Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசியக் கிண்ணத்தை... சுவீகரித்த,  கிரிக்கெட் மற்றும் வலைப்பந்தாட்ட அணிகள்... நாட்டை வந்தடைந்தன!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஆசியக் கிண்ணத்தை... சுவீகரித்த,  கிரிக்கெட் மற்றும் வலைப்பந்தாட்ட அணிகள்... நாட்டை வந்தடைந்தன!

ஆறாவது தடவையாக ஆசியக் கோப்பையை சுவீகரித்த இலங்கை கிரிக்கட் வீரர்களும், ஆறாவது தடவையாக ஆசிய வலைப்பந்தாட்டத்தில் ராணியாக முடிசூடிய இலங்கை வலைப்பந்தாட்ட வீரர்களும் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.

இவர்களை வரவேற்கும் முகமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் இரண்டு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

நாட்டை வந்தடைந்த இரு குழுக்களும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விசேட வாகன அணிவகுப்பில் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சிங்கப்பூரில் நடைபெற்ற 12ஆவது ஆசிய சம்பியன்ஷிப் வலைப்பந்தாட்டப் போட்டியில், இலங்கை வீரர்கள் இறுதிப் போட்டியில் 63க்கு 53 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.

இந்நிலையில், இன்று காலை நாட்டை வந்தடைந்த ஆசிய வலைப்பந்து சம்பியன்களுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் ரோஹண திஸாநாயக்க மற்றும் விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள், இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளன அதிகாரிகள் மற்றும் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் அடங்கிய சிறு குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, ஆசியாவின் கிரிக்கட் கிங்ஸ் என்று அழைக்கப்படும் இலங்கை கிரிக்கெட் அணி நாட்டிற்கு வருகைத்தந்தது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 15ஆவது ஆசிய சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை 23 ஓட்டங்களால் தோற்கடித்து இலங்கை வீரர்கள் சம்பியன் பட்டத்தை சுவீகரித்திருந்தனர்.

இலங்கை வருவதற்காக டுபாய் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த தசுன் ஷானக தலைமையிலான இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு அங்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஏறக்குறைய ஆறு மணித்தியால விமான பயணத்தின் பின்னர் நாட்டை வந்தடைந்த ஆசிய கிரிக்கட் வீரர்களை வரவேற்கும் வகையில் விளையாட்டு அமைச்சும் இலங்கை கிரிக்கெட் நிறுவனமும் இணைந்து விசேட நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

FcfuijmXgAEao88-600x450.jpg

FcgHKsfXwAIeJvf-600x400.jpg

FcgHLlQX0AA0k9w-600x400.jpg

https://athavannews.com/2022/1298819

  • கருத்துக்கள உறவுகள்

ஆசியக் கிண்ண வலைப்பந்தாட்ட சம்பியன் கிண்ணத்துடன் நாடு திரும்பிய இலங்கை மகளிர் அணிக்கு அமோக வரவேற்பு

13 SEP, 2022 | 11:35 AM
image

 

2022 ஆசியக் கிண்ண வலைப்பந்தாட்ட சம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இலங்கை மகளிர் அணி  இன்று காலை நாட்டை வந்தடைந்தது.

302568146_454716276700847_60579090416408

2022 ஆசியக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை மகளிர் அணி இன்று (13) அதிகாலை நாட்டை வந்தடைந்த நிலையில், விமான நிலையத்தில்  அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

இலங்கை அணி 11 ஆம் திகதி சிங்கப்பூரில் இடம்பெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண வலைப்பந்தாட்ட தொடரில் சிங்கப்பூரை வீழ்த்தி 06 ஆவது தடவையாக ஆசிய வலைப்பந்தாட்டத் தொடரின் கிண்ணத்தை தனதாக்கியது.

Fcgo3BmWQAIbnmF.jpg

சிங்கப்பூர் ஓ சி பி சி உள்ளக அரங்கில் நடைபெற்ற 13 ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் முன்னாள் சம்பியன் சிங்கப்பூரிடம் ஆரம்பத்தில் கடும் சவாலை எதிர்கொண்ட நடப்பு சம்பியன் இலங்கை 63 - 52 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டி சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டது.

குறிப்பாக 43 வயதான தர்ஜினி சிவலிங்கம் தனது வயதையும் மீறி கோல் போடுவதில் அற்புத ஆற்றல்களை வெளிப்படுத்தி இறுதி ஆட்டம் உட்பட இலங்கையின் சகல வெற்றிகளிலும் பெரும் பங்காற்றியிருந்ததை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

306586008_5386632068087341_5944959066656

இலங்கை அணி, ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியனாக தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் இம்முறை கிண்ணத்தை வென்றமை விசேட அம்சமாகும்.

ஆசியாவில் பலம் வாய்ந்த வலைப்பந்தாட்ட அணியாக ஆறாவது தடவையாகவும் திறமையை நிரூபித்த இலங்கை வீராங்கனைகள், அடுத்த வருடம் தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற இலங்கை அணியை வரவேற்கும் நிகழ்வில் விளையாட்டு அமைச்சின் உறுப்பினர்கள், விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள உறுப்பினர்கள் மற்றும் இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

306668498_454716313367510_15270298738093

306341945_5386631614754053_6216822700799

306004283_5386631818087366_5020700883560

306088235_5386631998087348_7301821458755

306143982_454716286700846_28524130298262

305991400_5386631721420709_5568722304138

305298452_454716243367517_17070487421912

305481534_454716320034176_16554363908117

301791397_454716293367512_74029981708475

https://www.virakesari.lk/article/135541

ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு உற்சாக வரவேற்பு

13 SEP, 2022 | 11:33 AM
image

 

2022 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்று(13) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.

FcgHLlQX0AA0k9w.jpg

11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 23 ஓட்டங்களால் வீழ்த்தி, இலங்கை அணி இவ்வருடத்துக்கான ஆசியக் கிண்ணத்தை தனதாக்கியது.

8 வருடங்களின் பின்னர் இலங்கை அணி ஆறாவது தடவையாக ஆசியக் கிண்ணத்தை சுவீகரித்த சந்தர்ப்பம் இதுவாகும். 

இந்நிலையில், ஆசியக் கிண்ணத்தை சுவீகரித்த இலங்கை அணியினர் இன்று காலை விமானநிலையத்தை வந்தடைந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டதுடன் வீதியின் இரு மருங்கிலும் இலங்கை அணி ரசிகர்கள் இலங்கை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

8 வருடங்களுக்கு முன்னர் பங்களாதேஷில் இருபது 20 ஆசிய கிண்ணம், இருபது 20 உலகக் கிண்ணம் ஆகியவற்றை சுவீகரித்த இலங்கை, இந்த வருடமும் அதேபோன்று இரட்டை வெற்றியை ஈட்ட அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தில் இலங்கை முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

FcgHKsfXwAIeJvf.jpg

FcgHNN1XwAE7NvL.jpg

FcgHMdMXwAILHvT.jpg

306766443_6031123563573356_7512414264798

306914640_6031123440240035_3267969767354

FcgjqZVX0AAov6Q.jpg

FcgP7ZrXoAIvJTf.jpg

FcgP8tuXkAEGJmb.jpg

FcgP8KQXwAAnGzz.jpg

306455969_454717586700716_3526299098651197454_n.jpg

https://www.virakesari.lk/article/135547

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.