Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவை 4 விக்கெட்டுகளால் வீழ்த்தியது அவுஸ்திரேலியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை 4 விக்கெட்டுகளால் வீழ்த்தியது அவுஸ்திரேலியா

By DIGITAL DESK 5

21 SEP, 2022 | 09:59 AM
image

(என்.வீ.ஏ.)

மொஹாலி விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (20) இரவு கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 4 விக்கெட்களால்  அவுஸ்திரேலியா  வெற்றிகொண்டது.

இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட சற்று கடினமான 209 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 4 பந்துகள் மீதிமிருக்க 6 விக்கெட்களை இழந்து 211  ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஆரொன் பின்ச், கெமரன் க்றீன், ஸ்டீவ் ஸ்மித், மெத்யூ வேட் ஆகியோரது அதிரடி துடுப்பாட்டங்கள் அவுஸ்திரேலியாவை வெற்றி அடையச் செய்தன.

Cameron Green went 4, 4, 4, 4 the first four balls he faced, India vs Australia, 1st T20I, Mohali, September 20, 2022

ஆரொன் பின்ச் (22), கெமரன் க்றீன் ஆகிய இருவரும் 39 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது பின்ச் களம் விட்டகன்றார்.

தொடர்ந்து அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய கெமரன் க்றீன் 30 பந்துகளில் 8 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 61 ஓட்டங்களைக் குவித்ததுடன் ஸ்டீவ் ஸ்மித்துடன் 2ஆவது விக்கெட்டில் 40 பந்துகளில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

அதன் பின்னர் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஸ்டீவ் ஸ்மித் (35), க்லென் மெக்ஸ்வெல் (1), ஜொஷ் இங்லிஸ் (17) ஆகியோரை அவுஸ்திரேலியா இழந்தது.

எனினும் அறிமுக வீரர் டிம் டேவிட் (18), மெத்யூ வேட் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை அண்மிக்கச் செய்தனர்.

Matthew Wade and Tim David get in on the fist bumps, India vs Australia, 1st T20I, Mohali, September 20, 2022

மெத்யூ வேட் 21 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 45 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காதிருந்தார். வெற்றிக்கு தேவைப்பட்ட ஓட்டங்களை பெட் கமின்ஸ் முதல் பந்திலேயே பவுண்டறி மூலம் பெற்று ஆட்டமிழக்காதிருந்தார்.

இந்திய பந்துவீச்சில் அக்சார் பட்டேல் 4 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் உமேஷ் யாதவ் 27  ஓட்டங்களுக்கு   2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 208 ஓட்டங்களைக் குவித்தது.

கே. எல். ராகுல், ஹார்திக் பாண்டியா ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் சூரியகுமார் யாதவ்வின் சிறப்பான துடுப்பாட்டமும் இந்தியாவின் மொத்த  எண்ணிக்கைக்கு வலு சேர்த்தன.

Hardik Pandya struck a rapid 30-ball 71 not out, India vs Australia, 1st T20I, Mohali, September 20, 2022

எவ்வாறயினும் இந்தியாவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. அணித் தலைவர் ரோஹித் ஷர்மா (11), முன்னாள் அணித் தலைவர் விராத் கோஹ்லி (2) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

எனினும் கே. எல். ராகுல், சூரியகுமார் யாதவ் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவை நல்ல நிலையில் இட்டனர்.

ராகுல் 55 ஓட்டங்ளைப் பெற்று ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 126 ஓட்டங்களாக இருந்தபோது சூரியகுமார் யாதவ் 46 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

ஒரு புறத்தில் விக்கெட்கள் சரிந்துகொண்டிருக்க ஹார்திக் பாண்டியாக அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 30 பந்துகளில் 7 பவுண்ட்றிகள், 5 சிக்ஸ்கள் உட்பட ஆட்டமிழக்காமல் 71 ஓட்டங்களைக் குவித்து அணியைப் பலப்படுத்தினார்.

அக்சார் பட்டேல் (6), தினேஷ் கார்த்திக் (6) ஆகிய இருவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர். ஹர்ஷால் பட்டேல் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். இந்த மூவருடன் ஹார்திக் பாண்டியா மொத்தமாக 62 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சில் நேதன் எலிஸ் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெடகளையும் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெடகளையும் கைப்ப்றினர். https://www.virakesari.lk/article/136079

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது இந்தியா

By DIGITAL DESK 5

24 SEP, 2022 | 09:36 AM
image

(என்.வீ.ஏ.)

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் வெள்ளிக்கிழமை (23) 8 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு நடத்தப்பட்ட 2ஆவது சர்வதேச இருபது 20 கிரக்கெட் போட்டியில் 6 விக்கெட்களால் மகத்தான வெற்றியீட்டிய இந்தியா, 3 போட்டிகள் கொண்ட தொடரை 1 - 1 என சமப்படுத்திக்கொண்டது.

மழை காரணமாக 2 மணித்தியாலங்கள் தாமதித்து ஆரம்பமான இப் போட்டியை அணிக்கு   8 ஓவர்களாக நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

அப் போட்டியில் அக்சார் பட்டேலின் துல்லியமான பந்துவீச்சு, ரோஹித் ஷர்மாவின் அதிரடி துடுப்பாட்டம் என்பன இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தன.

Rohit Sharma lofts Adam Zampa over the off side, India vs Australia, 2nd T20I, Nagpur, September 23, 2022

அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 91 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா, 7.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 92 ஓட்டங்களைக் குவித்து அபார வெற்றியீட்டிது.

ஆரம்ப வீரர்களான கே. எல். ராகுல் (10). ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் 17 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு நம்பிக்கை ஏற்படக்கூடிய சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ராகுலின் விக்கெட்டை நேரடியாக பதம் பார்த்த அடம் ஸ்ம்ப்பா, மொத்த எண்ணிக்கை 55 ஓட்டங்களாக இருந்தபோது விராத் கோஹ்லி (11), சூரியகுமார் யாதவ் (0) ஆகிய இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் களம் விட்டகலச் செய்தார்.

ரோஹித் ஷர்மாவுடன் 4ஆவது விக்கெட்டில் 22 ஓட்டங்களைப் பகிர்ந்த ஹார்திக் பாண்டியா 9 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

Rohit Sharma heaves one into the night sky over midwicket, India vs Australia, 2nd T20I, Nagpur, September 23, 2022

ஆனால், அடுத்த 3 பந்துகளில் வெற்றிக்கு தேவைப்பட்ட மேலும் 15 ஓட்டங்களை ரோஹித் ஷர்மாவும் தினேஷ் கார்த்திக்கும் பெற்றுக் கொடுத்தனர்.

ரோஹித் ஷர்மா 20 பந்துகளில் தலா 4 சிக்ஸ்கள், பவுண்டறிகள் உட்பட 46 ஓட்டங்களுடனும் தினேஷ் கார்த்திக் 2 பந்துகளில் 10 ஓட்டங்களுட னும்   ஆட்டமிழக்காதிருந்தனர்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சில் அடம் ஸம்ப்பா 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

Adam Zampa celebrates after deceiving KL Rahul, India vs Australia, 2nd T20I, Nagpur, September 23, 2022

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியா 8 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 90 ஓட்டங்களைக் குவித்தது.

ஹார்திக் பாண்டியா வீசிய முதல் ஓவரில் அவுஸ்திரேலியா 10 ஓட்டங்களைப் பெற்றது. ஆனால் 2ஆவது ஓவரை வீச அழைக்கப்பட்ட அக்சார் பட்டேல் தனது 3ஆவது பந்தில் கெமரன் க்றீனையும் (5), 6ஆவது பந்தில் க்ளென் மெக்ஸ்வெலையும் (0) ஆட்டம் இழக்கச் செய்தார். (19 - 2 விக்.)

அக்சார் பட்டேல் தனது 2ஆவது ஓவரின் முதல் பந்தில் டிம் டேவிட்டின் (2) விக்கெட்டையும் வீழ்த்த அவுஸ்திரேலியா சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

Axar Patel does well to push Virat Kohli's throw on to the stumps to run Cameron Green out, India vs Australia, 2nd T20I, Nagpur, September 23, 2022

மறுபக்கத்தில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 15 பந்துகளில் 31 ஓட்டங்களைப் பெற்ற ஆரோன் பின்ச்சின் விக்கெட்டை ஜஸ்ப்ரிட் பும்ரா வீழ்த்தினார். (46 - 4 விக்.)

அதனைத் தொடர்ந்து அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய மெத்யூ வேட் 5ஆவது விக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித்துடன் (8)  44 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கையை 90 ஓட்டங்களாக உயர்த்தினார். 

மெத்யூ வேட் 20 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களை விளாசி 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

இந்திய பந்துவீச்சில் அக்சார் பட்டேல் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான தீர்மானம் மிக்க 3ஆவதும் கடைசியுமான போட்டி ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெறவுள்ளது. https://www.virakesari.lk/article/136328

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விறுவிறுப்பாக நடைபெற்ற சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்களால் இந்தியா வெற்றி

By DIGITAL DESK 5

26 SEP, 2022 | 09:29 AM
image

(என்.வீ.ஏ.)

நடப்பு இருபது 20 உலக சம்பியன் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஹைதராபாத் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (25) இரவு கடைசிக் கட்டம்வரை விறுவிறுப்பை ஏற்படுத்திய 3ஆவதும் தீர்மானம்  மிக்கதுமான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்களால் இந்தியா வெற்றிபெற்றது.

இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா கைப்பற்றி சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் தொடர்ந்தும் முதல் நிலை அணி என்பதை உறுதி செய்தது.

Suryakumar Yadav and Virat Kohli helped India recover, India vs Australia, 3rd T20I, Hyderabad, September 25, 2022

மேலும் தனது சொந்த மண்ணில் இந்தியா ஈட்டிய 10 தொடர்சசியான தொடர் வெற்றி இதுவாகும்.

சூரியகுமார் யாதவ், விராத் கோஹ்லி ஆகிய இருவரும் குவித்த அதிரடி அரைச் சதங்கள்,   ஹார்திக் பாண்டியாவின் அதிரடி என்பன இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தன.

அவுஸ்திரேலியா நிர்ணயித்த 187 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  இந்தியா 19.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஆரம்ப வீரர் கே. எல். ராகுல் முதலாவது ஓவரிலேயே ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார்.

KL Rahul and Rohit Sharma walk out to bat, India vs Australia, 3rd T20I, Hyderabad, September 25, 2022

4ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 30 ஓட்டங்களாக இருந்தபோது அணித் தலைவர் ரோஹித் ஷர்மா 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க,  இந்தியா  பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது.

ஆனால், அடுத்து களம் புகுந்த சூட்டோடு அதிரடியை வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவ் 36 பந்துகளில் 5 சிக்ஸ்கள், 5 பவுண்டறிகளுடன் 69 ஓட்டங்களைக் குவித்தார்.

3 ஆவது விக்கெட்டில் விராத் கோஹ்லியுடன் 68 பந்துகளில் 104 பெறுமதிமிக்க ஓட்டங்களை சூரியகுமார் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினார்.

Suryakumar Yadav plays a shot through cover, India vs Australia, 3rd T20I, Hyderabad, September 25, 2022

அவர் ஆட்டமிழந்த பின்னர் களம் புகுந்த ஹார்திக் பாண்டியாவுடன் 4ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்த விராத் கோஹ்லி வெற்றிக்கு மேலும் 6 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது ஆட்டமிழந்தார்.

48 பந்துகளை எதிர்கொண்ட விராத் கோஹ்லி 4 சிக்ஸ்கள், 3 பவுண்ட்றிகளுடன் 63 ஓட்டங்களைக் குவித்தார்.

ஹார்திக் பாண்டியா 16 பந்துகளில் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். தினேஷ் கார்த்திக் ஒரு பந்தை எதிர்கொண்டு ஒரு ஓட்டத்தைப் பெற்றார்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சில் டெனியில் சாம்ஸ் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இந்தியாவினால் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்களைக் குவித்தது.

இந்த மொத்த எண்ணிக்கையில் நால்வர் மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் குவித்தனர். எனினும் ஆரம்ப வீரர் கெமரன் க்றீன், மத்திய வரிசை வீரர் டிம் டேவிட் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் பெற்றதன் பலனாக அவுஸ்திரேலியாவின் மொத்த எண்ணிக்கை 185 ஓட்டங்களைக் கட ந்தது.  

கெமரன் க்றீன், ஆரொன் பின்ச் ஆகிய இருவரும் 21 பந்துகளில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், பின்ச் 7 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டம் இழந்தார்.

18 ஓட்டங்கள் கழித்து கெமரன் க்றீன் ஆட்டம் இழந்தார். அவர் 21 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 52 ஓட்டங்களைக் குவித்தார்.

ஸ்டீவன் ஸ்மித் (9), க்ளென் மெக்ஸ்வெல் (6) ஆகிய இருவரும் 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழக்க மொத்த எண்ணிக்கை 84 ஓட்டங்களாக இருந்தது.

எனினும் ஜொஸ் இங்லிஸ் (24), டிம் டேவிட் ஆகிய இருவரும் 31 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்த முயற்சித்தனர்.

இங்லிஸ், மெத்யூ வேட் (1) ஆகிய இருவரும் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தல் ஆட்டமிழக்க அவஸ்திரேலியாவின் மொத்த எண்ணிக்கை 6 விக்கெட் இழப்புக்கு 117 ஓட்டங்களாக இருந்தது.

Tim David and Daniel Sams' fifty partnership helped revive Australia's innings, India vs Australia, 3rd T20I, Hyderabad, September 25, 2022

எவ்வாறாயினும் டிம் டேவிட், டெனியல் சாம்ஸ் ஆகிய இருவரும் 34 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரெலியாவின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் செர்த்தனர். டிம் டேவிட் 27 பந்தகளில் 4 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 54 ஓட்டங்களைக் குவித்தார்.

டெனியல் சாம்ஸ் 20 பந்துகளில் 28 ஓட்டங்களைப்   பெற்றார்.

இந்தியா சார்பாக மீண்டும் திறமையாக பந்துவீசிய அக்சார் பட்டேல் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/136421

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.