Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உள்ளூராட்சி தேர்தலிற்கான போராட்டத்தை கண்ணீர் புகை நீர்த்தாரை பிரயோகத்தின் மூலம் தோற்கடிக்க முடியாது – அனுரகுமார

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி தேர்தலிற்கான போராட்டத்தை கண்ணீர் புகை நீர்த்தாரை பிரயோகத்தின் மூலம் தோற்கடிக்க முடியாது – அனுரகுமார

Published By: RAJEEBAN

26 FEB, 2023 | 09:41 PM
image

அதிகாரம் ராஜபக்சாக்களிற்கும் பிரேமதாசாக்களிற்கும் இடையில் பரிமாறிக்கொள்ளப்படும் விடயமாக காணப்பட்டால் அவர்கள் தேர்தலை ஒருபோதும் ஒத்திவைக்கமாட்டார்கள் 

 

---------------------------------------------------------------------------------------------------------------------

 

மக்களின் சிறந்த எதிர்காலத்திற்காக  உள்ளூராட்சிதேர்தலிற்கான போராட்டத்தில் எந்த வழிமுறையையும் பயன்படுத்தி வெற்றிபெறுவோம் எனஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

லிப்டன் சதுக்கத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இதனை தெரிவித்துள்ள அவர்   உள்ளூராட்சிதேர்தலை அரசாங்கம் நடத்தச்செய்வதற்கான போராட்டத்தை கண்ணீர் புகைபிரயோகத்தின் மூலம் தடுக்க முடியாது பின்வாங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

anura_kumara1.jpg

மருந்துகள் இன்றி மடியும் மக்களிற்காக வேலைவாய்ப்பின்றி காணப்படும் இளைஞர்களிற்காக துன்பத்தில் சிக்குண்டுள்ள விவசாயிகள் மீனவர்கள் உழைக்கும் மக்களிற்காக நாங்கள் உள்ளுராட்சி சபை தேர்தலிற்கான இந்த போராட்டத்தில் வெற்றிபெறுவோம் எனவும் அவர் ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.

ஊழல் இல்லாத போதைப்பொருள் இல்லாத பொதுமக்கள் பணம் கொள்ளையடிக்கப்படாத நாட்டை உருவாக்குவதற்கான போராட்டத்தில் நாங்கள் வெற்றிபெறுவோம்,இது இந்த தலைமுறையின் கடமை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எந்த வழிமுறையையும் பயன்படுத்தி இந்த போராட்டத்தில் நாங்கள் வெற்றிபெறுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து தொழில்சார் துறையினர் படையினர் விவசாயிகள் மீனவர்கள் உட்;பட அனைவரும் தங்களது ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக தேசிய மக்கள் சக்தியின் பின்னால் அணிதிரளவேண்டும் எனவும் ஜேவிபியின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டிலிருந்து குடும்ப ஆட்சியை அகற்றுவதற்காக பெருமளவு மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைவதால் அச்சமடைந்துள்ள அரசாங்கம் உள்ளூராட்சி  தேர்தலை ஒத்திவைப்பதற்காக சதிசெய்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை அதிகாரம் என்பது ஒரு சில குடும்பங்களிற்கு இடையில் பரிமாறிக்கொள்ளப்படும் விடயமாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அனுரகுமார திசநாயக்க முதல் தடவையாக மக்கள் வறிய மக்களிற்கான அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்வந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே அரசாங்கம் அதிக கலக்கமடைந்துள்ளதுஎனவும் அவர் தெரிவித்துள்ளார்

அதிகாரம் ராஜபக்சாக்களிற்கும் பிரேமதாசாக்களிற்கும் இடையில் பரிமாறிக்கொள்ளப்படும் விடயமாக காணப்பட்டால் அவர்கள் தேர்தலை ஒருபோதும் ஒத்திவைக்கமாட்டார்கள் எனவும் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தலை ஒருமாதத்திற்கோ அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கோ ஒத்திவைக்க ரணில்விக்கிரமசிங்கவினால் முடியாது மேலும் அதிகளவான பொதுமக்கள் எங்களுடன் இணைந்துகொள்வார்கள் என அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/149206

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு போராட்டத்தில் பொலிஸார் தண்ணீர், கண்ணீர்ப் புகைப் பிரயோகங்கள்!  

Published By: NANTHINI

26 FEB, 2023 | 05:07 PM
image

 

ரண்டு நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளை  பிறப்பித்துள்ள நிலையிலும் தற்போதைய அரசுக்கு எதிராக தேசிய மக்கள் படையானது போராட்ட இயக்கத்தை ஆரம்பித்துள்ளது.

332356521_438328318479846_71557851491476

இந்தப் போராட்டத்தில் ஜனதா விமுக்தி பெரமுன தலைவர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், கலைஞர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டுள்ளதை காணமுடிகிறது.

இந்த ஊர்வலம் காரணமாக தாமரைத் தடாகம்  முதல் நகர மண்டபம் வரை பாரிய  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, தேசிய மக்கள் படை போராட்டத்தின் மீது பொலிஸார் தண்ணீர் மற்றும் கண்ணீர்ப் புகைப் பிரயோகங்களை  மேற்கொண்டனர். 

இருப்பினும், அவற்றை பொருட்படுத்தாமல்  போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

https://www.virakesari.lk/article/149199

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் மரணம்

Published By: RAJEEBAN

27 FEB, 2023 | 03:38 PM
image

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்

தேசிய மக்கள் சக்தியின் நிவித்திகல பிரதேசசபை வேட்பாளர் நிமல் அமரசிறி என்பவரே உயிரிழந்துள்ளார்

ஜேவிபியின் தலைமை செயலாளர் டில்வின் சில்வா இதனை உறுதி செய்துள்ளதுடன் தனது ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ளார்.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக பெரும் இழப்பை ஒருவர் செலுத்தவேண்டி நேர்ந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக அளவுக்கதிகமான பலத்தை பயன்படுத்திய அரசாங்கம் இந்த மரணத்திற்கு பொறுப்பேற்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/149268

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

24 மணிநேரத்துக்குள் அறிக்கை கோரும் HRCSL

 

222.jpg

தேசிய மக்கள் சக்தி நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தை தடுக்க பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, நேற்றைய தினம் உயரழுத்த நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் பொலிஸ்மா அதிபரிடம் அறிக்கை கோரியுள்ளதாக தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளது.

கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யூனியன் பிளேஸ் பகுதியில் இந்த பேரணி இடம்பெற்றபோது, அதனை தடுக்கும் வகையில் பொலிஸார் உயரழுத்த நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர்.

எவ்வாறாயினும், குறித்த பகுதியில் எதிர்ப்பு பேரணிகளை நடத்த தடைவிதித்து நீதிமன்ற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்பட்டிருக்கவில்லை என்பதை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன் குறித்த அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

https://thinakkural.lk/article/242298

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.