Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்ரித்பால் சிங்: பஞ்சாபுக்கு அச்சத்தை விளைவித்த இந்த கனடா மத போதகர் யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்ரித்பால் சிங்: பஞ்சாபுக்கு அச்சத்தை விளைவித்த இந்த கனடா மத போதகர் யார்?

பஞ்சாப், அமிரித்பால் சிங், சீக்கியர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தன்னை தானே மத போதகர் என அழைத்துக் கொள்ளும் அம்ரித்பால் சிங்கின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கடந்த வாரம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அஜ்னாலா காவல் நிலையத்தை மிகவும் ஆக்ரோஷமாக முற்றுகையிட்டனர். அம்ரித்பால் சிங்கின் கூட்டாளியான லவ்பிரீத் சிங் என்பவரை விடுவிக்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக இருந்தது.

திரண்டிருந்தவர்கள் அனைவரும் மிகவும் கோபமாக காணப்பட்டனர். அவர்களது கைகளில் துப்பாக்கிகளும் வாள்களும் இருந்தன. அம்ரித்பால் சிங்கின் கூட்டாளி விடுவிக்கப்படுவார் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்ட பின்பே அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

முற்றுகையிட்ட அனைவரும் தங்களது கைகளில் சீக்கியர்களின் புனித நூலாக கருதப்படும் ’குரு கிரந்த் சாஹிப்’ நூலை வைத்திருந்த காரணத்தினால்தான், தங்களால் இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என காவல் துறையினர் கூறியுள்ளனர்.

தங்களை காக்கும் பாதுகாப்பு அரணாக அவர்கள் குரு கிரந்த் சாஹிப்’ நூலை பயன்படுத்திக் கொண்டனர்.

30 வயதான அம்ரித்பால் சிங், காலிஸ்தான் இயக்கத்தின் ஆதரவாளர். சீக்கியர்களுக்கென தனி தேசம் உருவாக வேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் நோக்கம்.

 

பஞ்சாப், அமிரித்பால் சிங், சீக்கியர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலே

ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலே என்னும் சீக்கிய போதகரை பார்த்து உத்வேகம் அடைந்தவர் அம்ரித்பால் சிங். சீக்கியர்களுக்கென தனி தேசம் வேண்டுமென கூறி வந்த ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலே, 1980ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார். பின் 1984ஆம் ஆண்டு ‘ப்ளூ ஸ்டார்’ என்னும் இந்திய ராணுவத்தின் சர்ச்சைக்குரிய ஆப்ரேஷன் மூலம் அவர் கொல்லப்பட்டார்.

சீக்கியர்களுக்கு தனி தேசம் வேண்டுமென எழுந்த இந்த கிளர்ச்சி, பத்தாண்டுகள் வரை நீடித்து வந்தது. இந்த காலகட்டத்தில், பல முக்கிய தலைவர்களும், பொது மக்களும் பாதிக்கப்பட்டனர். பல இளம் சீக்கியர்கள் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வன்முறையால் ஏற்பட்ட காயங்களின் சுவடுகளை பஞ்சாப் மாநிலம் இன்றும் சுமந்து கொண்டு இருக்கிறது.

”பஞ்சாப்பில் இன்று நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் காட்சிகள், தீவிரவாதத்தின் இருண்ட நிழல்களுக்கு நாங்கள் திரும்ப சென்றுக் கொண்டிருக்கிறோமா என்று உங்களை சிந்திக்க தூண்டலாம்” என்று கூறுகிறார் பஞ்சாப் காவல் துறை முன்னாள் இயக்குநர் சசி காந்த்.

அதேபோல் , “சீக்கியர்களுக்கென தனி தேசம் வேண்டும் என கூறப்படும் கோரிக்கை இன்னும் தொடர்ந்து வந்தாலும், 1990களில் அந்த கோரிக்கை அதன் முக்கியத்துவத்தை இழந்துவிட்டது. பஞ்சாபில் உள்ள அனைத்து மக்களும் அம்ரித்பால் சிங் போன்றோருக்கும், இது போன்ற வன்முறைக்கும் ஆதரவு அளிக்கவில்லை. இப்போது தனி தேசம் வேண்டுமென கூறுவோரின் எண்ணிக்கை மிகவும் சொற்ப அளவிலேயே இருக்கிறது” என்கிறார் குரு நானக் தேவ் பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருக்கும் பர்மிந்தர் சிங்.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இந்த பிரச்னை குறித்து கூறும்போது, “இங்கே மக்கள் அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் மக்களுக்குள் நிலவும் இந்த நல்லுறவை சிதைக்க சிலர் முயன்று வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

”இப்போது போராடி வரும் ஆயிரகணக்கான மக்கள் பஞ்சாப் மாநிலத்தின் பிரதிநிதிகள் அல்ல, அவர்கள் அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

யார் இந்த அம்ரித்பால் சிங்?

அமிர்த்பாலின் கடந்த கால வாழ்க்கை குறித்து இதுவரை பெரிதாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. இவர் பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள ஜல்லுப்பூர் கேரா பகுதியைச் சேர்ந்தவர். போக்குவரத்து தொடர்பான தனது குடும்ப தொழிலை தொடர்வதற்காக 2012ஆம் ஆண்டு இவர் துபாய்க்கு சென்றார்.

அவருடைய லிங்க்டு இன் முகவரி ( LinkedIn profile) , அம்ரித்பால் சிங் ஒரு மெக்கானிக்கல் இஞ்சினியர் என்று கூறுகிறது. பஞ்சாப்பில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றிருக்கும் இவர், கார்கோ கம்பெனியில் ஆப்ரேஷனல் மேனேஜராக பணிபுரிந்து இருக்கிறார் என்றும் அதன் தகவல்கள் கூறுகிறது.

அவர் பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பெரியளவில் பிரபலம் அடைந்திருக்கவில்லை.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் துபாயிலிருந்து இந்தியா திரும்பிய அவர், மிகவும் வித்தியாசமாக காணப்பட்டார். அவரது பழைய தோற்றத்திலிருந்து தற்போதைய தோற்றம் பெரிதும் மாறுபட்டு இருந்தது.

இப்போது அவர் சீக்கிய மதத்தை பின்பற்றும் ஒரு போதகர் போன்ற தோற்றத்தை கொண்டுள்ளார். அவரது தலையில் நீல நிற தலைப்பாகை இருக்கிறது. அவரது கைகளில் தகர வளையலும், கிர்பானும் காணப்படுகிறது.

அவர் இந்தியா திரும்பிய அடுத்த ஒரு மாத காலத்தில், ”வாரிஸ் பஞ்சாப் டி” (பஞ்சாப்பின் வாரிசுகள்) என்ற அமைப்பிற்கு தலைவராக நியமிக்கப்பட்டார். நடிகரும், சமூக ஆர்வலருமான தீப் சித்து என்பவரால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. விவசாயிகளால் அப்போது நடத்தப்பட்டு வந்த போராட்டங்களில் நடைபெற்ற கலவரத்தில் இவருக்கும் பங்கு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இவர் கடந்தாண்டு நடைபெற்ற ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார்.

பஞ்சாப், அமிரித்பால் சிங், சீக்கியர்கள்

பட மூலாதாரம்,HINDUSTAN TIMES

திடீரென பிரபலம் அடைந்தது எப்படி?

அமிர்த்பால் சிங்கை அவரது ஆதரவாளர்கள் பிந்த்ரன்வாலேவுடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் தண்ணீர் தட்டுபாடு, அதிகளவில் பயன்பாட்டில் இருக்கும் போதைப்பொருட்கள் போன்ற பிரச்சனைகளுக்கு, சீக்கியர்களுக்கென தனி தேசம் ஒதுக்கப்படுவதே தீர்வாக அமையும் என அம்ரித்பால் சிங் பேசி வருகிறார். இவை அனைத்தும் இதற்கு முன்னதாக பிந்த்ரன்வாலே கூறி வந்த கருத்துக்கள் ஆகும்.

”ஆனால் நான் ஒருபோதும் பிந்த்ரன்வாலேவுக்கு நிகராக ஆக முடியாது. என்றும் அவர் காட்டிய வழிகளில் மட்டுமே தான் பயணித்து வருகிறேன்” என்று கடந்தாண்டு தி இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு அளித்திருந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் அம்ரித்பால் சிங்.

பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆஷுடோஷ் இதுகுறித்து கூறும்போது, “அம்ரித்பால் சிங்கின் வயதிற்கு அவர் அடைந்திருக்கும் இந்த திடீர் பிரபலம் மர்மமாக இருக்கிறது” என்று குறிப்பிடுகிறார்.

”ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சிலர் இந்தியா ஒரு இந்து தேசமாக மாற வேண்டும் என கூறி வருவது சில சீக்கியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தங்களுக்காக குரல் கொடுக்க ஒரு சக்தி வாய்ந்த தலைவர் வேண்டுமென நினைக்கிறார்கள்” எனவும் அவர் கூறுகிறார்.

அம்ரித்பால் சிங்கின் இந்த திடீர் பிரபலத்திற்கு சமூக ஊடகங்கள் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்கிறார் பஞ்சாப் பல்கலைகழகத்தின் மற்றொரு பேராசிரியர் காலித் மொஹம்மத்.

இந்தியாவின் “உணவு கூடையாக” திகழ்ந்து வரும் பஞ்சாப் மாநிலம், ஒப்பீட்டளவில் நல்ல மாநிலமாக விளங்கினாலும், அங்கே தற்போது வேலையின்மை பிரச்சனைகளும், விவசாய பிரச்னைகளும் அதன் சமூக மற்றும் பொருளாதார நிலையை சுருக்கி விட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்

பஞ்சாப், அமிரித்பால் சிங், சீக்கியர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த நவம்பர் மாதம் அம்ரித்பால் சிங், ஒரு நீண்ட மத ஊர்வலத்தை மேற்கொண்டார். அதில் சீக்கியர்கள் பலரும் நியானஸ்தானம் அடைய வேண்டும் என வலியுறுத்தினார். பஞ்சாப் மாநிலத்தின் மிகப்பெரும் பிரச்னையான போதை பொருள் பயன்பாட்டை குறைப்பதற்கும், சாதி ரீதியாக நிலவி வரும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் இந்த ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஊர்வலம் நடந்து ஒரு மாதத்திற்கு பின், குருத்வாராவில் இருந்த நாற்காலிகளை உடைத்து பிரச்சனைகள் செய்து, சிங்கின் ஆதரவாளர்கள் தலைப்பு செய்திகளில் இடம்பெற்றனர்.

அமிர்த் சிங்கின் இந்த புகழுக்கு, பஞ்சாபில் இளைஞர்களின் விரக்தியும் காரணமாக இருக்கலாம் என பேராசியர் பர்மிந்தர் சிங் கூறுகிறார்.

பஞ்சாபில் சரியான வேலை வாய்ப்பும், கல்வியும் இல்லாமல் இருக்கும் எத்தனையோ இளைஞர்கள் மத அடிப்படைவாதத்தை நோக்கி நகர்ந்து செல்கின்றனர் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

1980களில் பணியில் சேர்ந்த பஞ்சாப்பின் முன்னாள் காவல் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், “காவல் நிலையத்தில் இதற்கு முன்னதாக எத்தனையோ கலவரங்கள் நடைபெற்றதை பஞ்சாப் பார்த்திருக்கிறது. ஆனால் வரலாற்றிலேயே எந்தவொரு செயலையும் மேற்கொள்ள முடியாது நிராயுதபாணியாக காவல் துறையினர் நின்றது இதுவே முதல்முறை” என்று கவலையுடன் தெரிவிக்கிறார்.

கடந்த சில மாதங்களாக அம்ரித் பால் சிங், தனது கைகளில் வாள்களுடனும், துப்பாக்கியுடனும் பயணிப்பதை காணமுடிகிறது. அதற்காக அவர் மேல் இதுவரை எந்தவொரு வழக்கும் போடப்படவில்லை என்று கூறுகிறார் பேராசியர் பர்மிந்தர் சிங்.

என்ன சொல்கிறார் அம்ரித்பால் சிங்?

காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கலவரங்கள் மேற்கொண்ட பிறகு, அம்ரித்பால் சிங் பல தேசிய ஊடகங்களிடம் பேசி வருகிறார். அதில் அவர் "நான் ஒரு இந்தியன் இல்லை" என்று குறிப்பிட்டு வருகிறார்.

நியூஸ்18 பஞ்சாபிடம் பேசிய அவர், “நான் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவன். சீக்கிய மதத்தை தழுவியவன். இதை தவிர எனக்கு வேறு எந்த அடையாளமும் தேவையில்லை. அதேபோல் என்னுடைய இந்திய பாஸ்போர்ட்டை கூட பயணம் மேற்கொள்வதற்கான ஆவணமாக மட்டுமே பார்க்கிறேன். அதனால் என்னை நான் இந்தியனாக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. மகாத்மா காந்தி கூட பிரிட்டிஷ் பாஸ்போர்ட் வைத்திருந்தார். அதற்காக அவரை பிரிட்டனை சேர்ந்தவர் என அழைக்க முடியுமா” என்று கூறியுள்ளர்.

கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி சீக்கியர்களுக்கு தனி தேசம் வேண்டும் என்பது குறித்த தனது நிலைப்பாட்டை, நேரடியாக விவாதிக்க வருமாறு தேசிய ஊடகங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

ஏஎன்ஐ செய்தி முகமையுடன் பேசிய அவர், “சீக்கியர்களுக்கு தனி தேசம் வேண்டும் என தாங்கள் கேட்பதை ஒரு பாவமாகவோ, பேச கூடாத விஷயமாகவோ யாரும் பார்க்க கூடாது. அறிவுபூர்வமாக சிந்தித்து இதனால் ஏற்படும் புவிசார் அரசியல் பயன்கள் பற்றி நினைக்க வேண்டும். இது ஒரு கருத்தியல் சார்ந்த விஷயம். இந்த கருத்தியலுக்கு அழிவு கிடையாது. இதை டெல்லியில் இருப்பவர்களிடமிருந்து நாங்கள் கேட்கவில்லை” என்று கூறியுள்ளார்.

சீக்கியர்கள் முதலில் பிரிட்டிஷ் காரர்களுக்கு அடிமையாக இருந்தார்கள், இப்போது இந்துகளுக்கு அடிமையாக இருக்கிறார்கள் எனவும் அமிர்த்சிங் பால் குறிப்பிடுகிறார்.

பிபிசி பஞ்சாபி சேவையிடம் பேசிய அமிர்த்பால் சிங், “நான் இந்துகளுக்கோ, கிறிஸ்தவர்களுக்கோ எதிரானவ்ன் அல்ல. ஆனால் அரசாங்கத்துடன் இணைந்து எங்களை அடிமைப்படுத்த நினைக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிரானவன்” என்று கூறினார்.

அதேபோல், “ஒரு இனப்படுகொலை செய்வதற்கு அவர்களது தேசத்தையோ, கிராமங்களையோ அழிக்க வேண்டும் என்று தேவையில்லை. அவர்களது கலாசார பாரம்பரியங்களிலிருந்து அந்த மக்களை பிரிப்பதும், பின்னர் அவர்களது மதங்களிலிருந்து பிரிப்பதும் இனப்படுகொலைதான்” என்கிறார் அம்ரித்பால் சிங்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"காலிஸ்தான் பிரிவினை, இந்திய அரசியலமைப்பு" - அம்ரித்பால் சிங் சொல்வது என்ன?

அம்ரித்பால் சிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

'காலிஸ்தான்' என்ற 'சீக்கியர்களுக்கான தனி நாடு' கோரியதற்காக அறியப்பட்ட 'வாரிஸ் பஞ்சாப் டி' அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங் மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.

நான் என்னை இந்தியனாக கருத மாட்டேன், தற்போது என்னிடம் இருக்கும் 'இந்திய கடவுச்சீட்டு' என்னை இந்தியனாக்காது, அது வெறும் பயணத்திற்கான ஆவணம் மட்டுமே என சமீபத்தில் அம்ரித்பால் சிங் தெரிவித்திருந்தார்.

கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி, அம்ரித்பால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அஜ்னாலா காவல் நிலையத்தை மாலைவரை முற்றுகையிட்டனர்.

இந்த முற்றுகையின் போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 6 அதிகாரிகள் காயமடைந்ததாக பஞ்சாப் காவல்துறை கூறியது.

 

தாக்குதல் வழக்கில் கைதான லவ்பிரீத் சிங் துஃபானை விடுவிக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு பஞ்சாப்பின் சட்ட ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வாரிஸ் பஞ்சாப் டி என்ற அமைப்பின் தலைவரான அம்ரித்பால் சிங் சீக்கிய மத போதகர்.

இந்த அமைப்பு தீப் சித்து என்பவரால் தொடங்கப்பட்டது. இவர், விவசாயிகள் போராட்டத்தின் போது செங்கோட்டையில் நடந்த வன்முறையில் குற்றம் சாட்டப்பட்டவர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தீப் சித்து சாலை விபத்தில் இறந்ததையடுத்து, கடந்த செப்டம்பரில் அம்ரித்பால் சிங் அதிகாரப்பூர்வமாக தலைவராக நியமிக்கப்பட்டார்.

அம்ரித்பால் சிங் அமிர்தசரசின் ஜல்லுபூர் கெடாவில் பிறந்து வளர்ந்தவர். இதற்கு முன் இவர் துபாயில் வசித்து வந்தார்.

சமீபத்திய நாட்களில் அம்ரித் பஞ்சாப்பில் தீவிரமாக செயல்பட்டுவருகிறார்.

அஜ்னாலா மோதலுக்குப் பிறகு பிபிசியின் அரவிந்த் சாப்ரா அம்ரித்பால் சிங்கை அவரது சொந்த கிராமத்தில் பேட்டி கண்டார். அவரது பேட்டியில் இருந்து...

உங்களுக்கு ஏன் காலிஸ்தான் வேண்டும்?

நாம் விரும்பும் விஷயங்கள் பல உள்ளன. காலிஸ்தானைப் பற்றி பேசுவது தீய விஷயமல்ல. இது எங்கள் சுதந்திரம் மற்றும் இந்த இடத்தை ஆட்சி செய்வது குறித்தது. நாம் அடிமைகளாக வாழக்கூடாது என்பது பற்றியது. காலிஸ்தான் என்ற கருத்தை குற்றமாக்கக் கூடாது. இது வரவேற்கப்பட வேண்டும். காலிஸ்தான் பற்றி எங்களுடன் விவாதிக்க யாரும் வரலாம்.

நீங்கள் காலிஸ்தான் சுதந்திர நாடு பற்றி பேசுகிறீர்கள். உங்கள் மீது ஏன் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யக்கூடாது?

அமைதியான முறையில் கோரும் போது உங்களால் வழக்குப் பதிய முடியாது. இந்தியா இன்னும் ஜனநாயக நாடாக உள்ளது. காலிஸ்தான் கோரிக்கையை அமைதியான முறையில் வைக்கலாம், அதில் எந்தக் குற்றமும் இல்லை என்று உச்ச நீதிமன்றம்கூட கூறியுள்ளது. அதற்கான தேவையும் உள்ளது. எனவேதான், சிரோமணி அகாலி தளம் கட்சி கடந்த ஆண்டு சங்கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றது. தேர்தல் முறை மூலம் காலிஸ்தானின் இலக்கை அடைய விரும்புவதாக சிரோமணி அகாலி தளம் கூறுகிறது. எவ்வாறாயினும், தேசத்துரோகம் போன்ற சட்டங்கள் நாட்டில் இருக்கக்கூடாது. அத்தகைய சட்டம் சர்வாதிகார நாட்டில் இருக்கலாம். இது காலனித்துவ ஆட்சி அல்ல. நான் இங்கு என்னைப் பற்றி மட்டும் பேசவில்லை. தேசத்துரோக வழக்கு யார் மீதும் பதியக்கூடாது. ஏனெனில் அது பேரழிவுக்கு வழிவகுக்கும்.

அம்ரித்பால் சிங்

பட மூலாதாரம்,ANI

சீக்கியர்கள் அடிமையாக இருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள், ஆனால் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் நீங்கள் அஜ்னாலா காவல் நிலையத்தில் நுழைந்த பிறகும் உங்கள் மீது வழக்கு தொடுக்கப்படவில்லை. நீங்கள் சுதந்திரமாக வெளியே சுற்றுகிறீர்கள், இது அடிமைத்தனம் இல்லையே?

ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் தண்டனை முடிந்த பிறகும் சிறையில் உள்ளனர் என்பதுதான் உண்மை. என்னைப் பற்றி மட்டும் நாம் பேசக்கூடாது. அஜ்னாலா காவல் நிலையத்திற்கு போராடச் சென்றோம். நான் எதுவும் செய்யவில்லை. போராட்டத்திற்குச் செல்லும் போது பல விஷயங்கள் நடக்கும். இவை அனைத்தும் தவறான முதல் தகவல் அறிக்கை பதிவுக்குப் பிறகே நடந்தன. இதுதான் அடிமைத்தனத்திற்கான அடையாளம். தவறான வழக்குப் பதிவு செய்யப்பட்டு என்னுடைய உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அப்பாவி என்றால் அவரை ஏன் கைது செய்தார்கள்? அவர் குற்றவாளி என்றால் அவரை ஏன் விடுதலை செய்தார்கள்? நாங்கள் போராடச் சென்றோம். அஜ்னாலா செல்ல முடியாதபடி ஆயிரக்கணக்கானவர்களை வீட்டுக்காவலில் வைத்தனர். தடுப்புகள் வைத்தனர், எங்கள் மீது தடியடியும் நடத்தினர். அனைவரும் அமைதியாக இருக்கும்படி மக்களிடம் நான் எவ்வளவோ கூறினேன்.

அஜ்னாலா சம்பவத்தை யாரும் வன்முறையாக பார்க்கக் கூடாது. உண்மை என்னவென்றால் போலீசாருடன் நாங்கள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதன் பிறகு எங்கள் ஆள் தவறாக கைது செய்யப்பட்டதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். நீதிமன்றம் அவரை விடுவிக்க முடிவு செய்தது. நாங்கள் பொற்கோவில் சென்றுவிட்டு வீடு திரும்பினோம். வன்முறை நடந்த 8 நொடிகளை வைத்து மட்டுமே மொத்த சம்பவத்தையும் பார்க்கக் கூடாது.

நீதிமன்றம் மற்றும் சட்ட முறைப்படி இந்த விவகாரத்தை அணுகியிருக்கலாமே?

நாங்கள் நீதிமன்றம் மூலமாகத்தான் சென்றோம். அப்பாவி சிறையில் இருப்பதை நீங்கள் ஆதரிக்கிறார்களா? பிறந்து எட்டு நாளே ஆன தன்னுடைய குழந்தைக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்த போது தீவிரவாதி போல அவரை போலீஸ் அழைத்துச் சென்றதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? அதன் பிறகு அவரை பல ஆண்டுகள் துன்புறுத்தினர். எத்தனை சீக்கியர்கள் இதே போன்ற விதியை அனுபவிப்பது? செய்யாத குற்றத்திற்காக அப்பாவி ஒருவரை சிறையில் வைப்பதுதான் மிகப்பெரிய வன்முறை.

அம்ரித்பால் சிங்

பட மூலாதாரம்,ANI

இந்திய அரசியலைமைப்புச் சட்டம் மீது உங்களுக்கு நம்பிக்கையிருக்கிறதா?

இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறதா என்பதைப் பற்றியதல்ல, எங்கள் அடையாளத்தின் மீது இந்தியாவுக்கு நம்பிக்கை இருக்கிறதா என்பதைப் பற்றியது. அரசியலமைப்பின் 25பி பிரிவு சீக்கியர்கள் இந்துக்களின் ஒரு பிரிவினர் என்றும் நாங்கள் சுதந்திரமான மதம் இல்லை என்றும் கூறுகிறது. அங்குதான் முரண் உள்ளது. என்னுடைய அடையாளம் மதிக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். அது நடக்காது என்றால் இந்தக் கேள்வி பொருத்தமற்றதாக இருக்கும்.

அஜ்னாலா வீடியோவை ஆய்வு செய்து வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளதே, அவ்வாறு நடந்தால் நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?

தொடர்ச்சியான அநீதி நிறுத்தப்பட வேண்டும். தன்னுடைய கடமை என்ன என்பதை மட்டுமே பஞ்சாப் காவல்துறை தலைவர் கூறிவருகிறார். ஆனால், அவர்கள் முதலில் பொய்யான முதல் தகவல் அறிக்கையைத் தவிர்த்திருக்க வேண்டும். அவர்கள் வேறொரு வழக்குப் பதிவு செய்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்த எங்களுக்கு உரிமை உண்டு. என்னைக் கைது செய்வதன் மூலமோ அல்லது என்னைத் தனிமைப்படுத்துவதன் மூலமோ இந்தப் பிரச்னை முடிவுக்கு வராது. நான் பிறப்பதற்கு முன்பே இருந்த காலிஸ்தான் கருத்தியலைத்தான் நான் முன்வைக்கிறேன். அது தொடர்ந்து இருக்கும், நாளுக்கு நாள் வலுப்பெறும்.

குரு கிராந்த் சாஹிப்பைக் கேடயமாக பயன்படுத்தியது கோழைத்தனமான செயல் என்று காவல்துறைத் தலைவர் கூறுகிறாரே?

அது பொய், நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. அங்கு குரு சாஹிப் இல்லையென்றால் மக்களை கொன்றிருப்பார்களா? மற்றொரு ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை உருவாக்க நினைக்கிறார்களா?

அஜ்னாலா சம்பவத்தை நாம் வேறு மாதிரியாக கையாண்டிருக்கலாம் என்று நினைக்கிறீர்களா?

இந்த மோதலை நாம் வித்தியாசமாக கையாண்டிருக்க முடியுமா என்று சிந்திக்கிறோம். காவல்துறை பொய் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டுமா? தடுப்புகள் வைத்து எங்கள் மீது தடியடி நடத்தியிருக்க வேண்டுமா? ஆனால் அதைப் பற்றி யோசிப்பது தற்போது பொருத்தமாக இருக்காது. இது மீண்டும் எவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்வது என்பதைத்தான் நாம் யோசிக்க வேண்டும். ஏனென்றால் இவ்வாறு தொடர்ந்து நடப்பது, நமக்கு உதவாது. மக்களை பல ஆண்டுகளாக சிறையில் வாட அனுமதிக்க முடியாது.

அம்ரித்பால் சிங்

பட மூலாதாரம்,ANI

உங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது உங்களுக்கு ஏதேனும் அரசியல் ஆதரவு இருக்கிறதா என்று மக்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளதே?

எனக்கு அரசியல் ஆதரவு இருந்தால் என் மீது பொய் வழக்குப் பதியப்பட்டிருக்குமா? எனக்குப் பின்னால் அரசியல் ஆதரவு இல்லை, குரு சாஹிப்பின் ஆதரவு உள்ளது. அது எப்போதும் இருக்கும். உங்களுக்கு மேலும் ஒன்றைச் சொல்கிறேன், அஜ்னாலா சம்பவத்திற்குப் பிறகுதான் எனக்கு ஆதரவாளர்கள் அதிகரித்துள்ளனர்.

தொடர்ந்து 'காலிஸ்தான்' கேட்கிறீர்கள், அனைத்து சீக்கியர்களும் அதற்கு ஆதரவாக உள்ளார்களா? சீக்கியர்கள் அல்லாதவர்களின் நிலை என்ன?

பெரும்பாலான சீக்கியர்கள் காலிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். சீக்கியர்கள் அல்லாதவர்களும் ஆதரிக்கிறார்கள். அஜ்னாலா போராட்டத்தில் சீக்கியர்கள் அல்லாத பலர் கலந்து கொண்டனர். 'காலிஸ்தான் கருத்தியல்' எந்த சமூகத்திற்கும் எதிரானது அல்ல. கல்சா ராஜ் என்றால் சம உரிமை மற்றும் சம வாய்ப்பு என்று பொருள். இது பெரும்பான்மைவாதம் அல்ல. என்னை சிலர் எதிர்க்கலாம். அவர்களின் கருத்தையும் மதிப்போம். இவை அனைத்தும் விவாதத்திற்குரியது.

அஜ்னாலா சம்பவத்திற்குப் பிறகு பஞ்சாப்பில் அசாதாரண சூழல் உருவாகியுள்ளது. 1980களில் இருந்த வன்முறைச் சூழலுக்குள் பஞ்சாப் தள்ளப்படுகிறதோ என்று மக்களிடம் பயம் தெரிகிறதே, அது உங்களுக்கு கவலையளிக்கவில்லையா?

அந்தச் சமயத்தில் தீவிரமான வன்முறைகளை நாங்கள் எதிர்கொண்டோம் என்பது கவலையளிக்கிறது. போலியான என்கவுண்டரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதை வெளிக்கொண்டுவந்த செயல்பாட்டாளர் ஜஸ்வந்த் சிங் கல்ராவும் கொல்லப்பட்டார். தற்போது மாநிலத்தை அந்தச் சூழலுக்குள் தள்ளுவது யார்? எங்களுக்கு சில கோரிக்கைகள் உள்ளன. சீக்கியர்களுக்கு அடையாளப் பிரச்னை உள்ளது. அதைக் காது கொடுத்து கேட்க அரசு தயாராக இல்லை. அடிப்படை உரிமைகளைக் கேட்க நாம் போராட வேண்டியுள்ளது. இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கான அதிகாரம் அரசிடம் உள்ளது. சிறையில் வாடும் கைதிகளை மத்திய அரசு விடுவிக்கலாம். மக்களிடம் பயம் இருந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. எங்களை ஒடுக்குவது தீர்வைத் தராது. அவர்கள் என்னைக் கொல்லலாம், ஆனால், இறையாண்மை கொள்கையைக் கொல்ல முடியாது.

காலிஸ்தானின் தேவை குறித்து சீக்கிய அமைப்புகளுடன் பேசுகிறீர்களா? மக்களுக்கு காலிஸ்தான் வேண்டுமா?

அகல் தக்த் உள்ளிட்ட அனைத்து சீக்கிய அமைப்புகளும் ஒரே கருத்தில் உள்ளன. அனைத்து சீக்கியர்களும் "ராஜ் கரேகா கல்சா..." என்பதுடன் உடன்படுகிறார்கள், சீக்கியரல்லாதவர்கள் இதை ஏற்கிறார்களா இல்லையா என்பது முக்கியமில்லை. பிரதான அரசியலில் உள்ள கட்சிகளைத் தவிர, பொதுமக்களுக்கு காலிஸ்தான் என்பது தடை செய்யப்பட்ட விஷயம் அல்ல.

https://www.bbc.com/tamil/articles/c51l51qz70po

  • கருத்துக்கள உறவுகள்

ஜாக்மிந்தர் சிங் (NDP Canada ) இந்த பிரிவினைவாத குழுவை சேர்ந்தவர் தானாம்.  பி.பி.சிக்கு துணிவிருந்தால் ஒரு வரி அவரை பற்றி எழுத முடியுமா?

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்ரித்பால் சிங் தேடுதல் வேட்டையால் அதிரும் பஞ்சாப்: இணையம் முடக்கம், 78 பேர் கைது, துப்பாக்கிகள் பறிமுதல்

அம்ரித்பால் சிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

18 மார்ச் 2023

'வாரிஸ் பஞ்சாப் டி' அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கை பிடிக்க பஞ்சாப் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அத்துடன் அந்த அமைப்பினர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சனிக்கிழமை இரவு வரை இந்த அமைப்பைச் சேர்ந்த 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் பிடித்து விசாரிக்கப்படுகின்றனர்.

இது தொடர்பாக, ஜலந்தர், ஷாகோட் ஆகிய பகுதிகளில் போலீஸ் குழுக்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

பஞ்சாபில் ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணி வரையிலான காலத்துக்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

 

சமீபத்தில் துப்பாக்கிகள், வாள்களுடன் அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் பஞ்சாப் காவல் நிலையம் ஒன்றை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி, ஒரு கைதியை விடுதலை செய்ய வலியுறுத்திய சம்பவம் இந்தியா முழுவதிலும் அதிர்வலையை கிளப்பியது.

இந்த சம்பவத்தை அடுத்து, அம்ரித்பால் சிங் குறித்தும், காலிஸ்தான் பிரிவினை கோரிக்கை தொடர்பாகவும் விவாதங்கள் சூடுபிடித்தன.

இந்நிலையில், பஞ்சாப் காவல்துறை அம்ரித்பால் சிங் மீது பெரும் நடவடிக்கை எடுத்துள்ளது என்று பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது தவிர, பஞ்சாப் காவல்துறையிடமிருந்து எந்த உறுதிப்படுத்தலும் வரவில்லை என்று பிடிஐ தெரிவித்துள்ளது.

"ஜலந்தரின் மிஹாத்பூர் கிராமத்தில் அம்ரித்பாலின் வாகனத் தொடர் தடுக்கப்பட்டது. அம்ரித்பால் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும், ஆனால் அவரது ஆதரவாளர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது," என்று கூறியுள்ளது பிடிஐ.

இந்த போலீஸ் நடவடிக்கையை ஒட்டி பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் போலீஸ் கொடி அணிவகுப்பும் நடத்தப்பட்டது.

அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீஸ் விரட்டுவதாக காட்டும் உறுதி செய்யப்படாத வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.

இந்த நிகழ்வுகள் தொடர்பாக எந்த விவரத்தையும் போலீஸ் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

இதனிடையே அம்ரித் பால் சிங்கின் ஆதரவாளர்கள் மொஹாலியில் விமான நிலைய சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த நகரம் தலைநகர் சண்டிகர் அருகே உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆயுதங்கள் பறிமுதல்

சனிக்கிழமை மாலை செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர், ஜலந்தர் மாவட்டத்தில் ஷா கோட் மல்சியன் சாலையில் வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலரின் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டதாக கூறினார்.

அம்ரித்பால் சிங் இன்னும் தப்பி ஓடிவருவதாகவும், அவரைப் பிடிக்க நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இது தவிர, மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 9 துப்பாக்கிகள், 373 துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பஞ்சாப் அரசியல் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

அம்ரித்பால் சிங் மீதான காவல்துறை நடவடிக்கை குறித்து காங்கிரஸ் தலைவர் ரவ்னீத் பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு கருத்துத் தெரிவித்துள்ளார்.

காலிஸ்தானை உருவாக்க இளைஞர்கள் ஆயுதம் எடுக்கவேண்டும் என்று கூறினார். தற்போது அவர் பின்வாங்குகிறார். சீக்கிய மதத்தை புகழ்ந்துகொண்டிருந்த ஒருவர் தற்போது ஓடி ஒளிகிறார் என்று அவர் கூறியிருந்தார்.

"தாமதமாக எடுக்கப்பட்டாலும், பஞ்சாப் காவல்துறையின் நடவடிக்கையை வரவேற்கிறேன்" என்று காங்கிரஸ் தலைவர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா ட்வீட் செய்துள்ளார்.

"அனைத்து பஞ்சாபியர்களும் அமைதி காக்கவேண்டும் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கிறேன்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வாடிங் , குருவின் உண்மையான சீடர்களான சீக்கியர்கள் ஓடி ஒளிவதில்லை என்று குறிப்பிட்டார். அழுத்தத்துக்கு நடுவே பஞ்சாப் காவல்துறை தன் வேலையைச் செய்கிறது. பஞ்சாபியர் அனைவரும் அமைதி காக்கவேண்டும்," என்று கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cje52v3dpndo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்ரித்பால் சிங்: 'ஐஎஸ்ஐ தொடர்பு, வெளிநாட்டு நிதி பரிவர்த்தனை' என சந்தேகம் எழுப்பும் பஞ்சாப் போலீஸ் - இதுவரை நடந்தவை என்ன?

அம்ரித்பால் சிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

அம்ரித்பால் சிங்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

‘வாரிஸ் பஞ்சாப் டி’ அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கை பிடிப்பதற்கான நடவடிக்கையை பஞ்சாப் போலீசார் மூன்றாவது நாளாக திங்கள்கிழமையும் தொடர்ந்தனர்.

இதுவரை, ‘வாரிஸ் பஞ்சாப் டி’ செயல்பாட்டாளர்கள் மீது ஆறு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய பஞ்சாப் காவல்துறை தலைமையக தலைவர் (ஐ.ஜி) சுக்செயின் சிங் கில், தல்ஜித் கால்சி, பசந்த் சிங், குர்மீத் சிங் புக்கன்வாலா, பக்வந்த் சிங், அமிர்த் பாலின் மாமா ஹரிஜீத் சிங் ஆகியோர் அசாமின் திப்ருகார் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் ஹர்ஜீத் சிங் என்பவர் அசாமுக்கு செல்லும் வழியில் இருப்பதாகவும் கூறினார்.

போலீஸாரின் கூற்றுப்படி, கைது செய்யப்பட்டுள்ள தல்ஜித் சிங் கால்சி, அமிரித்பால் சிங்குக்கு நெருக்கமானவர் மற்றும் வாரிஸ் பஞ்சாப் டி அமைப்புக்கு நிதி வழங்குபவர்.

 

அம்ரித்பால் சிங்கின் மாமா ஹர்ஜீத் சிங், ஓட்டுநர் ஹர்ப்ரீத் சிங் ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீஸிடம் சரண் அடைந்தனர். ஜலந்திரின் ஷால்கோட்டில் மார்ச் 19-20ஆம் தேதி இரவில் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று ஜலந்தர் புறநகர் காவல் கண்காணிப்பாளர் ஸ்வரன்தீப் சிங் கூறுகிறார்.

ஹர்ஜீத் சிங் துபையில் தொழில்முறை டிரான்ஸ்போர்ட்டர் தொழிலை செய்து வருகிறார். மேலும், அம்ரித்பால் சிங் பயன்படுத்தியதாக கூறப்படும் ஆடம்பர சொகுசு காரையும் பறிமுதல் செய்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர். அந்த கார், ஹர்ஜீத் சிங் வசம் இருந்துள்ளது.

இந்த ஐந்து பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்று கூறிய அவர், பஞ்சாப் அமைதியான மாநிலம் என்றும், பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதுவரை கைதானவர்கள் எத்தனை பேர்?

அம்ரிபால் சிங் தொடர்புடைய வன்முறை விவகாரத்தில் இதுவரை 114 பேர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். இதில் வன்முறை நடந்த முதல் நாளிலேயே 78 பேரை போலீஸார் பிடித்தனர். இரண்டாம் நாளில் 34 பேரும் மூன்றாம் நாளில் 2 பேரும் பிடிபட்டனர். அனைவரும் மாநிலத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவித்தவர்கள் என்று காவல்துறை ஐ.ஜி கில் தெரிவித்தார்.

"இந்த வழக்கில் வெளிநாட்டு நிதி மற்றும் ஐஎஸ்ஐ தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் பஞ்சாப் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்," என்கிறார் ஐ.ஜி கில்.

அம்ரித்பால் சிங் விவகாரத்தில் இதுவரை நாம் அறிந்தவை மற்றும் பதிலளிக்கப்படாத கேள்விகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:-

கடந்த சில நாட்களில் என்ன நடந்தது?

அம்ரித்பால் சிங் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும், அவரை தேடி கைது செய்யும் நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும் போலீஸ் ஐ.ஜி சுக்செயின் சிங் கில் தெரிவித்தார்.

பஞ்சாப் காவல்துறையின் கூற்றுப்படி, சனிக்கிழமை பிற்பகல் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள ஷாகோட்-மால்சியன் சாலையில் 'வாரிஸ் பஞ்சாப் டி' (WPD) இன் செயல்பாட்டாளர்கள் ஏழு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

மாநில அளவிலான நடவடிக்கையின் போது இதுவரை ஒரு '.315' போர் ரைபிள், ஏழு 12 போர் ரைபிள்கள், ஒரு ரிவால்வர் மற்றும் 373 லைவ் கார்ட்ரிட்ஜ்கள் (பயன்படுத்தப்படாத தோட்டா பேழைகள்) உட்பட 9 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது தவிர, ஜலந்தர் போலீசார் உரிமை கோரப்படாத ஆடம்பர சொகுசு வாகனம் ஒன்றையும் மீட்டுள்ளனர். இந்த வாகனத்தை அம்ரித்பால் சிங் தப்பியோட பயன்படுத்தியதாக போலீசார் கூறுகின்றனர்.

கைவிடப்பட்ட வாகனத்தில் இருந்து .315 போர்த்துப்பாக்கி, 57 தோட்டாக்கள், வாள் மற்றும் வாக்கி-டாக்கி பெட்டி ஆகியவை மீட்கப்பட்டுள்ளன. சில உள்நாட்டு தோட்டாக்களையும் மீட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

பஞ்சாபில் போராட்டங்கள்

அம்ரித்பால் சிங்

பட மூலாதாரம்,ANI

பஞ்சாபில், அம்ரித்பால் சிங் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக குவாமி இன்சாஃப் மோர்ச்சாவின் சில செயல்பாட்டாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மொஹாலியில் உள்ள விமான நிலைய சாலையில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. அந்த இடத்தில் 100க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் உள்ளனர்.

இதுவரை அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. விமான நிலையத்திற்கு செல்லும் சாலையின் ஒரு பகுதி போராட்டக்காரர்களால் மறிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மறுபுறம், கர்னாலில் உள்ள சில சீக்கிய அமைப்புகள் ஹரியாணா சீக்கியர்களை மார்ச் 21ஆம் தேதி கர்னாலில் ஒன்றுகூடி அம்ரித்பால் சிங் மீது எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க அழைப்பு விடுத்துள்ளது.

இதன் காரணமாக சண்டீகர் மற்றும் பஞ்சாபின் பல மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மூன்றாவது நாளாக காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

பஞ்சாபில் இப்போது நிலைமை என்ன?

அம்ரித்பால் சிங் விவகாரம் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத்தில் வழக்காக தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக வாரிஸ் பஞ்சாப் டி அமைப்புடன் தொடர்புடைய இமான் சிங் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அம்ரித்பாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று மனுதாரர் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பஞ்சாப் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 21ஆம் தேதிக்கு பட்டியலிட்டுள்ளது.

பதற்ற நிலைமையைக் கருத்தில் கொண்டு, மாநில உள்துறை செல்பேசி இணைய சேவையை சனிக்கிழமை முதல் இடைநிறுத்தியுள்ளது. இந்த கட்டுப்பாடு மார்ச் 21ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை தொடரும்.

விடை தெரியாத கேள்விகள்

அம்ரித்பால் சிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அம்ரித்பால் சிங் இன்னும் தலைமறைவாக உள்ளதாக போலீசார் கூறி வருகின்றனர். சனிக்கிழமையன்று, அம்ரித்பால் சிங் ஷாகோட்டின் குருத்வாரா சாஹிப்பில் இருப்பதாக சில ஊடக தகவல்கள் வந்தன.

ஆனால், அன்று மாலையே அவர் தப்பியோடிவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

அம்ரித்பால் சிங்கைப் பற்றி எந்த தகவலும் இல்லை என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். அம்ரித்பால் எங்கு இருக்கிறார் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

அம்ரித்பால் சிங்குக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை எவ்வளவு காலம் தொடரும் என்பதை பஞ்சாப் போலீசார் தெரிவிக்கவில்லை. பஞ்சாப் போலீசார் மத வழிபாட்டுத் தலங்கள், குறிப்பாக கிராமங்களில் உள்ள குருத்வாராக்கள் முன்பு நிறுத்தப்பட்டு, வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

அம்ரித்பால் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது எந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

ஜலந்தர் காவல்துறையின் கூற்றுப்படி, வாரிஸ் பஞ்சாப் டி செயல்பாட்டாளர்கள் மீது சமூக அமைதியின்மையை உருவாக்குதல், உள்நோக்கத்துடன் கொலை செய்தல், காவல்துறை அதிகாரிகளைத் தாக்குதல் மற்றும் அரசு ஊழியர்கள் சட்டபூர்வமாக தங்களுடைய கடமைகளைச் செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட நான்கு கிரிமினல் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

அஜ்னாலா காவல் நிலையம் மீதான தாக்குதலுக்காக 'வாரிஸ் பஞ்சாப் டி' செயல்பாட்டாளர்கள் மீது 24-02-2023 தேதியிட்ட வழக்கு எண் 39 பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டாரா?

அம்ரித்பால் சிங் போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உள்ளூர் மற்றும் தேசிய ஊடகங்கள் பஞ்சாபில் நடக்கும் முன்னேற்றங்கள் குறித்து தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

கடந்த சனிக்கிழமையன்று, அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டு அசாமில் உள்ள திப்ருகாருக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை மாலையிலவ் சில ஊடக நிறுவனங்கள் அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டதாகக் கூறி, அது தொடர்பான தகவல்களை அவற்றின் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்தன. பிறகு அவற்றை நீக்கின.

பஞ்சாப் காவல்துறை, அம்ரித்பால் சிங் கைது தொடர்பான செய்தி பொய்யானது என்றும் மக்கள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cv2vp4yrppzo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சான் பிரான்சிஸ்கோவில் இந்திய தூதரக வளாகத்தை சேதப்படுத்திய காலிஸ்தானி குழுவினர் - இந்தியா கடும் கண்டனம்

பிரிட்டன் தூதரகம்

பட மூலாதாரம்,SOCIALMEDIA

20 மார்ச் 2023, 08:30 GMT
புதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர்

பிரிட்டனின் லண்டன் நகரத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்த கொடிக்கம்பத்தில் தேசிய மூவர்ண கொடியை கீழறக்கி காலிஸ்தானி ஆதரவு போராட்ட கும்பல் ஞாயிற்றுக்கிழமை குழப்பத்தை ஏற்படுத்திய சலசலப்பு ஓயாத நிலையில், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரக வளாகத்தையும் அதே காலிஸ்தானி குழுவின் ஆதரவாளர்கள் சிலர் சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக பொறுப்பு வகிக்கும் உயரதிகாரியை அழைத்தும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

 

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்த தேசிய மூவர்ண கொடியை கீழறக்கி காலிஸ்தானி ஆதரவு போராட்டக்குழுவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அந்த வளாகத்தையும் அவர்கள் சேதப்படுத்தினர்.

 

இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு இந்தியாவில் உள்ள பிரிட்டன் தூதர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் அங்கிருப்பவர்களுக்கு எதிராக நடந்த இழிவான செயல்களை நான் கண்டிக்கிறேன், அவை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை," என்று பிரிட்டன் தூதர் அலெக்ஸ் எல்லிஸ் தெரிவித்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

இதே விவகாரத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷும் கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

இந்த விவகாரத்தில் டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான பிரிட்டன் தூதரை அழைத்து இந்திய வெளியுறவுத்துறை தமது அதிருப்தி மற்றும் கண்டனத்தை தெரிவித்தது.

இந்திய தூதரகத்தில் இந்த சம்பவம் நடந்தபோது அதை தடுக்கத் தவறிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து விளக்கம் தரும்படியும் இந்திய வெளியுறவுத்துறை பிரிட்டன் தூதரை கேட்டுக் கொண்டதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி தெரிவித்தார்.

சான் பிரான்சிஸ்கோவில் என்ன நடந்தது?

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

இந்த நிலையில், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக நடந்த போராட்டத்தின்போது தூதரக வளாகத்தை சேதப்படுத்திய கும்பல் குறித்து டெல்லி உள்ள அமெரிக்க தூதரக பொறுப்பு அதிகாரியை அழைத்து இந்திய வெளியுறவுத்துறை தமது அதிருப்தியை வெளியிட்டது.

நடந்த சம்பவம் தொடர்பாக இந்தியாவின் கவலையை வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகமும் அமெரிக்க உள்துறையிடம் வெளிப்படுத்தியதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 4
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 4

இந்நிலையில், காலிஸ்தானி குழுக்கள் லண்டனில் உள்ள இந்திய தூரகத்தை முற்றுகையிட்டு அந்த பகுதியை சேதப்படுத்தியதை காண்பிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாயின.

அதில் இந்திய தூதரகத்தின் முன்பு ஒரு கூட்டத்தில் “காலிஸ்தான்” கொடிகளை ஏந்திய சிலர் காணப்படுகின்றனர். அந்த வீடியோவில், இந்திய தூதரகத்தின் முன்பாக இருந்த மூவர்ணக் கொடியை ஒருவர் அகற்ற முனைவதைக் காண முடிகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக பிரிட்டனுக்கு இந்தியா கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. டெல்லியில் இருக்கும் மூத்த பிரிட்டிஷ் தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பியது இந்திய அரசு.

ஞாயிற்றுக்கிழமை இரவு பிரிட்டன் தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பி, “பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைபாடு” குறித்து விளக்கம் கேட்டதாக பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் மூவர்ணக் கொடியை கழற்றிய கும்பல்

பட மூலாதாரம்,GOOGLE

Twitter பதிவை கடந்து செல்ல, 5
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 5

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரிட்டனில் உள்ள இந்திய தூதரக வளாகங்கள், அங்கு பணியாற்றுபவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றில் பிரிட்டன் அரசின் அலட்சியப் போக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது,” என்று தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் உள்ள பிரிட்டன் தூதரகத்தின் உயர் அதிகாரி அலெக்ஸ் எல்லீஸ் தற்போது டெல்லியில் இல்லை.

எனவே பிரிட்டனின் துணைத் தூதர் கிறிஸ்டியன் ஸ்காட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியதாகத் தெரிகிறது என பிடிஐ செய்தி முகமை கூறுகிறது.

“லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு எதிராக பிரிவினைவாத மற்றும் தீவிரவாத சக்திகள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியாவின் வலுவான எதிர்ப்பைத் தெரிவிக்க, டெல்லியில் உள்ள மூத்த பிரிட்டன் அதிகாரி ஞாயிற்று கிழமை இரவு நேரில் வரவழைக்கப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக வியன்னா ஒப்பந்தத்தின்படி, ஐக்கிய ராஜ்ய அரசுக்கான அடிப்படை கடமை பொறுப்புகள் குறித்து நினைவூட்டப்பட்டார்'' என இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

மேலும், "இந்திய தூதரக வளாகம் மற்றும் அதிகாரிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஐக்கிய ராஜ்ஜிய அரசின் அலட்சியம் ஏற்றுக்கொள்ள முடியாது. இன்றைய நிகழ்வில் தொடர்புடைய ஒவ்வொருவரையும் கண்டறிந்து, கைது செய்து தண்டனை அளிப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை ஐக்கிய ராஜ்ஜய அரசு மேற்கொள்ள வேண்டும்," என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாதிருக்க உறுதியான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் மூவர்ணக் கொடியை கழற்றிய கும்பல்

லண்டனில் உள்ள ஆல்ட்விச்சில் ஞாயிற்றுக்கிழமை ஒரு கூட்டம் திரண்டதைக் கண்டு அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தில் பாதுகாப்பு பணியாளர்கள் இருவர் காயமடைந்துள்ளதாகவும் விசாரணை துவங்கியுள்ளதாகவும் பெருநகர போலீசார் தெரிவித்தனர். பிரிட்டனில் இந்திய தூதரகத்தின் முன்பு திரண்ட இந்தக் கூட்டம் பிரிவினைவாத சீக்கிய குழுவான ‘காலிஸ்தான்’ ஆதரவாளர்கள் என்று பிஏ செய்தி முகமை தெரிவிக்கிறது.

இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 7:30 மணியளவில் இந்திய தூதரகத்திற்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டார்கள். “பாதுகாப்புப் படையினர் வருவதற்கு முன்பே அங்குக் கூடியிருந்த கூட்டம் கலைந்துவிட்டது,” என பெருநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்திய தூதரகத்தின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளன, இரு பாதுகாப்பு பணியாளர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியமில்லை,” என காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 6
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 6

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள லண்டன் மேயர் சாதிக் கான், தமது நகரில் இந்த மாதிரியான நடத்தைகளுக்கு இடம் கிடையாது என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 7
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 7

அதே வேளையில், இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் தூதரகத்துக்கான உயர் அதிகாரி அலெக்ஸ் எல்லீஸ், தமது ட்வீட்டில் இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் செயலை அவர் ‘வெட்கக்கேடானது என்றும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத செயல்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டன் அமைச்சர் தாரிக் அகமது, தனக்கு இந்தச் செயல் திகைப்பை ஏற்படுத்தியதாகவும் இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு விஷயத்தை அரசாங்கம் “தீவிரமாக” எடுத்துக்கொள்ளும் என நம்புவதாகவும் கூறினார். மேலும் இந்தச் சம்பவம் தூதரகம் மற்றும் அதன் ஊழியர்களுக்கு எதிரான ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c06n5l7v1llo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளைஞர்களை கொண்டு போராளி இயக்கத்தை உருவாக்கும் அம்ரித்பால் சிங்’ – பஞ்சாப் காவல்துறை தகவல்

Published By: RAJEEBAN

21 MAR, 2023 | 10:48 AM
image

சீக்கிய மதபோதகரும் ’வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பின் தலைவரான அம்ரித் பால் சிங் இளைஞர்களை கொண்டு போராளி இயக்கத்தை  உருவாக்கும் பஞ்சாப் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக பிரித்து காலிஸ்தான் என்று அறிவிக்க வேண்டும் என்பதை அங்குள்ள பிரிவனைவாதிகள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக ’வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பை நடத்திவரும் அதன் தலைவரான அம்ரித் பால் சிங்தான் இப்போது பேசு பொருளாகியுள்ளார். இவரை கைது செய்ய பஞ்சாப் காவல்துறை களமிறங்கியுள்ளது.

கடந்த மாதம் அம்ரித்பால் சிங் உதவியாளர் ஒருவரை கடத்தல் வழக்கில் அமிர்தசரஸ் போலீசார் கைது செய்தனர்.  இந்த சூழலில், பஞ்சாப் அரசு, அம்ரித்பாலுக்கு எதிராக நடத்திய தீவிர சோதனையில் அவர் தலைமையிலான ஒரு அமைப்பைச் சேர்ந்த 78 உறுப்பினர்களை போலீசார் கைது செய்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அம்ரித்பால் சின் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

அவரை பிடிக்க தேடுதல் நடவடிக்கை நடந்து வருவதால் அதிகாரிகள் பல இடங்களில் இணையம் மற்றும் எஸ்எம்எஸ் நிறுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் அம்ரித் பால் சிங் இளைஞர்களை கொண்டு `ஆனந்த்பூர் கல்சா ஃபெள்ஜ்’ என்ற போராளி இயக்கத்தை உருவாக்க முயற்சிப்பதாக பஞ்சாப் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் பாகிஸ்தானின் உளவு அமைப்பின் பங்கும் உள்ளதாக பஞ்சாப் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/151024

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாகனங்கள், உடைகளை மாற்றி அம்ரித்பால் சிங் தப்பிச் சென்றது டோல்கேட் கேமராவில் பதிவு

Published By: RAJEEBAN

22 MAR, 2023 | 10:36 AM
image

பஞ்சாப் போலீஸாரால் தேடப்படும் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் வாகனங்களை மாற்றியும் உடைகளை மாற்றியும்  சென்றது அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது.

பஞ்சாப்பில் ‘அனந்த்புர் கல்சா ஃபவுஜ்’ என்ற பெயரில் மீண்டும் தீவிரவாத குழுவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த காலிஸ்தான் ஆதரவு தலைவர் அம்ரித்பால் சிங்கைஇ பஞ்சாப் போலீஸார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் கடந்த 4 நாட்களாக தேடி வருகின்றனர். அவரது ஆதரவாளர்கள் 120-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்துள்ள நிலையில் அம்ரித்பால் சிங் மட்டும் போலீஸாரிடம் சிக்காமல் தப்பிவருகிறார்.

இந்நிலையில் ஜலந்தரில் உள்ள டோல்கேட் கேமராவில் கடந்த சனிக்கிழமை பதிவான காட்சிகளை ஆராய்ந்தபோது மெர்சிடஸ் எஸ்யூவி வாகனத்தில் முன் இருக்கையில் அம்ரித்பால் சிங் அமர்ந்துள்ளார். அதன்பின் அவர் மாருதி பிரஸ்ஸா வாகனத்தில் வேறு உடையில் இருக்கிறார். அதன்பின் பாரம்பரிய மத உடையை மாற்றிவிட்டு பேண்ட்இ சட்டை அணிந்து தலைப்பாகையை மாற்றி மோட்டார் பைக்கில் தப்பிச்சென்றதாக போலீஸார் தெரிவித் துள்ளனர்.

அம்ரித்பால் சிங்கை கைது செய்யும் முயற்சி தொடர்வதால் சட்டம் ஒழுங்கை பராமரிக்க செல்போன் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டதை நேற்று மதியம் வரை பஞ்சாப் அரசு நீட்டித்தது.

முதல்வர் எச்சரிக்கை: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நேற்று அளித்த பேட்டியில் ‘‘மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டுக்கு எதிராக செயல்பட எந்த அமைப்பையும் அனுமதிக்க மாட்டோம். அம்ரித்பால் சிங்கை கைது செய்யும் நடவடிக்கை தொடங்கியதில் இருந்து எந்த வன்முறை சம்பவமும் நடைபெறவில்லை’’ என்றார்.

அம்ரித்பால் சிங் இந்திய- நேபாள எல்லை அல்லது பஞ்சாப்பின் சர்வதேச எல்லையை கடந்து தப்பிச் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் சசாஸ்த்ரா சீமா பால் துணை ராணுவப்படையினர் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அம்ரித்பால் சிங் தலைப்பாகையுடன் இருக்கும் போட்டோவும் தலைப்பாகை இல்லாமல் இருக்கும் போட்டோவும் அனுப்பப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விமான நிலையம் மற்றும் துறைமுகங்களில் உள்ள பாதுகாப்பு படையினருக்கும் அம்ரித்பால் சிங் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/151121

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்ரித்பால் சிங் வீட்டில் சோதனை நடத்தும் பஞ்சாப் போலீஸ் - அமிர்தசரஸில் பதற்றம்

அம்ரித்பால் சிங்

பட மூலாதாரம்,ANI

3 மணி நேரங்களுக்கு முன்னர்

'வாரிஸ் பஞ்சாப் டி' அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கை பிடிக்க பஞ்சாப் போலீசார் கடந்த 5 நாட்களாக மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வழக்கில் இதுவரை அம்ரித்பால் சிங்கின் மாமா, கார் ஓட்டுநர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்ரித்பால் சிங்குடன் தொடர்புடைய வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் அனைத்தையும் போலீசார் இதுவரை பறிமுதல் செய்துள்ளனர். இதில் அம்ரித்பால் சிங் பயன்படுத்திய மெர்சிடிஸ் காரும் அடங்கும்.

அம்ரித்பால் சிங் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் பிரெஸ்ஸா கார் மற்றும் மோட்டார் சைக்கிளையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

 

இந்த வழக்கை பல்வேறு கோணங்களில் விசாரிக்க பஞ்சாப் போலீசார் முயன்று வருகின்றனர். நிதி பரிவர்த்தனை, வெளிநாட்டு சக்திகளின் பங்கு போன்றவை இதில் அடங்கும்.

ஆனால் அமிர்தபால் எங்கே இருக்கிறார் என்பதை இதுவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அம்ரித்பால் சிங்

பட மூலாதாரம்,ANI

அம்ரித்பால் சிங்கின் வீட்டுக்கு வந்த போலீஸ்

ஏஎன்ஐ செய்தி முகமை தகவலின்படி , பஞ்சாப் காவல்துறையின் ஒரு குழு அமிர்தசரஸில் உள்ள அம்ரித்பால் சிங்கின் வீட்டிற்கு புதன்கிழமை வந்துள்ளது.

அம்ரித்பால் சிங்கின் மனைவி மற்றும் தாயார் கிரண்தீப் சிங்கிடம் போலீசார் விசாரித்துள்ளனர். ஆனால், இதுவரை காவல்துறை தரப்பில் உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

போலீஸ் கெடுபிடிகள் காரணமாக அமிர்தசரஸில் பதற்றம் காணப்படுகிறது. பல இடங்களில் போலீஸார் கொடி அணிவகுப்பு நடத்தி பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தாலும், அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் எந்த நேரத்தில் என்ன போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என தெரியாததால் அங்கு பதற்றம் காணப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் அம்ரித்பால் சிங்குக்கு எதிராக 'லுக்அவுட்' எனப்படும் தேடப்படும் நபர் என்ற பெயரில் நோட்டீஸ் மற்றும் ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனுடன், அம்ரித்பால் சிங் மற்றும் அவரது 5 கூட்டாளிகள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த தகவலை பஞ்சாப் காவல்துறை தலைவர் (ஐஜி) சுக்செயின் சிங் கில் தெரிவித்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

ஐஜி சுக்செயின் சிங் கில், 'இதுவரை 114 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல் நாளில் 78 பேரும், இரண்டாவது நாளில் 34 பேரும், மூன்றாவது நாளில் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவர் மீதும் மாநிலத்தில் அமைதியை சீர்குலைத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.

அம்ரித்பால் தனது உடைகளை மாற்றிக்கொண்டு தப்பிக்க பல வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தினார்.

இதனுடன், அம்ரித்பால் தப்பிச் செல்ல உதவிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்களில் 'வாரிஸ் பஞ்சாப் டி' அணைப்பின் ஃபைனான்சியர் என்று கூறப்படும் தல்ஜித் சிங் கல்சியும் ஒருவர்.

அம்ரித்பால் சிங்கின் மாமா ஹர்ஜீத் சிங் மற்றும் ஓட்டுநர் ஹர்பிரீத் சிங் ஆகியோரும் கைது செய்யப்பட்டு அசாமில் உள்ள திப்ருகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

என்ன சொல்கிறார் பஞ்சாப் முதல்வர்?

Twitter பதிவை கடந்து செல்ல, 2
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நேற்று காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், "கடந்த காலங்களில் அந்நிய சக்திகளுடன் இணைந்து பஞ்சாப் சூழலை கெடுக்கும் வகையில் பேசிய சிலர், வெறுக்கத்தக்க பேச்சுக்களை பேசி, சட்டத்திற்கு விரோதமாக பேசி வந்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பலர் பிடிபட்டுள்ளனர். அத்தகையவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும்," என்று கூறியுள்ளார்.

பஞ்சாபின் அமைதியும், அமைதியும் தான் தனது முன்னுரிமை என்று கூறிய பகவந்த் மான், நாட்டிற்கு எதிராக மாநிலத்தில் தழைத்தோங்கும் எந்த சக்தியும் தப்ப முடியாது என்று தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cxe78yg4reeo

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'காலிஸ்தான்' அம்ரித்பால் சிங் கைது - பிந்தரன் வாலேவின் சொந்த கிராமத்தில் போலீசிடம் பிடிபட்டது எப்படி?

பஞ்சாபில் அம்ரித்பால் சிங் கைது

பட மூலாதாரம்,YEARS

49 நிமிடங்களுக்கு முன்னர்

'வாரிஸ் பஞ்சாப் டி' அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங் ஒரு மாதத்திற்கும் மேலான தேடுதல் வேட்டையின் முடிவில் பஞ்சாப் காவல் துறையினரிடம் சிக்கியுள்ளார். காலிஸ்தான் கோரிய அவர், அதே கோரிக்கையை முன்னிறுத்தி, இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது மேற்கொண்ட ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையில் கொல்லப்பட்ட பிந்தரன் வாலேவின் சொந்த கிராமத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் கடந்த மாதம் துப்பாக்கிகள், வாள்களுடன் பஞ்சாப் காவல் நிலையம் முற்றுகையிட்ட சம்பவம் இந்தியா முழுவதிலும் பெரும் அதிர்வலையை கிளப்பியது. ஒரு கைதியை விடுதலை செய்ய வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த போராட்டத்தை அடுத்து, அம்ரித்பால் சிங் குறித்தும், அவரது காலிஸ்தான் பிரிவினை கோரிக்கை தொடர்பாகவும் விவாதங்கள் சூடுபிடித்தன.

இதையடுத்து அம்ரித் பால் சிங்கை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்ததுமே அவர் தலைமறைவாகிவிட்டார். தொடர்ந்து தனது இருப்பிடத்தை மாற்றியதன் மூலம் பஞ்சாப் காவல்துறையினரிடம் சிக்காமல் அவர் தப்பி வந்தார். அதேநேரத்தில், பஞ்சாப் முழுவதும் காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

அம்ரித்பால் சிங் மீது 16 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் அவர் மீது வழக்குகள் உள்ளன. காவல்துறை தேடுதல் வேட்டைக்குப் பயந்து கடந்த மார்ச் 18-ம் தேதி தலைமறைவாகிவிட்ட அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் உள்ள ரோட் கிராமத்தில் காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். இதனை பஞ்சாப் காவல்துறையே தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. பஞ்சாப் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும், பொய்யான, உறுதி செய்யப்படாத தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்றும் பஞ்சாப் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

பஞ்சாபில் அம்ரித்பால் சிங் கைது

பட மூலாதாரம்,RAVINDER SINGH ROBIN

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

அம்ரித் பால் சிங்குடன் அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள் பலரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளனர். அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்ட ரொட் கிராமம் வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

1984-ம் ஆண்டு காலிஸ்தான் தனி நாடு கோரி போராடி, அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குள் புகுந்து கொண்டதால், அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியால் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்ட பிந்தரவாலேவின் சொந்த கிராமம் இதுவாகும். அங்குதான், 'வாரிஸ் ப்ஞசாப் டி' இயக்கத்தின் தலைவராக அம்ரித்பால் சிங் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

அம்ரித்பால் சிங் பிடிபட்டது எப்படி?

காலிஸ்தான் கோரி அம்ரித்பால் சிங் பிடிபட்டது எப்படி என்பது குறித்து அதே கோரிக்கைக்காக 1984-ம் ஆண்டு உயிர் நீத்த பிந்தரன்வாலேவின் உறவினரான ஜஸ்பிர் சிங் ரோட், பிபிசியிடம் பேசினார்.

பஞ்சாபில் அம்ரித்பால் சிங் கைது
 
படக்குறிப்பு,

ஜஸ்பிர் சிங், பிந்தரன் வாலேவின் உறவினர்

இந்த காரணத்திற்காகவே தானும் ரோட் கிராமத்திற்கு வருகை தந்ததாக அவர் கூறினார். அம்ரித்பால் சிங் கைது குறித்துப் பேசிய ஜஸ்பிர் சிங், "அம்ரித்பால் சிங் முதலில் 'நிட்நெம்' ஓதினார். பிறகு, அங்கே கூடியிருந்தவர்களுடன் அவர் சிறிது உரையாடினார். அதனைத் தொடர்ந்து குருத்வாரா சாஹிப்புக்கு வெளியே வந்தார். அவரை காவல்துறையினர் கைது செய்தனர்." என்று கூறினார்.

இதற்கு முன் அம்ரிபாத் சிங் தன்னுடன் எந்த வகையிலும் தொடர்பில் இருந்ததில்லை என்றும் அவர் கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/czkx4gd7e20o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.