Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய இலங்கை கடற்படை தளபதிகள் சந்திப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இலங்கை கடற்படை தளபதிகள் சந்திப்பு

By RAJEEBAN

13 DEC, 2022 | 12:08 PM
image

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய கடற்படையின் தளபதி அட்மிரல் ஆர் ஹரிகுமார் இலங்கையின் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிசாந்த உலுகேதென்னவை சந்தித்துள்ளார்.

 

Fj1RBisXoAEU5e0.jpg

இச்சந்திப்பின்போது  இரு கடற்படையினரிடையிலுமான ஆளுமைவிருத்தி செயற்பாடுகளை மேலும் வலுவாக்குதல் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பினை மேம்படுத்துதுதல் ஆகிய விடயங்கள் குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன

 

Fj1RDCxX0AAcayW.jpg

 

 

Fj1RChvXEAE24fL.jpg

https://www.virakesari.lk/article/142982

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டிற்குள் நுழைந்த போர்க்கப்பல்! வெளியானது காரணம்

Sri LankaIndiaSri Lanka Navy
 1 மணி நேரம் முன்

இந்திய கடற்படையின் போர்க்கப்பலான 'ஐ.என்.எஸ் சஹ்யாத்ரி' மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (13) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினரால் கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையே நட்புறவை வளர்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த போர்க்கப்பலானது 143 மீட்டர் நீளமும், மொத்தம் 390 கப்பல்களைக் கொண்டதுடன், அதன் கட்டளை அதிகாரி கெப்டன் எம்.எம்.தோமஸ் ஆவார்.

இந்த கப்பல் எதிர்வரும் 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படும் போது மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடற்பரப்பில் இலங்கை கடற்படையுடன் இணைந்து கடற்படை கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவுள்ளது.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான முக்கிய செய்திகளின் தொகுப்பு.

https://tamilwin.com/article/the-main-country-s-warship-entered-sri-lanka-1670941791

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

By T. SARANYA

14 DEC, 2022 | 03:05 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர். ஹரி குமார் நேற்று (13)  பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்னவைச் சந்தித்தார்.

நாட்டிற்கு விஜயம் செய்துள்ள கடற்படை தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் இராணுவ இராஜதந்திரம் தொடர்பில் சினேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

சந்திப்பைத் தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சுக்கான கடற்படை தளபதியின் விஜயத்தைக் குறிக்கும் வகையில் கடற்படைத் தளபதியும் பாதுகாப்புச் செயலாளரும் நினைவுச் சின்னங்களைப் பரிமாறிக்கொண்டனர். அதன் பின்னர், கடற்படை தளபதி விருந்தினர் புத்தகத்தில் தனது கையொப்பத்தை இட்டார்.

இந்த சந்திப்பில், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்காரவும் கலந்துக்கொண்டார்.

https://www.virakesari.lk/article/143084

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய கடற்படை தளபதி இலங்கை விமானப்படைத் தளபதியை சந்தித்தார்

By VISHNU

15 DEC, 2022 | 11:31 AM
image

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஹரி குமார் மற்றும் இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று 14 ஆம் திகதி விமானப்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

315520869_1160814198129206_6707961673257

இந்திய கடற்படை தளபதிற்கு இலங்கை விமானப்படை வர்ண அணிவகுப்பு படை பிரிவின் அணிவகுப்பு மரியாதை வழங்கி வரவேற்கப்பட்டது.

 

315307619_836787147578908_20720360037691

இதன்போது   இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவப் பயிற்சி மற்றும் பிராந்திய கடல்சார் பாதுகாப்பு தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடளும்  இடம்பெற்றது.

இறுதியாக இந்த நிகழ்வை நினைவு கூரும்  வகையில் இருவருக்கும் இடையிலான நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன.

319700133_662413045340080_84503599246032

மேலும் இந்த சந்திப்பில் இலங்கை விமானப்படையின் பணிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/143151

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஏராளன் said:

இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர். ஹரி குமார் நேற்று (13)  பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்னவைச் சந்தித்தார்.

ஏன் கமல் குணரத்ன இவ்வளவு சோகமாக இந்திய கடற்படை தளபதியை நேருக்கு நேர் பார்க்க பயப்படுகிறார்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.