Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வருட இறுதிக்குள் ரணிலை ஜனாதிபதியாக்க புலிகளைத் தூண்டுகிறாராம் சிவஜிலிங்கம்!

Featured Replies

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விகிரமசிங்கவை இந்த வருட இறுதிக்குள் ஜனாதிபதியாக்குமாறு த.தே.கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் லண்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு புலிகளிடம் வேண்டு கோள் விடுத்தார் என ஆளும் கட்சியின் பிரதம கொரடாவான அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஆனால் அப்போது குறுக்கிட்ட ரணில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தனக்கு வாக்களிக்க வேண்டாம என்று வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தவரே இந்த சிவாஜிலிங்கம் தான் எனத் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் நேற்று காலை சபாநாயக்கர் தலைமையில கூடிய வேளை சபாநாயகர் அறிவித்தல்கள் சிலவற்றை விடுத்தார். அப்போது ஏற்கனவே சிவாஜிலிங்கத்தால் நடாடாளுமன்றில் எழுப்பப்பட்ட சிறப்புரிமை பிரச்சினை, நாடாளுமறன்ற சிறப்புரிமைக் குழுவிற்குச் சமர்ப்பிக்கபட்டடுள்ளது என்றும் சபாநாயர் கூறினார்.

அச்சந்தர்ப்பத்தில் குறுக்கீடு செய்த போதே அமைச்சர் ஜெயராஜ் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும கூறியவை வருமாறு :-

சிவாஜிலிங்கத்தின் சிறப்புரிமை பற்றி இங்கு பேசப்படுகிறது. ஆனால், அவர் லண்டடனில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு ரணிலை ஜனாதிபதியாக்குமாறு புலிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த வருட இறுதிக்குள் ரணிலை ஜனாதியாக்க வேண்டும் என்றும் இல்லையேல் எஞ்சியுள்ள வடக்கையும் மஹிந்த கைப்பற்றி விடுவார் என்றும அவர் கூறியிருக்கிறார். என்றார் ஜெயராஜ்.

அப்போது குறிக்கிட்ட எதிர்க்கட்சி பிரதம கொரடா ஜோஸப் மைக்கல் பெரேரா, "சிவாஜிலிங்கம் ஒரு நடாளுமன்ற உறுப்பினர். அவர் நடாளுமனறித்திற்கு வெளியே கூறிய கூற்றை அவர் இப்போது இங்கு இல்லாத நிலையில கூறுவது விமர்சிப்பதும் அவரது சிறப்புரிமையை மீறும் செயல். ஏதோ ஒரு பத்திரிகையில் வந்த செய்தியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு அமைச்சர் ஜெயராஜ் இப்படிக் கூறுவது சரியல்ல" என்று கூறினார்.

அப்போது சபாநாயகர், 'இது தொடர்பாக உங்களிடம் சரியான ஆதராம் உள்ளதா? அதைக் காண்பிக்க முடியுமா?" என வினா எழுப்பினார்.

"நீரூபிக்கக் கூடிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இப்போது வேண்டும் என்றாலும் நான் அவற்றைக் காண்பிப்பேன்." என்று பதிலளித்தார்.

அப்போது ரணில எழுந்து 'கடந்த ஜனாதிபதித் தேர்தலில எனக்கு வாக்களிக்க வேண்டாம் என வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தவரே இந்த சிவாஜிலிங்கம் தான்" எனக் கூறினார்.

நன்றி : சுடர் ஒளி

சிவாஜி லிங்கம் அவர்களுக்கு மூளைக்கும் வாய்கும் தொடர்பை ஏற்படுத்தும் நரம்பு அண்மைகாலமாக கட்டாகிவிட்டதோ என எண்ன தோன்றுகின்ரது மீனவ கடத்தல் விசையத்திலும் தேவையில்லாமல் உளறினார் இப்போதும் இப்படி

புலிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் சக்தி உலகில யாருக்கும் இல்லை என்பதுதான் உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயராஜ் மீது சிறப்புரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர சிவாஜிலிங்கம் வலியுறுத்தல்

சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் மீது சிறப்புரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

கிழக்கைப் போன்று வடக்குப் பகுதியும் சிறிலங்கா இராணுவத்தினரால் கைப்பற்றப்படாமல் இருக்க வேண்டுமாயின் ரணிலை உடனடியாக ஆட்சியில் அமர்த்தியாக வேண்டும் என்று லண்டனில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் சிவாஜிலிங்கம் தெரிவித்தார் என அண்மைக்காலமாக அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கூறி வருகிறார்.

இதனால் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கும் சிவாஜிலிங்கம், நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சபாநாயகரிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.

நாடாளுமன்றம் இன்று புதன்கிழமை காலை தொடங்கியதும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ள பிரச்சினையை சிறப்புரிமை குழுவிடம் விடவேண்டும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.

அதனை ஏற்றுக்கொள்ளாத அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே அந்த உரை இணையத்தளம் ஒன்றில் வந்திருப்பதாகவும் எனவே லண்டனில் சிவாஜிலிங்கம் கூறியதை தன்னால் நிருபிக்க முடியும் என்றும் கூறினார்.

அதற்குப் பதிலளித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில், கடந்த தேர்தலில் தனக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறியதனை நினைவுபடுத்தி தனக்கும் சிவாஜிலிங்கத்தின் இந்த உரைக்கும் சம்பந்தம் இல்லை என்று மறுத்தார்.

இந்த விடயம் குறித்து காரசாரமான விவாதம் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே இந்த விடயத்தை சிறப்புரிமைக் குழுவிடமே விட்டுவிடலாம் என்று கூறி இந்த பிரச்சினையை தற்காலிமாக முடிவுக்கு சபாநாயகர் கொண்டு வந்தார்.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டுமென லண்டனில் சிவாஜிலிங்கம் கூறியதாக பாராளுமன்றத்தில் சர்ச்சையை ஏற்படுத்தினார் ஜெயராஜ்

[23 - August - 2007]

- டிட்டோகுகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் -

வடபகுதி படையினர் வசமாகாமல் இருக்க வேண்டுமெனில், இந்த வருடம் முடிவடைவதற்குள் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சிக்கு கொண்டு வந்து விட வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்.கே. சிவாஜிலிங்கம் லண்டனில் தெரிவித்திருப்பதாக அரசதரப்பு பிரதம கொரடாவான அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளே கூறியதை அடுத்து நேற்று புதன்கிழமை சபையில் அரச தரப்பினருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் இடையில் சர்ச்சை மூண்டது.

பாராளுமன்றம் நேற்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டார தலைமையில் கூடியது. சபை கூடியதும் அறிக்கையொன்றை விடுத்த சபாநாயகர், சிங்களப் பத்திரிகை ஒன்றில், தனக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்பிருப்பதாக வெளியான செய்திமூலம் தனது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாக சிவாஜிலிங்கம் எம்.பி.சமர்ப்பித்திருந்த சிறப்புரிமைப் பிரச்சினையை சிறப்புரிமைக் குழுவுக்கு யோசனையாக சமர்ப்பிக்க முடியுமென தெரிவித்தார்.

இதன் போது, குறுக்கிட்ட அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளே, இந்த வருடம் முடிவடைவதற்குள் ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சிக்குக் கொண்டு வந்துவிடவேண்டுமெனவும் இல்லாவிட்டால் வடக்கு முழுவதும் படையினர் வசமாகிவிடுமெனவும் சிவாஜிலிங்கம் லண்டனில் கருத்து வெளியிட்டிருப்பதாகவும் இப்படி தெரிவித்திருக்கும் ஒரு எம்.பி.க்கு இந்த சிறப்புரிமைப் பிரச்சினையும் கொண்டுவரப்பட்டிருப்பதாக தான் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் பெர்ணான்டோ புள்ளேயின் கூற்றை மறுத்து எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவும் ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜோசப் மைக்கல் பெரேரா, இது எம்.பி. ஒருவரின் சிறப்புரிமையை வைத்து இன்னுமொரு எம்.பி.யின் சிறப்புரிமையை மீறும் செயலெனவும் அமைச்சர் பெர்ணான்டோ புள்ளேயின் மேற்குறித்த கூற்றை ஹன்சார்ட் அறிக்கையிலிருந்து நீக்க வேண்டுமெனவும் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அத்துடன், ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளே நினைத்தவாறெல்லாம் சபையில் பேச முடியாதெனவும் அதற்கென்று வரைமுறையொன்று இருப்பதாகவும் ஜோசப் மைக்கல் பெரேரா சாடினார்.

இருப்பினும் அமைச்சர் பெர்ணான்டோ புள்ளே அவரது கருத்துக்கு முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதனால், அவரது கூற்றை ஹன்சார்ட் அறிக்கையிலிருந்து அகற்ற முடியாதெனவும் இது குறித்து ஆராய வேண்டுமெனவும் சபாநாயகர் தெரிவித்தார்.

இதேநேரம், தனது கூற்றுக்கான முழுப்பொறுப்பையும் தான் ஏற்றுக்கொள்வதாக மீண்டும் தெரிவித்த பெர்ணான்டோ புள்ளே, சிவாஜிலிங்கம் லண்டனில் கூறிய கருத்து "லங்காப்ரூத்" இணையத் தளத்தில் வெளியாகியிருப்பதாகவும் அதன் பிரதியை தன்னால் சமர்ப்பிக்க முடியுமெனவும் தெரிவித்தார்.

இச் சந்தர்ப்பத்தில் சபைக்குள் பிரவேசித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தலின் போது, சிவாஜிலிங்கம் எம்.பி.உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், ஐ.தே.க.வுக்கு வாக்களிக்க வேண்டாமென மக்களுக்கு கூறியிருந்ததாக சுட்டிக்காட்டியதுடன் மேற்குறித்த விடயத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையெனவும் கூறினார்.

நன்றி - தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.