Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியூஸிலாந்தில் ஒரு தமிழ் மணி….

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழகத்தின் தொன்மைத் துறைமுகமாம் நாகப்பட்டினத்திற்கும் நியூஸிலாந்துக்கும் என்ன உறவு?
New Zeeland தகவல் பொருள் அருங்காட்சியகத்தில் பேணிப் பாதுகாக்கப் பட்டுவரும்,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அந்த மணியில், தமிழ் எழுத்துகள்!!!
அதனை கைகளால் தொட்டுத் தூக்கிப் பார்க்க, எமக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது, அதுவும் கையுறை அணிந்துகொண்டு.
இந்த மணியின் வயது?-
15ம் நூற்றுண்டுக்கும் 18ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளார்கள். நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட ஒரு பாய்மரக் கப்பல் புயலில் சிக்குண்டு அக்கப்பலின் சிதிலங்கள் கரையொதுங்கியபோது, ஒரு மரத்தின் வேர்களுக்குள் சிக்குண்டிருந்த இந்த வெண்கலமணியைக் கண்டெடுத்த நியுஸிலாந்தின் ஆதிக்குடிகளான, ‘மெளரி’ இனத்து மக்கள், இது என்னவென்று தெரியமால், உணவு தயாரிக்க, இதனடியில் நெருப்பு மூட்டி உருளைக் கிழங்குகளை அவிப்பதற்குப் பயன்படுத்தி வந்தார்களாம். நீண்ட காலத்தின் பின்னர் 1899ம் ஆண்டு, இதனைக் கண்டெடுத்த வரலாற்று ஆய்வாளர் திரு.
William Colenso, இந்த வரலாற்றுச் சின்னத்தை அருங்காட்சியகத்தில் பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளார். 166mm உயரமும், 155mm சுற்றளவும் கொண்ட இந்த மணியில் பொறிக்கப் பட்டிருந்த எழுத்துகள் எந்த மொழிக்குரியவை? எந்த நாடு எனக் கண்டுபிடிப்பதற்காக எடுத்துக்கொண்ட முயற்சியில் இது தமிழ் மொழி என்பதுவும் அந்த நாளில் மிக முக்கிய துறைமுகங்களில் ஒன்றான நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டுவந்த கப்பலின் மணி என்பதுவும் தெரியவந்துள்ளது. இந்த மணியில் இப்போதும் தெளிவாகத் தெரியும் வகையில், பொறிக்கப்பட்டுள்ள வரி-
‘ முகைய்யத் தீன் பாகசுடைய கப்பல் மணி’
இஸ்லாமியராயினும் தம் தாய்மொழியாம் தமிழை தமது மொழி அடையாளமாய் மதிக்கும் ஒருவரது கப்பல் எனப்புரிந்தது. வாணிபத்தில் சிறந்து விளங்கிய நம் தொன்மைத் தமிழரின் அடையாளக் குறியீடாக தமிழ் எழுத்துகளைக் கண்ணுற்றபோது பெருமையால் நெஞ்சு நிமிர்ந்தது.
315106938_5744161482311953_8936723930912
 
 
315045089_5744153662312735_7271594163715
 
 
314085249_5744153638979404_8452388845119
 
 
314091281_5744153992312702_4576248675257
 
 
314486271_5744153972312704_3321471998407
 
+7
 
 
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி பெருமாள்.

அருமையான தகவல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஈழப்பிரியன் said:

இணைப்புக்கு நன்றி பெருமாள்.

அருமையான தகவல்.

அந்தகால முஸ்லிம்கள் தமிழை தாய் மொழியாக நேசித்தார்கள் என்பது புரியுது . 

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

May be an image of 2 people

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.