Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொய்களின் புதையலே பொன்னியின் செல்வன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொய்களின் புதையலே பொன்னியின் செல்வன்!

-சாவித்திரி கண்ணன்

 

94422014.jpg

சோழ மண்ணின் வரலாற்று அடையாளங்களே இல்லாத காட்சிப்படுத்தல்கள்!, சத்தியம் செய்து சொன்னாலும் கூட தமிழச்சிகள் என நம்ப முடியாத நடிகைகள்! நாளும், பொழுதும் போர்களோடும், சூழ்ச்சிகளோடுமாக மன்னர்கள் வாழ்ந்ததாக காட்டும் அறியாமை! பிரம்மாண்டம் காட்டிடும் பித்தலாட்டச் சினிமா!

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இந்தப் படம் பற்றி எழுதுவதையே தவிர்த்து விடலாம் என்று தான் படம் பார்த்து முடித்ததும் தோன்றியது! அந்த அளவுக்கு படத்தில் வஞ்சகம், சூழ்ச்சி, துரோகம், வன்முறைகள், ரத்தம் போன்றவை தூக்கலாக இருந்தது ஒரு காரணம்! ‘பண்டைய மன்னராட்சி காலம் என்றாலே அன்று இயல்பாக மனிதர்கள் இருந்திருக்க மாட்டார்களோ..’ என கதையை படிக்காமல் படம் பார்க்க வருவர்களை திகிலடைய வைக்கிறது படம்!

கல்கியின் கதையை நம்பியதை விட ஐஸ்வர்யாராய், த்ரிஷா ஆகியோரின் கவர்ச்சியையும், வாள்வீச்சு, அதீத சண்டைக் காட்சிகள், பிரம்மாண்ட காட்சிபடுத்தல் ஆகியவற்றைத் தான் மணிரத்தினம் பெரிதும் நம்பியுள்ளார் எனத் தோன்றுகிறது.

908934.jpg

ஐஸ்வர்யாராய், த்ரிஷா என்ற வயதான முதிர் கன்னிகளை காட்சிபடுத்தலில் அழகுபட காண்பித்தாலும், ‘இளமை மிஸ்ஸிங்’ என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை! மைதா மாவைப் போல வெள்ளையாக காட்சியளிக்கும் இந்த இருவரையும் சோழ மண்ணின் தமிழச்சிகளாக ஏற்க மனம் ஒப்பவில்லை. இந்த கடந்த கால் நூற்றாண்டாக ஐஸ்வர்யா ராயை விட சிறந்த அழகியை மணிரத்தினத்தால் இந்திய திரையில் அடையாளம் காண முடியவில்லை என்பது அவரது தேங்கிய ரசனைக்கு அடையாளமாகும். அதே சமயம் ஐஸ்வர்யா, த்ரிஷா இருவரும் இளமையைக் கடந்தவர்கள் என்பதைத் தவிர, இவர்களின் அழகிலோ, நடிப்பாற்றலிலோ எந்தக் குறையும் சொல்ல முடியாது.

படத்தின் நல்ல அம்சங்கள் என சொல்ல வேண்டுமென்றால், மன்னராட்சி கால பிரம்மாண்டத்தை காட்சிபடுத்திய மெனக்கிடல்களை சொல்லியே ஆக வேண்டும்.ஏ.ஆர்.ரகுமானின் இசை படத்திற்கு வலு சேர்க்கிறது. நடிகர், நடிகைகளின் திறமைகள் சரியாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக வந்தியத் தேவனாக வருகின்ற கார்த்தியின் நடிப்பு அசத்தலாக உள்ளது. வீரம், காதல், நகைச்சுவை, புத்திசாலித்தனம், மன்னர் முன் காட்டும் பணிவு, குதிரையில் பறக்கும் வேகம்.. என நவரச நடிப்பில் மிளிர்கிறார் கார்த்தி!

2836.jpg

வந்தியத் தேவன் கதாபாத்திரத்தை சாதுர்யமிக்க ரசனைக்குரிய இளம் வீரனாக கல்கி படைத்திருந்தார். ஆனால், அவனை பெண்களிடம் ஜொள்ளு வழிபவனாக காட்சிபடுத்திவிட்டார் மணிரத்தினம். ஆழ்வார்க்கடியான் பாத்திரத்தை மிகவும் மிகைப்படக் காண்பித்துள்ளார் மணிரத்தினம். அதில் சாதுர்யமும், தந்திரமும் கொண்ட வைஷ்ணவ பிராமணரை தத்ரூபமாக கண்முன்பு நிறுத்தி விட்டார் ஜெயராம்!

ஆழ்வார்க்கடியானின் ஜாதி, மதப் பெருமிதங்களை வந்தியத் தேவன் துச்சமாக கிண்டலடித்து, அவரது திமிரை அடக்கி ஆளும் காட்சிகளின் வழியே தனது சார்பற்ற பொதுத் தன்மையை மணிரத்தினம் வெளிப்படுத்தியுள்ளார் என்பது கவனத்திற்கு உரியது!

image-1.jpg

ஜெயம் ரவியின் கம்பீரம் சிறப்பாக இருந்தாலும், ஏதோ ஒரு சோகக் களை அவர் முகத்தில் சதா இருப்பது போல் இருந்ததை தவிர்த்து இருக்கலாம்! பூங்குழலியாக வரும் பெண்ணும் நல்ல ‘பெர்பாமன்ஸ்’ தந்துள்ளார்.

படத்தின் பெரும் பகுதியை சண்டைக் காட்சிக்கு தந்துவிட்டபடியால் பிரபு, பார்த்தீபன், விக்ரம் பிரபு, மோகன்ராம், ஜெயச் சித்ரா போன்ற திறமையான கலைஞர்களுக்கு போதிய வாய்ப்பளிக்க முடியாமல் போய்விட்டதோ… எனத் தோன்றுகிறது.

பொன்னியின் செல்வன் மிக சுவாரஷ்யமான சோழர் கால வரலாற்று புதினம்! வரலாற்றை கொஞ்சம் மட்டுமே எடுத்துக் கொண்டு அதில் தன் புனைவுகளோடு,  பொய்யையும் சேர்த்தே கலந்திருந்தார், கல்கி! ஆதித்திய கரிகாலனைக் கொன்றது பார்ப்பனர்கள் என்பதை மறைத்து, பாண்டியர் எனச் சொல்லிய ஒரு பொய்க்கு வலு சேர்க்க பல புனைவுகளை வலிந்து, அவர் திணித்தார்! அதில் நந்தினியின் பாத்திர படைப்பு தொடங்கி ஆபத்துதவிகள் என்ற பாண்டிய படை வரை அனைத்தும் அந்தப் பொய்க்கு வலு சேர்க்க செய்யப்பட்ட பெரும் புனைவுகளே!

மணிரத்தினமும் தன் பங்கிற்கு அந்தப் பொய்யை வலுப்படுத்த அருவருக்கத்தக்க வகையில் பாண்டியர்களை நாகரீகமே இல்லாத காட்டுமிராண்டிகள் போல விகாரமாகக் காட்டியுள்ளார். இது மிகப் பெரிய பிழை என்பதைவிட, அநீதியாகும்! இத்தகையை சிறுமதியுடன் ஒரு வரலாற்றை படமாக்கியுள்ள அறியாமையை என்னென்பது?

ponniyin-selvan.jpg

ஆதித்திய கரிகாலன் மீது அன்றைய பார்ப்பனர்களுக்குத் தான் கோபம் ஏற்பட்டு போட்டுத் தள்ளி விட்டார்கள்! ஆனால், மணிரத்தினத்திற்கு என்னாச்சு? மிகையான போர் வெறியனாகவும், நிதானமற்ற பெண் பித்தனாகவும் காட்டியுள்ளாரே! ஏதோ நந்தினியையே சதாசர்வ காலமும் நினைத்து வாழ்க்கையை தொலைத்தவனைப் போல அவனை வெறிபிடித்தவன் போல காட்டி இருப்பது, அவனது சரித்திரப் பெருமைக்கே இழுக்காகும்!

சினிமா சோழ பிரதேசத்தின் வரலாறு என்ற நிலையில் சோழ மண்ணின் வரலாற்றுத் தடயங்களோ, மக்களின் பண்பாட்டு கூறுகளோ  துளியும் இல்லாதவாறு படம் எடுத்து வெற்றி காண முடியும் என்பதை மணிரத்தினம் நிருபித்து உள்ளார். காட்சிப்படுத்தப்பட்டு உள்ள வட இந்திய பிரம்மாண்ட அரண்மனைக் கட்டிடங்கள் மிகவும் உறுத்தலாக உள்ளது.

அடிக்கடி ஆபத்துகளின் போது வந்து உதவும் ஒரு அமானுஷ்ய பெண் கதாபாத்திரம் சுந்தரச் சோழனின் சொல்லப்படாத துரோகத்திற்காக நேர்மறையாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு வீரப் பெண்ணின் தியாகமே என்பதை கல்கியைப் போலவே மணிரத்தினமும் தெளிவு படுத்தாமல் கடந்து விட்டார்! மன்னர் குடும்ப மகாத்மியங்களைத் தான் இவர்களால் பார்க்க முடியும். அதே காலகட்டத்தில் மண்ணில் உயிர்ப்போடு நடமாடிய எளியவர்கள் எவ்வளவு பெரிய தியாகங்களை செய்தாலும், இவர்கள் பதிவு செய்யவும் மாட்டார்கள், நன்றி பாராட்டவும் மாட்டார்கள் என்பதற்கு இதுவே அத்தாட்சி!

மன்னர்களின் படாபடோப வாழ்வே எளிய மக்களின் எண்ணிலடங்கா அர்ப்பணிப்புகளால் தான் சாத்தியமானது என்பதைச் சொல்லும் நேர்மையை நாம் இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது! உண்மையான வரலாற்றை ஊனமாக புரிந்து கொள்ளத்தக்க வகையில், உருவாக்கப்பட்ட படமே பொன்னியின் செல்வன்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

https://aramonline.in/10773/ponniyin-selvan-manirathinam/

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னியின் செல்வன் காய்த்தல் உவத்தல் இன்றிய விமர்சனம்.

.நான் .கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை சிறுவயதிலே வாசித்திருக்கிறேன்.நேற்று பொன்னியின் செல்வன் படம் குடும்பத்தோடு சென்று பார்த்தேன். படம் பார்க்கும்பொழுது படம் தொடங்கி முடியும்வரையில் ஊசி விழுந்தால் கேட்குமளவுக்கு  மிகவும் அமைதியாகவும் கவனத்தோடும் தமிழர்கள் படம்பார்த்தார்கள். அந்த அளவுக்கு தமிழர்கள் ஆர்வத்துடனும் உணர்வு பூர்வமாகவும் பார்த்த படத்தை  இயக்கிய மணிரத்தினம் அதை புர்த்தி செய்தாரா என்பதை படம் பாரத்தால் புரிந்து கொள்ளலாம்.  இந்தப்படத்தைப் பற்றிய பலவிதமான விமர்சனங்கள் சர்ச்சைகள் இருந்தாலும். இந்தப்படத்திற்கு தமிழ்மக்கள் வரவேற்பு கொடுக்க வேண்டும்.இதன் மூலம் எமது தமிழர்களின் வரலாற்றை எமது இளைய சமுதாயத்திற்கு கடத்த வேண்டும் .இந்தப்படத்தின் வருகையின் பின்னர் பல விதமான கோணங்களில் பலவிதமான ஆராய்ச்சியாளர்களின் பேட்டிகள் வெளிவந்து படத்தில் இடம்பெற்ற வரலாற்றுத் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டதோடு மட்டுமல்ல அந்த ஆய்வாளர்களின் கருத்துக்கள் மக்களைச் சென்றடைவது தமிழ்மக்களுக்கும் உலகத்திற்கும் தமழர்கனின் வரலாறு பற்றிய மேலும் தேடல்களுக்கான முயற்சிகளுக்கு ஊக்க மளிக்கும். பொன்னியின் செல்வன் நாவல்களுக்கு கடைகளில் தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வருவது மகிழ்சியளிக்கிறது.
இனிபடத்தைப்பற்றி சொல்வதானால் படம் நன்றாக எடுக்கப்பட்டிருக்கிறது.இரளய தலைமுறையினருக்கு புரியக் கூடிய வகையில் வசனங்கள் அமைக்கப்பட்டு ஆங்கில உப தலைப்புடன் வெளிவந்திருக்கிறது. சோழர்கள்  என்றால் புலிக்கொடியைத் தென்கிழக்கா முழுவதும் நாடி;டி பெரிய பேரரசை நிசுவியவர்கள். அந்தப் பேரரசின் கொடியான புலிக் கொடியைத் தகுந்த முறையில் காட்டவில்லை. அதை வேண்டுமென்றே தவிர்த்திருப்பது படத்தில் தெளிவாகத் தெரிகிறது. அரசல் புரசலாக காட்டப்ப சிறு சந்தர்பங்களிலும் அது புலிக்கொடி போன்று தேற்றமளிக்காது முள்ளம்பன்றி போல N.மேலும் கல்கி கதையில் இலங்கையை ஈழம் என்றே குறிப்பிட்ருப்பார். அந்தக்காலத்தில் முழு இலங்கையையும் ஈழம் என்றே அழைத்தார்கள். அதுவும் கவனமாகத்  தவிர்க்கப்பட்டுள்ளது.. அதை வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறார்கள்.ஒரே ஒரு இடத்தில் ஈழம் என்று சொல் வருகிறது. மேலும் இலங்கையைக காட்டும் பொழுது அது புத்த பூமி போலவும் அங்கு வாழும் மக்கள் புத்த மதத்தையும் செர்ந்தவர்களாகவும் சங்கள மொழியைப் பேசுபவர்களாகும் சித்தரிக்கப்பட்டுள்ளது. சோழர்களின் வருகைக்கு முன்பே ஏன் சிங்களவர்களின் வருகைக்கு முன்பே தமழர்கள் அங்கே வாழ்ந்தார்கள் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கிறது. ஒரு இழத்தமிழனின் பணத்தில் படத்தை எடுத்தவர்கள் இழத்தில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்று காட்வே இல்லை. இது மிகப் பெரிய வரலாற்றுத் தவறு. மேலும் என்று இலங்கை என்று தாய்லாந்தில் படமாக்கப்பட்டதனால் இலங்கையில் இல்லாத தொப்பிகள் கட்டடங்கள  எல்லாம் காட்சிகளில் தெரிகிறது. இழத்தமிழர்கள் பற்றி விடயங்களை புலிக் கொடி போன்றவற்றை கவனமாகத்தவிர்த்தவர்களுக்கு இந்தக்குறைகள் ஏன் கண்களுக்குத் தெரியவில்லை. முலும் படம் தொடங்கும் பொழுதே தேவையற்ற வித்தில் இந்து மதக் குறியீடு  காண்பிக்கப்பட்டது ஏன்?  மேலும் படத்தில் இடையிடையே சமஜ்கிருத சுலோகங்கள்  கூடதலாகவும் ஒன்றிரண்டு இடங்களில் தேவாரப் பண்ணிகைள் போடப்பட்டதும் நெருடலைக் கொடுக்கிறது. மற்றும்படி படம் நன்றானவே எடுக்கப்பட்டிரக்கிறது. கடைசி காட்சியான கப்பற் சணடை பிரமாதகக் காட்ப்பட்டீருக்கிறது.  புலிமுகத்தோடு வரும் கப்பலை  புங்குழலி இது சோழ நாட்டுக் கப்பலா என்று கேட்குமளவுக்கு புலிக் கொடி இல்லாமல் கப்பல் வந்திருக்கிறது.  நடிகர்கள் தங்கள் பாத்திரத்தின் பொருளுணர்ந்து நடித்திருக்கிறார்கள். விக்ரமும் ,ஜெயராமும்  நல்ல நடிப்பு . பாத்திரத் தெரிவுகளில் ரகுமான் ஒரு வருங்கால  அரசானாக வர ஆசைப்படுபவர் அதற்கான மிடுக்கோடு இல்லை. சோர்வாகத் தெரிகிறார். இi நன்றாக இருக்கிறது. இக்கால இளைஙர்களுக்கு ப் பிடித்தமாக இருந்தாலும் பாடல்களில் தமிழன் ஆளமை போதவில்லை. பல இடங்களில் பாடல் வரிகளைப் புரிந்து கொள்ளாத முறையில் இசை ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. பின்னணி இசை மிகமிக நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் தமிழுணர்வை வைத்து பணம் உழைக்கும் முயற்சிகாக இருந்தாலும் இந்தப் படத்தை வரவேற்கிறோம். இரண்டாம் பாகம் எற்கனவே எடுக்கப்பட்டு விட்டாலும் முதற்பாகத்தில் சுட்டிக்காட்டப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்தால்  தமழர்கள் இந்தப்பட்டiதின் 2 ஆம் பாகத்தைக் கொண்டாடுவார்கள். இப்படியான படங்களில் சிவாஜி இல்லாத குறை தெளிவாகத் தெரிகிறத. அந்த மிடுக்கும் கம்பீரமும் ராஜ நடையும் அழுத்தமான வசன உச்சரிப்புகளும் தவற விடப்பட்டுள்ளது. தமிழ்மக்கள் அனைவரும் குடும்பத் தோடு பார்க்க வேண்டிய படம் கொங்சமாவது தமிழர்களின் வராலாற்றை அறிந்து கொள்ளலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.