Jump to content

தமிழ் சினிமா 'திலீபன்': திரைக்கு வர தயாராகி வரும் ஒரு போராளியின் கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சினிமா 'திலீபன்': திரைக்கு வர தயாராகி வரும் ஒரு போராளியின் கதை

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,கல்யாண் குமார்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 16 நவம்பர் 2022, 12:07 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

திரைப்படமாகும் திலீபன் வாழ்க்கை

'இயக்குநர்' ஆக வேண்டும் என்கிற கனவில் சென்னைக்கு வந்திறங்கிய ஆயிரக்கணக்கான இளைஞர்களில் ஒருவர்தான், பெங்களூரு வாழ் தமிழரான ஆனந்த் மூர்த்தி. பல போராட்டங்களுக்குப் பிறகு இயக்குநர்கள் கதிர் மற்றும் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். 

திரைப்பட வரலாற்றில் தன் ஒவ்வொரு படமும் தடம் பதிக்க வேண்டும் என்பதை தமது கொள்கையாகக் கொண்டிருக்கிறார் ஆனந்த் மூர்த்தி.

அதனால் சொந்த மன்ணிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியலையும் அவர்களின் உரிமைக்காக போராடிய வீரர்களின் தியாகத்தையும் திரையில் பதிவு செய்ய வேண்டும் என விரும்பினார்.

அந்த வகையில் இவர் இயக்கி இருக்கும் முதல் படம் தான் 'திலீபன்'. 

 

விடுதலைப் புலிகள் இயக்கத்தில், யாழ் மாவட்டத்தின் அரசியல் துறை பொறுப்பாளராக பதவி வகித்த திலீபன் என்ற இளைஞர், 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி, தங்கள் இயக்கத்தின் சார்பில் இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் சேர்த்து, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகிம்சை வழியில்,  நல்லூர் என்ற இடத்தில் உண்ணாவிரத போராட்டத்தைத் துவக்கினார்.

ஆரம்பத்தில் பொதுமக்களில் ஐநூறு, ஆயிரம் என்று அங்கே கூடிய கூட்டம், செப்டம்பர் 26, உண்ணாவிரதத்தின் 12ஆம் நாள் - திலீபன் உயிரை நீத்த நாளன்று லட்சக்கணக்கில் அதிகரித்தது.

இயக்கத்திற்காக தன் உயிரையே கொடுத்த திலீபனின் தியாகம், உலகம் முழுக்க உள்ள தமிழர்களிடையே பெரும் தாக்கத்தையும் அவர் மீது மரியாதையையும் ஏற்படுத்தியது.

திலீபனின் வரலாறைத் தேடி...

 

இயக்குநர் ஆனந்த் மூர்த்தி

வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் அந்த இளைஞர் திலீபனின் வாழ்க்கையை திரையில் பதிவு செய்ய வேண்டும் என்று திட்டமிட்ட ஆனந்த் மூர்த்தி, திலீபனைப் பற்றி ஆய்வு செய்ய, இலங்கைக்கு ஐந்து முறை போய் வந்திருக்கிறார். அவர் குறித்த வீடியோக்கள், புத்தகங்களை தொடர்ந்து தேடி அலைந்திருக்கிறார்.

திலீபனோடு பழகிய மிகச் சிலரை சந்தித்துப் பேசிய ஆனந்த் மூர்த்தி, மிகவும் சிரமப்பட்டு தகவல்களை சேகரித்ததாகக் கூறுகிறார்.

ஆரம்பத்தில் அதை நாற்பது நிமிட படமாக எடுக்கவே திட்டமிட்டிருந்தார். அதற்கான திரைக்கதையைக் கேட்ட இயக்குநர் பாலா, அதைத் தானே தயாரிப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

 

திரைப்படமாகும் திலீபன் வாழ்க்கை

அதில் திலீபனாக நடிக்க ஏற்ற ஒருவரை தேடிக்கொண்டிருந்தபோது ஏற்கெனவே ’புன்னகை பூ’ என்ற படத்தில் நடித்திருந்த நடிகர் நந்தா, அதற்குப் பொருந்தி வந்திருக்கிறார். 

திலீபனின் முக ஒற்றுமைக்காக – அவரின் முன் வரிசை தெற்றுப் பல் அமைப்பிற்காக நந்தா, பல் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் ஒரிஜினல் பல்வரிசைக்கு மேலே அந்த செயற்கை தெற்றுப் பல்செட்டை அணிந்து நடித்திருக்கிறார்.

நாள் முழுவதும் அந்த பல்செட்டை பொருத்தியதால் உள்ளிருக்கும் ஒரிஜினல் பற்களிடையே ரத்தம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனாலும் வலியைப் பொறுத்துக்கொண்டு நடித்திருக்கிறார் நந்தா.

திலீபனின் வீடியோக்களை போட்டுப் பார்த்து தன்னை அந்தப் பாத்திரத்தில் பொருத்திக் கொண்டதோடு, உடல் எடையையும் கணிசமாகக் குறைந்திருக்கிறார்.

திரைப்படமாக உருவெடுத்தது எப்படி?

 

திரைப்படமாகும் திலீபன் வாழ்க்கை

பல்வேறு காரணங்களால் திலீபன் குறிந்த அந்த நாற்பது நிமிட படத்தின் வெளியீடு தள்ளிப் போய்க்கொண்டே இருக்கவே, அதை ஒரு முழு நீள திரைப்படமாகவே எடுக்கலாம் என்று முடிவெடுத்த நடிகர் நந்தா, அதன் தயாரிப்பு பொறுப்புகளை, தானே எடுத்துக் கொள்வதாகவும் சொல்லி இருக்கிறார். 

”படத்தின் நம்பகத்தன்மைக்கு நான் எடுத்துக் கொண்ட முயற்சிகள் இந்தப் படத்தில் நூறு சதவிகிதம் பிரதிபலிக்கும்” என்கிறார் நந்தா. 

இதில் கிட்டுவாக நடித்திருக்கும் வினோத் சாகர், தமிழில் வெற்றி பெற்ற ராட்சசன் படத்தில் மாணவிகளிடம் பாலியல் வன்முறை செய்யும் ஆசிரியராக நடித்து புகழ் பெற்றவர்.

தற்போது மலையாளப்பட உலகில் சுமார் பத்து படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

“ திலீபன் படத்தில் கிட்டு பாத்திரத்திற்கான நடிகர் தேர்வுக்காக நான் போனபோது என்னை முதலில் 'ரிஜெக்ட்' செய்துவிட்டார் அதன் இயக்குநர். காரணம் என் உடல்வாகு மற்றும் எனக்குள் இருந்த நகைச்சுவை உணர்வு! பிறகு அவரது உதவியாளர்கள் என்னைப்பற்றி எடுத்துச்சொல்லியுள்ளனர். கிட்டு குறித்த வீடியோக்களை என்னிடம் காண்பித்தனர்.

 

திரைப்படமாகும் திலீபன் வாழ்க்கை

பல நாட்களுக்கு, அதை பார்த்துப்பார்த்து, நான் அந்த கேரக்டருக்குள் நுழைந்து பயணம் செய்தேன். அடிப்படையில் நான் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். என்பதால் மேடை நாடகங்களின் மூலமாக நடிப்பை அனுபவமாகப் பெற்றிருந்தேன்.

அடுத்தமுறை இயக்குநரைப் பார்த்தபோது இலங்கைத் தமிழ் உள்பட பக்காவாக என்னை தயார் செய்து கொண்டு போனேன். அவரால் நம்பவே முடியவில்லை.

“கிட்டுவாகவே மாறி விட்டீர்களே” என்று என்னை கட்டியணைத்து, இந்த வரலாற்று ரீதியான படத்தில் நடிக்க வைத்தார்’ ’’ என்கிறார் வினோத் சாகர்.

இதில் பிரபாகரனாக ஸ்ரீதர் என்கிற நடிகரும், கேப்டன் மில்லர் பாத்திரத்தில் ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தில் அறிமுகமாகி, பின்னர் காதல் என்ற படத்தின் மூலம் பிரபலமான பரத் நடித்திருக்கிறார்.

திலீபனின் ஆரம்பகால வாழ்க்கை பற்றிய, இலங்கை சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும், கேரளாவின் பல கிராமங்களில் படமாக்கப்பட்டிருக்கின்றன.

அசுரன், கொம்பன், விருமன் போன்ற வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த வேல்ராஜ்தான் இந்தப் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 

கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த படைப்பாளி

 

திரைப்படமாகும் திலீபன் வாழ்க்கை

திலீபன் படத்திற்காக ஆரம்பத்தில் இிருந்தே அதன் தயாரிப்பு வடிவமைப்பு, இலங்கை தமிழை அந்தந்த நடிகர்களுக்கு சொல்லிக் கொடுப்பது உட்பட அனைத்திலும் ஒரு ஆலோசராக உடனிருந்து பயணித்தவர், தங்க வேலாயுதம்.

இவர் விடுதலை புலிகள் இயக்கத்தின் கலைப்பிரிவின் பொறுப்பாளராக அந்த இயக்கத்தின் ஆரம்பம் முதலே செயல்பட்டவர்.

விடுதலைப் புலிகளால் தேவர் அண்ணா என்று அழைக்கப்பட்ட இவர், பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்.

இயக்கத்தின் முன்னணி தலைவர்களோடும் நெருங்கிப் பழகியவர். குறிப்பாக தலைவர் பிரபாகரனின் உத்தரவின்படி திலீபனின் அந்த 12 நாள் உண்ணாவிரத போராட்டத்தை உடனிருந்து கவனித்துக் கொண்டவர். திலீபனின் இறுதி யாத்திரையையும் அருகிலிருந்து நேரடியாகப் பார்த்தவர்.  

“ 1987 செப்டம்பர் 26 திகதி சனிக்கிழமை காலை 10.48 மணி திலீபன் உடல் நிலையை பரிசோதித்துக் கொண்டிருந்த மருத்துவர் சிவகுமார், அழுதவாறே திலீபனின் மறைவை உறுதிப்படுத்தினார். தியாக தீபம் திலீபன் அந்த கணத்தில் நம்மையெல்லாம் விட்டுப் பிரிந்து விட்டான்.

 

திரைப்படமாகும் திலீபன் வாழ்க்கை

அந்த பேரமைதியை கிழித்துக் கொண்டு அனைவரும் கதறி அழத் தொடங்கினர். எங்கும் அழுகை ஒலி.

அந்த பன்னிரெண்டு நாட்களும் திலீபன் உண்ணாநோன்பில் இருந்த மேடையை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்த திலீபனின் தந்தை், முதல் முறையாக மேடையில் ஏறி, திலீபனின் உடல் மீது விழுந்து கதறி அழத் தொடங்கினார்.

உடனடியாக திலீபனின் மரணச் செய்தி, இந்திய அதிகாரிகளோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த தேசிய தலைவர் பிரபாகரனுக்கு அறிவிக்கப்பட்டது.

அது கிடைத்தவுடன் பேச்சுவார்த்தையை இடையில் நிறுத்திவிட்டு எங்கள் தேசிய தலைவர் திரும்பினார்”  என்று அந்த நிகழ்வை அப்படியே, தான் எழுதியிருக்கும் ‘என் நினைவில் தமிழீழம்’ என்ற புத்தகத்தில் பதிவு செய்கிறார், தேவர் அண்ணா.

 

திரைப்படமாகும் திலீபன் வாழ்க்கை

இதுவரை எடுக்கப்பட்ட திலீபன் படத்தைப் பார்த்த தேவர் அண்ணா, பிபிசி தமிழிடம் பேசினார்.   

“இந்த படத்தைப் பொறுத்தவரை திலீபனின் வாழ்க்கை வரலாறை எந்ததவறும் இல்லாமல் திரையில் பதிவு செய்ய வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தார் இதன் இயக்குநர் ஆனந்த் மூர்த்தி.

மற்றவர்களைப் போல ஏனோதானோவென்று இந்தப் படத்தை எடுத்து முடித்திடாமல், ஒவ்வொரு காட்சிக்கான சின்னச்சின்ன விஷயங்களிலும் என்னிடம் கலந்தாலோசித்து அதை மிகத்தெளிவாக திரையில் கொண்டு வந்திருக்கிறார்.

படம் முழுமையடைந்து உலகம் முழுதும் தியேட்டர்களில் ரிலீசாகும் தேதியை நானும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என்கிறார் தேவர் அண்ணா என்கிற தங்க வேலாயுதம்.   

திலீபன் படம் வெளிவருமுன்பே இரண்டாவது படத்தின் கதையையும் ரெடி செய்திருக்கிறார் ஆனந்த் மூர்த்தி.

மலேசிய தமிழர்கள் பற்றிய அந்தக் கதையில், ஹீரோவாக நடிக்க, நடிகர் சசிகுமார் ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பது கூடுதல் செய்தி.

https://www.bbc.com/tamil/articles/cw0j9x1kwjko

இது பிபிசி தமிழில் தான் வந்துள்ளது! நம்புங்கோ.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்வியறிவுள்ள, பல்வேறு தொடர்புகளுள், ஆழுமையுள்ளசுமந்திரனும் சாணக்கியனும் TNA க்குத் தலைமை தாங்கி  வழிநடாத்த வேண்டும்,...👍 ஏனப்பா,.. ஒரு குசும்புக்கு எழுதினாலும் விசுகர் தடியோடதான் நிக்கிறார் கண்டியளோ,..🤣
    • புதிய ஜனாதிபதி அநுரவின் கட்சிக்கு கணிசமான அளவு வாக்குகள் வடக்கு/கிழக்கில் வரும் பொதுதேர்தலில் கிடைக்கலாம். ஆனால் அவை ஆசனத்தை பெறுவதற்கு போதுமானதாக அமையுமா என்பது சந்தேகமே.
    • நாங்கள் சிறுவயதில் காலைக்காட்சி, மாலைக்காட்சி, கடற்கரைக்காட்சி என்று சோதனையில் வந்த கேள்விகளுக்கு ஏற்றமாதிரி கட்டுரை எழுதுவது போலத் தான் இருக்கின்றது இந்த பகிரங்கக் கடிதம்.  இதை எழுதியவர் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்கச் சொன்னவராக இருக்கலாம், இல்லாவிட்டால் இலங்கைச் சிங்கள ஒற்றை ஆட்சிப் பாராளுமன்றம் தேவையில்லை, எங்களின் ஒற்றுமை மட்டுமே முக்கியம், அதை சர்வதேசத்திற்கு காட்டினால் போதும் என்று சொன்னவராக இருக்கலாம். ஒரு அணுக்கமான அரசியல் செய்வோம் என்று சொன்னவராக இருக்கலாம். இன்னும் சில வகைகளும் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் நியாயங்கள் இருக்கிறது தானே........... நாங்கள் எழுதிய காலை, மாலை, கடற்கரை காட்சிக் கட்டுரைகள் போலவே. சொன்னவர் யார் என்று தெரிந்தால் தான், இதில் இருக்கும் சொற்களையும், வசனங்களையும் கடந்து, அதில் மறைந்திருக்கும் உட்பொருளை விளங்கிக்கொள்ள முடியும். நித்தியின், ஜக்கியின் மற்றும் பல குருக்களின் பக்தர்களும் இதையே தான் சொல்கின்றனர். குருவின் தனிப்பட்ட வாழ்க்கையை விட்டு விட்டு, குரு சொல்வதை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள் என்று....... உங்கள் குருக்களே தங்கள் சுகபோக வாழ்க்கைகளுக்காக மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இறுதியில் உங்களையும், உங்கள் குடும்பங்களையும் நடுத்தெருவில் நிற்பாட்டுவார்கள் என்று தானே நாங்கள் அவர்களுக்கு எதிர்க் கருத்துகள் சொல்லுகின்றோம். இதை எழுதியவர் கூட அப்படியான ஒருவராக இருக்கலாம். இப்பொழுது பாராளுமன்றம் முக்கியம், அங்கு போவது முக்கியம், அதிகாரம் முக்கியம்............. என்கின்றனர். உண்மையே, இவை எல்லாம் முக்கியம். இவை எப்போதும் முக்கியமானவையாக இருந்தன. அத்துடன், இதைச் சொல்பவர் முன்னர் என்ன சொல்லியிருந்தார் என்று அறிதலும் முக்கியம் தானே............    
    • 👆 Thank God, I have not been so ruthless as the guy above in dealing with relatives. I seem to be fair enough 👇    
    • கொழும்பில் போட்டியிடும் தமிழரசு கட்சி..! பங்காளி கட்சிகளுக்கு கால அவகாசம் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டமானது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.  இதற்கமைய, ரெலோ மற்றும் ப்ளொட் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மூன்று நாட்களுக்குள் தமது முடிவு எட்டப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி போட்டியிடுவதாகவும் இதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கு ஒரு குழுவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அடுத்த கூட்டம்  அதேவேளை, குறித்த விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் 03ஆம் திகதி மீண்டும் கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கியவர்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் கடிதம் ஒன்றை முன்வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதன்போது, கிட்டத்தட்ட 2018ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இடம்பெற்றிருக்க கூடிய அனைத்து விடயங்கள் தொடர்பிலும் விளக்கம் கோர வேண்டுமே தவிர தற்போது நடந்த விடயங்கள் தொர்பில் மாத்திரம் விளக்கம் கோரப்பட கூடாது எனவும் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், மத்தியக்குழு கூட்டமானது, பல்வேறுபட்ட வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் முடிவுக்கு வந்துள்ளது.  அதேவேளை, கூட்டத்திற்கு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், "தமழிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான விடயங்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கூடி ஆராய்ந்தோம். ஜனாதிபதி தேர்தலில் கட்சி எடுத்த 3 தீர்மானங்களுக்கு மாறாக செயற்பட்டவர்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. அதிலே அப்படியாக கட்சியின் முடிவை மீறி செயற்பட்டவர்களிடம் விளக்கம் கோருவது என முடிவு எடுக்கப்பட்டது. அரியநேத்திரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என பலமான கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தாலும், முதலாம் திகதி எடுத்த தீர்மானத்தில் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று கோரியிருந்தோம். அதற்கு அவருடைய விளக்க கடிதத்தில் பதில் சொல்லப்பட்டிருக்கவில்லை. அது காலம் கடந்து கிடைத்தாலும் வாசித்து காட்டப்பட்டது. ஆகவே அது சம்மந்தமாக கேட்டு விட்டு தீர்மானங்களை எடுக்கவுள்ளோம். முக்கிய விடயமாக ஆராயப்பட்டது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆகும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் விசேட அறிவிப்பை மனவுவந்து விடுவதற்கு தீர்மானித்துள்ளோம். அதாவது தமிழ் தேசிய பரப்பில் இருக்கிற கட்சிகள் விசேடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெவ்வேறு காலகட்டங்களில் விலகிப் போன கட்சிகள் திரும்பவும் எங்களுடன் சேர்ந்து தேர்தலை முகங்கொடுங்க விரும்பினால் வரமுடியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றவர்கள் வருகிற தேர்தல் சவால் மிக்க தேர்தலாக இருப்பதால் இணங்கி வந்து இந்த தேர்தலில் போட்டியிட முடியும். தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலும் தான் கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிட்டோம். அந்த விதமாக இந்த தேர்தலில் போட்டியிட நாங்கள் தீர்மானித்துள்ளோம். அப்படியாக அந்த அழைப்பை ஏற்று வந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேட்ப்பாளர்களை நிறுத்துவது தொடர்பில் கலந்துரையாடி முடிவு எடுப்போம். அப்படி அவர்கள் வராவிட்டால் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும். திருகோணமலை, அம்பாறை மாவட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். அங்கே ஒரு தமிழ் உறுப்பினர் மட்டும் தான் தெரிவு செய்யப்படும் நிலை இருப்பதால் அந்த விடயங்களை அந்த மாவட்ட கிளைகளுடன் பேசி முடிவுக்கு கொண்டு வரலாம் என தீர்மானித்துள்ளோம். அதற்கு மேலதிகமாக இம்முறை வடக்கு - கிழக்குக்கு வெளியே உள்ள கொழும்பு உட்பட தமிழர்கள் வாழும் ஏனைய மாவட்டங்களிலும் போட்டியிட பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. விடுக்கப்பட்டுள்ள அழைப்பு  எதிர்வரும் 4 ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல செய்தல் ஆரம்பிக்கவுள்ளதால் பிரிந்து சென்றவர்கள் மீள வருவது தொடர்பாக மிக விரைவாக அவர்களது பதிலை எதிர்பார்க்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகள் வந்து இணைவதற்கு அழைப்பு விடுத்துள்ளோம். அதற்கு வெளியே வேறு கட்சிகள் வந்தால் அதனை பரிசீலிக்கலாம். ஏனெனில் எங்களது கட்சியில் இருந்து பிரிந்து போனவர்களது கட்சியும் மேலும் பிரிந்து இருக்கின்றது. அவர்களை உள்வாங்கும் போது சில ஆட்சேபனைகள் இருக்கும். அது பற்றி பேசியே முடிவு எடுப்போம். ஆனால் தீர்மானமாக அழைப்பு விடுப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களை வாருங்கள் சேர்ந்து பயணிப்போம் என்று புன்முறுவலோடு அவர்களை அழைக்கின்றோம். புதியவர்களை தேர்தலில் உள்வாங்குவது, இளைஞர்களை உள்வாங்குவது தொடர்பிலும் நீண்ட நேரம் பேசினோம். அதனை சரியாக நாம் அணுகுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்களிடத்தில் இது தொடர்பான பாரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. விசேடமாக தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றிக்கு பிற்பாடு அத்தகைய எண்ணப்பாடு எங்களது பிரதேசங்களிலும் உயர்ந்துள்ளது. அது நல்ல விடயம். இளைஞர்கள், ஆளுமையுள்ளவர்கள், படித்தவர்கள், பெண்கள் என அவர்களுக்கான பிரதிநித்துவத்தை உறுதி செய்யும் வகையில் தான் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அதற்கான நியமனக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு இறுதி முடிவுகளை எடுக்கும். ஆனால் மாவட்ட ரீதியாக கலந்து ஆலோசித்து தான் அந்த முடிவுகள் எடுக்கபடும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சிலர் எம்முடன் பேசியுள்ளார்கள். தம்முடன் இணையுமாறு அவர்கள் அழைப்பு எதனையும் விடவில்லை. நாங்கள் பிரதானமான தமிழ் கட்சி. இது வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக வேறு கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்ட போது தேர்தலுக்கு முகம் கொடுத்தது இலங்கை தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலுமே தான். அதே முறையில் நாங்கள் இந்த தேர்தலையும் சந்திப்பதற்கு பிரதான கட்சி என்ற வகையில் நாங்கள் அவர்களுக்கும் அழைப்பு விடுகின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.  https://tamilwin.com/article/ilankai-tamil-arasu-katchi-meeting-in-colombo-1727533785?itm_source=parsely-detail
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.