Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெஸ்ஸி: பிரான்சை வீழ்த்தி கால்பந்து உலகின் அசைக்க முடியாத வீரனாக உருவெடுத்து விட்டாரா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மெஸ்ஸி: பிரான்சை வீழ்த்தி கால்பந்து உலகின் அசைக்க முடியாத வீரனாக உருவெடுத்து விட்டாரா?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,க.சுபகுணம்
  • பதவி,பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
லியோனெல் மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

லியொனெல் மெஸ்ஸி. இன்று இந்தப் பெயர்தான் உலகம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. எங்கு பார்ப்பினும், மெஸ்ஸி, மெஸ்ஸி, மெஸ்ஸி...

அவர் இந்த மகிழ்ச்சியை அனுபவிப்பதற்காகத் தன் வாழ்நாள் முழுவதும் காத்திருக்க வேண்டியிருந்தது. கோப்பையை வென்றவுடன் ரசிகர்களுக்கு மீண்டுமோர் இன்ப அதிர்ச்சியையும் அவர் வழங்கினார்.

ஆம், உலகக்கோப்பை போட்டியோடு தான் ஓய்வுபெறப் போவதாக அறிவித்திருந்தவர், இப்போது இனி தொடர்ந்து அர்ஜென்டினாவுக்காக மேலும் சில போட்டிகளில் விளையாடப் போவதாக அறிவித்திருக்கிறார்.

“நான் இப்போது ஓய்வுபெறப் போவதில்லை. உலக சாம்பியனாக இன்னும் சில போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். சாம்பியனாக இருக்கும் மகிழ்ச்சியை அனுபவிக்கப் போகிறேன்,” என்று உலக கோப்பையை வென்ற பிறகு தெரிவித்துள்ளார்.

 

ஊக்கமும் வேகமும் குறையாத மெஸ்ஸி

2006ஆம் ஆண்டில் நடந்தது தான் மெஸ்ஸியின் முதல் உலகக்கோப்பை. அதில் செர்பியாவுக்கு எதிரான போட்டியில், ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கிய சில நிமிடங்களில் அவர் களமிறக்கப்பட்டார்.

அந்த நேரத்தில், மாரடோனாவின் முகத்தில் ஒரு பெருமை தெரிந்தது. இரண்டு கைகளையும் உயரத் தூக்கி, சத்தமாகக் கொண்டாடி வரவேற்றார்.

அந்த நிமிடத்தில் அவருடைய முகத்தில், தன் மகனே களத்தில் இறங்கியதைப் போல் அவ்வளவு பெருமை. 74வது நிமிடத்தில் களமிறங்கிய மெஸ்ஸி, தனது முதல் உலகக்கோப்பை போட்டியிலேயே முதல் கோலை அடித்தார். கூடவே, கோல் வாய்ப்பு ஒன்றையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.

மாரடோனா கடைசியாக 2018ஆம் ஆண்டு உலகக்கோப்பையின்போது பார்வையாளராக மெஸ்ஸியின் ஆட்டத்தைப் பார்த்தார். அப்போது ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அர்ஜென்டினா தோற்கடிக்கப்பட்டது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

அதைப் பார்த்தவரின் கண்களில் தெரிந்த கவலையை இன்றளவும் மறக்க முடியாது. ஒருவேளை நேற்றும் அதே இடத்தில் நின்று, மாரடோனா மெஸ்ஸியின் ஆட்டத்தை, அவரைத் தூக்கியதைப் போலவே கோப்பையோடு மெஸ்ஸியை ரசிகர்கள் சுமந்ததைப் பார்த்திருந்தால், என்ன சொல்லியிருப்பார், எப்படி உணர்ந்திருப்பார்!

2022ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா போட்டிகள் தொடங்கியபோது, செய்தியாளர்களிடையே பேசிய மெஸ்ஸி, “இது என்னுடைய கடைசி உலகக்கோப்பையாக இருக்கலாம். என்னுடைய பெருங்கனவை அடைவதற்கான கடைசி வாய்ப்பு.

நான் உடல் மற்றும் மனதளவில் மிகவும் சிறப்பாக உணர்கிறேன். நாங்கள் மற்ற உலகக்கோப்பை போட்டிகளின்போது இருந்ததைவிட இப்போது சிறந்த ஃபார்மில் வந்துள்ளோமா என்றெல்லாம் எனக்குத் தெரியாது.

ஆனால், தேசிய அணி என்ற பதட்டமோ முடிவுகளைப் பற்றிய கவலையோ இல்லாமல், நன்கு விரும்பி ஆடுவதற்கு கோபா அமெரிக்க கோப்பை வழிவகுத்துள்ளது,” என்று பேசினார்.

லியோனெல் மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

2010 உலகக்கோப்பக போட்டியின்போது மெஸ்ஸியும் மாரடோனாவும்

அதைத் தொடர்ந்து விளையாடிய முதல் போட்டியிலேயே சௌதி அரேபியாவிடம் தோல்வி.

அதைத் தவிர்த்து, அடுத்தடுத்து வந்த அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி விடாது அவர்களைப் பின் தொடர்ந்தது. மெஸ்ஸி இந்தத் தொடரில் மட்டும் ஏழு கோல்களை அடித்துள்ளார். அதில், இறுதிப்போட்டியில் மட்டுமே இரண்டு கோல்கள்.

இதற்காக, அவர் கிட்டத்தட்ட மூன்று முறை தோல்வியை நெருங்கி மீண்டு வர வேண்டியிருந்தது. 80வது நிமிடத்தில் தொடங்கிய பிரான்ஸ் அணிக்கான எம்பாப்பேவின் இடி போன்ற கோல்களைத் தொடர்ந்து மீண்டும் அவர் கூடுதல் நேரத்தின்போது அணியை முன்னிலைக்குக் கொண்டு வந்து ஊக்கப்படுத்தினார்.

அதைத் தொடர்ந்து மீண்டும் எம்பாப்பே மற்றுமொரு கோல் அடித்து சமன் செய்தார். ஆனால், இறுதி வரை அவருடைய தாக்குதல் ஆட்டமும் குறையவில்லை, அணிக்கு அவரளித்த ஊக்கமும் குறையவில்லை.

லியோனெல் மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

மெஸ்ஸியின் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்த உலகக்கோப்பை

இப்படி மூன்று முறை தோல்வியின் விளிம்புக்குச் சென்று, மீண்ட பிறகே இந்த வெற்றியை அவரால் சுவைக்க முடிந்தது. மெஸ்ஸி செய்த சாதனைகளின் பட்டியல் மிக நீளமானது.

அணியாக செய்த சாதனைகள்

  • 8 முறை ஸ்பானிய கால்பந்து கோப்பையான பிச்சிச்சி கோப்பையை வென்றுள்ளார்
  • நான்கு முறை சாம்பியன்ஸ் லீக் வென்றுள்ளார்
  • 10 முறை ஸ்பானிய கால்பந்து லீக் போட்டியான லா லிகா கோப்பையை வென்றுள்ளார்.
  • ஏழு முறை கோபா டெல் ரே சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்
  • ஐரோப்பிய சூப்பர் கோப்பையை மூன்று முறை வென்றுள்ளார்
  • ஸ்பானிய சூப்பர் கோப்பையை 8 முறை வென்றுள்ளார்
  • கோபா அமெரிக்கா கோப்பையை ஒருமுறை வென்றுள்ளார்
  • பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றார்
Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

தனிப்பட்ட சாதனைகள்

  • ஏழு முறை பெருமைமிக்க பேலோன் டோர் விருதை வென்றுள்ளார்
  • ஸ்பானிய கால்பந்து லீக் போட்டியான லா லிகாவில் 7 முறை சிறந்த வீரராகியுள்ளார்.
  • லா லிகாவில் ஏழு முறை சிறந்த ஃபார்வார்ட் ஆட்டக்காரராகியுள்ளார்
  • 2005ஆம் ஆண்டில் கோல்டன் பாய் விருது வென்றுள்ளார்
  • ஆறு முறை ஐரோப்பிய கோல்டன் ஷூ வென்றுள்ளார்
  • 2009ஆம் ஆண்டில் ஃபிஃபா வழங்கும் உலகளாவிய சிறந்த வீரர் பட்டம் வென்றார்
  • நான்கு முறை உலகக் கோப்பையில் கோல்டன் பால் வென்றுள்ளார்
  • நான்கு முறை ஓன்ஸே டோர் விருதை வென்றுள்ளார்

இப்படி, அவருடைய வெற்றிகளின் பட்டியல் மிகவும் நீளமானது. அதில் இப்போது உலகக்கோப்பை சாம்பியன்ஷிப்பும் சேர்ந்துள்ளது. அது ஒன்றுதான் அவருடைய கால்பந்து வாழ்க்கையில் கிடைக்காமல் இருந்தது. அதையும் சாதித்துவிட்டார்.

லியோனெல் மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

மெஸ்ஸியை மக்கள் உணர்ந்த தருணம்

இவையனைத்தும் தொடங்கியது, மெஸ்ஸியின் 13வது வயதில். அர்ஜென்டினா உலகக்கோப்பையை கடைசியாக வென்ற 1986ஆம் ஆண்டுக்கு அடுத்த ஆண்டில் பிறந்த அந்த இளம் வீரன், பார்சிலோனாவுக்காக விளையாட ஸ்பெயினுக்கு சென்றார்.

ஒரு சராசரி இரும்புத் தொழிற்சாலை ஊழியரின் மகனாக இருந்த ஒரு சிறுவன், உலகம் போற்றும் கால்பந்து நாயகனாக மாறிய பாதை அங்குதான் தொடங்கியது.

அவருடைய குடும்பம் அப்போதுதான் பார்சிலோனாவுக்கு குடிபெயர்ந்திருந்தார்கள். அவர் 14 வயதுக்குக் கீழ் பிரிவில் பார்சிலோனா அணிக்காக விளையாடத் தொடங்கியிருந்தார். அந்த அணியின் ஜூனியர் அணியில் அவர் 14 போட்டிகளில் 21 கோல்களை அடித்தார். அதைத் தொடர்ந்து 16 வயதில் அடுத்தகட்ட அணிக்கு முன்னேறினார்.

2005ஆம் ஆண்டில் 17 வயதிலேயே, பார்சிலோனா அணிக்கான அதிகாரபூர்வ ப்ளேயராக, கோல் ஸ்கோரராக ஸ்பானிய லா லிகா போட்டிகளில் அறியப்பட்டார்.

லியோனெல் மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெறும் 5 அடி 7 அங்குலம், 67 கிலோவே இருந்த அந்த இளைஞர், அவ்வளவு வலிமையானவராக, வேகமானவராக, களத்தில் தடுக்கக் கடினமானவராக இருந்தது, உலகளாவிய அணிகளின் கவனத்தை ஈர்த்தது.

மெஸ்ஸி இடது கால் ஆட்டக்காரர். அவரால், திறன்மிக்க பாஸ்களை வேகமாகச் செய்ய முடிந்தது. எதிரணி விரர்களுக்கு நடுவே மிகவும் வேகமாக பந்தை திரெடிங் செய்து, எல்லையைத் தாண்டி கொண்டு செல்ல முடிந்தது. அதை எதிரணிகளின் தடுப்பாட்ட வியூகத்தை உடைக்க பார்சிலோனா பயன்படுத்திக் கொண்டது.

2005ஆம் ஆண்டில் அவருக்கு ஸ்பானிய குடியுரிமை வழங்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டே பார்சிலோனா அணி ஐரோப்பாவின் சாம்பியன்ஸ் லீக் பட்டம் வென்றது. அடுத்தடுத்து அவருடைய ஆட்டம் மிகவும் அபாரமாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது.

பழைய மெஸ்ஸி இன்னும் மாறவில்லை

2007ஆம் ஆண்டில், கோபா டெல் ரே போட்டியில் பார்சிலோனாவும் ஜெடாஃபீயும் மோதின. அந்த ஆட்டத்தின் 28வது நிமிடத்தில், தனது 19 வயதில் மெஸ்ஸி அடித்த கோல் அவரைப் பற்றி கால்பந்து ரசிகர்களுக்கு உணர்த்தியது. மைதானத்தின் நடுவில் அவருடைய கால்களுக்குக் கிடைத்த பந்தை, இடது காலில் டிரிப்பிள் செய்துகொண்டே, எதிரணியின் ஆறு வீரர்களைக் கடந்து சென்று கோல் அடித்தார்.

லியோனெல் மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கடந்த ஆகஸ்ட் மாதம், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக லீக் 1 போட்டியில் மெஸ்ஸி ஆடியபோது...

1986 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில், இங்கிலாந்துக்கு எதிராக மாரடோனா அடித்த பிரபலமான கோலை அவர் அதன் மூலம் ரசிகர்களுக்கு நினைவுபடுத்தினார்.

2006ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் லீக் போட்டியை பார்சிலோனா வென்ற பிறகு, அடுத்த இரண்டே ஆண்டுகளில் மெஸ்ஸி உலகளவில் மிகவும் பேசப்படக்கூடிய, ஆதிக்கம் செலுத்தக்கூடிய கால்பந்து வீரராக வளர்ந்தார். அவருக்கும் மேன்செஸ்டர் யுனைடெட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும் இடையே யார் முதலிடம் பிடிப்பது என்ற போட்டி இருந்துகொண்டேயிருந்தது.

நெதர்லாந்துடனான போட்டியில், டச்சு வீரரான வௌட் வேகோர்ஸ்ட்டை பெனால்டி ஷூட் அவுட்டின்போது மெஸ்ஸி போபோ எனத் திட்டினார். ‘போபோ’ என்றால் முட்டாள் என்று அர்த்தம். வேகோர்ஸ்டும் நெதர்லாந்தின் பயிற்சியாளரும் அவர்களை மரியாதையாக நடத்தவில்லை என்று மெஸ்ஸி குற்றம் சாட்டினார்.

“விளையாட்டு என்பது எதிரணியைச் சீண்டிவிடுவதோ, தவறாகப் பேசுவதோ இல்லை. அவர் அதைச் செய்துகொண்டிருந்தார். நான் அனைவரையும் மதித்து நடந்துகொள்வேன். அப்படித்தான் என்னிடமும் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறேன்,” என்று அதுகுறித்து தெரிவித்தார்.

லியோனெல் மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அது அர்ஜென்டினாவில் குழந்தைகளிடையே பயன்படுத்தக்கூடிய வார்த்தை. அநேகமாக அவர் பார்சிலோனாவுக்கு வரும் முன்பாக, தனது 12 வயதில் பயன்படுத்தியிருக்கலாம்.

அந்த மெஸ்ஸியை இப்போது நாம் மீண்டும் பார்க்கிறோம். குணத்தில் மட்டுமில்லை, ஆட்டத்திலும் அதே பதின்பருவ மெஸ்ஸி தான் ஆடியிருப்பதைப் போல் இந்தத் தொடர் இருந்தது.

அவருடைய கையில் தங்கக் கோப்பை இருந்தது. 16 ஆண்டுகளுக்கு முன்பாக செர்பியாவுக்கு எதிரான போட்டியில் 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது முதல் அவருடைய கனவாக இருந்த கோப்பை அவர் கைகளில் இருந்தது.

அவருடைய ஆதரவாளர்கள், அவரே சிறந்த கால்பந்து வீரர் என்ற வாக்குவாதத்தில் முதல் வாதமாக வைக்கப்போவது இனி இந்தக் கோப்பையைத்தான். அதற்கு எதிர்வாதம் வைப்பது, எதிரில் இருப்போருக்குக் கொஞ்சம் சிரமமாக இருக்கலாம்.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒப்பீடுகள் காலத்திற்கு ஏற்ப மாறலாம். ஆனால், பிலி, மாரடோனா போன்றோரின் வரிசையில் மெஸ்ஸியும் இப்போது இணைந்துள்ளார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இந்த இறுதிப்போட்டியில் அவர் இரண்டு கோல்களை அடித்தார். கிலியன் எம்பாப்பே, மூன்று கோல்களை அடித்தார். அரை நூற்றாண்டுக்கும் மேலாக உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் யாரும் செய்துவிடாத ஒரு சாதனை அது.

அதுபோக, இருமுறை கூடுதல் நேரம், பெனால்டி ஷூட் அவுட் என்று பலவற்றையும் தாண்டி, மிக நீண்ட காத்திருப்புக்குப் பிறகே அவரால் அந்தக் கோப்பையின் உச்சியில் தன் உதடுகளால் முத்திரை பதிக்க முடிந்தது.

அங்கு அவர் வாழ்வில் தவறிக் கொண்டேயிருந்த பரிசை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

https://www.bbc.com/tamil/articles/c0x70y4667do

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Messi-ஐ பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? | Lionel Messi Full History in Tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெஸியின் கோரிக்கையினால் PSG கழக நிர்வாகிகள் சங்கடத்தில்

By SETHU

26 DEC, 2022 | 11:35 AM
image

பிரான்­ஸி­லுள்ள பரிஸ் செயின்ற் ஜேர்மைன் கழ­கத்தில் (பிஎஸ்ஜி) விளை­யாடும் ஆர்­ஜென்­டீன அணித்­த­லைவர் லயனல் மெஸி, அக்­க­ழ­கத்தின் ரசி­கர்­க­ளுக்கு உலகக் கிண்­ணத்தை அக்­காட்­சிப்­ப­டுத்த அனு­மதி கோரி­யுள்ளார். எனினும், இக்­கோ­ரிக்­கைக்கு அனு­ம­தி­ய­ளிப்­பதற்கு கழக நிர்­வா­கிகள் தயங்கி வரு­கின்­றனர் என செய்தி வெளி­யா­கி­யுள்­ளது. 

கத்தார் 2022 உலகக் கிண்ண சுற்­றுப்­போட்டி முடி­வ­டைந்த நிலையில் வீரர்கள் தமது கழ­கங்­க­ளுக்கு திரும்பிக் கொண்­டி­ருக்­கின்­றனர். 

கழ­கங்­களின் போட்­டி­க­ளுக்குத் திரும்பும் வீரர்கள் தாம் வென்ற பரி­சு­களை, கழ­கத்தின் முதல் போட்­டிக்கு முன்னர் ரசி­கர்­க­ளுக்கு காட்­சிப்­ப­டுத்­து­வது சம்­பி­ர­தா­ய­மா­க­வுள்­ளது. 

இதன்­படி, PSG கழ­கத்தில் தான் மீண்டும் பங்­கு­பற்­ற­வுள்ள முதல் போட்­டிக்கு முன், உலகக் கிண்­ணத்தை காட்­சிப்­ப­டுத்து லயனல் மெஸி அனு­மதி கோரி­யுள்ளார். ஆனால், ஆர்­ஜென்­டீன அணி இம்­முறை இறு­திப்­போட்­டியில் பெனல்டி முறையில் 4:2 கோல் விகி­தத்தில் பிரான்ஸை தோற்­க­டித்தே சம்­பி­ய­னா­கி­யது. 

 கத்­தா­ரிலும் ஆர்­ஜென்­டீ­னா­விலும் வெற்­றிக்­கொண்­டாட்­டங்களில் பிரான்ஸின் நட்­சத்­திர வீரர் கிலியன் எம்­பாப்­பேயை கேலி செய்யும் வகையில் ஆர்­ஜென்­டீன வீரர்கள், குறிப்­பாக கோல் காப்­பாளர் மார்­டினஸ். நடந்­து­கொண்­டனர். பிஎஸ்ஜி கழ­கத்தில் எம்­பாப்வே பல வரு­டங்­க­ளாக விளை­யாடி வரு­கிறார். லயனல் மெஸி, கடந்த வருடம் அக்­க­ழ­கத்தில் இணைந்தார்.

இந்­நி­லையில், உலகக் கிண்ண இறுதிப் ‍போட்டியில் பிரான்ஸை, ஆர்­ஜென்­டீனா தோற்­க­டித்­துடன் எம்­பாப்­வேயை ஆர்­ஜென்­டீன வீரர்கள் கேலி செய்த பின்­ன­ணியில், ஆர்­ஜென்­டீ­னாவின் கிண்­ணத்தை தமது கழக ரசி­கர்­க­ளிடம் காட்­சிப்­ப­டுத்­தும்­போது ஏற்­படக் கூடிய பிர­தி­ப­லிப்­புகள் குறித்து பிஎஸ்ஜி கழக நிர்­வா­கிகள் கரி­சனை கொண்­டுள்­ளனர் என செய்தி வெளி­யா­கி­யுள்­ளது.

https://www.virakesari.lk/article/144132

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோனியின் மகளுக்கு தனது கையெழுத்துடன் ஆர்ஜென்டீன அங்கி அனுப்பிய மெஸி

By SETHU

28 DEC, 2022 | 11:38 AM
image

ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணியின் தலைவர் லயனல் மெஸி, தான் கையெழுத்திட்ட, ஆர்ஜென்டீன அணியின் அங்கியொன்றை இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான மஹேந்திர சிங் தோனியின் மகளுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் பிரான்ஸை தோற்கடித்து ஆர்ஜென்டீனா சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், மெஸியின் கையெழுத்து கொண்ட ஆர்ஜென்டீன அணியின் அங்கி தனக்கு கிடைத்ததை எம்.எஸ். தோனியின் மகளான ஷிவா சிங் தோனி(7) சமூகவலைத்தளங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

Ziva-Dhoni--Lionel-Messi-jersey-1.jpg

மேற்படி அங்கியில் கையெழுத்திடுள்ள லயனல் மெஸி, Para Ziva  என எழுதி கையெழுத்திட்டுள்ளார். இதற்கு ஸ்பானிய மொழியில் 'ஷிவாவுக்கு' என அர்த்தமாகும்.

லயனல் மெஸியும் எம்.எஸ். தோனியும் ஏற்கெனவே பரஸ்பர அபிமானம், மரியாதையை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Ziva-Dhoni--Lionel-Messi-jersey-3.jpg

https://www.virakesari.lk/article/144314

  • கருத்துக்கள உறவுகள்

2026 உல‌க‌ கோப்பையில் இதே துடியாட்ட‌ம் இருக்காது..........இந்த‌ உல‌க‌ கோப்பையோட‌ ஓய்வை அறிவித்து இருந்தா ந‌ல்ல‌ம்............

2026 உல‌க‌ கோப்பை தூக்காத் நாடு ஏதும் தூக்கினா ம‌கிழ்ச்சி................🙏🙏🙏

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.