Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலவுக்கு பயணிக்கப் போகும் இந்திய நடிகர் – அடுத்த ஆண்டில் பயணத் திட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிலவுக்கு பயணிக்கப் போகும் இந்திய நடிகர் – அடுத்த ஆண்டில் பயணத் திட்டம்

தேவ் ஜோஷி

பட மூலாதாரம்,DEARMOON

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தொழில்முறை டிஜே, கொரியாவில் பிரபலமாகிவரும் ராப் பாடகர், விண்வெளி சார் யூட்யூபர் ஆகியோர் ஸ்பேஸ் எக்ஸ் விமானத்தில் நிலவுக்குப் பயணிக்கவுள்ளனர். தனியார் ஸ்பேஸ் எக்ஸ் விமானத்திற்காக ஜப்பானிய கோடீஸ்வரரால் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தொழிலதிபர் யுசாகு மெசாவா, கடந்த ஆண்டு படைப்பாளிகளுக்கான உலகளாவிய தேடலுக்குப் பிறகு வெள்ளிக்கிழமையன்று தனது குழுவில் இருக்கப்போகும் கலைஞர்கள் குறித்துத் தெரிவித்தார்.

அமெரிக்க டிஜே ஸ்டீவ் அயோகி, கொரிய நட்சத்திரமான டாப் என்றழைக்கப்படும் சோய் சூங்-ஹ்யூன் ஆகியோர் அதிலுள்ள முதன்மையான தேர்வுகளாக அறியப்படுகின்றனர்.

அடுத்த ஆண்டில் திட்டமிடப்பட்ட நிலவுக்குச் செல்லும் விமானம், 1972ஆம் ஆண்டுக்குப் பிறகு மனிதர்களின் முதல் சந்திர பயணமாக இருக்கலாம்.

 

முன்மொழியப்பட்டுள்ள இந்தப் பயணத்தில், ஒரு விண்கலம் சந்திரனை வட்டமிடுவதோடு, அதன் மேற்பரப்பிலிருந்து 200 கிமீ தொலைவு வரை நெருங்கிச் செல்லும். அந்தப் பயணம் தொடங்கியதிலிருந்து 8 நாட்களுக்குப் பிறகு அவர்கள் திரும்புவர்.

இருப்பினும், இந்தக் குழு பயணிக்க வேண்டிய ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட்டுக்கு அமெரிக்க கட்டுப்பாட்டாளர்கள் இன்னும் அனுமதி வழங்கவில்லை.

இந்த விண்வெளி விமானம் பூமியின் சுற்றுப்பாதையில் ஒரு சுற்று பயணிப்பதற்குக் கூட இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. மே 2021இல் சோதனை ஏவுதலை முடித்த பிறகு, கடந்த 18 மாதங்களாக டெக்சாஸில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், யுசாகு மெசாவா தனது டியர் மூன் என்ற அழைக்கப்படும் குழுவில் இருப்பவர்களை அறிவிக்கும் காணொளியில் இந்தத் தாமதம் குறித்துக் குறிப்பிடவில்லை.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

அந்தக் காணொளியின் தொடக்கக் காட்சி, ஜப்பானிய தோட்டம் ஒன்றில் மெசாவா நிலவை நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. அதன்பிறகு குழுவின் முதல் உறுப்பினரான டிஜே ஆக்கியை அவருடைய நிகழ்ச்சி ஒன்றில் இருப்பதைப் போல் காட்டப்படுகிறது.

“இந்த வாய்ப்பை என்னால் நழுவவிட முடியாது. இதற்காக என் மனம் ஏங்குகிறது,” என்று பில்போர்ட்-சார்ட்டிங் கலைஞர் அந்தக் காணொளியில் கூறுகிறார்.

அடுத்ததாக அறிவிக்கப்பட்ட பயணி, தினசரி விண்வெளி வீரர் என்றறியப்படும் யூட்யூபர் டிம் டாட். விண்வெளி பயணம், வானியற்பியல் தொடர்பான கல்வி வீடியோக்களுக்காக 14 லட்சம் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்பட்ட அவரது சொந்த வீடியோவில், அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை நம்ப முடியவில்லை எனக் கூறுகிறார். ஸ்பேஸ் எக்ஸ் 2017ஆம் ஆண்டில் நிலவுக்கு ஒருவரை அனுப்புவதாக அறிவித்தது தான் “நான் உண்மையில் யூட்யூப்பில் காணொளிகளை உருவாக்கி வெளியிட வைத்தது,” என்றும் அவர் கூறுகிறார்.

ஸ்பேஸ் எக்ஸ்: நிலாவுக்கு பயணிக்கப் போகும் இந்திய நடிகர்

பட மூலாதாரம்,SPACEX

அறிவிக்கப்பட்ட டியர்மூன் குழுவின் மற்ற உறுப்பினர்கள்

  • தென் கொரியாவை சேர்ந்த கொரிய ராப் பாடகரும் பாய்பேண்ட் பிக் பேங் குழுவின் முன்னாள் முன்னணி பாடகர் டாப் என்றறியப்படும் சோய் சூங்-ஹ்யூன்
  • செக் குடியரசை சேர்ந்த நடனக் கலைஞரும் நடன அமைப்பாளருமான யெமி ஏ.டி.
  • அயர்லாந்தை சேர்ந்த ஒளிப்படக் கலைஞர் ரியானன் ஆடம்.
  • பிரிட்டனை சேர்ந்த காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் கரீம் இலியா.
  • அமெரிக்காவை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் பிரெண்டன் ஹால்
  • இந்தியாவைச் சேர்ந்த நடிகர் தேவ் ஜோஷி
Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

“பூமியை விட்டு வெளியேறுவது, நிலவுக்குப் பயணிப்பது போன்றவற்றில் இருக்கும் பொறுப்புகளை ஒவ்வொருவரும் அங்கீகரிப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த அனுபவத்திலிருந்து அவர்கள் நிறைய பெறுவார்கள். அவர்கள் அதை பூமிக்கும் மனித குலத்திற்கும் பங்களிக்கப் பயன்படுத்துவார்கள் என நம்புகிறேன்,” என்று மெசாவா கூறினார்.

ஆன்லைன் ஃபேஷன் சில்லறை விற்பனையாளரான ஜோசோவில் தனது செல்வத்தை ஈட்டிய மெசாவா, வணிகரீதியிலான விண்வெளிப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த ஆண்டு ரஷ்ய ராக்கெட்டில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 12 நாட்கள் பயணம் சென்றார்.

2018ஆம் ஆண்டில், ஸ்பேஸ் எக்ஸ் மூலம் நிலவைச் சுற்றிப் பறக்கும் முதல் தனியார் பயணியாக அவர் பெயரிடப்பட்டார். மேலும், விண்வெளி விமானத்திலுள்ள மற்ற எட்டு பயணிகளின் செலவை தானே ஸ்பான்சர் செய்வதாகக் கூறினார்.

மெசாவா தனது விண்வெளி பயண டிக்கெட்டுக்கு செலுத்த ஒப்புக்கொண்ட விலை வெளியிடப்படவில்லை. ஆனால், ஈலோன் மஸ்க்கின் கூற்றுப்படி அது “நிறைய பணம்.”

2020ஆம் ஆண்டில், தனது நிலவுப் பயணத்தில் தன்னுடன் சேர்ந்துகொள்ள புதிய காதலிக்கான தேடலையும் தொடங்கினார். பிறகு “கலவையான உணர்வுகள்” காரணமாக அந்த முயற்சியை நிறுத்தினார்.

https://www.bbc.com/tamil/articles/c84gx420l23o

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஏராளன், SpaceX இன் starship and super heavy booster இரண்டுமே static fire status இல்தான் உள்ளது. அதிலும் SH boosterஆனது 33 என்ஜின்( engine ) status fire முயற்சி இதுவரை நடைபேறவில்லை. இதுவரை 7 engine status fire மட்டிமே நடந்துள்ளது. இதுவரை நடந்த அத்தனை status fire test களில் Raptor 2 engine இன் மூலம் வரும் வெப்பம் stage 0 ( launch system) ஐ சேதப்படுத்தியுள்ளது. 
 

இப்போதுதான் SpaceX starship and boosterஐ ஸ்டாக்கிங்கை ( stacking) வெற்றிகரமாக முடித்துள்ளனர். எனி 33 engine static fireஐ முடித்துத்தான் முதலாவது விண்வெளிப்பறப்பு நடைபெறும். அந்த முயற்சியில் booster மற்றும் starship ஐ Hawaiian கடலில் இழுத்துவது தான் அவர்கள் திட்டம். அதன் பின் பல முயற்சியின்பின் தான் human space flight FAA சான்றிதழ் வழங்கப்படும். அடுத்தவருடம் human flight ஒரு கேள்விக்குறியே

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/1/2023 at 05:07, ragaa said:

ஏராளன், SpaceX இன் starship and super heavy booster இரண்டுமே static fire status இல்தான் உள்ளது. அதிலும் SH boosterஆனது 33 என்ஜின்( engine ) status fire முயற்சி இதுவரை நடைபேறவில்லை. இதுவரை 7 engine status fire மட்டிமே நடந்துள்ளது. இதுவரை நடந்த அத்தனை status fire test களில் Raptor 2 engine இன் மூலம் வரும் வெப்பம் stage 0 ( launch system) ஐ சேதப்படுத்தியுள்ளது. 
 

இப்போதுதான் SpaceX starship and boosterஐ ஸ்டாக்கிங்கை ( stacking) வெற்றிகரமாக முடித்துள்ளனர். எனி 33 engine static fireஐ முடித்துத்தான் முதலாவது விண்வெளிப்பறப்பு நடைபெறும். அந்த முயற்சியில் booster மற்றும் starship ஐ Hawaiian கடலில் இழுத்துவது தான் அவர்கள் திட்டம். அதன் பின் பல முயற்சியின்பின் தான் human space flight FAA சான்றிதழ் வழங்கப்படும். அடுத்தவருடம் human flight ஒரு கேள்விக்குறியே

 

உங்கள் கருத்துகளிற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நிலவுக்கு…. விஞ்ஞானிகளை அனுப்பாமல்,  
இந்தியா அங்கும் நடிகரையா அனுப்புது.
விளங்கீடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

நிலவுக்கு…. விஞ்ஞானிகளை அனுப்பாமல்,  
இந்தியா அங்கும் நடிகரையா அனுப்புது.
விளங்கீடும்.

இந்தியா அல்ல அண்ணை, ஜப்பானிய தொழிலதிபர் இலவசமாக லொத்தரில் தெரிவு செய்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இந்தியா அல்ல அண்ணை, ஜப்பானிய தொழிலதிபர் இலவசமாக லொத்தரில் தெரிவு செய்தவர்.

ஜப்பானிய தொழிலதிபர்  லொத்தரில் தெரிவு செய்தவரும், நடிகராக வந்தது அதிசயம்தான். 🙂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.