Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியாவின் தலையீட்டினை எதிர்த்த போராளிகளும், இந்தியாவிடம் தமிழர் நலன்களைத் தாரைவார்த்த அமிர்தலிங்கமும்
 

நற்பிட்டிமுனை படுகொலைகள்

 large.nadpiddimunaimassacre.jpg.b8d23e1b581fe4f18fa8b897d67f54f7.jpg

அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் ஒரு கிராமமே நற்பிட்டிமுனை. அநுராதபுரம் மீதான தாக்குதல் நடைபெற்று இரு நாட்களுக்குப் பின்னர், கடும்பச்சை நிற காக்கி சீருடை அணிந்த, இங்கிலாந்தின் விசேட படைகளால் பயிற்சியளிக்கப்பட்ட இலங்கை பொலீஸின் ஒரு பிரிவினரான விசேட அதிரடிப் படையினர், வைகாசி 17 ஆம் திகதி இரவு, நற்பிட்டிமுனை மற்றும் அதனைச் சூழவுள்ள இரு கிராமங்களுக்குள்ளும் நுழைந்தனர். அப்பகுகளை முற்றாக முடக்கிவிட்டு, அங்கிருந்த இளைஞர்கள் அனைவரையும் அவர்கள் கைதுசெய்தனர். அவ்வாறு கைதுசெய்யப்படும் போது சில இளைஞர்கள் அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏனையவர்கள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

 large.STFAnimals.jpg.fef6c4a83f627ea1f756037bb7a316b7.jpg

சிங்கள பெளத்த மிருகங்கள்  - விசேட அதிரடிப்படை அம்பாறை, தை முதலாம் திகதி, 2007

 

கிராமத்திற்குள் அதிரடிப்படையினர் நுழைந்தபோது இளைஞர் ஒருவர் குளித்துக்கொண்டிருந்தார். அவர்களின் காலில் வீழ்ந்த அவர், தன்னைக் கொல்லவேண்டாம் என்று மன்றாடியதுடன், போராளி அமைப்புக்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லையென்று கூறினார். அவர்கள் கேட்கவில்லை, அவ்விடத்திலேயே அவரைச் சுட்டுக் கொன்றனர். அருகிலிருந்த வீட்டிற்குச் சென்ற அவர்கள், உள்ளிருந்து இளைஞர் ஒருவரை வெளியே இழுத்துவந்து, அவரது மனைவி பார்த்திருக்க தலையில் சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்ட அவரது உடலை இழுத்துச் சென்ற அதிரடிப்படையினர், "பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் எல்லாத் தமிழர்களுக்கும் இதுதான் கதி" என்று சத்தமிட்டவாறே சென்றனர். 

தம்மால் கைதுசெய்யப்பட்டிருந்த மேலும் 40 இளைஞர்களை நற்பிட்டிமுனை மயானத்திற்கு இழுத்துச் சென்ற அவர்கள், அப்பகுதியில் கிடங்குகளை வெட்டுமாறு கட்டளையிட்டனர். கிடங்குகள் வெட்டி முடிக்கப்பட்டதும், அவற்றின் அருகிலேயே அவர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு அவர்கள் வெட்டிய கிடங்குகளை அவர்களைத் தள்ளி நிரவினர்.

கல்முனை பிரஜைகள் குழு சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், சர்வதேச மன்னிப்புச் சபைக்கு இப்படுகொலைகள் தொடர்பான விலாவாரியான அறிக்கை ஒன்றினையும் சமர்ப்பித்தது. சர்வதேச மன்னிப்புச்சபை இப் படுகொலைகுறித்து இலங்கை அரசாங்கத்துடன் தொடர்புகொண்டபோது, இளைஞர்களைக் கைதுசெய்ததையோ அல்லது படுகொலை செய்ததையோ முற்றாக மறுத்தது இலங்கையரசு. ஆனால், அங்கிருந்து காணாமற்போன இளைஞர்களுக்கு என்ன நடந்தது என்பதுபற்றி இலங்கையரசு எதுவுமே கூறவில்லை.

ஆனால், கல்முனை பிரஜைகள் குழுவின் தலைவரான போல் நல்லநாயகம் இதனை இப்படியே விட்டுவிடவில்லை. அவர் ஊடகங்களிடம் இதுகுறித்துப் பேசத் தொடங்கினார். அரசாங்கம் குறித்தும், அதிரடிப்படையினர் குறித்தும் பொய்யான வதந்திகளைப் பரப்புகிறார் என்கிற பெயரில் நல்லநாயகத்தை பொலீஸார் மறுநாள் கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர்ஆடி 1986 இல் நீதிபதி அவர் குற்றம் அற்றவர் என்று கூறி அவரை விடுவித்தார்.  தீர்ப்பு வழங்கப்படும்போது, "1985 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 17 ஆம் திகதி நற்பிட்டிமுனையில் கைதுகள் எதுவும் நடைபெறவில்லை எனும் அதிரடிப்படையினரின் கூற்றினை எனக்குக் கிடைத்திருக்கும் ஆதாரங்கள் பொய்யென்று நிரூபிக்கின்றன" என்றும் நீதிபதி மேலும் கூறினார்.

நற்பிட்டிமுனை படுகொலைகள் நடைபெற்று மூன்று நாட்களின் பின்னர் புலிகள் மீண்டும் தாக்கினர். மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் பயணம் செய்த ஜீப் வண்டியொன்றின்மீது புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் ஐந்து அதிரடிப்படையினர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அப்பகுதியைச் சுற்றிவளைத்த விசேட அதிரடிப்படையினரும் ஊர்காவற்படையினரும், அப்பகுதியிலிருந்த இரு கிராமங்களில் இருந்து 37 இளைஞர்களைக் கைதுசெய்து இழுத்துச் சென்று சுட்டுக்கொன்றனர். கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் அடையாளம் தெரியாதவாறு அதிரடிப்படையினரால் அழிக்கப்பட்டன.

 large.DiskShit.jpg.a1c4ebcfb2d40e05f267b84b4f294306.jpg

டிக் ஷிட் 2004

 வன்முறைகள் தீவிரமாகிக்கொண்டிருக்கும் தருணத்திலேயே டிக் ஷிட் இந்தியாவுக்கான தூதராக கொழும்பில் பொறுப்பேற்றுக்கொண்டார். வைகாசி 27 ஆம் திகதி எனக்கு வழங்கிய நேர்காணலில், அதிகரிக்கப்பட்டு வரும் வன்முறைகள், வன்முறைகளின் தீவிரம் குறித்த தனது கவலையினைத் தெரிவித்திருந்தார். "திரு பண்டாரியின் விஜயம் நண்மை பயப்பதாக‌ அமையவேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். மேலும் உயிரிழப்புக்கள் ஏற்படாதவாறு இந்த அழகான தீவு காக்கப்படுதல் வேண்டும்" என்று கூறினார்.

ஆனால், அவர் வேண்டிக்கொண்டதுபோல எதுவுமே அமையவில்லை. தமிழ்ப் போராளி அமைப்புக்களின் தலைவர்களைப் பொறுத்தவரையில் அப்போதைய சூழ்நிலை நம்பிக்கை தருவதாக இருக்கவில்லை.  ஜெயவர்த்தனவை நம்புவதற்கு அவர்கள் தயாராக இருக்கவில்லை. ஆகவே, பண்டாரியின் கொழும்பு விஜயம் குறித்து கலந்தாலோசிப்பதற்காக ஈழத் தேசிய விடுதலை முன்னணியினர் மீண்டும் கூடினர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன பண்டாரியையும் தனது தாளத்திற்கு ஆடவைக்கப் போகிறார் என்று கூறினார். பண்டாரியுடன் மிகவும் கனிவாகப் பேசி, அவரையும் தன்பக்கம் இழுத்துவிடப் போகிறார் ஜெயார் என்று அவர் கூறினார்.

மேலும், இந்தியாவுக்கும் போராளிகளுக்குமிடையே ஒரு பிளவினை ஏற்படுத்தவும் ஜெயார் முயல்வார் என்றும் அவர் கூறினார். "நாம் கவனமாக இருப்பது அவசியம்" என்று அவர் கூறினார்.

இந்தியா தம்மை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு அனுமதிப்பதில்லை என்கிற முடிவிற்கு ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் வந்தார்கள். ஈழத்தமிழர்களின் நலன்களே தமது குறிக்கோளாக இருக்கவேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். ஆகவே, தமிழர்கள் சார்பாக இந்தியா முடிவெடுப்பதை அவர்கள் நிராகரித்தார்கள். ஆனால், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியோ இதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டை எடுத்தது. அமிர்தலிங்கம் வெளியிட்ட அறிக்கையில் இலங்கைத் தமிழ் மக்களுக்கான தீர்வினை தீர்மானிக்கும் நடவடிக்கையில் இந்தியா நேரடியாக ஈடுபடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.   

மேலும் மூன்று நிபந்தனைகளையும் அமிர்தலிங்கம் முன்வைத்திருந்தார்,

1. அனைத்துப் போராளி அமைப்புக்களும் சமரசப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும்.

2. பேச்சுவார்த்தைகள் இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையே நேரடியாக நடைபெற வேண்டும்.

3. எடுக்கப்படும் தீர்விற்கு இந்தியா எழுத்துறுதி தரவேண்டும்.

 

அமிர்தலிங்கத்தின் முடிவினையடுத்து பிரபாகரன் மிகவும் கோபமுற்றார். தமிழர்களின் தலைவிதியினை இந்தியா தீர்மானிப்பதை அனுமதிக்கக் கூடாது என்று ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களிடம் அவர் வலியுறுத்தினார். "எமது தலைவிதியினை நாமே தீர்மானிக்க வேண்டும்" என்று அவர் கூறினார். தமது தலைமையினைப் பாதுகாத்துக்கொள்ள தமிழரின் நலன்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் இந்தியாவிடம் அடகுவைப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.  இதனையடுத்து இலங்கையரசாங்கத்துடன் பேச்சுக்களில் ஈடுபடவேண்டாம் என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் கேட்டுக்கொண்டனர்.

 

  • Like 1
  • Thanks 1
  • Replies 619
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

பிரபாகரன் தமிழ்த் தேசிய அரசியலினைப் பின் தொடர்ந்து பல தாசாப்த்தங்களாக ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவந்த மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான த. சபாரட்ணம் அவர்கள் எமது தேசியத் தலை

ரஞ்சித்

அறிமுகம் 1950 களின் பாராளுமன்றத்தில் தமிழருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய ஆசனங்களின் எண்ணிக்கைக்கான கோரிக்கையிலிருந்து ஆரம்பித்து இன்று நிகழ்ந்துவரும் உள்நாட்டு யுத்தம் வரையான தமிழர்களின் நீதிக்க

ரஞ்சித்

உள்நாட்டிலும், இந்தியாவிலும் தனது இனவாத நடவடிக்கைகளுக்காக எழுந்துவந்த எதிர்ப்பினைச் சமாளிப்பதற்காக இருவேறு கைங்கரியங்களை டி எஸ் சேனநாயக்கா கைக்கொண்டிருந்தார். ஒருங்கிணைந்த தமிழ் எதிர்ப்பினைச் சிதைப்பத

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்களுக்குத் தனிநாடும் இல்லை சமஷ்ட்டியும் இல்லை. தமிழ்நாட்டில் போராளிகள் இயங்க விடமாட்டேன் - ‍ ரஜீவ் காந்தி
 

பண்டாரியின் விஜயம்

 இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்றில் வைகாசி 28 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தார் இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி. இந்தியாவால் வரையப்பட்ட யுத்த நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை தொடர்பான நகலையும் அவர் தன்னுடன் கொண்டுவந்திருந்தார். அந்த நகல், சக்சேனாவுடன் ஜெயாரும், லலித்தும் நடத்தியை பேச்சுக்களின் அடிப்படையில் இந்திய வெளிவிவகார அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டிருந்தது.

பண்டாரி நான்கு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடினார். யுத்த நிறுத்தம், பேச்சுக்களில் ஈடுபடவிருக்கும் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் குறித்த விபரம், அரசியல்த் தீர்விற்கான அடிப்படை மற்றும் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படும் நாள் ஆகியவையே அந்த நான்கு விடயங்களுமாகும். முதல் மூன்று விடயங்கள் குறித்து ஜெயாரும், லலித் அதுலத் முதலியும் பிடிவாதமான நிலைப்பாட்டில் இருந்தார்கள். அதுலத் முதலி, நகலில் இருந்த சொற்பிரயோகங்கள் குறித்து சர்ச்சைகளை எழுப்பிக்கொண்டிருந்தார். யுத்தநிறுத்தம் எனும் சொல் பாவிக்கப்பட்டதை அவர் ஆட்சேபித்தார். தமிழ் ஆயுத அமைப்புக்கள் தமக்கான பிரதேசம் ஒன்றினை வைத்திருக்காதவிடத்து யுத்த நிறுத்தம் என்கிற சொல் பாவிக்கப்படலாகாது என்றும், வன்முறை தவிர்ப்பு என்று அதனை மற்றவேண்டும் என்று தர்க்கித்தார். ஆனால் பண்டாரியோ லலித்தின் கோரிக்கையினை நிராகரித்தார்.

வடக்குக் கிழக்கில் அதிகரித்துவரும் போராளின் தாக்குதல்களின் பின்னால் இந்தியாவே இருக்கிறது என்று ஜெயார் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டினார். தமிழ் நாட்டிலிருந்து போராளிகளும் ஆயுதங்களும் இலங்கைக்குள் வருவதை இந்தியா தடுத்தாலே வன்முறைகள் குறைந்துவிடும் என்று அவர் கூறினார். ஆகவே, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் ஒரு நிபந்தனையாக பாக்கு நீரிணையூடாக போராளிகளும், ஆயுதங்களும் கடத்தப்படுவது முற்றாகத் தடைசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். இந்தவிடயத்தில் பண்டாரி விட்டுக்கொடுக்க முன்வந்தார். அடுத்ததாக நாட்டில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுவது அரசாங்கத்தின் கடமையென்பதால், போராளிகளின் தாக்குதல்களால் மூடப்பட்ட  பொலீஸ் நிலையங்கள் மீளத் திறக்கபட அரசாங்கத்திற்கு அனுமதி கொடுக்கப்பட வேண்டும் என்று கோரினார் ஜெயவர்த்தன. அதனையும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இணைத்துக்கொள்ள பண்டாரி சம்மதித்தார்.

large.Rajive.jpg.ad8368ef54ed9d09eeedec8e35e11398.jpg

ரஜீவ் காந்தி

 

தமிழர் தரப்புப் பிரதிநிதிகளாக புலிகள், .பி.ஆர்.எல்.எப், டெலோ மற்றும் புளொட் ஆகிய போராளி அமைப்புக்களும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும் பங்குகொள்வார்கள் என்ற இந்தியாவின் பரிந்துரையினை ஜெயார் ஏற்க மறுத்தார். பயங்கரவாத குழுக்களுடன் பேசுவதில்லை என்கிற தீர்க்கமான முடிவினை தனது அரசாங்கம் எடுத்திருப்பதாக அவர் கூறினார். ஆயுத அமைப்புக்களுடன் பேசுவது அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்குவதாக ஆகிவிடும் என்று அவர் தர்க்கித்தார். அதற்குப் பதிலளித்த பண்டாரி, அந்நியப்படுத்தப்பட்டுள்ள மக்கள் கூட்டம் ஒன்றின் அரசியல் அபிலாஷைகளை பேச்சுவார்த்தைகளூடாக தீர்க்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில், சட்டம், அங்கீகாரம் போன்ற‌ விடயங்கள் குறித்துப் பேசுவது பயனற்றது என்றும், தற்போதுள்ள நிலைமை அதனைக் கடந்து சென்றுவிட்டதாகவும் கூறினார். பஞ்சாப் மற்றும் அஸாமியப் பிரிவினைவாதப் போராளிகளுடன் ரஜீவ் காந்தி நடத்திவரும் பேச்சுக்களை இதற்கு உதாரணமாக முன்வைத்தார் பண்டாரி. அதன்பின்னர் போராளி அமைப்புக்களுடனும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடனும் பேசுவதற்கு ஜெயார் ஒத்துக்கொண்டார். ஜெயாரின் இந்த இசைவை இந்தியாவின் இராஜதந்திரத்திற்குக் கிடைத்த மிகப்பெரும் வெற்றி என்று ரஜீவும், பண்டாரியும் கிலாகித்து நின்றனர். 

ரஜீவ் காந்தியின் அழைப்பினை ஏற்று ஆனி 1 ஆம் திகதி அவருடன் பேச்சுக்களில் ஈடுபடுவதற்காக ஜெயவர்த்தன தில்லி சென்றார். ஜெயவர்த்தனவுடன் பேசும்போது பஞ்சாப்பிய, அஸாமியப் பிரிவினைவாதப் போராளிகளுடனனான தனது பேச்சுவார்த்தை அனுபவங்களை ரஜீவ் பகிர்ந்துகொண்டார். தமிழ் ஆயுத அமைக்களுடன் பேசுவதற்குச் சம்மதித்த ஜெயாரின் இசைவினை "துணிவான முடிவு" என்று ரஜீவ் பாராட்டினார். பதிலளித்த ஜெயார், அநுராதபுரம் மீதான தாக்குதலையடுத்து சிங்கள மக்கள் தமிழ் ஆயுத அமைப்புக்கள் மீது கடுங்கோபத்தில் இருப்பதாக க் கூறினார். ஆகவே, தான் தமிழ் ஆயுத அமைப்புக்களுடன் பேசப்போவது தெரிந்தால், சிங்கள மக்கள் தன்மீது அதிருப்தியடைவார்கள் என்றும், அதனைச் சமாளிக்க ரஜீவ் தனக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதற்காக, இருவிடயங்கள் குறித்து இந்தியா, இலங்கைக்குச் சார்பாக நடந்துகொள்ள வேண்டும் என்று ஜெயார் கூறினார். இப்படிச் செய்வதன் மூலம், இந்தியா தமிழ் மக்களுக்குச் சார்பாக நடந்துகொள்கிறது என்கிற எண்ணத்தில் இருக்கும் சிங்களவர்கள் தமது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளலாம் என்று அவர் கூறினார். 

ஜெயார் ரஜீவிடன் முன்வைத்த இரு கோரிக்கைகளாவன,

1. தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு உதவுவதை  இந்தியா முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

2. தமிழர்களின் அபிலாஷையான தனிநாட்டினை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக் கூடாது.

 இவை இரண்டையும் ரஜீவ் உடனடியாகவே ஏற்றுக்கொண்டார். தனது விஜயத்தின் நோக்கத்தை நிறைவேற்றினார் ஜெயவர்த்தன.

தொடர்ந்து பேசிய ஜெயார், பாக்குநீரிணையை இந்திய இலங்கைக் கடற்படைகள் கூட்டாக கண்காணிப்பதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குக் கடத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் பயணிக்கும் போராளிகளைக் கட்டுப்படுத்த முடியும் என்று கூறினார். இதற்குப் பதிலளித்த ரஜீவ், இதுகுறித்து தான் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியளித்தார். 

ஜெயாரின் விஜயத்தின் இரண்டாம் நாளான ஆனி 2 ஆம் திகதி, சூறாவளியினால் பாதிக்கப்பட்டிருந்த அயல்நாடான பங்களாதேசத்திற்கு அவரை அழைத்துச் சென்றார் ரஜீவ். தில்லியிலிருந்து டாக்காவிற்குச் செல்லும் வழியிலும், திரும்பி வரும் வழியிலும் இரு தலைவர்களும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்து ஆராய்ந்தார்கள். இந்தப் பேச்சுக்களின்போது, அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகாக இலங்கையரசு முன்வைத்துவந்த மாவட்ட சபையினைக் கைவிட்டு மாகாண சபையினை ஜெயார் ஏற்றுக்கொள்ள வைப்பதில் ரஜீவ் வெற்றி கண்டார்.  ஜெயார் தான் போராளிகளுடனும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னண்னியினருடனும் பேசுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கூறினார். 

ஆனி 3 ஆம் திகதி ஜெயார் நாடுதிரும்பினார். ஜெயவர்த்தன தில்லியிலிருந்து புறப்படுமுன்னர் ஆறு பந்திகளைக் கொண்ட அறிக்கையொன்று இந்தியாவினால் வெளியிடப்பட்டது. அவற்றில் இரு முக்கியமான பந்திகள் இவ்வாறு கூறியிருந்தன, 

"இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கும், இறைமைக்கும் பங்கம் ஏற்படாத வகையில், அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல்த் தீர்வு ஒன்றினை அடைவதற்கான சூழ்நிலையினை ஏற்படுத்துவது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் இணங்கியிருக்கிறார்கள்".

"மேலும், அனைத்துவிதமான வன்முறைகளும் முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதிலும் இணக்கப்பாடு ஏற்பட்டிருக்கிறது. வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வழமை நிலை உருவாக்கப்படுவதற்குத் தேவையான அனைத்துவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இந்தியாவில் அகதிகளாகத் தஞ்சம் கோரியிருக்கும் தமிழர்கள் தாமதமின்றி மீள நாடு திரும்புவதும் இதன்மூலம் ஏதுவாக்கப்படும்".

தில்லியிலிருந்து ஜெயாரை வழியனுப்பி வைத்தபின்னர் பத்திரிகையாளர்களுடன் பேசினார் ரஜீவ். வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதனூடாகவே அரசியல்த் தீர்விற்கான சூழ்நிலையினை ஏற்படுத்த முடியும் என்று தாம் இருவரும் ஏற்றுக்கொண்டதாக‌ அவர் கூறினார்.  ஆகவே, தமிழ்நாட்டை தளமாகக் கொண்டு இலங்கையில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டுவரும் போராளி அமைப்புக்களின் செயற்பாடுகளைத் தான் முடக்கிவிடுவதற்குத் தீர்மானித்திருப்பதாகவும், பாக்கு நீரிணையூடாக ஆட்களும் ஆயுதங்களும் இலங்கைக்குக் கொண்டுசெல்லப்படுவதைத் தடுக்கப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதன்மூலம் வன்முறைகள் முடிவிற்குக் கொண்டுவரப்படும் என்றும், அதன்பிறகு இலங்கையரசாங்கமும் தமது இராணுவ நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ளும் என்றும் ரஜீவ் கூறினார்.

"இலங்கையில் தனிநாடொன்றினை உருவாக்க போராடிவரும் தமிழ் கெரில்லாக்கள் இந்தியாவை அதற்கு ஒரு தளமாகப் பாவிப்பதை நான் இனிமேல் அனுமதிக்கமாட்டேன். அடுத்ததாக, இலங்கையில் தமிழர்கள் தமக்கென்று தனிநாடு ஒன்றினை எதிர்பார்க்க முடியாது. சமஷ்ட்டி முறையிலான தீர்வும் அவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது. இந்தியாவிலிருக்கும் மாநிலங்களையொத்த தீர்வொன்றினை அவர்கள் எதிர்பார்க்க முடியும்" என்று தீர்க்கமாகக் கூறினார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களளைச் சந்தித்துவிட்டு தனது அலுவலகம் திரும்பிய ரஜீவ், தமிழ்நாட்டு முதலமைச்சரான எம்.ஜி.ஆருடன் தொலைபேசியில் பேசினார். ஜெயவர்த்தனவுடனான பேச்சுக்கள் பயனுள்ளதாக அமைந்திருந்தன என்று கூறிய ரஜீவ், இலங்கைத் தீவின் அரசியற் பிரச்சினைக்கான தீர்வொன்று எட்டப்படும் சூழ்நிலை விரைந்து உருவாகி வருகிறது என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் கல்வித்துறை அமைச்சராகவிருந்த இரா நெடுஞ்செழியன் தமிழக சட்டசபையில் எம்.ஜி.ஆருடன் ரஜீவ் காந்தி பேசிய விடயங்கள் குறித்து விபரித்ததுடன், தமிழரின் பிரச்சினைக்கு அரசியற் தீர்வொன்று எட்டப்படுவதற்கான சாத்தியம் உருவாகியிருப்பதாக ரஜீவ் காந்தி நம்புவதாகவும் தெரிவித்தார். மேலும், தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்தபின்னர், இலங்கையில் நடைபெற்றுவரும் வன்முறைகளை முடிவிற்குக் கொண்டுவரும் செயற்பாடுகளில் ரஜீவ் காந்தி இறங்குவார் என்றும் நெடுஞ்செழியன் தெரிவித்தார். ஆனி மாதத்தின் முதல் அரைப்பகுதியில் அமெரிக்காவிற்கும், ரஸ்ஸியாவிற்கு ரஜீவ் காந்தி உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டிருந்தார். ரொனால்ட் ரீகனுடனும், மிக்கெயில் கொர்பச்சேர்வுடனும் அவர் நடத்திய பேச்சுக்களில் இலங்கையில் நடந்துவரும் பிரச்சினை குறித்தும் பேசினார். ஆனி 18 ஆம் திகதி ரஜீவ் நாடு திரும்பினார். அதேநாள் இலங்கையில் யுத்தநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

ஆனி 3 ஆம் திகதி நாடுதிரும்பிய ஜெயார், கட்டுநாயக்க விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, இறுதியாக இந்தியா களநிலவரங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளத் தொடங்கியிருப்பதாகக் கூறினார். மேலும், இந்தியாவின் மாநிலங்களுக்கு இருக்கும் அதிகாரங்களை ஒத்த அதிகாரங்களைத் தமிழர்களுக்கு தான் வழங்கவிருப்பதாகவும், ஆனால் அதிகாரப் பரவலாக்கலின் அலகு மாவட்டங்கள் தான் என்றும் கூறினார்.

சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கம், தில்லியில் இரு நாட்டுத் தலைவர்களும் இணைந்து வழங்கிய அறிக்கை மற்றும் கட்டுநாயக்காவில் ஜெயார் வழங்கிய செவ்வி ஆகியவை குறித்து தனது கருத்தினைப் பதிவுசெய்தார். இருநாட்டுத் தலைவர்களும் இணைந்து வழங்கிய அறிக்கையினை வரவேற்ற அவர், "அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கான சூழ்நிலை ஏற்படுத்தவேண்டும் என்று இரு நாட்டுத் தலைவர்களும் கூறியதை நான் வரவேற்கிறேன். இந்தியா இப்பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கினை ஆற்றுவதன் மூலம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைப் பெற்றுத்தரவேண்டும்" என்று கூறினார். ஆனால், கட்டுநாயக்காவில் ஜெயார் தெரிவித்த மாவட்ட சபைகளே  அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகுகள் என்பது தனக்கு ஏமாற்றமளிக்கிறது என்றும் கூறினார்.

 தில்லியில் வெளியிடப்பட்ட இணைந்த அறிக்கையினைப் பாராட்டிய லலித், இந்தியாவின் நிலைப்பாட்டில் நல்ல மாற்றங்கள் தெரிகின்றது என்றும் புகழ்ந்தார்.

 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி 
large.RAW_India.jpg.11b42c1d6b4b6d113ba19ec7380cec9f.jpg

 

இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர். 

ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். 

தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார்.

large.VPABAB.jpg.8baf0a81ee4caf6c8780eb522f072434.jpg

பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம்

இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார்.

தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார்.

சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார். 

சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.   

ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார்.

ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர்.

ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார். 

தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர்.

சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன். 

large.HamiltonVanasinghe.jpg.519906b3971b2c9e2df73e4baf26168d.jpg

ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க

வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார். 

வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார்.

"யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார்.

ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார், 

"இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது).

அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள்.

தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.

 யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம்

ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர். 

ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து .நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார். 

 large.Sithambaram.jpg.cef3f6ec4dbfd50d7eb781c1ab38c8d4.jpg

ரஜீவுடன் சிதம்பரம்

 பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், .பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார்.

பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்".

சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".

 "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம்.

சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள்.

அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார்.

large.SankarRajee.jpg.2ff8d146db15c5a57a1a64df32c4fd0b.jpg

பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ

சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது.

வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார்.

பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன், 

1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.

 2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.

 3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும். 

4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார்.

யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார்.

பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர்.

பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. 

அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள்.

1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும்.

2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும்.

3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும்.

5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும்.

தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர்.

ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஈழத் தமிழர்களின் நலன்களை விற்று தனது நலன்களைக் காப்பாற்றிக்கொள்ள எத்தனித்த இந்தியா

 

பண்டாரியுடனான பேச்சுக்களின்போது சில விடயங்கள் குறித்து விளக்கங்களைத் தருமாறு ஜெயார் கோரினார், 

யுத்த நிறுத்தம் : போராளிகள் யுத்த நிறுத்தத்திற்கு ஆதரவு தரவேண்டும் என்று ஜெயார் கேட்க, போராளிகளைக் கலந்தாலோசிக்கமாலேயே பண்டாரி, போராளிகள் யுத்த நிறுத்தத்திற்கு ஆதரவு தருவார்கள் என்று உறுதியளித்தார். 

பேச்சுவார்த்தை : போராளிகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள் என்று உறுதியளிக்க முடியுமா என்று ஜெயார் கேட்டபோது, ஆம், அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்று போராளிகளைக் கேட்காமலேயே உறுதியளித்தார் பண்டாரி. இதன்போது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன் பேசுவதில் பயனில்லையென்றும் ஜெயார் கூறியிருந்தார். 

தில்லி திரும்பியதும் இந்தியாவின் யுத்த நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை தொடர்பான திட்டத்தினை போராளிகளுக்கும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும் "இரகசிய ஆவணம்" எனும் பெயரில் பண்டாரி அனுப்பி வைத்தார்.

 யுத்த நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை தொடர்பான இந்தியாவின் திட்டம் பின்வருமாறு,

கட்டம் ஒன்று : ஆனி 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மூன்று வாரங்களுக்குள் செய்யப்பட வேண்டியவை

 அரசாங்கம் செய்ய வேண்டியவை

1. வீதிகளில் வாகனங்கள் ஆட்களையும் பொருட்களையும் கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையினை நீக்குதல்.

2. புதிய சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்திவைக்கப்படும்.

3. உள்ளூர் அதிகாரிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் முன்னிலையிலேயே இராணுவத்தினர் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவர்.

4. கடற்கண்காணிப்பு வலயங்களை நீக்குதலும், இராணுவத்தினருக்கும் பொலீஸாருக்கும் மேலதிகமான ஆயுத தளபாடங்களை வெளிநாட்டிலிருந்து பெற்றுக்கொள்வதை நிறுத்துதல்.

 

போராளிகள் செய்யவேண்டியவை

1. யுத்த தவிர்ப்பு வலயங்களை தாக்குதல் நடத்துவதற்குப் பயன்படுத்துவதை நிறுத்துதல்.

2. வடக்குக் கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சிங்கள் மற்றும் தமிழ் மக்கள்  மீதான தாக்குதல்களை நிறுத்துதல்.

3. வடக்குக் கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அமைந்திருக்கும் அரச அலுவலகங்கள், பொருளாதார இலக்குகள், தனியார் சொத்துக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துதல்.

4. யுத்ததினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நாட்டிற்கு வெளியே இருந்து ஆட்களையும், ஆயுதங்களையும் கொண்டுவருவதை நிறுத்துதல்.

 

கட்டம் இரண்டு : மூன்று வாரங்களில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவை

அரசாங்கம் செய்யவேண்டியவை

1. பாதுகாப்புப் படையினர் ஊரடங்கு உத்தரவினை மீளப் பெற்றுக்கொள்வர்.

 

போராளிகள் செய்ய வேண்டியவை

1. இராணுவத்தினரினதும், பொலீஸாரினதும் ரோந்து அணிகள் மீதான தாக்குதல்களை நிறுத்துதல்.

2. இராணுவ முகாம்கள், பொலீஸ் நிலையங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துதல்.

3. வீதிகள், புகையிரதப் பாதைகள் மற்றும் பாலங்கள் மீது கண்ணிவெடித் தாக்குதல்களை நடத்துவதை நிறுத்துதல்.

4. ஆயுதங்களைக் காவித் திரிவதை நிறுத்துதல்.

 

கட்டம் மூன்று: இரண்டு வாரங்களில் செய்யப்பட வேண்டியவை

 1. யுத்த நிறுத்தத்தினைக் கடைப்பிடித்தல்.

2. மூடப்பட்டிருக்கும் பொலீஸ் நிலையங்களை மீளத் திறத்தல். சட்டம், ஒழுங்கு விடயங்களைப் பொலீஸார் பொறுப்பேற்றுக் கொள்வர்.

3. வழக்குப் பதிவின்றி தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும். வழக்குப் பதிவுசெய்யப்பட்டவர்கள் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, கலந்தாலோசனைகளின்பின்னர் விடுதலை செய்யப்படுவர்.

கட்டம் நான்கு (அரசியல்த் தீர்வு எட்டப்படுவதற்கான கால அவகாசம் குறிப்பிடப்படவில்லை)

முக்கியமான பிரச்சினைகளில் எட்டப்படவேண்டிய அரசியல்த் தீர்வு குறித்த இரகசியப் பேச்சுவார்த்தைகள் அரசாங்கம், போராளிகள் மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆகியோருக்கிடையில் நடைபெறும். இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மூன்றாவது நாடொன்றில் பேச்சுவார்த்தைகள் நடைபெறும். பேச்சுவார்த்தைகளில் கலந்தாலோசிக்கப்படும் அனைத்து விடயங்களையும், பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகளையும் இரகசியமாக வைத்திருக்கத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும். யுத்த நிறுத்தமும், பொது மன்னிப்பும் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து சரியாக மூன்று மாத காலத்திற்குள் அரசியல்த் தீர்விற்கான பலமான அடித்தளம் இடப்பட்டிருக்க வேண்டும். அரசியல்த் தீர்விற்கான அடித்தளம் இடப்பட்டதும், அரசாங்கத்திற்கும் தமிழர்களின் அரசியல்த் தலைமைக்கும், ஆயுத அமைப்புக்களுக்கும்  இடையே வெளிப்படையானதும், நேரடியானதுமான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும்.

இந்தியாவினால் முன்வைக்கப்பட்டிருந்த ஆலோசனைகளை பிரபாகரன் அறிந்துகொண்டபோது கொந்தளித்துப் போனார். தமிழர்களின் நலன்களை விற்று தனது சொந்த நலன்களை இந்தியா பாதுகாத்துக்கொள்ளப் பார்க்கிறது என்று பாலசிங்கத்திடம் அவர் கூறினார். கட்டம் ஒன்று, சரத்து 4 இல்,  குறிப்பிடப்பட்டிருக்கும், ".....இராணுவத்தினருக்கும் பொலீஸாருக்கும் மேலதிகமான ஆயுத தளபாடங்களை வெளிநாட்டிலிருந்து பெற்றுக்கொள்வதை நிறுத்துதல்" என்று கோருவதன் மூலம் இந்தியா தனது நலன்களைப் பாதுகாக்க முனைகிறது என்று அவர் கூறினார். இதனூடாக தனது இராணுவத்தினருக்கான பயிற்சிகள் என்கிற பெயரில் வெளிநாட்டு இராணுவ நிபுணர்களையும், கூலிப்படைகளையும் ஜெயவர்த்தன‌ இலங்கைக்குள் கொண்டுவருவதை இந்தியா தடுக்கப்பார்க்கிறது என்று அவர் கூறினார். இதனை அடைந்துகொள்வதற்காக ஈழத்தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தின் ஊடாக‌ இதுவரை காலமும் அடைந்திருக்கும் அனைத்து வெற்றிகளையும் இந்தியா தாரை வார்க்க விரும்புகிறது என்றும் அவர் கூறினார்.

இந்தியாவின் இந்தச் செயல் மூலம் தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதப் போராட்டத்தினை முற்றாகக் கைவிட நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதோடு, தமிழர்களின் ஆயுத வல்லமையினால் மூடப்பட்டிருந்த பொலீஸ் நிலையங்களை அரசாங்கம் மீளவும் திறக்கும் சந்தர்ப்பமும் இந்தியாவால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது.

மேலும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை தமிழ் மக்களின் அரசியல்த் தலைமை என்று இந்தியா குறிப்பிடுவதையும், போராளிகளின் முயற்சியினால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கான சூழல் ஏற்பட்டிருக்கும் தருணத்தில், அவர்களை வெறுமனே ஆயுத அமைப்புக்கள் என்று இந்தியா அழைப்பதையும் பிரபாகரன் விரும்பவில்லை.  

ஆனால், பிரபாகரன் அதிருப்தியடைந்த இன்னும் இரு விடயங்கள் இருந்தன. இலங்கை இராணுவத்தினரினதும், பொலீஸாரினதும் பழிவாங்கல்த் தாக்குதல்களிலிருந்து தமிழ் மக்களைப் பாதுகாக்கத் தேவையான சரத்துக்களை தனது ஆலோசனைகளில் சேர்த்துக்கொள்ள இந்தியா தவறியிருந்தது. மேலும், பேச்சுவார்த்தைகளை கால அவகாசமின்றி ஜெயவர்த்தன நீட்டித்துச் செல்வதற்கான சந்தர்ப்பத்தினையும் இந்தியா தனது ஆலோசனைகள் ஊடாக வழங்கியிருந்தது. ஆகவே, அரசியல்த் தீர்விற்கான பலமான அடித்தளம் ஒன்றினையும், அதனூடான நிரந்தரத் தீர்வையும்  இலங்கை குறிப்பிட்ட காலத்திற்குள் முன்வைக்கவேண்டும் என்கிற நிபந்தனையினை இந்தியா கோரியிருக்க வேண்டும் என்றும் பிரபாகரன் கருதினார்.

இந்தியா முன்வைத்திருந்த ஆலோசனைகள் குறித்து பிரபாகரன் தனது அதிருப்திகளைத் தெரிவித்து வந்த நிலையில், லலித் அதுலத் முதலி அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் செயலில் இறங்கினார். இலங்கையரசாங்கம் தனது படைகளை ஆனி 18 இலிருந்து யுத்த நிறுத்ததைக் கடைப்பிடிக்குமாறு கட்டளையிட்டிருப்பதாக அவர் அறிவித்தார்.

அவசர அவசரமாக இலங்கையரசாங்கம் யுத்த நிறுத்தத்தினை கடைப்பிடிக்கப் போவதாக அறிவித்ததன் உண்மையான நோக்கம், போராளிகள் யுத்த நிறுத்தத்திற்கான நிபந்தனைகளை முன்வைப்பதைத் தடுப்பதற்காகத்தான் என்பது இரகசியமல்ல. தேசியப் பாதுகாப்பு அமைச்சின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட லலித் அதுலத் முதலி, யுத்த நிறுத்தப் பிரகடணம் இரு தரப்பாலும் ஒன்றிணைந்து வெளியிடப்படப்படும் போது மட்டுமே இரு தரப்பு நிபந்தனைகளும் உள்வாங்கப்பட்டிருக்கும், ஆகவேதான், தன்னிச்சையாக இலங்கையரசாங்கம் இதனை அறிவித்தது, போராளிகளின் நிபந்தனைகளை நாம் இதன்மூலம் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை என்றாகிவிடுகிறது என்று கூறினார்.

"இப்போது அவர்கள் தமது நிபந்தனைகளையும் தூக்கிக்கொண்டு நரகத்திற்குப் போகட்டும் (Let them go to hell with their conditions)" என்று ஆக்ரோஷமாகக் கூறினார் லலித் அதுலத் முதலி.

பிரபாகரன் ஆட எண்ணிய ஆட்டத்தில் அவரைத் தோற்கடித்திருந்தார் லலித் அதுலத் முதலி. இதன்மூலம் பிரபாகரனும் ஏனைய போராளித் தலைவர்களும் யுத்த நிறுத்தத்தினை நிபந்தனியின்றி ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. எனது அறிவிற்கு எட்டிய வகையில், லலித் அதுலத் முதலி பிரபாகரனை வெற்றி கொண்டது இந்தத் தருணத்தில் மட்டும்தான் என்று நினைக்கிறேன். வடமாராட்சியில் இலங்கையரசால் நடத்தப்பட்ட ஒப்பரேஷன் லிபரேஷன் இராணுவ நடவடிக்கையின்போது கூட , தனது போராளிகளையும், ஆயுத தளபாடங்களையும் சேதமின்றி வன்னிக்குப் பிரபாகரன் நகர்த்தியிருந்தபோதும், அதுலத் முதலியும், அவரது தலைவரான ஜெயவர்த்தனவும் அதிர்ந்து போகும்வகையில் நெல்லியடி மத்திய கல்லூரி மீது பாரிய குண்டுத்தாக்குதல் ஒன்றினை பிரபாகரன் வெற்றிகரமாக நடத்தியிருந்தார். 

ஆனி 18 ஆம் திகதி காலை, ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் யுத்த நிறுத்தம் குறித்து முடிவெடுக்க மீளவும் ஒன்றுகூடினார்கள்.

Edited by ரஞ்சித்
spelling
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யுத்தநிறுத்தத்தினைத் தன்னிச்சையாக அறிவித்ததன் மூலம், தமிழரின் நிபந்தனைகளை உதாசீனம் செய்த சிங்கள அரசு 

யுத்த நிறுத்தம் 1985 ஆம் ஆண்டு ஆனி 18 ஆம் திகதி நடைமுறைக்கு வந்தது. தன்னிச்சையாக யுத்தநிறுத்தத்தை அறிவித்ததன் மூலம் லலித், தம்மை விட சாதுரியமாகச் செயற்பட்டிருப்பதை ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டனர். மேலும், இந்தியாவையும், சர்வதேசத்தையும் பகைத்துக்கொள்ளக் கூடாது என்கிற அழுத்தத்தினால் வேறு வழியின்றி போராளிகளும்  யுத்தநிறுத்தத்தினை அனுட்டிக்கவேண்டியதாயிற்று. இலங்கையில் யுத்த நிறுத்தத்தை கொண்டுவந்தமைக்காகவும், பேச்சுவார்த்தைகளுக்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதற்காகவும்  இந்தியாவை அமெரிக்கா, ரஸ்ஸியா, இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் பாராட்டியிருந்தன.

large.Prabakaran-Balasingham.jpg.a20621c215c337796ba58d15213072c5.jpg

பிரபாகரனுடன் அன்டன் பாலசிங்கம்

 ஆனால், இந்தியாவின் இந்த அழுத்தம் குறித்து போராளித் தலைவர்கள் மகிழ்ச்சியடையவில்லை. குறிப்பாக பிரபாகரன் இதுகுறித்து மிகுந்த அதிருப்தியடைந்திருந்தார். அரச படைகளுக்கெதிரான போராளிகளின் வெற்றிகரமான தாக்குதல் முன்னெடுப்புக்களும், மக்களின் ஏகோபித்த உற்சாகமும் இதன்மூலம் மழுங்கடிக்கப்படும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். யுத்தநிறுத்தத்தினை போராளிகள் எதிர்ப்பார்கள் என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். அதேவேளை, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் ஆதரவாளர்களால் இரகசியமாக நடத்தப்பட்டு வந்த விஷமப் பிரச்சாரத்தையும் அவர் அறிந்துகொண்டார். "நாம் ஜெயவர்த்தனவுடன் பேசுவதைத் தவறென்று கூறியவர்கள் இப்போது என்ன செய்யப்போகிறார்கள்?" என்பதே கூட்டணியின் ஆதரவாளர்கள் முன்வைத்த விமர்சனமாக இருந்தது.   

அதேவேளை, அரசாங்கமும் கடுமையான பிரச்சாரம் ஒன்றினைக் கட்டவிழ்த்து விட்டிருந்தது. சிங்கள ஊடகங்களில் அரசினால் முன்னெடுக்கப்பட்டுவந்த பிரச்சாரத்தில் பயங்கரவாதிகள் மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதாலேயே யுத்தநிறுத்தத்திற்கு இணங்கியிருக்கிறார்கள் என்று அது சிங்கள மக்களிடையே கூறிவந்தது. மேலும், யுத்தநிறுத்தம் இராணுவத்தினருக்குப் பாதகமானது என்கிறை பிரமையினையும் அரசும் இராணுவமும் சிங்கள மக்களிடையே உருவாக்கி வந்தன. போராளிகளை அவமானப்படுத்த அரசு உருவாக்கிவரும் சூழ்நிலை பற்றிக் கலந்தாலோசிக்க ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களை அவசர சந்திப்பொன்றிற்கு அழைத்தார் பிரபாகரன். யுத்த நிறுத்தம் அமுலிற்கு வந்த ஒரு சில மணிநேரத்தின் பின்னர், ஆனி 18 ஆம் திகதி ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. 

இரு முக்கிய விடயங்கள் அங்கு ஆராயப்பட்டன. முதலாவது யுத்தநிறுத்தம், இரண்டாவது போராளிகளுக்கிடையே உருவாகி வந்த யுத்த நிறுத்தம் தொடர்பான அதிருப்தியும் அமைதியின்மையும்.

தன்னிச்சையான யுத்த நிறுத்தத்தினை லலித் அதுலத் முதலி அறிவித்ததன் மூலம் தம்மை ஓரங்கட்டியிருப்பதை அவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். மேலும், யுத்த நிறுத்தத்திற்கு முன்னர் தாம் முன்வைத்த அனைத்து நிபந்தனைகளையும் தன்னிச்சையான அறிவிப்பின் மூலம் அரசு முற்றாக நிராகரித்திருப்பதையும் அவர்கள் புரிந்துகொண்டார்கள்.

இந்திய வெளியுறவுத்துறைக்கு போராளிகள் முன்வைத்திருந்த யுத்த நிறுத்தம் தொடர்பான நிபந்தனைகள் ஊடகங்களுக்குக் கசிந்திருந்தன. அதன்படி, படிப்படியாக யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்,  மாவட்ட ரீதியில் உருவாக்கப்படும் கண்காணிப்பு கட்டமைப்புக்கள் ஊடாக அரசால் மேற்கொள்ளப்படும் யுத்த நிறுத்த மீறள்கள் ஆவணப்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட மேலும் சில நிபந்தனைகள் போராளிகளால் இந்தியாவுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தன.

ஈழத்தேசிய முன்னணியினால் முன்வைக்கப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கான நிபந்தனைகள் வருமாறு,

அரசால் செய்யப்பட வேண்டியவை

1. ஊர்காவல்ப்படை, சிவிலியன் பாதுகாப்பு படை, தொண்டர் படை ஆகிய துணை ராணுவக் குழுக்கள் கலைக்கப்பட்டு, ஆயுதங்கள் களையப்பட வேண்டும்.

2. குடியேற்றங்களைப் பொறுத்தவரை முன்பிருந்த நிலை மீளக் கொண்டுவரப்பட வேண்டும். யுத்த நிறுத்த காலத்தில் தமிழர் தாயகத்தில் சனத்தொகைப் பரம்பலை மாற்றக்கூடிய நேரடியான, மறைமுகமான எந்த நடவடிக்கைகளிலும் அரசு ஈடுபடலாகாது.

3. இராணுவம் தமது முகாம்களுக்கு மீளச் செல்லவேண்டும். ரோந்துக்களோ, தேடியழிக்கும் நடவடிக்கைகளோ செய்யப்படலாகாது.

4. இராணுவம் புதிய முகாம்களை அமைக்க முடியாது.

5. வடக்குக் கிழக்கில் அமைக்கப்பட்டிருக்கும் வீதியோரச் சோதனைச் சாவடிகள் அகற்றப்படுவதுடன், தமிழர்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கான தடைகள் அகற்றப்பட வேண்டும்.

 

போராளிகளால் செய்யப்பட வேண்டியவை

 1. துணை இராணுவக் குழுக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட மாட்டது.

2. ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் சிங்களக் குடியேற்றங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட மாட்டாது.

3. முகாம்களுக்குள் இருக்கும் இராணுவத்தினர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட மாட்டாது. வீதிகள், ரயில்த் தண்டவாளங்கள், பாலங்கள், கட்டிடங்கள் மீது கண்ணிவெடிகள் பொருத்தப்பட மாட்டது.

4. போராளிகளுக்கான புதிய முகாம்கள் அமைக்கப்பட மாட்டாது.

5. வீதிப்போக்குவரத்தைப் போராளிகள் தடைசெய்ய மாட்டார்கள்.

 

யுத்த நிறுத்த கணகாணிப்புக் குறித்துப் போராளிகள் முன்வைத்த ஆலோசனைகள்,

அரசாங்கம் செய்யவேண்டியவை

1. யுத்தநிறுத்த மீறல்களைக் கண்காணிப்பதற்கு சுயாதீனமான அமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும். யுத்த நிறுத்த மீறல்களை உடனடியாக அவ்விடத்திற்குச் சென்று விசாரிப்பதற்கென்று மாவட்ட ரீதியில் தமிழ்ப் பிரதிநிதிகளையும், அரச பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய அமைப்பு ஒன்று உருவாக்கப்படுதல் அவசியம். இவ்வமைப்பின் சுதந்திரமான நடமாட்டமும் உறுதிசெய்யப்பட வேண்டும்.

2. சர்வதேச மன்னிப்புச்சபை அல்லது அதையொத்த சர்வதேச அமைப்பொன்று யுத்தநிறுத்த கண்காணிப்பாளர்களாக அமர்த்தப்படுவதுடன், அவகளை உள்ளடக்கிய அவதானிப்புக் குழு கைதிகளின் நலன்கள், அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வசதிகள் மற்றும் அவர்களின் விடுதலை தொடர்பான செயற்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும். 

3. பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அதனையொத்த அவசரகாலச் சட்டங்கள் முழுமையாக நீக்கிக்கொள்ளப்பட வேண்டும். யுத்த நிறுத்தத்திற்கு முன்னரான காலத்தில் நடந்தவற்றை அடிப்படையாக வைத்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தினூடாகக் கைதுகள் மேற்கொள்ளப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

4. ஆனி 18 ஆம் திகதி வரை அரசால் கைதுசெய்யப்பட்டு, வழக்குகள் பதியப்படாது அடைத்துவைக்கப்பட்டிருக்கும் அனைத்துத் தமிழ் அரசியல்க் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

 

மேலதிக நிபந்தனைகள்

1. வெளிநாடுகளிலிருந்து இராணுவப் பயிற்சியாளர்களையும், கூலிப்படையினரையும், ஆயுதங்களையும் தருவிப்பது முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

2. இராணுவத்தினர் முகாம்களை விட்டு வெளியே வரும்போது ஆயுதங்கள் இன்றியே வரவேண்டும்.

3. பொதுமக்கள் மீதான அனைத்துத் தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும், குறிப்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், தொழிற்சங்க அமைப்பினர் மீதான தாக்குதல்கள் ஆகியன‌ நிறுத்தப்பட வேண்டும்.

4. பொதுமக்களுக்குச் சொந்தமான வீடுகள் , வியாபார நிலையங்கள், பொதுச் சொத்துக்கள், வர்த்தக நிறுவனங்களைத் தீயிட்டு அழிப்பது நிறுத்தப்பட வேண்டும்.

5. தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகளில் ஈடுபடுதல், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுதல், கடத்திச் செல்லுதல் ஆகிய செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.

6. தமிழருக்குச் சொந்தமான வாகனங்களை கடத்திச் செல்லுதல், தீவைத்து எரித்தல் ஆகியவை நிறுத்தப்பட வேண்டும்.

7. தமிழ் மக்களின் வீடுகள் கடைகள் போன்றவற்றைச் சூறையாடுதல், கப்பம் அறவிடுதல், வியாபாரிகள் மீதான துன்புறுத்தல்கள் ஆகியவை நிறுத்தப்பட வேண்டும்.

8. மீனவர்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்.

9. மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கெதிரான தடைகள் நீக்கப்பட வேண்டும், குறிப்பாகப் பெருந்தோட்டப்பகுதிகளில் வசிக்கும் தமிழர்களின் நடமாட்டம் தடுக்கப்படலாகாது.

10. வெளிநாட்டு துணைப்படைகளான மொசாட், இங்கிலாந்தின் விசேட ஆகாய சேவைகள் படையணியின் பயிற்றுவிப்பாளர்களை நாட்டிற்குள் கொண்டுவருவது நிறுத்தப்பட வேண்டும். 

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யுத்த நிறுத்த ஆலோசனைகளில் இந்தியா விட்ட தவறுகளும், போராளிகளின் பரிந்துரைகளும்  

ஒருதலைப்பட்சமாக யுத்தநிறுத்தத்தினைக் கடைப்பிடிக்கப்போவதாக லலித் அதுலத் முதலி வானொலியில் அறிவித்தபோது, தமது அரசாங்கம் எதுவித நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் அறிவித்திருந்தார். மேலும், பயங்கரவாதிகளுடன் அரசு எந்தவித இணக்கப்பாட்டிற்குள்ளும் இதுகுறித்துச் செல்லத் தேவையில்லை என்றும் அவர் அறிவித்திருந்தார்.

large.LalithAthulath.jpg.371b0b70b6e74266eb0744992ce325f9.jpg 

லலித் அதுலத் முதலி 

ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களுடன் பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன மிகத் தந்திரமான பொறியினை வைத்திருப்பதாகத் தெரிவித்தார். இந்தியாவிற்கும், போராளிகளுக்கிடையே பிரிவினை ஏற்படுத்தி, போராளிகளை சர்வதேசத்தில் வன்முறையில் ஆர்வம் கொண்ட பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பதே ஜெயாரின் நோக்கம் என்று அவர் கூறினார். மேலும், ஒரு தலைப்பட்சமாக யுத்த நிறுத்தத்தினை அறிவித்ததன் ஊடாக, போராளிகள் அதனை நிராகரிப்பார்கள் என்றும், தமது சொந்த நிபந்தனைகளை அமுல்ப்படுத்த வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பார்கள் என்றும், இதனூடாக இந்தியாவின் கோபத்திற்குப் போராளிகள் ஆளாகலாம் என்பதும் ஜெயாரின் எதிர்ப்பார்ப்பாகும் என்றும் பிரபாகரன் கூறினார்.

"நாம் இந்தப் பொறியில் அகப்பட்டு விடக் கூடாது. நாம் கவனமாகவும், மிகுந்த அவதானத்துடனும் செயற்பட வேண்டும். நாம் இந்தியா முயற்சிக்கும் யுத்த நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைகளை அனுசரித்துச் செல்வோம், ஆனால் அதனுள் இருக்கும் குறைகளை அவ்வப்போது சுட்டிக் காட்டலாம். இந்தியாவின் விருப்பத்திற்கேற்ப யுத்த நிறுத்தத்தையும், பேச்சுவார்த்தையினையும் ஏற்றுக்கொள்வதன் ஊடாக இந்தியாவின் அபிமானத்தை நாம் வெல்லலாம். அதேவேளை, இராணுவத்தினரின் யுத்த நிறுத்த மீறல்கள் குறித்து நாம் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்யவும் வேண்டும்" என்றும் அவர் கூறினார். 

பிரபாகரனின் திட்டத்தினை ஈழத் தேசிய விடுதலை முன்னணியினர் ஏற்றுக்கொண்டனர். இந்தியாவின் முயற்சிகளில் காணப்பட்ட மூன்று முக்கிய குறைகள் குறித்து இந்தியாவின் கவனத்திற்குக் கொண்டுவர அவர்கள் முடிவெடுத்தார்கள். அவையாவன,

1. தமிழ் மக்கள் மீதான, குறிப்பாக வடக்குக் கிழக்கின் எல்லையோரத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் மீதான இராணுவத்தினர், ஊர்காவல்ப்படையினர், ஆயுதம் தரித்த சிங்கள மக்கள் ஆகியோரின் தாக்குதல்களில் இருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்து எதுவுமே குறிப்பிடப்படவில்லை. இந்தியாவினால் முன்வைக்கப்பட்டிருக்கும் யுத்த நிறுத்த ஆலோசனைகளில் பகுதி 2 மற்றும் 3 ஆகியவை புதிய சிங்களக் குடியேற்றங்களை நிறுத்திவைப்பது குறித்தும், அவைமீதான தாக்குதல்களை போராளிகள் நிறுத்தவேண்டும் என்றும் சொல்கிறது. ஆனால், இராணுவத்தினர் தமது சோதனை நடவடிக்கைகளை செய்ய அனுமதிப்பதன் மூலம் அவர்கள் முல்லைத்தீவு, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் எல்லையோரங்களில் அமைந்திருக்கும் தமிழ்க் கிராமங்கள்  மீது தாக்குதல்களை நடத்த அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். 

2. அதுவரை தமிழ் மக்களின் ஆயுத விடுதலைப் போராட்டத்தினூடாகக் கிடைக்கப்பெற்ற வெற்றியான தமிழர் தாயகத்தின் சில பகுதிகளில் இயங்கிவந்த அரசின் பொலீஸ் நிலையங்களை அகற்றி, அரசின் சட்டம் ஒழுங்கினை தடுத்த முயற்சிகள் யுத்த நிறுத்தத்தின் ஊடாக முற்றாக இல்லாதொழிக்கப்ப‌ட்டிருக்கிறது. "போர்க்களத்தில் தாம் இழந்தவற்றை யுத்த நிறுத்தத்தின் ஊடாக மீளப் பெற்றுக்கொள்ளப் பார்க்கிறார்கள்" என்று பிரபாகரன் குறிப்பிட்டார்.

3. யுத்த நிறுத்த ஆலோசனைகள் ஜெயாருக்குத் தேவையான கால அவகாசத்தை வழங்கியிருக்கிறது. யுத்த நிறுத்தத்தினையடுத்து வரவிருக்கும் அரசியல்த் தீர்விற்கான பேச்சுக்களை கால வரையின்றி இழுத்தடிப்பதனூடாக தனது இராணுவத்தை மீளக் கட்டியமைத்து இறுதி இராணுவத் தீர்விற்கான முஸ்த்தீபுகளில் அவர் ஈடுபட சந்தர்ப்பத்தை இந்தியாவின் ஆலோசனை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. தமிழர்கள் சிங்கள அரசுகளுடன் செய்துவந்த அரசியல் பேச்சுவார்த்தைகளின் சரித்திரம் என்று ஒன்றிருக்கிறது. இவை எல்லாவற்றிலும் சிங்கள அரசுகள் நடந்துகொண்ட விதம் என்று ஒன்றிருக்கிறது. ஆகவே, இந்தியாவிடம் இதுகுறித்து விளக்கி, ஜெயவர்த்தன தனது அரசியல்த் தீர்வுகுறித்த ஆலோசனைகளை பேச்சுவார்த்தைகளின்போது முன்வைக்கவேண்டும் என்கிற அழுத்தத்தினை இந்தியா வழங்கவேண்டும் என்று கோருவது என்று பிரபாகரன் கூறினார்.

சந்திப்பின் முடிவில், இந்தியாவின் ஆலோசனைகளில் தாம் கண்டறிந்த தவறுகளை எழுத்துவடிவில் ஒரு அறிக்கையாகத் தயாரிக்கும்படி பாலசிங்கத்தை அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். அதன்பின்னர் போராளிகளுக்கிடையே யுத்தநிறுத்தம் குறித்து உருவாகி வந்த அதிருப்தியினை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஆராய்ந்தார்கள். முதலாவதாக, தமது போராளிகளிடத்தில் தாம் தமிழ் ஈழம் எனும் இலட்சியத்தைக் கைவிடவில்லை என்று கூறுவதாக முடிவெடுத்தார்கள். அடுத்ததாக, யுத்த நிறுத்தத்தினையும், பேச்சுவார்த்தையினையும் சிங்கள அரசின் உண்மையான முகத்தினை இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் தோலுரித்துக் காட்டவே தாம் பாவிக்கப்போவதாக போராளிகளிடத்தில் கூறுவது என்றும் முடிவெடுத்தார்கள்.

அன்டன் பாலசிங்கம் தயாரித்த அறிக்கை பின்வருமாறு அமைந்திருந்தது,

ஆனி 18, 1985 ஆம் திகதிக்கு அமுலிற்கு வரும் யுத்த நிறுத்த ஆலோசனைகள் தொடர்பான எமது இணைந்த அறிக்கை

ஈழத்தேசிய விடுதலை முன்னணியினால் இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகளிடம் இவ்வறிக்கை கையளிக்கப்படுகிறது

தமிழீழ விடுதலைப் போராட்ட அமைப்புக்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் யுத்த நிறுத்தத்தினைக் கொண்டுவருவதற்காக இந்திய அரசாங்கம் முன்வைத்திருக்கும் யோசனைகளை மிகவும் கவனமாக நாம் ஆராய்ந்திருக்கிறோம். யுத்த நிறுத்தத்தினை செயற்படுத்த இந்தியா எடுத்திருக்கும் முயற்சிகளையும், மத்தியஸ்த்தராக பங்கெடுக்க அது எடுத்திருக்கும் நடவடிக்கைகளையும், உத்தரவாதத்தினையும் பாராட்டும் அதேவேளை, தமிழரின் பிரச்சினைக்கான நிரந்தரமான அரசியல்த் தீர்வினை இலங்கை அரசாங்கம் முன்வைக்கத் தேவையான சமாதானமான சூழ்நிலையினை உருவாக்கும் வகையில் முன்வைக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் யுத்தநிறுத்த ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வதென்று எமது ஒருங்கிணைந்த அமைப்பு ஒத்துக்கொண்டு கையொப்பம் இடுகிறது.

குறிப்பிடப்பட்ட காலத்திற்கு எமது ஆயுத நடவடிக்கைகளை நாம் நிறுத்திக்கொள்ளச் சம்மதம் தெரிவிக்கும் அதேவேளை, யுத்தநிறுத்த அலோசனைகளில் முன்வைக்கப்பட்டிருக்கும் சில விடயங்கள் தமிழர்களை பலவீனமான நிலைக்கு இட்டுச் செல்லப்போகின்றது என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றோம். ஆகவே, இவற்றினை நிவர்த்திசெய்வதற்கான சில ஆலோசனைகளை நாம் முன்வைக்க விரும்புகிறோம். 

யுத்த நிறுத்த ஆலோசனைகளின் முதலாவது பகுதியை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், பகுதி 2 இல், போராளிகள் செய்யவேண்டியவை எனும் பகுதியில், "புதிய சிங்களக் குடியிருப்புக்களை அரசு நிறுத்திவைக்கும் அதேவேளை, இந்த குடியேற்றங்கள் மீது தாக்குதல் நடத்துவதையோ, வடக்குக் கிழக்கில் சிங்கள, தமிழ் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதையோ போராளிகள் நிறுத்த வேண்டும்" என்று கோரப்பட்டிருக்கிறது. இங்கு எமக்கிருக்கும் கவலை என்னவெனில், யுத்த நிறுத்தக் காலப்பகுதியில் தமிழ் மக்கள் மீது சிங்கள இராணுவத்தினரும், ஆயுதமயமாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றவாசிகளும் நடத்தவிருக்கும்  தாக்குதல்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையோ அல்லது அவ்வாறான தாக்குதல்கள் நடக்கமாட்டாது எனும் உத்தரவாதத்தையோ ஆலோசனைகள் வழங்கவில்லை என்பதுதான். இந்தியா முன்வைத்திருக்கும் ஆலோசனைகளில் இவைகுறித்து எதுவுமே குறிப்பிடப்படவில்லையாயினும், இலங்கை இராணுவமும், ஆயுதமயமாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றவாசிகளும் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக நடத்திவரும் தாக்குதல்களை இலங்கை அரசாங்கம் முற்றாக நிறுத்தவேண்டும் என்று இந்தியா இலங்கை அரசிடம் கோரவேண்டும் என்று நாம் பரிந்துரை செய்கிறோம். யுத்த நிறுத்தத்தின் முதலாவது கட்டத்தில் இவ்வாறான தாக்குதல்களில் அப்பாவித் தமிழர்கள் படுகொலைசெய்யப்படுவது தொடருமாக இருந்தால் அவற்றினை மிகக் கடுமையான யுத்த நிறுத்த மீறல்களாக நாம் கருதவேண்டி வரும்.

பகுதி 2, பந்தி மூன்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் "பொலீஸ் நிலையங்களை மீளத் திறத்தல்" எனும் ஆலோசனை குறித்த எமது கடுமையான அதிருப்தியினை இங்கே பதிவுசெய்ய விரும்புகிறோம். எமது நடவடிக்கைகளால் மூடப்பட்ட இந்த பொலீஸ் நிலையங்களின் ஊடாகவே பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டங்களைப் பாவித்து எம்மக்கள் மீதான "சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும்" நடவடிக்கைகளில் பொலீஸார் ஈடுபட்டிருந்தனர். எமது பிரதேசங்களில் அமுலாக்கப்பட வேண்டிய முக்கிய விடயங்களில் ஒன்றான‌ சட்டம் - ஒழுங்கு நடவடிக்கைகள் பரந்துபட்ட நிரந்தரமான அரசியல்த் தீர்வின் மூலமே தீர்மானிக்கப்பட வேண்டுமே ஒழிய கால வரையறைக்குட்பட்ட யுத்த நிறுத்தம் ஒன்றின் ஊடாக அல்ல என்பது எமது கருத்து. ஆகவே, இந்த ஆலோசனையினை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 10 இலிருந்து 12 வாரங்கள் வரையான காலப்பகுதிக்குள் நிரந்தரமான அரசியல்த் தீர்விற்கான பரிந்துரைகளை இலங்கையரசு கட்டாயம் முன்வைக்க வேண்டும் என்று நாம் கோருகிறோம். எமது பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னரே பேச்சுவார்த்தைகளில் நாம் ஈடுபட முடியும் என்பதனை நாம் கூறிக்கொள்ள விரும்புகிறோம். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான நீதியான தீர்விற்காக தமிழர்கள் சிங்கள அரசாங்கங்களுடன் காலங்காலமாக செய்த அனைத்து ஒப்பந்தங்களும் சிங்கள அரசாங்களினாலேயே கைவிடப்பட்டு, தமிழர்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே நாம் இந்த முடிவினை எடுக்க வேண்டியதாகிறது.  மேலும், இனப்பிரச்சினைக்கான நீதியான தீர்வினை எட்டுவதைத் தடுக்கும் வகையில் பேச்சுக்களை காலவரையின்றி இழுத்தடிப்பதென்பது சிங்கள அரசாங்கங்கள் தொடர்ச்சியாகக் கைக்கொண்டு வரும் ஒரு அணுகுமுறை என்பதையும் இத்தருணத்தில் நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஆகவேதான், விளைவுகள் எதனையும் தராத இன்னொரு பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில் நாம் மீண்டும் ஏமாற்றப்படக் கூடாது என்பதற்காக, நிரந்தரமான அரசியல்த் தீர்விற்கான பரிந்துரைகளை அரசாங்கம் முன்வைத்தால் ஒழிய, பகுதி 4 இல் குறிப்பிடப்பட்டதன்படி பேச்சுக்களில் ஈடுபடுவதற்கு நாம் சம்மதிக்கப்போவதில்லை என்பதையும் கூறிக்கொள்கிறோம்.

மேலும், யுத்த நிறுத்த காலத்தை எந்தவிதத்திலும் நீட்டிப்பதில்லை என்று நாம் முடிவெடுத்திருக்கிறோம். அடுத்ததாக, பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தமிழர் பிரதிகள் குறித்து குறிப்பிடும் போது, நான்கு பலம்பொறுந்திய போராளி அமைப்புக்களின் கூட்டமைப்பினை வெறுமனே, "ஆயுததாரிகள்" என்றும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை, "தமிழரின் அரசியல்த் தலைமை" என்றும் குறிப்பிட்டதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. இவ்வாறான தரப்படுத்தல்கள் எமது மக்களின் நலனிலும், பாதுகாப்பிலும் உண்மையான அக்கறை கொண்டு செயற்பட்டு வரும்  எம்மீது தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்துவதோடு, எமது மக்களின் நலனில் உண்மையான அக்கறை கொண்டு செயற்பட்டு வரும் தலைமைகள் என்கிற வகையில் நாம் எடுக்கும் முயற்சிகளையும் இவ்வாறான தரப்படுத்தல்கள் தடுத்துவிடும்.

இறுதியாக, யுத்த நிறுத்தத்தின் ஆரம்ப நாளான வைகாசி 18 இனை பிறிதொரு சாதகமான‌ நாளைக்குப் பிற்போடுமாறு கேட்டுக்கொள்கிறோம். யுத்த நிறுத்த ஆயத்தங்களைச் செய்வதற்கு எமக்கு இந்தக் கால அவகாசம் தேவைப்படுகிறது. ஆகவே, ஆடி 1 ஆம் திகதி (1985) இனை யுத்த நிறுத்தத்திற்கான ஆரம்ப நாளாக நாம் பரிந்துரை செய்கிறோம். எமது பரிந்துரைகளும், எதிர்‍ ஆலோசனைகளும் சாதகமான முறையில் பரிசீலிக்கப்பட்டு இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்படும் என்றும் தாழ்மையுடன் எதிர்பார்க்கின்றோம்.

 இப்படிக்கு தலைவர்கள், ஈழத்தேசிய விடுதலை முன்னணி : பிரபாகரன், பத்மநாபா, சிறீ சபாரட்ணம், பாலக்குமார்

 இந்தியாவின் ரோவினூடாக‌ தமது அறிக்கையினை பாலசிங்கம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தார். வெளியுறவுத்துறையின் அறிவுருத்தலின் பெயரில், சில நாட்களின் பின்னர், ரோ அதிகாரி சந்திரசேகரன் பாலசிங்கத்துடன் தொடர்புகொண்டு போராளித் தலைவர்களின் அறிக்கை தொடர்பான இந்திய வெளியுறவுத்துறையின் கடுமையான அதிருப்தியை தெரிவித்தார்.

பாலசிங்கத்திடம் பேசிய சந்திரசேகரன், பேச்சுக்களை ஆரம்பிக்கு முன்னர் தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றினை இலங்கை அரசாங்கம் முன்வைக்கவேண்டும் என்கிற ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் கோரிக்கை சாத்தியமற்றது என்று இந்திய வெளியுறவுத்துறை கருதுவதாகத் தெரிவித்தார். மேலும், யுத்த நிறுத்தத்தினை பிற்போடுவதற்கான கோரிக்கையினை இந்திய வெளியுறவுத்துறை முற்றாக நிராகரித்திருப்பதாகவும் அவர் கூறினார். ஒரு வார காலமாக அமுலில் இருக்கும் யுத்த நிறுத்தத்தினை பிற்போடுவதென்பதில் எந்தப் பொருளும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை குறித்து போராளிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் விளக்கமளித்த தலைமைகள்

large.Prabakaran.jpg.bab79f5a81462b49c303fad5e85f3e90.jpg

எமது இலட்சியத்தை நாம் ஒருபோதும் கைவிடப்போவதில்லை ‍- தலைவர் பிரபாகரன்

போராளிகள் யுத்தநிறுத்தத்தினைக் கடைப்பிடிக்கத் தொடங்கினர். தொடர்ந்து வந்த நாட்களை தாம் எதற்காக யுத்தநிறுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதனை தமது போராளிகளுக்கு விளங்கப்படுத்துவதற்காகப் பாவித்தனர். 

"யுத்த நிறுத்தமும் திம்புப் பேச்சுவார்த்தையும்" என்ற தலைப்பில் ஈ.பி.ஆர்.எல் எப் அமைப்பு துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டிருந்தது. உலகத்தையும், இந்தியாவையும் ஏமாற்றவென்று ஜெயார் அணிந்திருக்கும் போலிச் சமாதான முகத்திரையினைக் கிழிக்கவே ஈழத் தேசிய விடுதலை முன்னணி யுத்த நிறுத்தத்திலும், பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட இணங்கியிருப்பதாக அது தெரிவித்திருந்தது. டெலோ வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில் ஜெயவர்த்தனவின் சமாதான நாடகத்தை உலகிற்கு அம்பலப்படுத்தவே தாம் இந்தியாவின் பேச்சுவார்த்தைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டிருப்பதாகக் கூறியிருந்தது. ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் ஒரு அங்கமாக இல்லாவிட்டாலும் கூட, புளொட் அமைப்பு, இலங்கையரசால் வெளியிடப்பட்டிருக்கும் தன்னிசையான யுத்த நிறுத்த அறிவிப்பு ஒரு அரசியல் நயவஞ்சகம் என்று வர்ணித்திருந்தது. 

தனது கையொப்பத்துடன் பிரபாகரன் ஒரு துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டார். யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை தொடர்பான எமது நிலைப்பாடு எனும் தலைப்பில் அது வெளியிடப்பட்டிருந்தது. 

"இந்த யுத்த நிறுத்தத்தின் மூலமும், பேச்சுவார்த்தைகள் ஊடாகவும் கெளரவமான நிரந்தரத் தீர்வு ஒன்று எட்டப்படும் என்று நான் நினைக்கவில்லை. கடந்த 35 வருடங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பான கசப்பான பாடத்தினை நாம் கற்றிருக்கிறோம்".

 "நான் உங்களுக்குத் தர விரும்பும் உத்தரவாதம் என்னவென்றால், நாம் இந்த சமாதானப் பொறியில் அகப்பட்டு விட மாட்டோம் என்பதைத்தான். எமது பிரச்சினைக்குச் சாதகமான தீர்வொன்றினை இலங்கையரசாங்கம் ஒருபோதும் தரப்போவதில்லை என்பதை நான் நன்கு அறிவேன். முதலாவதாக, இந்தியாவின் விருப்பத்தின்படி வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சமஷ்ட்டி அடிப்படையில் அதிகாரங்களை வழங்குவதைக் கூட இலங்கையரசாங்கம் விரும்பவில்லை. இரண்டாவது, சமஷ்ட்டி அடிப்படையில் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கினால் அவர்கள் நாட்டைப் பிரித்துவிடுவார்கள் என்கிற தவறான அபிப்பிராயத்தை சிங்கள மக்களின் மனங்களில் சிங்களத் தலைவர்கள் ஆளமாக விதைத்துவிட்டார்கள். பெரும்பான்மையான சிங்கள மக்கள் அதனை நம்புகிறார்கள். மேலும், சிங்கள இனவாதிகள் வடக்குக் கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைந்த தனித் தமிழ்ப் பிராந்தியம் ஒன்று உருவாவதை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை".

"ஆக, பழைய கள்ளான மாவட்ட சபைகளும், பிராந்திய சபைகளுமே சிங்கள அரசினால் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்கப்படப் போகின்றன‌. இவ்வாறான வேகாத தீர்வுகளை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை".   

"நாம் ஒரு சுதந்திரம் மிக்க மக்கள் கூட்டமாக, கண்ணியமும் சுய கெளரவமும் கொண்டவர்களாக,  சமாதானத்துடன் வாழ வேண்டுமானால், அது சுதந்திர தமிழ் ஈழ நாட்டில் மட்டும்தான் சாத்தியமாகும். நான் என் மக்களுக்கு உறுதிபடக் கூறிக்கொள்வது ஒன்றைத்தான், எமது இலட்சியமான தமிழ் ஈழத்தை நாம் அடைந்துகொள்ளும்வரை எமது சுதந்திரப் போராட்டம் தொடர்ந்து நடக்கும்". 

"மேலும், இந்தியாவின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புக் கொடுத்துவரும் அதேவேளை எமது இறுதி இலக்கான சுதந்திரத் தமிழ் ஈழத்தை அடையுமட்டும் நாம் ஓயப்போவதில்லை என்பதையும் உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்".

 "என்னிடம் இருக்கும் போராளிகளின் பலத்தையும், எமது போராளிகளிடத்தில் இருக்கும் இலட்சியம் மீதான ஓர்மத்தையும் கொண்டு நாம் எமது இலட்சியத்தின் பாதையில் சரியாகவே சென்று கொண்டிருக்கிறோம் என்பதை என்னால் கூறமுடியும். தமிழ் மக்கள் தங்களின் ஆதரவினை எனக்குத் தொடர்ந்தும் வழங்கி வரும் பட்சத்தில் , நாம் எமது இலட்சியத்தை அடைவதை உலகில் உள்ள எந்தச் சக்தியாலும் தடுத்துவிட முடியாது என்றும் கூறிக்கொள்ள‌ விரும்புகிறேன்".

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கை இராணுவம் யுத்தநிறுத்த மீறல்களில் ஈடுபட்டிருக்க, அரசாங்கத்திற்கு கொழும்பில் நற்சான்று வழங்கிய தர்மலிங்கமும் ஆளாளசுந்தரமும்
 

பிரபாகரன் தனது கரங்களைப் பலப்படுத்த தமிழ் மக்கள் தனக்கு உதவ வேண்டும் என்று கேட்டிருந்த நிலையில், மக்களின் ஆதரவினை இழந்துவிட்டிருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியோ தனது முன்னைய அரைசியல்த் தலைமை எனும் பதவியினை மீளப்பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கியது. சென்னையிலிருந்து அது வெளியிட்ட அறிக்கையில் தமிழ் மக்கள் சார்பாகவே தாம் பேச்சுக்களில் பங்கெடுக்கப்போவதான பாவனையுடன் கூறியிருந்தது.  அறிக்கையின் ஒரு பகுதியில்,  "தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கும் அதேவேளை பேச்சுவார்த்தை மேசையில் "ஆயுததாரிகளுக்கான" வழிகாட்டியாகவும் தாம் செயற்படப்போவதாக" வும் அது கூறியிருந்தது. 

 1984 ஆம் ஆண்டு மார்கழியில் ஏற்பட்ட சர்வகட்சி மாநாட்டின் தோல்வியினையடுத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை இலங்கையரசாங்கமும், இந்தியாவும் முன்னிலைப்படுத்துவதைத் தவிர்த்தே வந்திருந்தமையினால்,  திம்புப் பேச்சுவார்த்தையினூடாக தமக்கும் ஒரு வகிபாகம் கிடைத்திருப்பதாக முன்னணி எண்ணியது. பெரும்பாலான முன்னணியின் தலைவர்கள் சென்னைக்குத் தப்பிச் சென்றிருந்தவேளை, யாழ்ப்பாணத்தில் அப்போதுவரை தங்கியிருந்த முன்னாள் உடுவில்த் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கத்துடனும், கோப்பாய்த் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஆளாளசுந்தரத்துடனும் தொலைபேசியில் தொடர்புகொண்ட அமிர்தலிங்கம் கட்சியினை உயிர்ப்பிக்கும் நடவடிக்கைகளில் உடனடியாக இறங்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், அவர்களை உடனடியாகக் கொழும்பிற்குச் சென்று, அரசினதும் எதிர்க்கட்சியினதும் உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, அரசியல்த் தீர்வினை அடைவதற்கான அரசியலமைப்பு மாற்றங்கள் குறித்து கலந்தாலோசிக்குமாறும் பணித்தார்.

large.Dharmalingam.jpg.769db881c75f4517c8660b5ebb4b3028.jpg

வி தர்மலிங்கம்

ஆளாளசுந்தரமும், தர்மலிங்கமும்  கொழும்பிற்குச் சென்றிருந்தவேளை புதிய இந்தியத் தூதுவர் டிக் ஷிட்டையும், யுத்த நிறுத்தம் குறித்தும், பேச்சுவார்த்தை குறித்தும் இலங்கையரசாங்கத்துடன் பேசுவதற்காக அப்போது கொழும்பிற்கு வந்திருந்த இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் பண்டாரியையும் சந்தித்துப் பேசினார்கள்.

 large.Alalasundaram.jpg.644ca4227b74899323be66b3c808fac5.jpg

ஆளாளசுந்தரம்

பேச்சுவார்த்தையினை நடத்துவதற்கான இடமாக இந்தியா பரிந்துரை செய்திருந்த  மலைகளைக் கொண்ட நாடான பூட்டானை ஜெயவர்த்தன ஏற்றுக்கொண்டார். மேலும், இந்தியா பரிந்துரை செய்த ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் நான்கு போராளி அமைப்புக்கள், புளொட் அமைப்பு மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஆகியோர் பேச்சுக்களில் தமிழர் தரப்பாகக் கலந்துகொள்வதையும் ஜெயார் ஏற்றுக்கொண்டார். ஜெயாருடன் பேசிய பண்டாரி, ஒவ்வொரு போராளி அமைப்பும் இரு பிரதிநிதிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு அனுப்பி வைக்கும் என்றும் கூறினார். அடுத்ததாக, பேச்சுவார்த்தையின் முதலாம் கட்டத்தின் ஆரம்ப நாளாக இந்தியா முன்வைத்த ஆடி 8 ஆம் திகதியினையும் ஜெயார் ஏற்றுக்கொண்டார். கொழும்பிலிருந்து தில்லி திரும்பும் வழியில் சென்னையில் தரித்துச் சென்ற பண்டாரி, அங்கு எம் ஜி ஆரையும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களையும் சந்தித்துவிட்டுச் சென்றார். 

தாம் கொழும்பில் நின்றிருந்தவேளை அறிக்கையொன்றினை வெளியிட்ட ஆளாளசுந்தரமும், தர்மலிங்கமும், அரசாங்கத்தின் தலைவர்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதில் உறுதியாக இருப்பதாக தம்மிடம் கூறியிருப்பதாகத் தெரிவித்தனர்.  மேலும், யுத்தநிறுத்தத்தினை நேர்மையாகவும், நீதியுடனும் கடைப்பிடிக்கப்போவதாக அரசாங்கம் தம்மிடம் உறுதியளித்திருப்பதாகவும் தெரிவித்தனர். அவர்களின் அறிக்கை வெளிவந்துகொண்டிருந்தபோதே இராணுவத்தினரும், பொலீஸாரும் தேடியழிக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்துகொண்டிருந்தனர். கிழக்கு மாகாணத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினைப் பாவித்து ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு அடைத்துவைக்கப்பட்டனர். யுத்தநிறுத்தம் அமுலுக்கு வந்ததையடுத்து தமது சொந்தக் கிராமங்களுக்குத் திரும்பிய திருகோணமலை மாவட்டத் தமிழர்கள் இராணுவத்தினரால் மீண்டும் அடித்து விரட்டப்பட்டனர். மேலும், மீனவர்களின் மீதான கடற்படையின் அடாவடித்தனங்களும் என்றும்போல தொடர்ச்சியாகவே நடைபெற்று வந்தன. ஆனால், இந்த யுத்த நிறுத்த மீறல்கள் குறித்த எந்த கண்டிப்புகளும் இன்றி, யுத்தநிறுத்தம் தொடர்பாக இலங்கையரசாங்கம் நேர்மையுடன் செயற்படப்போவதாக தம்மிடம் உறுதியளித்திருக்கிறது என்று ஆளாளசுந்தரமும், தர்மலிங்கமும் கொழும்பிலிருந்து வெளியிட்ட அறிக்கை கூறியது.

அமிர்தலிங்கம், சம்பந்தன், சிவசிதம்பரம் ஆகியோர் சென்னைக்கும் தில்லிக்கும் இடையே அடிக்கடி பறந்து இந்திய அதிகாரிகளுக்கும், இலங்கையதிகாரிகளுக்கும் இறுதித் தீர்விற்காக அரசியலமைப்பு ரீதியாகச் செய்யப்பட வேண்டிய மற்றங்கள் குறித்து உதவி வழங்கிக்கொண்டு வந்தனர். இந்தியாவின் பிரதம வழக்குரைஞர் கே. பரஸ்வரத்துடன் ஆனி மாதத்தில் ஜெயாரின் சகோதரன் H.W. ஜெயவர்த்தன நடத்திய பேச்சுக்களையடுத்து,  ஒற்றையாட்சி யாப்பினைப் பாதிக்காத வகையில் மாவட்ட சபைகளை பலப்படுத்துவது குறித்த வேலைத்திட்டங்களில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பாக பரஸ்வரம் அமிர்தலிங்கத்துடன் தொடர்புகொண்டபோது, இலங்கைக்கும், இந்தியாவிற்கும் உகந்தவகையில் அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான செயற்பாடுகளில் அமிர்தலிங்கமும் ஏனைய முன்னணியின் தலைவர்களும் அவருக்கு உத‌வினர்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களில் சிறீ சபாரட்ணமே தன்னைக் கொல்ல முயற்சிக்கக் கூடும் என்று கருதிய பிரபாகரன்

திம்புப் பேச்சுக்களில் தாம் பங்கேற்பதற்கு ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தயக்கம் காட்டிவந்தவேளை, இந்தியாவுடனும், இலங்கையரசாங்கத்துடனும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் காட்டிய நெருக்கமும், ஒத்துழைப்பும் அவர்களைச் சீற்றங்கொள்ள வைத்தது. இந்தியாவைப் பகைத்துக்கொள்ளாமல், ஜெயார் விரித்திருக்கும் சமாதானப் பொறிக்குள் இருந்து எப்படியாவது வெளியே வந்துவிட வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரோ பேச்சுவார்த்தைகள் குறித்து மிகுந்த எதிர்பார்ப்புடனும், நம்பிக்கையுடனும் செயற்பட்டுக்கொண்டிருந்தனர். ஆகவே, அதிகாரங்களற்ற மாவட்ட சபைகளை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பு ஒன்றினூடாக தீர்வொன்றினைக் காண்பதில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் காட்டிய ஈடுபாடும், அக்கறையும் போராளிகளின் தலைவர்கள் மத்தியில் தம்மை தட்டிக்கழிக்கும் முன்னணியினரின் கைங்கரியம் எனும் தோற்றப்பாட்டினை ஏற்படுத்தியிருந்தது. 

 large.Chandrika.jpg.472d29677f51290d23c1b16780fd5e1b.jpg

சந்திரிக்கா, விஜய குமாரதுங்க, ஒஸி அபயகுணசேகர, பத்மநாபா, கேதீஸ்வரன் - சூளைமேடு, சென்னை 1986

ஆனி 28 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் நடத்திய நீண்ட கலந்துரையாடல்களின்போது திம்புப் பேச்சுக்கள் தொடர்பான தமது நிலைப்பாடு, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி வகிக்கப்போகும் பாகம் மற்றும் யுத்த நிறுத்தம் குறித்துப் பேசினர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.  பாதியில் மின்சாரம் அற்றுப்போகவே, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் கேதீஸ்வரன் விளக்கொன்றைப் பற்றவைத்துக்கொண்டார்.

"அண்ணை, அதனை அணைத்துவிடுங்கள்" என்று பிரபாகரன் அவரைப் பார்த்துக் கூறினார். தான் எங்கே நின்றிருக்கிறார் என்பதை எவரும் அறைந்துவிடக் கூடாதென்பதில் அவர் உறுத்கியாகவிருந்தார். 

மின்சாரம் தடைப்பட்டவுடன், தனது இருக்கையிலிருந்து குத்தித்தெழுந்த பிரபாகரன், அருகிலிருந்து சுவரோரம் சென்று நின்றுகொண்டு, தனது கைத்துப்பாக்கியினைக் கையில் எடுத்துக்கொண்டார். இந்தச் சம்பவம் குறித்துப் பிந்நாட்களில் என்னிடம் பேசிய ரமேஷ், பிரபாகரன், சபாரட்ணத்தின் பின்னாலேயே நின்று கொண்டதாகவும், அன்று கூட்டத்தில் இருந்தவர்களில் சபாரட்ணம் மட்டுமே தன்னைக் கொல்ல எத்தனிக்கக் கூடும் என்று பிரபாகரன் கருதியிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

ஆனால், சில நிமிடங்களிலேயே மின்சாரம் மீண்டும் கிடைத்தது. "இது சாதாரண மிந்துண்டிப்புப் போல இருக்கிறது" என்று கூறிக்கொண்டே பிரபாகரன் தனது இருக்கையில் மீண்டும் சென்று அமர்ந்துகொண்டார்.

புலிகளின் அலுவலகத்தில் ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் கூடியபோது இடம்பெற்ற இன்னொரு மின்சாரத் துண்டிப்புக் குறித்தும் ரமேஷ் என்னிடம் விபரித்திருந்தார். மின்சாரம் துண்டிக்கப்பட்டவுடன், அங்கிருந்த‌ மின்பிறப்பாக்கி உடனடியாகவே இயங்கத் தொடங்கியது.

"பிரபாகரன் தனது பாதுகாப்புக் குறித்து மட்டுமே அக்கறை கொண்டவரல்ல, எந்தச் சூழ்நிலைக்கும் தன்னைத் தயாராக வைத்திருப்பதிலும் கவனம் கொண்டவர்" என்று ரமேஷ் மேலும் கூறினார்.

large.Sri_Sabaratnam.jpg.c54b54204cc6e389520c8a64ef9fc27f.jpg

 சிறீ சபாரட்ணம்

ஆனி 28 ஆம் திகதி நடைபெற்ற ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் கூட்டத்தில், பிரபாகரனின் கருத்தின்படி, பேச்சுவார்த்தைகளில் இருந்து முடிந்தவரையில் விரைவாக வெளியேறிவிட வேண்டும் என்று அனைவரும் ஒத்துக்கொண்டனர். மேலும், ஜெயவர்த்தனவின் அரசாங்கம் மீது குற்றம் ஒன்றினைத் தம்மால் நிரூபிக்க முடியும் தறுவாயில், பேச்சுக்களில் இருந்து வெளிநடப்புச் செய்வதாகவும் அவர்கள் முடிவெடுத்தனர். தனது இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான கால அவகாசத்தினைப் பெற்றுக்கொள்ளவே ஜெயவர்த்தன  பேச்சுக்களை நடத்த ஒப்புக்கொண்டிருக்கிறார் என்பதைப் பிரபாகரன் தொடர்ச்சியாகவே கூறிவந்தார். ஆகவே, ஜெயவர்த்தனவின் தந்திரத்தை அவரது தந்திரத்தினாலேயே தாம் வீழ்த்தவேண்டும் என்றும் பிரபாகரன் ஏனைய தலைவர்களிடம் கூறினார்.  

ஆகவே, பேச்சுக்களில் தாம் பங்கேற்கவியலாது என்பதை இந்தியாவிடம் தெரிவிப்பதற்கான திட்டம் ஒன்றினை அவர்கள் உருவாக்கினார்கள். இந்தியாவிற்கு தாம் வழங்கவிருக்கும் ஒன்றிணைந்த அறிக்கையில், இலங்கை இராணுவத்தினரின் தொடர்ச்சியான யுத்த நிறுத்த மீறல்களைக் காரணமாக அவர்கள் காட்டியிருந்தனர். ஆகவே, பேச்சுவார்த்தை மேசையில், பங்களிப்பில்லாத ஒரு தரப்பாக மட்டுமே செயற்படப் போவதாகவும், பேச்சுக்களுக்கான அத்தியாவசிய அடிப்படையான ஒரு தரப்பு என்கிற காரணத்திற்காகவும், சிங்களவர்கள்  ஒருபோதும் தமிழருக்கு நீதியான‌ தீர்வொன்றினைத் தரப்போவதில்லையென்பதை உலகிற்குக் காட்டவுமே தாம் பேச்சுக்களில் பங்கெடுக்கப்போவதாகவும் இந்த அறிக்கையில்  அவர்கள் குறிப்பிட்டனர்.

போராளிகளால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள இலங்கையரசு மறுத்தமையே தமிழீழத்திற்கான அடிக்கல் என்று பிரபாகரன் ஏனையவர்களிடம் தெரிவித்தார். 

அன்றைய கூட்டத்தில், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் திம்புப் பேச்சுக்களில் பங்குபற்றக் கூடாது என்றும் போராளிகள் முடிவெடுத்தனர்.

போராளிகளின் இணைந்த அறிக்கை பாலசிங்கத்தால் தயாரிக்கப்பட்டு சந்திரசேகரனூடாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கப்போவதில்லை என்று இந்தியாவிற்குக் கூட்டாக அறிவித்த போராளி அமைப்புக்கள் 

ஈழத்தேசிய விடுதலை முன்னணி கூட்டாக வெளியிட்ட அறிக்கை - 29 ஆனி 1985

 இலங்கையுடன் சமாதானப் பேச்சுக்களில் பங்கேற்பதில்லை என்கிற தீர்மானத்தை அறிவித்தல்

 நான்கு முன்னணி விடுதலைப் போராட்ட அமைப்புகளான, ஈழத்தேசிய விடுதலை முன்னணியினராகிய‌ நாம், இலங்கையரச‌ படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் பாரதூரமான யுத்தநிறுத்த மீறல்களால் பூட்டானில் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதில்லை என்கிற தீர்மானத்திற்கு வந்திருக்கிறோம்.

 எமது தாயகத்தில் சுமூகமான நிலைமையினை ஏற்படுத்த நாம் விதித்த நிபந்தனைகளை ஏற்றுகொள்ள மறுத்துள்ள நிலையில், இலங்கை இராணுவம் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக அட்டூழியங்களைப் புரிந்து வருகிறது. எமது மக்கள் தொடர்ந்து இராணுவ வன்முறைகளுக்கு முகம்கொடுத்து, அரச பயங்கரவாதமும், அச்சமும், பாதுகாப்பின்மையும் எமது பூர்வீகத் தாயகத்தில் நிலவும் சூழ்நிலையில்  இலங்கையரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில்லை என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளோம். எமது மக்களுக்கெதிரான இராணுவ அட்டூழியங்களை கட்டவிழ்த்து விட்டிருப்பதன் மூலம், இலங்கையரசு இந்தியாவிற்குக் கொடுத்த வாக்குறுதியான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதற்கு ஏற்ப யுத்தநிறுத்தத்தினை சரியான முறையில் கடைப்பிடிப்போம் என்பதனை  அப்பட்டமாக மீறியிருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்த்தம் வகிக்கவும், பேச்சுக்களின்போது உதவியினை நல்கவும், பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடைபெறும் எனும் உத்தரவாதத்தையும் தந்திருக்கும்  இந்தியாவை நன்றியுணர்வுடன் பாராட்டும் அதேவேளை, குறிப்பிட்ட காலத்திற்கு அனைத்துவிதமான ஆயுதச் செயற்பாடுகளையும் முடிவிற்குக் கொண்டுவந்து, இலங்கையரசாங்கம் தமிழருக்கு நிரந்தரமான அரசியல்த் தீர்வை பேச்சுவார்த்தை மேசையில் முன்வைப்பதற்கான சூழ்நிலையினை ஏற்படுத்திக் கொடுக்க நாம் விரும்புகிறோம். சுமூகமான சூழ்நிலையினை ஏற்படுத்தும் முகமாக நாம் சில நிபந்தனைகளையும் இத்தால் முன்வைக்கிறோம்.

பின்வரும் விடயங்களை இலங்கையரசாங்கம் நிறைவேற்றவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம், 

1. இராணுவத்தை முகாம்களுக்குள் அழைத்துக்கொள்ளுதல்

2. வாகன நடமட்டாத்திற்கெதிரான தடையினை விலக்கிக் கொள்ளுதல்.

3. அவசரகாலச் சட்டத்தினையும், ஊரடங்கு உத்தரவினையும் விலக்கிக் கொள்ளுதல்.

4. கடற்கண்காணிப்பையும், தடைசெய்யப்பட்ட வலயங்களையும் விலக்கிக்கொள்ளுதல்.

5. வடக்குக் கிழக்கில் ஆயுதமயமாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துதல்.

6. அனைத்து அரசியற் கைதிகளையும் விடுதலை செய்தல்.

யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 10 - 12 வாரங்கள் வரையான காலப்பகுதிக்குள் இலங்கையரசாங்கம் இனப்பிரச்சினையினைத் தீர்க்க நிரந்தரமான தீர்வொன்றினை முன்வைக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். தீர்க்கமான தீர்வொன்றினை அடிப்படையாக வைத்தே பேச்சுக்களில் நாம் பங்குபற்ற முடியும் என்பதையும் தெளிவாகச் சொல்லியிருந்தோம். தமிழரின் பிரச்சினைக்கான கெளரவமான தீர்வொன்றைத் தருவதாக கூறிக் காலங்காலமாக தமிழரை தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் ஏமாற்றிய வரலாற்றின் பின்னணியிலேயே நாம் அந்த நிலைப்பாட்டிற்கு வந்திருந்தோம். தம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல ஒப்பந்தங்களை தாமே கிழித்தெறிந்த சிங்கள அரசுகள் ஒப்பந்தங்களை நிறைவேற்றாது ஏமாற்றிய வரலாறே எம்முன்னால் இன்று இருக்கிறது.

இந்தியாவின் மத்தியஸ்த்தத்தினூடாக எமது கோரிக்கைகளுக்கு ஆரம்பத்தில் இணங்கிய இலங்கையரசாங்கம், தற்போது எமது இணக்கப்பாடு இன்றியே ஒரு தலைப்பட்சமாக ஆவனி 18 ஆம் திகதியிலிருந்து யுத்தநிறுத்தத்தைக் கடைப்பிடிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது.  அப்படியிருந்தபோதிலும், நாம் அந்த யுத்தநிறுத்தத்தினை ஏற்றுக்கொண்டு, இலங்கையரசாங்கம் பேச்சுக்களுக்கான சாதகமான சூழ்நிலையினை ஏறப்டுத்தும் என்கிற நம்பிக்கையில், நாமும் வன்முறைத் தவிர்ப்பினைக்  கடைப்பிடித்து வருகிறோம். யுத்த நிறுத்த திட்டத்திற்கேற்ப, நாம் அதனை நேர்த்தியாகக் கடைப்பிடித்து வருகையில், இலங்கையரசாங்கம் இடைவிடாது தனது இராணுவ அட்டூழியங்களை அப்பாவித் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டு படுகொலைகளிலும், துன்புறுத்தல்களிலும் ஈடுபட்டு வருகிறது. 

இராணுவத்தினர் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டதற்கு முரணாக, தமது முகாம்களை விட்டு வெளியே வந்து சோதனைகளிலும், தேடியழிக்கும் நடவடிக்கைகளிலும் இப்போதும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினரின் கெடுபிடிகள் அதிகரித்திருக்கின்றன. திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் பல பகுதிகளிலும் இரவுவேளைகளில் தேடியழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இராணுவத்தினரும், கடற்படையினரும், பொலீஸாரும் தமிழ் மக்களின் வீடுகள் மீது தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதுடன், அப்பாவித் தமிழர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களிலும், தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்புணர்வுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.  மன்னார் மாவட்டத்தில் பல அப்பாவித் தமிழ் இளைஞர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். மன்னார், முருங்கன் மற்றும் மூதூர் ஆகிய பகுதிகளில் கைதுசெய்யப்பட்டுப் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் இளைஞர்களின் உடல்கள் அடையாளம் காணமுடியாதவாறு இராணுவத்தினரால் எரியூட்டப்பட்டு வருகின்றன.

திருகோணமலை மாவட்டத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட தமிழ் அகதிகள் யுத்த நிறுத்ததையடுத்து எரித்துச் சாம்பலாக்கப்பட்ட தமது வீடுகளுக்குத் திரும்பியவேளை அவர்கள் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தி மீண்டும் விரட்டியடித்திருக்கிறது இராணுவம். தமது காணிகளில் இருந்து அறுவடைகளை எடுத்துக்கொள்ளச் சென்ற விவசாயிகள் கூட இராணுவத்தால் கடுமையாகத் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அரசாங்கம் தான் கடற்கண்காணிப்பையும், கடற் தடையினையும் விலக்கிக்கொள்வதாக உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னரும் எமது மீனவர்கள் கடற்படையினரால் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் தொழிலுக்குச் செல்லவே அவர்கள் அஞ்சுகிறார்கள். 

அவசரகாலச் சட்ட விதிகளையும், மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கெதிரான‌ தடையினையும் விலக்கிக்கொள்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளபொழுதிலும், இராணுவத்தினர் வீதித் தடைகளை ஏற்படுத்தி எமது மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு தடைபோட்டு வருகிறார்கள். மேலும், ஊரடங்குச் சட்டம் தற்போதும் இராணுவத்தினரால் அமுல்ப்படுத்தப்பட்டே வருகிறது.  அத்துடன், இலங்கையின் பல்வேறு சிறைகளிலும், இராணுவ முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 2,000 இற்கும் அதிகமான தமிழ் அரசியல்க் கைதிகளை அரசாங்கம் இதுவரை விடுதலை செய்யவில்லை.

மேலும், இலங்கையின் தேசிய பாதுகாப்பு அமைச்சரினால் விடுக்கப்பட்டிருக்கும்  மூர்க்கத்தனமானதும், போர்க்குணம் மிக்கதுமான அறிக்கையில், சுமூகமான சூழ்நிலையினை உருவாக்கும் பொருட்டு ஈழத்தேசிய விடுதலை முன்னணியினரால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் எதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று வெளிப்படையாக பிரகடணம் செய்திருக்கிறார். இதனூடாக, சுமூகமான சூழ்நிலையினை ஏற்படுத்துவதற்கான யுத்த நிறுத்தத்தில் இதயசுத்தியுடன் ஈடுபட விரும்பவில்லை என்பதை இலங்கை அரசாங்கம் நிரூபித்திருக்கிறது.

எமது வேண்டுகோளான தமிழரின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைத் தரும் ஆலோசனைகளை பேச்சுவார்த்தைக்கு முன்னோடியாக முன்வைய்யுங்கள் என்பதனை இலங்கையரசாங்கம் முற்றாக நிராகரித்திருக்கிறது. அதற்குப் பதிலாக, பயனற்ற கருத்துப் பரிமாற்றத்திற்குள்ளும், பிரச்சினைகளை முன்கொண்டுவருவோம் என்கிற போர்வையில் முடிவில்லாத‌ வட்ட மேசை கூட்டங்களுக்குள்ளும் எம்மை இழுத்துவிட இலங்கையரசு முயன்று வருகிறது.

அடுத்ததாக‌, உத்தேசப் பேச்சுவார்த்தைகளில், "ஆயுததாரிகளுக்கான" வழிகாட்டியாகவும், தமிழ் மக்களின் அரசியல்த் தலைமையாகவும் தம்மை தாமே வரிந்துகொண்டிருக்கும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டிற்கெதிரான எமது கருத்தினையும் இத்தால் பதிவுசெய்கிறோம். ஒரு அரசியல் அமைப்பாக, தமிழ் மக்களின் நம்பகத்தன்மையினையும், ஆதரவையும் இழந்திருக்கும்  தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர், பேச்சுவார்த்தைகளில் தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாகக் கலந்துகொள்வதை நாம் முற்றாக எதிர்க்கிறோம். யுத்த நிறுத்தத்தினை அமுல்ப்படுத்துகிறோம் என்று கூறிய பின்னரும் எம்மக்கள் மீது சிங்கள இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான அட்டூழியங்கள் குறித்து வாய்மூடி மெளனமாக இருக்கும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர், ஈழத்  தமிழர்களுக்கான ஏக பிரதிநிதிகளாக ஒருபோதும் இருக்க முடியாது என்பதை நிரூபித்திருக்கிறார்கள். இவர்களின் தற்போதைய செயற்பாடுகள், பேச்சுவார்த்தைகளின் போது இவர்கள் எடுக்கப்போகும் முடிவுகள் குறித்துக் கடுமையான சந்தேகங்களை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டிருக்கின்றன.

தமிழ் மக்களுக்கான கெளரவமானதும், கண்ணியமானதுமான நிரந்தர அரசியல்த் தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொடுப்பதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையில் நாம் நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்று எமது முன்னைய அறிக்கையிலும் குறிப்பிட்டிருந்தோம், அதனையே இப்போதும் நாம் கூறுகிறோம். இந்தியா, இலங்கையரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம், பேச்சுவார்த்தைகளுக்கான சுமூகமான சூழ்நிலையினை உருவாக்கும் பொருட்டு யுத்த நிறுத்ததை முழுமையாகக் கடைப்பிடிக்கும்படி கோரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

 

இப்படிக்கு 

அரசியல்க் குழு ‍- தமிழீழ விடுதலைப் புலிகள்

ஈழ‌ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

தமிழீழ விடுதலை இயக்கம்

புரட்சிகர நிர்வாகக் குழு - ஈழப் புரட்சிகர முன்னணி

Edited by ரஞ்சித்
spelling
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

போராளிகளின் கோரிக்கையினை மீண்டுமொருமுறை நிராகரித்த இந்தியாவும், அமிர்தலிங்கத்தை எச்சரித்த போராளிகளும்
 

போரும் சமாதானமும் எனும் புத்தகத்தில் எழுதும் பாலசிங்கம், ஈழத்தேசிய விடுதலை முன்னணியினரின் அறிக்கையினையடுத்து இந்தியா மிகுந்த கோபம்கொண்டு காணப்பட்டதாகக் கூறுகிறார். இணைந்த அறிவிப்பில் போராளிகளால் கோரப்பட்ட பெரும்பான்மையான கோரிக்கைகளை இந்தியா நிராகரித்தது. ஆனால், பாலசிங்கத்துடன் பேசிய சந்திரசேகரன், இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் யுத்த நிறுத்த மீறல்கள் குறித்து இந்தியா கவனமெடுக்கும் என்று கூறினார். மேலும், போராளிகளின் தலைவர்களுடன் திம்பு பேச்சுவார்த்தை குறித்துப் பேசுவதற்காக தில்லிக்கு வரவழைக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

போராளிகளின் தலைவர்களை தில்லிக்கு அழைக்கப்போகிறார்கள் என்கிற செய்தி வந்தவுடன் உடனடியாக சந்திப்பொன்றினை அவர்கள் நடத்தினார்கள்.  முக்கியமான இரு விடயங்கள் அங்கே ஆராயப்பட்டன. முதலாவது, பேசப்பட வேண்டிய அடிப்படைக் கொள்கைகள். இதுகுறித்து தலைவர்களிடையே கருத்தொற்றுமை நிலவியது. தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகள் என்னவென்பதை ஏற்கனவே பலமுறை முன்வைக்கப்பட்டு வந்திருப்பதுடன், திருகோணமலையில் 1956 ஆம் ஆண்டு தந்தை செல்வா நடத்திய சமஷ்ட்டிக் கட்சியின் மாநாட்டிலும் தெளிவாக பிரகடணப்படுத்தப்பட்டு இருந்தது. அவையாவன, 

1. இலங்கைத் தமிழர்களை ஒரு தனி தேசமாக அங்கீகரிக்க வேண்டும்.

2. இலங்கையில் தமிழர்களுக்கென்று பூர்வீக தாயகம் இருக்கிறதென்பதை அங்கீகரிக்க வேண்டும்.

3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிக்க வேண்டும்.

4. இலங்கையைத் தமது நாடாகக் கொண்டு வாழும் அனைத்துத் தமிழருக்கும் பிரஜாவுரிமை வழங்கப்படுவதோடு, அடிப்படை உரிமைகளும் வழங்கப்பட வேண்டும்.

இவற்றின் அடிப்படையிலேயே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு அமையப்பெறுதல் வேண்டும் என்று ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தீர்மானித்தனர்.

அடுத்ததாக அவர்கள் ஆராய்ந்த விடயம், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை தமது முடிவுகளுக்கு இணங்கப் பண்ணுவது. ஆகவே, தாம் முன்வைக்கும் அடிப்படைகளை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் எதிர்க்கக் கூடாது என்று அவர்களை எச்சரிப்பதென்று போராளிகளின் தலைவர்கள் முடிவெடுத்தனர். அமிர்தலிங்கம் ஏற்கனவே தில்லிக்குப் பயணமாகியிருந்தமையினால், சென்னையில் தங்கியிருந்த யோகேஸ்வரனிடம் இதுகுறித்து பேசுவதென்று அவர்கள்  முடிவெடுத்தனர். அங்கு பேசிய சிறீ சபாரட்ணம், யோகேஸ்வரனை உடனேயே அங்கு அழைத்து, அவரிடம் நேரடியாக தமது எச்சரிக்கையினை வழங்கலாம் என்று கூறினார். ஏனையோரும் அதனை ஆமோதிக்கவே, பாலக்குமார் யோகேஸ்வரனுடன் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினார்.

large.Yogeshwaran.jpg.b3386648d2d48bb054faa2f2b35d3ec2.jpg

வி. யோகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர், யாழ்ப்பாணம்

 

யோகேஸ்வரனுடன் பேசிய பாலக்குமார், "அண்ணை, என்னுடன் பிரபா, சிறீ மற்றும் நாபா ஆகியோர் இருக்கிறார்கள். உங்களைச் சந்தித்து அவசரமாக ஒரு விடயத்தைப் பேச அவர்கள் விரும்புகிறார்கள்" என்று கூறினார்.

யோகேஸ்வரனும் அவர்களைச் சந்திக்க சம்மதம் தெரிவித்ததுடன், "தங்கத்துரையும் என்னுடன் இருக்கிறார், அவரையும் அழைத்து வரவா?" என்று  கேட்க, பாலக்குமாரும் அதற்குச் சம்மதித்தார்.

 அங்கிருந்த ஏனையவர்களுடன் பேசிய பிரபாகரன், "உங்கள் எல்லோரையும் தம்பிகள் என்று வெகு இனிமையாக அழைத்து  யோகேஸ்வரன் பேசுவார், அந்த நடிப்புகளுக்கெல்லாம் மயங்கிவிட வேண்டாம்" என்று கூறினார். "பாலா அண்ணை பேசட்டும், நாங்கள் கடுமையாக முகத்தை வைத்துக்கொண்டு அமைதியாக இருக்கலாம்" என்று அவர் மேலும் கூறினார்.

 large.Thangathurai.jpg.9d668821ac7237e79508e0d1e686582a.jpg

அ. தங்கத்துரை, பாராளுமன்ற உறுப்பினர், திருகோணமலை.

சுமார் 30 நிமிடங்களுக்குப் பின்னர் யோகேஸ்வரனும், தங்கத்துரையும் ஈழத்தேசிய விடுதலை முன்னணியினரின் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தனர். "நாங்கள் பிந்திவிட்டோமா? இந்த இடத்தைக் கண்டுபிடிக்கச் சிரமமாகிவிட்டது" என்று யோகேஸ்வரன் கூறினார். போராளிகளின் தலைவர்கள் எவருமே பதில் கூறாது மெளனம் காத்தனர்.

 பாலசிங்கம், யோகேஸ்வரனையும், தங்கத்துரையினையும் ஆசனங்களில் அமரச் சொன்னார். அவர்கள் இருவரும் சிறீ சபாரடட்ணத்திற்கும் பிரபாகரனுக்கும் இடையே அமர்ந்து கொண்டனர். மேசையின் எதிர்ப்புறத்தே அமர்ந்திருந்த பாலசிங்கம், "உங்களை சொற்ப நேரத்திற்குள் வரவழைத்தமைக்காக வருந்துகிறோம். முதலாவது, நாங்கள் ஆயுத அமைப்புக்கள் அல்லவென்பதை உங்களுக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறோம். நாம் அரசியல் ‍- ஆயுத முன்னணியினர் ஆகும். நாம் போரிடுவதில் மட்டுமல்ல, அரசியல் பேரம்பேசலிலும் வல்லவர்கள். ஆகவே, எங்கள் சார்பாக வேறு எவரும் பேசத்தேவையில்லை" என்று தீர்க்கமான தொனியில் கூறினார்.

பாலசிங்கத்தின் முதலாவது பிரகடணமே யோகேஸ்வரனையும், தங்கத்துரையையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர், தமது தீர்மானங்கள் குறித்த நீளமான விளக்கத்தை பாலசிங்கம் வழ‌ங்கினார். ஒரே சுரத்தில் பேசிய பாலசிங்கம் பின்வருமாறு தனது பேச்சினை நிறைவு செய்தார், " நாம் முன்வைக்கும் தீர்மானங்களுக்கு மாற்றாக வேறு எந்தத் தீர்மானத்தையும் முன்வைக்கக் கூடாது என்று அமிர்தருக்குச் சொல்ல விரும்புகிறோம். நாம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு நான்கு அடிப்படை அம்சங்களைக் கொண்டே அமையவேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானித்திருக்கிறோம். ஆகவே, இதனை ஆதரிக்க வேண்டும் என்று அமிருக்குச் சொல்லுங்கள். இதைவிட வேறு எதனையும் அவர் பேசக்கூடாது" என்று கூறி முடித்தார்.

பதிலளித்த யோகேஸ்வரன், ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களின் தீர்மானத்தை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆதரிக்கும் என்று உறுதியளித்தார். "அமிர் அண்ணை உங்களின் தீர்மானங்களுக்கு எதிராக ஒருபோதும் செல்ல மாட்டார். உங்களது தீர்மானமே எங்களது தீர்மானமும். எனது சத்தியத்தை நூற்றுக்கு நூறுவீதம் நீங்கள் நம்பலாம்" என்று அவர்களைப் பார்த்து அவர் கூறினார்.

 பதிலளித்த பாலசிங்கம், "உங்களின் சத்தியத்தை நம்புவதும், நம்பாததும் தில்லியில் அமிர்தலிங்கம் எப்படி நடந்துகொள்ளப்போகிறார் என்பதித்தான் தங்கியிருக்கிறது. ஆகவே, அவரை உடனேயே தொடர்புகொண்டு நாங்கள் உங்களிடம் கூறிய விடயங்களை அவருக்குத் தெரிவியுங்கள்" என்று கூறினார். 

அப்போது, எதேச்சையாகப் பேசிய சிறீ சபாரட்ணம், "அண்ணை, அமிர் எங்களின் கோரிக்கையினை ஏற்றுக்கொள்ள மறுத்தால், அவரைத் திம்புவிலேயே இருக்கச் சொல்லுங்கள்" என்று யோகேஸ்வரனைப் பார்த்து எச்சரிக்கும் தொனியில் கூறினார்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

திம்புப் பேச்சுக்களுக்கு முன்னோடியாக, போராளித் தலைவர்களை தில்லிக்கு அழைத்து அழுத்தம் கொடுத்த இந்தியா

1985 ஆம் ஆண்டு ஆடி 3 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களான பிரபாகரன், சிறீ சபாரட்ணம், பத்மநாபா மற்றும் பாலக்குமார் ஆகியோரும் அவர்களின் உதவியாளர்களும் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்றில் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஐந்து நட்சத்திர விடுதியான அஷோக் ஹொட்டேலில் தங்கவைக்கப்பட்டனர். 

 large.AshokHotel.jpg.98faf042051e8c0efbce5590b79529e7.jpg

அஷோக் நட்சத்திர விடுதி, தில்லி

போராளிகளின் தலைவர்களுட‌ன், ரோ அதிகாரிகளும் அதேவிடத்தில் தங்கியிருந்ததுடன், அவர்களின் நடமாட்டங்களையும் நெருக்கமாக அவதானித்து வரத்தொடங்கினர். ரோ அதிகாரிகள், பாதுகாப்புத்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளியுறவுத்துறையைச் சேர்ந்தவர்கள் என்று பலர் போராளிகளின் தலைவர்களுடன் நீண்ட பேச்சுக்களை நடத்தி வந்தனர். அவர்கள் அனைவரினதும் நோக்கமாக இருந்தது ஒன்றுதான். அதாவது பேச்சுவார்த்தைகளுக்கான நிபந்தனைகளாக அவர்கள் முன்வைத்திருக்கும் அனைத்தையும் மீளப்பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான் அது. நிபந்தனைகளை முன்வைப்பதன் மூலம் ஜெயவர்த்தன இலகுவாக பேச்சுக்களில் இருந்து வெளிநடப்புச் செய்வதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதாகிவிடும் என்பதே அவர்களின் பேச்சாக இருந்தது. 

இந்திய அதிகாரிகளின் அழுத்தத்திற்குப் பதிலளித்த போராளிகள், ஜெயார் யுத்தநிறுத்தத்திலும், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதே தனது இராணுவத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதற்காக‌த்தான் என்று கூறினார்கள். மேலும், நாங்கள் நிபந்தனைகளை முன்வைத்தாலென்ன இல்லாதுபோனால் என்ன, அவர் எப்படியாவது பேச்சுவார்த்தைகளை முறித்துக்கொண்டு தனக்கேற்ற‌ தருணத்தில் வெளியேறுவார், தனது இராணுவ பலத்தினால் தமிழ் மக்களின் ஆயுதப் பலத்தினை முற்றாக நசுக்கிவிடமுடியும் என்கிற நிலை வரும்போது அவர் இதனைச் செய்வார் என்றும் கூறினார்கள். மேலும், லலித் அதுலத் முதலி, சிங்களவர்களை இராணுவமயப்படுத்துவதில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் என்றும், இராணுவத்தினருக்கான ஆட்களைச் சேர்ப்பது, உப இராணுவப் பிரிவான ஊர்காவற்படையினை உருவாக்குவது, சிங்களக் குடியேற்றவாசிகளை ஆயுதமயப்படுத்துவது, இராணுவத்திற்கான ஆயுதங்களை வாங்கிக் குவிப்பது போன்ற நடவடிக்கைகளில் அவர் தற்போது ஈடுபட்டிருக்கிறார் என்றும் இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் கூறினர்.

போராளிகளின் தலைவர்களின் கருத்துக்களைச் செவிமடுத்த இந்திய அதிகாரிகள், இலங்கை அரசின் இராணுவ முயற்சிகள் குறித்து தாமும் அறிந்துவைத்திருப்பதாகக் கூறினர். "எமக்கென்றும் ஒரு திட்டம் இருக்கிறது, அவர் பேச்சுக்களில் இருந்து விலகிச் செல்லட்டும் பார்க்கலாம்" என்றும் அவர்கள் கூறினர். தொடர்ந்து பேசிய இந்திய அதிகாரிகள், இலங்கைத் தமிழர்களின் நலன்களைக் காத்துக்கொள்ள இந்தியா பின்னிற்கும் எனும் உத்தரவாதத்தையும் அவர்கள் வழங்கினர். "திம்புவிற்குப் போங்கள், நாங்கள் உங்களைப் பார்த்துக்கொள்கிறோம்" என்பதே அவர்களின் அழுத்தமாக இருந்தது.

போராளிகளின் தலைவர்களுடன் பேசிய இந்திய அதிகாரிகள் இன்னொரு விடயத்தையும் அழுத்தமாகக் கூறினார்கள். திம்புப் பேச்சுக்களில் பங்கேற்பதன் மூலம் அவர்களுக்கு விடுதலைப் போராளிகள் எனும் அந்தஸ்த்தினை இந்தியாவும், இலங்கையும் கொடுக்கும் என்றும், ஆகவே அச்சந்தர்ப்பம் நழுவிச் செல்வதனை அனுமதிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர். மேலும், ஜெயாரைப் பேச்சுவார்த்தைக்குப் பணியவைப்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரொமேஷ் பண்டாரி அதிக நேரத்தையும், சக்தியையும் செலவழித்திருப்பதாகவும் கூறினர். பயங்கரவாதிகளுடன் ஒருபோதும் பேசுவதில்லை எனும் நிலைப்பாட்டில் தனது அரசாங்கம் இருப்பதாக ஜெயவர்த்தன தொடர்ச்சியாகக் கூறிவந்தபோதிலும், பண்டாரி அவருடன் சளைக்காது பேசி பணியவைத்திருப்பதாக அவர்கள் கூறினர்.

large.Longowal.jpg.156e3fc021f9f2baa393fb8ee5271429.jpg

ஹர்ச்சண்ட் சிங் லொங்கொவால்

 ஜெயவர்த்தனவுடன் பேச்சுவார்த்தைக்கான அழைப்புக்களில் ஈடுபட்டிருந்த பண்டாரி, சீக்கியப் பிரிவினைவாத போராளித் தலைவரான ஹர்ச்சண்ட் சிங் லொங்கொவாலுடன் ரஜீவ் காந்தி பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருப்பதைச் சுட்டிக் காட்டி, ஜெயாரும் போராளிகளுடன் பேசவேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வந்தார். இதற்கு மேலதிகமாக தனது உதவி வெளியுறவுச் செயலரான குர்ஷீட் அலாம் கானை ஜெயாரிடம் அனுப்பிய ரஜீவ், தான் லொங்கொவாலுடன், பேச்சுவார்த்தைகள் ஊடாக பிணக்கினைத் தீர்ப்பதுபோல, தமிழ்ப் போராளிகளுடன் ஜெயவர்த்தனவும் பிரச்சினைக்கான தீர்விற்காகப் பேச்சுக்களில் ஈடுபட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

சீக்கியர்களின் பிணக்கினைத் தீர்த்துவைத்தவர் (குறிப்பு :சீக்கியர்களின் பிரச்சினைகள் இதுவரை தீர்த்துவைக்கப்படவில்லை என்பது வேறு விடயம்)  என்று சர்வதேசத்திலிருந்து பலத்த பாராட்டுக்களை அந்நாட்களில் பெற்றிருந்த ரஜீவ், தனது பெருமைகளுக்கு வலுச்சேர்க்க ஜெயவர்த்தனவையும் தமிழ்ப் போராளிகளையும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவர முயன்றுகொண்டிருந்தார். சீக்கிய பிரிவினைவாதப் போராளிகளின் பிரச்சினையைத் தீர்த்துவைத்தவர் என்கிற பெருமை உள்நாட்டில் ரஜீவிற்குக் கிடைத்திருந்தது. ஆகவே, இலங்கையில் தமிழருக்கான பிரச்சினையினைத் தீர்த்துவைத்தால் இப்பிராந்தியத்தில் சமாதான நடவடிக்கைகளை முன்னெடுத்தவர் என்கிற பெருமையும் அவரை வந்துசேரும் என்கிற எதிர்பார்ப்பு அவரிடத்தில் இருந்தது. 1985 ஆம் ஆண்டு ஆவணி 1 ஆம் திகதி லங்கா கார்டியன் பத்திரிக்கையில் எழுதிய மேர்வின் சில்வா, "தனது முதலாவது பிராந்திய பிணக்கினைக் களையும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த ரஜீவ், அதனை எப்பாடுபட்டாவது வெற்றியடைய வைப்பதில் அதீத பிரயத்தனம் காட்டியிருந்தார்" என்று எழுதுகிறார்.

போராளிகளுடன் பேசிய இந்திய ரோ அதிகாரிகள், பேச்சுவார்த்தைக்களுக்கான நிபந்தனைகளைப் போராளிகள் முவைத்துக்கொண்டிருப்பது இந்தியாவிற்கு அவமானத்தை ஏற்படுத்திவருவதாகத் தெரிவித்தனர். ஜெயவர்த்தனவுடனான பேச்சுக்களில் போராளிகளை எப்படியாவது பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவருவேன் என்று ரொமேஷ் பண்டாரி உறுதியளித்திருந்தார். ஆகவே, அவ்வாறு அவர்களை அழைத்துவரமுடியாத பட்சத்தில், பிராந்திய வல்லரசான இந்தியாவிற்கு அது பெருத்த அவமானமாக மறிவிடும் என்று அவர்கள் கூறினார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை, போராளிகளை நிபந்தனைகளின்றி பேச்சுவார்த்தைக்கு அழைத்துவருவதென்பது கெளரவப் பிரச்சினையாக மாறியிருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். "ஆகவே, நீங்கள் கட்டாயம் திம்புவிற்குச் சென்றே ஆகவேண்டும்" என்று விடாப்பிடியாக அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர்.

ஒருபடி மேலே சென்ற சந்திரசேகரன், "நீங்கள் புரியும் விடுதலைப் போராட்டத்தைக் கைவிட்டு விடும்படி நாங்கள் கோரவில்லை. ஆனால், நீங்கள் கட்டாயம் திம்புப் பேச்சுக்களுக்குச் சென்றே ஆகவேண்டும்" என்று போராளிகளைக் கேட்டுக்கொண்டார்.

 தில்லியில் அமைந்திருக்கும் ரோ வின் தலைமைக் காரியாலயத்தில், அதன் அன்றைய தலைவர் சக்சேனாவிற்கும் போராளிகளின் தலைவர்களுக்குமிடையே உச்சச் சந்திப்பொன்று இடம்பெற்றது. கராரான தொனியில், மிகுந்த அதிகாரத்துடன் பேசிய சக்சேனா, "நீங்கள் இந்தியாவுடன் ஒத்துப்போவதைத் தவிர‌ வேறு வழியில்லை என்று கூறினார். இந்திரா காந்தியின் காலத்தில் நாங்கள் உங்களைப் பார்த்துக்கொண்டோம், உங்களுக்கான முகாம்களையும், மறைவிடங்களையும் அமைக்க எமது நாட்டைத் தந்திருந்தோம், ஆனால் எமது புதிய அரசாங்கமோ தென்னாசியப் பிராந்தியத்தை சமாதானப் பூங்காவாக மாற்ற விரும்புகிறது. அதன் அடிப்படையிலேயே இலங்கையுடனான உங்களின் பேச்சுக்களும் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கின்றன" என்று அவர் கூறினார்.

"உங்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு இலங்கையரசாங்கத்தைப் பணியவைப்பதில் மிகக்கடுமையான முயற்சிகளில் பண்டாரி இறங்கியிருக்கிறார். அதனை நீங்கள் ஒரு பெருவெற்றியாகவே பார்க்க வேண்டும். நீங்கள் முன்வைக்கும் நிபந்தனைகளால் திம்புப் பேச்சுவார்த்தைகளுக்கு தனது அணியைனை அனுப்பிவைப்பதிலிருந்து ஜெயார் நழுவிக்கொள்ள சந்தர்ப்பம் ஒன்றினை நீங்கள் வழங்கப் போகிறீர்கள். ஆகவே, இந்தியாவின் முயற்சிகளுக்கு நீங்கள் கட்டாயம் ஒத்துழைப்புத் தந்தே ஆகவேண்டும்" என்று அவர்களைப் பார்த்து சக்சேனா கூறினார். 

Edited by ரஞ்சித்
spelling
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பேச்சுவார்த்தைக்கான ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் திட்டம்

போராளிகளின் தலைவர்களுடன் பேசிய சக்சேனா, இறுதியாக எச்சரிக்கை ஒன்றுடன் தனது பேச்சினை நிறைவு செய்தார். " பேச்சுவார்த்தைக்கு நிபந்தனைகள் எதனையும் விதிக்காது நீங்கள் சமூகமளிக்க வேண்டும். பேச்சுவார்த்தையில் பங்குபற்றத் தவறினால் இந்திய மண்ணிலோ அல்லது இந்தியாவின் கடற்பிராந்தியத்திலோ உங்களை நாம் அனுமதிக்கமாட்டோம்.ஆகவே, நான் கூறிய விடயங்கள் குறித்து நீங்கள் ஒவ்வொருவரும் தீர்க்கமாக ஆராய்ந்து நாளைக்குச் சாதகமான முடிவொன்றினை எங்களுக்கு அறிவிக்க வேண்டும்" என்று கூறினார்.  

சக்சேனாவுடனான சந்திப்பு முடிந்து தமது விடுதி நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கையில் சக்சேனாவின் எச்சரிக்கை தொடர்பாகவும், இந்தியாவுடன் ஒத்துப்போக வேண்டும் என்கிற அவரின் கோரிக்கையினையும் பற்றிப் பேசிக்கொண்டே வந்தார்கள். பாலசிங்கத்தின் கூற்றுப்படி, பிரபாகரன் நேராகச் சிந்தித்தார். அங்கிருந்த மற்றையவர்களுடன் பேசிய பிரபாகரன், "நாங்கள் இந்தியாவை இப்போது ஆத்திரப்படுத்தக் கூடாது. நாம் இந்தியா சொல்வது போலவே செய்யலாம். திம்புப் பேச்சுவார்த்தைகளுக்கு நிபந்தனையின்றிச் செல்வோம். இந்தியாவுக்கும் எமக்கும் இடையே பிளவொன்றினை உருவாக்க ஜெயவர்த்தனவிற்கு நாம் சந்தர்ப்பம் ஒன்றினை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடாது. ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தனவை முழுவதுமாக நம்புகிறார்கள், நாம் அந்த நம்பிக்கையினை உடைக்கவேண்டும்" என்று கூறினார்.

ஆனால், பேச்சுவார்த்தைகளுக்குப் போவதன் மூலம், இலங்கைத் தமிழர்களின் நலன்களை எந்தவிதத்திலும் விட்டுக்கொடுப்பதாக அமைந்துவிடக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார். "நாங்கள் திம்புவிற்குப் போகலாம், நிபந்தனைகளின்றியேபோகலாம், ஆனால் எமது மக்களின் உரிமைகள் குறித்து விட்டுக்கொடுக்காமல் அங்கு பேசுவோம்" என்று அவர் கூறினார்.

அன்று நள்ளிரவு கடந்து நடந்த கலந்துரையாடல்களின்போது, போராளித் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கான திட்டம் ஒன்றினை வகுத்துக் கொண்டார்கள். திட்டம் இரு பகுதிகளைக் கொண்டிருந்தது. முதலாவது, ஜெயவர்த்தன மீது ரஜீவ் கொண்டிருக்கும் நம்பிக்கையினைச் சிதைப்பது. தம்மை நாணயம் மிக்கவர்களாகவும், ஜெயவர்த்தனவைத் தந்திரசாளியாகவும் காட்டவேண்டும் என்பதில் அவர்கள் கவனமெடுத்தனர். இதற்காக, யுத்தநிறுத்தத்தினை முழுமையாகக் கடைப்பிடிப்பதென்றும், இராணுவத்தினராலும், பொலீஸாரினாலும் செய்யப்படும் யுத்த நிறுத்த மீறல்களைத் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டுவதென்றும் தீர்மானித்தனர்.

அதன்படி, ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தாயகத்தில் இருந்த தமது போராளிகளுடன் பேசி, யுத்தநிறுத்தத்தினை முழுமையாகக் கடைப்பிடிக்கும்படி பணித்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களால் கையொப்பமிடப்பட்ட துண்டுப்பிரசுரமொன்று, யுத்தநிறுத்தத்தினை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தினை விளக்கி, வடக்குக் கிழக்கின் அனைத்துப் பகுதிகளுக்கும் விநியோகிக்கப்பட்டது. ரோ அதிகாரிகளுக்கும் இத்துண்டுப்பிரசுரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

அவர்களது திட்டத்தின் இரண்டாவது பகுதி, ஜெயவர்த்தனவின் அரசாங்கம் தமிழர்களுக்கு நீதியானதும், சமத்துவமானதுமான தீர்வினை ஒருபோதும் வழாங்கப்போவதில்லை என்பதனைக் காட்டுவது. தமிழரின் பிரச்சினைக்கான அடிப்படைத் தீர்வான, தமிழர்கள் தனியான ஒரு தேசம் என்பதனையோ, அவர்கள் தமக்கென்றும் பூர்வீகத் தாயகம் ஒன்றினைக் கொண்டிருக்கிறார்கள் என்பதனையோ, அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்கள் என்பதனையோ, அவர்களுக்குப் பிரஜாவுரிமை மறுக்கப்படலாகாது என்பதனையோ ஜெயார் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை.

large.Prabakaran-and-Balasingham.jpg.02c8c61825b676ff3f4ff0f55a5cf750.jpg

பிரபாகரனுடன் அன்டன் பாலசிங்கம் 1980 களில்

ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் நிபந்தனைகள் இன்றி பேச்சுக்களில் பங்குபற்றுவதென்று முடிவெடுத்தார்கள். தமது முடிவினை பாலசிங்கம் உடனடியாகவே சந்திரசேகரனுக்கு அறியத் தந்தார். இது இந்திய அதிகாரிகளுக்குத் திருப்தியைக் கொடுத்தது. உங்களின் மனமாற்றத்திற்கு என்ன காரணம் என்று செய்தியாளர்கள் பாலக்குமாரைக் கேட்டபோது, " சிறிலங்கா எமக்குத் தரவிருக்கும் தீர்வு என்னவாக இருக்கும் என்பதைக் கேட்கவே பேச்சுக்களுக்குச் செல்கிறோம்" என்று அவர் பதிலளித்தார்.

ஜெயாரின் சகோதரர் அடங்கலாக சில சட்டத்தரணிகளையும், சில வெளியுறவுத்துறை அதிகாரிகளையும் கொண்ட தூதுக்குழுவினை இலங்கையரசாங்கம் தன் சார்பாகப் பேச்சுக்களுக்குச் செல்வார்கள் என்று அறிவித்தது. இதனை உடனடியாக போராளிகளின் தலைவர்கள் ரோ அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தினர். சந்திரசேகரனுக்கு இதுகுறித்து முறைப்பாடொன்றினைத் தெரிவித்த பாலசிங்கம், "ஜெயவர்த்தன தனக்கு கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே பேச்சுவார்த்தைக்கு வருகிறார் என்று உங்களிடம் நாம் சொன்னோமல்லவா? இப்போது அவர் அனுப்பவிருக்கும் தூதுக்குழுவைப் பாருங்கள். அரசியல் ரீதியில் தீர்மானம் எடுக்க முடியாத சில வழக்கறிஞர்களை அவர் அனுப்பவிருக்கிறார். இந்த வழக்கறிஞர்களிடமிருந்து எவ்வகையான முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?  தமக்குக் கொடுக்கப்பட்ட சில விடயங்களைப் பற்றி மட்டுமே அவர்கள் வாதாடிக்கொண்டு இருக்கப் போகிறார்கள். ஆக, தீர்க்கமான பேச்சுவார்த்தைகள் என்று எதுவுமே இருக்கப்போவதில்லை" என்று கூறினார்.

பேச்சுவார்த்தைக்கு ஜெயார் அனுப்பவிருக்கும் தூதுக்குழு தொடர்பான தனது அதிருப்தியை இந்தியா டிக்ஷிட் ஊடாக ஜெயவர்த்தனவுக்கு அறியத் தந்தது. அரசியலைப்புத் தொடர்பாகத் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் வாய்ந்த மூத்த அமைச்சர்கள் எவருமே இடம்பெறாத தூதுக்குழு ஒன்றினைப் பேச்சுவார்த்தைகளுக்கு அனுப்புவதன் ஊடாக பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தையே ஜெயார் குறைத்துவிட்டார் என்று டிக்ஷிட் அவரிடம் கூறினார். 

வழமைபோலவே இந்தியாவின் இந்தக் கரிசணைக்கும் ஜெயவர்த்தனவால் பொய்யான‌ ஒரு காரணத்தைக் கூற முடிந்தது. தனது இளைய சகோதரரும் சட்டத்தரணியுமான ஹெக்டர் உட்பட சில சட்டத்தரணிகளை தூதுக்குழுவில் அனுப்பியதற்கு நான்கு காரணங்களை ஜெயார் முன்வைத்திருந்தார். தனது இளைய சகோதரரே தனது ஆலோசகர் என்பதாலும், அவர் மீது தான் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாலும் அவரையே தூதுக்குழுவின் தலைவராக நியமித்ததாகக் கூறினார். மேலும், சட்டத்துறையில் பிரசித்திபெற்ற ஹெக்டர், இந்திய சட்டமாதிபருடன் இணைந்து, ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கம் குறித்து அவர் பல கலந்துரையாடல்களை நடத்தியிருப்பதால், அவரைத் தனது அதிகாரம் மிக்க விசேட தூதுவராக அனுப்பியிருப்பதாகவும் கூறினார்.

ஜெயார் தமக்களித்த பதிலை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் பாலசிங்கத்திடம் தெரிவித்தனர். ஜெயவர்த்தனவின் பதிலினையடுத்து, போராளிகளின் தலைவர்கள் தமது தூதுக்குழுவை இரண்டாம் நிலைத் தலைவர்கள் அடங்கிய குழுவாக  அனுப்ப முடிவெடுத்தனர். அதன் பின்னர், அவர்கள் தமது நேரத்தை தில்லியின் இடங்களைச் சுற்றிப் பார்க்கவும், திரைப்படங்களைப் பார்த்து ரசிப்பதிலும் செலவிட்டனர்.

தில்லியின் திரையரங்கு ஒன்றில் கண்பிக்கப்பட்டு வந்த ஆங்கிலத் திரைப்படம் ஒன்றினைப் பார்க்க பிரபாகரன், பாலக்குமார், வரதராஜப் பெருமாள், சாந்தன் ஆகியோர் சென்றனர். திரைப்படத்தின் கதை இரு இளம் காதலர்கள் பற்றியே அமைந்திருந்தமையினால், அதுவரை திருமணம் முடிக்காதிருந்த பாலக்குமார் மிகுந்த தர்ம சங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இந்திய ரோ அதிகாரிகள் போராளித் தலைவர்களை யமுனா நதிக்கரையில் இருந்த ராஜ் காட் எனும் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்குதான் மகாத்மா காந்தியின் சமாதி இருக்கிறது. மகாத்மாவின் சமாதிக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தபோது பத்மநாபாவின் காதுகளில் கிசுகிசுத்த பிரபாகரன், "எங்களை ஏன் இங்கு கூட்டிவந்திருக்கிறார்கள் தெரியுமா? எம்மையும் காந்தியைப் போல் அகிம்சையினைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்லாமல்ச் சொல்கிறார்கள்" என்று கூறவும், குறுக்கிட்ட பாலக்குமார், "என்ன இரகசியம் பேசுகிறீர்கள்?" என்று கேட்டார். பிரபாகரன் பதில் ஏதும் கூறாமல் பாலக்குமாரைப் பார்த்து புன்னகைத்தார்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பேச்சுக்களுக்கெதிராகப் போராடிய யாழ்ப்பாண மக்களும், அவர்களின் உணர்வுகளை புறக்கணித்த இந்தியாவும்
 

போராளிகளின் தலைவர்கள் நிபந்தனைகளின்றி பேச்சுவார்த்தைகளுக்குச் செல்லப்போகிறார்கள் என்கிற செய்தி பர‌வியபோது யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக, போராளிகளை அழுத்தம் கொடுத்து, திம்புவிற்கு இழுத்துச் சென்றமைக்காக இந்தியாவின் மீது மக்களின் கோபம் திரும்பியிருந்தது. ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், வீதி நாடகங்கள் என்பன இளைஞர்களால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டன. யாழ்ப்பாணத்தின் சுவர்களிலும், வீதிகளுக்குக் குறுக்கே தொங்கவிடப்பட்ட பதாதைகளிலும் கூறப்பட்ட செய்தி ஒன்றுதான், "எங்களுக்குத் தமிழீழமே வேண்டும்". இந்த ஒருமித்த மக்களின் மனவெழுச்சி அப்பிரதேசமெங்கிலும் பரவிக் கிடந்தது. 

ஜெயவர்த்தனவின் இராணுவத்தினர் புரிந்துவரும் படுகொலைகளுக்கெதிரான கண்டனங்கள், இந்தியா தனது நலன்களைக் காத்துக்கொள்ள ஈழத்தமிழர் மீது பலவந்தமாகத் திணித்துவரும் அழுத்தங்கள் என்பனவும் இப்போராட்டங்களில் தமிழ் இளைஞர்களால் வெளிப்படுத்தப்பட்டது. பொதுக்கூட்டங்களிலும், மேடை நாடகங்களிலும் இரு முக்கிய செய்திகளை பேச்சாளர்கள் முன்வைத்தனர். முதலாவது தமிழர்கள் ஜெயவர்த்தனவை ஒருபோதும் நம்பத் தயாரில்லை என்பது. இரண்டாவது, ஜெயவர்த்தனவுடன் சமரசம் செய்ய முன்வந்திருந்த தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியினரைத் தாம் முற்றாக நிராகரிக்கிறோம் என்பது. 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை ஒழுங்குசெய்வதில் முன்னின்றார்கள். போராளிகளின் தலைவர்கள் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாளான ஆடி 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகியிருந்தன. அன்றுமட்டுமே யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல பேரணிகள் ஒழுங்குசெய்யப்பட்டன. தெல்லிப்பழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அமிர்தலிங்கத்தின் உருவ பொம்மை ஒன்றினை வீதிகளில் இழுத்துவந்தனர். ஒப்பாரி வைப்பதுபோல பாசாங்கு செய்த இன்னும் சில இளைஞர்கள் அமிர்தலிங்கத்தின் உருவப்பொம்மையினைப் பார்த்து, "ஜெயவர்த்தனவுடன் சமரசம் செய்துகொண்டதன் மூலம் அரசியல்த் தற்கொலையினை நீ செய்திருக்கிறாய், முட்டாளே, அது உனக்குத் தெரியாமல் போனதெப்படி?" என்று கேட்டார்கள்.

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் "மாயமான்" எனும் பெயரில் மேடை நாடகம் ஒன்றினை அரங்கேற்றினார்கள். இராமாயணத்தில் வரும் காட்சியொன்றில், இராமனினதும், இலட்சுமணனினதும்  கவனத்தைத் திசைதிருப்பி, சீதையைக் கவர்ந்துசெல்ல இராவணன் மாய மானின் உருவத்தில் வந்ததற்கு ஒப்ப, தமிழர்களை தமக்குக் கீழ் நிரந்தரமாகவே அடிமைப்படுத்திவிட ஜெயார் போடும் மாயமான் வேடமே இந்தப் பேச்சுவார்த்தைகள் என்று அந்தநாடகம் கூறியது. ஜெயார் மறைத்துவைத்திருக்கும் வலையில் தமிழர்களை வீழ்த்துவதற்கு இந்தியாவே அழுத்தம் கொடுக்கிறது என்கிற குற்றச்சாட்டு இந்தியாவை நோக்கி முன்வைக்கப்பட்டது. ஜெயார் விரித்து வைத்திருக்கும் வலை நோக்கி இந்தியா முன்னாலே செல்ல, ஈழத்தேசிய முன்னணியின் நான்கு போராளித் தலைவர்களும், வெளியில் இருந்த புளொட் அமைப்பும் இந்தியாவின் சொல்கேட்டு ஜெயாரின் வலையில் தம்மையறியாமலேயே வீழ்வதற்காகப் பிந்தொடர்கின்றன என்று அவர்கள் கூறினார்கள். இந்தியா போராளிகளைப் பார்த்து  நடவுங்கள் என்று சொல்ல, நடப்பதும், நில்லுங்கள் என்று சொல்ல நிற்பதும், பாயுங்கள் என்று சொல்லப் பாய்வதும் நடக்கிறது  என்று அவர்கள் இந்தியாவை விமர்சித்தார்கள்.

இந்தியாவின் கட்டுப்பாட்டிலிருந்து போராளிகள் வெளியே வர எத்தனித்த ஒவ்வொரு கணமும் இந்தியா அவர்களை மிரட்டி பலவந்தமாக மீண்டும் தமது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவந்தது. இந்தச் சாராம்சத்தினை முன்வைத்து யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய 35 நிமிட நகைச்சுவை கலந்த மேடை நாடகம் யாழ்க்குடாநாட்டில் ஒருவாரத்தில் மட்டுமே 125 தடவைகள் மேடையேற்றப்பட்டது. 

பேச்சுவார்த்தையின் முதலாவது நாளான 1985, ஆடி 8 ஆம் திகதி முழு யாழ்க்குடாநாடுமே பொது வேலை நிறுத்தத்தினால் முற்றாக ஸ்த்தம்பித்துப் போனது. பலகலைக்கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் வகுப்புக்களைப் பகிஸ்க்கரிப்புச் செய்தனர். கடைகள் இழுத்து மூடப்பட்டதோடு, வீதிகளும் வெறிச்சோடிப்போக, மக்கள் வீடுகளுக்குள் முடங்கிப் போனார்கள். வீதிகளெங்கும் பதாதைகள் தொங்கவிடப்பட்டன. "எமக்கு ஈழமே வேண்டும்", " யுத்தநிறுத்தத்தை எதிர்க்கிறோம்", "எமக்குப் பேச்சுவார்த்தை வேண்டாம்", "இந்தியாவே, புலிகளை திம்புவிற்கு ஏன் அழைத்துச் சென்றாய், அவர்களைப் புல்லை உண்ணவைக்கவா?" என்று அவை பேசின.

 யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த மக்கள் எழுச்சிப் போராட்டங்களை தமது நிலைப்பாட்டினை இந்தியாவுக்குத் தெளிவாக உணரவைக்கும் சந்தர்ப்பமாகப் பாவிக்க நினைத்தனர் போராளிகள். "பாருங்கள், நீங்கள எங்களை ஜெயவர்த்தனவுடன் பேசவைக்க பலவந்தப்படுத்தி அழைத்து வந்திருக்கிறீர்கள். ஆனால், எமது மக்களோ அதற்கு முற்றான எதிர்ப்பினைக் காட்டி வருகிறார்கள்" என்று இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் கூறினார்கள். ஆனால், போராளிகளின் கருத்தினைக் கேட்கும் நிலையில் இந்திய அதிகாரிகள் இருக்கவில்லை. அவர்களைப்பொறுத்தவரை, தமிழ் மக்களின் உணர்வுகளைவிட பேச்சுக்களை எப்படியாவது நடத்திவிடவேண்டும் என்பது முக்கியமானதாகத் தெரிந்தது. இந்தியாவை இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் வல்லரசாகக் காட்டுவதற்கு இப்பேச்சுவார்த்தைகளை எப்படியாவது பாவித்துவிட கங்கணம் கட்டியிருந்த இந்திய அதிகாரிகள், தமிழர்களின் உணர்வுகளை முற்றாகப் புறக்கணித்திருந்தனர்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பேச்சுக்களில் பங்கெடுத்த தமிழர் தரப்பின் சட்டபூர்வத் தன்மையினைக் கேள்விகேட்ட சிறிலங்கா அரசு தரப்பும், வெளிநடப்புச் செய்த போராளிகளும்

1985 ஆம் ஆண்டு ஆடி 8 ஆம் திகதி பேச்சுக்கள் ஆரம்பமாகின. பத்து உறுப்பினர்கள் அடங்கிய இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவிற்கு ஜெயாரின் சகோதரன் ஹெக்டர் ஜெயவர்த்தன தலைமை தாங்கினார். 13 உறுப்பினர்கள் அடங்கிய தமிழர்களின் பேச்சுவார்த்தைக் குழுவினர் பலத்த பாதுகாப்புடன் திம்புவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பேச்சுவார்த்தைக் குழுக்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக வெவ்வேறு விடுதிகளில் தங்கவைக்கப்பட்டனர். திம்பு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பூட்டானின் தலைநகரான திம்புவிற்கு அந்நாட்களில் உல்லாசப் பயணிகளோ, பத்திரிக்கையாளர்களோ வருவது தடைசெய்யப்பட்டிருந்தது. இரு இந்தியச் செய்தியாளர்களான இந்திய டுடேயின் சென்னைப் பத்திரிக்கையாளரான வெங்கட்ரமணியும் அவரது புகைப்பிடிப்பாளரும் உல்லாசப் பயணிகள் என்கிற போர்வையில் திம்புவில் தங்கியிருந்த‌வேளை, நடுச்சாமத்தில் அவர்களைத் தட்டி எழுப்பிய அதிகாரிகள் மரியாதையுடன் காலைவிடியுமுன் நகரிலிருந்து அனுப்பி வைத்தார்கள்.

விடுதியில் தங்கவைக்கப்பட்ட தமிழ்ப் பேச்சுவார்த்தைக் குழுவினரை ஏறக்குறைய பணயக் கைதிகள் போலவே இந்தியா நடத்தியது. வெளியாரைச் சந்திப்பது அவர்களுக்குத் தடைசெய்யப்பட்டிருந்தது.ஆனால், சென்னையின் கோடாம்பக்கத்தில் இருக்கும் ஒரு இரகசிய இடத்திற்கான நேரடித் தொலைபேசி அழைப்புக்கள் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தன.  சென்னைக்குத் திரும்பியிருந்த தமது தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் பேசும் விடயங்கள் குறித்துப் பிரதிநிதிகள் அவ்வப்போது பேசிக்கொள்ளவே இந்த வசதி செய்துகொடுக்கப்பட்டிருந்தது. சந்திரசேகரனும் ஏனைய ரோ அதிகாரிகளும் பேச்சுவார்த்தைகளை நெறிப்படுத்தினர். சந்திரசேகரன் போராளிகளுக்கு பேச்சுவார்த்தைகளின்போது உதவிபுரிய ஏனைய அதிகாரிகள் இலங்கையரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கு உதவினர்.

பேச்சுவார்த்தைகளுக்கான தூதுக்குழுவினரை திம்புவிற்கு அனுப்பியபின்னர் போராளித் தலைவர்கள் சென்னைக்குத் திரும்பியிருந்தனர். பேச்சுவார்த்தைகளுக்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக பாலசிங்கத்தை சென்னையில் இருக்குமாறு கூறிவிட்டு, புலிகளின் சேலம் முகாமிற்குச் சென்றார் பிரபாகரன்பத்மநாபா, சிறீ சபாரட்ணம், பாலக்குமார் ஆகிய ஏனைய தலைவர்கள் சென்னையிலேயே தங்கியிருந்தனர்.

திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்பதனை பிரபாகரன் உணர்ந்தே இருந்தார். இந்தியப் பத்திரிக்கையாளரான வெங்கட்ரமணியின் கூற்றுப்படி, தமிழர்களின் நலன்களும், இந்தியாவின் நலன்களும் ஒன்றிற்கொன்று எதிரானவை என்பது தெளிவாகும்போது, வடக்குக் கிழக்கிற்குச் சென்று மீண்டும் ஆயுதப் போராட்டத்தினைத் தொடர்வதற்கு மனரீதியாகத் தன்னைத் தயார் செய்ய பிரபாகரன் உறுதிபூண்டிருந்தார். 

சேலம் முகாமிற்குச் சென்ற பிரபாகரன் தனது அடுத்த இராணுவத் திட்டத்தினைச் செயற்படுத்த போராளிகளைத் தயார்ப்படுத்துவதில் ஈடுபடலானார். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் ஏனைய தலைவர்களுடன் தான் கலந்தாலோசித்தது போல, இராணுவ முகாம்களையும், பொலீஸ் நிலையங்களையும் சுற்றி தனது போராளிகளை நிலைவைக்க அவர் முடிவெடுத்தார். கிட்டுவுடன் பேசிய பிரபாகரன், தனது அடுத்த நகர்வு இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்குவதுதான் என்று கூறினார்.

பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து சென்னையிலிருந்த தமது தலைவர்களிடம் பேச்சுவார்த்தைக் குழுவினர் அறியத் தந்ததுடன், அவர்களிடமிருந்து அறிவுரைகளையும் பெற்றுக்கொண்டு வந்தனர்.திம்புவிலும் சென்னையிலும் ஓரணியாக செயற்பட்ட போராளிகளின் தலைவர்கள் ஒருமித்து முடிவெடுத்தனர். சென்னையில் பொராளிகளின் ஒருமித்த அணியின் பேச்சாளராக பாலசிங்கமே செயற்பட்டார். திம்புப் பேச்சுவார்த்தை மேசையில் இப்பணியை திலகர் செய்தார். மேலும், திம்புவில் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் பிரதிநிதிகள் புளொட் அமைப்புடனும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியுடனும் சேர்ந்து செயற்பட்டனர். 

தற்போதைய (2005) புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் திம்புப் பேச்சுவார்த்தை குறித்து என்னுடன் பேசுகையில் தமிழத் தரப்பினர் ஓரணியாகச் சேர்ந்து இயங்கியது இதுவே முதற்தடவை என்றும், பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட சிங்கள தூதுக்குழுவே இதனைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது என்றும் கூறினார். "நாம் எமக்கிடையே தர்க்கிப்போம் என்றும், ஒருவரையொருவர் இழுத்து வீழ்த்தும் வேலைகளில் ஈடுபடுவோம் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், நாம் எமது ஒவ்வொரு நகர்வையும் மிகக் கவனமாகத் திட்டமிட்டே செய்தோம். ஒவ்வொருவரும் எந்தவிடயம் குறித்துப் பேசுவதென்றும், அவரே அப்பிரச்சினைகுறித்து தனது பேச்சில் பதிலளிப்பார் என்றும் முடிவெடுத்துச் செயற்பட்டோம்" என்றும் சித்தார்த்தன் கூறினார். 

பேச்சுக்களுக்கான போராளிகளின் பிரதிநிதிகளை வழிநடத்தும் பொறுப்பில் பாலசிங்கம் இருந்தார். தாம் நடத்தும் கலந்துரையாடல்கள் அனைத்தையும் ரோ வினர் செவிமடுத்து வருகின்றனர் என்பதை அவர் அறிந்தே இருந்தார். ஆகவே, போராளிகளின் பிரதிநிதிகளுடன் வேண்டுமென்றே யாழ்ப்பாண பேச்சுவழக்கில் அவர் பேசினார். இக்கலந்துரையாடல்களை இன்னொரு பக்கத்திலிருந்து செவிமடுத்துக்கொண்டிருந்த ரோ வின் தமிழ் அதிகாரிகள் குழம்பிப் போயிருந்தனர்.

இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழுவில் ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் சட்டத்தரணிகளான  எச் எல் டி சில்வா, எல்.சி.செனிவிரட்ண‌, மாக் பெர்ணான்டோ மற்றும் எச்.எல்.குணசேகர ஆகியோரும் அங்கம் வகித்தனர். ஏனையவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள். 

தமிழர்களின் பிரதிநிதிகள் குழுவில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் சார்பில் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் ஆகியோரும், புலிகள் சார்பில் லோரன்ஸ் திலகருடன் சிவகுமாரனும் (அன்டன்), .பி.ஆர்.எல்.எப் சார்பில் வரதராஜப்பெருமாளுடன் கேதீஸ்வரனும், டெலோ சார்பில் சார்ள்ஸ் அன்டனிதாஸுடன் மோகனும், ஈரோஸ் சார்பில் சங்க ராஜியுடன் . இரத்திணசபாபதியும், புளொட் சார்பாக வாசுதேவாவுடன் சித்தார்த்தனும் பங்குகொண்டிருந்தனர்.

பூட்டான் நாடே பேச்சுவார்த்தைகளுக்கான அனுசரணைகளை வழங்கியிருந்தமையினையடுத்து, அந்நாட்டின் வெளிநாட்டமைச்சர் லியொபொனோ தாவா செரிங் உத்தியோகபூர்வமாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவைத்தார். மிகுந்த அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தஅரச மாளிகையின் விருந்தினர் மண்டபத்தில் இப்பேச்சுவார்த்தைகள் நடந்தன. அங்கு பேசிய தாவா, ஒரு நாட்டில் வாழும் பல்வேறு இனங்களுக்கிடையிலான பிணக்குகளை பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்று அழுத்தமாகக் கூறியதுடன், இப்பேச்சுவார்தைககள் வெற்றியடைய தனது நாட்டின் வாழ்த்துக்களையும் அவர் பேச்சுவார்த்தைப் பிரதிநிகளுக்குத் தெரிவித்தார். பேச்சுவார்த்தையினை ஒழுங்குசெய்தமைக்காக இந்தியாவுக்கும், நடத்த அணுசரணை வழ‌ங்கிய பூட்டானுக்கும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஹெக்டர் ஜெயவர்த்தன நன்றி தெரிவித்தார். தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பில் நன்றியுரையினை டெலோ உறுப்பினர் சார்ள்ஸ் வழங்கியது அன்று போராளி அமைப்புக்களுக்கிடையே காணப்பட்ட ஒற்றுமையினைக் காட்டியது. சரித்திர முக்கியத்துவாம் வாய்ந்த பேச்சுவார்த்தையின் முதலாவது நாள் நிகழ்வுகள் முடிவிற்கு வந்தபோது, பூட்டான் வெளிநாட்டமைச்சரின் விருந்தோம்பல் குறித்தே பலரும் பேசிக்கொண்டனர். 

பேச்சுவார்த்தைகளின் இரண்டாம் நாளான ஆடி 9 ஆம் திகதி, இரு குழுக்களும் ஒருவரையொருவர் நேராகப் பார்த்துகொள்ளும் வகையில் நீண்ட மேசையொன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. தமிழர் பிரதிநிதிகள் சார்பில் அமிர்தலிங்கமே பேச்சுக்களை ஆரம்பித்தார். தமிழர் பேச்சுவார்த்தைக் குழுவினருக்கிடையே அன்றுகாலை கலந்துரையாடப்பட்ட விடயங்களுக்கு அமையவும், தாம் ஏற்கனவே தீர்மானித்திருந்த திட்டத்திற்கு அமைவாகவும் மூன்று முக்கிய விடயங்கள் குறித்து தமது கரிசணையினைத் தமிழ்த் தரப்பு எழுப்பியது.  முதலாவது, பேச்சுவார்த்தையில் சிறிலங்கா அரசாங்கம் கொண்டிருக்கும் உண்மையான நோக்கமும், உறுதிப்பாடும். முடிவு எடுக்கக் கூடிய அதிகாரத்தினைக் கொண்டிருக்காத சில சட்டத்தரணைகளையும், வெளியுறவுத்துறை அதிகாரிகளையும் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுவார்த்தைகளுக்கு அனுப்பியிருப்பதன் மூலம் தாம் உணர்ந்துகொள்வது என்னவெனில், இப்பேச்சுவார்த்தைகளை தனது இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான கால அவகாசத்திற்காகவே ஜெயவர்த்தன பாவிக்கிறார் என்று தாம் சந்தேகிப்பதாக தமிழ்ப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அமிர்தலிங்கம் ஜெயாரின் இத்திட்டம் குறித்து மிகவும் காரசாரமான விமர்சனத்தை முன்வைத்தார். "அவர்களின் திட்டம் எம்மைப்பொறுத்தவரை புதியதல்ல. கடந்த வருடம் முழுவதும் பேச்சுவார்த்தைகளை இழுத்தடித்துக் காலம் கடத்திய அரசாங்கம் இவ்வருடமும் அதனையே செய்ய எத்தனிக்கிறது" என்று அவர் கூறினார்.

தமிழர்களின் பிரதிநிதிகள் முன்வைத்த விமர்சனத்திற்கு ஹெக்டர் ஜயவர்த்தன பதிலளித்தார். இனப்பிரச்சினைக்கு இறுதியானதும், நிரந்தரமானதுமான தீர்வினை முடிவுசெய்யும் சகல அதிகாரமும் கொண்ட அரசாங்கத்தின் பிரதிநிதியாகவே இப்பேச்சுக்களில் தானும் தனது அணியினரும் கலந்துகொள்வதாக அவர் கூறினார். மேலும், பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கும் பட்சத்தில், இறுதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு ஜனாதிபதி ஜெயவர்த்தன தானே திம்புவிற்கு நேரடியாக வருவதாக தன்னிடம் உறுதியளித்திருப்பதாகவும் ஹெக்டர் கூறினார்.

அடுத்ததாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவில் இலங்கைப் புலநாய்வுத்துறையினைச் சேர்ந்தவர்களும் அங்கம் வகித்திருப்பது குறித்த தமது அதிருப்தியினை தமிழர்தரப்பு எழுப்பியது. 

உடனேயே குறுக்கிட்ட ஹெக்டர், தமிழ்ப் போராளிகள் பேச்சுவார்த்தைக் குழுவில் பிரதிநிதிகளாக அங்கம் வகிப்பதற்கான தகமை குறித்தும், தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாக அவர்கள் கோருவது குறித்தும் கேள்வி எழுப்பினார். "நீங்கள் யாரைப் பிரதிநிதித்துவம் செய்கிறீர்கள்? நீங்கள் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை?" என்று அவர் கேள்வி எழுப்பினார். போராளி அமைப்புக்கள் தம்மை மட்டுமே இங்கு பிரதிநிதித்துவம் செய்வதாக அவர் கூறினார். வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்களையோ அல்லது நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் தமிழர்களையோ போராளிகள் பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்று அவர் கூறினார். அவர்கள் முஸ்லீம் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்றும் அவர் மேலும் கூறினார். ஆனால், இலங்கையரசாங்கம் தமிழர்கள் சார்பாகவுமே பேச்சுவார்த்தைக்கு வந்திருப்பதாக அவர் தெரிவித்தார். 

ஹெக்டரின் இந்த விசமத்தனமான பேச்சு இருதரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதத்திற்கு வித்திட்டது. இலங்கையரசாங்கம் தமிழர்களையும் சேர்த்தே பிரதிநிதித்துவம் செய்வதானால், அது தமிழர்களுடன் பேசவேண்டிய தேவையென்ன என்று தமிழ்த்தரப்பினர் கேள்வியெழுப்பினர். "தமிழர்களையும் சேர்த்தே நீங்கள் பிரதிநித்துவம் செய்வீர்களாகவிருந்தால், நீங்களுக்கு உங்களுக்குள்ளேயே பேசி, தீர்வொன்றினை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்" என்று தமிழர்களின் பிரதிநிதியொருவர் கிண்டலாகக் கூறினார். இதனையடுத்து, தம்மைத் தமிழர்களின் பிரதிநிதிகளாக இலங்கையரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் தாம் தொடர்ந்தும் பேச்சுக்களில் பங்கேற்கப்போவதில்லை என்று தமிழர் தரப்பு கூறியது.

ஆகவே, பேச்சுவார்த்தைகளில் சிறிய இடைவேளை ஒன்றினைக் கோரிய தமிழர் தரப்பு, தம்மை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இலங்கையரசாங்கம் ஏற்றுகொண்டால் அன்றி பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் ஈடுபடப்போவதில்லை என்று அறிவித்தது. இடைவேளையின்போது தனித்தனியாக தமக்குள் கலந்தாலோசித்த தமிழர் பிரதிநிதிகள் தமக்கான திட்டத்தினை வகுத்துக்கொண்டனர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும், போராளிகளுக்கும் இடையே பிளவொன்றினை ஏற்படுத்தவே இலங்கையரசாங்கம் முயல்வதை அவர்கள் தெளிவாக உணர்ந்துகொண்டனர். ஆகவே, இதனை எப்படியாவது முறையடித்து விட அவர்கள் உறுதிபூண்டனர். அதன்படி, தமது எழுத்துமூல அறிவிப்புக்கள் அனைத்தையும் "தமிழ்மக்களின் பிரதிநிதிகள்" என்கிற தலைப்புடனேயே வெளியிடுவது என்று தீர்மானித்தனர்.

இடைவேளையின் பின்னர், அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து அறிக்கையொன்றினை ஹெக்டர்  ஜயவர்த்தன வெளியிட்டார். இரு தரப்பினரும் பிரச்சினைக்கான தீர்வொன்றினை உண்மையாக அடைந்துகொள்ளும் நோக்கிலேயே பேச்சுக்களில் ஈடுபட்டிருப்பதாகவும், பேச்சுக்களில் ஈடுபடுவதென்பதே தேவையானளவிற்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக பேச்சுக்களில் பங்கெடுக்கும் தமிழர் தரப்பினை தாம் ஏற்றுக்கொண்டதனால்த்தான் என்றும் கூறினார். 

அதன்பின்னர், தமது இரண்டாவது கரிசணையான யுத்த நிறுத்த மீறல்கள் குறித்து தமிழர் தரப்பு கேள்வியெழுப்பியது. கொழும்பு அரசாங்கம் யுத்தநிறுத்தத்திற்கான நிபந்தனைகளை ஏற்றுகொள்ள மறுத்துவருவதாக தமிழர்கள் குற்றஞ்சாட்டினர். இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்த செயற்பாடுகளில் ஒரு பகுதியினை இலங்கையரசாங்கம் கடைப்பிடிக்கத் தவறியிருப்பதாக அவர்கள் கூறினர். குறிப்பாக ஊரடங்குச் சட்டத்தினை நீக்குதல், தமிழர் பகுதிகளில் தேடியழிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துதல் ஆகியவற்றை அரசு செய்யத் தவறியிருப்பதாக அவர்கள் கூறினர். இரவுநேர ஊரடங்கு உத்தரவும், கைதுகளும் தற்போதும் இலங்கை இராணுவத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். ஆனால், தமது போராளிகள், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பிரகாரம் இராணுவம் , பொலீஸார், சிங்கள மக்கள் ஆகிய அனைவர் மீதான தமது தாக்குதல்களையும் முற்றாக நிறுத்திவைத்திருப்பதைச் சுட்டிக் காட்டினர்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ்ப் பிரதிநிதிகள் கூட்டாக முன்வைத்த அரச யுத்தநிறுத்த மீறல்கள் தொடர்பான அறிக்கை
 

பேச்சுவார்த்தையில் பங்கெடுத்த தமிழர் தரப்பினரின் ஆறு பிரதிநிதிகளும் இணைந்து கூட்டாக அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தார்கள். அது வருமாறு,

 

தமிழ் விடுதலை அமைப்புக்களின் இணைந்த முன்னணியினர் விடுக்கும் அறிக்கை, 09/07/1985

 

இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் யுத்த நிறுத்த மீறல்கள் குறித்த எமது முறைப்பாடுகள்

 

தமிழரின் பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்கு முயன்றுவரும் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியையும், பேச்சுவார்த்தைக்கான உதவிகளை நல்கிவரும் இந்தியாவின் நற்பண்பினையும் பாராட்டும் அதேவேளை, தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கக் கூடிய சமரசப் பேச்சுவார்த்தைகளுக்கு அமைவாக தமிழர் தாயகத்தில் அமைதியான சூழ்நிலையினை ஏற்படுத்த எமது தரப்பிலிருந்து அனைத்துவிதமான ஆயுத நடவடிக்கைகளையும் நாம் முற்றாக நிறுத்தி வைத்திருக்கிறோம் என்பதையும் நாம் கூறிக்கொள்கிறோம். ஆனால், யுத்தநிறுத்தம் தொடர்பாக தனது கடமைகளைச் செவ்வண செய்வேன் என்று வாக்குறுதியளித்த இலங்கையரசாங்கம் இன்றுவரை அதனைச் செய்யாது, தொடர்ச்சியாக யுத்தநிறுத்தத்தினை மீறிச் செயற்பட்டு வருகிறது என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறோம். இலங்கையரசாங்கத்தின் படைகள் தமிழர்களுக்கெதிரான வன்முறைகளிலும், அச்சுருத்தும் செயற்பாடுகளிலும் இன்றுவரை ஈடுபட்டே வருகின்றனர். இலங்கையரச இராணுவத்தினரால் செய்யப்பட்டுவரும் போர்நிறுத்த மீறல்கள் குறித்த சில விடயங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம்.

1. தமிழ் மீனவர்கள் மீதான வன்முறைகள் : இலங்கையரசாங்கம் கடல்வலயத் தடையினை பகுதியளவில் மீளப்பெற்றுக்கொள்வதாக பகிரங்கமாக அறிவித்திருக்கும்போதிலும், அவர்களின் கடற்படையினர் தொடர்ந்தும் எமது மீனவர்கள் மீது அச்சுருத்தல், கைதுசெய்தல், தாக்குதல் நடத்துதல், சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் ஆகிய செயற்பாடுகளில் ஈடுபட்டே வருகின்றனர். வல்வெட்டித்துறை, தொண்டைமானாறு, பருத்தித்துறை, தாளையடி மற்றும்  முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் தொழிலுக்குச் சென்றவேளை அவர்களை முட்கம்பிகளாலும், இன்னும் பிற ஆயுதங்களாலும் கடுமையாகத் தாக்கியும், அவர்களின் படகுகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தும், அவர்களின் வாழ்வாதாரத்தைத் திருடியும் கடற்படையினர் அட்டகாசம் புரிந்து வருகின்றனர். 

2. தமிழ் மக்கள் மீதான படுகொலைகளும், வன்முறைகளும் : யுத்தநிறுத்தத்தினைத் தான் கடைப்பிடிக்கத் தொடங்கியிருப்பதாக இலங்கையரசாங்கம் அறிவித்த வாரத்த்திற்கு அடுத்த வாரத்தில் மட்டுமே பல இளைஞர்களை இலங்கையரசாங்கம் படுகொலை செய்திருக்கிறது. இவ்வாறு படுகொலைசெய்யப்பட்ட இளைஞர்களில் ஆயுதங்கள் இன்றி நடமாடிய‌ தமிழ் விடுதலை அமைப்புக்களைச் சேர்ந்த இளைஞர்களும் அடங்கும். இப்படுகொலைகளை எந்தத் தூண்டுதலும் இன்றியே இலங்கையரசாங்கம் செய்துவருகிறது. ஆனி 18 ஆம் திகதியிலிருந்து ஆடி 8 வரையான காலப்பகுதியில் இலங்கையரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் படுகொலைகளின் விபரங்கள் வருமாறு,

 

a) மன்னார் கொக்குடையார் பகுதியில் நான்கு தமிழ் இளைஞர்களைச் சுட்டுப் படுகொலை செய்த இராணுவத்தினர், அவர்களின் உடல்களை எரித்து அடையாளம் காணமுடியாதவாறு செய்திருக்கிறார்கள். 

b) முன்னாகத்தில் உந்துருளியில் பயணம் செய்த இரு இளைஞர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோக செய்த இராணுவத்தினர், ஒருவரைக் கொன்று, மற்றையவரைக் காயப்படுத்தியிருக்கிறார்கள். காயப்பட்டவர் தப்பிச் சென்றுவிட, கொல்லப்பட்டவரது உடலைஅடையாளம் காணமுடியாத வகையில் இராணுவத்தினர் எரியூட்டியிருக்கிறார்கள்.

 c) மூதூரில் இராணுவத்தால் இழுத்துசெல்லப்பட்ட இரு இளைஞர்கள் கொல்லப்பட்டு, முகாமினுள்ளேயே எரியூட்டப்பட்டிருக்கிறார்கள்.

d) மண்டூரில் நான்கு இளைஞர்களை இலங்கை இராணுவத்தினர் கைதுசெய்து சென்றிருக்கிறார்கள்.

 e) மட்டக்களப்பு தாந்தாமலைப் பகுதியில் உழவு இயந்திரம் ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்த விவசாயிகள் மீது உப - பொலீஸ் பரிசோதகர் பியசேனவும் அவரது பொலீஸ் அணியினரும் நடத்திய தாக்குதலில் பல விவசாயிகள் படுகாயமடைந்திருப்பதோடு, அவர்கள் பயணம் செய்த உழவு இயந்திரமும் பொலீசாரினால் முற்றாக எரித்து நாசமாக்கப்பட்டிருக்கிறது.

 f) மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பகுதியில் தமிழர்களுக்குச் சொந்தமான 50 வீடுகள் சிங்களவர்களால் எரித்து அழிக்கப்பட்டிருக்கின்றன. யுத்த நிறுத்தத்தினை இலங்கையரசாங்கம் கடைப்பிடிப்பதாக அறிவித்ததிலிருந்து இவ்வாறு அழிக்கப்பட்டிருக்கும் நான்காவது கிராமம் இதுவென்பது குறிப்பிடத் தக்கது.

 g) மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பகுதியில் இரு இளைஞர்களைத் துரத்திச் சென்று, அவர்களைக் கைதுசெய்ய முடியாது போன கோபத்தில், அப்பகுதியால்ச் சென்ற பல தமிழர்களை இராணுவத்தினர் கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கிறார்கள்.

 h) ஆனையிறவு முகாமிலிருந்து கிளிநொச்சி நோக்கிச் செல்லும் வழியில் காணப்பட்ட தமிழ் மக்கள் மீது பொலீஸ் விசேட அதிரடிப்படையினர் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்து தமிழ் மக்களை அச்சுருத்தும் விதமாக நடந்திருக்கிறார்கள்.

 i) மட்டக்களப்பு மாவட்டத்தின் கும்புறுமூலைப் பகுதியில் அரச அச்சகத்திற்குச் சொந்தமான கட்டிடம் ஒன்று திடீரென்று இராணுவச் சோதனைச் சாவடியாக மாற்றப்பட்டிருப்பதோடு இதனை அமைப்பதற்கு தமிழ் மக்களை 16 பாரவூர்திகளில் இழுத்துவந்த இராணுவத்தினர் கொடுமைப்படுத்தியிருக்கின்றனர்.

தமிழ் மக்கள் மீதும், ஆயுதம் தரிக்காத போராளிகள் மீது இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் படுகொலைகளும், தாக்குதல்களும் தற்போதும் நடந்துகொண்டே வருகின்றன.

 

3. வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலை : யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் அடக்குமுறைகள் சற்றுத் தளர்த்தப்பட்டுள்ளபோதிலும், வடக்குக் கிழக்கின் ஏனைய பகுதிகளில் இராணுவத்தினரின் அடக்குமுறையும், கெடுபிடிகளும், கண்காணிப்பு நடவடிக்கைகள் என்கிற பெயரில் நெருக்குவாரங்களும் தற்போது அதிகரித்தே காணப்படுகின்றன. குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை அச்சுருத்தி, பயங்கரமான சூழ்நிலையில் வைத்திருப்பதற்காக வேண்டுமென்றே குடிமனைகள் ஊடான ரோந்துக்கள், வீதிதடைகள், தேடியழிக்கும் நடவடிக்கைகள், கைதுகள், தாக்குதல்கள் என்பன இராணுவத்தினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் நடமாட்டத்திற்கு தடைசெய்யப்பட்ட பகுதிகளை மீளப்பெற்றுக்கொள்கிறோம் என்று அறிவிக்கப்பட்ட பின்னரும் இவை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

4. பெருந்தோட்டப் பகுதிகளில் இலங்கை அரசாங்கத்தினால் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டிருக்கும் பதற்றமான சூழ்நிலை: பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் தமிழர்களின் சுதந்திரமான நடமாட்டம் அரசாங்கத்தால் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதோடு, இப்பகுதிகளிலிருந்து வெளியே செல்வோரும், உள்ளே நுழைவோரும் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு, அச்சுருத்தப்பட்டு வருகிறார்கள். ஏறக்குறைய ஒரு முற்றுகை நிலையிலேயே பெருந்தோட்டத் தமிழ்ப்பகுதிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இப்பகுதிகளுக்கும் வெளியிடங்களுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதோடு, பல தமிழர்களை காரணமின்றிக் கைதுசெய்து தடுத்து வைத்திருக்கிறது இலங்கையரசாங்கம்.

"மேற்கூறப்பட்ட இலங்கையரசின் அப்பட்டமான யுத்தநிறுத்த மீறல்களுக்கு மேலதிகமாக, தான் ஏற்றுக்கொண்ட இரு விடயங்களான தமிழ் அரசியல்க் கைதிகளை விடுதலை செய்வது, தமிழ்ப் பிரதேசங்கள் மீதான ஊரடங்கு உத்தரவினை நீக்கிக்கொள்வது ஆகியவற்றையும் செயற்படுத்த இலங்கையரசாங்கம் பிடிவாதமாக மறுத்தே வருகிறது". 

 "இலங்கையரசாங்கத்திற்கும், தமிழ் விடுதலை அமைப்புக்களுக்கும் இடையே செய்யப்பட்டிருக்கும் பரஸ்பர யுத்தநிறுத்தத்திற்கு அமைவாக, இலங்கையரசாங்கம் உடனடியாக யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தனது கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம்". 

"யுத்தநிறுத்தம் கடைப்பிடிக்கப்படவேண்டிய காலப்பகுதியில் மேலதிகமாக ஆட்களையோ ஆயுதங்களையோ தருவித்தல் ஆகாது என்கிற நிபந்தனையினையும் மீறி, இலங்கையரசாங்கம் தொடர்ச்சியாக இராணுவத்தினரையும், ஆயுத தளபாடங்களையும் குவித்துவருகிறது என்பதையும் நாம் அறியத் தருகிறோம். அண்மையில்க் கூட பாக்கிஸ்த்தானிடமிருந்து நான்கு தாக்குதல் உலங்குவானூர்திகளையும், சீனாவிடமிருந்து 18 பீரங்கிப் படகுகளையும் இலங்கையரசாங்கம் தருவித்திருக்கிறது".

 

தமிழ்ப் பிரதிநிதிகளின் கூட்டறிக்கைக்குப் பதிலளித்த இலங்கையரசாங்கத்தின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் ஹெக்டர் ஜயவர்த்தன, ஊரடங்கு உத்தரவு மற்றும் அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஆராய்ந்து பிற்பகலுக்குள் பதில் ஒன்றினைத் தருவதாகக் கூறினார். மதியவேளை தனது சகோதரரும், ஜனாதிபதியுமான ஜெயாருடன் நேரடித் தொலைபேசியூடாகப் பேசிய ஹெக்டர், அரசாங்கம் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டத்தை அடுத்தநாள்  நீக்கிக்கொள்ளவும், அரசியற்கைதிகளாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 1,197 தமிழர்களில் 643 பேரை இருநாட்களின் பின்னர் விடுதலை செய்யவும் ஒத்துக்கொண்டிருப்பதாக பேச்சுவார்த்தை மேசையில் அறிவித்தார். 

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதிகாரங்களற்ற வெற்று மாவட்ட சபைகளை தீர்வாக முன்வைத்த அரசாங்கமும் அதிருப்தியடைந்த தமிழர் தரப்பும்
 

பேச்சுவார்த்தையின் இரண்டாம் நாளின் முதற்பாதி இரு அடிப்படை விடயங்கள் தொடர்பாக விவாதிப்பதில் செலவிடப்பட்டது. தமிழர் தரப்பு முன்வைத்த கேள்வியான பேச்சுக்களில் அரசு கொண்டிருக்கும் ஆர்வம், அரச தரப்பு முன்வைத்த தமிழர் தரப்புப் பிரதிநிதிகளின் சட்டபூர்வ அங்கீகாரம் தொடர்பான கேள்வி, இருதரப்பும் ஒருவர் மீது மற்றையவர் முன்வைத்த யுத்த நிறுத்த மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் ஆகியவை விவாதிக்கப்பட்டன. 

அன்று பிற்பகலில் அரசியல் தீர்வு தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அரசாங்கத்தின் தீர்வை "புதிய தீர்வு" எனும் பெயரில் ஹெக்டர் ஜெயவர்த்தன முன்வைத்தார். அரசின் தீர்வினை முன்வைத்துப் பேசிய ஹெக்டர், இறுதித் தீர்வு 1978 ஆம் ஆண்டின் ஒற்றையாட்சிக் கோட்பாட்டினையும், சர்வ அதிகாரம் பொருந்திய ஜனாதிபதி முறைமையினையும் முற்றாக ஏற்றுக்கொண்டதாக அமைதல் அவசியம் என்று கூறினார். 

மேலும், தான் முன்வைக்கும் தீர்வு 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டு பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட "அதிகாரப் பகிர்வின் அடிப்படையில்" அமைந்திருக்கும் என்றும் கூறினார்.சர்வகட்சி மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இரு ஆவணங்களை சபையில் சமர்ப்பித்த ஹெக்டர், தமிழ்த் தரப்பினர் அவற்றைக் கவனமாக படித்து, அரசாங்கத்துடன் சேர்ந்து அத்தீர்வினை அமுல்ப்படுத்த உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆனால், அரசு தரப்பு "புதிய தீர்வு" எனும் பெயரில் முன்வைத்த தீர்வு உண்மையிலேயே 1984 ஆம் ஆண்டு மார்கழி 4 ஆம் திகதி ஜெயவர்த்தன முன்வைத்த தீர்வேயன்றி வேறில்லை என்று அமிர்தலிங்கம் குறிப்பிட்டார். ஜெயாரினால் முன்வைக்கப்பட்ட அத்தீர்வு மாவட்ட / பிராந்திய சபைகளுக்கான அதிகாரங்களை எப்படிப் பரவலாக்குவது என்பது குறித்து அரசியலமைப்பில் செய்யப்படக்கூடிய பத்தாவது திருத்தம் குறித்தே பேசியிருந்தது. ஆகவே, இத்தீர்வினை ஜெயார் முன்வைத்தபோதே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அதனை நிராகரித்திருந்ததுடன் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்க அவை எவ்விதத்திலும் போதுமானவை அல்லவென்றும் விமர்சித்திருந்தது என்றும் அமிர்தலிங்கம் கூறினார். 

large.Conferencetable.jpg.18a0ffc0dbffc4779333c9ae97af1c25.jpg

திம்பு பேச்சுவார்த்தை மேசை, தமிழர் தரப்பு இடதுபுறத்தில். வலது புறத்தில் சிங்களத் தரப்பு

 

இலங்கை முன்வைத்த தீர்வு நகல் குறித்து மூன்றாம் நாளான ஆடி 10 ஆம் திகதி ஆராய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. அன்றைய நாள் முடிவடையும்போது பேச்சுக்களில் ஈடுபட்ட இரு தரப்பும் இணைந்து அறிக்கையொன்றினை வெளியிடுவதென்று முடிவானது. அதன்படி 8 பேர் அடங்கிய கூட்டு பேச்சுவார்த்தைக்குழுவில் ஐந்து அரச தரப்புப் பிரதிநிதிகளும், மூன்று தமிழர் தரப்புப் பிரதிநிதிகளும் இடம்பெற்றிருந்தனர். மேலும், பூட்டான் அரசாங்கத்தினூடாகவே இந்தக் கூட்டறிக்கையினை வெளியிடலாம் என்று இக்கூட்டுக் குழு முடிவெடுத்தது.

 

இப்பேச்சுவார்த்தைகளுக்கு கொழும்பு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் மூன்றாம் நாள் பேச்சுவார்த்தைகளின்போது சர்ச்சைக்குரிய பேசுபொருளாக மாறியது. கொழும்பிலிருந்து வெளிவரும் ஊடகங்களில் அரச தரப்பினை ஆதரித்தும், நியாயப்படுத்தியுமே செய்திகள் வெளிவந்தமையினால், தமிழர் தரப்பு இதுகுறித்து தனது ஆட்சேபணையினை தெரிவித்தது. குறிப்பாக, தமிழ்ப்பிரதிநிதிகள் தொடர்பாக விளித்தபோது அவர்களைப் பயங்கரவாதிகள் என்றே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தொடர்ச்சியாக அழைத்து வந்தது. இதனையடுத்து, இதுகுறித்து தாம் நடவடிக்கை எடுப்பதாக அரசு தரப்பு தெரிவித்தது.

மூன்றாம் நாளின் பெரும்பாலான பகுதி அரசுதரப்பு முன்வைத்த தீர்வு தமிழர்களின்  அபிலாஷைகளைத் தீர்க்கப் போதுமானவை அல்லவென்று தமிழர் தரப்பு அதன் மீது தனது விமர்சனங்களையும், ஆட்சேபணைகளையும் முன்வைப்பதிலேயே கழிந்தது. அரசு முன்வைத்த தீர்வு மாவட்ட சபைகள் மற்றும் பிராந்திய சபைகளையே அதியுச்ச அதிகாரப் பரவலாக்க அலகுகள் என்று குறிப்பிட்டிருந்ததுடன், கிராம மட்டத்திலான கிராமாதோய சபைகள் தொடங்கி ஐந்து அடுக்கு சபைகள்  குறித்தும், இரண்டாம் சபை குறித்தும் அது பேசியது. அரசாங்கத்தின் மிகக் கீழ்மட்ட நிர்வாக அலகுகளாக கிராம சபைகளே இருக்கும். நாடு முழுவதுமாக 4500 கிராம சபைகள் உருவாக்கப்படும். ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்கள் கிராம சபைகளில் உறுப்பினராக இணைந்துகொள்ளலாம். அரசியலிலிருந்து விலகி நிர்வகிக்கப்படும் இச்சபைகள் அந்தந்தக் கிராமங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்தும். 

பிரதேச சபைகள் இரண்டாம் நிலைச் சபைகளாக இருக்கும். உள்ளூர் அரசாங்கத்தின் செயற்பாடுகளை இச்சபைகள் மேற்கொள்ளும். தேர்தல் மூலம் தேர்வுசெய்யப்படும் இச்சபைகள் நாடுமுழுவதும் உள்ள 250  பிரதேசச் சபைச் செயலகத் தொகுதிகளிலும் இருக்கும். 

மாவட்ட சபைகள் அரசாங்கத்தின் மூன்றாம் நிலை நிர்வாக அலகுகளாக இருக்கும். நாட்டிலிருக்கும் 25 மாவட்டங்களுக்கு தலா ஒவ்வொரு மாவட்ட சபை காணப்படும். மாவட்டத்தில் நடத்தப்படும் தேர்தல்கள் மூலம் இச்சபைகளுக்கான நிர்வாகிகள் தெரிவுசெய்யப்படுவார்கள். இச்சபைகளின் தலைவரும், பிரதித் தலைவரும் வாக்களர்களால் நேரடியாகவே தெரிவுசெய்யப்படலாம். தலைவரின் கீழ் அவருக்கு உதவவென அமைச்சர்கள் குழுவொன்று உருவாக்கப்படும். ஆனால், இந்த அமைச்சர்களை ஜனாதிபதியே நியமிப்பார். மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கொண்டிருக்கும் இச்சபைகளின் அமைச்சர்களுக்கான அதிகாரம் கொழும்பிலிருக்கும் தேசிய அமைச்சர்களிடமிருந்து வழங்கப்பட்டதாக இருக்கும்.

அரசாங்கத்தின் நான்காம் மட்ட அதிகாரப் பரவலாக்கல் அலகுகளாக மாகாணசபைகள் முன்வைக்கப்பட்டன. ஒன்றிற்கு மேற்பட்ட மாவட்ட சபைகளைக் கொண்டு மாகாண சபை அமைக்கப்படும். ஓரிரு மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் விருப்பு தேர்தல் மூலமாகவோ அல்லது சர்வஜன வாக்கெடுப்பு மூலமாகவோ அறியப்பட்டு மாவட்டசபைகள் இணைக்கப்படலாம். இந்த மாவட்ட சபைகளில் முன்னர் பணியாற்றிய ஊழியர்கள் இணைக்கப்பட்ட மாகாணசபைகளில் பணியாற்றலாம். மாவட்ட சபைகளுக்கு இருக்கும் அதே அதிகாரங்களே மாகாண சபைகளுக்கும் இருக்கும்.  

தேசிய சபைகளே நாட்டின் அதியுயர் அதிகாரப் பரவலாக்கல் சபையாகக் காணப்படும். பாராளுமன்றத்திற்கு அடுத்தநிலையில் இச்சபை காணப்படும் ஆதலால் இது இரண்டாவது சபை என்று அழைக்கப்படும். 75 உறுப்பினர்கள் கொண்ட இந்தச் சபையில் மாவட்ட சபையின் தலைவர்களும் உபதலைவர்களும் 50 இடங்களை நிரப்ப, மீதி 25 இடங்கள் ஜனாதிபதியால் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்படும். 9 மாவகாணங்களைச் சேர்ந்த சேர்ந்த தலா இருவரும், இன்னும் 7 பேரும் ஜனாதிபதியினால் தெரிவுசெய்ப்படுவர். இச்சபைகள் பாராளுமன்றத்தில் ஆலோசனைகளைப் பரிந்துரை செய்ய மட்டுமே அனுமதி வழங்கப்படும். புதிதாக சட்டங்களை நிறைவேற்றவோ அல்லது பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்படும் சட்டங்களைத் தடுக்கும் அதிகாரமோ இவற்றிற்குக் கிடையாது.

மாவட்ட சபைகளுக்கான அதிகாரங்கள் வெகு சொற்பமானவை. பாராளுமன்றத்தில் அமைச்சர்களினால் பகிரப்படும் பலமிழக்கப்பட்ட அதிகாரங்களை இவர்கள் பயன்படுத்தலாமேயன்றி, இவர்களால் பாராளுமன்றத்தை மீறிச் செயற்பட முடியாது. சொந்தமாக சட்டமியற்றும் அதிகாரமற்ற இச்சபைகள் பாராளுமன்றத்திடம் தமது தேவைகளைப் பரிந்துரை செய்யலாம். ஆனால், அவை நிராகரிக்கப்படுவதும், அங்கீகரிக்கப்படுவதும் பாராளுமன்றத்தின் கைகளிலேயே இருக்கும். 

ஹெக்டர் முன்வைத்த ஆவணங்களைத் தான் மேலோட்டமாகப் பார்த்ததாகக் கூறிய சித்தார்த்தன், மாவட்ட சபைகளுக்கென்று அரசாங்கம் வழங்கவிருந்த அதிகாரங்கள் எந்தவித முக்கியத்துவமும் அற்றவையாக இருந்ததாகக் குறிப்பிட்டார். மேலும், அந்த அதிகாரங்களைக் கூட தேவையான போது விலக்கிக்கொள்ளும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கும், ஜனாதிபதிக்கும் கொடுக்கப்பட்டிருந்தது என்றும் கூறுகிறார்.

"நாம் அவர்கள் முன்வைத்த பட்டியலைப் பார்வையிட்டோம். எமக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. மிகையாகப் புகழப்பட்ட, சோடிக்கப்பட்ட நகர சபைகளையே அரசாங்கம் மாவட்ட சபை அடிப்படையிலான தீர்வு என்று முன்வைத்திருந்தது. நீங்களும் வேண்டுமானால் அதனைப் படித்துப் பார்த்து உங்களின் கருத்தைச் சொல்லுங்கள்" என்று என்னிடம் அந்த நகலைக் கொடுத்தார்.

ஹெக்டர் முன்வைத்த அரச பரிந்துரைக்கு மிகுந்த அதிருப்தியுடன் பதிலளித்த அமிர்தலிங்கம், "தமிழர்களை இனிமேலும் ஏமாற்ற முயலவேண்டாம்" என்று கூறினார். "மொழிப்பிரச்சினை, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை தொடர்பாக மிக விரிவாக சர்வகட்சி மாநாட்டிலேயே நாம் விவாதித்திருக்கிறோம். நாம் இப்போது செய்யவேண்டிய அதிகாரத்தைப் பரவலாக்குவது குறித்து முடிவெடுப்பதுதான். சர்வகட்சி மாநாட்டில் அரசு முன்வைத்த பரிந்துரைகள் தமிழரின் அபிலாஷைகளை நிறைவேற்ற சிறிதளவிலும் போதுமானவை அல்லவென்பதை நாம் உறுதியாகக் கூறியிருந்தோம். ஆகவே, உங்கள் தீர்வை நீங்கள் மேம்படுத்டுவது அவசியம். ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்று முன்வைக்கப்படும் பட்சத்தில் தமிழர்கள் அதனை பரிசீலித்துப் பார்க்கத் தயாராக இருக்கிறார்கள்" என்றும் கூறினார்.

large.AmirandSiva.jpg.637d0897bcee3d3309d870a4d008c701.jpg

அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும்

அமிர்தலிங்கத்தின் பதிலினையடுத்து, "அப்படியானால், உங்களின் தீர்வினை முன்வைய்யுங்கள் பார்க்கலாம்?" என்று ஹெக்டர் அமிர்தலிங்கத்தைப் பார்த்துக் கூறினார். இக்கோரிக்கையினை தமிழ்த் தரப்பு ஒருமித்து நிராகரித்தது. "தமிழரின் கோரிக்கையான தனிநாட்டிற்கு நிகரான தீர்வினை முன்வைப்பது அரசாங்கத்தின் கடமை. தமிழ் மக்கள் 1977 ஆம் ஆண்டு எமக்கு வழங்கிய ஆணையான தனிநாட்டில் நாம் இன்னமும் உறுதியாகவே நிற்கிறோம். ஆனால், தமிழ் மக்கள் கெளரவத்துடனும், சுதந்திரத்துடனும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழக்கூடிய வகையில் தீர்வு ஒன்று முன்வைக்கப்படும் பட்சத்தில் அதனைப் பரிசீலிக்கத் தயாராகவே இருக்கிறோம்" என்று அவர்கள் கூறினார்கள்.

இலங்கையரச பிரதிநிதிகள் முன்வைத்த தீர்விற்கான பரிந்துரைகளையடுத்து விரக்தியடைந்த தமிழ்த் தரப்பு சந்திரசேகரனிடம் தாம் பேச்சுவார்த்தைகளிலிருந்து வெளிநடப்புச் செய்யப்போவதாகக் கூறியது. அரசாங்கம் தரமான தீர்வொன்றினை முன்வைக்கும் என்கிற நம்பிக்கையிலேயே திம்புப் பேச்சுவார்த்தைக்கு நாம் வந்தோம். ஆனால், தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வினால் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி முற்றாக ஏமாற்றமடைந்திருக்கிறது என்று சந்திரசேகரனைப் பார்த்து அமிர்தலிங்கம் கூறினார். தில்லியுடன் இதுகுறித்துக் கலந்துரையாடிய சந்திரசேகரன், இந்தியாவும் இலங்கை முன்வைத்திருக்கும் தீர்வு குறித்து திருப்தியடையவில்லையென்று கூறியதுடன், பேச்சுக்களிலிருந்து வெளிநடப்புச் செய்யவேண்டாம் என்றும் தமிழ்த் தரப்பைக் கேட்டுக்கொண்டார்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையரசாங்கம் முன்வைத்த தீர்வுத்திட்டத்தினை முற்றாக நிராகரித்து, நான்கு அம்சக் கோரிக்கையின் அடிப்படையிலான தீர்வினை கோரிய தமிழ்த் தரப்பு

  நான்காம் நாள் பேச்சுக்கள் பெரும் குழப்பத்திற்குள் நுழைந்தன. ஜெயவர்த்தன இன்னொரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றினார். பொலீஸாரைக் கொண்டு அரங்கேற்றப்பட்ட இச்சதியில் கொழும்பில் குண்டுத்தாக்குதலில் ஈடுபட வந்திருந்த ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தாம் கைதுசெய்திருப்பதாக ஜெயார் தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையாக சுற்றித்திருந்த இரு இளைஞர்களைக் கைதுசெய்து விசாரித்தவேளை அவர்கள் ஜனாதிபதியைக் கொல்வதற்காக ஈரோஸ் தலைமைப் பீடத்தால் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொண்டதாக பொலீஸார் அறிவித்தனர்.

ஜெயாரின் திட்டத்தின்படி, கொழும்பு ஊடகங்களும் இச்செய்தியை பெரும் எடுப்பில் வெளியிட்டிருந்தன. இதனைச் செய்தியாக்கும்போது டெயிலி நியுஸ் காரியாலயத்தில் இருந்த உற்சாககத்தினை நேரடியாக நாண் கண்டேன். மறுநாள் ஆசிரியர்த் தலையங்கம் "முறியடிக்கப்பட்ட ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சி" என்று வெளியாகியிருந்தது. தன்மீதான இந்தப் பழியை சோடிக்கப்பட்ட புரளி என்று ஈரோஸ் தலைமைப்பீடம் அறிவித்தது. பொதுத் தபாலகத்திற்குச் சென்றுகொண்டிருந்த இரு அப்பாவிகளைக் கைதுசெய்து, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் பொய்யான வாக்குமூலம் ஒன்றினை கொடுக்க வைத்தே பொலீஸார் இந்த நாடகத்தினை ஆடுகிறார்கள் என்று ஈரோஸ் அமைப்பு விளக்கியிருந்தது. 

நான்காம் நாள் பேச்சுக்கள் ஆரம்பமாகிய வேளை, அரசாங்கத்தின் பொய்யான வதந்திகுறித்து ஈரோஸ் அமைப்பினரும் ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளும் தமது ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள். "இது ஜெயாரின் புரளி" என்றும் அதனை அழைத்தார்கள்.

அன்றைய நாளின் பெரும்பகுதி யுத்தநிறுத்த மீறல்கள் குறித்து ஒருவரையொருவர் சாடுவதிலேயே கழிந்தது. யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த வாக்குவாதங்கள் முடிவடைந்த பின்னர் பேசிய ஹெக்டர் ஜெயவர்த்தன தான் முன்வைத்துள்ள யோசனைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படையாக வைத்து செயற்பட முடியும் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த தமிழ்த் தரப்பு, அதிகாரங்கள், அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு, அரசாங்கத்தின் கட்டமைப்பு என்பன குறித்த சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், தமிழர்கள் எதிர்பார்க்கும் அதிகாரங்களுக்கும், அரசால் முன்வைக்கப்படும் அதிகாரங்களுக்கும் இடையே பாரியளவு இடைவெளி காணப்படுவதாகவும் விமர்சித்தனர். 

பேச்சுக்கள் முறிவடைவதைத் தவிர்ப்பதற்காக இந்திய அரசாங்கம் தனது வெளிநாட்டமைச்சர் ரொமேஷ் பண்டாரியை திம்புவிற்கு அனுப்பியது. இரு தரப்பினருடனும் ரொமேஷ் பண்டாரி ஒன்றன் பின் ஒன்றாக பல சந்திப்புக்களை நடத்தினார்.தமிழர் தரப்புடன் பேசிய பண்டாரி, அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வு ஆலோசனையினை நிராகரிப்பதாகவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்கக்கூடிய புதியதொரு தீர்வுத்திட்டத்துடன் அரசு வரவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்து அறிக்கையொன்றினை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். இதன்மூலம் அன்று முறிவடைய‌ இருந்த பேச்சுக்களை அவரால் நீட்டிக்க முடிந்தது.

பேச்சுவார்த்தையின் ஐந்தாம் நாளான ஆடி 12 ஆம் திகதி தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசு முன்வைத்திருக்கும் தீர்வுக்கான ஆலோசனைகளை நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டனர். அறிக்கை வெளியிடப்பட முன்னர் தமிழ் மக்களைஅவமானப்படுத்தும் விதமாக இலங்கைஅயரசாங்கம் தனது தீர்வு யோசனையினை முன்வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். அமிர்தலிங்கம் ஒருபடி மேலே சென்று, அரசு முன்வைத்திருக்கும் யோசனைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார். 

தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பாக டெலோ அமைப்பின் சார்ள்ஸ் அறிக்கையினை சமர்ப்பித்தார்.

தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களுக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த எமது கோரிக்கைகளை ஜனநாயக வழியில் புரியப்படுத்த முடியாமையினாலேயே நாம் ஆயுதம் தூக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். மேலும், எமது தேசியம் மீதான சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறையும், எம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதமும், எம் மக்கள் மீதான இனவழிப்பும் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் எம் மக்களுக்கான தர்க்கரீதியான ஒரே தீர்வு தனிநாடுதான் என்கிற நிலைமைக்கு எம்மைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இதன் தர்க்கரீதியான வெளிப்பாடே ஆயுதப்போராட்டம் என்றால் அது மிகையில்லை. ஆனாலும், இலங்கையரசாங்கம் நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் அமைதியான அத்தீர்வினை பரிசீலிக்க தமிழ் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஏனென்றால், தமிழ் மக்கள் அமைதியினை விரும்பும் ஒரு மக்கள் கூட்டமாகும்.

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வு ஆலோசனைகள் எந்தவிதத்திலும் நேர்மையானதாகவோ, அமைதியை ஏற்படுத்தும் முகாந்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதை எம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. முதலாவதாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவின் தலைவர் தனது உரையில், இந்தத் தீர்வு ஆலோசனைகள் கடந்த வருடம் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் இலங்கையரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட ஆலோசனைகள் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால், பின்வரும் காரணங்களுக்காக சர்வகட்சி மாநாட்டினை நாம் முற்றாக நிராகரித்திருக்கிறோம்,

முதலாவதாக, சர்வகட்சி மாநாட்டில் பங்குகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சர்வகட்சி மாநாடு குழப்பகரமான நிலையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டவுடன் வெளியிட்ட அறிக்கையில் அதிகாரம் மிக்க பிராந்தியம் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்விற்கு அருகில்க் கூட சர்வக‌ட்சி மாநாட்டில் அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வு வரவில்லை என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தது. இரண்டாவதாக, ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்கிற வகையில், நவ பாஸிஸ இலங்கையரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இராணுவ ரீதியில் தீர்வினை வழங்கவே சர்வகட்சி மாநாட்டினை போர்வையாகப் பாவித்தது என்பதனை ஐயம் திரிபுற  நம்புகிறோம்.

மேலும், ஈழத்திற்கான தேசியப் பிரச்சினையினை இலங்கையரசாங்கம் இதுவரையில் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு சுட்டிக் காட்டுகிறது. அதற்கான காரணங்களை நாம் முன்வைக்கிறோம்,

 

1. அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், தமிழ் மக்களால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மாவட்ட ரீதியிலான அதிகாரப் பரவலாக்க அலகினை அரசு முன்வைத்திருக்கிறது.

2. அரசு முனைத்திருக்கும் தீர்வு, தமிழ் மக்களினதோ அல்லது சிங்கள மக்களினதோ சுயநிர்ணய உரிமையினை புறக்கணித்திருப்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ அல்லது அதையொத்த இன்னொரு வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ தீர்வினை மக்கள் முன் கொண்டுசெல்லும் வழிவகையினைக் கொண்டிருக்கவில்லை. மக்களின் விருப்பினை நிராகரித்திருக்கும் அரசாங்கம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு அரசியல் சட்டத்தில் திருத்தத்தினைச் செய்யலாம் என்று கூறுகிறது.இப்படிச் செய்வதனூடாக மக்கள் மீது அரசியல் யாப்பின் அடைப்படையில் உருவாக்கப்படவிருக்கும் சர்வாதிகாரத்தைத் திணிக்க முயல்கிறது. 

ஆகவே, இந்த நிலையில் மேற்கொண்டு பேச்சுக்களில் ஈடுபடுவதில் பயனில்லை என்கிற நிலைப்பாட்டிற்கு நாம் வந்திருப்பதுடன், நாடு இன்றிருக்கும் இக்கட்டான நிலைக்குக் காரணமாகியிருக்கும் அரசாங்கமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நேர்மையானதும், அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதுமான தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.  

 நிரந்தர சமாதானத்தினைக் கருத்தில்க் கொண்டு, தமிழ் மக்களால் பரிசீலித்துப் பார்க்கக் கூடிய தீர்வொன்றுடன் மீண்டும் இலங்கையரச பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பவேண்டும் என்கிற தீர்க்கமான கோரிக்கையினை நாம் முன்வைக்கிறோம்.

ஜனாதிபதி ஜெயாரைப் படுகொலை செய்ய எத்தனித்ததாக தம்மீது முன்வைக்கப்பட்ட அரசின் குற்றச்சட்டிற்கெதிரான தனது அதிருப்தியினை ஈரோஸ் அமைப்பு எழுத்துமூல அறிக்கையொன்றின் ஊடாக வெளியிட்டது. இந்தியாவின் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தைக்குழுக்களுக்கான விருந்துபசராம் ஒன்றினை வழங்கினார்.

பேச்சுவார்த்தையின் இறுதிநாளான ஆடி 13 ஆம் திகதி அரச தரப்புப் பிரதிநிதிகளுடன் பேசிய தமிழ்த் தரப்பு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய‌ தீர்வொன்றுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வு அமையவேண்டிய அடிப்படைகள் குறித்து தனது நிலைப்பாட்டினையும் முன்வைத்தது.

 

பேச்சுவார்த்தைக் குழுக்கள் இணைந்து வெளியிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திம்புப் பிரகடணம் இவ்வாறு அமைந்திருந்தது,

தமிழ்த் தரப்பு முன்வைத்த பிரகடணம்,

 

தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான அரத்தபுஷ்ட்டியான தீர்வு பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று நாம் கருதுகிறோம்,

 

1. இலங்கைத் தமிழர்களைத் தனியான தேசமாக அங்கீகரிப்பது

2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான தாயகம் இருப்பதை அடையாளம் காண்பதும் அதனை அங்கீகரிப்பதும்

3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பது

4. இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களினதும் குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பது

 

பல்வேறு நாடுகள் தமக்கு உகந்த செயற்திட்டங்கள் ஊடாக இந்த அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே அதற்குத் தீர்வாக தனிநாட்டினை முன்வைத்துப் போராடி வருகிறோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக இலங்கையரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வினை எம்மால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறோம். ஆகவே, 1985 ஆம் ஆண்டு ஆடி மாதம் 12 ஆம் திகதி நாம் வெளியிட்ட அறிக்கையின்படி இலங்கையரசாங்கம் இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு யோசனைகளை நாம் முற்றாக நிராகரிக்கிறோம்ஆனாலும், அமைதிக்கான வழிகளைத் தேடும் மக்கள் கூட்டம் எனும் அடிப்படையில், நாம் மேலே குறிப்பிட்ட நான்கு அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய புதிய தீர்வு யோசனைகளை இலங்கையரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசீலிர்த்துப் பார்க்கத் தயாராக இருப்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம்.  

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோல்வியில் முடிவடைந்த முதலாம் கட்டத் திம்பு பேச்சுவார்த்தைகள் 

sri-lanka-2_121713032139.jpg

 

இணைந்த அறிக்கை வெளியிடப்படுமுன்னர் இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். தமிழர் தரப்பினர் முன்வைத்த வாதத்தில், தமது தொடர்ச்சியான ஆட்சேபணைகளுக்குப் பின்னர் அரசதரப்பு செய்வதாக உறுதிதந்த ஊரடங்கு உத்தரவை நீக்குதல், அரசியற் கைதிகளை விடுவித்தல் ஆகிய எந்தவிடயங்களையும் அரசு செய்யவில்லை என்று கூறினர். பதிலுக்கு தமிழர் தரப்பு மீது குற்றஞ்சுமத்திய அரசுதரப்பு, தமிழர் தரப்பால் இழைக்கப்பட்டதாகக் கூறி 73 யுத்தநிறுத்த மீறல்ச் சம்பவங்களைப் பட்டியலிட்டனர். 

அங்கு பேசிய இலங்கை அரச தரப்பின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் ஹெக்டர் ஜ‌யவர்த்தன, தான் முன்வைத்த தீர்வு யோசனையினை தமிழர் தரப்பு படித்து, சாதகமான பதிலுடன் அடுத்த கட்டப் பேச்சுக்களுக்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களை ஆவணி 12 ஆம் திகதி நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது.

இந்தியாவும், இலங்கையரசும் முதலாம் கட்டப் பேச்சுக்கள் குறித்து மிகுந்த திருப்தி வெளியிட்டிருந்தன. ஆனால், தமிழ்ப் போராளி அமைப்புக்களைப் பொறுத்தவரை பேச்சுக்கள் கடுமையான அதிருப்தியைத் தோற்றுவித்திருந்தன. ஜெயவர்த்தன விரித்த வலையில் இந்தியா விழுந்துவிட்டது என்கிற பிரபாகரனின் நம்பிக்கை மென்மேலும் உறுதியடைந்தது. ஆகவே, ஆயுதப் போராட்டத்தினைத் தொடர்ந்து நடத்துவதென்று தீர்மானித்த அவர், தனது போராளிகளை அதற்கான தீவிர பயிற்சிகளில் ஈடுபடுத்தலானார்.

ஒரு பிராந்திய வல்லரசு எனும் நிலையிலிருந்து தமிழர்களின் பிரச்சினையில் மத்தியஸ்த்தம் வகிக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தினால் பேச்சுவார்த்தைகள் குறித்து இந்தியா பெருமகிழ்ச்சி அடைந்திருந்தது. தமிழ்ப் போராளி அமைப்புக்களை இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளுக்கு அழைத்துவந்ததே இந்தியாவைப் பொறுத்தவரை பெரு வெற்றியாகக் கருதப்பட்டது. சமாதானப் பேச்சுக்களின் தரகர் எனும் நிலையிலிருந்து, பேச்சுக்களில் தீவிரத்துடன் பங்குகொண்ட இன்னொரு தரப்பு என்கிற நிலைக்கு தன்னை உயர்த்தியது குறித்தும் இந்தியா மகிழ்வடைந்திருந்ததுஇதனால் இந்தியா சர்வதேச மட்டத்தில் நற்பெயரைச் சம்பாதிக்கத் தொடங்கியது. குறிப்பாக இந்தியாவின் புதிய பிரதமர் ரஜீவ் காந்திக்குப் பாராட்டுதல்கள் வந்து குவியத் தொடங்கின. தென்னாசியாவின் அமைதிக்காக இந்தியா எடுத்துவரும் செயற்பாடுகளை அமெரிக்காவும், இங்கிலாந்தும் வெகுவாகப் புகழ்ந்திருந்தன.   

பேச்சுவார்த்தைகள் முறிவடையாது, யுத்தநிறுத்தம் தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்படுவது குறித்து இலங்கையரசாங்கம் மிகுந்த திருப்தியடைந்தது. தனது இராணுவத்தைக் கட்டியெழுப்பும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பது குறித்து திருப்தியடைந்த அரசாங்கம், மன்னாரிலிருந்து முல்லைத்தீவு வரையான பகுதிகளில் முன்னரங்க இடைப்பகுதியினை (Buffer Zone) உருவாக்கி போராளிகளை வடக்கிற்குள் மட்டுப்படுத்தும்  காரியங்களில் முழுமூச்சுடன் ஈடுபடத் தொடங்கியது.

நாடு திரும்பிய ஹெக்டர் ஜெயவர்த்தன,  பேச்சுவார்த்தைகள் குறித்த விடயங்களை மந்திரிசபையில் பகிர்ந்துகொண்டார். அமைச்சர்கள் முன்னிலையில் பேசிய ஹெக்டர், போராளிகள் தொடர்ந்தும் பேச்சுக்களில் ஈடுபட இணங்கியிருப்பது சாதகமான நிலைமை என்று கூறினார். மேலும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் முன்வைக்கப்படும் தீர்வொன்றினைப் பரிசீலினைக்கு ஏற்றுக்கொள்ள போராளிகள் இணங்கியிருப்பதும் முக்கியமான திருப்பம் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், ஹெக்டர் பேச்சுவார்த்தைகள் குறித்துக் கொண்டிருந்த நம்பிக்கைகள் அவரது சகோதரரான ஜெயவர்த்தனவிற்கு உவப்பானதாக இருக்கவில்லை. ஏனென்றால், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினை இராணுவப் பலத்தின் மூலம் நசுக்கிவிடுவதே அவரது ஒரே எண்ணமாக இருந்தது. ஆகவே, தனது அரசாங்கம் நேர்மையான, சமாதானத்தை நேசிக்கின்ற அரசு என்றும், ஆனால் தமிழர்களோ  விட்டுக்கொடுப்பற்ற, பிடிவாதமான, உறுதியாக‌ முடிவெடுக்கும் திராணியற்ற தரப்பு என்றும் அரச ஊடகங்களினூடாக கடுமையான பிரச்சாரத்தில் இறங்கினார். பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சாரப் பிரிவின் தலைவருடன் பேசிய ஜெயார், இந்தியா மீதும் பிரச்சாரத்தினை முன்னெடுக்க உத்தரவிட்டதுடன், பேச்சுவார்த்தைகளில் இந்தியாவின் பாத்திரத்தைக் கேள்விகேட்டதுடன், இந்தியாவை, போராளிகளைக் கட்டுப்படுத்தி, வழிக்குக் கொண்டுவரும் திராணியற்ற "பிராந்திய வல்லரசு" என்று எள்ளிநகையாடும் பிரச்சாரத்திலும் ஈடுபடலானார்.

capitalook-3_042313103503.jpg

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான ரொமேஷ் பண்டாரி இலங்கைத் தமிழரின் பிரச்சினை தொடர்பாக ஆளமான அறிவைக் கொண்டிருக்கவில்லை என்பதுடன் தமிழரின் பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டும் என்கிற உண்மையான அக்கறையும் அவருக்கு இருக்கவில்லை. புதிய பிரதமரான ரஜீவ் காந்திக்கு சர்வதேசத்திலிருந்து வந்துகொண்டிருக்கும் மழையில் தனக்கும் சிறுதுளி கிடைக்கவேண்டும் என்பதும், ரஜீவ் காந்தியின் பார்வையில் தான் தொடர்ந்தும் இருக்கவேண்டும் என்பதையும் தவிர ரொமேஷ் பண்டாரிக்கு வேறு சிந்தனைகள் இருக்கவில்லை. ஆகவே, இதனை நன்கு தெரிந்துவைத்திருந்த ஜெயவர்த்தனவும் அவரது ஆலோசகர்களும், பேச்சுவார்த்தைகள் மூலம் தமிழர்களுக்கு மிகச் சொற்பமான சலுகைகளைத் தருவதன் மூலம் யுத்தநிறுத்தகாலத்தை நீட்டிக்கவும், தமது இராணுவத்தைக் கட்டியெழுப்பவும் திடசங்கற்பம் பூண்டிருந்தனர். ஆனால், அவர்கள் தமது திட்டத்தில் ஒரு மனிதர் குறித்து கவனமெடுக்க முற்றாகத் தவறியிருந்தனர். அந்த மனிதர்தான் பிரபாகரன்.

ஆனால், ஜெயவர்த்தனவின் இராணுவ பலத்தினைக் கொண்டு தமிழரின் விடுதலை யாகத்தை முற்றாக அணைத்துவிடலாம் எனும் திட்டத்திற்குச் சவாலாக இருக்கப்போகும் ஒரே மனிதர் பிரபாகரன் தான் என்பதை லலித் அதுலத் முதலி நன்றாக‌ அடையாளம் கண்டிருந்தார். 1984 ஆம் ஆண்டு கார்த்திகை 24 அம் திகதி அவரது பிறந்தநாளுக்கு கொள்ளுப்பிட்டியில் அமைந்திருந்த அவரது வீட்டிற்குச் சென்றிருந்தவேளை அவர் என்னிடம் ஒரு விடயத்தைக் கூறினார். "சபா, உங்களுக்குத் தெரியுமா? பிரபாகரனுக்கும் இன்றைக்குத்தான் பிறந்தநாள். நாம் ஒருவரருக்கொருவர் எதிராகப் போர் புரிகிறோம், ஆனால் எம்மில் எவர் வெல்லப்போகிறோம் என்று எமக்குத் தெரியாது" என்று கூறியிருந்தார்.

 லலித் அதுலத் முதலி குறித்த இன்னும் இரு விடயங்களை நான் பகிர்ந்துகொள்கிறேன். 1984 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் யாழ்ப்பாணத்து மக்களை பிரபாகரனிடத்திலிருந்து அந்நியப்படுத்தும் உளவியற்போரினை லலித் அதுலத் முதலி ஆரம்பித்தார். அதன்படி, யாழ்ப்பாணத்தில் பதுங்கியிருந்து செயற்பட்டு வரும் பயங்கரவாதிகளை இராணுவத்தினர் தேடியழிப்பதை ஏதுவாக்குவதற்காக , அப்பகுதிகளிலிருந்து தமிழர்கள் அனைவரும் சிறிதுகாலத்திற்கு வெளியேறவேண்டும் என்று அறிவித்திருந்தார்.  யாழ்ப்பாணத்திலிருந்து தற்காலிகமாக வெளியேறி, ஏனைய இடங்களில் தமது நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ தங்குவதன் மூலம் யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் அரசுடன் நிற்பதாகவும், பயங்கரவதிகளிடமிருந்து தம்மை அந்நியப்படுத்தியிருப்பதாகவும் காட்டமுடியும் என்றும் அவர் கூறியிருந்தார். இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஏனென்றால், எனது தந்தையார் யாழ்ப்பாணத்திலிருந்த எமது பூர்வீக வீட்டில் வாழ்ந்துவந்தார். எனது சகோதரியும் அவரது நான்கு குழந்தைகளும் அவ்வீட்டிலேயே வசித்து வந்தனர். எனது மாமியார், மைத்துனி உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் அவ்வீட்டிலேயே வாழ்ந்துவந்தனர்.

லலித் அதுலத் முதலியை நான் பின்னாட்களில் சந்தித்தபோது, அவரது அறிவித்தலினால் எனது தந்தையார்ர், மாமியார் போன்ற முதியவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்துப் பேசினேன். எனக்குப் பதிலளித்த லலித், "பிரபாகரனை சாதாரண‌ தமிழ்ப்பொதுமக்கள் வெறுக்க வேண்டும் என்பதற்காகவே இதனைச் செய்கிறேன்" என்று அவர் கூறினார். நான் எனது தந்தையாருடன் தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டபோது, "நடக்கிறது நடக்கட்டும், நாங்கள் இங்கேயே பொடியங்களுடன் இருக்கப்போகிறோம்" என்று கூறினார். எந்தத் தமிழ் மக்களைப் பிரபாகரனிடமிருந்து அந்நியப்படுத்திவிடலாம் என்கிற எதிர்பார்ப்புடன் லலித் அதுலத் முதலி தனது அறிவித்தலினை மேற்கொண்டாரோ, அந்த அறிவிப்பு அதற்கு நேர்மறையான விளைவினை ஏற்படுத்தியிருந்தது. பிரபாகரனை மக்கள் இன்னும் அதிகமாக நேசிக்கும் நிலையினை அது உருவாக்கியிருந்தது.

"அவங்கள் ஆருக்காகப் போராடுறாங்கள்? எங்கட உரிமைகளுக்காகத்தானே போராடுறாங்கள்? அவங்களை விட்டுட்டு எங்களால போக ஏலாது" என்று எனது தந்தை தீர்க்கமாகக் கூறினார். 

பின்னர் 1985 ஆம் ஆண்டு தை முதலாம் திகதி, ஆயிரம் மீட்டர்கள் கொண்ட, மக்கள் செல்லமுடியாத பாதுகாப்பு வலயங்களை லலித் அறிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்திருக்கும் இராணுவ முகாம்களில் இருந்து ஆயிரம் மீட்டர்கள் வட்டத்திற்குள் இருக்கும் மக்கள் உடனடியாக வெளியேறிவிட வேண்டும். அப்படி வெளியேறாத பட்சத்தில் உங்களுக்கு நடக்கவிருக்கும் அழிவுகளுக்கு நீங்களே பொறுப்பு என்று வானொலியூடாக‌ அறிவித்தார். ஆனால், மக்கள் அவரது அறிவித்தலை கண்டுகொள்ளவில்லை. ஆகவே, தனது விமானப்படையூடாக தமிழில் அச்சிடப்பட்ட அறிவித்தல்களை பொதுமக்கள் வாழிடங்கள் மீது அவர் கொட்டினார். அதனையும் மக்கள் உதாசீனம் செய்தனர்.ஒருவாரத்தின் பின்னர் மீண்டும் தமிழில் அச்சிடப்பட்ட எச்சரிக்கைகள் வானிலிருந்து அவரது விமானப்படையினரால் கொட்டப்பட்டன. அவ்வாறு அச்சிடப்பட்ட எச்சரிக்கை ஒன்றினை பிரச்சாரப்படுத்துவதற்காக டெயிலி நியூஸ் காரியாலயத்தின் ஆசிரியரான மணிக் டி சில்வாவுக்கும் லலித் அனுப்பி வைத்தார். அது தமிழில் அச்சிடப்பட்டிருந்தமையினால், என்னிடம் தந்து, "லலித் அனுப்பியிருக்கிறார், அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது?" என்று என்னைப்பார்த்துக் கேட்டார் மணிக். அதனைப் படித்துவிட்டு நான் சிரித்துக்கொண்டேன்.

"ஏன் சிரிக்கிறீர்கள்?" என்று என்னிடம் வினவினால் மணிக். "அதில் ஒரு பிழை இருக்கிறது" என்று நான் பதிலளித்தேன். "என்ன பிழை?" என்று மீண்டும் அவர் கேட்டார். "இந்தத் துண்டுப்பிரசுரத்தின் அடியில் பிரபாகரன் ஒப்பமிட்டிருக்கிறார். ஆனால் தனது பெயரை பிரபாகரம் என்று தவறுதலாக எழுதியிருக்கிறார் என்பதனால்ச் சிரித்தேன்" என்று பதிலளித்தேன். "சிங்களவர்கள் மட்டுமே இவ்வாறான தவறுகளை புரியமுடியும். ஒரு தமிழரோ, முஸ்லீமோ "ன்" என்கிற எழுத்திற்குப் பதிலாக "ம்" என்கிற எழுத்தினைப் பாவிக்கும் தவற்றினை ஒருபோதும் செய்யப்போவதில்லை" என்று அவருக்கு விளங்கப்படுத்தினேன்.

உணர்ந்துகொண்ட சில்வாவும், அத்துண்டுப்பிரசுரத்தில் இருந்த தவற்றினை வெளியே கூற விரும்பவில்லை. 

தமிழில் எழுதப்பட்டிருந்த துண்டுப்பிரசுரத்தின் செய்தி இதுதான்,

அரசாங்கம் தனது இராணுவ முகாம்களைச் சுற்றி ஆயிரம் மீட்டர்கள் சூனியப் பகுதியை உருவாக்குவதாக அறிவித்திருப்பதுடன், இப்பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து இடம்பெயர்ந்து செல்லுமாறும் அறிவித்திருக்கிறது. 

ஆனால், அப்படி எவரும் வெளியேறக்கூடாது என்று உங்கள் அனைவரையும் நான் எச்சரிக்கிறேன். அப்படி யாராவது வெளியேறுவார்களாயின், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

இப்படிக்குப் "பிரபாகரம்"

1984 ஆம் ஆண்டு ங்குனியில் தேசிய பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்ற காலத்திலிருந்து லலித் அதுலத் முதலி பிரபகாரனை தனது முதலாவது எதிரியாகவே கருதிச் செயற்பட்டுவந்தார் என்பதைக் காட்டவும், பிரபாகரன் குறித்த அவரது கணிப்புச் சரியானது என்பதைக் காட்டவுமே இச்சம்பவங்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

 V. Prabhakaran

பிரபாகரனுடன் அன்டன் பாலசிங்கம் - 80 களின் நடுப்பகுயில்

 தன‌து நோக்கமான இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்குதல், வடக்குக் கிழக்கில் அரச கட்டுப்பாட்டிலிருந்து தமிழர் பிரதேசங்களை விடுவித்தல் ஆகியவற்றுக்கு யுத்தநிறுத்தமும், பேச்சுக்களும் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் என்பதனால் அவைகுறித்து பிரபாகரன் அதிகம் மகிழ்வடையவில்லை. ஜெயவர்த்தன தமிழர்களுக்கான தீர்வினை இராணுவத்தைக் கொண்டே வழங்குவார் என்பதனைச் சரியாகக் கணித்திருந்த பிரபாகரன், இராணுவத்தை எதிர்கொள்ள தனது போராளிகளை ஆயத்தப்படுத்திவந்தார். ஜெயவர்த்தனவின் உண்மையான நோக்கத்தினை நேர்த்தியாகக் கணித்திருந்தார் பிரபாகரன். பின்னாட்களில் அதுகுறித்து இந்தியாவிலிருந்து வெளிவரும் சில பத்திரிக்கைகளுக்கும் அவர் பேட்டியளித்திருந்தார். 

கல்கத்தாவிலிருந்து வெளிவரும் "சண்டே" எனும் இதழுக்கு புரட்டாதி 5 ஆம் திகதி வழங்கிய நேர்காணலில் பிரபாகரன் இவ்வாறு கூறியிருந்தார். 

"பேச்சுவார்த்தை ஒரு நாடகம். இந்தப் போர்வையினைப் பயன்படுத்தி எமது மக்கள் மீது இலங்கை இராணுவம் இன்றுவரை அட்டூழியங்களை நடத்தி வருகிறது. எமது மக்கள் மீதான படுகொலைகள் தற்போதும் அரங்கேற்றப்பட்டு வருவதுடன், தமது வாழ்விடங்களில் இருந்தும் அவர்கள் துரத்தப்பட்டு வருகிறார்கள். இது உண்மையான யுத்தநிறுத்தமாக இருந்தால் எனது தளபதிகள் இதுகுறித்து மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் குறிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளுக்கு அமைவாக நாம் எமது நடவடிக்கைகளை முற்றாக நிறுத்தி வைத்திருக்கிறோம். ஆனால், எமது மக்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை இலங்கை இராணுவம் நடத்திவருவதால், பதில் நடவடிக்கைகளில் நாம் இறங்கவேண்டியதாகியிருக்கிறது. ஆனால், இந்தச் சூழ்நிலையினைக் கவனமாகக் கையாளவேண்டிய தேவையினை நான் அறிவேன். இந்த யுத்தநிறுத்தம் கூட ஒரு சூழ்ச்சிதான் என்பதை எனது தளபதிகள் நன்கு அறிந்தே உள்ளனர். அவர்களை நான் கவனமாக வழிநடத்தவேண்டும். யுத்த நிறுத்தத்தினைப் போர்வையாகப் பாவித்து அரசாங்கம் தமிழின அழிப்பினை கச்சிதமாக அரங்கேற்றி வருகிறது".

வீக் எனும் பத்திரிகைக்கு 1986 ஆம் ஆண்டு பங்குனியில் வழங்கிய செவ்வியில் பிரபாகரன் இவ்வாறு தெரிவித்திருந்தார், 

"யுத்த நிறுத்தம் என்கிற போர்வையில் ஜெயவர்த்தன பாரிய இராணுவமயமாக்கல்த் திட்டத்தினை முடுக்கிவிட்டிருக்கிறார். இராணுவ இயந்திரத்தைக் கட்டியெழுப்ப தனது வரவுசெலவுத் திட்டத்தில் பாரிய தொகையினை அரசு ஒதுக்கியிருக்கிறது. கடுமையான அழிவுகளை ஏற்படுத்தும் பல கனரக ஆயுதங்களைத் தொடர்ச்சியாக அரசு தருவித்து வருகிறது. தனது இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பினை அரசு சட்டமாக்கியிருக்கிறது. மொத்தச் சிங்களத் தேசமும் போரிற்கான தயார்ப்படுத்தல்களில் இறங்கியிருக்கிறது. தமிழர் பகுதிகளில் புதிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தீவிரவாதத்திற்கெதிரான பயிற்சிகளுக்காக வெளிநாட்டுக் கூலிப்படையினர் வரவழைக்கப்பட்டிருப்பதோடு, பாக்கிஸ்த்தான் அரசும் நேரடியாகவே இலங்கை இராணுவத்திற்கு உதவி வருகிறது. இவ்வாறான இராணுவமயமாக்கலில் ஜெயவர்த்தன இறங்கியிருப்பதானது, அவர் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்குப் பதிலாக, தனது இராணுவத்தின் மூலம் அவர்களை அழிக்கவே கங்கணம் கட்டியிருக்கிறார் என்பதையே காட்டுகிறது". 

 

யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுக்கள் குறித்து பிரபாகரன் அதிருப்தி கொண்டிருந்தபோதும், திம்புப் பேச்சுவார்த்தையினூடாக அவருக்கு சில அனுகூலங்களும் கிடைத்திருந்தன. தமிழர் தரப்பில் மிகப்பெரும் சக்தியாக அவர் உருவெடுத்திருந்ததுடன், அவருக்கான அந்த ஸ்த்தானத்தினை வழங்குவதற்கு இந்தியாவும் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது. 

திம்புப் பேச்சுவார்த்தைகளின் முதலாம் கட்டம் தோல்வியில் முடிவடைந்த 1985 ஆம் ஆண்டு ஆடி 13 ஆம் நாள் நான் எனது வீட்டில் இருந்தேன். செய்தி ஆசிரியர் ஆரன் என்னைத் தொலைபேசியூடாக தொடர்புகொண்டு மறுநாள் கொழும்பு கோட்டைப் பகுதியில் அமைந்திருந்த இந்திய உயர்ஸ்த்தானிகராலயத்தில் நடக்கவிருக்கும் பத்திரிக்கையாளர் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.  

 

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதலாம் கட்டத் திம்புப் பேச்சுக்கள் தோல்வியில் முடிவடையவில்லை என்பதை நிரூபிக்க பகீரதப் பிரயத்தனத்தில் இறங்கிய இந்தியா

முதலாம் கட்டத் திம்புப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்த ஆடி 13, 1985 ஆம் திகதிக்கு மறுநாள், கொழும்பு கோட்டை பகுதியில் அன்று அமைந்திருந்த இந்திய உயர்ஸ்த்தானிகராலயத்தில் பத்திரிகை மாநாடொன்று நடைபெற்றது. டெயிலிநியூஸ் பத்திரிக்கை சார்பாக நானும் அங்கு சென்றிருந்தேன். அவ்வருடம் வைகாசி 26 ஆம் திகதி இந்தியாவின் தூதராக ஜே.என்.டிக் ஷிட் பதவியேற்றதன் பின்னர் அவர் நடத்தும் முதலாவது பத்திரிக்கையாளர் சந்திப்பு இது. சில நாட்களாக அவருடன் உரையாடுவதற்கான சந்தர்ப்பங்கள் எனக்குக் கிடைத்தமையினால், அவர் என்னுடன் சகஜமாகவே பேசிவந்தார்.

IPKF in Sri Lanka: War | Revisiting India Prabakaran JN Dixit Harkirat Singh 

பிரபாகரன், ஜே.என். டிக் ஷிட் மற்றும் அமைதிப்படைத் தளபதி ஹர்க்கிரட் சிங்

 

அன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு முன்னர் டிக் ஷிட்டை நான் சந்தித்துப் பேசினேன். இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளிடமிருந்து தனக்கு வந்த அறிவுருத்தலின்படியே தான் பத்திரிக்கையாளர் மாநாட்டினை நடத்துவதாகவும், திம்புப் பேச்சுக்கள் முறிவடையவில்லை, மாறாக தற்போதே  ஆரம்பித்திருக்கின்றன என்கிற செய்தியை இலங்கை மக்களுக்கும், சர்வதேசத்திற்கும் தெரிவிக்கும்படி தன்னை அமைச்சு கேட்டிருப்பதாகவும் அவர் என்னிடம் கூறினார். "மிகக் கடிணமான பணியைச் செய்யவிருக்கிறேன், உங்களைத்தான் நம்பியிருக்கிறேன்" என்று அவர் என்னிடம் கூறினார்.

ஊடகங்களைக் கையாளவ்தில் திறமையான இராஜதந்திரி என்று அறியப்பட்டபோதிலும், அன்றைய பத்திரிக்கையாளர் மாநாடு டிக் ஷிட்டைப் பொறுத்தவரை கடிணமானதாகவே காணப்பட்டது. இப்பதவிக்கு வருமுதல் அவர் இந்திய வெளியுறவுத்துறையின் உத்தியோகபூர்வப் பேச்சாளராகக் கடைமையாற்றியவர்.

 திம்பு விலிருந்து வரும் சில செய்திகளில் குறிப்பிடப்படுவது போலல்லாமல், திம்புப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாகவே அமைந்திருந்தன என்று அவர் தனது பேச்சினை ஆரம்பித்தார். சில வருடங்களாகவே இராணுவ மோதல்களில் ஈடுபட்டு வந்த இலங்கை அரசாங்கத்தையும், தமிழ்ப் போராளிகளையும் சமரசப் பேச்சுவார்த்தைகளுக்காக பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவந்தமையே ஒரு வெற்றிதான் என்று அவர் கூறினார். மேலும், தமிழரின் பிரச்சினைகளுக்கான தீர்வாக இலங்கையரசாங்கம் சில ஆலோசனைகளை முன்வைத்திருப்பதும், அதனை தமது அடிப்படை நான்கம்சக் கோரிக்கைக்கு ஏற்றவாறு மேம்படுத்தி வருமாறு தமிழர் தரப்புக் கோரிக்கை வைத்திருப்பதும் கூட ஒரு வெற்றிதான் என்றும் அவர் கூறினார். ஆக, இருதரப்பினரும் தமது நிலைப்பாட்டினைத் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதுடன், தொடர்ச்சியான பேரம்பேசலினூடாக இருதரப்பிற்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தீர்வொன்றினைக் கண்டடைவதே இனிமேல்ச் செய்யவேண்டியது என்றும் அவர் கூறினார்.

மேலும், ஆவணி 12 ஆம் திகதி இரு தரப்பினரும் மீண்டும் கூடி பேச இணங்கியிருப்பதானது, பேச்சுக்களில் அவர்கள் கொண்டிருக்கும் அக்கறையினையே காட்டுகிறது என்றும் அவர் கூறினார். இரு தரப்பினரும் இணங்கிக்கொள்ளும் தீர்வொன்று நோக்கிச் செல்வதற்கு இந்தியா தொடர்ந்தும் உதவும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனால், அன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பெரும்பாலான சிங்கள ஊடகவியலாளர்கள் முன்வைத்த கேள்விகள், தமிழர்களுடன் இலங்கையரசை நிர்ப்பந்தித்துப் பேச வைத்தமைக்காக இந்தியாவை விமர்சிப்பதாக அமைந்திருந்தனவே அன்றி திம்புப் பேச்சுக்களில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்ததாக அவை அமைந்திருக்கவில்லை. தமிழ்ப் பயங்கரவாதிகளைப் பயிற்றுவித்து, ஆயுதங்களைக் கொடுத்துவருவதாக அவர்கள் இந்தியாவைக் குற்றஞ்சுமத்தினர். அவர்களில் ஒருவர் டிக் ஷிட்டைப் பார்த்து "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு ஆயுதமும், பயிற்சியும் வழங்கியிருக்காவிட்டால் இன்று பேச்சுவார்த்தைகள் நடக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?" என்று கேட்டார். ஆனால், டிக் ஷிட்டோ அக்கேள்விக்குப் பதிலளிப்பதை நாசுக்காகத் தவிர்த்துக்கொண்டார். தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்கு இந்தியா ஆயுதங்கள் கொடுப்பதையோ அல்லது பயிற்றுவிப்பதையோ அவர் ஏற்றுக்கொள்ளவுமில்லை, நிராகரிக்கவுமில்லை. கடந்தகாலத்தில் நடந்தவை பற்றி விமர்சித்துக் கொண்டிருக்காது, எதிர்காலம் குறித்தே அனைவரும் சிந்திக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். "பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன, அவை தொடர்ந்து நடைபெறவேண்டும்" என்பதே அவரது நிலைப்பாடாக இருந்தது. 

தமிழ்ப் பத்திரிக்கையாளர்கள் டிக் ஷிட்டிடம் யுத்த நிறுத்தம் நீடிக்கப்படுவது குறித்து வினவினர். இராணுவத்தினர் தமது தேடியழிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருவதனால், யுத்தநிறுத்தம் முறிவடையப்போகிறது எனும் தமிழர்களின் கவலை குறித்தே அவர்களின் கேள்விகள் அமைந்திருந்தன. தமிழ் மக்கள் மீது இராணுவத்தினர் கட்டவிழ்த்துவிட்டிருந்த தாக்குதல்கள் குறித்து அங்கே தமிழ்ப் பத்த்ரிக்கையாளர்களால் பிரஸ்த்தாபிக்கப்பட்டது. ஆகவே, யுத்தநிறுத்தம் முறிவடையாது என்கிற நம்பிக்கையினை முன்வைக்கவேண்டிய தேவை டிக்ஷிட்டிற்கு இருந்தது. "யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அது தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்படும்" என்று அவர் கூறினார்.

ஆனால், அன்று மாலை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சென்னையில் கடுந்தொனியில் அமைந்த அறிக்கையொன்றினை வெளியிட்டனர். இராணுவத்தினர் தமிழ் மக்கள் மீதான தமது தாக்குதல்களைத் தொடர்ந்தால், தமது போராளிகளும் பதில்த் தாக்குதல்களில் ஈடுபட வேண்டி வரும் என்று அவர்கள் எச்சரித்தனர். ஆடி 20 ஆம் திகதி புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான துப்பாக்கிச் சமரில் இராணுவத்தினரில் ஒருவர் கொல்லப்பட்டார். ஆடி 25 ஆம் நாள், கறுப்பு ஜூலை இனக்கொலையின் இரண்டாவது நினைவேந்தலினை முன்னிட்டு வடக்குக் கிழக்கில் முற்றான கர்த்தாலைப் போராளிகள் கோரியிருந்தனர். போராளிகளின் வேண்டுகோள் மக்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. வீதிகளில் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டதுடன், வெலிக்கடைச் சிறைச்சாலையில் கொல்லப்பட்ட 52 தமிழ் அரசியல்க் கைதிகளுக்கான நினைவேந்தலும் அனுஸ்ட்டிக்கப்பட்டது. வெலிக்கடையில் கொல்லப்பட்ட தமிழ் அரசியல்த் தலைவர்களுக்கான அஞ்சலியாக யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கே போராளிகளால் குண்டுகளும் வெடிக்கவைக்கப்பட்டன.

Madam Sirimavo Bandaranaike: the world's first woman Prime Minister |  Sunday Observer

சிறிமாவோ பண்டாரநாயக்க‌

 

நாட்டில் நிலவும் சூழ்நிலை குறித்தும், மக்களின் மனோநிலை குறித்தும் அறிந்துகொள்ள சிங்கள மற்றும் தமிழ்த் தலைவர்களுடனான பேச்சுக்களை டிக் ஷிட் அந்நாட்களில் ஆரம்பித்திருந்தார். ஆடி 16 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவியான சிறிமாவை அவர் சந்தித்துப் பேசினார். டிக்ஷிட்டுடனான பேச்சுகளின்போது  தமிழர்களுடன் இணக்காபாடான தீர்வொன்றிற்கு வருவதற்கு ஜெயார் விரும்பாமையினால் பேச்சுவார்த்தைகள் விரைவில் முறிவடைந்துவிடும் என்று தான் நம்புவதாக சிறிமா கூறினார். மேலும், பழிவாங்கும் உணர்வுகொண்டவரான ஜெயார் வன்முறையில் மிகுந்த நாட்டம் கொண்டவர் என்றும் டிக்ஷிட்டிடம் சிறிமா தெரிவித்தார். "இராணுவ ரீதியில் தமிழர்களுக்குத் தீர்வொன்றை வழங்க அவர் முடிவெடுத்துவிட்டார். எக்காரணத்தைக் கொண்டும் அவர் அதிலிருந்து விலகப் போவதில்லை" என்றும் சிறிமா கூறினார்.

ஆடி 23 ஆம் திகதி அரசுதரப்புப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவைச் சந்தித்த டிக் ஷிட், அரசு முன்வைத்திருக்கும் யோசனைகளை மேம்படுத்தும் சாத்தியப்பாடுகள் குறித்து வினவினார். அதற்குப் பதிலளித்த ஹெக்டர், நடப்பிலிருக்கும் அரசியலமைப்பின் வரம்புகளுக்கு உட்பட்டே தன்னால் பேரம்பேசலில் ஈடுபட முடியும் என்று கூறிவிட்டார். மேலும், அரசியலமைப்பிற்கு உட்பட்ட வகையில் சில திருத்தங்களைச் செய்ய தான் எத்தனிப்பதாக ஹெக்டர் டிக் ஷிட்டிடம் உறுதியளித்தார்.

ஹெக்டரின் பதிலையடுத்து ஆத்திரமடைந்த டிக் ஷிட், தமிழர்களின் போராட்டம் இலங்கையின் அரசியலமைப்பிற்கு எதிரானது என்றே பார்க்கப்படுவதாகக் கூறினார். ஒற்றையாட்சி முறையிலிருந்து சமஷ்ட்டி முறைக்கு மாற்றுவதற்காக அரசியலமைப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்று தமிழர்கள் கோருகிறார்கள். ஆகவே, அது நடைபெறாதவிடத்து தனிநாட்டிற்கான தமது போராட்டத்தைத் தொடர்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியிருக்காது என்று ஹெக்டரிடம் அவர் தெரிவித்தார்.

"ஹெக்டர் ஜெயவர்த்தனவின் பதில் மரமாக இருந்தது. நாட்டின் அரசியலமைப்பிற்கு உட்பட்டே தன்னால் பேச்சுக்களில் பேரம்பேச முடியும் என்று அவர் கூறினார். "நீங்கள் இங்கு பேசுவது அரசியல் சார்ந்த விடயமாகும். இலங்கையரசாங்கமோ, பெளத்த பீடத்தினரோ, சிங்கள மக்களோ பங்குகொள்ளாத பேச்சுவார்த்தையொன்றில் தமிழர்களுடன் இதுகுறித்துப் பேச என்னால் பேசமுடியாது" என்று ஹெக்டர் என்னிடம் கூறினார்" என்று டிக் ஷிட் பின்னாட்களில் எழுதிய கொழும்பு அஸைன்மென்ட் எனும் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்

 

மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார்.

Hot Spring August 1999 cover Chandrika & Neelan

சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம்

மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார்.

நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.  

 அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே,

"தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன".

"தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

Event: Anandarajan Memorial Lecture - Colombo Telegraph

புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன் 

ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார். 

யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது.

ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம்ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது.

diplomacy-2_010614123336.jpg

ஜெயாருடன் பார்த்தசாரதி

 

இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.

 தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார்.

ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.

 

மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார்.

பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.

 

ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.

 

ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார்.

ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார். 

பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார்.

சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா. 

 

இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார்.

லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித். 

அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 

Edited by ரஞ்சித்
Picture attached
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நவீன பெளத்த சிங்கள இனவாதியாக தன்னை உருமாற்றிக்கொண்ட லலித்தும், இலங்கை முன்வைக்கும் தீர்வினை ஏற்றுக்கொள்ளும்படி தமிழ்த் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுத்த இந்தியாவும்

ஜயவர்த்தன அரசியல் சூட்சுமம் மிக்க தந்திரசாலி . தமிழர்கள் தனது செயற்பாடுகளில் நம்பிக்கைகொள்ளும் வகையில் அவர்களுக்கு ஒரு முகத்தையும், தெற்கில் இனவாதமேற்றப்பட்ட சிங்களவர்களைத் திருப்திப்படுத்த தனது இன்னொரு முகத்தையும் காட்டி வருபவர். இந்தியாவையும், சர்வதேசத்தையும், உதவி வழங்கும் நாடுகளையும் மகிழ்விக்க தமிழர்களுடன் பேசுவதாகக் காட்டிக்கொள்ளும் அதேவேளை, தனது அமைச்சரவையிலேயே சில அதிதீவிர சிங்கள இன‌வாதிகளைத் தூண்டி, சிங்கள தீவிரவாதக் கருத்துக்களை உமிழப்பண்ணுவதன் மூலம் சிங்களத் தீவிரவாதிகளின் ஆதரவினையும் தன்பக்கம் வைத்துக்கொண்டிருப்பவர். இவை எல்லாவற்றையும் சூட்சுமமாகச் செய்துவிட்டு, தன்னை ஒரு நேர்மையான, நீதியான அரசியல்த் தலைவராகக் காட்டிக்கொள்வதும், தனது அமைச்சரவையிலிருக்கும் சில இனவாதக் கழுகுகளின் கட்டுப்பாட்டில் தான் சூழ்நிலைக் கைதியாக சிறைவைக்கப்பட்டிருப்பதாகக் காட்டுவதும் அவருக்குக் கைவந்த கலை.   

இதனை மிக இலகுவாக, ஜெயாருடனான தனது முதலாவது சந்திப்பிலேயே இந்தியப் பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப் அடையாளம் கண்டுகொண்டார். 1984 ஆம் ஆண்டு இடம்பெற்ற இச்சந்திப்பில், தனது அமைச்சரவையில் இருக்கும் சில இனவாதக் கழுகுகளின் அழுத்தம் இல்லாதுபோகுமிடத்து தமிழர்களின் பிரச்சினையினை தன்னால் இலகுவாகத் தீர்த்துவைக்கமுடியும் என்று ஜெயார் கூறியிருந்தார். தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் கல்கி இதழில் இச்சந்திப்புக் குறித்து எழுதும்போது ஜெயாரை சிறந்த நடிகர் என்று அனித்தா குறிப்பிட்டிருந்தார். நான் முன்னர் குறிப்பிட்டதுபோல, பிரபாகரனும் ஜெயார் குறித்து மிகவும் தெளிவான பார்வையினைக் கொண்டிருந்தார். இலங்கை அரசாங்கத்தின் மிகவும் பலம்வாய்ந்த ஒரே நபர் ஜெயார் என்றும், இனவாதக் கழுகுகள் என்று ஜெயார் குறிப்பிடும் தீவிரவாத அமைச்சர்களை ஜெயாரே உருவாக்கினார் என்பதையும் பிரபாகரன் அறிந்தே வைத்திருந்தார். என்னைப்பொறுத்தவரை பிரபாகரனினது ஜெயார் குறித்த அனுமானம் சரியானதுதான். ஜெயவர்த்தன, அரசியல் சதுரங்கத்தில் பல சாதுரியமான திருப்பங்களை எடுத்திருந்தாலும்கூட இறுதியில் அவர் தோற்கவேண்டியதாயிற்று. தான் அரசாண்ட இறையாண்மையுள்ள நாட்டிற்குள் பிரபாகரன் தனக்கான நிழல் அரசொன்றினை ஆள்வதை தான் இறக்குமுன்னரே ஜெயாரால் தரிசிக்க வேண்டியதாயிற்று.

1977 ஆம் ஆண்டில் சிறில் மத்தியூவை சிங்கள இனவாதிகளின் வீரனாக ஜெயார் முன்னிறுத்தினார். தமிழ் மக்களுக்கெதிரான, குறிப்பாக அமிர்தலிங்கத்திற்கும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் எதிரான கடும்போக்கு நிலைப்பாட்டினை எடுக்கும் சிங்கள இனவாதியொருவர் ஜெயாருக்குத் தேவைப்பட்டார். தமிழர்கள் மீதும், அமிர்தலிங்கம் மீது பாராளுமன்றத்தின் சிறில் மத்தியூ முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு அமிர் பதிலளித்தவேளை, சிறில் மத்தியூ நடந்துகொண்டவிதம் குறித்து முன்னைய அத்தியாயங்களில் நான் விளக்கியிருந்தேன். அமிர் ஒருமுறை என்னுடன் பேசும்போது, சிறில் மத்தியூவை தான் அமைச்சரவையில் வைத்திருப்பதன் ஒற்றை நோக்கம் சிங்கள‌ இனவாதிகளைத் தன்பக்கம் வைத்திருப்பதுதான் என்று ஜெயார் தன்னிடம் கூறியதாகத் தெரிவித்திருந்தார்.

ஜெயாருடன் பேசும்போது, "எம்மைத் தொடர்ச்சியாக உங்களின் அமைச்சர் ஒருவர் பாராளுமன்றத்தில் தாக்கிப் பேசும்போது உங்களின் அரசிற்கு நாம் எப்படி ஆதரவு தருவது?" என்று அமிர் வினவியபோது, "நீங்கள் அவரைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. எனது அரசாங்கம் உங்களுடன் சேர்ந்து செயற்பட்டு வருவதால் சிங்கள தீவிரவாத மக்களிடையே எனது அரசிற்கெதிரான உணர்வு உருவாகிவருகிறது. அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே சிறில் மத்தியூவை அப்படிப் பேசச்சொல்லியிருக்கிறேன்" என்று ஜெயார் பதிலளித்திருக்கிறார். 

சிறில் மத்தியூவின் சமூக அந்தஸ்த்தும், அவரது குலமும் தனக்கு எப்போதும் ஒரு சவாலாக வரப்போவதில்லை என்பதை நன்கு உணர்ந்துகொண்டபின்னரே அவரை சிங்கள இனவாதிகளின் வீரனாக உருவகப்படுத்தினார் ஜெயார். மத்தியூவை ஒரு கருவியாக மட்டுமே பாவித்துவந்த ஜெயார், இனிமேல் அவரால் அரசியலில் தனக்கு இலாபம் ஏதும் வரப்போவதில்லை என்கிற நிலை உருவாகியபோது மிக இலகுவாக அவரைத் தூக்கியெறிந்தார். 1985 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் சிறில் மத்தியூ கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்பட்டபோது எவருமே ஜெயாரைக் கேள்விகேட்கவில்லை. இது, ஜெயாரினால் உருவாக்கப்பட்ட ஒரு கருவி எவ்வளவு தூரத்திற்கு அவரில் தங்கியிருந்தது என்பதனையும், தனக்கென்று தனியான அரசியல்ப் பின்புலம் அதற்குக் கிடையாதென்பதையும் தெளிவாகச் சுட்டிக் காட்டிற்று.

மத்தியூவின் வெளியேற்றத்திற்குப் பின்னர், அவரது தொழிலைச் செய்ய ஜெயாருக்கு இன்னொருவர் தேவைப்பட்டது. அதற்குப் பொறுத்தமானவராக லலித்தை அவர் தேர்ந்தெடுத்தார். லலித்துடனான எனது அனுபவங்களின்பொழுது, அவர் எவ்வளவு தூரத்திற்கு ஜெயவர்த்தனவில் தங்கியிருந்தார் என்பதையும், ஜெயாரின் ஊதுகுழலாகவே அவர் செயற்பட்டு வந்தார் என்பதையும் மிகத் தெளிவாக உணர்ந்துகொண்டேன். இதனை உறுதிப்படுத்த என்னால் பல சந்தர்ப்பங்களை உதாரணமாகக் காட்டவியலும். 1984 ஆம் ஆண்டில் நடைபெற்று வந்த சர்வகட்சி மாநாட்டின் ஒருநாள் தனது உரையினை முடித்துக்கொண்டு என்னுடன் பேசிய லலித், மாநாட்டு உறுப்பினர்கள் ஜெயாரினால் முன்வைக்கப்பட்ட "ஆங்கிலத்தையும் உத்தியோகபூர்வ மொழியாக ஏற்றுக்கொள்ளுதல்" எனும் ஆலோசனையினை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்திருப்பதாகக் கூறினார். ஆகவே, டெயிலி நியூஸிற்காக நான் வழங்கும் செய்தியறிக்கையில் இதற்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு அவர் என்னைப் பணித்தார். ஆனால், 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின்படி ஆங்கில மொழி இணைப்பு மொழியாக மட்டுமே பாவிக்கப்பட முடியும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

அன்றைய மாநாட்டு நிகழ்வுகள் முடிவடைந்து நான் பத்திரிகைக் காரியாலயத்தை வந்தடைந்தபோது, எனது ஆசிரியர் மணிக் டி சில்வா, லலித் என்னிடம் மிகவும் முக்கியமான செய்தியொன்றினை வழங்கியிருப்பதாகத் தொலைபேசியில் கூறினார் என்று தெரிவித்தார். நான் மணிக்கிடம் லலித் கூறிய விடயம் பற்றித் தெரிவித்ததோடு, பத்திரிகைக்கும் அதனைச் செய்தியாகத் தயாரித்தேன். மறுநாள் அதுவே நான் எழுதியவகையில் தலைப்புச் செய்தியாக வெளிவந்திருந்தது. அன்று மாலை நான் லலித்தைச் சந்தித்தபோது, தனது செய்தியை நான் பத்திரிக்கையில் எழுதினேனா என்று கேட்கும்படி ஜெயார் தன்னைப் பணித்திருந்ததாகக் கூறினார். அதற்கு தான் இவ்வாறு ஜெயாருக்குப் பதிலளித்ததாக லலித் என்னிடம் தெரிவித்தார், "உங்களுக்கு அது மிகவும் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும், ஆகவேதான் அதனைச் செய்தியாக்கும்படி கொடுத்தேன்". தனது செய்திகுறித்து ஜெயார் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாகவும் லலித் என்னிடம் கூறினார்.

See the source image

செளமியமூர்த்தி தொண்டைமான்

 லலித்  இலட்சிய உறுதி கொண்டவர். ஜெயவர்த்தனவிற்குப் பின்னர் தானே நாட்டின் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று அவர் விரும்பினார். அவரது பிரதான எதிரியான காமிணி திசாநாயக்கவும் ஜெயாருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது லலித்திற்குத் தெரியும். ஆகவே, காமிணியை ஓரங்கட்டி, முன்னிற்கு வருவதற்கு லலித்திற்கு இருந்த ஒரே வழி ஜெயார் விரும்பியவாறு சிங்களக் கடும்போக்குவாதியாக தன்னை வரிந்துகொள்வதுதான்.

ஜெயாரின் தந்திரங்கள் குறித்து தொண்டைமான் பலதடவைகள் என்னிடம் கூறியிருக்கிறார். மத்தியூ கட்சியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டபோது இதேவகையான கருத்தையே தொண்டைமான் தயான் ஜயத்திலக்கவிடமும், எஸ்.பாலகிருஷ்ணனிடம் கூறியிருக்கிறார். அன்றைய செவ்வி லங்கா கார்டியன் பத்திரிக்கையில் 1985 ஆம் ஆண்டு கார்த்திகை 15 ஆம் திகதி மீள்பிரசுரமாகியிருந்தது.  

கேள்வி : சிறில் மத்தியூவை அமைச்சரவையிலிருந்து நீக்கியதன் பின்னர், இனப்பிரச்சினைக்கு தீர்வொன்று எட்டப்படும் சாத்தியம் உருவாகியுள்ளதாகக் கருதப்பட்டது. ஆனால், அது இதுவரையில் நடைபெறவில்ல. சிறில் மத்தியூவை நீக்கிவிட்ட பின்னரும், தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வை வழங்கத் தடையாக இன்னும் சில கடும்போக்கு சிங்கள இனவாதிகள் அமைச்சரவையில் இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

தொண்டைமான் : முதலாவதாக‌, சிறில் மத்தியூவை அமைச்சரவையிலிருந்து நீக்குவது தொடர்பாக அப்போது எடுக்கப்பட்ட முடிவு சரியானதென்று நான் நினைக்கவில்லை. அவரது பலம் மிக்க தொழிற்சங்கமான ஜாதிக்க சேவக சங்கமயவின் நடவடிக்கைகளால்த் தான் அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டர் என்றால், அது புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால், இப்போது, எல்லாமே முடிந்துவிட்டபின்னர் அவரைப் பதவிநீக்கம் செய்வதன் மூலம் அடைந்துகொண்டது என்ன? தற்போது ஐக்கிய தேசியக் கட்சியினர் மட்டத்தில் பொதுவான அபிப்பிராயம் ஒன்று உருவாகிவருகிறது. அக்கட்சியின் அங்கத்தவர்கள் தமது சிங்களத் தேசியக் குரல் ஒன்று அடைக்கப்பட்டு விட்டதாக உணர்கிறார்கள், தமது கட்சியின் சிங்கள பெளத்த நிலைப்பாடு அற்றுப்போய்விட்டதாக உணர்கிறார்கள். ஆகவே, தமது கட்சி இன்னமும் சிங்கள பெளத்த தீவிரவாத நிலைப்பாட்டிலேயே இருக்கிறது என்று மக்களுக்குக் காட்டுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கப்போகிறார்கள். அப்படி நடக்கும் பட்சத்தில் இன்னும் அதிகமான பாதிப்பினை நாடு எதிர்கொள்ளப்போகிறது. ஒருபக்கம், சிறில் மத்தியூவை நீக்கியதன் மூலம் தமிழ் மக்களைத் தான் திருப்திப்படுத்திவிட்டதாக ஜனாதிபதி நினைக்கலாம். சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் தமிழ்மக்களின் அதிருப்திக்குக் காரணம் சிறில் மத்தியூதான் என்று நினைக்கலாம். ஆனால், என்னைப்பொறுத்தவரையில் சிறில் மத்தியூ அமைச்சரவையில் இருந்தாலென்ன இல்லாதுபோனாலென்ன, தமிழர்கள் அவர்குறித்துக் கவலைப்படப்போவதில்லை. அவர்களுக்குத் தேவையானதெல்லாம் தம்மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதிதான். 

ஆனால், சிறில் மத்தியுவை அமைச்சரவையிலிருந்து நீக்கியதனூடாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிங்கள பெளத்த நிலைப்பாடு உருக்குலைந்து போய்விட்டது என்று கவலைப்பட்டோருக்கு லலித் அதுலத் முதலியே புதிய சிங்கள பெளத்த வீரனாக தன்னை முன்னிலைப்படுத்தினார். இந்தியாவால் பரிந்துரை செய்யப்பட்ட "கடப்பாடற்ற" ஆலோசனைகள அனைத்தையுமே முற்றாக நிராகரித்ததன் மூலம் தனது புதிய அவதாரத்தை அவர் செயலில் காட்டினார். லலித் அதுலத் முதலியைக் கடும்போக்காளராகக் காட்டிய அதேநேரம், தன்னை நேர்மையான, நீதியான அரசியல்வாதியாகக் காட்டிக்கொண்டார் ஜெயவர்த்தன. இப்படிச் செய்வதன் மூலம் பண்டாரியை மிக இலகுவாக ஜெயாரினால் ஏமாற்ற முடிந்திருந்தது.

 கொழும்பிலிருந்து தில்லி திரும்பும் வழியில் பண்டாரி சென்னையில் தரித்துச் சென்றார். அங்கு தமிழ்ப் போராளி அமைப்புக்களின் தலைவர்களையும், முதலமைச்சர் ராமச்சந்திரனையும் அவர் ஆவணி 10 ஆம் திகதி சந்தித்தார். தனித்தனியாக இடம்பெற்ற இச்சந்திப்புக்களின்போது பண்டாரியுடன் டிக்ஷிட்டும் உடனிருந்தார். ராமச்சந்திரனுடன் அவருடைய இல்லத்தில் பேசிய பண்டாரி, முதலாம் கட்டப் பேச்சுக்களில் இலங்கையரசால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை மேம்படுத்த ஜெயவர்த்தன உறுதி தந்திருப்பதாக  எம்.ஜி.ஆரிடம் தெரிவித்ததுடன், ஜெயாரினால் முன்வைக்கப்படவிருக்கும் புதிய ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளும்படி போராளி அமைப்புக்களுக்கு எம்.ஜி.ஆர் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Raj Bhavan, Chennai - History

ராஜ் பவன் சென்னை 2021

சென்னையில் ஆளுநரின் வாசஸ்த்தலமான ராஜ் பவனில் தமிழ்ப் போராளிகளை பண்டாரி சந்தித்தார். ஏனைய ஈழத்தேசிய விடுதலை அமைப்பின் தலைவர்களுடன் பிரபாகரனும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார். பாலசிங்கமும் பிரபாகரனுடன் சென்றிருந்தார். கொழும்பில் ஜெயவர்த்தனவுடனும் ஏனைய தலைவர்களுடனும் தான் நடத்திய சந்திப்புக்கள் குறித்து போராளிகளின் தலைவர்களுக்கு பண்டாரி அறியத் தந்தார். இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கு வரும்போது, இலங்கையரசின் பேச்சுவார்த்தைக்குழுவின் தலைவர் ஹெக்டர் ஜெயவர்த்தன மேம்படுத்தப்பட்ட ஆலோசனைகளுடன் வருவார் என்றும், ஆகவே அதனை உடனேயே நிராகரிக்காது, யதார்த்தத்தினை உள்வாங்கிப் பரிசீலிக்க வேண்டும் என்றும் போராளித் தலைவர்களிடம் அவர் வேண்டுகோளினை முன்வைத்தார். இலங்கையரசாங்கம் முன்வைக்கப்போகும் தீர்வினை தற்போதைக்கு ஏற்றுக்கொண்டு, காலப்போக்கில் அதனை மேம்படுத்துவது குறித்து போராளித்தலைவர்கள் சிந்திக்கவேண்டும் என்றும் அவர் அறிவுரை வழங்கினார்.

இச்சந்திப்பிற்கு முன்னதாக ஈழத்தேசிய விடுதலை முன்னணியினரின் அலுவலகத்தில் எடுக்கப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைவாக பிரபாகரனே முதலில் பேசினார். வழக்கம் போல அவர் தமிழில் பேச, பாலசிங்கம் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இலங்கையரசு தற்போது தரவிருப்பதாக பண்டாரி கூறும் தீர்வினை ஏற்றுக்கொண்டு, காலப்போக்கில் அதனை மேம்படுத்தும் திட்டத்தினை ஏற்கமுடியாது என்று பிரபாகரன் திட்டவட்டமாகக் கூறினார். சரித்திரத்தில் இவ்வாறான நீண்டகால மேம்படுத்தல்கள் தோல்வியிலேயே முடிவடைந்திருப்பதை அவர் எடுத்துக் காட்டினார். ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட காந்தியவாதியான எஸ்.ஜெ.வி.செல்வநாயகம் அவர்கள் 1956 ஆம் ஆண்டிலிருந்து 1977 ஆம் ஆண்டுவரை இவ்வகையான நீண்டகால மேம்படுத்தல் முடிவினை எடுத்து தமிழரின் பிரச்சினையினைத் தீர்க்க முயன்றபோதும்கூட, அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்தன என்று பிரபாகரன் வாதிட்டார். செல்வநாயகம் அவர்கள் பண்டாரநாயக்கவுடனும் பின்னர் டட்லியுடனும் இரு ஒப்பந்தங்களைச் செய்தார். ஆனால் அவையிரண்டையுமே அச்சிங்களத் தலைவர்கள் நிறைவேற்றத் தவறிவிட்டனர்.  தமிழர்களை பேச்சுவார்த்தைகளுக்கு அழைத்து, அவர்களின் உணர்வெழுச்சியை மழுங்கடித்து, ஈற்றில் அவர்களை விரக்தியடையச் செய்வதனையே சிங்களத் தலைவர்கள்  தமது பாணியாகக் கடைப்பிடித்து வந்தனர். ஆகவே, முன்னைய‌ தமிழ்த் தலைவர்கள் முயன்று தோற்றுப்போன ஒரு வழியில் மீண்டும் ஒரு முறை வீழ்ந்து தோற்றுப்போக ஈழத்தேசிய விடுதலை முன்னணி தயாராக இல்லை என்று பிரபாகரன் தெரிவித்தார்.

மேலும், 1977 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை (1985) தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினரையும் ஜெயவர்த்தன இதே வழியிலேயே ஏமாற்றி வருகிறார் என்றும் பிரபாகரன் சுட்டிக் காட்டினார். தாம் ஜெயவர்த்தனவை நம்பவில்லை என்று பிரபாகரன் மீண்டும் அங்கே குறிப்பிட்டார். மேலும், திம்புவிற்குப் போகும்படி ஈழத்தேசிய அமைப்பினர் மீது இந்தியா கொடுத்த அழுத்தங்கள குறித்த தனது அதிருப்தியையும் அவர் அங்கே வெளிப்படுத்தினார். இந்தியாவை தனது சதிவலைக்குள் வீழ்த்தி தமிழரின் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்தவே ஜெயார் முயன்று வருகிறார் என்று பண்டாரியை பிரபாகரன் எச்சரித்தார். ரஜீவ் காந்தி மீதும், பண்டாரி மீதும் தாம் வைத்திருக்கும் மதிப்பின் நிமித்தம் இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்காக திம்புவிற்கு தமது முன்னணியினர் செல்வர் என்று கூறிய பிரபாகரன், அப்போதும்கூட தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வாக‌ எதனையும் இலங்கையரசு முன்வைக்காது என்று தான் திடமாக நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், முதலாம் கட்டப் பேச்சுக்களின் இறுதியில் ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் வெளியிட்ட நான்கு அடிப்படை அம்சக் கோரிக்கைகளை உள்ளடக்கிய தீர்வைத்தவிர வேறு எதனையும் தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதை திட்டவட்டமாக அவர் அறிவித்தார்.

பிரபாகரனின் பேச்சைக்கேட்டு பண்டாரி அதிருப்தியடைந்தார். கடுமையான நிலைப்பாட்டுடன் பேசாது, யதார்த்தத்திலிலிருந்து சிந்தியுங்கள் என்று ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களைப் பார்த்து அவர் கூறினார். ஆனால், பிரபாகரனோ தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததுடன், எந்த விட்டுக் கொடுப்பிற்கும் தயாராக இருக்கவில்லை.

பின்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் புளொட் அமைப்பினருடனும் தனியான சந்திப்புக்களை பண்டாரி மேற்கொண்டார். அவர்களும் ஜெயவர்த்தனவை தாங்கள் நம்பவில்லையென்றே பண்டாரியிடம் கூறினர். தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைகளை லலித் அதுலத் முதலி முற்றாக நிராகரித்திருப்பதன் மூலம் இரண்டாம் கட்டப் பேச்சுக்களும் தோல்வியிலேயே முடிவடையப் போகின்றது என்பது புலனாகிறது என்று அவர்கள் பண்டாரியிடம் கூறினர். பண்டாரியிடம் பேசிய அமிர்தலிங்கம், "அரசாங்கம் முன்வைக்கவிருக்கும் பரிந்துரையின் அடிப்படையிலேயே எமது பதில் இருக்கும். அவர்கள் ஏற்கனவே முன்வைத்த மாவட்ட அபிவிருத்திச் ச‌பைகளையே புதிய பூச்சுடன் மீளவும் முன்வைப்பார்களாயின் அதனை நிராகரிப்பதைத்தவிர எமக்கு வேறு வழிகள் இல்லை" என்று கூறினார்.

தமிழ்ப் பிரதிநிதிகளுடனான தனது சந்திப்புக்களின்போது அவர்களின் கருத்தைக் கேட்டு பண்டாரி கடுமையான அதிருப்தி அடைந்திருந்ததாக டிக்ஷிட் தனது புத்தகத்தில் எழுதுகிறார். தனது பதவிக்காலம் 1986 ஆம் ஆண்டு பங்குனியில் முடிவிற்கு வரும் நிலையில், அதற்கு முன்னர் பேச்சுவார்த்தையூடாக உடனடித் தீர்வொன்றினை எட்டுவதே பண்டாரியின் நோக்கமாக இருந்தது. ஆகவே, இலங்கைப் பிரச்சினைக்கான தீர்வொன்றினை எட்டுவதற்காக கடுமையான முயற்சிகளை அவர் மேற்கொண்டு வந்திருந்தார். டிக்ஷிட் தொடர்ந்தும் எழுதுகையில், "தமிழ்த் தலைவர்களுடனான தனது பேச்சுக்களின் விளைவாக பண்டாரி இலங்கைத் தமிழர்கள் மீது கடுமையான எரிச்சலும் ஏமாற்றமும் அடைந்திருந்தார்.  இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை இழுத்தடிக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டு வருவதாகவும், தமிழர்கள் அநாவசியமாக பிடிவாதம் பிடித்து வருவதாகவும் அவர் நம்பத் தலைப்பட்டார்" என்று எழுதுகிறார்.

அன்று மாலை, தனியாக இருக்கும்போது, டிக்ஷிட்டிடம் பேசிய பண்டாரி,

"இந்தியாவால் வரையப்பட்ட "கடப்பாடற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்குக் கொடுத்தீர்களா ?" என்று வினவினார்.

"இல்லை, எனக்கு அவ்வாறு யாரும் பணிப்புரை வழங்கவில்லையே" என்று டிக்ஷிட் கூறவும்,

"நீங்கள் கொழும்பிற்குச் சென்றவுடன் அந்த நகலை செல்வநாயகத்திடம் கொடுங்கள்" என்று பண்டாரி கூறினார்.

அதிர்ச்சியடைந்த டிக்ஷிட், "செல்வநாயகம் இறந்துவிட்டார், நீங்கள் நீலன் திருச்செல்வத்தைத்தானே குறிப்பிடுகிறீர்கள்?" என்று கேட்கவும், எரிச்சலடைந்த பண்டாரி,

" செல்வநாயகமோ, திருச்செல்வமோ, யாரிடமாவது கொடுங்கள். தென்னிந்தியர்களின் பெயர்கள் எல்லாம் ஒரேமாதிரியாகவே இருக்கின்றன" என்று சலித்துக்கொண்டே கூறினார்.

ப‌ண்டாரி பணித்தவாறே, இந்தியா தயாரித்த ஆலோசனைகளின் நகல் ஒன்றினை கொழும்பு திரும்பியதும் நீலனிடம் தந்தார் டிக்ஷிட்.

சென்னையில் தமிழ்த் தலைவர்களைச் சந்தித்து இலங்கையரசாங்கம் முன்வைக்கவிருக்கும் தீர்வினை ஏற்றுக்கொள்ளும்படி பண்டாரி அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், வவுனியாவிலும், திருகோணமலையிலும் நிலைமைகள் சூடுபிடிக்கத் தொடங்கியிருந்தன. வவுனியாவில் பொலீஸ் வாகனம் ஒன்றின்மீது போராளிகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் ஒரு பொலீஸ் உப பரிசோதகரும், நான்கு சாதாரண பொலீஸாரும் கொல்லப்பட்டனர். இதற்கான பழிவாங்கும் தாக்குதல்களை இராணுவத்தினர் வவுனியாவிலும் திருகோணமலையிலும் நடத்தினர். வவுனியாவில் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கித் தாக்குதல்களில் ஈடுபட்ட இராணுவத்தினர் கடைகளையும், வீடுகளையும் தீயிட்டுக் கொளுத்தினர். இராணுவத்தினரின் பழிவாங்கும் தாக்குதல்களில் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு மேலும் 21 பேர் காயமடைந்தனர். திருகோணமலையில் அகதிமுகாம் ஒன்றில் தங்கியிருந்த தமிழ் அகதிகள் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

 

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழர்கள் முன்வைத்த நான்கம்சக் கோரிக்கையினை முற்றாக நிராகரித்த அரசாங்கமும், பேச்சுவார்த்தைகளிலிருந்து விலக முடிவெடுத்த தமிழர்களும்

இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் தான் முதலாவது கட்டப் பேச்சுக்களுக்கு அனுப்பிய குழுவையே ஹெக்டர் ஜயவர்த்தனவின் தலைமையில் ஜெயார் அனுப்பிவைத்தார். தமிழர் தரப்பில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. டெலோ அமைப்பின் மோகனுக்குப் பதிலாக கொழும்பு நீதிமன்றத்தில் தங்கத்துரையின் விடுதலைக்காக போராடிய சட்டத்தரணி நடேசன் சத்தியேந்திரா கலந்துகொண்டார்.

See the source image

 சட்டத்தரணி நடேசன் சத்தியேந்திரா

ஆவணி 12 ஆம் திகதி இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் ஆரம்பமாகின. தாம் தயாரித்துக் கொண்டுவந்த அறிக்கையினை ஹெக்டர் படித்தார். " அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான எமது புதிய ஆலோசனைகளை உங்களுக்கு முன்வைக்குமுன், இலங்கையில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட தமிழ் மக்கள் குழுவை பிரதிநிதித்துவம் செய்யும் ஆறு  அமைப்புக்கள் முன்வைத்த நான்கு அடிப்படை அம்சக் கோரிக்கைகள் குறித்த இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்துவது எனது கடமை" என்று அவர் ஆரம்பித்தார்.

இலங்கையரசின் இந்த ஆரம்ப அறிக்கையே தமிழர் தரப்பினை சினங்கொள்ள வைத்தது. பேச்சுக்களில் கலந்துகொள்ளும் தமிழ்ப் பிரதிநிதிகள் இலங்கையின் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்று முதலாம் கட்டப் பேச்சுக்களில் தான் முன்வைத்த வாதத்தினை ஹெக்டர் மீளவும் எழுப்பினார். முதலாம் கட்டப் பேச்சுக்களின்போது , தனது தரப்பே இலங்கையிலிருக்கும், தமிழர்கள் உட்பட அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவம் செய்வதாகவும் அவர் வாதிட்டிருந்தார். ஹெக்டரின் இந்த கூற்றிற்கு ஆட்சேபணை தெரிவித்து தமிழர் தரப்பு வெளிநடப்புச் செய்ய எத்தனித்தவேளை, "இங்கு வந்திருக்கும் தமிழர் தரப்பை அரசியல் தீர்விற்காக பேச்சுக்களில் ஈடுபடக்கூடிய தரப்பாக தன்னால் ஏற்றுக்கொள்ளவியலும்" என்று சமாளித்திருந்தார். ஹெக்டரின் இந்த சமாளிப்பு அதிதீவிர சிங்கள மக்களிடையே கடுமையான எதிர்ப்பினைச் சம்பாதித்திருந்தது. 

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல்த் தீர்வில் அவர்களால் முன்வைக்கப்பட்ட நான்கு அடிப்படை அம்சக் கோரிக்கைகளும் இடம்பெறவேண்டும் என்கிற கோரிக்கையினை ஹெக்டர் தனது நீண்ட ஆரம்ப உரையினூடாக முற்றாக நிராகரித்தார். 

முதலாவதாக, இலங்கைத் தமிழர்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அவர் கூறினார். தமிழர்களைத் தனித்துவமான தேசிய இனம் என்று அரசு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவர்கள் தனிநாடொன்றிற்கு உரியவர்கள் என்பதனையும் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டியதாகிவிடும் என்று அவர் கூறினார். அரசால் அதிகபட்சமாக செய்யக்கூடியது, இலங்கையில் வாழும் பல்வேறு மக்கள் கூட்டங்களில் தமிழர்கள் தனித்துவமான ஒரு மக்கள் கூட்டம் என்று ஏற்றுக்கொள்வது மட்டும் தான் என்று கூறினார். மேலும், இலங்கையில் வாழும் இனக்குழுமங்களில் ஒன்றான தமிழர்கள் எதிர்நோக்கும் உரிமைப் பிரச்சினைகள் குறித்து தனது குழு பேசுவதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், "அரசியற்சட்டத்திற்கு உட்பட்ட வகையில் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான ஆணைக்குழுவொன்றினை எம்மால் உருவாக்க இயலும். தேவையென்றால், சிறுபான்மையினருக்குத் தேவையானளவு பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கான சபை ஒன்றையும் எம்மால் ஏற்படுத்தித் தர முடியும்" என்றும் கூறினார்.

 

இரண்டாவதாக, தமிழரின் தாயகம் என்று ஒரு பிரதேசம் அடையாளப்படுத்தப்படவேண்டும் என்கிற கோரிக்கையினையும் தாம் முற்றாக நிராகரிப்பதாக அவர் கூறினார். தமிழர்களின் தாயகம் என்று ஒரு பகுதி அடையாளப்படுத்தப்பட்டால், இலங்கையில் தமிழர்களுக்கென்று தனியான பிரதேசமொன்றினை ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் அரசிற்கு வந்துவிடும் என்றும், இதனை ஒருபோதும் அரசு ஏற்றுக்கொள்ளாது என்றும் கூறினார். தமிழர்களின் இந்தக் கோரிக்கை நாட்டின் எல்லாவிடங்களும், எல்லாப்பகுதிகளும் நாட்டில் வாழும் அனைத்து இனமக்களுக்கும் பொதுவானவை எனும் கோட்பாட்டிற்கு முற்றிலும் முரணானது என்றும், தாம் விரும்பிய நாட்டின் எப்பகுதியிலும் குடியேற முடியும் என்கிற தனிமனித உரிமைக்கு அது முரணானது என்றும் அவர் வாதிட்டார். மேலும், தமிழர்களுக்கான தாயகம் என்று ஒரு பகுதி அடையாளப்படுத்தப்பட்டு விட்டால், நாட்டில் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் குடியேற்றத்திட்டங்கள் இதனால் பாதிப்படைந்துவிடும், நிறுத்தப்பட்டு விடும் என்றும் அவர் கூறினார். வேண்டுமானால், வடக்குக் கிழக்கு மாகாணங்களில் இனிவரும் காலங்களில் நடக்கப்போகும் குடியேற்றங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை தரமுடியும், ஆனால் ஏனைய இனங்களும் இப்பகுதிகளில் குடியமர்த்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

மூன்றாவது கோரிக்கையான தமிழர்களின் சுய நிர்ணய உரிமையினை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையினை அவர் அடியோடு நிராகரித்தார். காலணித்துவ ஆட்சியின் கீழ் வாழும் மக்கள் கூட்டத்திற்கு மட்டுமே இந்த சுய நிர்ணய உரிமை எனும் கோட்பாடு பாவிக்கப்படும் என்று அவர் வாதிட்டார். சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாடுகளில் வாழும் சிறுபான்மையின மக்களுக்கு சுய நிர்ணய உரிமையினை அனுபவிக்கும் வாய்ப்புக்கள் கிடையாது என்று அவர் கூறினார்.

 

இறுதியாக, தமிழ் மக்களின் பிரஜாவுரிமை குறித்து கோரிக்கை முன்வைக்க தமிழர் தரப்பினருக்கு இருக்கும் சட்டபூர்வத் தன்மை குறித்து அவர் கேள்வியெழுப்பினார். சர்வகட்சி மாநாட்டில் அரசாங்கம் நாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமையினைக் கொடுக்க ஆவன செய்யும் என்று கூறியிருக்கிறதே? இந்திய வம்சாவளி மக்களின் உண்மையான பிரதிநிதிகளுடன் இதுகுறித்து அரசு பேசிக்கொள்ளும், நீங்கள் அதுகுறித்துக் கேள்விகேட்கமுடியாது என்று அவர் கூறினார்.

 

தனது ஆரம்பப் பேச்சினை பின்வரும் அதிரடி அறிவிப்புடன் ஹெக்டர் ஜெயவர்த்தன நிறைவுச் செய்தார்.

 

"திம்புப் பேச்சுக்களில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒப்பந்தம் பின்வரும் நிலைமை ஏற்பட்டால் மட்டுமே நிறைவேற்றப்படும்,

1. எல்லா ஆயுத அமைப்புக்களும் தமது அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் கைவிடவேண்டும்

2. இலங்கையில் இயங்கும் அனைத்து ஆயுத அமைப்புக்களும் தமது ஆயுதங்களையும், தளபாடங்களையும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

3. இலங்கையிலும், அதற்கு வெளியிலும் அமைக்கப்பட்டிருக்கும் அனைத்து பயிற்சி முகாம்களையும் உடனடியாக மூடிவிட வேண்டும்.

4. சாதகமான சூழ்நிலை இருந்த காலத்தில் இன்று அகதிகளாக்கப்பட்டிருப்போர் எந்தெந்த இடங்களில் வாழ்ந்தார்களோ, அந்த இடங்களுக்கு அவர்கள் இடைஞ்சலின்றி திரும்ப ஆவன செய்யப்பட வேண்டும்.

5. அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ளவாறு, ஒவ்வொரு இன மக்களும் தமது மதத்தைச் சுதந்திரமாக வழிபட அனுமதியளிக்கப்படவேண்டும் என்பதுடன், வன்முறையில் பாதிக்கப்பட்ட மத வணக்கத் தலங்கள் திருத்தியமைக்கப்படும்.

6. அரசாங்கம் முன்வைக்கும் முன்நிபந்தனைகளை ஆயுத அமைப்புக்கள் ஏற்றுகொண்டாலன்றி அவர்களின் குற்றச்செயல்களுக்கான பொதுமன்னிப்பு என்பது தரப்பட மாட்டாது. 

இவற்றின் அடிப்படையில் மட்டுமே எந்த இணக்கப்பாடும் அமையவேண்டும் என்பதுடன், நாட்டில் அமைதியும் ஏற்படுத்தப்பட முடியும்" என்று பேசி முடித்தார்.

thilakar.jpg

லோரன்ஸ் திலகர்

ஹெக்டர் ஜெயவர்த்தன முன்வைத்த நிபந்தனைகளை நேரடித் தொலைபேசியூடாக கோடாம்பக்கத்தில் இரகசிய இடமொன்றில் தங்கியிருந்த பாலசிங்கத்திடம் புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவின் உறுப்பினர் லோரன்ஸ் திலகர் அறியத் தந்தார். இதனை சேலம் பயிற்சி முகாமில் இருந்த பிரபாகரனிடமும், ஏனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களிடமும் பாலசிங்கம் தெரியப்படுத்தினார். 

இதனையடுத்து பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகுவது என்று போராளிகளின் தலைவர்களால் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. இதனைச் செய்வதற்கு சரியான தருணத்தை அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.

 

 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழர்களும் அவர்களின் தேசமும்

ஹெக்டர் ஜெயவர்த்தனவின் ஆரம்ப உரையினையடுத்து, இலங்கையரச பிரதிநிதிகள் தமது ஆலோசனைகளை முன்வைக்க தமிழர் தரப்பினர் அனுமதிக்கவில்லை. அரச தரப்பு தமது ஆலோசனைகளை முன்வைப்பதற்கு முன்னர் ஹெக்டர் ஜெயவர்த்தனவின் ஆரம்ப உரையில் காணப்பட்ட இரு விடயங்கள் குறித்து தமது ஆட்சேபணையினைப் பதிவுசெய்ய வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். இவ்விரு விடயங்கள் தொடர்பில் அரச தரப்பு தரப்போகும் விளக்கங்களைப் பொறுத்தே தாம் தொடர்ந்தும் பேச்சுக்களில் பங்கேற்பதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கப்போவதாகவும் தெரிவித்தனர். தமிழர் தரப்பினர் குறிப்பிட்ட இரு விடயங்களாவன, 

1. அரசியல்த் தீர்வும் தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட நான்கு அடிப்படை அம்சக் கோரிக்கைகளை உள்ளடக்கியிருக்குமா, இல்லையா?

2. தமிழர் தரப்பில் பங்கேற்கும் பிரநிதிகள் தொடர்பாக அரசினது நிலைப்பாடு என்ன?

 எதிர்வந்த மூன்று நாட்களான ஆவணி 13 முதல் 15 வரையான நாட்கள் இவ்விரு விடயங்கள் தொடர்பாக விவாதிப்பதிலேயே கழிந்தது. தமிழ்த் தரப்பினர் பேச்சுக்களின் நகர்வு குறித்தும், தமது நான்கு அடிப்படை அம்சக் கோரிக்கைகள் குறித்தும் தமது பக்க கூட்டறிக்கையினை முதலில் முன்வைத்தனர். இவற்றினை பேச்சுவடிவிலும் விளக்கமாக அவர்கள் வழங்கினர். தாம் திம்புவிற்குப் பேச வந்திருப்பதே நிலைத்து நிற்கக்கூடிய தீர்வொன்றினை எட்டுவதற்காகத்தான் என்று அழுத்தம் திருத்தமாக அவர்கள் தெரிவித்தனர். அத்தீர்வு அடிப்படைக் கட்டமைப்புக்களைக் கொண்டு அமையவேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

ஆடி 13 ஆம் திகதி தமிழ்த்தரப்பால் முன்வைக்கப்பட்ட நான்கு அடிப்படை அம்சங்களே இந்த கட்டமைப்பின் பிரதான கூறுகளாக காணப்பட்டன. தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய எந்தத் தீர்விற்கும் இவையே அடிக்கற்காளாக இருக்க வேண்டும். பேச்சுவார்த்தைகள் பலந்தரவல்லைவையாக இருப்பதற்கு முன்வைக்கப்படும் தீர்வுகள் இந்த அடிப்படை அமசங்களைக் கொண்டிருக்கவேண்டும் என்று அவர்கள் கோரினர். 

தமிழர்களால் முன்வைக்கப்பட்ட நான்கு அடிப்படை அம்சங்களில் முதலாவ‌து, இலங்கைத் தமிழர்கள் ஒரு தேசமாகக் கணிக்கப்பட வேண்டியவர்கள் என்பது. இது நடைமுறையில் உள்ள யதார்த்தம் என்று அவர்கள் வாதிட்டனர். தேசம் எனும் சொல் இரு அர்த்தங்களைக் கொண்டிருப்பதாக அவர்கள் கூறினர்.  தேசம் எனும் சொல் ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தின் ஒருங்கிணைந்த அடையாளமாகக் கருதப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். தமிழ் மக்கள் தமது அடையாளமாக உணர்வுகள், உணர்ச்சிகள், ஒற்றுமையாக வாழுதல், தமது அடையாளத்தை காத்துக்கொள்ளுதல் ஆகியவற்றினைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருவதாக அவர்கள் விளக்கினர். இதன் ஒரு அங்கமாகவே ஆயிரக்கணக்கான தமிழ் இழ்ளைஞர்கள் தமது இனத்தின் அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்ள ஒன்றாகக் கூடி, தமது உணர்வுகளை வெளிப்படுத்தி ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் வாதிட்டனர். தமது அடையாளத்தை பாதுகாக்க உறுதிபூண்டிருக்கும் தமிழர்கள், தமது உயிரைக் கொடுத்தேனும் அதனைக் காத்துக்கொள்ள முன்வந்திருப்பதாக  அவர்கள் மேலும் வாதிட்டனர். இவ்வாதத்தினை முன்வைத்த நடேசன் சத்தியேந்திரா, இரு பிரபல பிரகடணங்களை இதற்கு மேற்கோள் காட்டிப் பேசினார்.

ருபேர்ட் எமேர்சன் என்பவர் தேசம் என்பதனை பின்வருமாறு வரையறை செய்கிறார், 

"தேசம் எனும் சொல்லின் மிகவும் எளிமையான பிரகடனமாக, ஒரு மக்கள் கூட்டம் தம்மை ஒரு தேசமாக உணர்ந்துகொள்வதைக் குறிப்பிட முடியும். இதனை நீங்கள் எவ்வாறான சுழல் ஆராய்ச்சிகளுக்கூடாக ஆராய்ந்து முடித்தபின்னரும்கூட, மக்களின் இந்த உணர்வே இறுதியானதாக இருக்கும்" என்று கூறுகிறார்.

 பேராசிரியர் டெயிலர் எழுதும்போது,

"தேசம் என்றால் என்ன, அது எங்கு இருக்கிறது? அப்படியொன்று உண்மையிலேயே இருக்கின்றதா? உண்மையிலேயே தேசம் என்பது மக்களின் மனங்களிலும், இதயங்களிலும் தான் இருக்கின்றது என்று ஒருவரால் கூறமுடியும். அது ஒரு எண்ணக்கரு. ஆகவே, அது நீதிமன்றங்களைக் காட்டிலும், இராணுவங்களைக் காட்டிலும் உண்மையானது. உங்களையும், என்னையும் காட்டிலும் உறுதியானது. எங்கள் தந்தைகளின் மனங்களில் இருந்ததுபோல எங்களின் பிள்ளைகளின் மனங்களிலும் அது இருக்கப்போகிறது. அது ஒரு எண்ணம், அது ஒரு கற்பனை" என்று வெளிப்படுத்துகிறார்.

 இலங்கையின் தமிழ் மக்கள் தம்மை ஒரு தனியான தேசமாக உணர்வதற்கு அப்பால், காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் அரசியல் தேற்றங்களின் அடிப்படையிலும் ஒரு தேசத்திற்கு உரித்துடையவர்கள் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. அவர்களுக்கென்று தனியான பாரம்பரியம் ஒன்றிருக்கிறது. பொதுவான கலாசாரப் பண்பாடு ஒன்று இருக்கிறது. அவர்களுக்கென்று தனித்துவமான மொழி ஒன்று இருக்கிறது. தெளிவாக அடையாளம் காணப்பட்ட பூர்வீகத் தாயகமும் பொருளாதார வாழ்க்கையும் அவர்களுக்கு இருக்கிறது. தாம் தனியான தேசமாக வாழும் விருப்பினை தமது நீண்டலாக வரலாற்றில் வெளி ஆக்கிரமிப்பிற்கெதிரான அவர்களின் போராட்டங்கள் காட்டிநிற்கின்றன. மேலும் 1956 ஆம் ஆண்டிலிருந்து 1970 வரையான காலப்பகுதியில் சமஷ்ட்டி கோரியும், பின்னர் 1977 ஆம் ஆண்டில் தனிநாடு கோரியும் அவர்கள் வக்களித்திருக்கிறார்கள். இதைவிடவும் 1972 மற்றும் 1977 ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசுகளால் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்புக்களுக்கெதிரான தமது உணர்வுகளையும் தமிழர்கள் தெளிவாகவே வெளிக்காட்டியிருக்கிறார்கள்.

  • Thanks 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'ஜெயசிக்குறு எதிர்ச்சமர் களமுனையொன்றில் அழிக்கப்பட்ட தகரியுடன் புலிவீரர்கள்'  
    • இது தங்கடை பல்கலைக்கழகம்...எம்மடை இனம்தான் இதில் படிக்கும் என்றபோர்வையில் இருப்பவற்கு...இதில் என்ன சோதனை அடக்கு முறையை நிறுத்து....இதில் அங்கு யார் அடக்குமுறை செய்வது மாணவர்களை துன்புறுத்தாதே...இங்கு யார் துன்புறுத்துவது..  
    • முதலில் அரசியல்வாதிகள், பொலிஸாரிடமிருந்தே  ஆரம்பியுங்கள் ஊழல் மோசடியை. ஊழல் மோசடியின் ஊற்று இவர்களே.
    • இன்று பலருக்கு தர்ம சங்கடம். மஹிந்த, ரணில் ஆட்சியில் இல்லாதது. இல்லையேல் அவுஸ்திரேலிய நீதிமன்றத்தை எச்சரிப்பார்களா? மைத்திரி பிச்சை எடுத்து கட்டவில்லையா? அவ்வாறே இவரும் செய்ய வேண்டியதுதான். இல்லையேல் பணிப்பெண்ணாக அவுஸ்திரேலியாவில் வேலைது செய்ய கட்டவேண்டியதுதான் யாரும் ஏற்றுக்கொண்டால்.  வெளிநாட்டில் இவ்வாறு அந்தப்பெண்ணை நடத்தியவர் உள்நாட்டில் எப்படி நடத்தியிருப்பார்? 
    • உண்மை! மக்கள் வன்னிக்கு இடம்பெயர்ந்தபோது, வடக்கில் எல்லாம் இயல்பு நிலையில் உள்ளது எனக்காட்ட, இவர் அரசுக்கு முண்டு கொடுத்து, தகுதியற்றவர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு பணிக்கமர்த்தி தேர்தலில் காலங்களில்  தனக்கு வாக்களிக்கும்படியும் கேட்டுக்கொண்டாராம். அரசிடமும் கூலி வாங்கி, மக்களை கடத்தி கொலை, கொள்ளை நடத்தியும் சேகரித்துக்கொண்டார். இதில அரசோடு சேர்ந்து மக்களின் பிரச்னைக்காக உழைத்தாராம். அப்போ ஏன் மக்கள் இவரை நிராகரித்தனர் என்று யாரும் பேட்டி எடுக்கவில்லையா இவரிடம்? முன்பெல்லாம் கலைத்து கலைத்து பேட்டி எடுத்தார்களே. இவரே கேட்டு கொடுத்திருப்பாரோ? சிலர் தனக்கெதிராக பொய்யான அவதூறுகளை பரப்பியதால் தோற்றுவிட்டாராம். அதெப்படி, இவர் நன்மை செய்திருந்தால் எப்படி அவதூறு பாரப்பமுடியும்? சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? முறையிடுபவர்கள் முழுசம்பளம் பெறலாமென எதிர்பார்ப்போடு சேர்ந்திருப்பார்கள், உண்மை தெரிந்த பின் விலகவும் முடியாது, முறைப்பாடு அளிக்கவும் முடியாது, தாம் செய்தது தமக்கு எதிராக திரும்பும் எனத்தெரியும், அதனால் காத்திருந்திருக்கிறார்கள். சேர்த்தது எல்லாவற்றையும் பிடுங்கிப்போட்டு உள்ளே போடவேண்டும். எல்லாத்துறைகளிலும் இவரால் நியமிக்கப்பட்டவர்கள், அவர்களுக்கு வேலை செய்யவும் தெரியாது, நீதி நிஞாயமும் தெரியாது, ஊழலும் லஞ்சமும் சண்டித்தனமுமே நிறைந்திருக்கிறது. இவரால் பணிக்கமர்த்தப்பட்டவர்கள் யாவரையும் விசாரணை செய்து தகுதியற்றவர்கள் நீக்கப்படவேண்டும். விசேஷமாக பிரதேச செயலகங்களில் அதிகமான முறைகேடுகள் இடம்பெறுகின்றன. அவர்களுக்கு பிரச்சனைகளை கையாளும் அறிவுமில்லை திறனுமில்லை மக்களை அலைக்கழிக்கிறார்கள்.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.