Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அன்பை விநியோகித்தல்: ஊபெர் ஈட்ஸ் மற்றும் Robin Hood Army ஆகியன நலிவுற்ற சமூகங்களுக்கு உதவுவதற்காக கைகோர்த்துள்ளன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அன்பை விநியோகித்தல்: ஊபெர் ஈட்ஸ் மற்றும் Robin Hood Army ஆகியன நலிவுற்ற சமூகங்களுக்கு உதவுவதற்காக கைகோர்த்துள்ளன

அன்பை விநியோகித்தல்: ஊபெர் ஈட்ஸ் மற்றும் Robin Hood Army ஆகியன நலிவுற்ற சமூகங்களுக்கு உதவுவதற்காக கைகோர்த்துள்ளன

 

இலங்கையின் மிகவும் அபிமானம் பெற்ற உணவு மற்றும் பலசரக்குப் பொருட்களை விநியோகிக்கும் தளமான ஊபெர் ஈட்ஸ் மற்றும் முற்றிலும் தன்னார்வத்தொண்டு அடிப்படையில் இயங்கி வருகின்ற தன்னார்வத் தொண்டு அமைப்பான Robin Hood Army (RHA) இன் இலங்கை கிளை ஆகியன பொருளாதார நெருக்கடி காரணமாக நலிவுற்ற சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்காக கைகோர்த்துள்ளன. கொழும்பு முழுவதும் மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் உலர் உணவு நன்கொடைகளை சேகரிக்க, அவர்கள் தமது தளம், பரிமாணம் மற்றும் அடைவு மட்டத்தைப் பயன்படுத்துவார்கள்.

செப்டெம்பர் முதல், வாடிக்கையாளர்கள் ஊபெர் ஈட்ஸ் செயலி மூலம் நேரடியாக நகரம் முழுவதும் உள்ள பிரத்தியேக RHA சேகரிப்பு மையங்களுக்கு ஆர்டர் செய்வதன் மூலம் உலர் உணவுப் பொதிகளை நன்கொடையாக வழங்கலாம். ஊபெர் ஈட்ஸ் தனது செயலியின் மூலமாக வழங்கப்படும் ஒவ்வொரு நன்கொடையின் மதிப்பிற்கும் ஈடாக சமமான அளவில் தனது பங்களிப்பையும் சேர்த்துக் கொள்ளும். ‘Robins’ என்று அழைக்கப்படும் RHA தன்னார்வத் தொண்டர்கள், இந்த நன்கொடைகளை ஒவ்வொரு நாளும் சேகரிப்பு மையங்களில் இருந்து சேகரித்து அவற்றை விநியோகிக்க உதவுவார்கள்.

ஊபெர் ஸ்ரீலங்காவின் பொது முகாமையாளரான பாவ்னா தத்லானி ஜெயவர்த்தன அவர்கள் இக்கூட்டாண்மை குறித்த தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கையில், “இலங்கைக்கும் நாங்கள் சேவை செய்யும் சமூகங்களுக்கும் உதவுவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இலங்கையில் Robin Hood Army உடன் இணைந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைவதுடன், இந்த கடினமான நேரத்தில் மிகவும் தேவைப்படும் குடும்பங்களுக்கு ஆதரவளிக்க எண்ணியுள்ளோம். ஒரு பெருமைமிக்க இலங்கையர் என்ற வகையில், தாராள மனதுடன் நன்கொடை வழங்க முன்வருமாறு அனைவரையும் ஊக்குவிப்பதோடு, இந்த நெருக்கடியில் இருந்து நமது நாடு வலுவாக வெளிவருவதற்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுமாறும் நான் ஊக்குவிக்கிறேன்,” என்று குறிப்பிட்டார்.

இந்த கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த Robin Hood Army - இலங்கை பிரிவின் தன்னார்வத் தொண்டு முகாமைத்துவ அணியின் மொஹமட் ஹஸாம் உசைன் அவர்கள், “இந்த சவாலான நேரத்தில், ஊபெர் உடனான கூட்டு என்பது இலங்கையர்களின் கூட்டுப் பலத்தை பயன்படுத்தி நலிவுற்றவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் தக்க தருணத்தில் முன்னெடுக்கப்படும் ஒரு சரியான முயற்சியாகும். பிரபலமான ஊபெர் ஈட்ஸ் செயலி, நகரம் முழுவதும் எங்கள் Robins ஆல் விநியோகிக்கப்படுவதற்கு கணிசமான அளவில் நன்கொடைகளை திரட்ட உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். மிகவும் நலிவுற்றவர்களுக்கு உதவிகள் தேவைப்படும் நேரத்தில் ஆதரவளிக்குமாறு ஒவ்வொரு இலங்கையருக்கும் நாம் அழைப்பு விடுக்கிறோம்,” என்று குறிப்பிட்டார்.

எவற்றை நன்கொடையாக வழங்க முடியும்?

அரிசி, பருப்பு, சீனி, பதப்படுத்தப்பட்டு தகரத்தில் அடைத்த உணவுகள், பால் மா, கருவாடு மற்றும் டின் மீன் போன்றவற்றை உள்ளடக்கிய உலர் உணவுப் பொதிகளை வழங்க முடியும். இவை ஒவ்வொன்றும் ரூபா. 1,000 என்ற விலை முதற்கொண்டு கிடைக்கப்பெறுவதுடன், கொழும்பில் ஊபெர் ஈட்ஸ் செயலியில் தெரிவு செய்யப்பட்ட கடைகளில் கிடைக்கும்.

நன்கொடையளிப்பதற்கான படிமுறைகள்

1. ஊபெர் ஈட்ஸ் செயலியின் முகப்புத் திரையில், உங்கள் டெலிவரி முகவரியை RHA சேகரிப்பு மையங்களில் ஒன்றாக மாற்றவும்.

a. Robin Hood Army சேகரிப்பு மையம் - பத்தரமுல்லை 446, துட்டுகெமுனு மாவத்தை, ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டை

b. Robin Hood Army சேகரிப்பு மையம் - பொரலஸ்கமுவை 33, நியூட்டன் செனவிரத்ன மாவத்தை, பொரலஸ்கமுவை

c. Robin Hood Army சேகரிப்பு மையம் - கொழும்பு 9 மஹாவெல குறுக்கு வீதி , கொழும்பு

2. அவர்களின் முகப்புப் பக்கத்தில் #DeliveringLove என்று பச்சை இதயத்தின் விம்பத்தைக் கொண்ட வணிகரைக் கண்டறிய செயலி மூலம் தேடல் செய்யவும் அல்லது இந்த முயற்சியில் பங்கேற்கும் வணிகரைத் தேர்ந்தெடுக்க #DeliveringLove இனை செயலியிலுள்ள பலகையைத் தட்டவும்.

3. வணிகரின் விபரப் பட்டியலில், #DeliveringLove வகைக்கு தேடல் செய்து, நன்கொடைப் பொதியைத் தேர்ந்தெடுத்து அதை உங்கள் கொள்வனவுக் கூடையில் சேர்க்கவும்.

4. Checkout பக்கத்திற்குச் சென்று, முகவரியை இருமுறை சரிபார்த்து, பணம் செலுத்த டெபிட்/கடன் அட்டையைத் தேர்ந்தெடுத்து உங்கள் ஆர்டரை உறுதிப்படுத்தவும்.

5. தேர்ந்தெடுக்கப்பட்ட RHA சேகரிப்பு மையத்தைச் சென்றடையும் வரை உங்கள் ஆர்டரைக் கண்காணிக்கவும்.

நெருக்கடியின் ஆரம்ப நாட்களில் இருந்து சமூகத்திற்கு உதவுவதற்கான வழிமுறைகளை ஊபெர் தொடர்ந்து கண்டறிந்து வருகிறது. 2022 ஆகஸ்ட் முதல், இரத்துச் செய்யப்பட்ட ஆர்டர்களை நலிவுற்ற சமூகங்களின் உறுப்பினர்களுக்கு அனுப்புவதற்கு ஊபெர் ஈட்ஸ் மற்றும் RHA ஆகியன இணைந்து செயல்பட்டு வருகின்றன. கடந்த வாரம், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உலர் உணவுகள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை விநியோகிப்பதற்காக 200,000 அமெரிக்க டொலர்களை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திற்கு நன்கொடையாக ஊபெர் வழங்கியது.

ஊபெர் தொடர்பான விபரங்கள்

பிரயாணத்தின் மூலம் வாய்ப்பைத் தோற்றுவிப்பதே ஊபெரின் நோக்கம். ஒரு பொத்தானைத் தொடுவதால் நீங்கள் எவ்வாறு பிரயாணத்தை மேற்கொள்ளலாம்? என்ற கேள்விக்கு ஒரு எளிய தீர்வுடன் 2010 ஆம் ஆண்டில் நாங்கள் செயற்பட ஆரம்பித்தோம். 15 பில்லியனுக்கும் அதிகமான பயணங்களுக்குப் பிறகு, மக்களை அவர்கள் விரும்பும் இடத்திற்கு இட்டுச்செல்ல தீர்வுத்திட்டங்களைக் கட்டியெழுப்பி வருகிறோம். நகரங்கள் வழியாக மக்கள் செல்வது, உணவு மற்றும் விடயங்கள் எவ்வாறு நகர்கின்றன என்பதை மாற்றுவதன் மூலம், புதிய வாய்ப்புக்களுக்கான உலகிற்கு வழிகோலும் ஒரு தளமே ஊபெர் ஆகும்.

Robin Hood Army தொடர்பான விபரங்கள்

Robin Hood Army என்பது தன்னார்வ அடிப்படையிலான, முற்றிலும் தன்னார்வத் தொண்டு அமைப்பாகும். இது உணவகங்கள் மற்றும் சமூகத்தில் இருந்து தேவைக்கு அதிகமாகவுள்ள உணவை நலிவுற்றவர்களுக்கு வழங்குவதற்காக பணியாற்றி வருகிறது. ஒவ்வொரு உள்ளூர் கிளையும் நண்பர்கள் மற்றும் சகாக்களால் நடத்தப்படுகிறது. அவர்கள் தங்களுக்கே உரித்தான தனித்துவமான வழியில் மாற்றத்தை உருவாக்குவார்கள் என்று நம்பிக்கை கொண்டுள்ளனர். Robin Hood Army முற்றிலும் தன்னார்வலர்களால் மேற்கொள்ளப்படும் சேகரிப்பு மற்றும் விநியோகத்தின் கட்டமைப்பு முறைமையின் கீழ் செயல்படுகிறது. இந்த அமைப்பு கண்டிப்பாக நிதி திரட்டல் அல்லாத கொள்கையைக் கொண்டுள்ளது. அதாவது வளர்ச்சி மற்றும் செயல்பாடு சமூக ஊடகங்கள் மற்றும் கூட்டாண்மைகளால் முழுமையாக ஆதரிக்கப்படுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.