Jump to content

இந்தோனேஷிய விமானம் வீழ்ந்தமைக்கு விமானியின் தவறும் காரணம்: விசாரணையாளர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இந்தோனேஷிய விமானம் வீழ்ந்தமைக்கு விமானியின் தவறும் காரணம்: விசாரணையாளர்கள்

By DIGITAL DESK 3

10 NOV, 2022 | 05:10 PM
image

இந்தோனேஷியாவில் கடந்த வருடம் 62 பேர் பலியான விமான அனர்த்தத்துக்கு விமானியின் தவறும் காரணம் என விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விஜயா எயார் நிறுவனத்துக்குச் சொந்தமான பிளைட் எஸ்ஜே-182 விமானம், கடந்த வருடம் ஜனவரி 9 ஆம் திகதி, ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட சிறிதுநேரத்தில் ஜாவா கடலில் வீழ்ந்தது. இதனால் மேற்படி போயிங் 737-300 ரக விமானத்திலிருந்த 62 பேரும் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணை விபரங்களை இந்தோனேஷிய வான் போக்குவரத்து பாதுகாப்பு ஆணைக்குழு அதிகாரிகள் இன்று வெளியிட்டனர். 

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கெப்டன் நூர்கயோ உதோமா இது தொடர்பாக கூறுகையில், விமானத்துக்கு எரிபொருள் விநியோகிக்கும் சாதனத்தில் ஏற்பட்ட கோளாறும், விமானியின் மெத்தனப் போக்கும் இச்சம்பவத்துக்கு காரணம் என்றார். 

https://www.virakesari.lk/article/139664

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.