Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக முதலமைச்சர் சிங்கப்பூர் பயணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தழிழக முதலமைச்சர் சிங்கப்பூர் பயணம்

தமிழக முதலமைச்சர் சிங்கப்பூர் பயணம்.

தழிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சிங்கப்பூர் பயணித்துள்ளார்.

அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில்  இடம்பெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையில் சிங்கப்பூர் பயணித்துள்ளார்.

இந்த நிலையில் போக்குவரத்து தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர், உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் மற்றும் அந்த நாட்டின் முன்னணி தொழில் வல்லுனர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன் சிங்கப்பூர் பயணத்தை தொடர்ந்து நாளை மறுதினம் ஜப்பான் பயணிக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

https://athavannews.com/2023/1332617

@Kapithan   ஆதவன் நியூஸ்  தலைப்பு... இப்படி இருந்தது //தழிழக முதலமைச்சர் சிங்கப்பூர் பயணம்//

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூரின் லி குவான் யூவுக்கு மன்னார்குடியில் நினைவுச்சின்னம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பின் சுவாரஸ்ய பின்னணி என்ன?

சிங்கப்பூர்
 
படக்குறிப்பு,

சிங்கப்பூரின் தந்தை லி குவான் யூ, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

25 நிமிடங்களுக்கு முன்னர்

சிங்கப்பூரின் நிறுவன தந்தைகளில் ஒருவராக விளங்கிய லி குவான் யூவுக்கு தமிழ்நாட்டில் மன்னார்குடியில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்திய கலாசார சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

அப்போது அவர், "கடல் கடந்து சிங்கப்பூருக்கு வந்திருப்பதாக நான் நினைக்கவில்லை. தமிழ்நாட்டுக்குள்ளேயே இருப்பதாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அந்த அளவுக்கு சிங்கப்பூர் என்பது என் சிந்தைக்கு இதமான ஊராக அமைந்திருக்கிறது," என்று கூறினார்.

சிங்கப்பூர் குறித்தும் அதன் வளர்ச்சியில் தமிழ்நாடும் தமிழர்களும் இடம்பெற்றது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் விரிவாக பேசினார். அதன் முக்கிய அம்சங்கள்:

ஒரு சிறிய தீவாக இருந்த சிங்கப்பூரை மிக குறுகிய காலத்தில் பொருளதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், கட்டுமானம், கப்பல்துறை, விமான போக்குவரத்துத்துறை முதலிய பலவற்றில் உலகமே வியக்கும் வகையில் முன்னேற்றத்துக்கு வித்திட்டவர் சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ. சிங்கப்பூரில் தமிழரான எஸ்.ஆர். நாதன் இந்த நாட்டின் அதிபராக 12 ஆண்டுகள் சேவையாற்றி இருக்கிறார். இது உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு பெருமை தரக்கூடிய ஒன்று.

 

சிங்கப்பூரில் தமிழும் தமிழர்களும் சிறப்பாக வாழ்வதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர் தந்தை பெரியாரின் சீடராக இருந்த 'தமிழவேள்' கோ. சாரங்கபாணி. தமிழர்கள் முன்னேற சீர்திருத்த சங்கத்தை தொடங்கியவர் அவர்.

தமிழர் திருநாளுக்கு ஒருமுறை நம்முடைய அண்ணா அவர்களை இங்கே வரவழைத்து லீ குவான் யூ அவர்களுடன் அமர வைத்து சொற்பொழிவு ஆற்றச் செய்தவர் அவர். தமிழர்கள் பலர் இந்நாட்டின் குடிமக்களாக வாழ 'தமிழவேள்' கோ. சாரங்கபாணி அவர்கள்தான் காரணம் என்பதை யாரும் மறக்க முடியாது.

@mkstalin

பட மூலாதாரம்,@MKSTALIN

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வேண்டுகோள்

தமிழர் வாழாத நாடு இந்த பூமிப்பந்தில் இல்லை என்று சொல்லும் அளவுக்கு பரந்து விரிந்து வாழும் தமிழர் அனைவருக்கும் நம்பிக்கை நட்சத்திரம் ஆக இருப்பது திராவிட இயக்கம்தான்.

பகுத்தறிவுப் பகவனம் தந்தை பெரியார் அவர்கள் இரண்டு முறை சிங்கப்பூருக்கு வருகை தந்து தன்னுடைய சீர்திருத்த கருத்துகளை தமிழர்களிடையே விதைத்தார். அண்ணா அவர்களும் கலைஞர் அவர்களும் இங்கு வருகை தந்து அந்த உணர்வை வளர்த்தெடுத்தார்கள்.

சிங்கப்பூருக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பு என்பது, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. சிங்கப்பூரில் கண்டெடுக்கப்பட்ட பத்தாம் நூற்றாண்டு கல்வெட்டில் தமிழ் பெயர் இருக்கிறது என்று சமீபத்தில் ஆய்வு நூல் வெளியாகி உள்ளது. சர் ஸ்டாம்ஃபோர்டு இராபிள்ஸ் காலத்தில் சிங்கப்பூரின் வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்கள், சாலைகள், வழிபாட்டு இடங்கள் ஆகியவற்றின் உருவாக்கத்திலும் தமிழ்நாட்டு தொழிலாளர்களின் பங்கு இருந்திருக்கிறது.

சிங்கப்பூரில் ஸ்டாலின்

கல்வியும் உழைப்பும்தான் தமிழர்கள் இந்த அளவுக்கு உயர்வதற்கு காரணம். தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் பலர் சிங்கப்பூரில் பல்வகை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் நலன் காக்கும் பணியில் திராவிட மாடல் அரசு பணியாற்றி வருகிறது.

சிங்கப்பூர் குடிமக்களாகிய தமிழ் மக்கள் அமைச்சர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் முதலிய பல்வேறு பொறுப்புகளில் இருந்து வருவதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

லீ குவான் யூ அவர்களின் புகழ் இன்றுவரை நீடித்து நிலைத்து இருக்கிறது. இந்தியாவுடனான வணிகத் தொடர்பை அவர் வளர்த்தார். இந்திய வணிகத் தொடர்பை வளர்த்ததில் முந்தைய பிரதமர் கோ சோக் தோங் அவர்களுக்கு பெரும் பங்கு உண்டு. இன்றைய பிரதமர் லியும் தொடர்ந்து அதை நிலைக்கத் செய்கிறார். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை நோக்கி சிங்கப்பூர் நிறுவனங்களை ஈர்ப்பதற்காக நான் வருகை தந்துள்ளேன்.

சிங்கப்பூர் தமிழர் கோரிக்கைகளுக்கு பதில்

ஸ்டாலின்

இங்கே சில கோரிக்கைகளை வைத்துள்ளீர்கள். அவற்றை முறைப்படி தமிழ்நாட்டில்தான் அறிவிக்க முடியும்.

சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட புலம்பெயர் நாடுகளில் உள்ள எழுத்தாளர்கள் எழுதும் நூல்களை வாங்கி தமிழ்நாட்டு நூல் நிலையங்களில் வைப்பது, புலம்பெயர் நாடுகளில் உள்ள இளைஞர்களை தமிழ்நாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லுதல், புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் சான்றோர்களை அறிஞர்களை, பேராசிரியர்களை மதித்து விருது வழங்குதல், கலைகள், பண்பாட்டு பரிமாற்றம், நாட்டுப்புற கலைஞர்களை புலம்பெயர் நாடுகளுக்கு அனுப்பி ஊக்குவித்தல், பண்பாட்டுப் பிரமாற்றம் பெருக பல கண்காட்சிகளை நடத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை தெரிவித்துள்ளீர்கள்.

சிங்கப்பூர் ஸ்டாலின்
 
படக்குறிப்பு,

சிங்கப்பூர் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து இரு தரப்பு பொருளாதாரம், வணிக ஒத்துழைப்புகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இவை குறித்து தமிழ்நாடு திரும்பிய பிறகு ஆலோசித்து முறையான அறிவிப்பை வெளியிடுவேன் என்ற உறுதிமொழியை அளிக்கிறேன். இங்குள்ள தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து அவர்களின் வணிக வளத்தைப் பெருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதற்கான வசதிகள், அனுமதிகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு செய்து கொடுக்கும் என்று உறுதி கூறுகிறேன்.

தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறி வருகிறது. எல்லோர்க்கும் எல்லாம் என்ற உன்னதமான திராவிட கோட்பாடு அடிப்படையில் ஆட்சியை நடத்தி வருகிறோம். 2030ஆம் நிதியாண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கான ஒரு லட்சிய இலக்கை அரசு நிர்ணயித்துள்ளது.

எனவேதான் பல்வேறு தொழில்துறை முதலீட்டு மாநாடுகளை நடத்தியுள்ளோம். அடுத்த ஆண்டு உலக முதலீீட்டு மாநாடு வரும்போது அதில் சிங்கப்பூர் முதலீட்டாளர்களும் அதிகமாக இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறேன்.

லீ குவானுக்கு நினைவுச்சின்னம் ஏன்?

லீ குவான் யூ

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படும் லீ குவான் யூ அவர்களால்தான் தமிழர்களும் தமிழும் இங்கு உயர்வை அடைய முடிந்தது. நம்முடைய அண்ணா அவர்களின் பேச்சால் ஈர்க்கப்பட்டவர் லீ குவான் யூ. சிங்கப்பூரில் அண்ணாவின் உரையை கேட்ட லீ குவான் யூ, தனது மூதத் சகோதரர் என்று பாசத்தோடு அவரை அழைத்தார். அதுமட்டுமல்ல, தமது அலுவலகத்துக்கு அண்ணாவை அழைத்து விருந்து கொடுத்தார். அதனால்தான் லீ குவான் யூ இறந்தபோது சிங்கப்பூர் நாயகன் என்று போற்றினார் கலைஞர்.

லீ குவான் யூ அவர்களுக்கு தமிழ்நாட்டில் நினைவுச்சின்னம் எழுப்ப நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். இது தமிழ்நாட்டில் மன்னார்குடியில் அமைய இருக்கிறது. சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பகுதியினர் மன்னார்குடி, பட்டுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அங்குள்ள பரவாக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை, திருமக்கோட்டை, உள்ளிக்கோட்டை, மேலத்திருப்பாலக்குடி, கீழத்திருப்பாலக்குடி, ஆலங்கோட்டை, நெடுவாக்கோட்டை, மேலவாசல் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சிங்கப்பூருடன் தொடர்பு உண்டு என்பதை நான் நன்றாக அறிவேன். இந்த கிராமங்களில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள் தான் அதிகம். எனவே, லீ குவான் யூ பெயரால் நூலகமும் சிலையும் மன்னார்குடியில் அமையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் கூறினார்.

உங்களை உயர்த்தும் தமிழ்நாட்டை உயர்த்த நீங்கள் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும் சிங்கப்பூர்வாசிகளுக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

லீ குவானும் மன்னார்குடியும்

மன்னார்குடியில் எங்கு சென்றாலும், மூன்று குடும்பங்களில் இரண்டில், தங்களுடைய வாழ்க்கையின் ஒரு கட்டத்தில், நவீன சிங்கப்பூரில் தொழில் பணியைக் கொண்டவர்களை கொண்டுள்ளதாக இருக்கும்.

குறிப்பாக, கட்டுமான தொழிலாளர்கள், பிளம்பர்கள், கனரக வாகன ஓட்டுநர்கள், பேக்கர்கள், பெயின்ட்டர்கள், ஃபிட்டர்கள், எலக்ட்ரீஷியன்கள் உள்ளிட்ட திறன்சார் தொழிலாளர்களாக அவர்கள் இருப்பர்.

கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்பு 1965 ஆம் ஆண்டில், உள்ளிக்கோட்டை உட்பட சுமார் 50 கிராமங்களை உள்ளடக்கிய மன்னார்குடி பகுதியில் அதிகளவில் விவசாயம் செய்யும் மன்னார்குடி பகுதியில் ஓலை குவிமாட வடிவ கூரைகள் மற்றும் தென்னை ஓலைகள் கொண்ட மண் வீடுகள் பரந்து விரிந்தன. அந்தக்காலத்தில் பல நிலங்கள் பயிரிடப்படாமல் இருந்தன.

அந்த வீடுகள் இருந்த பகுதிகளில் இன்று, இரண்டு மாடி கான்கிரீட் வீடுகள் எழுப்பப்பட்டுள்ளன. நெல் வயல்களுக்கு மத்தியில் அந்த வீடுகள் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. காரணம், அந்த குடும்பத்து தலைவர்கள் அல்லது வாரிசுகள் சிங்கப்பூருக்குச் சென்று உழைத்து செல்வம் சேர்த்து தங்களுடைய தாய்நாட்டில் அந்த சேமிப்பைக் கொண்டு சொத்துகளை வளப்படுத்தினர்.

லீ குவான் யூ

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

லீ குவான் யூ

மன்னார்குடி, புதுக்கோட்டை, உள்ளிக்கோட்டை, ஆலங்குடி போன்ற திருச்சிராப்பள்ளியை சுற்றியுள்ள தென் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் 1920களில் இருந்து சிங்கப்பூருக்கு வேலை மற்றும் வணிகத்திற்காக செல்லும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். இப்போதும் கூட சுமார் ஐந்து லட்சம் தமிழ் வம்சாவளி சிங்கப்பூர் குடிமக்களில் பெரும் பகுதிகளாக இருப்பது இந்த பகுதி மக்கள்தான்.

7,000 கிமீ தூரத்தில் இருந்தாலும், சிங்கப்பூர் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள குடும்பங்கள் ஒரே சந்தைகளில் கூடி ஷாப்பிங் செய்கின்றனர். திருச்சிராப்பள்ளியில் இருந்து தினமும் சிங்கப்பூருக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விமானம் மூலம் அனுப்பப்படுகின்றன.

புலம்பெயர்ந்தோர் சிங்கப்பூரின் ஒரு பகுதியை வீட்டிற்கும் கொண்டு வருகிறார்கள், ஆங்கிலம் சரளமாக பேசுகிறார்கள். தாய்நாட்டில் அடுக்குமாடி நவீன வீடுகளை கட்டுகிறார்கள், ஆடம்பரமான திருமணங்கள், பெண்களுக்கான கல்லூரிகள் மற்றும் விவோசிட்டி மற்றும் ஈஸ்ட்பாயிண்ட் போன்ற சிங்கப்பூர் மால்களில் கடைகளை நிறுவியுள்ளார்கள்.

தென் மாவட்ட இளைஞர்கள் வேலை அல்லது திருமணம் மூலம் சிங்கப்பூருக்குச் செல்வதற்கான வழியைத் திட்டமிட்டு செயல்படுத்துகிறார்கள். சென்னையின் அளவை விட சிறியதாக இருக்கும் சிங்கப்பூர் தேசத்தின் ஒரு பகுதியாகவும் அவர்கள் மாறியிருக்கிறார்கள்.

இத்தனை வசதிகளையும் தமிழர்களஅ பெறுவதற்குக் காரணம், அந்தக்காலத்தில் சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ உருவாக்கிக் கொடுத்த வாய்ப்புகள்தான்.

2015ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி லீ குவான் மரணம் அடைந்தார். அவரது மறைவைச் செய்தியைக் கேட்டு சோகத்தில் மூழ்கிய தமிழ்நாட்டில் உள்ள மன்னார்குடி மக்கள், அவருக்காக நடத்திய இரங்கல் ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.

இப்போதும் கூட லீ குவான் யூ மீது கொண்ட மரியாதையின் காரணமாக சில குடும்பத்தினர் தங்களுடைய குடும்பத்தில் பிறக்கும் வாரிசுக்கு லீ குவான் யூவின் பெயரை சூட்டி மகிழ்வதை பார்க்க முடியும்.

https://www.bbc.com/tamil/articles/c1v0ldzewg3o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and monument

Image

Image

 

Image

Image

ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு #BulletTrain-இல் பயணம் செய்கிறேன். ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை இரண்டரை மணிநேரத்திற்குள் அடைந்துவிடுவோம். உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் #BulletTrain-களுக்கு இணையான இரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்; ஏழை - எளிய - நடுத்தர மக்கள் பயனடைந்து, அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும்! 

May be an image of 9 people and wedding

ஜப்பானில் தமிழக முதல்வர் ஸ்ராலின்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.