Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனித நேய அமைப்புகளின் தவறான அறிக்கை - தமிழீழ சமாதானச் செயலகம் அம்பலப்படுத்தல்

Featured Replies

செவ்வாய் 04-09-2007 17:36 மணி தமிழீழம் தாயகன்

சிறீலங்காப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் தாயகத்தில் கடந்த மாதம் மட்டும் 43 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுஇ 27 பேர் காணாமல்ப் போகச் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழீழ சமாதானச் செயலகம்இ புள்ளிவிபரத் தகவல்களுடன் இது பற்றிய அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள நிலையில்இ அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த மூன்று வாரங்களில் 34 பேர் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளதுடன்இ 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்த சம்பவங்கள் எந்தெந்தப் பகுதியில் நிகழ்ந்தன என்பது பற்றிக்கூட அந்த அறிக்கையில் தெளிவான விபரங்களை எது வெளியிடப்படவில்லை.

இதேபோன்று போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் அம்பாறை காரைதீவில் கடந்த 22ஆம் நாள் 60 அகவுடைய நபர் கடத்தப்பட்டதுஇ இதேநாள் திருகோணமலை தம்பலகாமத்தில் 32 அகவையுடைய நபர் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளமைஇ 20ஆம் நாள் திருக்கோவிலிலும்இ திருகோணமலையிலும் இருவர் கடத்திச் செல்லப்பட்டது போன்ற தமக்கு கிடைத்த விபரங்களை மட்டுமே தமது வாராந்த அறிக்கையில் இணைத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

வவுனியா உலுக்குளம் கிராமத்தில் ஊர்காவல் படையினர் மீது கடந்த 20ஆம் நாள் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, சிறீலங்காப் படையினரும், ஊர்காவல் படையினரும், சிங்கள காடையர்களும் இணைந்து வீரபுரம் தமிழ்க் கிராமத்திற்குள் புகுந்து மக்களைத் துன்புறுத்தியதுடன், தமிழர்களின் சொத்துக்களைச் சூறையாடியுள்ளமையும் கண்காணிப்புக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் தமிழீழ சமாதானச் செயலகத்தின் அறிக்கையின் பிரகாரம் யாழ் குடாநாட்டில் மட்டும் கடந்த மாதம் 25 பேர் படையினராலும், ஒட்டுக் குழுக்களாலும் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 18 பேர் காணாமல்ப் போகச் செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு கிழக்கிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவலின் அடிப்படையில் கடந்த மாதத்தில் மட்டும் படுகொலை செய்யப்பட்ட, மற்றும் காணாமல்ப் போகச் செய்யப்பட்டவர்களின் தொகை, தமிழீழ சமாதான செயலகத்தின் அறிக்கையுடன் ஒத்துப்போகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் தாயகத்திலுள்ள மனித நேய அமைப்புகள் முழுமையான தகவல்களைப் பெறாது இவ்வாறான பிழையான அறிக்கைகளை வெளியிட்டு வருவதால், அனைத்துலக சமூகம் தவறான கருத்துக்களுக்கும், முடிவுகளுக்கும் தள்ளப்படுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நன்றி : பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா இராணுவத்தினரால் ஓகஸ்ட் மாதத்தில் 43 தமிழர்கள் படுகொலை: விடுதலைப் புலிகள்

[செவ்வாய்க்கிழமை, 4 செப்ரெம்பர் 2007, 17:52 ஈழம்] [ப.தயாளினி]

சிறிலங்கா இராணுவத்தினரால் ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் 43 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சிறிலங்கா இராணுவத்தினரால் கடந்த ஓகஸ்ட் மாத காலப்பகுதியில் தமிழர் தாயகப் பிரதேசத்தில் 43 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 27 தமிழர்கள் காணாமல் போயுள்ளனர்.

சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்திருக்கும் யாழ்ப்பாணம்தான் சிறிலங்காவில் மட்டுமல்ல தெற்காசியாவிலேயே மிக மோசமான மனித உரிமை மீறல்கள் நிகழும் இடமாக உள்ளது.

யாழ். குடா நாட்டில் சிறிலங்கா இராணுவத்தினரின் அனைத்து வகையான மனித உரிமை மீறல்களுக்கும் யாழ். குடா தமிழர்கள் முகம் கொடுத்து வருகின்றனர்.

யாழ். பல்கலைக் கழக மாணவர் சகாதேவன் டிலக்சன், யாழ். தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் தணிகாசலம் சசிரூபன், டெனிஸ் அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர் சிவசாமி சிறீதரன், தமிழ்த் தேசியக் கூடமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரின் சகோதரர் தியாகச்சந்திரன், சிறிலங்கா போக்குவரத்துச் சபை பணியாளர்கள் இருவர் ஆகியோரும் இதே ஓகஸ்ட் மாதத்தில் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா நெடுங்கேணியில் பொதுமக்கள் மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் அரியரட்ணம் சுபாஜினி என்பவர் உயிரிழந்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் சிறிலங்கா இராணுவத்தினரால் 25 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தில் மட்டும் 18 தமிழர்கள் காணாமல் போயுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்டோர் விபரம்:

யாழ்ப்பாணம் - 25

வவுனியா - 07

மட்டக்களப்பு - 06

அம்பாறை - 03

திருகோணமலை - 02

காணாமல் போனோர் விபரம்:

யாழ்ப்பாணம் -18

மட்டக்களப்பு - 05

மன்னார் - 03

திருகோணமலை - 01

யாழ். குடா நாட்டில் காலவரையற்ற ஊரடங்கு நேரங்கள், தேடுதல் நடவடிக்கை மற்றும் கைதுகள், கடற்றொழிலாளர்களை கடலில் சித்திரவதை செய்தல், மீன்பிடித் தடைகள், சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பில் சிக்கியிருக்கும் தமிழர் தாயகப் பகுதியில் நாளாந்தம் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்கள் என்பதுதான் இன்றைய நிலையாக உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

புதினம்

எல்லாம் எம்மவர்களின் ஊசுப்பேற்றுகின்ற வேலைகளினால் வந்த விளைவு யாழில் இயக்கம் நிற்கும் வரையும் " சண்டை தொடங்னினால் வெட்டுவம் பிடிப்பம் " என்று ஊசுப்Nபுற்றி விட்டு இயக்கம் வன்னிக்கு போய் விட்டது ஆனால் இயக்கத்திற்காக வேலை செய்த பொங்கு தமிழிற்கு கொடிபிடித்தவர்கள் தினமும் அநியாயமாக கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் ஆனால் இயக்கத்தினால் உதவி செய்தவர்களை பாதுகாப்பாக வன்னிக்கு நகாத்தவும் முடியவில்லை ஆனால் " நீங்கள் சொன்ன கணக்கு பிழை நாங்கள் சொல்லுற கணக்கு தான் சரியென்று கணக்கு படிப்பிக்கினம்.

புதியவன் உங்களின் அண்மைகால கோவத்துக்கு காரணம் யாதென தெரியவில்லை மனம் தளர்வதில் எதுவும் நடந்துவிடபோவது இல்லை இது விளையாட்டு அல்ல போராட்டம் பல உயிர்களுடன் செய்யும் ஒருவகை சூதாட்டம் ஆழம் தெரியாமல் கால்வைக்க முடியாது பொறுத்திருங்கள் நல்லதே நடக்கும்

வணக்கம் ஈழவன்!

உண்மையிலே சொல்லப் போனால் எவருடனோ அல்லது எதனாலுமோ கோப்பட்டோ அல்லது உணாச்சி வசப்படோ மேற்கொள்ளப்படும் காரியங்களினால் எதுவுமே நிகழ்ந்துவிடப்போவதில்லைத் தான் அத்துடன் விடுதலைப் போராட்டத்தை ஓட்டிய காரண காரியங்களில் கவனிக்கும் பொழுது கொஞ்சம் வேதனையாகத் தான் இருக்கின்றது ஏன்எனில் தமிழர் தரப்ப்பின் சில நடவடிக்கைகளினால் தமிழ் மக்கள் அனைவருமே ஒரு விதமான மனரீதியலான சோர்வு ஏற்பட்டுள்ளது என்பதை எவரும் மறுத்திட முடியாது அது உங்களிற்கும் தெரிந்த உண்மை குட .

ஆனாலும் மிகவும் கவலையான விடயங்கள் என்னவெனில் குறிப்பாக ஊடகங்களின் செயற்பாடுகளினால் அதாவது போர்நிறுத்த காலத்தில் அவை நடந்து கொண்ட விதங்கள் அல்லது அவற்றின் வெளியீடுகள் மக்களை ஓரு தமிழர் தரப்பு பற்றிய அதீதமான மாயைக்குள் வைத்திருந்தன என்பது கண்குடு.

முதலில் குறிப்பாக சொல்லப் போனால் இனிமேல் சண்டையே வராது சீறிலங்காவுடன் பேரம் பேசி அனைத்தiயும் வென்றிட முடியும் என்ற கருத்துப்பட ஆக்கங்கள் வெளிவந்து கொண்டிருந்தன ( அதற்காக பாரிய விலை கொடுத்த தமிழர் தரப்பை தமிழனாக இருந்து கொண்டு குறைத்து மதிப்பிட வில்லை மதிப்பிட போவதுமில்லை )

ஆனால் இந்த வேளைகளில் தமிழிழப் பகுதிகளில் நடைபெற்ற " பொhங்கு தமிழ் " நிகழ்வுகளில் குட பெருமளவான மக்கள் ஆரம்பத்தில் 2001 ஐனவரி 17 ஆம் திகதி நடைபெற்ற பொங்கு தமிழில் கலந்து கொண்ட மக்கள் தொகையை விட அதிகமான மக்கள் பாரிய நம்பிக்கையுடன் பங்கேற்றிருந்தனர் அதாவது இனி ஓரு காலத்திலும் இந்த மண்ணில் எதுவித வெடியோசையும் அற்ற நிலை உருவாகி எமக்கு தீர்வு கிடைக்கம் என்ற நம்பிக்கையுடன்.

பின்பு 2004 ஆம் ஆண்டு கருணாவின் பிளவின் போது குட கருணாவின் பிளவினால் எதுவுமே நடந்து விடப் போவதில்லை அது ஓரு பாரிய தாக்கமே அல்ல என்று வாதிட்டிருந்தன. ஆனால் பின்பு அமன் பின்பு பல தளபதிகள் பொறுப்பாளர்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது தமிழர் தரப்பில் இருந்த நம்பிக்கை கொஞ்சமாக குறைந்திருந்தது.

எல்லாவற்றையும் விட சம்புர் வாகரைபறிபோன பொழுது மக்களிற்கு கருணாவிக் பிளவின் பொழுது கருணாவினால் பரப்பட்ட தன்னால் மட்டுமெ கிழக்க மாகணத்தை பாதுகாக்க முடியும் என்ற வாhத்தைகளில் சில மயக்கங்கள் றே;பட்டு மன உறுதி குறைந்நிருக்கலாம்.

அது மட்டுமல்லாமல் அந்த நேரங்களி விடுதலைப் புலிப் பிரமுகர்களின் சில வார்த்தைகளினாலும் ஒரு வித நிலை ஏற்பட்டிருந்தத இ

குறிக்காக சொல்லப் போனால் சம்புரை இராணுவம் ஆக்கிரமிப்பதற்கு முன்னால் எமது ஊடகங்கள் சம்புர் பற்றியும் ஏன் புலிகளின் சில

பொறுப்பாளர்கள் தெரிவித்த கருத்;துக்கள் பார்ப்போமானால் " சம்புரில் இருந்தே யாழ் குடாநாட்;டிற்கான

அனைத்து இராணுவ கடல் வழி விநியோகங்களையும் தடுத்து நிறுத்தி விடமுடியும் அதன் பின்பு யாழில்

இராணுவத்தினால் எதுமெ செய்யமுடியாது " என்ற கருத்துப்ப தெரிவித்திருந்தனர் ஆனால் மக்கள்

அதையும் நம்பித்தான் ஆகினர்.

ஆனால் நடைபெற்றதெல்லாம் மாறித்தான் அதன் பின்பு மட்டக்களப்பு இன்று மன்னார் ஆகவே இந்த

நிலையில் எவ்வாறான நம்பிக்கைகளும் அற்ற நிலையில் தான் பொதுவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு : போராட்டத்தை நடத்துபவர்கள் தான் அதன் போக்கு திசை குறித்து சிந்தித்து தெளிவான முடிவுகள்

எடுத்து நடாத்துபவர்கள் ஆகவே அவர்களின் செயற்பாடுகளை குறை குறிட முடியாது ஏன் எனில் அதற்குரிய

பதில் எனக்குத் தெரியவில்லை தான் ஏன்னென்றால் படுகின்றவனுக்குத் தான் தெரியும்

அதனை எவ்வாற செய்ய வேண்டும் என்று ஆனாலும் விடுதலையின் பங்கு மக்களிற்கும் உண்டு.ஆகவே வெறும்

கணக்கு அறிக்கைள் மட்டும் மக்களை நம்;பிக்கை ஊட்டியச் செய்திடுபவையில்லை .

உங்களுடன் கருத்தினால் பிரச்சனை படவேண்டும் என்பதற்காக எழுதவில்லை நடைபெற்றவைகளால் ஏற்பட்டிருக்கும் நிலைமையைத் தான் குறிப்பிட்டுள்ளேன்.

எல்லாம் எம்மவர்களின் ஊசுப்பேற்றுகின்ற வேலைகளினால் வந்த விளைவு யாழில் இயக்கம் நிற்கும் வரையும் " சண்டை தொடங்னினால் வெட்டுவம் பிடிப்பம் " என்று ஊசுப்Nபுற்றி விட்டு இயக்கம் வன்னிக்கு போய் விட்டது ஆனால் இயக்கத்திற்காக வேலை செய்த பொங்கு தமிழிற்கு கொடிபிடித்தவர்கள் தினமும் அநியாயமாக கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் ஆனால் இயக்கத்தினால் உதவி செய்தவர்களை பாதுகாப்பாக வன்னிக்கு நகாத்தவும் முடியவில்லை ஆனால் " நீங்கள் சொன்ன கணக்கு பிழை நாங்கள் சொல்லுற கணக்கு தான் சரியென்று கணக்கு படிப்பிக்கினம்.

எனது நண்பர் ஒருவரின் தம்பி கடந்த 31/08/07 அண்று கனகம்புளியடி சாந்தியில் அவரது வீட்டுக்கு முன்னால் வைத்து சுட்டு கொல்ல பட்டார்... அவர் விடுதலை புலிகள் அமைப்புடன் எந்தவிதமான தொடர்பும் அற்றவர்... ஆனால் லண்டனில் இருக்கும் அவரின் அண்ணனின் உதவியுடன் அங்கு கடை ஒண்றை நடத்தி வந்ததுடன். உளவு இயந்திரங்களை வைத்தும் தொழில் செய்து வந்தவர்..... எந்த காரணமும் இல்லாது அவர் அங்கு சுட்டு கொல்லபட்டு இருக்கிறார்...

கொலை நடப்பதுக்கு 1 மாதம் முன்னால் அவரை கூட்டி செண்ற இரானுவ புலநாய்வு உறுப்பினர்கள் அவருக்கு எதிராக அவர் புலிகளுக்கு சார்பாக நடக்கிறார் அல்லது செயற்படுகிறார் என்னும் ரீதியில் விசாரனை நடத்தி இருக்கிறார்கள்(தாக்கப்பட்டா

Edited by தயா

வணக்கம் தயா !

நீண்ட நாட்களின் பின்பு !

அண்ணை பதிலுக்கு பதில் எழுதுறன் எண்டு கோபிக்காதையுங்கோ !

எழுதுறதிற்கு காரணம் இருக்கு !

நீங்கள் சொல்லுற ஆள் எனக்கும் தெரிஞ்சவர் தான் அவர் மட்டுவில் வையிரவர் கோயிலடிப்பகுதியில வைச்சத் தான் சுடப்பட்டவர்.

ஆனால் அவருடைய செயற்பாடுகளை நான் அறியவில்லை. ஆனாலும் அநியாயமாக எமது இளைஞர்கள் அழிக்கப் படகிறார்கள்.

இருந்நத பொழுதிலும் நானும் சில எனது நண்பர்களை கடந்த வருடத்திலும் இந்ந வருட முற்பகுதியிலும் இழந்திருக்கின்னேன். அவர்களில் பெரும்பாலனவர்கள் சமாதான காலத்தின் பொழுது நடைபெற்ற "பொங்கு தமிழ் " போன்ற நிகழ்வுகளிவ் கலந்து கொண்டவர்கள் இதிலே முக்கியமாக ஓன்றை குறிப்பிடவிரும்புகின்றேன்

என்னவெனில் கடந்த வருடம் மே மாதத்pல ஊருக்குச சென்ற பொழு ஓரு நண்பரை சந்தித்திருந்தேன் அவர் பல நிகழ்வுகளை ஓழுங்குபடுத்திருந';தார் ( சமாதான காலத்தில்)

அப்பொழுது அவர் சொன்னார் " எப்பிடியும் பிரச்சனை வரத்தான் போகுது வந்தால்

எங்கள மாதிரியாட்களை போடத்ததான் போறாங்கள் " என்றார்.

அப்ப நான் சொன்ன் " அப்படியெண்டால் என்ன கோதாரிக்க இஞ்;ச கிடக்குறாய் வேற

எங்கையாவது ஓடவேண்டியது தானே என்று ஆனாலும் அவரின் பதில் கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தது

" மச்சான் இயக்கம் யாழ்ப்பாணத்தை இன விட்டுட்டு போகாது அப்படி போறது எண்டால் எங்களை மாதிரி

ஆட்களை முதல்ல வன்னிக்கு கிளியர்பண்ணிட்டுத் தான் போகும் " என்றான். அதன் பின்பும் நான் பல தடவை

அவனுடன் பிரச்சனைபட்டிருக்கின்றேன்; " தெரிஞ்சு கொண்டு நிக்காத வெளியலி ஓடுற அலுவவைப் பார்;; " என்று

ஆனாலும் அவன் அன்று இயக்கத்pன் மீது வைத்திருந்த நம்பிக்கை என்னைக்குட ஒரு தடவை உலுக்கியது

என்று குடச்சொல்லாம்; ஆனால் அவனை சந்தித்து 3 மாதங்களின் பின்பு பாதை முடி சண்டை தொடங்கியது

ஆனாலும் விடவில்லை இறுதியாக 28 ஆம் திகதி 12 மாதம் 2006 அன்று அவனுடன் பலத்த சிரமங்களனின் மத்தில்

கதைத்திருந்தேன அந்த நேரத்திலும் அவனுடைய நம்பிக்கை சிறிது தளாந்திருந்தத என்க்கு புரியக்குடியதாக இருந்தது.

இறுதியாக சொன்னான் " மச்சான் என்னோட வேலை வெய்த 2பேரை போட்டுடாங்கள் அடுத்தது நானாகவும் " இருக்கலாம்.

அவன் சொல்லி சரியாக முன்று மாதங்கள் ஆகியிராது அவன் நினைத்தது போலவே அவனையும் போட்டுடாங்கள் .

தயா ! இதை நான் உங்களிற்கு போட்டிக்காக சொல்லவில்லை இவ்வாறான சம்பவங்களும் நடக்கின்றன.

ஆனால் அவன் குறிப்பட்டுச் சொன்ன சில போராளிகள் வன்னிக்குச் சென்றுவிட்டதை என்னால் அறியக்குடியதாக இருந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிக்குளத்தில் 200 குடும்பங்களின் கதி என்ன?

ஜபுதன்கிழமைஇ 5 செப்ரெம்பர் 2007இ 15:29 ஈழம்ஸ ஜவவுனியாவிலிருந்து த.சுகுணன்ஸ

மன்னார் சிலாவத்துறை பிரதேசத்தை நோக்கிய சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட பாரிய இராணுவ நடவடிக்கையையடுத்து அப்பகுதியிலுள்ள முள்ளிக்குளம் பிரதேசத்தில் 200 தமிழ் மீனவ குடும்பங்கள் குறித்து எந்த ஒரு தகவலையும் பெற இயலாமல் உள்ளதாக மன்னார் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறிலங்கா இராணுவத்தினரின் இப் பாரிய இராணுவ நடவடிக்கைகள் காரணமாகச் சிலாவத்துறை பிரதேசத்தை அண்மித்த ஏனைய கிராம மக்கள்இ நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு இடம்பெயர்ந்தனர்.

ஆனால் முள்ளிக்குளம் மக்கள் இடம்பெயர முடியாத நிலை உருவாக்கப்பட்டு அங்கேயே முடக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

முள்ளிக்குளம் பிரதேசத்தில் 200-க்கும் மேற்பட்ட தமிழ் மீனவக் குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் முள்ளிக்குளம் பிரதேசத்தில் இரண்டு இளைஞர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் சடலத்தை கடந்த சனிக்கிழமை மாலை முருங்கன் மருத்துவமனையில் சிறிலங்கா இராணுவத்தினர் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சிறிலங்கா இராணுவ நடவடிக்கைக்கு மத்தியிலும் அரிப்புப் பகுதியிலுள்ள தேவாலயங்களில் தங்கியிருந்த கன்னியாஸ்திரிகள்இ மதகுருமார்கள் ஆகியோர் முருங்கன் வழியாக சிறிலங்கா இராணுவத் தரப்பினரால் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று திருப்பியனுப்பப்பட்டுள்ளனர

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.