோகாவின் யாப்பினை மீறுவதாகிவிடுமே

இவர்கள் அமைச்சுப் பொறுப்பை ஏற்காவிட்டால்தானே ஆச்சரியம்.

இது தாவுற கூட்டம் தானே மாறி மாறி தாவுங்கள் இது வழமையா நடக்கிறது தானே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் மதில் மேல் உள்ள பூனைகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.