Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு கால வரலாற்றில் தலைவர் பதவிக்கு 6ஆவது முறையாக இன்று தேர்தல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு கால வரலாற்றில் தலைவர் பதவிக்கு 6ஆவது முறையாக இன்று தேர்தல்!

காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு கால வரலாற்றில் தலைவர் பதவிக்கு 6ஆவது முறையாக இன்று தேர்தல்!

காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு கால வரலாற்றில் தலைவர் பதவிக்கு 6ஆவது முறையாக இன்று (திங்கட்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது.

இடைக்கால தலைவராக உள்ள சோனியா காந்தி, அப்பதவியில் தொடர விரும்பாததால் தேர்தல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

தேர்தலில், மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

வாக்குகள் எதிர்வரும் 19ஆம் திகதி எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் காந்தி-நேரு குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என யாருமே போட்டியிடவில்லை.

எனவே, இந்தத்தேர்தலில் கார்கே அல்லது சசிதரூரில் யாரேனும் ஒருவர் வெற்றி பெற்று, பதவி ஏற்றால், 24 ஆண்டுகளில் அப்பதவியை ஏற்கும் சோனியா காந்தியின் குடும்பத்தைச் சாராத முதல் நபர் எனும் பெருமையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1305245

  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி

19 அக்டோபர் 2022, 08:53 GMT
புதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர்
 

Mallikarjun Kharge

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் கார்கே 7897 வாக்குகளைப் பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சசி தரூர் 1,072 வாக்குகளைப் பெற்றார் என்று இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.

மாநில அமைச்சர், மத்திய அமைச்சர், மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ள மல்லிகார்ஜுன கார்கே, இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.

24 ஆண்டுகளுக்கு பின் நேரு - காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகியுள்ளார். இதற்கு முன் நேரு - காந்தி குடும்பத்தைச் சேராத சீதாராம் கேசரி 1996-98 காலகட்டத்தில் இப்பதவியில் இருந்தார்.

 

தற்போது 80 வயதாகும் மல்லிகார்ஜுன கார்கே கர்நாடக மாநில அரசியலில் காங்கிரசின் முக்கியத் தலைவராக இருந்தவர். கர்நாடகாவிலும், தேசிய அளவிலும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலித் முகமாக உள்ளவர் கார்கே.

மல்லிகார்ஜுன கார்கேவை எதிர்த்து போட்டியிட்ட சசி தரூர், ராகுல் காந்தி உள்ளிட்டோர் அவர் தலைவர் பதவிக்கான தேர்தலில் வென்றுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

மல்லிகார்ஜுன கார்கேவின் அரசியல் பயணம்

1972 முதல் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து ஒன்பது முறை வெற்றி பெற்ற அவர் 2009 மற்றும் 2014இல் குல்பர்கா மக்களவைத் தொகுதியில் வென்று இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்வானார். அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டபோது 2019இல் அவர் தோல்வியடைந்தார். பின்னர் 2021இல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வானார்.

கர்நாடகாவில் வெவ்வேறு காங்கிரஸ் அரசுகளில் அமைச்சர் பொறுப்பு வகித்தவர் தலித் சமூகத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் வென்றபின் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும், ரயில்வே அமைச்சராகவும் பதவி வகித்தார்.

2014 தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியைச் சந்தித்தது. 2014-2019 காலகட்டத்தில் காங்கிரஸ் மக்களவைக் குழுவின் தலைவராக இருந்தார்.

 

மல்லிகார்ஜுன கார்கே

பட மூலாதாரம்,ANI

2021இல் மாநிலங்களவைக்குத் தேர்வான பின் அந்த அவையின் எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் முன், ஒருவர் இரண்டு பதவிகள் வகிக்கக் கூடாது என்ற கட்சி விதியின் அடிப்படையில் அவர் அப்பதவியில் இருந்து விலகினார்.

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த பிறகு அக்கட்சியின் அகில இந்தியத் தலைவராக இருந்த ராகுல் காந்தி அப்பதவியில் இருந்து விலகினார்.

பின்னர் சோனியா காந்தி இடைக்கால தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். சுமார் மூன்று ஆண்டுகள் சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக இருந்தபின் தலைவர் பதவிக்கு உள்கட்சித் தலைவர் தேர்தல் நடந்தது.

களத்தில் கடை நேரத்தில் நுழைந்த கார்கே

 

மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி

சசி தரூரை எதிர்த்து போட்டியிட்டு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோத் காங்கிரஸ் தலைவராக வெல்வதற்கே அதிக வாய்ப்புள்ளதாக முதலில் கருதப்பட்டது.

எனினும், அவர் முதல்வர் பதவியில் இருந்து விலக மறுத்துவிட்டதால் நேரு - காந்தி குடும்பத்தின் அதிருப்திக்கு உள்ளானார் என்று செய்து வெளியானது. பின்னர் அவர் போட்டியில் இருந்து விலகினார்.

பின்னர் எதிர்பாரா விதமாக மல்லிகார்ஜுன கார்கே களத்தில் கடை நேரத்தில் நுழைந்தார்.

நேரு - காந்தி குடும்பத்தின் ஆதரவைப் பெற்றவர் இவர்தான் என்று செய்திகள் வெளியானாலும், தங்கள் நடுநிலைமை வகிப்பதாகவே சோனியா காந்தி கூறினார்.

https://www.bbc.com/tamil/india-63311654

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சுயமாக முடிவெடுப்பாரா ஆட்டி வைக்கப்படுவாரா?

  • ஜூபைர் அகமது
  • பிபிசி செய்தியாளர்
24 நிமிடங்களுக்கு முன்னர்
 

மல்லிகார்ஜுன கார்கே

 

படக்குறிப்பு,

சோனியா காந்தி, பிரியங்கா காந்தியுடன் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவரது குடும்பத்தினர்

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வாகியிருக்கிறார். அக்கட்சியின் தலைமை பதவிக்கு நடந்த தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு 7,897 வாக்குகள் கிடைத்துள்ளன.அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சசி தரூருக்கு 1,000 வாக்குகள் கிடைத்தன.

காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டுகால வரலாற்றில் ஆறாவது முறையாக, அக்கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. சுதந்திரம் பெற்றதில் இருந்து கட்சியின் தலைமை பொறுப்பு பெரும்பாலும் காந்தி குடும்பத்தினர் கைகளில்தான் இருந்து வந்துள்ளது அல்லது சில நேரங்களில் தலைவர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

கட்சித் தலைவர் பதவிக்கான போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என காந்தி குடும்பத்தினர் (நேரு வழி குடும்பத்தினர்) முடிவு செய்த நிலையில், இந்த பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் ஆகிய இரு தலைவர்கள் போட்டியிட்டனர்.

வாக்களிக்க தகுதியான 9,900 கட்சி பிரதிநிதிகளில் 9,500 பேர் வாக்களித்தனர் என்று காங்கிரஸ் மத்திய தேர்தல் கமிட்டி தலைவர் மதுசூதன் மிஸ்திரி அறிவித்தார். இதைத்தொடர்ந்து புதன்கிழமை முடிவுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து, நீண்ட காலமாக காங்கிரஸ் தலைவராக இருந்து வரும் சோனியா காந்தியின் இடத்தில் இனி மல்லிகார்ஜூன் கார்கே புதிய தலைவராக இருப்பார்.

 

இதற்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக யார் வந்தாலும் அவர் பல சவால்களை சந்திக்க நேரிடும் என அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து நிலவுகிறது.

புதிய தலைவர் எதிர்கொள்ளும் முக்கிய சவால்

கட்சியின் மீது தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டுவது, அனைவரும் தன்னை ஏற்றுக்கொள்ளச் செய்வது, தனது கருத்துக்களை ஏற்க வைப்பது போன்றவை புதிய தலைவர் எதிர்கொள்ளவிருக்கும் மிக முக்கியமான சவாலால்களாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இதேவேளை தலைவரின் 'ரிமோட் கண்ட்ரோல்' (ஆட்டுவிப்பவராக) சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி இருப்பார்கள் என்பதால் உண்மையான அதிகாரம் காந்தி குடும்பத்தின் கைகளில்தான் இருக்கும் என்று பல ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

மல்லிகார்ஜுன கார்கே, காந்தி குடும்பத்திற்கு நெருக்கமானவராகக் கருதப்படுவதாலும், அந்த குடும்பத்தின் வேட்பாளராக அவர் கருதப்படுவதாலும், ரிமோட் கண்ட்ரோல் பற்றிய பேச்சு அடிபடுகிறது.

சில நாட்களுக்கு முன்பு கட்சியின் கிளர்ச்சித் தலைவர் சஞ்சய் ஜா எழுதியிருந்த கட்டுரைக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், "மல்லிகார்ஜுன கார்கேயின் அதிகாரபூர்வ வேட்புமனு - காங்கிரஸ் எப்படி தன்னைத்தானே தாழ்த்திக்கொள்கிறது" என்று தலைப்பிட்டிருந்தது.

தலைவர் பதவிக்கான தேர்தல் ஒரு கேலிக்கூத்து. ஏனென்றால் கார்கே, காந்தி குடும்பத்தின் 'ஒரு காவலாளி' என்று சஞ்சய் ஜா தனது வாதத்தை முன்வைத்துள்ளார்.

 

பிரியங்கா காந்தி

அப்படியென்றால் கட்சியின் தலைமை உண்மையில் காந்தி குடும்பத்திடம்தான் நீடிக்குமா?

"இல்லை கண்டிப்பாக இல்லை. அவருக்கு அத்தகைய குணம் இல்லை. எல்லோருமே வேண்டும் என்று நினைக்கும் பிரதமர்பதவியை சோனியா காந்தி மன்மோகன் சிங்கிற்கு வழங்கினார். ஒருமுறை அல்ல இரண்டு முறை அளித்தார். தனக்கு பதவி ஆசை இல்லை என்று நிரூபித்தார்," என்று அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும், உத்தர பிரதேச காங்கிரஸின் மூத்த தலைவருமான அகிலேஷ் பிரதாப் சிங் பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டிருப்பதன் மூலம் காந்தி குடும்பம் அந்தப்பதவிக்கு ஆசைப்படவில்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது என்றார் அவர்.

"காந்தி குடும்பத்தின் முடிவுகள் கட்சித் தலைவர் மீது திணிக்கப்படாது. நாங்கள் இங்கே கூட்டாக முடிவுகளை எடுக்கிறோம். அவர்கள் தங்கள் முடிவுகளை திணிக்க மாட்டார்கள், ராகுல் மற்றும் சோனியா அவர்களின் குணம் எனக்குத்தெரியும்,"என்று அகிலேஷ் பிரதாப் சிங் கூறினார்.

 

சசி தரூர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தலித்துகளை மீண்டும் கட்சிக்குக் கொண்டு வர கார்கேயால் முடியுமா?

80 வயதான கார்கே, காங்கிரஸின் மிக முக்கியமான தலித் முகங்களில் ஒருவர் கட்சிக்கு வலுவான பிடி உள்ள கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். பெரிய தலைவர்களுடன், குறிப்பாக காந்தி குடும்பத்துடன் நல்லுறவு வைத்திருக்கும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். ஆனால் சாதாரண கட்சித்தொண்டர்கள் மத்தியில் அவரது பிடி பலவீனமாக இருப்பதாக கூறப்படுகிறது.

திங்களன்று வாக்களித்துவிட்டு திரும்பிய தலித் காங்கிரஸ் தலைவர் ஒருவர்," கார்கே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால். கட்சியை விட்டு வெளியேறிய தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்புவார்கள்," என்று கூறினார்.

கார்கே, கட்சிக்கும் காந்தி குடும்பத்துக்கும் இடையிலான இணைப்பு போன்றவர் என்று அவர் தெரிவித்தார். காந்தி குடும்பத்தின் கைப்பாவை என்று கார்கேயை சொல்வது சரியல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரிமோட் கண்ட்ரோல் பற்றிய பேச்சு தவறானது. என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் திங்களன்று என்டிடிவி சேனலிடம் கூறினார். ஆனால் புதிய தலைவர் காந்தி குடும்பத்துடன் ஆலோசனை கலக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்..

பல தசாப்தங்களாக காங்கிரஸ் கட்சியை கவனித்து வருபவர் மூத்த பத்திரிகையாளர் பங்கஜ் வோஹ்ரா. புதிய தலைவருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கப்போவது "அதிகாரத்தை சமன் செய்தல்" என்று அவர் கூறுகிறார். இதன் கீழ் கட்சியின் மீதான கட்டுப்பாடு காந்தி குடும்பத்திடம் தொடர்ந்து இருப்பதை புதிய தலைவர் உறுதிசெய்ய வேண்டும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் (யுபிஏ) மாதிரி பின்பற்றப்படுவதாக பங்கஜ் வோஹ்ரா கருதுகிறார். பிரதமராக மன்மோகன் சிங் இருந்தபோதிலும்கூட உண்மையான அதிகாரம் சோனியா காந்தியின் கையில்தான் இருந்தது என்று கூறப்படுகிறது.

 

ரிமோட் கண்ட்ரோல் பற்றிய பேச்சு தவறானது.என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறினார்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ரிமோட் கண்ட்ரோல் பற்றிய பேச்சு தவறானது.என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறினார்.

நீண்ட காலம் தலைவராக இருந்த சோனியா காந்தி

ஒரு கட்டத்தில் கட்சியின் மீதான காந்தி குடும்பத்தின் பிடி மிகவும் தளர்வாகி சோனியா காந்தி தனிமைப்படுத்தப்பட்டார்.

1992 முதல் 1998 வரை பி.வி.நரசிம்மராவ் மற்றும் சீதாராம் கேசரியின் கைகளில் கட்சியின் அதிகாரம் இருந்தது.

பிறகு சோனியா காந்திக்கு நல்லகாலம் வந்தது. அவர் 1998 முதல் 2017 வரை கட்சியின் தலைவராக இருந்தார். இரண்டு பொதுத் தேர்தல்களில் கட்சியை வெற்றிப்பாதையில் இட்டுச்சென்றார். 2019 இல் ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜிநாமா செய்த பின்னர் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா ஆனார்.

காங்கிரஸின் தலைவராக அவர் நீண்ட காலம் பதவி வகித்தார்.

நரசிம்மராவ், சீதாராம் கேசரி காலத்தில் நடந்ததுபோல புதிய தலைவர் கட்சியில் தனது பிடியை வலுப்படுத்திக் கொண்டால், காந்தி குடும்பம் படிப்படியாக பொருத்தமற்றதாகி விடுமா? மேலும் கட்சியில் குடும்பத்தின் முக்கியத்துவம் முடிவுக்கு வருமா?

இந்தக் கேள்விகள் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பரவலாக காணப்படுகிறது.

 

காங்கிரஸின் தலைவராக அவர் நீண்ட காலம் பதவி வகித்தார், சோனியா காந்தி

பட மூலாதாரம்,GETTY IMAGES

"குடும்பம் எப்படி பொருத்தமற்றதாக மாறும்? ஒரு தலைவர் எப்போதுமே தலைவர்தான்."என்று அகிலேஷ் பிரதாப் சிங் குறிப்பிட்டார்.

கட்சியின் எல்லா முக்கிய முடிவுகளிலும் மற்ற தலைவர்கள் போலவே காந்தி குடும்பமும் பங்களிப்பை அளிக்கும். காங்கிரஸ் காரியக் கமிட்டி அல்லது கட்சியின் நாடாளுமன்றக் குழு உறுப்பினர் என்ற வகையில் அவர்கள் பங்களிப்பார்கள் என்று அகிலேஷ் பிரதாப் சிங் மேலும் கூறினார்.

காந்தி குடும்பம் பொருத்தமற்றதாக ஆகாது என்று பங்கஜ் வோஹ்ராவும் கருதுகிறார்.

2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்துவது புதிய தலைவரின் மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

2024 பொதுத் தேர்தல் மற்றும் அதற்கு முன்பாக பல மாநிலங்களிலும் , கட்சியின் வெற்றிக்கு உதவும் ஒரு தலைவர் காங்கிரஸுக்குத் தேவை என்று சஞ்சய் ஜா தனது கட்டுரையில் கூறுகிறார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

புதிய கட்சித் தலைவரின் முதல் சோதனை இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல். இதற்காக அவரிடம் மிகக் குறைந்த கால அவகாசமே உள்ளது என்று பங்கஜ் வோஹ்ரா தெரிவித்தார்.

தேர்தலில் கட்சியை வெற்றிபெறச்செய்வதற்கு முன்பாக, ராகுல் காந்தியின் 'பாரத் ஜோடோ யாத்திரையில் உருவான 'நல்லெண்ணத்தை' எப்படி வாக்குகளாக மாற்றுவது என்பதுதான் புதிய தலைவரின் பெரிய சவாலாக இருக்கும் என்று அகிலேஷ் பிரதாப் சிங் குறிப்பிடுகிறார்.

"பாரத் ஜோடோ யாத்திரை முடிவடைந்து ஒரு வருடத்திற்குப் பிறகு மக்களவை தேர்தல் உள்ளது. யாத்திரை உருவாக்கிய உத்வேகத்தையும் , இயக்கத்தையும் தக்க வைத்துக் கொள்வது பெரிய சவாலாக இருக்கும்,"என்று அவர் கூறுகிறார்.

பங்கஜ் வோஹ்ராவும் இதை ஏற்றுக்கொள்கிறார். பாரத் ஜோடோ யாத்திரை கேரளாவிலும் கர்நாடகாவிலும் இதுவரை நல்ல பலனைத் தந்துள்ளது. ஆனால் அதை எப்படிப் பலப்படுத்தி பொதுத் தேர்தல் வரை பாதுகாப்பாக வைத்திருப்பது என்பதில் கட்சித் தலைவர் செயல்பட வேண்டும் என்கிறார் அவர்.

 

காங்கிரஸ் கட்சி - மல்லிகார்ஜுன கர்கே

பட மூலாதாரம்,@INCINDIA

தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள்வது கட்சிக்கு பெரும் சவாலாக உள்ளது.

கட்சியின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தற்போதைய நெருக்கடியில் இருந்து கட்சியை மீட்டெடுப்பதும், கட்சியில் அடிமட்ட அளவில் ஆற்றலை உருவாக்குவதும் புதிய தலைவருக்கு பெரும் சவாலாக இருக்கும்.

" வட்டார அளவில், மாவட்ட அளவில் கட்சிக்கு புத்துயிர் அளிக்க வேண்டும். கர்நாடகாவிற்கு வெளியே கட்சித் தொண்டர்கள் மத்தியில் கர்கேவுக்கு சிறிதளவு பிடிப்பே உள்ளது," என்று பங்கஜ் வோஹ்ரா கூறுகிறார்,

"பழைய தலைவர்கள் கட்சி தொண்டர்களுடன் தொடர்பு வைத்திருந்தனர். கர்கேவைப் பற்றி நாம் அப்படிச் சொல்ல முடியாது. கட்சிக்கு அடிமட்ட அளவில் புத்துயிர் ஊட்டுவது புதிய தலைவருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். தேர்தலில் வெற்றி பெற கடுமையான உழைப்பு தேவை. 80 வயது தலைவரிடமிருந்து இதை நீங்கள் எதிர்பார்க்க முடியுமா?"என்று பங்கஜ் வோஹ்ரா வினவுகிறார்.

https://www.bbc.com/tamil/india-63317413

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.