Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர் பண்பாட்டைக் காப்பாற்றும் பணிக்கு யாழ்ப்பாணத்தார் கொடுக்கும் விலை அதிகம்-தினமணி ஆசிரியர் தலையங்கம்

Featured Replies

அம்பலப்படுத்துகிற தமிழக 'தினமணி"

தமிழர்களுக்குரிய பாராம்பரிய பண்பாட்டைக் காப்பாற்றுவதற்காக ஈழத்தின் புகழ்பெற்ற கலாசார நகரம் என வர்ணிக்கப்படும் யாழ். குடாநாடு கொடுக்கும் விலை அதிகமானது.

இவ்வாறு தனது ஆசிரியர் தலையங்கத்தில் உணர்வுபூர்வமாக குறிப்பட்டிருக்கின்றது தமிழகத்தின் பிரபல நாளேடான தினமணி

யாழில் தொடர்ச்சியாக இடம் பெற்றுவரும் கொலைக் கலாச்சாரம், இலங்கை அரசினால் திமிட்டமிடப்பட்ட நடவடிக்கைகளில் ஈழத்தமிழர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் என்பவற்றைக் கோடிட்டுக் காட்டும் தினமணி தனது நேற்றைய ஆசிரியர் தலையங்கத்தை வரைந்துள்ளது. அதன் முழு விவரமும் அந்த எழுத்து நடையிலேயே வருகின்றது.

தமிழ்ப் பண்பாட்டில் ஊறிய தமிழ்ப் பெண்களை தமிழ்நாடு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லையேனில் யாழ். போய் தேட வேண்டியதுதான். இந்தக் கருத்தமைந்த வசனம் அண்மையில் வெளிவந்த ஒரு திரைப்படத்தில் வருகிறது.

யாழ்ப்பாணம் மையமானால் உயர்வுகளும் கற்பனைகளும் அதீத உருவகமாகின்றன. வேறொரு திரைப்படச் சுவரோட்டி விளம்பரம் ஒன்றில் யாழ்ப்பாணத்திலிருந்து 36 மைல் இராமேஸ்வரம் என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன. தமிழும் தமிழ்ப்பண்பாடும் யாழ்பாணத்தில் நிறைந்துள்ளது என்ற கருத்து தமிழ் நாட்டில் பரவி வருவதையே இது காட்டுகிறது.

ஆயிரம் சதுர கிலோமீற்றர் பரப்பளவுள்ள யாழ்பாணம் பகுதியிலும் அதைச் சார்ந்த 9 தீவுகளிலும் வாழும் 5 இலட்சம் தமிழர்கள், தமிழ் மொழியைப் பேசுவதற்கும் தமிழ்ப்பண்பாட்டைப் காப்பதற்கும் கொடுக்கும் விலைதான் அளப்பறியது. நாள் தோறும் ஆறு அல்லது ஏழு தமிழர்களைச் சிங்களப்படையினர் சுட்டுக் கொல்கின்றனர். சிங்களப் படையின் எடுபிடித் தமிழரின் வெள்ளை வண்டிக் கடத்தலுக்கு அஞ்சி, குடும்பம் குடும்பமாக மனித உரிமை ஆணைய வளாகத்திற்குச் சென்று அடைக்கலமாவோரைச் சிங்களக் காவலர்கள், நீதிமன்றத்தில் நிறுத்த, யாழ்பாணச் சிறைச்சாலை அவர்களின் புகலிடமாகின்றது.

அவர்களைச் சிறையிலடைக்காதீர், சிறப்பு முகாம் அமைத்து பாதுகாப்பு கொடுங்கள் என உச்ச நீதிமன்றத்தின் சிங்கள நீதிபதி சரத் என்.சில்வா ஆணையிட்டும், யாழ்பாணக் காவல்துறை பாராமுகமாக இருப்பதால், தமிழர் பலர் சிறைச்சாலைகளில் வாடுகின்றனர். தமிழ்ப் பண்பாட்டுக் கூர்மையே யாழ்பாணத் தமிழருக்கு எமனாகி வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 10 இலட்சம் தமிழர்கள் நிறைந்த யாழ்பாணத்தில் இன்று 5 இலட்சம் தமிழர்களே எஞ்சியுள்ளனர், அவர்களுள் பலர் யாழ். தொகுதியை விட்டு வெளியேறுகின்றனர். பருத்தித்துறையிலிருந்து திருகோணமலைக்கு இரு நாள்களுக்கு ஒரு முறை சென்று வரும் பயணிகள் கப்பலில் 450 தமிழர் வெளியேற 200 தமிழர் மட்டுமே உள்வருகின்றனர். வருபவருள் பலர் தத்தம் ஊர்களில் உள்ள மரபுரிமை வீடுகளில் வாழமுடியாத நிலையில் உள்ளனர்.

யாழ்பாணத்தில் ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் 350 சதுர கிலோ மீற்றர் பரப்பளவு நிலங்கள் சிங்கப் படையின் நேரடிக் கட்டுப்பட்டில் உள்ளன. காங்கேசன்துறையை ஒட்டிய வலிகாமத்துக்கு வடக்கில் 250 சதுர கிலோ மீற்றர் நிலங்கள், செம்மணிக்கு கிழக்கே அரியாலை, சாவகச்சேரிக்குத் தெற்கே மறவன்புலவு தொடக்கம் கேரதீவு வரையும் கச்சசாய் தொக்கதத்துக்குக் கிழக்கே நாகர்கோயில் வரை 75 ச.கி.மீற்றர் நிலங்கள், தீவுப்பகுதியை ஒட்டிய அராலி வெளியில் 25 ச.கி.மீற்றர் நிலங்கள், யாழ். நகரின் மருத்துவமனைக்கு தெற்கே பெரும்பகுதியாவும் மக்கள் நெருங்கி வாழ்ந்த நிலங்கள், கடந்த பல ஆண்டுகளாக அவை மக்கள் எவரும் செல்ல முடியத படைத்தளங்கள் ஆகிவிட்டன. மறவன்புலவு வயல்வெளியில் டாங்கிகளின் படைப்பயிற்சி எழும்ப்பும் தூசிமண்டலம் காலை இளவெயிலை மறைக்கும். அராலி வெளியில் சிங்களப் படையின் துப்பாக்கி சுடும் பயிற்சி ஒலி தொடர்ந்து ஒலிக்கும்.

5 இலட்டசம் தமிழருக்குப் பாதுகப்பாக 45 ஆயிரம் சிங்களப் படையினர். சராசரியாப் பத்துத் தமிழருக்கு ஒருவராகத் துப்பாக்கி ஏந்தி கொல்லும நோக்குடைய சிங்களப்படை வீரர். கட்டுவனிலிருந்து முகமாலை செல்லும் சாலை, மல்லாகத்திலிருந்து யாழ். நகர் செல்லும் சாலை, காரைதீவிலிருந்து வட்டுக்கோட்டை வழியாக யாழ். நகர் செல்லும் சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் நூறு மீற்றர் இடை வெளியில் பார்க்குமிடமெங்கும் சிங்கப்படை வீரர்கள். இதைக் கண்ணுற்றும் தமிழர்கள் அச்சத்தில் உறைகின்றனர். யாழ்பாணத்தை இலங்கையின் பெரு நிலத்துடன் இணைக்கும் ஆனையிறவுக்கும் பரந்தனுக்கும் இடையேயுள்ள ஒரேயொரு நில இடுக்கையும் அடைத்து விட்டால் தமிழ்ப் பண்பாட்டுக்கு மூச்சித் திணறல் வரும் எனத் தெரிந்தே 'ஏ9" நெடுஞ்சாலையைச் சிங்கள அரசு திட்டமிட்டு அடைத்தது. இதனால் யாழ். பகுதி பெரிதும் பாதிப்படைந்துள்ளது

வவுனியாவிலும் பிற இடங்களிலும் ஒரு கிலே அரிசி 50 ரூபா. யாழ்பாணத்தில் 110 ரூபா. வெளியில் சீமெந்து 500 ரூபா யாழிலில் 2000 ரூபா. வெளியே தேங்காய் 40 ரூபா யாழ்ப்பாணத்தில் 150 ரூபா. ஒரு வேளை கஞ்சி குடித்தால் போதும் என வாடுவோர் யாழ்பாண மக்களுள் 70 சத விகிதம் பேர். அவர்களும் தொழிலுக்குப் போக வாய்ப்பில்லை, பணப்புழக்கமில்லை, வங்கிகளில் பணமெடுக்க நீண்டவரிசை, அதில் முதலிடத்திலுள்ள சிலருக்கே பணம் கிடைக்கும் வாய்ப்பு. பதுக்கல் வணிகத்தையும் அங்கு அரசே ஊக்குவிக்கின்றது.

இலங்கையின் ரூபாய் மதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால், மக்களின் வாங்கும் திரண் குறைந்தள்ளது. யாழப்பாணத்தில் அரசின் அடையாள அட்டையும் கட்டாயம். படையினர் வழங்கும் அடையாள அட்டையும் கட்டாயம். ஓரே வீட்டில் உள்ளவர் அனைவரும் சேர்ந்து படம் எடுத்த தனி அடையாள அட்டை அதைவிடக் கட்டாயம்.

தன்னார்வத் தொண்டு நிறுவனப் பணியாளரான 17 தமிழர்கள் ஒராண்டுக்கு முன்பு மூதூரில் கொலையுயுண்ட பின்பு, தமிழர் பகுதிகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வேலை குறைந்தது. யாழ்பாணத்திலும் இங்கொன்றும அங்கொன்றுமான தொண்டு நிறுவன ஊழியர்கள் கொலையுண்டனர். ஐ.நா. நிறுவனம மற்றும் பிறநாட்டுத் தொண்டு நிறுவனங்களின் பணிகள் முடங்கின. சில தொண்டு நிறுவனங்களின் அலுவலகங்களை அரசே மூடியதால் யாழ்பாணம், தன்னார்வத் தொண்டர்களின் ஆதரவின்றித் தவிக்கின்றது.

யாழ்பாணத்துக்காக பரிவு பெருகத் தொடங்கியுள்ளது. தன்னார்வத் தொண்டாகள் யாழ்பாணத்துக்கு அனுப்பி உதவ உணவு, மருந்து, உடைகளைச் சேகரித்தனர்.

இந்த நிலையில் யாழ்பாண மக்கள் அவதியுற, தமிழகம் பார்த்துக் கொண்டிருக்குமா? 'தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும' என்றார்களே? உணவு,உடை, மருந்து என சேர்த்த பொருள்களைச் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் வழங்குமாறு யாழ். கோர, அச்சங்கம் இந்திய அரசை நாட, இந்திய அரசோ பாராமுகமாக இருக்க, அப்பொருள் யாவும் கெட முன்பு யாழ்பாணத்துக்குப் போய்ச் சேர வேண்டுமமென்று தன்னார்வலர்கள் கடல் தாண்டி உதவ முன் வந்துள்ளார்கள். அவர்கள் யாழ்பாணம் போவார்களா, பொருளைச் சேர்ப்பிப்பார்களா? என்பது முக்கியமல்ல. தமிழக மக்கள், கடல் கடந்த யாழ்பாணத்தை, அளவு கடந்து நேசிக்கிறார்கள் என்பதே அங்குள்ள தமிழருக்கு உணவாகும், மருந்தாகும், உடைமையுமாகும்!. எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நன்றி : சுடர் ஒளி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழமையாக புலிஎதிர்ப்புக் கதை எழுதுதல் என்பது தினமணிக்கு பிறவிப்பயனை அநுபவிப்பது போன்ற ஒரு சந்தோசகரமான விடயம் அல்லவா ? இன்று இப்படி பாசத்தைக் கொட்டுகிறதே ஆச்சரியமாக இருக்கிறதே!

  • கருத்துக்கள உறவுகள்

தேவன் இங்ங இப்படி எழுதிட்டு அவர்களுடைய வாரந்த பத்திhகையான தமிழன் எஸ்பிரஸ்சில் புலி எதிர்ப்பை கக்குவார்கள் அதான் தினமணி குழுமம்...

பிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி விட அவர்களுக்கு சொல்லியா தர வேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.