Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமுர்த்தி, ஏனைய நலன்புரி நன்மைகளைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவிப்பு

நிதி அமைச்சின் கீழ் இயங்கும் நலன்புரி சபையினால் வழங்கப்படும் சமுர்த்தி உட்பட 52 நலன்புரிப் பலன்களைப் பெறுவதற்கு மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யாதவர்கள் அந்தப் பலன்களைப் பெறுவதற்கு உரிமையற்றவர்கள் என நிதியமைச்சு வலியுறுத்துகிறது.

மார்ச் 31ஆம் திகதிக்குள் பதிவு செய்து முடிக்கவில்லை என்றால், உலக வங்கியின் இந்தத் திட்டத்துக்கான உதவி கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது.

அப்படியானால், நலத்திட்ட உதவிகளைப் பெறுபவர்கள் நன்மைகளைப் பெற முடியாது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

நலன்புரி சபை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஒன்லைன் மூலம் 3.7 மில்லியன் மக்கள் இதற்காக விண்ணப்பித்துள்ளனர். சமுர்த்தி மற்றும் ஏனைய நலன்புரி நன்மைகளுக்காக விண்ணப்பித்தவர்களின் தகுதியை சரிபார்க்கும் பொருட்டு, மாவட்டச் செயலகத்தில் உள்ள கள உத்தியோகத்தர்களைக் கொண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 3.7 மில்லியன் பேர் பயன்பெற விண்ணப்பித்திருந்தாலும், இதுவரை 65,000 பேர் மாத்திரமே மக்கள்தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்வதற்கு கள உத்தியோகத்தர் ஒருவருக்கு 300 ரூபா சம்பளம் வழங்கப்படுகின்ற போதிலும், சில தொழிற்சங்கங்களைச் சேர்ந்த கள உத்தியோகத்தர்கள் பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த வேலைத்திட்டத்தை அமுல்படுத்தாமல் செயற்படுவதாக நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பயனாளிகளின் பெயர்களை பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்குவதற்காக பயனாளிகளிடம் இருந்து உரிய தகவல்கள் சேகரிக்கப்படுவதாக சில கள அதிகாரிகள் தவறான தகவல்களை பரப்புவதால், சில விண்ணப்பதாரர்கள் இதற்கான தகவல்களை வழங்க தயங்குவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, இவ்வாறான பொய்ப் பிரசாரங்களுக்கு மக்கள் ஏமாற வேண்டாம் எனவும், தகுதியுடையவர்களாக இருந்தால், எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறும் நிதியமைச்சு மக்களைக் கேட்டுக் கொள்கிறது.

மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்பவர்கள் மாத்திரமே சமுர்த்தி உட்பட 52 நலத்திட்ட உதவிகளை பெற்றுக்கொள்ள தகுதியுடையவர்கள் என வலியுறுத்தப்படுகிறது.

சமுர்த்தி மற்றும் ஏனைய நலன்புரி உதவிகளை பெற்றுக்கொள்பவர்கள் தாம் வசிக்கும் பிரதேசத்தில் உள்ள பிரதேச செயலகங்களுக்கோ அல்லது கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திற்கோ சென்று மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அமைச்சு கேட்டுக்கொள்கிறது.

https://thinakkural.lk/article/242604

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1.1 மில்லியன் நலன்புரி உதவி விண்ணப்பங்களின் சரிபார்ப்பு நிறைவு: சேமசிங்க

 

நாடளாவிய ரீதியில் உள்ள 334 பிரதேச செயலகங்களில் இருந்து பெறப்பட்ட 1.1 மில்லியன் நலன்புரி நல விண்ணப்பங்களின் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

“1.1 மில்லியன் நலன்புரி உதவி விண்ணப்பங்களில் அதிகபட்ச சரிபார்ப்பு விகிதம் களுத்துறை மாவட்டத்தில் 46% ஆகவும், பதுளை மாவட்டத்தில் 34% ஆகவும், காலி மாவட்டத்தில் 32% ஆகவும் உள்ளது. நாடளாவிய ரீதியில் 1.1 மில்லியன் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன” என்று அமைச்சர் கூறியுள்ளார். .

நாடளாவிய ரீதியில் 334 பிரதேச செயலகங்களில் இருந்து பெறப்பட்ட 3.7 மில்லியன் விண்ணப்பங்கள் நலன்புரி கொடுப்பனவுகளைப் பெறுவதற்குத் தகுதியானவையா என்பதை சரிபார்க்கும் நடவடிக்கை முறையாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

தகவல் கணக்கெடுப்பு இம்மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடையும் என்றும், காலக்கெடுவிற்கு முன்னர் சரியான தகவல்களை வழங்கத் தவறினால் நலன்புரி நலன்களை இழக்க நேரிடும் என்றும் இராஜாங்க அமைச்சர் சேமசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.

எனவே, அனைத்து விண்ணப்பதாரர்களும் தகவல் கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரிகளுக்கு சரியான தகவல்களை வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

https://thinakkural.lk/article/245136

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நலன்புரி நன்மைகள் கணக்கெடுப்பில் தவறான தகவல் கொடுத்தால் வழக்கு

 

10-5.jpg

நலன்புரி நன்மைகளை பெற தகுதியானவர்களைக் கண்டறிந்து கணக்கெடுப்பு நடத்தும் நடவடிக்கை எதிர்வரும் மார்ச் 31-ஆம் திகதியுடன் முடிவடைவதால், அதற்கு முன் சரியான தகவல்களை வழங்குமாறும் இல்லையெனில் நலன்புரி நன்மைகளை இழக்க நேரிடும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இதனிடையே, கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு சிலர் தவறான தகவல்களை வழங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வாறு தவறான தகவல்களை வழங்குபவர்களுக்கு சமூக நலத்திட்ட உதவிகள் கிடைக்காது எனவும் அவர்களுக்கு எதிராக நீதிமன்றம் சென்று சட்டத்தை அமுல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/245190

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

3.2 மில்லியன் நலன்புரி விண்ணப்பங்களின் சரிபார்ப்பு நிறைவடைந்தது

நலத்திட்ட உதவித் தொகையை பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட 3.2 மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்களின் சரிபார்ப்பு நிறைவடைந்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் நலன்புரி கொடுப்பனவுகளுக்கு தகுதியானவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியிலுள்ள 340 பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து பெறப்பட்ட 3.7 மில்லியன் விண்ணப்பங்கள் தொடர்பான நலன்புரி கொடுப்பனவுகளுக்கான தகுதி சரிபார்ப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்ற பின்னர் ஜூன் மாதம் முதல் புதிய திட்டத்தின் மூலம் கொடுப்பனவை வழங்குவதற்கு நலன்புரி நன்மைகள் சபை நம்பிக்கை கொண்டுள்ளது.

https://thinakkural.lk/article/248573

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அஷ்வசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு திட்டம் ஜூலை ஆரம்பம் !

Published By: DIGITAL DESK 5

22 APR, 2023 | 12:29 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அஷ்வசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு திட்டத்தை ஜூலை முதலாம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நிதி , பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய 4 சமூகக் குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ள சுமார் 16 000 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

அதற்கமைய பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட 4 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா வீதம் 2024ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி வரை வழங்கப்படவுள்ளது.

ஏழைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 8 இலட்சம் குடும்பங்களுக்கு 8500 ரூபா வீதம் 2023 ஜூலை 31 முதல் 3 வருடங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

மிகவும் ஏழைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 4 இலட்சம் குடும்பங்களுக்கு 15 000 ரூபா வீதம் 2023 ஜூலை 31 முதல் 3 வருடங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இதே வேளை மாற்றுத்திறனாளிகள் , கண்டறியப்படாத சிறுநீரக நோயாளர்கள் மற்றும் முதியோர் உதவி பெறும் நபர்களுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படவுள்ளன.

தற்போதும் உதவி பெறுகின்ற 72 000 மாற்றுத்திறனாளிகளுக்கும் , 39 150 சிறுநீரக நோயளர்களுக்கும் தலா 5000 ரூபாவும் , 416 667 முதியோருக்கு 2000 ரூபாவும் ஒரு மாதத்திற்கு வழங்கப்படவுள்ளதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/153471

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சமூக நலச்சட்டம் வெள்ளியன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் - ரஞ்சித் சியம்பலாப்பிட்டி

Published By: DIGITAL DESK 5

06 MAY, 2023 | 10:51 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் எதிர்வரும் 3 ஆண்டுகளுக்குள் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களின் பொருளாதார நிலையை பலப்படுத்துவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடிய சமூக நலச்சட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (12) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார்.

குறித்த சட்ட மூலம் தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில் ,

எதிர்வரும் வெள்ளிக்கிழமை சமூக நலச்சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக சமூகத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். அத்தோடு அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சமூக நலத்திட்டங்களில் உள்வாங்கப்படுவதற்கு பொறுத்தமானவர்களும் இதன் ஊடாக தெரிவு செய்யப்படுவர்.

அதே போன்று எவரேனுமொருவர் இதனைப் பெற தகுதியுடையவராக இருந்தும் , அவருக்கு அவை கிடைக்கப் பெறாவிட்டால் மேன்முறையீடு செய்து தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பும் இதில் காணப்படுகிறது. 1945ஆம் ஆண்டு முதல் நாட்டில் சமூக நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறிருந்தும் தற்போது நாட்டிலுள்ள மொத்த குடும்பங்களில் 50 சதவீதமானோர் இவற்றை எதிர்பார்த்துள்ளனர்.

எனவே தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சமூக நலத்திட்டங்களை குறிப்பிட்டவொரு காலப்பகுதியில் மாத்திரம் நடைமுறைப்படுத்தி , குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதே இதன் இலக்காகும். மிகக் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 15 000 ரூபாவும் , அதற்கு அடுத்த கட்டத்திலுள்ள குடும்பங்களுக்கு 8500 ரூபாவும் வழங்கப்படும்.

இந்த நலன்புரி தொகையைப் பெறும் குடும்பங்களை 3 ஆண்டுகளுக்குள் அரசாங்கத்திடமிருந்து உதவிகளை எதிர்பார்க்காத குடும்பங்களாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றார்.

https://www.virakesari.lk/article/154658

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

33 இலட்சம் பேருக்கு ஜூலை முதல் நலன்புரிக் கொடுப்பனவு - மிக வறியவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு 15 000 ரூபா வழங்க தீர்மானம்

Published By: DIGITAL DESK 5

10 MAY, 2023 | 08:50 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டிலுள்ள 33 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு ஜூலை 1 முதல் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அதற்கமைய மிக வறியவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள பயளானிகளுக்கு எதிர்வரும் 3 ஆண்டுகளுக்கு 15 000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அதிகாரங்களுக்கமைய இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இடைநிலை, பாதிக்கப்படக்கூடிய, வறிய மற்றும் மிகவும் வறுமையான குடும்பங்களுக்கு 4 பிரிவுகளின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளதோடு, அங்கவீனமானவர்கள், முதியவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்கள் ஆகியோருக்கும் அஸ்வெசும திட்டத்தின் கீழ் நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

அதற்கமைய தற்காலிக நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருக்கும் 400,000 பேருக்கான 2500 ரூபாய் மாதாந்த கொடுப்பனவு 2023 டிசம்பர் 31 வரையிலும்,  பாதிக்கப்படக் கூடிய 400,000 பேருக்கான 5000 ரூபாய் கொடுப்பனவு 2024 ஜூலை 31 வரையிலும் வழங்கப்படவுள்ளது. மேலும் வறியோர் என்று அறியப்பட்ட பயனாளிகள் 800,000 பேருக்கான 8500 ரூபாய் கொடுப்பனவும் மிக வறுமையானவர்களுக்காக மாதாந்தம் 15,000 கொடுப்பனவும் 2023 ஜூலை 01 முதல் மூன்று வருட காலத்திற்கு வழங்கப்படவுள்ளன.

தற்போது நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளும்72,000 மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்தம் 5000 ரூபாய் வீதமும், சிறுநீரக பாதிப்புக்கான நிவாரணங்களை பெறும் 39,150 பேருக்கு 5000 ரூபாய் வீதமும் முதியவர்களுக்கான கொடுப்பனவுகளை பெறும் 416,667 பேருக்கு 2000 ரூபாய் என்ற அடிப்படையிலும் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

மேற்படி நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள 340 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து 3,712,096 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு திட்டத்திற்கு தகுதியானவர்களை கண்டறிவதற்கான திட்டத்தில் தகவல்களை சரிபார்க்கும் பணிகளில் 91.5 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

பிரதேச செயலாளர் பிரிவுகளில் மூவர் அடங்கிய தெரிவுக்குழு ஒன்றின் கீழ் தகவல்கள் பரிசீலிக்கப்பட்டு மாவட்டச் செயலாளரின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் மேலும் தெரிவித்துள்ளது. 

https://www.virakesari.lk/article/154972

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நலன்புரி கொடுப்பனவு திட்டம் : பெருந்தோட்ட மக்களுக்கு கிடைப்பது சந்தேகத்துக்குரியது - இராதாகிருஸ்ணன்

Published By: DIGITAL DESK 3

12 MAY, 2023 | 08:30 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

17 ஆயிரத்துக்கும் குறைவான மாத வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அஷ்வசும் நலன்புரி கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்ற நியதி காணப்படும் போது மலையக மக்களுக்கு இந்த கொடுப்பனவு கிடைக்குமா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

பொருளாதார ரீதியில் பெருந்தோட்ட மக்கள் பல்வேறு வழிமுறையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.ஆகவே இவ்விடயத்தில் பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் நிதியமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி இராதாகிருஸ்ணன் சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற அஷ்வசும் நலன்புரி கொடுப்பனவு திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கான சிறந்த நலன்புரி கொடுப்பனவு திட்டமாக அஷ்வசும்  புதிய செயற்திட்டம் காணப்படுகிறது.

பல இலட்சம் பேருக்கு இந்த  திட்டத்தின் ஊடாக நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில்  6 ஆயிரம் ரூபா குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு மாத்திரமே  அரச நலன்புரி கொடுப்பனவு வழங்கப்பட்டன.இந்த தொகை தற்போது 17,772 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் 46 சதவீத அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. மாத வருமானம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஆகியவற்றை மதிப்பிட்டு ஒரு குடும்பத்தின் நிலையை மதிப்பிட முடியும்.

மாதம் 17 ஆயிரத்துக்கும் குறைவான வருமானம் பெறும் தரப்பினருக்கு அல்லது குடும்பத்துக்கு இந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்ற வரையறை காணப்படுவதால் பெருந்தோட்ட மக்களுக்கு இந்த நலன்புரி கொடுப்பனவு கிடைக்குமா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

ஏற்கனவே வழங்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவிலும் மலையக மக்களில் பெரும்பாலானோர் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.குடும்ப அடிப்படையில் மலையக மக்களுக்கு இந்த நிவாரணம் கிடைக்குமா என்பதை நிதியமைச்சு தெளிவுப்படுத்த வேண்டும்.

விவசாயத்துறை வீழ்ச்சி,அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் ஆகிய காரணிகளினால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இந்த நலன்புரி திட்டத்துக்கு உலக வங்கி  வழங்குகிறது.ஆகவே இந்த நிதி தொகை நியாயமான முறையில் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

நுவரெலியா வைத்தியசாலையில் அண்மையில் 34 பேருக்கு கண் சத்திரசிகிச்சை இடம்பெற்றுள்ளது.இவர்களில் 10 பேருக்கு கண் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசேட கவனம்  செலுத்த வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/155170

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சமூக கட்டமைப்பில் பாரிய முரண்பாடுகள் தோற்றம் பெறும் - ஆளும் தரப்பு உறுப்பினர் அரசாங்கத்திடம் கோரிக்கை

Published By: VISHNU

23 JUN, 2023 | 11:42 AM
image
 

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

அஸ்வெசும நிவாரண செயற்திட்டம் சமூக கட்டடைப்பில் பாரிய முரண்பாடுகளை தோற்றுவிக்கும். ஏழ்மையில் நிலையில் உள்ளவர்கள் இந்த செயற்திட்டத்தில்  உள்வாங்கப்படவில்லை.

ஆகவே முறையான மதிப்பீட்டை மேற்கொள்ளும் வரை அஸ்வெசும செயற்திட்டத்தை  நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்த வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார் சுமித்ராராச்சி அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்  தொடர்ந்து  உரையாற்றியதாவது,

சமூக கட்டமைப்பில் தீவிரமடைந்துள்ள ஏழ்மை நிலையை இல்லாதொழிக்க அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள அஸ்வெசும செயற்திட்டம் சமூக கட்டமைப்பில் பாரிய முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் உள்ளது.

தகுதியானவர்களுக்கு மாத்திரம்  நிவாரண தொகை வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

அஸ்வெசும நிவாரண செயற்திட்டத்தில் நிவாரணம் பெறுவதற்கு தகுதியானவர்கள்  புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.

தகுதியற்ற செல்வந்தர்கள் நிவாரண திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். ஆகவே இந்த திட்டத்தில் உண்மையான தரப்பினர் அடையாளப்படுத்தப்படவில்லை.

நிவாரணத்தை பெற்றுக்கொள்ள விண்ணப்பித்து புறக்கணிக்கப்பட்டவர்கள் மேன்முறையீடு செய்யலாம் என நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.மேன்முறையீட்டுக்கான காலவகாசம் நீடிக்கப்பட வேண்டும்.

குளறுபடிகளுடன் இந்த செயற்திட்டத்தை அமுல்படுத்தினால் சமூக கட்டமைப்பில் பாரிய முரண்பாடுகள் தோற்றம் பெறும்.

ஆகவே பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வரை செயற்திட்டத்தை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/158388

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேன்முறையீடுகளின் அடிப்படையில் அஸ்வெசும நலப் பயனாளிகள் பட்டியல் திருத்தம் செய்யப்படும் -ஷெஹான் சேமசிங்க

மேன்முறையீடுகள் மற்றும் முறைப்பாடுகளின் அடிப்படையில் அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் பெறுபவர்களின் பட்டியல் திருத்தப்படும் என பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று உறுதியளித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய சேமசிங்க, மேன்முறையீடுகள் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதாகவும், எந்தவொரு தனிநபரும் மேன்முறையீடு அல்லது முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேல்முறையீடுகள் மற்றும் புகார்களின் அடிப்படையில், பதிவேட்டில் திருத்தம் செய்யப்படும் என்றார்.Welfare.Benefit.Board_-750x375-1.jpg

விண்ணப்பங்கள் மற்றும் சரிபார்ப்பின் அடிப்படையில் தற்போது பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் ஜூலை மாதம் முதல் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதற்கு முன்னர் திருத்தங்களுக்கு இன்னும் இடமுள்ளதாகவும் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான பதிவேடுக்காக ஒகஸ்ட் மாதம் மீண்டும் ஒருமுறை பட்டியல் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை 148 பில்லியன் ரூபாவிலிருந்து 187 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நலத்திட்ட உதவிகள் பெறுபவர்களின் அங்கீகரிக்கப்பட்ட பட்டியல் குறித்து பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று கவலை எழுப்பியுள்ளனர்.

இதன்படி, இந்த விடயம் தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தனவும் சபையில் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/259697

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தகுதி இருந்தும் நிவாரண திட்டத்தில் பெயர் இடம்பெறாதவர்கள் மேன் முறையீடு செய்யலாம் - பிரதமர் சபையில் தெரிவிப்பு

Published By: VISHNU

23 JUN, 2023 | 09:39 PM
image
 

 

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

குறைந்த வருமானம் பெறும்  குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தில் முன்னொருபோதும் இல்லாத வகையில் இம்முறை பெருமளவானவர்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. அத்துடன் தகைமையானவர்கள் சிலரின் பெயர்கள் இந்த நிவாரணப் பட்டியலில்  இடம் பெறவில்லை என்றால் அவர்கள் அதற்காக மேன்முறையீடு செய்ய முடியும்  என பிரதமர் தினேஷ் குணவர்தன  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் அரசாங்கத்தின் அஸ்வெசும நிவாரண வேலைத்திட்டம் தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே. பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பங்களுக்கான அரசாங்கத்தின் அஸ்வெசும  நிவாரணத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான மதிப்பீடு தொடர்பில் சபையில் பலரும் கருத்துக்களை முன்வைத்தனர்.

அந்த வகையில் கடந்த மாதத்தில் இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட சில அதிகாரிகள் சமூகமளிக்காததன் காரணத்தினால் தகைமைகளைக் கொண்ட இளைஞர்கள் சிலரை சுயாதீனமாக  சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்கிணங்க நலன்புரி சபை அந்த சவாலை பொறுப்பேற்று முதலாவது சுற்றை எமது அரச உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தி நாடளாவிய ரீதியில் மேற்கொண்டுள்ளது.

கடந்த வரவு செலவுத் திட்டத்திலும், பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையிலும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை பாதுகாப்பதற்கான இந்த திட்டம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று அதனை மேலும் விரிவு படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மதிப்பீடுகளில் குறைபாடுகள் காணப்படுமாயின் வசதி படைத்தவர்களுக்கும் இந்த நிவாரணத்தை கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படும். எவ்வாறாயினும் வசதி படைத்தவர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட முடியாது.

தகைமையானவர்கள் சிலரின் பெயர்கள் இந்த நிவாரணப் பட்டியலில்  இடம் பெறவில்லை என கூறப்படும் போதும் அவர்கள் அதற்காக மேன்முறையீடு செய்ய முடியும். மேன் முறையீடுகளுக்கான காலம் இன்னும் நிறைவடையவில்லை.

குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்குள், பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஆகியோரை எந்த விதத்திலும் இந்த திட்டத்திலிருந்து நீக்க முடியாது. அதனால், அதற்கான மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கும் காலம் இன்னும் நிறைவடையவில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன். பிரச்சினைகள் உள்ளவர்கள் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

எவ்வாறெனினும்  முன்னொருபோதும் இல்லாத வகையில் இம்முறை பெரும்பாலானவர்களுக்கு இந்த நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. அதற்காக சர்வதேச நாடுகளிலிருந்து கிடைக்கின்ற ஒத்துழைப்புக்களை மேலும் அதிகமாக எமக்கு பெற்றுக் கொள்ளவும் முடியுமாகும் என நாங்கள் நம்புகிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/158425

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா, தோணிக்கல் கிராமத்தில் உதவித் திட்ட முறைகேடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் 

24 JUN, 2023 | 07:33 PM
image
 

 

வவுனியா, தோணிக்கல் கிராம சேவையாளர் பிரிவில் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து கிராம மக்கள் இன்று (24) மதியம் 3 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசாங்கத்தினால் நலன்புரி உதவித் திட்ட கொடுப்பனவுகளை வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில், வவுனியா தோணிக்கல் கிராம சேவையாளர் பிரிவில் விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டுக்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்து பாதிக்கப்பட்ட கிராம மக்கள் தோணிக்கல் ஜயா சன சமூக நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

IMG-20230624-WA0084.jpg

எமது கிராமத்திலுள்ள பாதிக்கப்பட்டவர்களில் 70 சக வீதமானவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படவில்லை. மேலும் வெளிநாடுகளில் இருப்போர், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகளின் பெயர்ப்பட்டியல் வந்துள்ளன. இதை பற்றி  கேட்கச் சென்றால், கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் அசண்டையினமாக பதிலளிப்பதுடன், எமது நியாயமான கோரிக்கைகளையும் செவிமடுப்பதில்லை. 

மேலும், அபிவிருத்தி உத்தியோகத்தர் மரியாதை இன்மையாகவும் கதைக்கின்றார். எமது கிராமத்தில் உண்மையில் கஷ்டப்படுபவர்களுக்கு எவ்வித உதவிகளும் கிடைப்பதில்லை என தெரிவித்து கண்ணீர் மல்கி தமக்கான தீர்வினை பெற்றுத்தருமாறு கூறுகின்றனர்.

IMG-20230624-WA0092.jpg

IMG-20230624-WA0085.jpg

IMG-20230624-WA0081.jpg

IMG-20230624-WA0082.jpg

https://www.virakesari.lk/article/158504

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வறுமை நிலையிலுள்ள 70 இலட்சம் மக்களும் அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும் - சஜித் 

24 JUN, 2023 | 07:09 PM
image
 

(எம்.மனோசித்ரா)

நாட்டில் 70 இலட்சம் மக்கள் வறுமை நிலையில் உள்ளனர். அவர்கள் அனைவரும் அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும். 

எந்த தரவுகளின் அடிப்படையில் வெறுமனே 12 இலட்சம் மக்களை மாத்திரம் இத்திட்டத்தில் உள்வாங்க அரசாங்கம் தீர்மானித்தது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது விசேட அறிக்கையொன்றின் ஊடாக இவ்வாறு கேள்வியை முன்வைத்துள்ள எதிர்க்கட்சி தலைவர், அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நாட்டில் 14 சதவீதமாக இருந்த வறுமை நிலை 31 சதவீதமாக அதிகரித்துள்ளது. மருந்து பற்றாக்குறையால் இலங்கை தற்போது மிக மோசமான சுகாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. 

மருந்துக்கான பற்றாக்குறை, மருந்தின் விலை உயர்வின் ஊடான மோசடி, ஊழல் என எல்லாவற்றையும் கருத்தில் கொள்ளும்போது, ஒட்டுமொத்த அரசாங்கமும் இந்நாட்டின் நோய்வாய்ப்பட்ட மக்களின் வாழ்க்கையுடன் விளையாடிக்கொண்டிருக்கிறது.

நாட்டில் நிலவும் உண்மை நிலைவரத்தை புரிந்துகொள்ள ஒரு வெளிப்படைத் தன்மையான கணிப்பீட்டை நடத்துவதுதான் அரசாங்கம் முதலில் செய்திருக்க வேண்டியதாகும்.

 ஏழ்மையான மக்களுக்கு நிவாரணம் வழங்கவென அரசாங்கம் அஸ்வெசும எனும் கண்மூடித்தனமான நிவாரணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 12 இலட்சம் பேருக்கு 3 ஆண்டுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

நாட்டில் 70 இலட்சம் ஏழ்மையான மக்கள் இருக்கும்போது 12 இலட்சம் பேருக்கு நிவாரணம் வழங்குவதன் நோக்கம் என்னவென அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புகின்றோம். 

எந்த கணக்கெடுப்பின், எந்தத் தரவுகளின் அடிப்படையில் இந்த 12 இலட்சம் பேர் தெரிவு செய்யப்பட்டனர் என்றும் அரசாங்கத்திடம்  கேள்வி எழுப்புகிறோம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதேச்சதிகாரமாக உரங்களை தடைசெய்து, முழு நாட்டையும் பஞ்சத்தில் தள்ளினார். 

அவருக்குப் பின் இடைக்கால ஜனாதிபதியாக வந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முழு நாட்டையும் ஏமாற்றி முழு நாட்டு மக்களையும் மரணப் படுக்கைக்குக் கொண்டு சென்றுகொண்டிருக்கிறது.

கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் நாட்டுக்கு செய்யப்போகும் பாரதூரமான அவலங்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியாகி நாம் முன்னரே நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்தோம். 

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் முன்னைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எந்த விதத்திலும் இரண்டாம் பட்சமில்லை என ஆரம்பத்திலிருந்தே எச்சரித்து வருகின்றோம்.

எவ்வாறாயினும், நாட்டையும் நாட்டு மக்களையும் ஆபத்தில் ஆழ்த்துவது மட்டுமே அரசாங்கத்தின் ஒரே விருப்பமாக அமைந்திருப்பதோடு, அவ்வாறான நோக்கம் இல்லாமல் இருப்பதாக இருந்தால் மக்கள் மீது இவ்வளவு அழுத்தத்தை பிரயோகிக்க அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது.

தற்போது நாட்டுக்கு முக்கியமான சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் கூட ஒரு பொதுவான இலக்குடன் ஒன்றாக இணைந்து நாட்டுக்காக சிந்திக்கப்படுவதை விடுத்து, வெறுமனே தனது குறுகிய இலக்குகளை அடைவதற்காகவே அரசாங்கம் இதை செய்யும் நிலைக்கு வந்துள்ளது. 

இவை அனைத்தும் சந்தர்ப்பவாத அரசாங்கத்தின் குறுகிய நோக்கற்ற தன்னிச்சையான செயல்முறையை தவிர வேறொன்றையும் புலப்படுத்துவதாக இல்லை.

இந்நிலையை மாற்றி மக்கள் சார் சிந்தனைவாயிலாக புதிய மக்கள் ஆணையின் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம். 

இதற்காக அரசாங்கத்துக்கு அனைத்து அழுத்தங்களையும் பிரயோகிப்போம் என்பதையும் வலியுறுத்துகிறோம்.

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் வறுமை நிலையில் உள்ள 70 இலட்சம் மக்களும் உள்வாங்கப்பட வேண்டும். குறுகிய நோக்கங்களை இலக்காகக் கொண்டு அறிவியலற்ற முறையில் முன்வைக்கும் நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்குப் பதிலாக, விஞ்ஞானபூர்வமான திட்டத்தின் மூலம் உண்மையான தேவைகளை அடையாளப்படுத்துபவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். 

நாட்டில் நிலவும் கடுமையான மருந்துப் பற்றாக்குறைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். இதற்குத் தேவையான ஒத்துழைப்பை ஐக்கிய மக்கள் சக்தி வழங்கும் என்பதையும் ஞாபகப்படுத்திக்கொள்கிறோம்.

https://www.virakesari.lk/article/158502

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான மேன்முறையீட்டு காலம் நீடிப்பு - அரசாங்கம்

26 JUN, 2023 | 12:37 PM
image
 


அரசியல் தூண்டுதல்கள் அல்லது வெளி அழுத்தங்களுக்கு அடிபணியாமல் ஜுலை 10 ஆம் திகதி வரையான மேன்முறையீட்டு காலத்திற்குள் பிரதேச செயலாளர்களை தொடர்பு கொள்ளுமாறு அரசாங்கம் பயனாளர்களை அறிவுறுத்தியுள்ளது. அதற்கமைய விரைவில் மேன்முறையீட்டை சமர்ப்பிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார ஸ்தீரத்தன்மை தேவைப்படும் நபர்களுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட அஸ்வெசும திட்டத்துக்கு அரசியல் சாயம் பூசி தமது அரசியல் தேவைகளை நிறைவேற்ற சில தரப்பினரின் முயற்சி மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், தகுதியானவர்களை தெரிவு செய்வதில் குறைபாடுகள் இருப்பின் அது உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் எனவும், இது தொடர்பில் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் சகல தரப்பினருடனும் கலந்துரையாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள், பாதிக்கப்படக்கூடியவர்கள், ஏழைகள் மற்றும் மிகவும் ஏழ்மையானவர்கள் ஆகிய 4 சமூகப் பிரிவுகளின் கீழ், அஸ்வெசும நலன்புரி நன்மைகள் வழங்கப்படுவதுடன், ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு வழமை போன்று உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படும்.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கிய நலன்புரி கொடுப்பனவுகளுக்குத் தகுதியானவர்களைக் கண்டறியும் வேலைத்திட்டத்தின் தரவு சேகரிப்புப் பணியில் 6728 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதில் 3190 அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், 494 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், 205 கிராம உத்தியோகத்தர்களும், 1127 இதர உத்தியோகத்தர்களும், 1712 தற்காலிக ஆட்களும் அடங்குவர்.

பிரதேச அலுவலக மட்டத்தில், மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தேர்வுக் குழுக்கள் தரவுகளைக் கண்காணித்து, மாவட்டச் செயலாளரின் அனுமதியைப் பெற்ற பிறகு, தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

எவ்வாறாயினும், இந்த செயற்பாட்டில் குறைபாடுகள் காணப்படுவதாக சில தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் பயனாளிகளை தெரிவு செய்வதில் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு மேன்முறையீடுகள் மற்றும் முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஜூலை 10 ஆம் திகதி வரையில் நீடிப்பதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஸ் குணவர்தன அறிவித்துள்ளார்.

பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகியோரும் இது தொடர்பில் தேவையான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி, பொருளாதார ஒத்துழைப்பு தேவைப்படும் நபர் அல்லது குடும்பம் இந்த நன்மையை இழந்திருந்தால், இந்தக் காலப்பகுதியில் பிரதேச செயலகங்கள் ஊடாக விசாரித்து அதனை சரிசெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

அஸ்வெசும திட்டத்தின் அடிப்படை நோக்கம் பொருளாதார ஸ்திரத்தன்மை தேவைப்படும் மக்களுக்குத் தேவையான பங்களிப்பை வழங்குவதே தவிர, வெறும் அரசியல் செயற்பாட்டின் அடிப்படையில் பல்வேறு தரப்பினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதல்ல என அரசாங்கம் வலியுறுத்துகிறது.

பல்வேறு பிரசாரங்களாலும் தனிப்பட்ட அழுத்தங்களாலும் குழப்பமடையாமல், தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெறாவிட்டாலோ அல்லது தகுதியில்லாத நபரின் பெயர் அதில் இடம் பெற்றிருந்தாலோ, பிரதேச செயலக அலுவலகங்களின் ஊடாக அது தொடர்பில் ஆராயுமாறும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் எந்த பிரச்சினையையும் பிரதேச செயலாளரின் ஊடாக தீர்த்துக் கொள்ள முடியும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

(எம்.மனோசித்ரா)

https://www.virakesari.lk/article/158603

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அஸ்வெசும தொடர்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது இறுதியான பெயர் பட்டியல் அல்ல - ஷெஹான் சேமசிங்க

Published By: VISHNU

27 JUN, 2023 | 08:42 PM
image
 

 

(எம்.மனோசித்ரா)

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் ஒரு இலட்சத்து 88,794 ஆட்சேபனைகளும் , 3300 எதிர்ப்புக்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. 

இவ்வாறு கிடைக்கப்பெறும் ஆட்சேபனைகள், எதிர்ப்புக்கள் அனைத்தும் ஆராயப்பட்டு பொறுத்தமானவர்களுக்கு மாத்திரமே கொடுப்பனவுகள் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

நீரிழிவு நோயாளர்கள் , முதியோர் மற்றும் அங்கவீனமுற்றோர் தொடர்பான பெயர் பட்டியல் இவ்வார இறுதியிலேயே வெளியிடப்படும். எனவே இந்தக் கொடுப்பனவுகளைப் பெறுவோர் வீண் அச்சமடையத் தேவையில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் திங்கட்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நீரிழிவு நோயாளர்கள், முதியோர் மற்றும் அங்கவீனமுற்றோர் அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை என்ற போலியான செய்திகள் பரப்பப்படுகின்றன. 

ஆனால் அவர்களது பெயர் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. இவ்வார இறுதியில் குறித்த பெயர் பட்டியல் வெளியிடப்படும். எனவே இது குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

தற்போது வெளியிடப்பட்டுள்ள பெயர் பட்டியல் இறுதிப்படுத்தப்பட்டதல்ல. ஆட்சேபனைகள், எதிர்ப்புக்கள் அனைத்தும் ஆராயப்பட்டு அதன் பின்னரே இறுதியான பயனாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். 

இந்த திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ள பயனாளிகள் குறித்த தகவல்கள் வீடுகளை அடிப்படையாகக் கொண்டவையல்ல. மாறாக வீடொன்றில் வசிக்கும் குடும்பங்களை அடிப்படையாகக் கொண்டவையாகும்.

எனவே ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணப்பட்டால் அவர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும். வெளிப்படை தன்மையுடனேயே இந்த தெரிவுகள் இடம்பெறுகின்றன. 

எதிர்வரும் ஆகஸ்டில் அடுத்த வருடத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்படும். இவ்வாறு வருடாந்தம் இந்த தகவல்கள் புதுப்பிக்கப்படும்.

சமூர்த்தி உள்ளிட்ட ஏனைய சகல அரச கொடுப்பனவுகளும் இந்த வேலைத்திட்டத்துக்குள் உள்வாங்கப்படும். இது தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு 1924 என்ற அவசர தொலைபேசி இலக்கம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரையில் ஒரு இலட்சத்து 88,794 ஆட்சேபனைகளும், 3300 எதிர்ப்புக்களும் கிடைத்துள்ளன.

20 இலட்சம் பேருக்கு இந்த கொடுப்பனவுகளை வழங்குவதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்பட்டது. எனினும் 37 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்ற நிலையில், அவற்றை மதிப்பாய்வு செய்த பின்னர் 33 இலட்சம் பேர் தற்போது பெயர் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளனர். எனினும் இது இறுதியான எண்ணிக்கை அல்ல என்றார்.

https://www.virakesari.lk/article/158715

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளிகளின் நலப் பயனாளிகள் பட்டியல் வெளியிடப்பட்டது

மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளிகளின் அடிப்படையில் நலன்புரிப் பலன்களுக்குத் தகுதியான நபர்களின் பட்டியல் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதாக நலன்புரிப் நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் உள்ள சில பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவையாளர் அலுவலகங்களில் இது தொடர்பான பட்டியல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.

இன்று முதல் அனைத்து செயலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் பட்டியல்கள் பகிரங்கப்படுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியல்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் சிறுநீரகங்களுக்கான வழக்கமான கொடுப்பனவுகள், எந்த திருத்தங்களும் இல்லாமல், ‘அஸ்வெசுமா’ நலத்திட்ட உதவித் திட்டத்திற்குத் தகுதியானவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/261462

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் புதிய தகவல் !

இலங்கையின் திட்டமிடல்களை இம்மாதத்திற்குள் சமர்ப்பிப்பதே அரசாங்கத்தின்  இலக்கு - செஹான் சேமசிங்க - News View

 

சிறுநீரக நோயாளர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் முதியோர்களுக்கான கொடுப்பனவுகளை நடைமுறையில் உள்ள முறைமையின்கீழ் தொடர்ச்சியாக வழங்க ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

புதிய அடிப்படை விதிகள் அறிமுகப்படுத்தப்படும் வரையில் இந்த முறைமை நடைமுறையில் இருக்கும் என
நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், நிலைமாறக்கூடிய, பாதிப்புக்குள்ளான, வறிய மற்றும் மிகவும் வறிய முதலான நான்கு சமூகக் குழு வகைப்படுத்தல்களின் கீழ் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை வழங்கும் முறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் மேன்முறையீடுகளை மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரையில், 7 இலட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமான மேன்முறையீடுகளும், சுமார் 10 ஆயிரம் ஆட்சேபனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://thinakkural.lk/article/261887

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அஸ்வெசும கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு வலியுறுத்தியே ஆட்சேபனைகள் - பந்துல

12 JUL, 2023 | 10:01 AM
image
 

(எம்.மனோசித்ரா)

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் ஆட்சேபனைகளை சமர்ப்பித்துள்ள 968 000 நபர்களில், 6 இலட்சம் பேர் தகுதியுடையோர் பெயர் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளவர்களாவர்.

இவர்கள் தமக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு வலியுறுத்தியே ஆட்சேபனைகளை சமர்ப்பித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அமைச்சரவைக்கு தெளிவபடுத்தியதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் ஆட்சேபனைக்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ள போதிலும் , தாம் கொடுப்பனவுகளைப் பெற தகுதியானவர்கள் என எண்ணுபவர்கள் ஜனாதிபதி செயலகம் , பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட அதிபர் அலுவலகத்துக்கு எழுத்து மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை (11)  இடம்பெற்ற பொது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

அஸ்வெசும தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து அமைச்சரவையில் விரிவாக அவதானம் செலுத்தப்பட்டது. எவ்வாறான பிரச்சினைகள் காணப்பட்டாலும் அங்கவீனமுற்றோருக்கு , நீரிழிவு நோயாளர்களில் இதுவரை கொடுப்பனவு வழங்கப்பட்டவர்களுக்கு மாத்திரமின்றி , காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கும் உரிய கொடுப்பனவுகளை வழங்குமாறு ஜனாதிபதி இதன் போது ஆலோசனை வழங்கினார்.

இதற்கு மேலதிகமாக ஆட்சேபனைக்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் நிறைவடைந்தாலும் , எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நலன்புரி கொடுப்பனவுகளை இழந்துள்ளவர்களுக்கு ஜனாதிபதி செயலகத்துக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்க முடியும். அதே போன்று மாவட்ட அதிபர்கள் , பிரதேச செயலாளர்களிடமும் நலன்புரி திட்டத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க முக்கிய விடயங்களை அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தினார். அதற்கமைய இதுவரை அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் 968,000 ஆட்சேபனைகளும் , 17,500 எதிர்ப்புக்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இவை சகல பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட அதிபர்கள் உள்ளிட்டோரடங்கிய குழுக்களால் மீளாய்வு செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

எனினும் கிடைக்கப் பெற்றுள்ள 968 000 ஆட்சேபனைகளில் சுமார் 6 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஏற்கனவே பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளவர்களாவர். இவர்கள் தமக்கான நலன்புரி கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரி ஆட்சேபனைகளை சமர்ப்பித்துள்ளனர். மாறாக இவர்கள் நலன்புரி கொடுப்பனவுகளை இழந்து ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கவில்லை.

எனவே 968,000 பேருக்கு சமூர்த்தி கிடைக்கவில்லை என அரசியல் பிரசாரங்களை முன்னெடுப்பது பொறுத்தமானதல்ல. இவர்களில் 6 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொடுப்பனவுகளைப் பெற தகுதியானவர்கள் என்பதோடு , சுமார் 3 பேர் தகுதியற்றவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வேளை பொறுத்தமற்றவர்கள் இந்த திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து 17,500 எதிர்ப்புக்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதமளவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று நாம் நம்புகின்றோம் என்றார்.

இதேவேளை அஸ்வெசும வேலைத்திட்டத்தின் கீழ் நலன்புரி நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பித்துள்ள முதியோர், சிறுநீரக நோயாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவுகளைப் பெறுபவர்கள் மிகவும் பொருத்தமான குறிகாட்டிகள் மற்றும் வழிகாட்டிகளைப் பயன்படுத்தி தீர்மானிக்கும் வரைக்கும், இதுவரைக்கும் நன்மைகளைப் பெற்றுவந்த குறித்த 03 சமூகக் குழுக்களுக்கும் தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள நலன்புரி நன்மைக் கொடுப்பனவுகளை செலுத்துவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://www.virakesari.lk/article/159787

  • கருத்துக்கள உறவுகள்

படிவம் நிரப்பும் போது ஏற்பட்ட பிழை கனபேருக்கு தகுதி இருந்தும் கிடைக்கவில்லை தற்போது அந்த படிவங்கள் மீள் பதிவு செய்யப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகிறது நிரப்ப வந்த உத்தியோகத்தர்கள் ரூபாய் 3500 ரூபாய்க்கு 35 ஆயிரம் ரூபா போட்டதால் வந்த வினையை அதிகம்.

படிச்ச மேதைகள் படிவம் நிரம்பியவர்கள் 

மாத வருமான தொகைக்கு பெட்டிகள் இட்டிருப்பார்கள் போல சைபர்களை அதிகம் இட்டதால் பலர் உள்வாங்கப்படவில்லை 

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூன்று வருடங்களுக்குள் அஸ்வெசும கொடுப்பனவை நிறுத்த தீர்மானம்

%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE.jpg

மூன்று வருடங்களுக்குள் அஸ்வெசும கொடுப்பனவை நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார்.

குறித்த திட்டத்தில் பயனடையும் நபர்களை வலுப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, சமுர்த்தி பிளஸ் (SAMURDHI PLUS) வேலைத்திட்டத்தின் கீழ் அவர்களை பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக பதில் அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/272969

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அஸ்வெசும நலன்புரித் திட்டம் ; இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பம் அடுத்த மாதம் கோரப்படும் - நிதி இராஜாங்க அமைச்சர்

10 DEC, 2023 | 11:06 PM
image
 

(இராஜதுரை ஹஷான்)

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் முதலாம் கட்டத்தை முழுமையாக மீளாய்வு செய்யவும், இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை  அடுத்த மாதம் கோருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ள முதல் கட்டம் தொடர்பில் முழுமையான மீளாய்வு  மேற்கொள்ள  அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

முதலாவது கட்டத்தில் காணப்படும் சிக்கல்களுக்கு தீர்வு கண்டு இரண்டாம் கட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய  இரண்டாம் கட்டத்துக்காக அடுத்த மாதம் விண்ணப்பம் கோர எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

14 இலட்சத்து 6932  பயனாளர்களுக்கான ஒக்டோபர் மாத தவணை கொடுப்பனவு வங்கி கணக்குகளுக்கு வைப்பிடும் பணிகள் நிறைவுப்பெற்றுள்ளன. கடந்த செப்டெம்பர் தவணை கொடுப்பனவை பெற்றுக்கொண்ட 13 இலட்சத்து 77,000  பயனாளர்களை காட்டிலும்  ஒக்டோபர் மாதம் 29,932 பயனாளர்கள் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

நலன்புரி கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் பயனாளர்களின் எண்ணிக்கையை 20 இலட்சமாக வரையறை செய்ய அரசாங்கம் உத்தேசித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு நலன்புரி கொடுப்பனவுகளுக்காக மாத்திரம் 205 பில்லியன் ரூபா வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/171389

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அஸ்வெசும : விண்ணப்பிக்க உள்ளவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

aswasuma.jpg

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களில் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

ஒரே நபர் பல விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

முதற்கட்டத்தின் கீழ் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்வெசும இரண்டாம் கட்ட நிவாரணத்துக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என நலன்புரிப் நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/292261

  • கருத்துக்கள உறவுகள்
On 22/4/2023 at 18:52, ஏராளன் said:

அஷ்வசும

நான் பிழையாக வாசித்து விட்டேன் அஸ்வமேத யாகம் என்று....

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜூன் மாதம் முதல் அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கையை 24 இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை -  நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க

Published By: VISHNU   28 FEB, 2024 | 08:00 PM

image

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பித்த பயனாளிகளின் தரவு சரிபார்ப்பு மற்றும் சான்றுபடுத்தல் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அஸ்வெசும பயனாளிகளின் குடும்ப அலகுகளின் எண்ணிக்கையை ஜூன் மாதம் முதல் 24 இலட்சமாக அதிகரிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.  

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரல் 2024 மார்ச் 15 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்காதவர்கள் எவரும் அஸ்வெசும பலனைப் பெறத் தகுதி பெற மாட்டார்கள் எனவும் இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் புதன்கிழமை (28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நிதி இராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

பொய்யான தகவல்களின் மூலம் அஸ்வெசும நன்மைகளைப் பெற்ற சுமார் 7000 பேர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர்,

அஸ்வெசும முதல் கட்ட கணக்கெடுப்பில், 34 இலட்சம் குடும்ப அலகுகளின் தகவல்கள் சரிபார்க்கப்பட்டன. இதன்படி 19 இலட்சம் குடும்பங்கள் பயன்பெற தகுதி பெற்றுள்ளன. இதுவரை பெறப்பட்ட மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளின் அடிப்படையில், ஜூலை 2024 முதல் தகுதியானவர்களுக்குப் பணம் செலுத்த நலன்புரி நன்மைகள் சபை  தயாராக உள்ளது.

எங்களுக்கு 12,27,000 முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் கிடைத்துள்ளன. அவர்களில் சுமார் 11,97,000 பேர் தொடர்பில் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகைக்கு மேலதிகமாக, அஸ்வெசும உதவிகள் உண்மையிலேயே தகுதியான ஒரு குழுவினருக்கு கிடைக்கவில்லை. முதல்கட்ட விண்ணப்பத்தில் அவர்களுக்கு  விண்ணப்பப் படிவங்களை வழங்காததால், அவர்களுக்கு அஸ்வெசும பலன் கிடைக்கவில்லை.

அதன்படி,  ஒன்லைன் ஊடாக மேற்கொண்ட பரந்த விழிப்புணர்வுக்குப் பிறகு 200,000 - 250,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளோம். இவ்வாறாக பிரதேச செயலகங்களுக்கு நேரடியாக வழங்கப்படும் விண்ணப்பப் படிவங்கள் தற்போது  எமது மென்பொருளில் உள்வாங்கப்படுகின்றது. அதன்படி, இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரல் 2024 மார்ச் 15ஆம் திகதியுடன் நிறைவடையும். விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிக்காத எவரும் அஸ்வெசும பலன்களைப் பெற தகுதி பெறமாட்டார்கள் என்பதை வலியுறுத்த வேண்டும்.

மேலும், புதிய விண்ணப்பதாரர்களின் தரவு சரிபார்ப்பு மற்றும் சான்றுப்படுத்தல் என்பன நிறைவடைந்த பிறகு, 2024 ஜூன் முதல் 24 இலட்சம் குடும்ப அலகுகளுக்கு அஸ்வெசும பலன்கள் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான அஸ்வெசும தொகைக்காக 205 பில்லியன் ரூபாவை செலவிட எதிர்பார்க்கிறோம். அதனுடைய ஒதுக்கீடுகள் தற்போது முடிவடைந்துள்ளது.

மேலும், இதுவரை கிடைத்த மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளையடுத்து சுமார் 7,000 பேர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தவறான தகவல்களை அளித்து  நன்மைகளை அடைந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.   அவ்வாறான நபர்கள் பற்றிய தகவல்களை பெற்றுக் கொண்டுள்ளோம். அவர்களிடமிருந்து பணத்தை மீளப்பெறவும்  அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகிறோம் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/177547

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.