Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்டிசம் குழந்தைகளைப் பாடகர்களாக்கி மேடை ஏற்றும் பிரபா குருமூர்த்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டிசம் குழந்தைகளைப் பாடகர்களாக்கி மேடை ஏற்றும் பிரபா குருமூர்த்தி

 
IMG-20230203-WA0001.jpg
 

 

சாதாரணமா தனக்குக் கிடைச்ச மேடையைப் பாடகர், பாடகியர் யாரும் அடுத்தவங்களுக்குக் கொடுக்க மாட்டாங்க ஆனா. இவங்க வித்யாசமானவங்க அவங்க தன்கிட்ட பாட்டுக் கத்துக்க வந்த ஆட்டிசம் குழந்தைகளையும் தான் பாடும் மேடையில் ஏற்றி ஒளிரச் செய்கிறார். இம்மாதிரியான தொண்டைச் செய்து வருபவர் பிரபலபாடகர் டி.ஆர்.மகாலிங்கம் அவர்களின் மகள் வயிற்று பேத்தி டாக்டர்பிரபா குருமூர்த்தி,

SCAN__0038.jpg
 

 

 

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் டாக்டர்பிரபா குருமூர்த்திவங்கியல்லாத நிதி நிறுவனம்வங்கிகல்வித் துறையில் கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக பல்வேறு பணியாற்றி பல அனுபவங்கள் உள்ளனஅவர் கடந்த பத்து வருடங்களாக ஐஜிடிசியில் பணியாற்றுகிறார்பல ஆண்டுகளாகவாய்ஸ்-ஓவர் உலகத்துடன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்புகழ்பெற்ற பாடகர் டி.ஆர்.மகாலிங்கம் அவர்களின் மகள் வயிற்று பேத்தி இவர்சிறந்த பாடகர்இப்படி பன்முகத்திறமை வாய்ந்தவர்லேடீஸ் ஸ்பெஷலுக்குப் பேட்டி கேட்டதும் அவர் நம்முடன் பகிர்ந்தது...

லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிக்கையின் கிரிஜா மேடம் நான் ரொம்பவும் அப்ரிஷியேட் செய்யும் பர்சனாலிட்டி. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து பத்திரிகை நடத்திக்கிட்டு வரும் சாதனையாளர். பெண்களின் தன்னம்பிக்கையின் தூண்டுகோல். இதற்காக அவங்களுக்கு வாழ்த்துக்கள். அவங்களோட பத்திரிக்கையில் எனது பேட்டி வெளிவருவது மகிழ்ச்சியா இருக்கு.

நான்பிறந்தது மதுரைமதுரை சோழவந்தான் அரசு மேல்நிலைப்பள்ளியில்தான் பள்ளிப்படிப்புசென்னை ராணி மேரி கல்லூரியில் பி. (ஆங்கில இலக்கியம்முடித்தேன்பிறகு டிப்ளமோ இன் பிஸினஸ் அட்மினிஸ்டிரேஷன் படித்தேன்இப்போது எம்.எஸ்.சிசைக்காலஜி பயின்று வருகிறேன்.

அப்பா வி.வெங்கடாசலம் & எல்..சியிலிருந்து ஓய்வு பெற்றவர்அம்மா & விஜயலட்சுமிஅக்காள்கள் கிரேஸி மீனாட்சிமாலினிதங்கை சுதா   ரகுராமன்எனது 18 வயது வரை தாத்தா வீடான சோழவந்தானில் மாமா வீட்டில்தான் இருந்தேன்பின்னர் கல்லூரி படிப்பிற்காக சென்னை  வந்தோம்.

எனது குடும்பத்தினர் அனைவருமே எனக்கு முழு ஆதரவோடு இருக்கின்றனர்ஆரம்ப காலங்களில் எனது குடும்பத்தினருக்கு நான் செய்யும்  அலுவலக வேலை தவிர பிறவற்றில் என்னை ஈடுபடுத்திக் கொள்வதில் விருப்பமில்லைஇப்போது அந்த நிலை மாறி வருகிறது.

எனது 4 வயது முதலாகவே பாட்டு கற்றுக் கொண்டு பாட ஆரம்பித்தேன்எனது குரு எனது சித்தி (டி.ஆர்.மகாலிங்கத்தின் இளைய மகள்சாவித்திஇவர்தான் என்னுடைய இன்ஸ்பிரேஷனும் கூடஎனது கணவர் குருமூர்த்திமணிகண்டன்விக்னேஷ்வர் என்ற இரண்டு மகன்கள்  உள்ளனர்.

மொத்தம் 30 வருடங்கள் பூர்த்தி ஆகிவிட்டதுவங்கியில்லாத நிதிநிறுவனம்வங்கிகல்வித் துறையில் கடந்த 13 ஆண்டுகள் பணிபுரிந்த  அனுபவம்மீண்டும் தற்போது பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் டிஜிஎம்மாக பணியாற்றுகிறேன்.

அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சியில் பின்குரல் ஆர்டிஸ்ட்டாக பணிபுரிந்துள்ளேன்தமிழ்நாடு பிலிம் டிவிஷன்ரூரல் டெவலப்மெண்ட்ஹெல்த் டிபார்ட்மெண்ட்சோசிஷயல் வெல்பர் டிபார்ட்மெண்ட் டிடிடீசி போன்றவற்றின் டாக்குமெண்டரிக்காக டப்பிங் செய்திருக்கிறேன்.தமிழ்நாடு அரசு நிகழ்ச்சி உள்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறேன்தனியார் பத்திரிக்கை ஒன்றில் தமிழ மற்றும் ஆங்கில மொழிப்பெயர்ப்பாளராகவும் இருந்திருக்கிறேன்.

தமிழகத்திலுள்ள பல்வேறு பிரபல கோவில்களில் பக்தி இன்னிசை கச்சேரி செய்து வருகிறேன்எனது அத்தை பையனான  டி.ஆர்.மகாலிங்கத்தின் மகன் வயிற்றுப் பேரன் டாக்டர் ராஜேஷூடன் இணைந்து தாத்தாவின் பெயரில் டி.ஆர்.எம்.எஸ்சென்னை கிளாஸிக்  ஆர்கெஸ்டிரா  என்ற பெயரில் மியூசிக் டுரூப் வைத்துள்ளேன்கல்வித்துறையில் வேலை செய்தபோது கிடைத்த அனுபவத்தின் மூலம் நிறைய கவுன்சிலிங் செய்து வருகிறேன்

மூன்றரை வயது முதல் 73 வயது வரை உள்ளவர்களுக்கு பஜன்ஸ்பக்திப்பாடல்கள்ஸ்லோகங்கள் பயிற்றுவிக்கிறேன்தமிழ்மொழியின் பால் உள்ள அலாதியான பற்று காரணமாகதமிழ்மொழிப் பயிற்சி சொல்லிக் கொடுக்கிறேன்

SCAN__0039.jpg
 

 

டி.ஆர்.மகாலிங்கம்சி.எஸ்.ஜெயராமன் போன்றவர்கள் பாடிய பாடல்களை ஆண் குரலில் எங்களது இசை நிகழ்ச்சிகளில் பாடுவேன்மற்றவர்களிடமிருந்து தனித்து தெறிய வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சிபள்ளிப் பருவத்திலேயே பாட்டுப்போட்டிகட்டுரைப்போட்டிகோலப்போட்டிபேச்சுப்போட்டி முதலியவற்றில் முதல் பரிசு பெற்றுள்ளேன்ஓட்டப்பந்தயம்கைப்பந்து முதலியவற்றில் நிறைய பரிசுகள்  பெற்றுள்ளேன்கைப்பந்து விளையாட்டில் மூன்று முறை பல்கலைக்கழத்திற்கும் மூன்று முறை தமிழ்நாடு அணிக்கும் விளையாடியுள்ளேன்.

பெஸ்ட் வாய்ஸ் ஓவர் ஆரட்டிஸ்ட்டுக்காக சிவாஜி விருதினையும்சிறந்த மகளிர் விருதுசிறந்த பாடகி விருதுவாழ்நாள் சாதனையாளர்  விருதுவின் விருதுசமூக நலனில் ஹானரி டாக்டரேட் விருதும் பெற்றுள்ளேன்பல்வேறு கல்விகல்லூரி போட்டிகளுக்கு விருந்தினராக  சென்றுள்ளேன்நிறைய சாப்ட் ஸ்கில் பயிற்சிக்கான நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறேன்இரண்டு விளம்பர படங்களில் நடித்திருக்கிறேன்விளம்பர படங்கள்குழந்தைகளுக்கான கார்டூன் படங்களுக்கும் பின்னணி குரல் கொடுத்திருக்கிறேன்

எனது நண்பர் சூரியநாராயணன் மற்றும் அவரது மனைவி லலிதா நாராயணனுடன் இணைந்து ஏஎல்4எஸ் சாரிடபுள் டிரஸ்டில் பிஆர்ஓவாக  இருக்கிறேன்தன்னலமின்றி அவர்கள் செய்யும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு அவர்களுடன் இணைந்து பணியாற்றி அதன் பயனாகவே சமூக சேவைக்கான டாக்டர் விருதினை பெற்றேன்.

எனது தாத்தா டி.ஆர்.மகாலிங்கம் இருந்தவரை நாங்கள் யாரும் அவருக்கு நாங்கள் இந்த மீடியா துறையில் வருவதற்கு விரும்பவில்லைதற்போது எனது தாத்தாவின் பெயர் அடுத்த தலைமுறையினரை சென்றடைய வேண்டும் என்பதற்காகவே நான் இத்துறையில் என்னை  ஈடுபடுத்திக் கொண்டேன். 2023ம் ஆண்டு எனது தாத்தாவின் நூற்றாண்டு வருகிறதுஅதற்கான ஒரு பெரிய விழாவினை எடுக்க நானும்டாக்டர்ராஜேஷ் மகாலிங்கமும் முடிவு செய்துள்ளோம்.

தாத்தாவுக்கு அம்மாவை ரொம்ப பிடிக்கும்குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.  எப்போதுமே வீட்டில் நிறைய பேர் இருக்கணும்குழந்தைகள் எல்லாரும் இருக்க வேண்டும் என்று விரும்புவார்அதிக நேரம் வெளியிடத்திற்கு பாட்டுப் பாட போய்விடுவார்போய் வந்ததும் பேரன்பேத்திகளுடன் தான் அதிக நேரத்தை செலவிடுவார்மிகவும் எளிமையானவர்தன்னை பற்றி பெருமிதத்தை வெளியிடத்தில் காட்டிக் கொள்ளாதவர்எனக்கு 8 வயது இருக்கும் போது அவர் இறந்தார்ஒரு சில விஷயங்கள் பசுமையாக இருக்கிறதுமுதலில் குழந்தைகளுக்கு எல்லாம் செய்த பிறகுதான் பெரியவர்களுக்கு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்எப்போதும் பாடிக்கொண்டே இருப்பார்

நிறைய படங்களில் நடிக்கும் போதும்பாடும் போதும் அவர் சொல்லும் வார்த்தை “என் பொழப்பு நம் குடும்பத்தில் யாரும் வரக்கூடாது” என்பார்சித்தி கச்சேரிகள் பண்ணும்போது கூட போய் பாடியிருக்கிறேன்ஒரு காலத்திற்கு அப்புறம்தான் யாரெல்லமோ நம் தாத்தா பேரை சொல்லி பாடுகிறார்கள்நம் குடும்பத்தில் யாருமே தாத்தாவின் பெயரை சொல்வதற்கில்லையே என்று நினைக்க ஆரம்பித்தேன்.

அதன் பிறகு தாத்தாவின் பெயரை சேர்த்துதான் என்னை நான் அடையாளப்படுத்திக் கொள்கிறேன்கலைத்துறையில் கவியரசர் கண்ணதாசன்சீர்காழி கோவிந்தராஜன்சுசீலாம்மாதாத்தாவுடன் நடித்த நடிகைகள்நடிகர்கள் என அனைவருடைய குடும்பத்துடனும் உறவுடனும் நட்புடனும் இருக்கிறோம்” என்கிறார் டாக்டர்பிரபா குரூமூர்த்தி.

இதில்மிகச்சிறப்புஎன்னவெனில்இவர் கடந்த நான்கு மாதங்களாக அறிவுத்திறன் குறைபாடு அதாவது ஆட்டிஸம் குழந்தைகளுக்கு " சூர்யா SchoolofMusic"  என்ற இசை பள்ளியை நடத்தி வருகிறார்இதில் அந்த குழந்தைகளுக்கு பாடல்களை பயிற்று விற்பது மட்டுமல்லாது அவர்களுக்குப் பல மேடைகளையும் அமைத்து கொடுக்கிறார்.

இதில் சில குழந்தைகள் எங்களை எல்லாம் ஸ்டேஜில் ஏற்ற மாட்டீர்களா என்று ஆவலுடன் கேட்டார்களாம். அது இவர் மனதில்  சுழன்று கொண்டேயிருந்தது. மேலும் இவரது இரண்டாவது மகனும் ஆட்டிசம் குறைபாடு உடைய குழந்தை என்பதால் இவர் அக்குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றத் தன்னுடைய மேடையிலேயே பங்களித்துப் பாட வைப்பது சிறப்பு.

  தற்போது ஒரு 15 குழந்தைகள் இருக்கிறார்கள்விரைவில் ஒரு 50 முதல் 75 குழந்தைகள் கொண்டு ஒரு 'Worldrecordshow  செய்ய வேண்டும் என்பது இவரது எண்ணம்.

இந்த musicschool ஆரம்பித்த பிறகு தான் இவருக்கு ஆட்டிஸம் குழந்தைகளுக்கு பாடல்களை பாடுவது மட்டுமல்ல சிலர் musicalinstruments வாசிப்பார்கள் என்பது தெரிய வந்ததுதனக்கு இசை வாத்தியங்கள் வாசிக்க மற்றும் பயிற்றுவிக்க தெரியாது என்பதால் , இந்த corona விற்கு பிறகு வாழ்வாதாரதிற்கே கஷ்ட படும் கலைஞர்களுக்கு ஒரு வருமானத்தையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்பது இவரது எண்ணம்.

அது மட்டும் இன்றி தற்போது "SmuletoStage' என்ற புதிய concept மூலம் Smule பாடகர்களை தனது இசை குழு மூலம் மேடை இசை பாடகர்களாக மற்ற முயற்சி எடுத்திருக்கிறார்அவர்களுக்கும் liveorchestra வில் பாட வாய்ப்பு அளிக்கிறார்இங்கு திறமை இருக்கிறதோ அதை அங்கீகரிக்க வேண்டும் என்பது இவரது கொள்கையாக வைத்திருக்கிறார்.

அடுத்த ஆண்டு தனது தாத்தா TRMahalingam அவர்களின் நூற்றாண்டு வருவதால் தன்னால் முடிந்த அளவு இந்த இசை துறைக்கு சேவை செய்ய வேண்டும் என்பது இவரது அவாஅந்த இசை பரம்பரையில் பிறந்தது இருப்பதால் அத்துறைக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்பது இவரது  எண்ணம். எவ்வளவு பணிகள், அத்தோடு ஆட்டிசம் குழந்தைகள் மேலும் இவ்வளவு பேரன்பு கொண்ட ப்ரபா குருமூர்த்தியின் சேவை சிந்தனையைக் கேட்டதும் உண்மையிலே இவர் ஒரு பளிச் பெண் எனத் தோன்றியது.

http://honeylaksh.blogspot.com/2023/03/blog-post_24.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.