Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.கச்சேரி பகுதியில் 20 இலட்சம் ரூபா தங்க ஆபரணங்களுடன் போதைப்பொருள் வியாபரி கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.கச்சேரி பகுதியில் 20 இலட்சம் ரூபா தங்க ஆபரணங்களுடன் போதைப்பொருள் வியாபரி கைது 

By VISHNU

13 SEP, 2022 | 03:21 PM
image

 

யாழ்ப்பாணம் கச்சேரி பகுதியில் வைத்து 8 அரை கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் போதைப்பொருள் வியாபாரியான 24 வயது இளைஞனை நேற்று திங்கட்கிழமை (12) இரவு 10 மணியவில் கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

 

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப் இன்பெக்டர் ரி. மேனன் தலையிலான பொலிஸ் குழுவினர் சம்பவதினமான நேற்று இரவு 10 மணியளவில் கச்சேரி பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

 

இதன் போது வியாபாரத்துக்காக ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக்கொண்டு வீதியில் நடந்து சென்ற இளைஞனை சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்து சோதனையிட்டபோது அவனிடமிருந்து 8 அரை கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 20 இலட்சம் ரூபா கொண்ட தங்க ஆபரணங்களான 6 காப்புக்கள் 4 சங்கிலிகள், தோடுகள்  மீட்டுள்ளனர்.

இதில் கைதுசெய்யப்பட்டவர் அந்த பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் எனவும் இவர் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளவர் எனவும் இவரிடமிருந்து மீட்கப்பட்ட தங்க ஆபரணங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இவரை இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/135564

எட்டரை கிராமோட சின்ன எலியை பிடிக்கிறியள்! நூறு - ஆயிரம் கிலோவைக் கடத்தும் முதலைகளை எப்ப பிடிக்கப்போறியள்?!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.