Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா சுமதிபுரத் தாக்குதலை அடுத்து வீரபுரம் தமிழ்க் கிராமத்தில் குண்டர்கள் அட்டகாசம்! இரு தமி ழர்கள் கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா சுமதிபுரத் தாக்குதலை அடுத்து வீரபுரம் தமிழ்க் கிராமத்தில் குண்டர்கள் அட்டகாசம்!

நேற்றுமுன்தினம் வவுனியா உலுக் குளம் பகுதியில் ஊர்காவலர் மீது நடத் தப்பட்ட தாக்குதலில் ஐந்து ஊர்காவ லர்கள் கொல்லப்பட்டமையைத் தொடர்ந்து குண்டர்களால் தமிழர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இரு தமி ழர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின் றார்கள்.

வன்னி மாவட்டத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப் பினர் என்.சிவசக்தி ஆனந்தன் ஊடக அறிக்கை ஒன்றில் இது குறித்துத் தெரி வித்திருக்கின்றார்.

இந்த அறிக்கையில் அவர் தெரிவித் திருக்கின்றவை வருமாறு :

20ஆம் திகதி செட்டிக்குளம் பிர தேசத்திலுள்ள சுமதிபுர பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 05 ஊர்கா வலரும் கொல்லப்பட்டமையைத் தொடர்ந்து, ஊர்காவற்படையினரும் எல்.பி கொலனி, அளுத்கம, சுமதிபுர ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சிங்கள மக்களும் சம்பவம் நடந்த இடத்திலி ருந்து ஒரு கிலோமீற்றர் தொலைவி லுள்ள வீரபுரம் என்ற தமிழ் கிராமத் திற்குள் புகுந்து பொதுமக்களைத் தாக் கியதுடன், இம்மக்களின் பெறுமதி யான சொத்துக்களையும் சூறையாடிச் சென்றுள்ளனர்.

மேற்படி கிராமத்திலுள்ள பெண் கள், குழந்தைகள், வயோதிபர்கள் கூட கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டுள்ள னர். அத்துடன் அங்கு நடத்தப்பட்ட துப் பாக்கிப் பிரயோகம் காரணமாக, வீரபுரம் கிராம அபிவிருத்திச் சங்க முன்னாள் தலைவர் ஆறுமுகம் நாகலிங்கம் (வயது 55) என்பவர் அவரது வீட்டில் வைத் துக் கொல்லப்பட்டுள்ளார்.

மேலும்,அவ்வேளையில் சேவை யில் ஈடுபட்டிருந்த இலங்கைப் போக்கு வரத்துச் சபை பஸ்ஸின் சாரதியாகிய செந்தில்நாதன் (வயது 35) ஊர்காவ லரால் சம்பவம் நடந்த இடத்தில் வைத்து பஸ்ஸில் இருந்து பலவந்தமாக இறக் கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மேற்படி சம்பவங்கள் தொடர்பாக வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் பாரபட்சமற்ற நீதி விசா ரணை நடத்துமாறு கோரியுள்ளேன்.

மேற்படி வீரபுரம் உட்பட செட்டிக் குளம் பகுதி மக்கள் இதற்கு முன்ன ரும் பல தடவைகள் பாதுகாப்புப் படையினரால் துன்புறுத்தலுக்குள்ளா னமையால், அங்கிருந்து அகதிகளாக இந்தியாவிற்கும் வேறு இடங்களுக் கும் நாளாந்தம் வெளியேறிச் சென்ற வண்ணமுள்ளனர். தற்போது மீதமாக வுள்ள மக்களையும் அச்சுறுத்தும் நட வடிக்கைகள் தொடர்கின்றன. ஜீவனோ பயத்திற்காக அன்றாடம் கூலி வேலைக் குச் செல்லும் மிகவும் வறிய மக்களே இக்கிராமத்தில் வாழந்து வருகின்றனர்.

ஏற்கனவே,வாழ்வதற்காகப் போரா டும் மேற்படி அப்பாவிப் பொதுமக்கள் மீது அரச படைகளும் சிங்களக் குண் டர்களும் அடிக்கடி தாக்குதல் நடத்து கின்றமை மிகவும் கண்டிக்கத்தக்கது. மக்களைப் பாதுகாக்கவேண்டிய அரச படை களே இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றன.

அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் அடிக்கடி நடக் கும் மோதல்கள் காரணமாக, ஆத்திர முற்று, பழிதீர்க்க முற்படும் அரச படை யினர் அப்பாவித் தமிழ்ப் பொதுமக் களை இலக்கு வைப்பது இனிமேலும் தொடராமல் இருப்பதை, உறுதிப் படுத்துவது இலங்கை அரசின் கடமை யாகும். இதனைத் தடுக்க வேண்டி யது அரசின் கடமையல்ல என்று உத றித் தள்ளிவிடமுடியாது என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

- உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

வீரபுரம் தமிழ்க் கிராமத்தில் சிங்கள காடையர்கள் தாக்குதல் : இரு பொதுமக்கள் பலி

Written by Ravanan - Aug 22, 2007 at 09:46 PM

செட்டிகுளம் சுமதிபுர பகுதி ஊர்காவல் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து இ.போ.ச. பஸ் சாரதியான தமிழரொருவரும் அயலில் உள்ள தமிழ் கிராமமான வீரபுரம் பகுதியைச் சேர்ந்த கிராம அபிவிருத்தி சங்க முன்னாள் தலைவரொருவரும் ஊர்காவல் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.