Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: VISHNU

26 MAY, 2023 | 03:50 PM
image
 

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று சம்பியனாகும் அணிக்கு 48 கோடியே 37 இலட்சத்து 31,040 பணப்பரிசாக கிடைக்கவுள்ளது.

அப் போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு இந்தந் தொகையில் சரிபாதி பணப்பரிசு (241,865,520 ரூபா) கிடைக்கும்.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் பங்குபற்றிய 9 அணிகளுக்கும் மொத்தமாக (3.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) 114 கோடியே 88 இலட்சத்து 61,220 ரூபா பணப்பரிசு பகிர்ந்தளிக்கப்படும்.

இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெறுவதற்காக நியூஸிலாந்துடன் 2 போட்டிகள் டெஸ்ட் தொடரில் பங்குபற்றி தோல்வி அடைந்ததால் 3ஆம் இடத்திலிருந்து 5ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்ட இலங்கைக்கு 9 கோடியே 6 இலட்சத்து 99,570 ரூபா கிடைக்கவுள்ளது.

இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் எதிர்வரும் ஜுன் மாதம் 7ஆம் திகதியிலிருந்து 11ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில் 5 நாட்களில் முடிவு கிட்டாவிட்டால் போட்டி 6ஆவது நாள் தொடர்ந்து நடைபெறும்.

சம்பியன் அணிக்கு 48 கோடி ரூபா பணப்பரிசாக கிடைக்கவுள்ளதால் இப் போட்டி இரண்டு அணிகளுக்கும் பெரும் உற்சாகத்தைக் கொடுப்பதுடன் ஒன்றையொன்று வீழ்த்தும் முயற்சியில் இறங்கவுள்ளன.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் சவுத்ஹம்ப்டனில் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 8 விக்கெட்களால் இந்தியாவை வெற்றிகொண்ட கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்துக்கு டெஸ்ட் வெற்றி கோலுடன் (Test Mace) இதே தொகை பணப்பரிசு வழங்கப்பட்டிருந்தது.

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2021-23இல் அணிகள் நிலையில் மூன்றாம் இடத்தைப் பெற்ற தென் ஆபிரிக்காவுக்கு 13 கோடியே 60 இலட்சத்து 49,355 ரூபா பணப்பரிசும் நான்காம் இடத்தைப் பெற்ற இங்கிலாந்துக்கு 10 கோடியே 58 இலட்சத்துக்கு 16,165 ரூபா பணப்பரிசும் கிடைக்கவுள்ளது.

6ஆவது, 7ஆவது, 8ஆவது, 9ஆவது இடங்களில் முறையே உள்ள நியூஸிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு தலா 3 கோடியே 2 இலட்சத்து 33,190 ரூபா பணப்பரிசு கிடைக்கும். 

https://www.virakesari.lk/article/156239

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த‌ விளையாட்டுக்கு இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளிட‌ம் அற‌வே வ‌ர‌வேற்ப்பு இல்லை....................இந்த‌ விளையாட்டை குறைத்து அதிக‌ 20ஓவ‌ர் கிரிக்கேட் போட்டி வைத்தால் தான் கிரிக்கேட் காட்டு தீ போல‌ ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு இன்னும் வேக‌மாக‌ ப‌ர‌வும்................20ஓவ‌ர் கிரிக்கேட்டை அறிமுக‌ம் செய்த‌ பிற‌க்கு தான் ஜ‌ரோப்ப்பாவில் இருக்கும் ப‌ல‌ நாடுக‌ள் கிரிக்கேட் விளையாட்டின் மீது ஆர்வ‌ம் காட்ட‌ தொட‌ங்கி இப்போது ஆசிய‌விலும் ஜ‌ரோப்பாவிலும் ப‌ல‌ நாடுக‌ள் விளையாடின‌ம்.......................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2021 – 2023 டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்ற அணிகளுக்கான பரிசுத்தொகை அறிவிப்பு ! 

2021 – 2023 காலப்பகுதிக்கான டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்ற அணிகளுக்கான பரிசுத்தொகை சர்வதேச கிரிக்கெட் பேரவையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

9 அணிகள் பங்கறே்ற இந்த தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி, இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையே எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், இம்முறை கிண்ணத்தை வெற்றிகொள்ளும் அணிக்கு 1.6 மில்லியன் டொலர்கள் வழங்கப்படவுள்ளன.

இரண்டாமிடத்தை பெறும் அணிக்கு 8 இலட்சம் டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை குறிப்பிட்டுள்ளது.

தொடரில் பங்கேற்ற அணிகளுக்கான பட்டியலில் மூன்றாமிடத்தில் உள்ள தென்னாபிரிக்க அணிக்கு 4,50,000 டொலர்களும், நான்காம் இடத்தில் உள்ள இங்கிலாந்திற்கு 3,50,000 டொலர்களும் வழங்கப்படவுள்ளன.

பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ள இலங்கை அணிக்கு 2 இலட்சம் டொலர்கள் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.

நியூஸிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு தலா ஒரு இலட்சம் டொலர்கள் வழங்கப்படவுள்ளன.

https://thinakkural.lk/article/255751

  • கருத்துக்கள உறவுகள்
Posted

டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: மத்தியஸ்தர் குழாத்தில் குமார் தர்மசேன

Published By: DIGITAL DESK 5

30 MAY, 2023 | 12:02 PM
image
 

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஜூன் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இலங்கையின் குமார் தர்மசேன 4ஆவது மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த இறுதிப் போட்டிக்கான மத்தியஸ்தர் குழாத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவை திங்களன்று (29) அறிவித்தது.

53 வயதான குமார் தர்மசேன இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் 79 தடவைகள் கள மத்தியஸ்தராகவும் 21 தடவைகள் தொலைக்காட்சி மத்திஸ்தராகவும் கடமையாற்றியுள்ளார்.

இறுதிப் போட்டிக்கான  கள   மத்தியஸ்தர்களாக நியூஸிலாந்தின் கிறிஸ் கஃபானி, இங்கிலாந்தின் ரிச்சர்ட் இலிங்வேர்த் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

48 வயதான கஃபானி 49ஆவது டெஸ்ட் போட்டியிலும் 59 வயதான இலிங்வேர்த் 64ஆவது டெஸ்ட் போட்டியிலும் கள மத்தியஸ்தர்களாக செயற்படவுள்ளனர்.

சவுத்ஹம்ப்டனில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்தியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான  ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்   போட்டியின்போதும் இலிங்வேர்த் மத்தியஸ்தம் வகித்திருந்தார்.

இதேவேளை, இங்கிலாந்தின் மற்றொரு மத்தியஸ்தரான ரிச்சர்ட் கெட்ல்வேர்த், இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தொலைக்காட்சி மத்தியஸ்தராக கடமையாற்றவுள்ளார்.

போட்டி பொது மத்தியஸ்தராக (Match Commissioner) மேற்கிந்தியத் தீவுகளின் ரிச்சி ரிச்சர்ட்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/156497

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எதிரணியின் பொறுமையைச் சோதிக்கும் புஜாரா; ஆஸ்திரேலியாவால் சமாளிக்க முடியுமா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - புஜாரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்யும் போதெல்லாம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் போதெல்லாம் புஜாரா சிம்ம சொப்பனமாக இருந்துள்ளார்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 6 ஜூன் 2023, 04:57 GMT
    புதுப்பிக்கப்பட்டது 6 ஜூன் 2023, 04:58 GMT

“சச்சின், டிராவிட்டுக்கு அடுத்து இவரைப் போல் பந்தை இவ்வளவு உன்னிப்பாக கவனித்த பேட்ஸ்மேனை நான் பார்த்தது இல்லை. இவரின் உன்னிப்பான கவனம் எதிரணிக்கு சவாலாக இருக்கும், இவரைப் போலவே ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களும் பழக வேண்டும்”

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பயிற்சியாளருமான ஜஸ்டின் லாங்கர், இந்திய டெஸ்ட் அணியின் தூணாக இருக்கும் சத்தேஸ்வர் புஜாரா குறித்து பெருமையுடன் கடந்த 2019இல் கூறிய வார்த்தைகள் இவை.

ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்யும் போதெல்லாம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் போதெல்லாம் புஜாரா சிம்ம சொப்பனமாக இருந்துள்ளார். களத்துக்கு வந்துவிட்டால், பந்துவீச்சாளர்கள் சோர்வடையும்வரை ரன் எடுக்காமல், ஸ்ட்ரோக் மட்டும் வைத்து வெறுப்பேற்றுவதிலும், களத்தில் பசைபோட்டு ஒட்டிவிட்டதைப் போன்று நிலைத்து நின்று பேட் செய்வதிலும் புஜாராவுக்கு நிகராக இன்று இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் இல்லை.

2018-ஆம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் 54 பந்துகளைச் சந்தித்தபின் புஜாரா முதல் ரன்னை எடுத்து பந்துவீச்சாளர்களை வெறுப்பேற்றினார். இவரின் நிதானமான ஆட்டம் சில நேரங்களில் ரசிகர்களையே வெறுப்பேற்றக்கூடும். ஆஸ்திரேலியப் பயணத்திலும், இங்கிலாந்துப் பயணத்திலும் புஜாரா முதல் ரன் எடுத்தவுடன் ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி இவரை கலாய்த்த சம்பவங்களும் நடந்துள்ளன.

   

பொறுமை, நிதானம் முக்கியம்

டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை நிதானம், பொறுமை மிக முக்கியம். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் அனைத்துவிதமான பந்துகளையும், ஷாட்களையும் ஆடப் பழகிவிட்டாலே எந்தவிதமான போட்டிகளிலும் சோபிக்க முடியும்.

புஜாராவுக்கு பொறுமையாக பேட் செய்யவும் தெரியும், அதேநேரத்தில் ஒரு பந்துவீச்சாளர் தவறு செய்யும்போது பவுண்டரி, சிக்ஸர் அடித்து அவரைத் தண்டிக்கவும் தெரியும். இந்திய அணியின் சூழலுக்கு ஏற்ப புஜாரா தனது பேட்டிங் முறையை மாற்றிக்கொள்ளும் வித்தை தெரிந்தவர்.

இந்தியாவின் புதிய சுவர்

1990களில் இந்திய டெஸ்ட் அணி தடுமாறும்போது “இந்திய அணியின் சுவர்” எனச் சொல்லப்படும் ராகுல் டிராவிட் மட்டும் நிலைத்து நின்று பேட் செய்து, பெவிலியன் திரும்பும் காட்சி ரசிகர்கள் பலருக்கும் கண்களைவிட்டு அகன்றிருக்காது.

டிராவிட்டுக்குப்பின் இந்திய அணிக்கு சுவராக இருக்கும் பேட்ஸ்மேன் கிடைப்பாரா என்று ரசிகர்கள் நினைத்திருந்த வேளையில் வந்தவர்தான் சத்தேஸ்வர் புஜாரா. இந்திய அணியின் “புதிய சுவர் புஜாரா” என்றாலும் தகும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - புஜாரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

வலது கை பேட்ஸ்மேனான புஜாராவின் பேட்டிங் ஸ்டைல் மிகவும் கட்டுக்கோப்பாக, மரபுவழி ஷாட்களை அடிப்பது போன்று இருக்கும்.

புஜாராவின் பேட்டிங் ஸ்டைல்

வலது கை பேட்ஸ்மேனான புஜாராவின் பேட்டிங் ஸ்டைல் மிகவும் கட்டுக்கோப்பாக, மரபுவழி ஷாட்களை அடிப்பது போன்று இருக்கும். முகமது அசாருதீன் போல கைமணிக்கட்டுகளை பயன்படுத்தி பெரிதாக ஷாட்களை ஆடாத புஜாரா, சிறந்த பேக்ஃபுட் ப்ளேயர். கால்களை நகர்த்தி பல்வேறு விதமான ஷாட்களை ஸ்டைலாக ஆடுவதில் கைதேர்ந்தவர்.

டிபெஃன்ஸ் ஆட்டத்தில் கைத்தேர்ந்தவரான புஜாரா, தொடக்கத்தில் மிக நிதானமாகவும், நேரம் கடந்து நிலைத்தபின் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் பேட்டிங்கையும் வெளிப்படுத்துபவர். புஜாராவின் நல்ல உடற்தகுதி அவர் களத்தில் நீண்டநேரம் பேட்டிட் செய்ய உதவியாக இருந்து வருகிறது. அதனால்தான் கடந்த 2021ம் ஆண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் பயணத்தில் கால்காப்பில் புஜாரா பந்துகளைத் தடுத்ததைவிட, பந்தில் உடலில் அடிவாங்கியதே அதிகம் எனலாம்.

டெஸ்ட் போட்டிகளுக்காகவே உருவானவர்

டெஸ்ட் போட்டிகளுக்கு என்றே வடிவமைக்கப்பட்டவராக சத்தேஸ்வர் புஜாரா மாறிவிட்டார் என்றுகூட கூறலாம். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பலமுறை வாய்ப்புக் கிடைத்தும், அதில் பெரிதாக சோபிக்காத புஜாரா, டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய பேட்டிங் முத்திரையை பல போட்டிகளில் பதித்துள்ளார்.

102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா, 19 சதங்கள், 35 அரை சதங்கள் உட்பட 7,154 ரன்களைக் குவித்துள்ளார். அதிகபட்சமாக இரட்டை சதங்களையும் புஜாரா விளாசியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் சராசரியாக 43.38 ரன்களையும், 44.31 ஸ்ட்ரைக் ரேட்டையும் அவர் வைத்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இந்திய டெஸ்ட் அணிக்கு கடந்த 2010ம் ஆண்டு அறிமுகமாகிய புஜாரா, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக எப்போதுமே சிறப்பாக விளையாடக்கூடியவர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிம்மசொப்பனமாக விளங்கும் புஜாரா

இந்திய டெஸ்ட் அணிக்கு கடந்த 2010ம் ஆண்டு அறிமுகமாகிய புஜாரா, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக எப்போதுமே சிறப்பாக விளையாடக்கூடியவர். ஆஸ்திரேலிய அணியினர் இந்திய வந்தபோதிலும் சரி, இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றாலும் சரி, புஜாரா பேட்டிங்கில் தனது முத்திரையை பதிக்கத் தவறியதில்லை.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை 24 டெஸ்ட் போட்டிகளில், 43 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள புஜாரா 2,033 ரன்களைக் குவித்துள்ளார், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக புஜாராவின் சராசரி 50.82 ரன்களாகும். அந்த அணிக்கு எதிராக 5 சதங்களை விளாசிய புஜாராவின் அதிகபட்சம் 204 ரன்களாகும்.

ஆதலால், 7-ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ஆஸ்திரேலிய அணிக்கு சத்தேஸ்வர் புஜாராவின் ஆட்டம் நிச்சயம் சிம்மசொப்பனமாக இருக்கும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இங்கிலாந்து ஓவல் மைதானம், அங்கு நிலவும் காலநிலை, பந்து ஸ்விங் ஆகும் தன்மை, ஆடுகளத்தின் தன்மை குறித்து மற்ற இந்திய வீரர்களைவிட புஜாரா நன்கு அறிந்தவர்.

இங்கிலாந்து ஆடுகளங்களை துல்லியமாக அறிந்தவர்

இங்கிலாந்தில் உள்ள சசெக்ஸ், யார்க்ஸையர், நாட்டிங்காம்ஷையர், டெர்பிஷையர் போன்ற கவுண்டி அணிகளில் பலமுறை விளையாடிய அனுபவம் கொண்டவர் புஜாரா. எனவே, இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்கள் குறித்து புஜாரா நன்கு அறிந்தவர் என்பது இந்திய அணிக்கு கூடுதல் பலமாகும்.

அதிலும் தற்போது சசெக்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டு அங்கு இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா, இதுவரை 3 சதங்களை அடித்து அருமையான ஃபார்மில் உள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், புஜாராவுடன் ஒரே அணியில் இடம் பெற்றுள்ளார்.

ஆதலால், இங்கிலாந்து ஓவல் மைதானம், அங்கு நிலவும் காலநிலை, பந்து ஸ்விங் ஆகும் தன்மை, ஆடுகளத்தின் தன்மை குறித்து மற்ற இந்திய வீரர்களைவிட புஜாரா நன்கு அறிந்தவர். இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் புஜாராவின் ஆட்டம் நிச்சயம் ஆஸ்திரேலியாவுக்கு சவாலாக இருக்கக்கூடும்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பான சராசரி வைத்திருக்கும் புஜாரா, இங்கிலாந்து ஆடுகளங்களில் 15 டெஸ்ட்களில் விளையாடி 859 ரன்கள் மட்டுமே சேர்த்து 29 ரன்கள் சராசரி வைத்துள்ளதையும் கவனிக்க வேண்டும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

புஜாராவின் அனுபவமும், நிலைத்து ஆடும் பக்குவமும் ஆஸ்திரேலிய அணியினருக்கு பெரிய சவாலாக இருக்கும்.

இருப்பினும் ஐபிஎல் தொடர் காரணமாக இந்திய அணி வீரர்கள் சிறு, சிறு குழுவாகவே லண்டனுக்குச் சென்றுள்ளார்கள். ஆனால், இங்கிலாந்தில் கடந்த 3 மாதங்களாக இருந்துவரும் புஜாரா அந்த ஆடுகளங்களை நன்கு அறிந்தவர் என்பதால், அவரிடம் இருந்து ஆலோசனைகளை பெறுவது சிறப்பு என ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கவாஸ்கரின் அறிவுரை

சுனில் கவாஸ்கர் சேனல் ஒன்றுக்கு அளிக்க பேட்டியில், “ஓவல் மைதானத்தில் புஜாரா சமீபத்தில் விளையாடாமல் இருந்திருக்கலாம். ஆனால் சசெக்ஸ் அணியில் ஆடிவரும் புஜாராவுக்கு லண்டனில் இருந்து ஓவல் வெகுதூரம் இல்லை. ஓவல் மைதானம் எப்படி இருக்கிறது, அங்குள்ள நிலவரம், காலநிலை, ஆடுகளத்தின் தன்மை குறித்து நிச்சயம் புஜாரா தெரிந்திருப்பார்.

அவரிடம் இருந்து இந்திய அணியினர் ஆலோசனைகள் பெறுவது அவசியம். மேலும், ஐபிஎல் தொடரில் ஆடிவிட்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு வரும் இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களின் பேட்டிங் வேகத்தை சற்று மாற்றி அமைக்க வேண்டும். ஸ்விங் பந்துகளை கவனமாகப் பார்த்து ஆடி, விக்கெட்டுகளைத் தக்கவைக்க வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.

ஆக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் புஜாராவின் பங்கு நிச்சயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவரின் அனுபவமும், நிலைத்து ஆடும் பக்குவமும் ஆஸ்திரேலிய அணியினருக்கு பெரிய சவாலாக இருக்கும்.

ரிக்கி பாண்டிங் விடுத்த எச்சரிக்கை

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அளித்த பேட்டியில்கூட புஜாரா, விராட் கோலி குறித்து ஆஸ்திரேலிய அணிக்கு எச்சரித்துள்ளார். அவர் கூறுகையில் “ ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணியில் தற்போதிருக்கும் பேட்ஸ்மேன்களில் சிறப்பாக ஆடக்கூடியவர்கள், ரன் சேர்த்தவர்களில் விராட் கோலி, புஜாரா இருவரும் முக்கியமானவர்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் புஜாரா, கோலியின் பேட்டிங் நிச்சயம் அச்சுறுத்தலாக இருக்கும். சசெக்ஸ் அணியில் விளையாடி வரும் புஜாரா, இங்கிலாந்து ஆடுகளங்கள் குறித்து நன்கு அறிந்தவர், 3 சதங்களை அடித்து ஃபார்மில் இருக்கிறார்.

அதேபோல, ஐபிஎல் தொடரில் விராட் கோலி 3 சதங்களை அடித்து ஃபார்மில் இருப்பதால், இருவரின் பேட்டிங் குறித்து ஆஸ்திரேலிய அணியினர் கவனமாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

புஜாரா முறையான டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன் என்பதால், பந்தை தூக்கி அடித்து எந்த வீரரிடமும் கேட்ச் ஆகும் வாய்ப்பை வழங்குவதில்லை

புஜாராவின் ஆட்டத்தில் மாற்றம்

புஜாராவின் ஆட்டத்திலும் சமீபகாலத்தில் மாற்றம் வந்துள்ளது. டெஸ்ட் போட்டிகளிலும் மிகவும் மந்தமாக ஆடக்கூடியவர், பந்துகளை அதிகம் வீணாக்கி ஸ்ட்ரைக் ரேட்டையும் குறைத்துள்ளார் என்று புஜாராவின் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. புஜாராவின் மந்தமான ஆட்டத்தால் இந்திய அணியின் ஸ்கோர் வழக்கமாக உயர வேண்டிய அளவுகூட சில நேரங்களில் வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்தது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக புஜாராவின் பேட்டிங்கில் நல்ல மாற்றம் வந்துள்ளது. வேகமான ஷாட்களை அடிக்கிறார், ஆட்டத்தில் ஒருவிதமான ஆக்ரோஷம் தெரிகிறது என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

ஆமை வேகம் இப்போது இல்லை

அவர் கூறுகையில் “ புஜாராவின் ஸ்ட்ரைக் ரேட் பல நேரங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. 100 டெஸ்ட் போட்டிகளில் புஜாரா விளையாடியபோதிலும் இன்னும் அவரின் ரன் சேர்க்கும் விதம் மெதுவாக இருக்கிறது என்ற விமர்சனத்தை வைக்கிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு புஜாராவும் வேகமாக ஷாட்களை ஆடவும், விளையாடவும் தொடங்கிவிட்டார்.

குறிப்பாக கட் ஷாட்களை அதிகம் ஆடி ரன்களை புஜாரா ஸ்கோர் செய்கிறார். ஃபுல்லர் டெலிவரி பந்துகளை அடிக்காமல் விடுவதோ அல்லது டிபென்ட்ஸ் ஆடுவதை வழக்கமாக வைத்துள்ள புஜாரா, பந்துவீச்சாளர் தவறு செய்தால், அந்த பந்துகளை கட் ஷாட் மூலம் பவுண்டரி அடிக்கவும், ரன்களை ஸ்கோர் செய்யவும் தவறுவதில்லை.

குறிப்பாக ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லேயானுக்கு எதிராக பிளிக் ஷாட்களை ஆடுவதில் புஜாரா வல்லவர். நாதன் லேயான் பந்துவீச்சில் கால்களை நகர்த்தி, பேக்புட், ஃபிரன்ட்புட் ஷாட்களை ஆடுவதிலும் புஜாரா சிறப்பாக செயல்படுவார்.

ஆனால், எந்தக் காரணத்தைக் கொண்டும் பந்தை தூக்கி அடிக்க மட்டும் புஜாரா செய்யமாட்டார். புஜாரா முறையான டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன் என்பதால், பந்தை தூக்கி அடித்து எந்த வீரரிடமும் கேட்ச் ஆகும் வாய்ப்பை வழங்குவதில்லை. கேட்ச் பிடிக்கும் வாய்ப்பு வழங்காவிட்டாலேயே டெஸ்ட் போட்டியில் நல்ல ஸ்கோர் செய்ய முடியும்” எனத் தெரிவித்துள்ளார்

அதிகமான பந்துகளை சந்தித்த புஜாரா

கடந்த 2010ம் ஆண்டில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகிய புஜாரா, தவிர்த்து, ஸ்டீவன் ஸ்மித், ஜோ ரூட், அலிஸ்டார் குக், அசார் அலி ஆகிய 4 பேட்ஸ்மேன்கள் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் அதிகமான பந்துகளைச் சந்தித்துள்ளனர். இதன் மூலம் புஜாராவின் நிதானமான பேட்டிங் டெஸ்ட் போட்டியில் எவ்வாறு இருக்கும் என்பது தெரிந்துகொள்ளலாம்.

2010ம் ஆண்டிலிருந்து, புஜாரா 15,797 பந்துகளை எதிர்கொண்டு விளையாடியுள்ளார். அதாவது, ஏறக்குறைய 2632 ஓவர்களை புஜாரா விளையாடியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

புஜாரா களத்துக்கு வந்துவிட்டால் குறைந்தபட்சம் 100 பந்துகளை சந்திக்காமல் பெரும்பாலும் சென்றது இல்லை.

நங்கூரமிடும் பேட்ஸ்மேன்

13 ஆண்டுகால டெஸ்ட் போட்டி அனுபவத்தில் புஜாரா ஒவ்வொரு 99.9 பந்துகளில் ஆட்டமிழந்துள்ளார். அதாவது, புஜாரா களத்துக்கு வந்துவிட்டால் குறைந்தபட்சம் 100 பந்துகளை சந்திக்காமல் பெரும்பாலும் சென்றது இல்லை.

அந்த வகையில் எதிரணியினர் ஆட்டமிழக்கச் செய்வதற்கு கடினமான பேட்ஸ்மேன்களில் சர்வதேச அளவில் 7-வது இடத்தில் புஜாரா இருக்கிறார். சராசரியாக 99 பந்துகளை சந்தித்த பின்பே புஜாராவை ஆட்டமிழக்கச் செய்ய முடியும் என்பதே எதிரணி பந்துவீச்சாளர்களின் நம்பிக்கையைக் குலைத்துவிடும்.

டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை ஒரு பேட்ஸ்மேன்கள் களத்தில் எவ்வளவு நேரம் நிலைத்து நிற்கிறாரோ அந்த அளவுக்கு வலுவாக பேட்டிங் செய்ய முடியும். அந்த வகையில் புஜாரா களத்தில் வலுவாக நின்று பேட் செய்த ஆட்டங்களில் பெரும்பாலும் சதம், அரை சதங்களைக் கடந்துள்ளார். ஆதலால், புஜாராவை விரைவாக ஆட்டமிழக்கச் செய்யாவிட்டால், ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய தலைவலியாக மாறுவார்.

 

புஜாரா களத்தில் நிலைத்து நின்றுவிட்டால், அந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சேர்க்கும் ரன்களில் 30 சதவீதத்துக்கும் அதிகமாக புஜாரா ஸ்கோர் செய்துவிடுவார் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

களத்தில் நிலைத்துவிட்டால், இந்திய அணி சேர்க்கும் ரன்களில் ராகுல் டிராவிட் 36 சதவீதமும், சுனில் கவாஸ்கர் 34 சதவீதமும் பங்களிப்பு செய்துவிடுவார்கள், இதில் புஜாரா 3வது இடத்தில் உள்ளார். விராட் கோலியின் பங்களிப்பு 29.1% ஆக இருக்கிறது.

பார்ட்னர்ஷிப் அமைப்பதில் வல்லவர்

அதேபோல களத்தில் பிற இந்திய பேட்ஸ்மேன்களுடன் நிலைத்து பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களைச் சேர்ப்பதிலும் புஜாராவின் பங்கு அளப்பரியது. இந்திய பேட்ஸ்மேன்களில் ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கருக்கு அடுத்தார்போல், மற்ற பேட்ஸ்மேன்களுடன் சேர்ந்து அதிக ரன்களைச் சேர்த்ததில் புஜாரா 3வது இடத்தில் உள்ளார்.

டிராவிட் பார்ட்னர்ஷிப் அமைத்து 32 ஆயிரம் ரன்களும், கவாஸ்கர் 21 ஆயிரம் ரன்களும் குவித்த நிலையில் புஜாரா பார்ட்னர்ஷிப் அமைத்து 15,804 ரன்களை டெஸ்ட்போட்டிகளில் சேர்த்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c885wz0l5nlo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லப்போவது இந்தியாவா? அவுஸ்திரேலியாவா? 

Published By: VISHNU

07 JUN, 2023 | 10:44 AM
image
 

(என்.வீ.ஏ.)

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லப்போவது இந்தியாவா? அவுஸ்திரேலியாவா? என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் புதன்கிழமை (07) இலங்கை நேரப்படி பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

0506_title_clash.png

இரண்டு அணிகளும் ஆங்கிலேய சூழ்நிலைகளுக்கு தங்களைத் தயார்படுத்திக்கொள்வதில் கடந்த 15 தினங்களாக ஈடுபட்டிருந்ததுதுடன் போட்டியின்போது பிரயோகிக்க வெண்டிய வியூகங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.

0506_rohith_sharam_and_pat_cummins.png

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நியூஸிலாந்திடம் 8 விக்கெட்களால் கோட்டைவிட்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் பட்டத்தை இம்முறை வென்றெடுக்க இந்தியா கடுமையாக முயற்சிக்கவுள்ளது.

சவுத்ஹாம்படன் ரோஸ் பவுல் விளையாட்டரங்கில் மேக மூட்டங்களுக்கு மத்தியில் அந்த இறுதிப் போட்டி நடைபெற்றது. முதலாம் நாள் ஆட்டமும் நான்காம் நாள் ஆட்டமும் மழையினால் முழுமையாக கைவிடப்பட்டிருந்தது. இதனால் இழக்கப்பட்ட ஆட்டநேரத்தை ஈடு செய்வதற்கு 6ஆவது நாள் ஒதுக்கப்பட்டிருந்தது. இறுதியில் நியூஸிலாந்து 8 விக்கெட்களால் இந்தியாவை வெற்றிகொண்டு முதலாவது உலக டெஸ்ட் சம்பியன் என்ற கௌரவத்தைப் பெற்றுக்கொண்டது.

ஆனால், இந்த வருடம் காலநிலை மற்றும் ஆடுகளத்தின் தன்மை என்பன இப்போதைக்கு சாதகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இலங்கை நாணயப்படி 46 கோடியே 83 இலட்சத்து 72,686 ரூபா பணப்பரிசு சம்பியனாகும் அணிக்கு வழங்கப்படுவதுடன் அதில் சரிபாதி பணப்பரிசு தோல்வி அடையும் அணிக்கு கிடைக்கும்.

இதில் சம்பியனுக்கான பணப்பரிசையும் டெஸ்ட் வெற்றிக் கோலையும் சுவீகரிக்கும் குறிக்கோளுடன் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்தியாவும் பெட் கமின்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலியாவும் களம் இறங்கவுள்ளன.

பூவா? தலையா? போடப்படும்போது விளையாடப்போகும் இறுதி பதினொருவர் தீர்மானிக்கப்படுவர் என ரோஹித் ஷர்மா தெரிவித்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் விட்ட அதே தவறுகளை  அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் மீண்டும் இழைக்க மாட்டோம் எனவும் அவர் கூறினார்.

முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா, முதன்மை விக்கெட் காப்பாளர் ரிஷாப் பன்ட் ஆகிய இருவரும் உபாதை காரணமாக இல்லாமல் இந்தியா களம் இறங்கவுள்ளது.

ஆனால், அவர்கள் இல்லாத குறையைப் போக்கக்கூடியவர்கள் குழாத்தில் தாராளமாக இருப்பதாக ரோஹித் நம்புகிறார்.

இரண்டு அணிகளிலும் பிரபல்யம் பெற்ற அதிசிறந்த துடுப்பாட்ட வீரர்களும் பந்துவீச்சாளர்களும் இடம்பெறுவதால் இந்த இறுதி டெஸ்ட் போட்டி, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளுக்கு ஒப்பான விறுவிறுப்பை தோற்றுவிப்பதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

இங்கிலாந்து ஆடுகளங்கள் வேகப்பந்தவீச்சுக்கு சாதகமாக அமையும் என்பதால் நான்கு வேகபந்துவீச்சாளர்களை இந்தியா பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.  அப்படி பயன்படுத்தினால் துடுப்பாட்டத்தில் ஒரு வீரரை இழக்கக்கூடும்.

இந்தியாவைப் பொறுத்த மட்டில் ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, செத்தேஷ்வர் புஜாரா, அஜின்கியா ரஹானே ஆகிய நால்வரும் துடுப்பாட்டத்தில் அசத்துவர் என எதிர்பார்க்கப்டுகிறது.

அதேபோன்று டேவிட் வோர்னர், உஸ்மான் கவாஜா, மானுஸ் லபுஸ்சான், ஸ்டீவன் ஸ்மித், அலெக்ஸ் கேரி, கெமரன் க்றீன் ஆகியோர் துடுப்பாட்டத்தில் அதிகப்பட்ச பங்களிப்பை வழங்குவர் என நம்பப்படுகிறது.

ரோஹித் ஷர்மா, ஷுப்மான் கில், சேத்தேஷ்வர் புஜாரா, விராத் கோஹ்லி, அஜின்கியா ரஹானே, இஷான் கிஷான் அல்லது கே. எஸ். பாரத் (விக்கெட் காப்பாளர்), ஆகிய துடுப்பாட்ட வீரர்களும் ரவிந்த்ர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய சுழல்பந்துவீச்சாளர்களும் மொஹமத் ஷமி, மொஹமத் சிராஜ், உமேஷ் யாதவ் ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களும் இந்தியாவின் இறுதி அணியில் இடம்பெறுவர் என கருதப்படுகிறது.

ஒருவேளை, இன்னுமொரு வேகப்பந்துவீச்சாளரை அணியில் இணைப்பதாக இருந்தால் சுழல்பந்துவீச்சாளர்களில் ஒருவரை நீக்கவேண்டிவரும்.

அவுஸ்திரேலிய அணியில் டேவிட் வோர்னர், உஸ்மான் கவாஜா, மார்னுஸ் லபுஸ்சான், ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, கெமரன் க்றீன், பெட் கமின்ஸ், நெதன் லயன், ஜொஸ் இங்லிஸ், ஸ்கொட் போலண்ட், மிச்செல் ஸ்டார்க் ஆகியோர் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு அணியினரில் எந்த அணி சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப திறமையை வெளிப்படுத்துகின்றதோ அந்த அணிக்கே வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது.

https://www.virakesari.lk/article/157132

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பேட் கம்மின்ஸ் : இந்தியாவுக்கு நெருக்கடி தரப்போகும் ஆஸ்திரேலியாவின் 'அரிதான' கேப்டன்

கம்மின்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

6 ஜூன் 2023
புதுப்பிக்கப்பட்டது 55 நிமிடங்களுக்கு முன்னர்

“எதிரணி வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்து, கவனத்தை திருப்பி வெற்றி பெறுவதில் நேரத்தை வீணாக்க எனக்கு விருப்பமில்லை. தரமற்ற விஷயங்களை விரும்பவில்லை”

இந்த வியப்புக்குரிய வார்த்தைகளைக் கூறியது ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ்தான்.

கிரிக்கெட் விளையாட்டில் ஓர் அணி வெல்லும் தறுவாயில் இருக்கும்போது அந்த அணி பேட்ஸ்மேன்களிடம் வம்பு செய்து, அவர்களின் கவனத்தை திசைதிருப்பும் ஸ்லெட்ஜிங் முறைகளில் எதிரணியினர் தந்திர யுத்தியை கையாள்வதுண்டு. அதில் ஆஸ்திரேலிய அணியினர் வல்லவர்கள். அந்த அணிக்கு கேப்டனாக இருக்கும் பாட் கம்மின்ஸிடம் இருந்து இதுபோன்ற வார்த்தை வந்தது வியப்புக்குரியது.

ஆஸ்திரேலிய அணிக்கு கம்மின்ஸ் கடந்த 2021ம் ஆண்டு கேப்டனாக நியமிக்கப்பட்டதும் வியப்புக்குரியதுதான். கடந்த 65 ஆண்டுகளில் ரே லிண்ட்வாலுக்குப்பின் வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது இதுதான் முதல்முறை.

 

ஆஸ்திரேலிய அணிக்கு 47-வது கேப்டனாக நியமிக்கப்பட்ட கம்மின்ஸ், பாரம்பரிய ஆஷஸ் தொடரிலும் கோப்பையை ஆஸ்திரேலிய அணிக்குப் பெற்றுக்கொடுத்துவிட்டார். அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் தங்களின் அணியை கம்மின்ஸ் அழைத்து வந்துள்ளார்.

வரும் 7ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி களம் காண்கிறது.

 

ஆஸ்திரேலிய அணிக்கு வேகப்பந்துவீச்சாளர்களில் ஹேசல்வுட், கம்மின்ஸ் இருவரும் பெரிய தூண்கள். இதில் ஹேசல்வுட் காயத்தால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இருந்து விலகியது அந்த அணிக்குச் சுற்று பின்னடைவுதான். இருப்பினும் அந்தக் குறைதெரியாமல் கம்மின்ஸ் மற்ற பந்துவீச்சாளர்களை வைத்து சமாளித்துவிடுவார் என நம்பலாம்.

தடைகளைத் தகர்த்தவர் கம்மின்ஸ்

கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஏனென்றால், பலவிதமான சிரமங்களைக் கடந்துதான் கம்மின்ஸ் இந்த கேப்டன் பதவிக்கு வந்துள்ளார். ஆஸ்திரேலிய அணியில் மிகக் குறைந்த வயதில் 18 வயது 96 நாட்களிலேயே டெஸ்ட் அணியில் 2011ம் ஆண்டு கம்மின்ஸ் இடம் பெற்றார்.

ஆனால், காயம் காரணமாக அதன்பின் 6 ஆண்டுகள் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் கம்மின்ஸ் விளையாடாமல் வாழ்க்கை சூனியமானது. 2015ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான அணியில் கம்மின்ஸ் இடம் பெற்றாலும் பெரிதாக அவரின் பெயர் பேசப்படவில்லை.

சிறுவயதிலேயே தனது சகோதரியால் வலதுகை நடுவிரலின் பாதியை இழந்தவர் கம்மின்ஸ். இருப்பினும் விடாமுயற்சியால் உலகளவில் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக ஜொலித்து வருகிறார்.

மனம்தளராத கம்மின்ஸ் உள்நாட்டு போட்டிகள், பிக்பாஷ் லீக், ஷெப்பீல்ட் ஷீல்ட் போன்றவற்றில் தொடர்ந்து ஆடி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார். ரியான் ஹாரிஸ் ஓய்வுபெற்றபின் அவரின் இடத்தை நிரப்ப மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் தேவைப்பட்ட போது, கம்மின்ஸ் அந்த இடத்தை நிரப்ப வந்தார். ஏறக்குறைய 6 ஆண்டுகளுக்குப்பின் 2017ம் ஆண்டு மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்குள் இடம் பெற்ற திடமான நம்பிக்கை கொண்டவர்.

திறமையை நிரூபித்தவர்

2017-18ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் வாய்ப்புக் கிடைத்தவுடன் தன் பந்துவீச்சை நிரூபித்த கம்மின்ஸ், 23 விக்கெட்டுகளை வீழ்த்தியும், கடைசி வரிசையில் சிறப்பாக பேட் செய்யக்கூடிய பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றார். அந்த ஆஷஸ் தொடரை 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய வென்றது.

அதன்பின் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இடம் பெற்ற கம்மின்ஸ் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியின் நிலைத்தன்மையான பந்துவீச்சாளர் என்ற நம்பிக்கையைப் பெற்றார்.

2018-19ம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கம்மின்ஸ் 19 விக்கெட்டுகளைச் சாய்த்து பெரும் அச்சுறுத்தலாக இருந்தார். 21 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய கம்மின்ஸ் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் வீழ்த்திய 21-வது பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார்.

சிறந்த வீரர் விருது

கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

2019ம் ஆண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு இரு துணைக் கேப்டன்கள் நியமிக்கப்பட்டபோது, டிராவிஸ் ஹெட், கம்மின்ஸ் நியமிக்கப்பட்டனர். அந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு பயணித்த இலங்கைஅ ணிக்கு எதிராக 10 விக்கெட்டுகளை வீழ்த்தி கம்மினிஸ் சாதனை படைத்தார்.

2019ம் ஆண்டில் சிறந்த வீரருக்கான ஆலன் பார்டர் விருதையும் கம்மின்ஸ் பெற்றார். 2014ம் ஆண்டுக்குப்பின் இந்த விருதைப் பெற்ற முதல் பந்துவீச்சாளராக கம்மின்ஸ் அடையாளம் காணப்பட்டார்.

அதுமட்டுமல்லாமல் வேகப்பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத்துக்கு அடுத்தபடியாக ஐசிசி டெஸ்ட் தரவரிசை பந்துவீச்சாளர்கள் வரிசையில், முதலிடத்தைப் பிடித்ததும் கம்மின்ஸ்தான்.

அதன்பின் நடந்த 2019ம் ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடர், பாகிஸ்தான், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களிலும் தனது பந்துவீச்சால் கம்மின்ஸ் முத்திரை பதித்தார். அதிவேகமாக 31 போட்டிகளில் 150-வது விக்கெட்டுகளையும், 44 போட்டிகளில் 200-வது டெஸ்ட் விக்கெட்டையும் எட்டி கம்மின்ஸ் சாதனை படைத்தார்.

ஒரு நாள் போட்டிகளிலும் இடம் பெற்று தனது துல்லியமான பந்துவீச்சால் எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருந்த கம்மின்ஸ் 27 போட்டிகளில் 50 விக்கெட்டுகளையும், 62 போட்டிகளில் 100வது விக்கெட்டையும் எட்டினார்.

டெஸ்ட் கேப்டன்

2021ம் ஆண்டு, நவம்பர் 26-ம் தேதி ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணிக்கு கம்மின்ஸ் நியமிக்கப்பட்ட போது, பந்தை சேதப்படுத்தும் விவகாரம் , பல்வேறு வீரர்கள் ஃபார்மின்றி இருந்த காலகட்டம், பெய்ன் மீது பாலியல் குற்றச்சாட்டு, வீரர்களிடம் ஒழுங்குநெறி சம்பந்தப்பட்ட சிக்கல்கள், கொரோனா பெருந்தொற்று பரவல் போன்ற கடினமான சூழல்கள் இருந்த காலகட்டம்.

மாறுபட்ட கேப்டன்

கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக வந்தது முதல் இதற்கு முன் இருந்த மற்ற கேப்டன்களில் இருந்து தன்னை வேறுபட்டு செயல்பட்டார். மற்ற கேப்டன்களான ஸ்டீவ் வாஹ், ரிக்கி பாண்டிங், கிளார்க், டிம் பெய்ன் போல் கம்மின்ஸ் தன் முகத்தை சிடுசிடுவென களத்தில் வைத்திருக்கவில்லை.

எப்போதும் புன்னகையுடன், அமைதியான முகத்துடன், சக வீரர்களை அனுசரித்துச் செல்லும் போக்கை கம்மின்ஸ் கடைபிடித்தார். பந்துவீச்சாளர்களுக்கு முழுச் சுதந்திரம் அளித்து அவர்களின் நோக்கத்தின்படி பீல்டிங்கை மாற்றி அமைத்து செயல்பட்டார்.

கம்மின்ஸ் கேப்டன்சியைப் பார்த்து, அவர் விளையாடிய பென்ரித் மவுன்டைன்ஸ் கிளப் பயிற்சியாளர் மைக்கேல் ஹோலோகன் கூறுகையில் “ கம்மின்ஸ் புன்னகை தான் எவ்வளவு பெரியது, அழகானது. அவர் தனது புன்னகையால் அனைவரையும் வசீகரித்துவிடுவார் இதுதான் அவரை சாம்பியனாக வைத்திருக்கிறது” என பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.

மைதானத்தில் எப்போதாவதுதான் உணர்ச்சிவசப்பட்டு சத்தமிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார். மற்ற நேரங்களில் அவரின் புன்னகை மட்டுமே அனைத்துக்கும் பதில் அளிக்கும். எதிரணி வீரர்களிடம் வாக்குவாதத்தை, சூடான கருத்து மோதல்களை, எதிரணி பேட்ஸ்மேன்களை ஸ்லெட்ஜிங் செய்வதை விரும்பாதவர் கம்மின்ஸ்.

ஸ்லெட்ஜிங் குறித்து கம்மின்ஸ் ஒரு ஆங்கில சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் “ ஸ்லெட்ஜிங், சூடான வாக்குவாதம் போன்றவற்றை நான் விரும்புவதில்லை. அந்த தரம் தாழ்ந்த விஷயத்தில் எனக்கு நம்பிக்கையும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் தன்னுடைய சக வீரர்கள் மீது பெரும்பாலும் குறைகூறாமல் அவர்களுக்கு ஆதரவாகவே கம்மின்ஸ் கருத்துகளை கூறக்கூடியவர். தோல்விக்கு கேப்டனாக நான் பொறுப்பேற்கிறேன் என்று சொல்லும் கம்மின்ஸ் தோல்விக்கான பழியை சக வீரர்கள் மீது சுமத்துவதை விரும்பாதவர்.

கடினமான காலம்

கொரோனா பரவல் காலத்தில் ஆஸ்திரேலியாவுக்கு பயணித்து இங்கிலாந்து அணியினர் ஆஷஸ் தொடரில் விளையாடினர். இங்கிலாந்துக்கு எதிராக ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா வென்றாலும், எந்தவிதமான கர்வமும் இன்றி கம்மின்ஸ் பேச்சு அமைந்திருந்தது.

அப்போது அவர் கூறுகையில் “ இந்த ஆபத்தான கொரோனா பரவல் காலத்தில் எங்கள் நாட்டுக்கு வந்து ஆஷஸ் தொடரில் விளையாடிய இங்கிலாந்து அணியினருக்கு எனது நன்றிகள். இந்த இக்கட்டான நேரத்தில் இங்கு விளையாடுவது எளிதானதுஅல்ல என்பது எனக்குத் தெரியும்” என தனது பணிவை வெளிப்படுத்தினார்.

 

சக வீரர்களின் உணர்வுகளை மதிப்பவர் கம்மின்ஸ்

பெரும்பாலும் ஆஸ்திரேலிய அணியினர் முந்தைய காலக்கட்டத்தில் ஆஷஸ் தொடரை வென்றாலும், இந்தியாவுக்கு எதிராக ஆலன்-பார்டர் தொடரை வென்றாலும் மஞ்சள் வண்ணத்தைப் பூசி கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். ஆனால், கம்மின்ஸ் கேப்டனாக வந்தபின், அந்த கொண்டாட்டத்தில் எளிமை காணப்பட்டது. எதிரணியினரின் மனதைப் புரிந்து கொண்டு, தங்களின் கொண்டாட்டத்தை மாற்றி அமைத்தனர்.

குறிப்பாக டெல்லியில் நடந்த டெஸ்டில் இந்திய வீரர் புஜாரா தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது, ஆஸ்திரேலிய அணியினர்அனைவரும் கையொப்பமிட்ட ஜெர்சியை கம்மின்ஸ் வழங்கி அவரை கவுரவப்படுத்தினார். இது இதுவரை இருந்த ஆஸ்திரேலியக் கேப்டன்களில் இருந்தும் கம்மின்ஸ் வேறுபடுத்திக்காட்டியது

ஆஸ்திரேலிய முன்னாள் பந்துவீச்சாளர் ஜெப் லாசன் கம்மின்ஸின் இந்த செயல்பாட்டை புகழ்ந்து தி சிட்னி மார்னிங் ஹெரால்ட் நாளேட்டில் கட்டுரையாக எழுதிஇருந்தார். அதில் “ டெஸ்ட் கிரிக்கெட்டை வாழ்வா சாவா என்ற ரீதியில் இருந்து, அதை ஒரு விளையாட்டாகவும், விளைவுகள் இல்லாத போட்டியாகவும் கம்மின்ஸ் நட்புடன் மாற்றிவிட்டார். உலக சம்பவங்களையொட்டி கம்மின்ஸ் தனது கேப்டன்ஷிப்பை மாற்றுகிறார்.” எனப் புகழ்ந்தார்.

ஷாம்பெய்ன் கொண்டாட்டம் ரத்து

கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் நாதன் லேயான் கூறுகையில் “கம்மின்ஸ் எளிமையான அமைதியான கேப்டன். ஆஸ்திரேலிய அணியினர் அமைதியாக இருந்தபோதுதான், முகத்தில் புன்னகையுடன் இருந்தபோதுதான் அவர்கள் தங்களின் சிறந்த ஆட்டத்தை மகிழ்ச்சியாக ஆடினார்கள் என நான் நினைக்கிறேன். எங்கள் கேப்டன் உள்நாட்டில் சாதித்துவிட்டார்” எனப் பெருமையாகக் குறிப்பிட்டார்.

அதேபோல சக வீரர்களின் உணர்வுகளையும் கம்மின்ஸ் மதிக்கக்கூடியவர். ஆஸ்திரேலிய அணியில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த உஸ்மான் கவாஜா இடம் பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய அணியினர் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஷாம்ப்பெய்ன் மது விருந்து அளிப்பார்கள்.

ஆனால், இஸ்லாம் மதப்படி மது அருந்துவது தடை செய்யப்பட்டது என்பதால், அந்த விருந்துகளில் கவாஜா பங்கேற்காமல் இருந்தார். இதைக் கவனித்த கேப்டன் கம்மின்ஸ், சக வீரர்களிடம் இதை எடுத்துக்கூறி, கவாஜாவுக்காக, ஷாம்பெய்ன் மது விருந்துக் கொண்டாட்டத்தை நடத்தாமல் தவிர்த்தார்.

கம்மின்ஸும், சக வீரர்களும் தனக்காக ஷாம்பெய்ன் கொண்டாட்டத்தை நடத்தவில்லை என்ற செய்தியை கவாஜாவும் மெய்சிலிர்க்கப் பேசினார். கேப்டன்ஸ் கம்மின்ஸ் சகவீரர்களின் உணர்வுகளை மதிக்கும் இந்த செயல்பாடு வீரர்கள் மத்தியில் பெரும் மரியாதையை ஏற்படுத்தியது.

சமூக பொறுப்புள்ள கேப்டன்

கேப்டனாக மட்டுமல்ல, சமூக ரீதியாகவும் கம்மின்ஸ் பொறுப்புடன் செயல்பட்டு வருகிறார். ஆஸ்திரேலிய அரசு கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் பொறுப்புள்ள குடிமகனாக பல்வேறு பிரச்சாரங்களில் கம்மின்ஸ் ஈடுபட்டார்.

அதுமட்டுமல்லாமல் கொரோனா பரவல் காலத்தில் இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்குவதற்காக 50ஆயிரம் டாலர்களை பிரதமர் மோடியிடம், யுனிசெப் அமைப்புடன் இணைந்து கம்மின்ஸ் வழங்கினார்.

ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் ஆசிய அணிகள், ஆப்பிரிக்க அணிகள் இன ரீதியான சீண்டல்களை சந்திக்க நேர்வது தொடர்கதையாகி வருகிறது. அதுபோன்ற இனவெறிக்கு எதிராக “ரிப்லெக்ட் ஃபார்வேர்ட்” என்ற பிரச்சாரத்தையும் கம்மின்ஸ் முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறார்.

"கிரிக்கெட்டில் அரிதான மனிதர்"

கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கம்மினிஸின் இளமைக்காலப் பயிற்சியாளர் ஹூலகன் கூறுகையில் “ கம்மின்ஸ் சர்வதேச கிரிக்கெட் வீரராக மாறிவிட்டபின் எங்கள் கிளப்புக்கு மீண்டும் விளையாட வந்தார். அப்போது, சக வீரர்கள், நண்பர்கள் அவரிடம் விருந்து வைக்க கோரினர். உடனே, தனது கிரெடிட் கார்டைஎடுத்துக்கொடுத்து செலவு செய்யக் கம்மின்ஸ் கூறினார். மனிதநேயம் கொண்ட, உதவி செய்யும் எண்ணம் கொண்ட மனிதர் கம்மின்ஸ், கிரிக்கெட்டில் இதுபோன்ற வீரரைக் காண்பதுஅரிது” என்றார்.

இன்றைய சூழலில் உலகில் எந்தக் கிரிக்கெட் அணியிலும் வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படவில்லை. அந்தப்பெருமை கம்மின்ஸுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. வேகப்பந்துவீச்சாளராக இருந்து கொண்டு கேப்டன் பொறுப்பையும் கவனிப்பது என்பது கடினமானது.

தன்னுடைய பந்துவீச்சில் ரன்கள் அதிகம் சென்றுவிடாமல் தடுக்க வேண்டும், அவ்வாறு எதிரணி பேட்ஸ்மேன் விளாசினாலும் மனம்தளராமல் கேப்டன் பணியைத் தொடர வேண்டும். பந்துவீசி சோர்வடையாமல் கேப்டன் பணியைக் கவனித்து ஆலோசனைகள் வழங்கிட வேண்டும், குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அடிக்கடி வரும் காயத்தில் இருந்து தன்னை காத்துக்கொள்ள வேண்டும். இந்த சவால்களைக் கடந்துதான் வேகப்பந்துவீச்சாளர் கேப்டனாகத் தொடர முடியும் அதை கம்மின்ஸ் சிறப்பாகச் செய்து வருகிறார்

இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக் பிரியர்லி தனது “ தி ஆர்ட்ஆப் கேப்டன்ஸி” நூலில் கூறுகையில் “ வேகப்பந்துவீச்சாளர்களை கேப்டனாக நியமிப்பதை கடைசி வாய்ப்பாக வைக்கவேண்டும். எப்போது பந்துவீச வேண்டும், தனது ஆவேசத்தை ஒன்றாகத் திரட்டி பந்துவீசுவது எப்போது என்பதை தெரிந்திருக்க வேண்டும்.

அணியின் தேவைகளை உணர்ந்து, மனரீதியாக துணிச்சலுடன் செயல்படக்கூடிய அற்புதமான குணங்கள் கொண்ட பந்துவீச்சாளர்தான் கேப்டனாக இருக்க வேண்டும். கேப்டனாக இருப்பவர் பந்துவீசாமல் இருந்துவிடக்கூடாது, அதிகமாகவும் பந்துவீசிவிடக்கூடாது, சுயபாதுகாப்புடன் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த கருத்து கம்மின்ஸுக்கு சரியாகப் பொருந்தி வருகிறது.

கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

அணிக்குள் ஜனநாயகப் போக்கு

கேப்டன்ஷிப்பிலும் அணிக்குள் ஜனநாயக ரீதியான போக்கை கம்மின்ஸ் கடைபிடித்து வருகிறார். தனிப்பட்ட ரீதியில் எந்த முடிவை எடுக்காமல், குழுவாக ஆலோசித்து அனைத்து முடிவுகளையும் எடுப்பதை கம்மின்ஸ் வழக்கமாக வைத்துள்ளார். பீல்டிங் அமைப்பதிலும் தன்னிச்சையாக செயல்படாமல் துணைக் கேப்டன்களிடம் பேசியும், பந்துவீச்சாளர்களிடம் கலந்து பேசியும் கம்மின்ஸ் செயல்படக்கூடியவர். அதேபோல் பந்துவீச்சாளர்களுக்குத் தேவையான சுதந்திரத்தை அளித்து அவர்கள் பீல்டி செய்யவும் கம்மின்ஸ் அனுமதிக்கும் தன்மை கொண்டவர்.

கேப்டன்களில் மிகவும் திறமையானவர் என்று கம்மின்ஸை கூறமுடியாவிட்டாலும், ஆக்ரோஷமான மற்றும் இடைவிடாத முயற்சி, உந்துசக்தி கொண்ட, மனத்தின்மை கொண்ட கேப்டன்.

பந்துவீச்சில் சோடை போகாதவர்

கேப்டன் பொறுப்பு ஏற்ற பின்பும் சரி அதற்கு முன்பும் சரி, கம்மின்ஸ் தனது பந்துவீச்சில் எந்த வகையிலும் சோடை போகவில்லை. கேப்டனாகவும், சாதாரண பந்துவீச்சாளராகவும் சராசரியாக 21 வைத்துள்ளார்.

கம்மின்ஸ் கேப்டனாக இல்லாமல் 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 164 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் கேப்டனாக 15 போட்டிகளில் 53 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு பந்துவீச்சாளராக கேப்டன் பொறுப்பேற்று ஆஷஸ் தொடரை வென்று கொடுத்ததும் கம்மின்ஸ்தான், 2வது ஆஷஸ் வெற்றியையும் கம்மின்ஸ் தலைமை எதிர்நோக்கியுள்ளது. கம்மின்ஸ் தலைமையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் ஆஸ்திரேலிய அணி வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

https://www.bbc.com/tamil/articles/cpr4ly7ggwgo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 40 ஓவர்களுக்கு பழகிய இந்திய வீரர்கள் 5 நாள்களுக்கு தாங்குவார்களா?

விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

4 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று (ஜூன் 7) தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

இதில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்று மதிப்பீடு செய்ய சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி மற்றும் தோனி குறித்து புத்தகங்கள் எழுதியுள்ள எழுத்தாளர் ‘குலு எகேக்கியேல்’லை பிபிசி ஸ்போர்ட்ஸ் கேட்டு கொண்டது.

கவலை தரும் வீரர்களின் காயம்

முன்னணி வீரர்கள் சிலருக்கு ஏற்பட்டுள்ள காயங்களும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு ஆயத்தமாக அவர்களுக்கு போதிய நேரம் இல்லாததும் இந்திய அணிக்கு கவலையளிக்கும் விஷயங்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் 15 பேர் கொண்ட அணியுடன், மூன்று கூடுதல் வீரர்கள் என மொத்தம் 18 பேர் மூன்று குழுக்களாக லண்டன் சென்றடைந்துள்ளனர்.

 

இவர்களில் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட ஐந்து வீரர்கள், கடந்த வாரம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் பங்கேற்று இருந்தனர். ஞாயிற்றுக்கிழமை (மே 28) நடைபெற வேண்டிய அந்த போட்டி, மழை காரணமாக செவ்வாய்க்கிழமை அதிகாலை 1:35 மணிக்கு தான் நிறைவடைந்தது.

அதாவது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்குவதற்கு வெறும் எட்டு நாட்களுக்கு முன்பு தான் ஐபிஎல் தொடர் முடிவடைந்தது. இந்த குறுகிய காலத்தில் எவ்வித பயிற்சி ஆட்டங்களிலும் விளையாடாமல், டி20 கிரிக்கெட் மனநிலையில் இருந்து வெளியே வந்து, டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி வீரர்கள் துரிதமாக தயாராகி விடுவார்கள் என்பது பரவலான நம்பிக்கையாக உள்ளது.

 

நம்பிக்கை நாயகர்கள்

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்டார் பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ள சுப்மன் கில்

டெஸ்ட் கிரிக்கெட்டில் பல நேரங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ள புஜாரா, இந்த நம்பிக்கைக்கு முக்கிய காரணமாக திகழ்கிறார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடாத, இந்திய கிரிக்கெட் அணியின் சில முன்னணி வீரர்களில் ஒருவராகவும் இவர் விளங்குகிறார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடாவிட்டாலும், இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சசெக்ஸ் அணியின் கேப்டனாக இருந்துள்ளார் புஜாரா. சிவப்பு பந்து பயன்படுத்தப்படும் இந்தப் போட்டிகளில் மூன்று சதங்களை விளாசி உள்ளதுடன், பேட்டிங் சராசரியை 68 ஆகவும் வைத்துள்ளார் அவர்.

இருப்பினும், அண்மையில் நடைபெற்று முடிந்துள்ள ஐபிஎல் தொடரில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக மூன்று சதங்கள் விளாசி, தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார் சுப்மன் கில். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் நம்பிக்கை நாயகனாக இவர் திகழ்கிறார் என்று சந்தேகத்துக்கு இடமின்றி கூறலாம்.

 

நீளும் காயமடைந்த வீரர்களின் பட்டியல்

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

முதுகுவலியால் அவதிப்பட்டு வரும் பும்ரா, கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பீரித் பும்ரா மற்றும் சிறந்த விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் காயம் காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

முதுகுவலியால் அவதிப்பட்டு வந்ததன் காரணமாக, 2022 ஜூலை மாதம் முதல் பும்ரா, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. இதற்காக கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்தில் அவர் அறுவை சிகிச்சையும் செய்து கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ரிஷப் பந்த், இனி கிரிக்கெட் விளையாடுவாரா என்பது சந்தேகம்தான்.

இவர்களை போன்றே, இந்திய அணியின் ஸ்டைலிஷ் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாகவும், தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் காலில் ஏற்பட்ட காயத்தின் விளைவாகவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கியமான இந்த போட்டியில் பங்கேற்கவில்லை.

விக்கெட் கீப்பர் யார்?

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் இடத்திற்கு ஸ்ரீகர் பரத் மற்றும் இஷான் கிஷன் இடையே போட்டி நிலவும்

ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நான்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ள, சிறந்த விக்கெட் கீப்பராக கருதப்படும் ஸ்ரீகர் பரத்துக்கு, இஷான் கிஷன் போட்டியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“அணியின் தேர்வாளர்கள், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அணியின் பயிற்சியாளரான ராகுல் திராவிட் பரிட்சார்த்த முறையில் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புகின்றனர்,” என்று கூறுகிறார் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், பிசிசிஐ பொது மேலாளருமான ஷபா கரீம்.

ஆனால், “டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அனுபவம் இல்லாதவருக்கு விக்கெட் கீப்பர் வாய்ப்பை அளிக்கும் விபரீத முயற்சியில் அணி நிர்வாகம் இறங்காது என்று எதிர்பார்க்கலாம்,” எனவும் கூறுகிறார் கரீம்.

காரணம், “இங்கிலாந்து பிட்சுகளில் ஸ்டெம்பை தாண்டி வரும் பந்தை கையாள அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர் தேவை” என்றும் கூறுகிறார் அவர்.

“அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, இந்தியாவில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் விக்கெட் கீப்பராக இஷான் கிஷனுக்கு ஆதரவளித்தேன். ஆனால் அப்போது பரத்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ராகுல் காயமடைந்த பிறகு, விக்கெட் கீப்பர் வாய்ப்பு விரித்திமான் சாஹாவுக்கு அளிக்கப்படும் என்று நினைத்தேன். ஆனால் தற்போது இஷான் கிஷனுக்கும், பரத்திற்கும் இந்த வாய்ப்பு சென்றுள்ளது. இவர்களில் பரத்திற்கு தான் இறுதியில் விக்கெட் கீப்பிங் வாய்ப்பை அணி நிர்வாகம் அளிக்கும்,” என்கிறார் சபா கரீம்.

ஜடேஜாவா, அஸ்வினா?

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இங்கிலாந்து மண்ணில் கடைசியாக ஒரு தொடரில் கோப்பையை வென்று 10 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக 2023ஆம் ஆண்டு இந்திய ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது

இந்திய அணி வெளிநாடுகளில் விளையாடும் போதெல்லாம் ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்களையும் களமிறக்குவது தொடர்பாக அணி நிர்வாகம் அவ்வளவு எளிதில் முடிவெடுக்க முடிவதில்லை. அதாவது, இவர்களில் ஒருவருக்கு மட்டும் 11 பேர் கொண்ட அணியில் இடமளித்துவிட்டு, மற்றொருவருக்கு பதிலாக, வேகப்பந்து வீச்சாளரை அணியில் இடம்பெற செய்யலாமா என்பது குறித்து முடிவெடுப்பது அணி நிர்வாகத்திற்கு தலைவலியாக இருந்து வருகிறது.

“லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடைபெற்றால், மூன்று அல்லது நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னருடன் களமிறங்கலாம்,” என்கிறார் இந்திய அணியின் முன்னாள் லெக் ஸ்பின்னர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்.

ஆனால், “ஓவல் மைதானத்தில் பந்து சற்று மேலெழும்பும் என்பதுடன், இரண்டாவது இன்னிங்சில் விக்கெட்டில் திரும்பவும் செய்யும். எனவே இங்கு நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற, அணியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்க வேண்டியது அவசியம்” என்று வலியுறுத்துகிறார் அவர்.

“ஜடேஜா மற்றும் அஸ்வின் பேட்ஸ்மேன்களாகவும் திகழ்வதால், ஐந்து பேட்ஸ்மேன்கள் மற்றும் இரண்டு ஆல் ரவுண்டர்கள் உடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்குவது சிறப்பாக இருக்கும்” என்கிறார் சிவராமகிருஷ்ணன்.

 

டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஆர்வம்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மீதான ஆர்வம் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ரசிகர்கள் மத்தியில் குறைந்து கொண்டே தான் வந்துள்ளது. ஆனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை 2019 பிப்ரவரியில் ஐசிசி அறிமுகப்படுத்தியதில் இருந்து, இந்தப் போட்டியின் மீது ரசிகர்களுக்கு மீண்டும் மெல்ல மெல்ல ஆர்வம் அதிகரித்து வருகிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முதல் ஆளாக ஆஸ்திரேலியா தகுதி பெற்றது. இதனையடுத்து, இந்த அணியுடன் மோதவுள்ள அணி எது என்பதில் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே நீயா, நானா என்ற போட்டி நிலவியது. இது டெஸ்ட் கிரிக்கெட் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

இந்திய அணி, இங்கிலாந்தில் கடைசியாக 2013 இல் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது. இதையடுத்து கடந்த 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பை எதையும் கைப்பற்றவில்லை. இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்தில் மீண்டுமொரு முறை ஐசிசி கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு இந்திய அணிக்கு தற்போது கிடைத்துள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c9795npjd1vo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதியில் ஹெட், ஸ்மித் துடுப்பாட்டத்தில் அபாரம்; பலமான நிலையில் ஆஸி.

08 JUN, 2023 | 06:20 AM
image
 

(என்.வீ.ஏ.)

இந்தியாவுக்கு எதிராக லண்டன், கெனிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் புதன்கிழமை (07) ஆரம்பமான ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ட்ரவிஸ் ஹெட், ஸ்டீவ் ஆகியோரின் பிரிக்கப்படாத இரட்டைச் சத இணைப்பாட்ட உதவியுடன் அவுஸ்திரேலியா பலம் வாய்ந்த நிலையில் இருக்கிறது.

ஹெட் ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடி சதம் குவித்ததுடன் ஸ்மித் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி சதத்தை அண்மித்துக்கொண்டிருக்கிறார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியா முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 327 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

ஸ்டீவ் ஸ்மித், ட்ரவிஸ் ஹெட் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 251 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவை பலம்வாய்ந்த நிலையில் இட்டனர்.

ஆரம்ப வீரர் உஸ்மான் கவாஜா ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தபோதிலும் டேவிட் வோர்னரும் மார்னுஸ் லபுஸ்சானும் 2ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு சிறு தெம்பைக் கொடுத்தனர்.

அவர்கள் இருவரும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (76 - 3 விக்.)

வோர்னர் 43 ஓட்டங்களுடனும் லபுஸ்சான் 26 ஓட்டங்களுடனும் ஆட்டம்; இழந்தனர்.

பகல் போசன இடைவேளைக்குப் பின்னர் 2ஆவது ஓவரில் லபுஸ்சான் ஆட்டம் இழந்ததும் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித், ட்ரவிஸ் ஹெட் ஆகிய இருவரும் எவ்வித சிரமுமின்றி துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை சரமாரியாக பெற்றவண்ணம் இருந்தனர்.

ஸ்டீவ் ஸ்மித்தைவிட  ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடிய ட்ரவிஸ் ஹெட் 156 பந்துகளை எதிர்கொண்டு 22 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 146 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

மறு பக்கத்தில் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய முன்னாள் அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 227 பந்துகளை எதிர்கொண்டு 14 பவண்டறிகள் அடங்கலாக 95 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

இந்தப் போட்டியில் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடத் தீர்மானித்த இந்தியா முதலாவது ஆட்ட நேரப் பகுதியில் 2 விக்கெட்களையும் பகல் போசன இடைவேளைக்கு சற்று பின்னர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி ஆட்டத்தின் பிடியைத் தன்பக்கம் வைத்திருக்க முயற்சித்தது.

எனினும் அதன் பின்னர் இந்திய பந்துவீச்சாளர்களால் விக்கெட்களை வீழ்த்த முடியாமல் போனது.

சுழல்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வினை அணியில் சேர்க்காமல் விட்டது குறித்து இந்தியா வருத்தப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மொஹமத் சிராஜ் 67 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ஷர்துல் தாகூர் 75 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் மொஹமத் ஷமி 77 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இரண்டு அணிகளும் ஐசிசி உலகக் கிண்ணம் (50 ஓவர்), ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம், ஐசிசி இருபது 20 உலகக் கிண்ணம் ஆகிய மூன்றிலும் சம்பியனான நிலையில் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் வெற்றிபெறும் அணி 4 ஐசிசி கிண்ணங்களையும் சுமந்த முதலாவது அணி என்ற பெருமையைப் பெறும்.

இது இவ்வாறிருக்க, ஒடிஷாவில் இடம்பெற்ற கோர ரயில் விபத்தில் பலியான 250க்கும் மேற்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இப் போட்டியின்போது இரண்டு அணி வீரர்களும் கறுப்பு கைப்பட்டி அணிந்து விளையாடியதுடன் மத்தியஸ்தர்களும் கறுப்புப் பட்டி அணிந்திருந்தனர்.

0706_steve_smith_aus_vs_ind.jpg

0706_travis_head_aus_vs_ind.jpg

https://www.virakesari.lk/article/157213

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அஸ்வின் இல்லாத இந்தியப் பந்துவீச்சை 'புரட்டி எடுத்த' ஆஸ்திரேலியா - ஏன் இந்த 'விஷப்பரீட்சை'?

கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ட்ராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித்

8 ஜூன் 2023, 03:34 GMT

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நேற்றைய முதல்நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் இருவரும் ஆதிக்கம் செய்து ரன்களைக் குவித்தனர்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 85 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்துள்ளது. அபாரமாக ஆடிய டிராவிஸ் ஹெட் சதம் அடித்து 146-ரன்களுடனும்(156பந்துகள், 22பவுண்டரிகள்,ஒரு சிக்ஸர்), ஸ்வீடன் ஸ்மித் 95 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

ஸ்மித், ஹெட் இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 251 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, ஆஸ்திரேலிய அணியை வலுவான இடத்தை நோக்கி அழைத்துச் சென்றுள்ளனர்.

 

பல் இல்லாத இந்தியப் பந்துவீச்சு

இந்திய அணியின் பந்துவீச்சு நேற்று ஹெட், ஸ்மித்திடம் எடுபடவில்லை. தொடக்கத்தில் ஷமி, சிராஜ் கட்டுக்கோப்பாக வீசி, ஆட்டத்தை இந்தியா கையில் வைத்திருந்தது. ஆனால், தாக்கூர், உமேஷ், ஜடேஜா பந்துவீச்சு எதிர்பார்த்த அளவு கைகொடுத்தாததால் ஆட்டம் ஆஸ்திரேலியா பக்கம் சென்றது.

 

ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் சேர்த்து தடுமாறி இந்திய அணி ஆதிக்கம் செலதுத்தியது. ஆனால், ஸ்மித், ஹெட் இருவரும் ஜோடி சேர்ந்து நங்கூரமிட்டு, இந்தியப் பந்துவீச்சை வெளுத்து வாங்கி ஆதிக்கம் செய்யத் தொடங்கினர்.

அதிரடியாக ஆடிய ஹெட்

கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

குறிப்பாக டிராவிஸ் ஹெட் டெஸ்ட் போட்டி போன்று ஆடாமல் ஒருநாள் போட்டிபோல் பேட்டிங் செய்து, ஸ்ட்ரைக் ரேட்டை 100 ஆக வைத்திருந்தார். டிராவிஸ் ஹெட் இதுவரை ஆஸ்திரேலியாவுக்கு வெளியே எந்த வெளிநாட்டிலும் சதம் அடித்தது இல்லை. முதல்முறையாக ஹெட் நேற்று வெளிநாட்டில் சதம் அடித்தார், அதிலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அடிக்கப்பட்ட முதல் சதமும் இதுவாகும்.

இந்த டெஸ்ட் போட்டியில் பெரிய விவாதப் பொருளாக மாறியிருப்பது இந்திய அணி ரவிச்சந்திரன் அஸ்வினை எடுக்காமல், 4 வேகப்பந்துவீச்சாளர்கள், ஒரே ஒரு சுழற்பந்துவீச்சாளருடன் களமிறங்கி இருப்பதுதான். ஆஸ்திரேலிய அணியில் 4 இடதுகை பேட்ஸ்மேன்கள் இருக்கும்போது, அவர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் அஸ்வினுக்கு இணையாக பந்துவீசும் சுழற்பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லை.

தவறான கணிப்பா?

கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக 3 வேகப்பந்துவீச்சாளர்கள், 2 சுழற்பந்துவீச்சாளர்களுடன் இறங்கி இந்திய அணி தோல்வி அடைந்தது. அதை மனதில் வைத்தும், ஆடுகளத்தில் 6மில்லிமீட்டருக்கு புற்கள் இருப்பதால், வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்று நம்பி அஸ்வினுக்குப் பதிலாக உமேஷ் யாதவை இந்திய அணிக் கேப்டன் ரோஹித் சர்மா தேர்ந்தெடுத்தார். ஆனால், ஷமி, சிராஜ் தவிர தாக்கூர், உமேஷ் பந்துவீச்சு பெரிதாக எடுபடவில்லை.

2021ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 வேகப்பந்துவீச்சாளர்கள், ஒரு சுழற்பந்துவீச்சாளருடன் களமிறங்கி 151 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதை மனதில் வைத்து இந்த டெஸ்ட் போட்டியிலும் 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியது. இந்த முடிவு சரியானதா அல்லது தவறா என்பது அடுத்துவரும் நாட்களில் தெரியவரும்

ஆனால், உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் எளிதாகக் கையாண்டனர். உமேஷ், ஷர்துல் இருவரும் சேர்ந்து 32 ஓவர்கள் வீசி 129 ரன்கள் வாரி வழங்கினர். பெரும்பாலான பவுண்டரிகள் இருவரின் பந்துவீச்சில்தான் டிராவிஸ் பெட், ஸ்மித் அடித்தனர்.

டெஸ்ட் போட்டிகளில் அதிகமான பவுண்டரிகள் அடிக்க விடுவது, பீல்டிங் செய்யும் அணிக்கு கடைசிநாளில் இலக்கை விரட்டுவதில் சிக்கலை ஏற்படுத்தும். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் மட்டும் ஹெட் 22பவுண்டரி, ஸ்மித்14 என மொத்தம் 36 பவுண்டரிகளை இந்திய அணியினர் வாரி வழங்கினர்.

சிராஜ், ஷமி மிரட்டல்

கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

முகம்மது ஷமி

புதிய பந்தில் ஷமி, சிராஜ் இருவரும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை மிரட்டும் விதத்தில் பந்துவீசினர். ஆட்டம் தொடங்கிய முதல் ஒருமணிநேரத்தில் 12 ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலிய அணி சேர்க்க முடிந்தது, உஸ்மான் கவாஜா விக்கெட்டையும் பறிகொடுத்திருந்தது.

ஆனால், ஷமி, சிராஜ் இருவருக்குப் பின் உமேஷ், ஷர்துல் தாக்கூர் பந்துவீச வந்தபின், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பது எளிதாக அமைந்தது. டெஸ்ட் போட்டிக்கு பந்துவீசிவது போன்று இல்லாமல் இருவரும் ஓவருக்கு 2 முதல் 3 பந்துகள் ஓவர் பிட்சாகவும், எளிய ஷாட்களை ஆடுவதற்கு வசதியாக தவறான பந்துகளையும் வீசியதால் ரன் சேர்ப்பு எளிதாக இருந்தது.

சிராஜ், ஷமி ஓவரின்போது ரன் சேர்க்காமல் சிரமப்பட்ட வார்னர், தாக்கூர், உமேஷ் பந்துவீச்சை வெளுத்து வாங்கி பவுண்டரிகளாக விளாசினார். ஆனால், வார்னர் 43 ரன்கள் சேர்த்தபோது, விக்கெட் கீப்பர் பரத்திடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். மதிய உணவு இடைவேளைக்கு செல்லும் முன்பாக, ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

உணவு இடைவேளைக்குப்பின் ஸ்மித், லாபுஷேன் ஆட்டத்தைத் தொடங்கினர். முகமது சிராஜ் வீசிய பந்து பவுன்ஸ் ஆகி, லாபுஷேன் இடதுகை பெருவிரலில் பந்து தாக்கியது. பந்து கைவிரலில் பட்டவுடன் லாபுஷேன் பேட்டை தூக்கி எறிந்துவலியால் துடித்தார். அதன்பின் சிறிய முதலுதவி சிகிச்சைக்குப்பின் லாபுசேன் ஆட்டத்தைத் தொடர்ந்தார்.

ஆனால், ஷமியின் அருமையான லெக் கட்டர் பந்துவீச்சை கணித்து ஆடத் தவறியதால் லாபுஷேன் 23 ரன்களில் க்ளீன் போல்டாகி விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஸ்மித், ஹெட் நங்கூர கூட்டணி

4வது விக்கெட்டுக்கு ஸ்மித், ஹெட் இருவரும் சேர்ந்து அணியை மீட்டெடுத்து, ஸ்கோரை உயர்த்தத் தொடங்கினர். இருவரும் ஜோடி சேர்ந்தபின், ஆட்டத்தில் மாற்றம் காணப்பட்டது.

ஹெட் இந்தியப் பந்துவீச்சை அடித்து ஆட, ஸ்மித்தும் தனது ரன் சேர்ப்பில் சற்று வேகக்தை அதிகப்படுத்தினார். இருவரின் ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணியின் ரன்ரேட் ஓவருக்கு 4 ரன்கள் என்ற வேகத்தில் சென்றது.

டிராவிஸ் ஹெட் 60 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார், ஸ்மித் 144 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ் பந்துவீச்சை ஸ்மித், ஹெட் இருவரும் நன்றாகப் பயன்படுத்தி பவுண்டரிகளாக விளாசினர்.

இதில் உமேஷ் மட்டும் 14 ஓவர்கள் வீசி 54 ரன்களும், தாக்கூர் 18ஓவர்கள் வீசி 75 ரன்களையும் வாரி வழங்கினர். ஜடேஜ் பந்துவீச்சும் பெரிதாக ஸ்மித், ஹெட்டுக்கு தொந்தரவாக அமையவில்லை. வேகப்பந்துவீச்சில் ரன் சேர்க்க சிரமப்பட்ட ஸ்மித், ஜடேஜா ஓவரை நன்கு பயன்படுத்திக்கொண்டு பவுண்டரிகளாக விளாசினார்.

ரன் சேர்க்கும் வேகம் அதிகரிப்பு

கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மாலை நேர தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்தது. அதன்பின் ஓவருக்கு ஒருபவுண்டரி விளாசிய ஹெட் 106 பந்துகளில் சதம் அடித்தார்.

ஆஸ்திரேலிய அணி பிற்பகல் தேநீர் இடைவேளையின்போது 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள்தான் சேர்த்திருந்தது, அதன்பின் 2வது மற்றும் 3வது செஷனில் ஹெட், ஸ்மித் இருவரும் தாக்குதல் ஆட்டத்தைக் கையாண்டு 35 ஓவர்களில் 125 ரன்கள் சேர்த்தனர்.

இந்தியப் பந்துவீச்சாளர்கள் 5 பேரும் சேர்ந்துநேற்று முதல்நாளில் 140 மோசமான பந்துகளை வீசி ஷாட்களை ஆடுவதற்கு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு வழிகாட்டியுள்ளனர். சிராஜ், ஷமி இருவரும் பந்துவீசி 234 பந்துகளில் 19 பவுண்டரிகள் மட்டுமே வழங்கினர். ஆனால், தாக்கூர், உமேஷ் இருவரும் சேர்ந்து 192 பந்துகளை வீசி 23 பவுண்டரிகளை வாரிவழங்கினர்.

அஸ்வினை பிளேயிங் லெவனில் எடுக்காதது தவறா?

அஸ்வினை ப்ளேயிங் லெவனில் சேர்க்காமல் அமரவைத்தது தவறு என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், சேனல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில் “ ஆடுகளம் நன்றாக வறண்டு, புற்களுடன் இருப்பதால், அஸ்வினை இந்திய அணி ப்ளேயிங் லெவனில் எடுத்திருக்க வேண்டும். ஆஸ்திரேலிய அணியில் 4 இடதுகை பேட்ஸ்மேன்கள் இருக்கும்போது, அஸ்வின் இருந்திருந்தால், அவர்களுக்கு பெரிய தொந்தரவாக அவரின் பந்துவீச்சு இருந்திருக்கும். ஜடேஜாவின் பந்துவீச்சைவிட அஸ்வின் பந்துவீச்சு இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருந்திருக்கும்” எனத் தெரிவித்தார்.

 

இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறுகையில் “இதுபோன்ற முக்கியமான ஆட்டத்தில் சுழற்பந்துவீச்சில் வல்லவரான அஸ்வினை இந்திய அணி சேர்க்காமல் விட்டது தவறு. ஓவல் ஆடுகளம் கடைசி நாட்களில் சுழற்பந்துவீச்சுக்கு ஆதரவாக மாறும்போது, அஸ்வின் போன்ற பந்துவீச்சாளர்கள் அவசியம் தேவை. அஸ்வின் இருந்திருந்தால், ஓவலில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியிருக்கும்” எனத் தெரிவித்தார்.

"அஸ்வின் விக்கெட் டேக்கர்"

கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கூறுகையில் “ ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய மண்ணிலும், அவர்கள் நாட்டிலும் அஸ்வினின் பந்துவீச்சு 2018ம் ஆண்டிலிருந்து சிறப்பாக இருந்துள்ளது.

வெளிநாடுகளில் அஸ்வின் சிறப்பாக பந்துவீ்சியுள்ளார். வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளத்தில் கடந்தகாலங்களில் அஸ்வின் சிறப்பாகப் பந்துவீசியிருக்கும்போது, ஏன் இதில் வாய்ப்பு வழங்கவில்லை. பும்ரா இல்லாததால் 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் ஆட நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.

கூடுதலாக ஆல்ரவுண்டருக்காக ஷர்துல் தாக்கூரை எடுத்திருக்கலாம், அஸ்வினுக்குப் பதிலாக உமேஷ் யாதவை எடுக்க வேண்டியதன் அவசியம் என்ன. கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின்போது, சவுத்தாம்டன் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 2 சுழற்பந்துவீச்சாளர்கள், 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது.

ஆனால், நியூசிலாந்து 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் வந்து, கோப்பையை வென்றது. அதுபோல் இந்திய அணி செயல்பட்டால் அது தவறானது. ரோஸ்பவுல் ஆடுகளம் வேறு, ஓவல் ஆடுகளம் வேறு. பல்வேறு நல்ல காரணங்களுக்காக அஸ்வினை எடுத்திருக்கலாம், அவரால் நன்றாக பேட்டிங் செய்யவும் முடியும், தேவைப்படும் நேரத்தில் விக்கெட் வீழ்த்தும் திறமையுடையவர் ” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c97n4lg1dqyo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவுஸ்திரேலியாவுடனான உலக டெஸ்ட் இறுதிப் போட்டியில் இந்தியா தடுமாற்றம்

09 JUN, 2023 | 07:39 AM
image
 

 

(நெவில் அன்தனி)

லண்டன் கெனிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் குவித்த 469 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் இந்தியா மிக மோசமான நிலையில் இருக்கிறது.

போட்டியின் இரண்டாம் நாள் (வியாழக்கிழமை 08) ஆட்டம் முடிவுக்கு வந்தபோது இந்தியா அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முதல் இன்னிங்ஸில் மேலும் 5 விக்கெட்கள் மீதம் இருக்க அவுஸ்திரேலியாவைவிட 318 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா பின்னிலையில் இருக்கிறது.

இந்தியா தனது முதலாவது இன்னிங்ஸை எதிர்பார்த்தவாறு சிறப்பாக ஆரம்பிக்கவில்லை.

துடுப்பாட்டத்தில் அசத்துவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மான் கில் அநாவசியமாக விக்கெட்டைத் தாரைவார்த்தார்.

ஸ்கொட் போலண்ட் வீசிய பந்தை புரிந்துகொள்ள முடியாதவராக விடுகை கொடுக்க விளைந்து 13 ஓட்டங்களுடன் போல்ட் ஆனார்.  (30- 1 விக்.) அதுவே இந்திய அணியின் சரிவிற்கான ஆரம்பமாக அமைந்தது.

கில் ஆட்டம் இழந்த அதே மொத்த எண்ணிக்கையில் ரோஹித் ஷர்மா 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அவுஸ்திரேலிய அணித் தலைவர் பெட் கமின்ஸின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஷர்மா களம் விட்டகன்றார்.

சிரேஷ்ட வீரர்களான சேத்தேஷ்வர் புஜாரா, விராத் கோஹ்லி ஆகிய இருவரும் இந்திய அணியைக் கட்டியெழுப்புவர் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கெமரன் க்றீனின் பந்துவீச்சில் புஜாரா போல்ட் ஆனார். அவர் 14 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.

தொடர்ந்து மிச்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சில் ஸ்டீவன் ஸ்மித்திடம் ஸ்லிப் நிலையில் பிடிகொடுத்த விராத் கொஹ்லி 14 ஓட்டங்களுடன் வெளியேறினார். (71 - 4 விக்.)

அதன் பின்னர் அஜின்கியா ரஹானேயும் ரவிந்த்ர ஜடேஜாவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 71 ஓடடங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறிய உற்சாகத்தைக் கொடுத்தனர்.

நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ரவிந்த்ர ஜடேஜா, நெதன் லயனின் பந்துவீச்சை சரியாக எதிர்கொள்ளத் தவறி ஸ்மித்திடம் ஸ்லிப் நிலையில் பிடிகொடுத்து 48 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அஜின்கியா ரஹானே 29 ஓட்டங்களுடனும் ஸ்ரீகர் பரத் 5 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சில் மிச்செல் ஸ்டார்க், பெட் கமின்ஸ், ஸ்கொட் போலண்ட், கெமரன் க்றீன், நெதன் லயன் ஆகிய ஐவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். நெதன் லயன் தனது 2ஆவது ஓவரில் விக்கெட் வீழ்த்தியது விசேட அம்சமாகும்.

முன்னதாக போட்டியின் இரண்டாம் நாள் காலை தனது முதல் இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 327 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்து அவுஸ்திரேலியா சகல விக்கெட்களையும் இழந்து 469 ஓட்டங்களைப் பெற்றது.

இரண்டாம் நாள் காலை 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 361 ஓட்டங்களைப் பெற்றிருந்த அவுஸ்திரேலியா கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 108 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 7 விக்கெட்களை இழந்து 469 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

முதல் நாள் சதம் குவித்து நாயகனான ட்ரவிஸ் ஹெட், இரண்டாம் நாள் காலை நீண்ட நேரம் தாக்குப்பிடிக்காமல் 163 ஓட்டங்களுடன்; மொஹமத் ஷமியின் பந்துவீச்சில் விக்கெட் காப்பாளர் ஸ்ரீகர் பரத்திடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.

ட்ரவிஸ் ஹெட் 4ஆவது விக்கெட்டில் ஸ்டீவன் ஸ்மித்துடன் 285 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

தொடர்ந்து கெமரன் க்றீன் (6), மொஹமத் ஷமியின் பந்துவீச்சில் கில்லிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். (376 - 5 விக்)

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 11 ஓட்டங்கள் சேர்ந்தபோது ஷர்துல் தாகூரின் பந்துவீச்சில் ஸ்டீவன் ஸ்மித் ஆட்டம்; இழந்தார். அவர் 19 பவுண்டறிகளுடன் 121 ஓட்டங்களைக் குவித்தார்.

மிச்செல் ஸ்டார் 5 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார். (402 - 7 விக்)

எனினும் அலெக்ஸ் கேரியும் பெட் கமின்ஸும் 8ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலப்படுத்தினர். கேரி 48 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஜடேஜாவின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் வெளியேறினார்.

பின்வரிசையில் பெட் கமின்ஸ் (9), நெதன் லயன் (9), ஸ்கொட் போலண்ட் (1 ஆ.இ.) எவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை.

இந்திய பந்துவீச்சில் மொஹமத் சிராஜ் 108 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஷர்துல் தாகூர் 56 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

மூன்றாம் நாள் ஆட்டம் வெள்ளிக்கிழமை தொடரும்.

https://www.virakesari.lk/article/157309

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் 'வலை விரித்துப் பிடித்தது' எப்படி?

விராட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி செய்திகளுக்காக
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஆட்டமிழந்து அணியை சிக்கலில் ஆழ்த்தியுள்ளனர்.

பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை புரட்டி எடுத்தது. இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பாலோ-ஆனை தவிர்க்குமா என்ற இக்கட்டான கட்டத்தில் இருக்கிறது. 2-ம்நாளான நேற்று மட்டும் இரு அணிகளிலும் சேர்த்து 12 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளன.

அஸ்வினை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்ற விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் இ்ப்போது இந்திய பேட்ஸ்மேன்களின் சொதப்பலான பேட்டிங், வீரர்கள் தேர்வு அந்த விவாகாரத்துக்கு மேலும் எரியும் தீயில் எண்ணெயை வார்த்திருக்கிறது.

 

டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம்

இந்திய அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, கோலி ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். ஜடேஜா ஓரளவுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் பேட் செய்தார். ரஹானே(29), ஸ்ரீகர் பரத்(5) ஆகியோர் களத்தில் இருப்பதால் ஓரளவுக்கு நம்பிக்கை இருக்கிறது.

 

பாடம் எடுத்த ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள்

ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார்க், போலந்து, கம்மின்ஸ், கிரீன், லேயான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி இந்திய பேட்டிங்கை நிலைகுலையச் செய்தனர். இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு பாடம் எடுத்த ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் ஒவ்வொரு பந்தையும் லைன் லென்த்தில் எவ்வாறு வீசுவது, பவுன்ஸர்களை வீசுவது, அவுட் சைட் ஆப்சைடில் வீசுவது குறித்து பாடம் நடத்துவதுபோல் பந்துவீசினர்.

ஸ்மித், டிராவிஸ் ஹெட்டையும் பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் ஏறக்குறைய 67 ஓவர்களை எடுத்துக்கொண்டனர். ஆனால், இந்திய அணி சார்பில் எந்த பார்ட்னர்ஷிப்பையும் அமைக்கவிடாமல் பேட்டிங் வரிசையைக் குலைப்பது குறித்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் பாடம் எடுத்துவிட்டனர்.

ஆஸ்திரேலியத் தரப்பில் ஸ்மித்(123), டிராவிஸ் ஹெட்(163) இருவரும் சதம் அடித்து பெரிய ஸ்கோருக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.

ஓவலில் விளையாடுவது எனக்குப் பிடிக்கும்

இந்தியா, கிரிக்கெட், ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

சதம் அடித்து ஆட்டமிழந்தபின் ஸ்மித் கூறுகையில் “ இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். கிரிக்கெட் விளையாட இது சிறந்த இடம். இந்த ஆண்டு கோடைகாலம் எனக்கு சிறப்பாக, சதத்தோடு தொடங்கியுள்ளது. அதிலும் ஓவல் மைதானத்தில் விளையாடுவதை நான் மிகவும் விரும்புவேன்.

உலகில் மற்ற இடங்களைவிட ஓவல் மைதானத்தில் என்னுடைய ரெக்கார்டு சிறப்பாகவே இருக்கிறது என நினைக்கிறேன். பேட்டிங் செய்வதற்கு நல்ல ஆடுகளம், நீங்கள் அடிக்கும் ஷாட்களுக்கு மதிப்பு இருக்கும், மைதானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அடித்து ஆட முடியும்” எனத் தெரிவித்தார்

பாலோ-ஆனைத் தவிர்க்க எத்தனை ரன் தேவை

2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 38 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்துள்ளது. இன்னும் பாலோ-ஆனைத் தவிர்க்க இந்திய அணிக்கு 118 ரன்கள் தேவைப்படுகிறது.

3-வது நாளான இன்று காலை நேரத்தில் டியூக் புதிய பந்தில் வீசும்போது பந்து எகிறும், பவுன்ஸ் அதிகமாக இருக்கும். ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சை பரத், ரஹானே இருவரும் சமாளித்து முதல் செசனை கடத்திவிட்டால், தப்பித்துவிடலாம். இல்லாவிட்டால், இன்று உணவு இடைவேளைக்குள் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸை ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் முடித்துவிடுவார்கள்.

முன்னதாக ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 469 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரைவிட இந்திய 318 ரன்கள் குறைவாக இருக்கிறது. ஒருவேளை இந்திய அணி பாலோ-ஆனை தவிரப்பதற்கு தேவையான ரன்களுக்குள் ஆட்டமிழந்துவிட்டால், தொடர்ந்து பாலோ-ஆனை ஆஸ்திரேலிய அணி வழங்குமா அல்லது, தொடர்ந்து பேட் செய்யுமா என்பது தெரியாது.

கட்டம் கட்டிய ஆஸ்திரேலியா

இந்தியா, கிரிக்கெட், ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை எவ்வாறு ஆட்டமிழக்கச் செய்வது என்று ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் நன்கு “ஹோம் ஓர்க்” செய்து களத்தில் இறங்கினர். ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் ஒவ்வொரு வியூகம் அமைத்து, அதற்கு ஏற்றார்போல் பந்துவீசி காலி செய்தனர்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரிலிருந்தே ஃபார்மில்லாமல் தடுமாறி வந்தார். அதிகவேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் ஓவல் ஆடுகளத்தில் ரோஹித் சர்மா எவ்வாறு தாக்குப்பிடிப்பார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சனம் வைத்திருந்தனர். அதற்கு ஏற்றார்போல், கம்மின்ஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி ரோஹித் சர்மா 15 ரன்னில் வெளியேறினார்.

ரோஹித் சர்மாவை வெளியேற்ற நன்கு திட்டமிட்டு ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கம்மின்ஸ் செயல்பட்டார். ரோஹித் சர்மாவை குழப்பும் வகையில் லென்த் பால், பவுன்ஸர், அவுட்சைட் ஆப் ஸ்டெம்ப், லெக்சைட், ஷார்ட் பிட்ச் என பந்துவீசி அவரை குழப்பி, திடீரென ஒரு பந்தை ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் வீசியபோது, ரோஹித் சர்மாவால் என்னசெய்வதென்று தெரியாமல் “ப்ளம்ப் எல்பிடபிள்யு” வாங்கி வெளியேறினார்.

தவறான கணிப்பில் கில், புஜாரா

இந்தியா, கிரிக்கெட், ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐபிஎல் தொடரிலிருந்து முரட்டுத்தனமான ஃபார்மில் இருந்த சுப்மான் கில்லுக்கும் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் வலை விரித்திருந்தனர். சுப்மான் கில்லுக்கு ஓவர் பிட்சாகவே தொடர்ந்து போட்லாந்து பந்துவீசினார். இதனால் போலந்து பந்துகளை பெரும்பாலும் “லீவ்இட்” செய்து கில் ஆடி வந்தார்.

ஆனால், கில் எதிர்பாராத வகையில் ஒரு பந்தை போலந்து உள்ளே எடுத்துவந்து, அதை லெக்கட்டராக வீசினார். வழக்கமான ஓவர் பிட்ச் பந்து என நினைத்த கில் பந்தை அடிப்பதா லீவ் செய்வதா என்ற குழப்பத்துடனே லீவ் செய்தார். ஆனால், பந்து ஆப் ஸ்டெம்பின் மீது பட்டு க்ளீன் போல்டாகியது. கில்13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

புஜாராவும், விராட் கோலியும் ஜோடி சேர்ந்தபின் மாலை தேநீர் இடைவேளைவரை தாக்குப்பிடித்ததால், ஓரளவுக்கு நம்பிக்கை இருந்தது. அதிலும் கடந்த 3 மாதங்களாக கவுன்டி போட்டிகளில் புஜாரா ஆடி வருவதால், அவர் மீது பெருத்த எதிர்பார்ப்பு இருந்தது.

சுப்மான் கில்லை எவ்வாறு கட்டம்கட்டி வெளியேற்ற எப்படி பந்துவீசப்பட்டதோ அதே போல் புஜாராவுக்கும் கேமரூன் க்ரீன் பந்துவீசினார். கேமரூன் வீசிய பந்தில் எதை டிபென்ஸ் ஆடுவது, எந்தப் பந்தை அடித்து ஆடுவது, எதை லீவ் செய்வது எனத் தெரியாமல் புஜாரா குழப்பத்தில் இருந்தார்.

புஜாரா யோசித்து செயல்படுவதற்குள் கேமரூன் வீசிய ஒரு பந்து திடீரென ஆப் ஸ்டெம்பை பதம் பார்க்க க்ளீன் போல்டாகி 14 ரன்னில் வெளியேறினார். 50 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.

புஜாரா, கில் இருவருமே பந்தை சரியாகக் கணிக்கவில்லை. அனைத்துப் பந்துகளுமே அவுட் சைட் ஆப்டெம்ப்பில் செல்லும் என்று “லீவ்” செய்வதிலேயே இருந்தனர். ஆனால், திடீரென ஒரு பந்து ஸ்விங் ஆகியபோது, செய்வதறியாமல் திகைத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

கோலியும் அரவுண்ட் விக்கெட்டும்

இந்தியா, கிரிக்கெட், ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

விராட் கோலியின் பலவீனத்தை நன்கு அறிந்திருந்த ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்கள் மிட்ஷெல் ஸ்டார்க்கை பயன்படுத்தினர். அரவுண்ட் ஸ்டெம்பில் இருந்து வீசப்படும் பந்தை ஆடுவதில் கோலி சிரமப்படுவார் என்பதை அறி்ந்து ஸ்டார்க் மூலம் கட்டம் கட்டினர்.

அதேபோல ஸ்டார்க் லென்த்தில் வீசிய பந்தை கோலி பிரன்ட்புட் மூலம் தடுத்து ஆட முயன்றார். ஆனால் கோலியின் பேட்டில் பந்து முனையில் பட்டு 2வது ஸ்லிப்பில் இருந்த ஸ்மித்திடம் கேட்ச்சானது. கோலி 14 ரன்களில் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.

5-வது விக்கெட்டுக்கு ரஹானே- ஜடேஜா ஜோடி ஓரளவுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் பேட் செய்தனர். ஆஸ்திரேலிய பந்துவீச்சை நிதானமாகக் கையாண்ட இருவரின் ஆட்டத்தால் ஸ்கோர் மெல்ல உயர்ந்தது.

ரஹானேவுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

குறிப்பாக ரஹானே நேற்று அதிர்ஷ்டத்தால் ஆட்டமிழப்பதில் இருந்து தப்பித்தார். கம்மின்ஸ் வீசிய புல்லர் லென்த் பந்தில் ரஹானே பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்சானது. நடுவரும் அவுட் வழங்கியநிலையில், ரஹானே டிஆர்எஸ் அப்பீல் செய்தார்.

ஆனால், 3வது நடுவர் பார்த்தபோது, கம்மின்ஸ் வீசியது நோ-பால் எனத் தெரியவந்தது. இதையடுத்து, ரஹானேவுக்கு வழங்கப்பட்ட அவுட்திரும்பப் பெறப்பட்டு அதிர்ஷ்டத்தால் தப்பித்தார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குப்பின் டெஸ்ட் போட்டிக்குத் திரும்பிய ரஹானே மிகுந்த கவனத்துடன், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தினார். ஜடேஜா அவ்வப்போது பவுண்டரிகளை விளாசி ரன்களைச் சேர்த்தார். இருவரின் பார்ட்னர்ஷிப் 50 ரன்களைக் கடந்ததால் இந்திய அணியை மீட்டுவிடுவார்கள் என ரசிகர்கள் எண்ணினர்.

ஜடேஜா ஆறுதல்

ஆனால், இந்த நம்பிக்கையை நாதன் லேயான் உடைத்தெறிந்தார். ஜடேஜா 48 ரன்கள் சேர்த்திருந்தபோது, லேயான் வீசிய பந்தில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு இருவரும் 71 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ரஹானே 29, பரத் 5 ரன்களில் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

முன்னதாக, ஆஸ்திரேலிய அணி முதல்நாளில் 3 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் சேர்த்திருந்தநிலையில் நேற்றைய 2-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தது. ஸ்மித் 95 ரன்களிலும், ஹெட் 145 ரன்களிலும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

ஸ்மித் வரலாற்று சதம்

இந்தியா, கிரிக்கெட், ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆட்டம் தொடங்கியவுடன் சிராஜ் வீசிய முதல் ஓவரில் இரு பவுண்டரிகளை விளாசி, ஸ்மித் தனது 31-வது சதத்தை நிறைவு செய்தார். இந்தியாவுக்கு எதிராக ஸ்மித் தனது 9-வது சதத்தை பதிவு செய்தார். ஜோ ரூட்டுக்கு அடுத்தார்போல் இந்திய அணிக்கு எதிராக அதிக சதம் அடித்தவீரர் ஸ்மித் மட்டும்தான்.

அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து மண்ணில்ஸ்மித் அடித்த 7-வது சதம் இதுவாகும். ஆஸ்திரேலியாவின் பிராட் மேன் 11 சதங்களும், ஸ்டீவ் வாஹ் 7 சதங்களும் அடித்திருந்தநிலையில் அவரோடு ஸ்மித்தும் இணைந்தார்.

ஸ்மித்துக்கு இது 31-வது டெஸ்ட் சதமாகும். ஆஸ்திரேலியாவில் அதிக சதங்கள் அடித்த வீரர்களில் 3வது இடத்தை ஸ்மித் பெற்றுள்ளார். பாண்டிங்(41), ஸ்டீவ் வாஹ்(32) ஆகியோர் முதலிரு இடங்களில் உள்ளனர்.

ஸ்மித்தை நோக்கி பந்தை எறிந்த சிராஜ்

சிராஜ் முதல் ஓவரின் 4வது பந்தை வீச வந்தபோது, ஸ்மித்தின் கண்கள் சூரியஒளியில் கூசியதால் திரையை ஒதுக்கக்கோரி நகர்ந்தார். இதனால், பந்துவீச ஓடி வந்த சிராஜ், கோபத்தால் திடீரென பந்தை ஸ்டெம்பை நோக்கி எறிந்துவிட்டு திரும்பினார்.

சிராஜின் இந்த செயல் ஸ்மித் சதம் அடித்துவிட்டார், டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை என்ற விரக்தியின் வெளிப்பாடாகவே கருதப்பட்டது.

மைல்கல் பார்ட்னர்ஷிப்

அதைத் தொடர்ந்து, டிராவிஸ் ஹெட்டும் பவுண்டரி அடித்து 150 ரன்களை எட்டினார். அதன்பின் சிராஜ் வீசிய பந்தில் டிராவிஸ் ஹெட் 163 ரன்களில் பரத்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 4வது விக்கெட்டுக்கு ஸ்மித், ஹெட் கூட்டணி 285 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இந்திய அணிக்கு எதிராக 4-வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகவும் இது அமைந்தது. அதுமட்டுமல்லாமல் டாஸில் தோற்றுவிட்டு, 4வது விக்கெட்டுக்கு 285 ரன்கள் சேர்த்தது என்பது 2வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகவும் இருந்தது.

அடுத்துவந்த கேமரூன் க்ரீனை 6 ரன்னில் ஷமி வெளியேற்றினார். சதம் அடித்து ஆடிவந்த ஸ்மித், ஷர்துல் தாக்கூர் பந்தில் “இன்சைட் எட்ஜ்” முறையில் போல்டாகி 121ரன்களி்ல் ஆட்டமிழந்தார். அதன்பின் மளமளவென விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிந்தாலும் அலெக்ஸ் கேரே நிதானமாக பேட் செய்து வந்தார். அலெக்ஸ் கேரே 48 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணித் தரப்பில் சிராஜ் 108 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷமி, ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

https://www.bbc.com/tamil/articles/clwdjyw7vw7o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுப்மன் கில்லை ஆட்டமிழக்கச்செய்த ஸ்கொட்பொலன்டின் பந்து -கிரிக்கெட் ரசிகர்களின் மனதில்தனி இடத்தை பிடித்தது

Published By: RAJEEBAN

09 JUN, 2023 | 02:29 PM
image
 

அவுஸ்திரேலிய இந்திய அணிகளிற்கு இடையிலான  உலகடெஸ்ட்சம்பியன்சிப் போட்டியில் இந்திய அணியின் சுப்மன்கில்லை ஆட்டமிழக்கச்செய்த பந்து குறித்த பந்து குறி;த்து கிரிக்கெட் உலகம் அதிக கவனத்தை செலுத்தியுள்ளது.

அவுஸ்திரேலிய அணியின் ஸ்கொட் பொலன்டின் பந்து குறித்து சமூக ஊடகங்களில் அதிகளவு கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

PnuVKF2G.jpg

இந்த போட்டியில் இதுவரை வீசப்பட்ட மிகச்சிறந்த பந்து என  கிரிக்விஸ் டேட்டா தெரிவித்துள்ளது.

ஓவலில் நேற்யை தினம் 3 விக்கெட்களை இழந்து 327 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணியை  இந்திய அணி 469 ஓட்டங்களிற்கு ஆட்டமிழக்கச்செய்தது.

இந்திய அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தவேளை முதல் மூன்று ஓவர்களிலேயே 22 ஓட்டங்களை பெற்றிருந்தது.

ஸ்டார்க் இரண்டு ஓவர்களை வீசிய பின்னர் அவரை மாற்றிய பட்கம்மின்ஸ் ஸ்கொட்பொலன்டை பந்து வீச அழைத்தார் மறுமுனையில் கம்மின்ஸ் ரோகித்சர்மாவை ஆட்டமிழக்கச்செய்தார்.

தனது முதல் ஓவரை ரோகித் சர்மாவிற்கு மெய்டன்ஓவராக வீசிய  ஸ்கொட்பொலன்ட் அடுத்த ஓவரை கில்லிற்கு வீசினார்.

மூன்று பந்துகளை ஓவ்ஸ்டம்பிற்கு சற்று வெளியே அவர் வீசியதால் மூன்று பந்துகளையும்  கில் விளையாடவேண்டியிருந்தது - கில் சிறப்பாக அவற்றை தடுத்தாடினார்.

நான்காவது பந்தையும் போலன்ட்ஓவ்ஸ்டம்பிற்கு சற்று வெளியே வீசினார்,அந்த பந்தும் வெளியே செல்லும் என கில் நினைத்தார், அந்த பந்தை ஆடாமல்விட்டார், ஆனால் பந்து நினைக்கமுடியாத விதத்தில் ஓவ்ஸ்டம்பை வீழ்த்தியது.

கிரிக்விஸ் போலண்டின் நேற்றைய பந்தே நேற்று வீசப்பட்ட பந்துகளில் சிறப்பானது என தெரிவித்துள்ளதாக விஸ்டென் தெரிவித்துள்ளது.

2006ம் ஆண்டின் பின்னர் இங்கிலாந்தில் அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துகளில் பத்தாவது சிறப்பான பந்து எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பந்து கில்லை வீழ்த்துவதற்கான வாய்ப்பு மூன்றில் ஒன்றாகவே காணப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கில்லை ஆட்டமிழக்கச்செய்யமுடிந்தமை குறித்து  ஸ்கொட்பொலன்ட் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

நான் இந்த டெஸ்ட் ஆரம்பமாவதற்கு முன்னர் பதட்டத்துடனும் ஆர்வத்துடனும் காண்ப்பட்டேன் என தெரிவித்துள்ள அவர் ஆனால் இந்த போட்டியின் ஒரு பகுதியாகயிருப்பது மிகப்பெரிய விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கில் திறமைவாய்ந்த வீரர் அவரைஆரம்பத்திலேயே ஆட்டமிழக்ச்செய்தது திருப்தியளிக்கின்றது இரண்டாவது நாள் முடிவில் எங்கள் அணி சாதகமான நிலையில் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/157353

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா 296 ஓட்டங்களுடன் சுருண்டது; ரஹானே, தாகூர் அரைச் சதங்கள்

09 JUN, 2023 | 08:15 PM
image
 

(நெவில் அன்தனி)

லண்டன் கெனிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தடுமாற்றத்தை எதிர்கொண்ட இந்தியா, அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 296 ஓட்டங்களைப் பெற்றது.

முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா குவித்த 469 ஓட்டங்களை விட இது 173 ஓட்டங்கள் குறைவாகும்.

அவுஸ்திரேலியர்கள் சில பிடிகளைத் தவறவிட்டதை சாதகமாக்கிக்கொண்ட அஜின்கியா ரஹானே, ஷர்துல் தாகூர் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 109 ஓட்டங்களின் பலனாகவே இந்தியா பெரும் வீழ்ச்சியிலிருந்து தப்பியது.

போட்டியின் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை (09) தனது முதலாவது இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 151 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இந்தியா, 3ஆவது பந்தில் ஸ்ரீகர் பரத்தின் விக்கெட்டை இழந்தது. ஸ்கொட் போலண்ட் வீசிய பந்தில் பரத் 5 ஓட்டங்களுடன் போல்ட் ஆனார்.

ஆனால், அதன் பின்னர் ரஹானேயினதும் தாகூரினதும் பிடிகளைத் தவறவிட்டது அவுஸ்திரேலியாவுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது. மதியபோசன இடைவேளைக்கு ஆட்டம் நிறுத்தப்பட்டபோது இந்தியா 6 விக்கெட்களை இழந்து 260 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

தாகூர் 8 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது பெட் கமின்ஸின் பந்துவீச்சில் கொடுக்கப்ட்ட இலகுவான பிடியை கெமரன் க்றீன் தவறவிட்டார். பகல்போசன இடைவேளைக்கு சற்று முன்னர் கமின்ஸின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் தாகூர் ஆட்டம் இழந்ததாக மத்தியஸ்தர் தீர்ப்பளித்தார். ஆனால், மத்தியஸ்தரின் தீர்ப்பை தாகூர் மீளாய்வுக்கு உட்படுத்தியபோது கமின்ஸ் வீசிய பந்து நோ போலாக அறிவிக்கப்பட்டது.

வியாழனன்றும் இதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்திருந்தது. ரஹானே 17 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது கமின்ஸின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ரஹானே ஆட்டம் இழந்ததாக மத்தியஸ்தர் தீர்ப்பு வழங்கினார். ஆனால் ரஹானே கோரிய மீளாய்வில் கமின்ஸின் பந்து நோபோல் என தீர்மானிக்கப்பட்டது.

இன்றைய தினம் ரஹானே 72 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது கமின்ஸின் பந்துவீச்சில் கொடுத்த பிடியை விக்கெட் காப்பாளர் அலெக்ஸ் கேரி தவறவிட்டார்.

எவ்வாறாயினும் மதியபோசன இடைவேளைக்குப் பின்னர் 9.4 ஓவர்களே தாக்குப் பிடித்த இந்தியா மேலதிமாக 36 ஓட்டங்களைப் பெற்று  கடைசி 4 விக்கெட்களை இழந்தது.

இடைவேளையின் பின்னர் 2ஆவது ஓவரில் நெதன் லயனின் பந்துவீச்சில் ஸ்டீவ் ஸ்மித்திடம் பிடிகொடுத்த அஜின்கியா ரஹானே 89 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

உமேஷ் யாதவ் 5 ஓட்டங்களுடன் கமின்ஸினால் போல்ட் செய்யப்பட்டார்.

மறுபக்கத்தில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய ஷர்துல் தாகூர் தனது 4ஆவது டெஸ்ட் அரைச் சதத்தைப் பூர்த்தி செய்த நிலையில் கெமரன் க்றீனின் பந்துவிச்சில அலெக் கேரியிடம் பிடிகொடுத்து 51 ஓட்டங்களுடன் களம்விட்டு வெளியேறினார்.

மொஹமத் சமி 13 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஸ்டார்க்கின் பந்துவீச்சில் கேரியிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சில் பெட் கமின்ஸ் 83 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கெமரன் க்றீன் 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஸ்கொட் போலண்ட் 59 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மிச்செல் ஸ்டார்க் 71 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அவுஸ்திரேலியா அதன் 2ஆவது இன்னிங்ஸில் சற்று நேரத்திற்கு முன்னர் ஒரு விக்கெட்டை இழந்து 12 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. வோர்னர் ஒரு ஓட்டத்துடன் மொஹமத் சிராஜின் பந்துவீச்சில் பரத்திடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். .

https://www.virakesari.lk/article/157372

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மானம் காத்த ரஹானே, ஷர்துல்: இந்திய பவுலர்களின் பதிலடி: வலுவான முன்னிலைக்கு நகருமா ஆஸ்திரேலியா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

லண்டனில் நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில், 3வது நாளான நேற்று, அஜின்க்யா ரஹானே, ஷர்துல் தாக்கூர் ஆகியோரின் துணிச்சலான போராட்ட அரை சதம் இந்திய அணியைப் பெரும் சரிவிலிருந்து காப்பாற்றியது.

ரஹானே சதத்தைத் தவறவிட்டு 89 ரன்களில் ஆட்டமிழந்தாலும், இந்திய ரசிகர்களின் ஹீரோ அவர்தான். இந்திய அணி 50 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது களத்துக்கு வந்த ரஹானே, தனது அனுபவமான பேட்டிங் திறமை, நிதானம், பொறுமை ஆகியவற்றை வெளிப்படுத்தி, கிளாசிக்கான பேட்டிங்கை வெளிப்படுத்திவிட்டார்.

ரஹானேவுக்கு துணையாக பேட் செய்த ஷர்துல் தாக்கூர் 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்து, மீண்டும் ஆல்ரவுண்டராக தன்னை நிரூபித்துவிட்டார். இருவரின் கூட்டணியில் 109 ரன்கள் சேர்த்து இந்திய அணி பெரிய சரிவிலிருந்து மீண்டது.

இருவரும் பேட்டிங் செய்ய வந்தபோது இந்திய அணி 318 ரன்கள் பின்தங்கியிருந்தது. ஆனால் இருவரின் பொறுப்பான பேட்டிங்கால் ரன் பற்றாக்குறை 173 ஆகக் குறைந்தது. இருவரும் ஆடாமல் இருந்திருந்தால் இந்திய அணி 200 ரன்களுக்குள் சுருண்டு பாலோ-ஆன் பெற்றிருக்கும்.

   

இந்திய பந்துவீச்சாளர்கள் பதிலடி

இந்திய அணியின் பந்துவீச்சு முதல் இன்னிங்ஸைவிட 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சிரமத்தைக் கொடுத்தது.

முதல் இன்னிங்ஸில் லைன், லென்த்தையும், பவுன்ஸரையும், ஷார்ட் பாலையும் துல்லியமாக வீச சிரமப்பட்ட இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் 2வது இன்னிங்ஸில் அனாசயமாக வீசி 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியை 2வது இன்னிங்ஸில் 200 ரன்களுக்குள் சுருட்டி, இந்திய அணிக்கு 400 ரன்களுக்குள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், அதை எளிதாக இந்திய அணி சேஸிங் செய்யவும் வாய்ப்பு உண்டு. இந்திய பந்துவீச்சாளர்களின் ஆக்ரோஷமான பந்துவீச்சைப் பார்க்கும்போது எது வேண்டுமானாலும் கிரிக்கெட்டில் நடக்கலாம்.

அதேநேரம், இந்திய அணிக்கு 400 ரன்களுக்கு மேல் இலக்கு உயரும்போது, ஆட்டம் எந்தக் கோணத்திலும் பயணிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கோட்டைவிட்ட ஆஸ்திரேலய வீரர்கள்

ஆஸ்திரேலிய வீரர்கள் நேற்றைய ஆட்டத்தில் ஏராளமான ஃபீல்டிங் தவறுகளையும், கேட்சுகளையும் கோட்டைவிட்டனர்.

கேப்டன் கம்மின்ஸ் மட்டும் 6 நோபால்களை இதுவரை வீசி அதில் 3 நோபால்கள் விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் தவறியது. 3வது நாள் ஆட்டத்தில் மட்டும் லட்டு போலக் கிடைத்த 3 கேட்சுகளை ஆஸ்திரேலிய வீரர்கள் கோட்டைவிட்டனர்.

அதிர்ஷ்டக்கார ரஹானே, தாக்கூர்

இரண்டாவது நாள் ஆட்டத்தில் கம்மின்ஸ் வீசிய பந்து ரஹானே பேட்டில் பட்டு கேட்ச் ஆகிய நிலையில், அதற்கு நடுவர் அவுட் வழங்கினார். ரஹானே டிஆர்எஸ் அப்பீல் செய்யவே, மூன்றாவது நடுவர் நோபால் என அறிவித்தார்.

3வது நாளான நேற்றைய ஆட்டத்தில் ஷர்துல் தாக்கூருக்கும் அதிர்ஷ்டம் அடித்தது.

கம்மின்ஸ் வீசிய பந்தில் ஷர்துல் தாக்கூர் கால் கேப்பில் வாங்கியதை களநடுவர் அவுட் என அறிவித்தார். ஆனால், தாக்கூரின் அப்பீலில் கம்மின்ஸ் நோபால் வீசியது தெரிய வந்தது.

இதனால் நடுவர் வழங்கிய முடிவு ரத்து செய்யப்பட்டது. 2வது நாளில் ரஹானேவுக்கும், 3வது நாளில் தாக்கூருக்கும் அதிர்ஷ்டம் அடித்தது.

296 ரன்கள் முன்னிலை

மூன்றாவவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 69.4 ஓவர்களில் 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் 173 ரன்கள் முன்னிலை பெற்று 2வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய ஆட்டநேர முடிவில், 44 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் சேர்த்து, 296 ரன்கள் முன்னிலையுன் ஆடி வருகிறது. முன்னதாக முதல் இன்னிங்ஸில் 469 ரன்களுக்கு ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரஹானேவும் சதம் சென்டிமென்ட்டும்

முதல் இன்னிங்ஸில் ரஹானே 89 ரன்கள் சேர்த்து 11 ரன்களில் சதத்தைத் தவறவிட்டாலும் நிஜ ஹீரோவாக ரசிகர்களிடம் உருவாகியுள்ளார்.

ஆனால், ரஹானே சதத்துக்கும், இந்திய அணி வெற்றிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. இதுவரை ரஹானே 12 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார். அதில் ரஹானே 9 முறை சதம் அடித்தபோதெல்லாம் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் வென்றுள்ளது. மூன்று முறை ஆட்டத்தை டிரா செய்துள்ளது.

ஆதலால், ரஹானே 2வது இன்னிங்ஸில் சதம் அடித்தால் நிச்சயம் வெற்றி இந்தியாவின் பக்கம்தான் என்று சென்டிமென்ட்டாக ரசிகர்கள் உணர்கிறார்கள்.

இது தவிர ரஹானே நேற்றைய ஆட்டத்தில் 69 ரன்களை எட்டியபோது, டெஸ்ட் அரங்கில் 5 ஆயிரம் ரன்களை எட்டிய இந்திய எலைட் வீரர்கள் பட்டியலில் இணைந்தார். அது மட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அரைசதம் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பெற்றார்.

கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. அந்த ஆட்டத்தில் ஒரு இந்திய பேட்ஸ்மேன்கூட அரைசதம் அடிக்கவில்லை. முதல்முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ரஹானே அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

டீவில்லியர்ஸ் பாராட்டு

ரஹானேவின் நேற்றைய ஆட்டத்தைப் பார்த்த தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.

வர்ணனையாளர் ஹர்சா போக்லேவுக்கு பதில் அளித்து ட்வீட் செய்த டி வில்லியர்ஸ், “ரஹானே இவ்வளவு அற்புதமாக பேட் செய்து நான் பார்த்ததில்லை. பந்துகளை தாமதாக அடிக்கும் அவரின் நுணுக்கம், பேட்டிங்கில் அவரின் நுட்பம் பிரமாதமாக இருக்கிறது” எனப் பாராட்டியுள்ளார்.

பிராட்மேன் சாதனையை சமன் செய்த தாக்கூர்

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் பவுன்ஸர்கள், ஷார்ட்பாலில் கொடுத்த அடிகளை உடலில் வாங்கிக்கொண்டு அரைசதம் அடித்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் ஓவல் மைதானத்தில் தொடர்ச்சியாக மூன்று முறை அரைசதம் அடித்த வீரர் எனும் சாதனையை ஜாம்பவான் டான் பிராட்மேனுடன் ஷர்துல் தாக்கூர் பகிர்ந்து கொண்டார்.

இதற்கு முன் கடந்த 2021ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதில் இரு இன்னிங்ஸ்களிலும் ஷர்துல் தாக்கூர் அரைசதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

அதைத்தொடர்ந்து 2வது முறையாக ஓவல் மைதானத்தில் களமிறங்கிய ஷர்துல் 3வது முறையாக அரைசதம் அடித்துள்ளார். டான் பிராட்மேனுக்குப் பிறகு தொடர்ச்சியாக 3 சதங்களை அடித்த பேட்ஸ்மேன்கள் யாருமில்லை என்ற நிலையில் இப்போது 2வது பேட்ஸ்மேனாக ஷர்துல் தாக்கூர் தன் பெயரையும் பதிவு செய்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரஹானே, ஷர்துல் போராட்டம்

ரஹானே 29 ரன்னிலும், பரத் 5 ரன்னிலும் 3வது நாள் ஆட்டத்தை நேற்று தொடங்கினர். போலந்து வீசிய 2வது பந்திலேயே பரத் க்ளீன் போல்டாகி வெளியேறினார். அடுத்து, ஷர்துல் தாக்கூர் வந்து, ரஹானேவுடன் சேர்ந்தார்.

போலந்து, கம்மின்ஸ் இருவரும் ஷார்ட்பால், பவுன்ஸர்களை வீசி தாக்கூரையும், ரஹானேவையும் ‘டார்ச்சர்’ செய்தனர். ஆனால், இருவரும் எந்தவிதமான சலனமும் இல்லாமல் பேட் செய்து, மோசமான பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு அனுப்பினர். அதிலும் கம்மின்ஸ் வீசிய பந்து தாக்கூருக்கு கையில் தாக்கி வலியால் துடித்தார். பின்னர் வலி நிவாரணி மாத்திரையை எடுத்துக்கொண்டு, பேட் செய்ய வந்தார்.

நிதானமாக ஆடிய ரஹானே, கம்மின்ஸ் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் அடித்து தனது அரைசதத்தை நிறைவு செய்தார். போலந்து, கம்மின்ஸின் மிரட்டல் பந்துவீச்சுக்குப் பழகியபின் ரஹானே, தாக்கூர் இருவரும் அநாசயமாக ஆடத் தொடங்கி ரன்களை சேர்த்தனர். உணவு இடைவேளைக்குச் செல்லும்போது இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் குவித்திருந்தது.

ரஹானே சதம் அடிக்க 11 ரன்கள் தேவைப்பட்டது. உணவு இடைவேளைக்குப்பின் பேட் செய்த வந்த இந்திய அணி விரைவாக விக்கெட்டுகளை இழந்தது. ரஹானே 89 ரன் சேர்த்திருந்தபோது, கம்மின்ஸ் பந்துவீச்சில் 3வது ஸ்லிப்பில் கேமரூன் க்ரீனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஷர்துல் தாக்கூர் அரைசதம் அடித்து 51 ரன்களில் வெளியேறினார். ஷர்துல் தாக்கூர் அரைசதம் அடிப்பதற்குள் ஆஸ்திரேலிய வீரர்கள் 3 முறை அவரது கேட்சை கோட்டைவிட்டனர். அதன்பின் இந்திய அணியின் கடைசிவரிசை வீரர்கள் மளமளவென விக்கெட் இழக்கவே, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆரம்பமே அதிர்ச்சி

ஆஸ்திரேலிய அணி 173 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடத் தொடங்தியது. வார்னர், உஸ்மான் கவாஜா ஆட்டத்தைத் தொடங்கினர்.

முதல் இன்னிங்ஸை போல் இல்லாமல் 2வது இன்னிங்ஸில் சிராஜ், ஷமி, உமேஷ் ஆகியோர் லைன் லெத்தில் துல்லியமாக வீசினர்.

அதிலும் சிராஜ்ஜின் மிரட்டல் வேகப்பந்துவீச்சு, வாப்லிங் சீமிங், லைன் லென்த் வார்னருக்கு பெரிய குடைச்சலைக் கொடுத்தது. சிராஜ் ஓவரை விளையாட சிரமப்பட்ட வார்னர் ஒரு ரன்னில் விக்கெட் கீப்பர் பரத்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியின் துணிச்சலான பந்துவீச்சுக்குப் பலன் கிடைத்தது.

கொஞ்சநேரம்கூட தூங்கவிடமாட்டிங்களே!

வார்னர், உஸ்மான் கவாஜா சிறிது நேரம் தாக்குப்பிடிப்பார்கள் என்ற நம்பிக்கையில், லாபுஷேன் கால்காப்புகளை கட்டிக்கொண்டு தாயாராகிய நிலையிலேயே பெவிலியனில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்.

ஆனால், ஆட்டம் ஆரம்பித்த 4வது ஓவரிலேயே அரங்கில் பலத்த கரவொலி கிளம்பி, வார்னர் விக்கெட்டை இழந்தார். இதனால், தூங்கிக்கொண்டிருந்த லாபுஷேனை எழுப்பிய சக வீரர்கள் அவரை களத்துக்கு அனுப்பி வைத்தனர்.

ஏற்கெனவே தாக்கூர், சிராஜ் பந்துகளில் கையில் அடி வாங்கியதை உணர்ந்த லாபுஷேன், இந்த முறை கவனமாகப் பந்தை எதிர்கொண்டார். இருமுறை பேட்டையும் தவறவிட்டார்.

உஸ்மான் கவாஜாவுக்கு பந்தை விலக்கி வீசி பொறுமையைச் சோதித்தார் உமேஷ் யாதவ். ஆனால் திடீரென ஒரு பந்தை கவாஜாவுக்கு நெருக்கமாக வீச, பந்து பேட்டில் பட்டு கீப்பர் பரத்திடம் தஞ்சமடைந்தது. கவாஜா 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஸ்மித், ஹெட் நிலைக்கவில்லை

இந்திய பந்துவீச்சாளர்கள் பதிலடி கொடுக்க, 24 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா திணறியது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணிக்குத் தொல்லை கொடுத்த ஸ்மித், டிராவிஸ் ஹெட்டை இந்திய பந்துவீச்சாளர்கள் 2வது இன்னிங்ஸில் நிலைக்கவிடவில்லை. முதல் இன்னிங்ஸை போல் இல்லாமல் ஸ்மித் வேகமாக ரன் சேர்ப்பதில் குறியாக இருந்தார். முதல் 7 பந்துகளில் 12 ரன்களை சேர்த்து ரன் சேர்ப்பை வேகப்படுத்தினார்.

ஆனால், ஸ்மித்தின் வேகம் அவரை விக்கெட் இழக்க வைத்தது. ஜடேஜா பந்துவீச்சில் ஸ்மித் பெரிய ஷாட்டை ஆட முயன்றபோது பாயின்ட் திசையில் தாக்கூரிடம் கேட்ச் கொடுத்து ஸ்மித் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரும் 3வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து வந்த டிராவிஸ் ஹெட் அதிரடியாக 2 சிக்ஸர்களை விளாசி ரன்களை சேர்த்தாலும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. ஜடேஜா வீசிய ஸ்லோ பாலை கவனிக்காமல் அவரிடமே கேட்ச் கொடுத்து ஹெட் 18 ரன்னில் பெவிலியன் திரும்பினார். லாபுஷேன் 41 ரன்களிலும், கேமரூன் க்ரீன் 7 ரன்களிலும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

அமைதியான ஹீரோ ரஹானே

பேட்டிங்கில் எந்த அற்புதங்களை நிகழ்த்தினாலும், சதம் அடித்தாலும் ஆர்பாட்டமில்லாமல் அமைதியான போக்கோடு செல்லக்கூடியவர் ரஹானே.

இந்திய அணியில் ராகுல் திராவிட் சென்றபின், “இந்திய அணியின் அடுத்த சுவர்” என்று ரசிகர்களால் ரஹானே வர்ணிக்கப்பட்டார். ரஹானேவின் பேட்டிங் ஸ்டைல், கவர் ட்ரைவ் ஷாட் போன்றவை டிராவிட்டை நினைவுபடுத்தும் வகையில் இருக்கும். ஆனால், சிஎஸ்கேவில் ரஹானேவின் விஸ்வரூபம் வேறு விதத்தில் இருந்தது.

டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரை ரஹானேவின் பேட்டிங், மரபுவழி ஆட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் மிகுந்த ஒழுக்கத்துடன் ஷாட்கள் இருக்கும். தவறான ஷாட்களை ஆடாமல்தான் ரஹானேவின் பெரும்பகுதி பேட்டிங் அமைந்திருக்கும்.

ரஹானே தனது பேட்டிங்கால் சில நேரங்களில் பெரிய அற்புதங்களை களத்தில் நிகழ்த்திவிட்டு ஆர்ப்பாட்டமில்லாமல் இருந்துவிடுவார். அது 2020-21 பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் ஏற்பட்டது.

ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்காக டெஸ்ட் தொடர் விளையாட பயணம் செய்திருந்தது. கேப்டன் கோலி, மனைவிக்குப் பிரசவம் ஏற்படப் போகிறது எனக் கூறிவிட்டு முதல் டெஸ்ட் போட்டியோடு தாயகம் சென்றுவிட்டார். அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி மோசமான தோல்வியுடன் பெரிய அவமானப்பட்டது.

இரண்டாவது போட்டியிலிருந்து ரஹானே கேப்டன் பொறுப்பேற்று சிறப்பாக அணியை வழிநடத்தி 2-1 என்ற கணக்கில் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்று கொடுத்தார். மெல்போர்னில் நடந்த 2வது டெஸ்டில் ரஹானே அடித்த சதம் வரலாற்றுச் சிறப்புடையது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிரிஸ்பேனில் ரிஷப் பந்தின் ஆட்டம் காரணமாக இந்திய அணியால் தொடரைக் கைப்பற்ற முடிந்தது. அந்த வெற்றியை ஒவ்வோர் இந்தியரும் கொண்டாடினர். அப்போது ரஹானே அமைதியாக பவுண்டரிக்கு அப்பால் நின்று வேடிக்கைப் பார்த்தார். திறமையானவர்கள் சத்தமிடமாட்டார்கள், அவர்களின் செயல்தான் அரங்கில் அதியசங்களை நிகழ்த்தும் என்பதைப் போல் ரஹானேயின் கேப்டன்ஷிப்பும், பேட்டிங்கும் அமைந்திருந்தது.

தென்னாப்பிரிக்க பயணம் மேற்கொண்ட 2018ஆம் ஆண்டின்போது இந்திய அணிக்கு துணைக் கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டிருந்தார்.

அப்போது கேப்டனாக இருந்த விராட் கோலி, 2 டெஸ்ட் போட்டிகளிலும் ரஹானேவை களமிறக்காமல் நிராகரித்தார். இரு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்தது. இதுகுறித்து கோலியை அப்போது பல்வேறு முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

ஆனால், துணை கேப்டனாக இருந்தாலும், தனக்கு ப்ளேயிங் லெவனில் வாய்ப்பு இல்லையே என்ற சலனத்தை ரஹானே சிறிதும் வெளிப்படுத்தவில்லை. மூன்றாவது டெஸ்டில் ரஹானேவுக்கு வாய்ப்பு கிடைத்தது. தென்னாப்பிரிக்காவில் எகிறும் ஆடுகளங்களில் அந்நாட்டு பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் சீட்டுக்கட்டு போல் சரிந்தனர்.

அப்போது, ரஹானே தனது கிளாசிக்கான பேட்டிங்கால் 48 ரன்களைக் குவித்து இந்திய அணியை வெல்ல வைத்தார். ரஹானே குவித்த 48 ரன்கள்தான் இந்திய அணியில் பேட்ஸ்மேன் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

4வது நாளில் என்ன நடக்கும்

இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி வேகமாக ரன்களை சேர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பேட்ஸ்மேன்கள் அதிரடியைக் கையாண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளனர்.

இதேபோக்கில் 2வது இன்னிங்ஸை ஆடினால் 200 ரன்களுக்குள் ஆட்டமிழந்தாலும் வியப்பேதும் இல்லை.

இதில் லாபுஷேன், அலெக்ஸ் காரே, கேமரூன் க்ரீன் மட்டுமே தொல்லை தரக்கூடிய பேட்ஸ்மேன்கள். இவர்களை ஆட்டமிழக்கச் செய்துவிட்டால் இந்திய அணியின் கைக்குள் ஆட்டம் வந்துவிடும்.

நான்காவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி உணவு இடைவேளைக்குப் பிறகு வரும் தேநீர் இடைவேளை வரை பேட்டிங் செய்துவிட்டு, இந்திய அணிக்கு 350 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்து டிக்ளேர் செய்யவும் வாய்ப்புள்ளது.

பெரிய இலக்கை நிர்ணயிக்க, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அடித்து ஆட முயல்வார்கள். அப்போது விரைவாக விக்கெட்டுகளை இழக்கவும் வாய்ப்புள்ளது. இரண்டாவது இன்னிங்ஸை இந்திய பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக வைத்துவிட்டால், ஆட்டத்தின் முடிவை சாதகமாக மாற்றவும் வாய்ப்புள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cnd9wk5rgp8o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடைசி நாள் ஆட்டம்: இமாலய இலக்கை அடைந்து இந்தியா சாதனை படைக்குமா? 1979 வரலாறு திரும்புமா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

லண்டனில் நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடைசி நாளான இன்று இந்திய அணி வெற்றிக்கு இன்னும் 280 ரன்கள் தேவைப்படுகிறது, கைவசம் 7 விக்கெட்டுகள் இருப்பதால், வெற்றிக்காக ஆஸ்திரேலியா, இந்திய அணிகள் கடுமையாகப் போராடும்.

ஏற்கெனவே 2021இல் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக கோப்பையை இந்திய அணி தவறவிட்டது. அதுபோல் இந்த முறை நடந்துவிடக்கூடாது என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் ஆட்டத்தைக் கையாளும் எனத் தெரிகிறது.

விராட் கோலி 44 ரன்களுடனும், அஜிங்க்யா ரஹானே 20 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளனர். 444 ரன்கள் இலக்கைத் துரத்திய இந்திய அணி இதுவரை 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்துள்ளது, இன்னும் 280 ரன்கள் மட்டுமே வெற்றிக்குத் தேவைப்படுகிறது.

 

சாதனை படைக்குமா இந்திய அணி

ஒருவேளை டெஸ்ட் அரங்கில் இந்த இமாலய இலக்கை இந்திய அணி சேஸிங் செய்துவிட்டால், உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்களை சேஸிங் செய்த அணியாக இந்தியா புகழ்பெறும்.

 

இதற்கு முன் 2003, மே 6-ம் தேதி ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 418 ரன்கள் இலக்கை மேற்கிந்தியத்தீவுகள் அணி சேஸிங் செய்ததே அதிகபட்சம். அதன்பின் 418 ரன்களுக்கு மேல் 4வது இன்னிங்ஸில் எந்த அணியும் இதுவரை வெற்றிகரமாக சேஸிங் செய்தது இல்லை.

ஒருவேளை இந்திய பேட்ஸ்மேன்கள் இன்னும் 280 ரன்களை எட்டி, சேஸிங் செய்துவிட்டால் அது உலக கிரிக்கெட் வரலாற்றில் அழிக்கமுடியாத பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும்.

கடைசி நாள் ஆட்டம் எப்படி இருக்கும்

கடைசி நாள் ஆட்டம் யார் பக்கம் மாறும் என்று உறுதியாகக் கூற முடியாததால் பரபரப்பாக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி நாளில் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும், அதிலும் புதிய பந்தில் 40 ஓவர்கள் வரை ஆஸ்திரேலியா வீசும் என்பதால், இந்திய பேட்ஸ்மேன்கள் கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும்.

ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெறுவதற்கு இன்னும் 7 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறது. விராட் கோலி, ரஹானே, ஜடேஜா, பரத், ஷர்துல் தாக்கூர் ஆகியோரை வெளியேற்றினால்தான் ஆஸ்திரேலிய அணிக்கும் நம்பிக்கை கிடைக்கும். ஆதலால் ஆஸ்திரேலிய அணிக்கும் வெற்றி எளிதாகக் கிடைத்துவிட வாய்ப்பில்லை.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இன்று ஆட்டம் தொடங்கி, பந்தில் உள்ள பாலிஷ் தேயும் வரை இந்திய பேட்ஸ்மேன்கள் கவனத்துடன் ஆட வேண்டும். அதிலும் ஆட்டம் தொடங்கியவுடன் வீசப்படும் முதல் 15 ஓவர்கள் மிக முக்கியம். இந்த ஓவர்களை கடந்துவிட்டால், இந்திய பேட்ஸ்மேன்களை அசைத்துப் பார்ப்பது கடினமாகத்தான் இருக்கும்.

ஆடுகளத்தில் பந்து அதிகமாக ஸ்விங் ஆகவில்லை. ஆனால் சமனற்ற வகையில் பவுன்ஸ் ஆவது மட்டுமே இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும். இந்திய அணிக்கு 280 ரன்களை எட்டுவதற்கு கடைசி நாள் முழுவதும் இருப்பதால், நிதானமாக ஆட்டத்தைக் கையாண்டு, விக்கெட்டுகளை மட்டும் இழக்காமல் ஆடினால் ஆட்டம் வசப்பட்டுவிடும்.

ரிஷப் பந்த் ஆட்டம் நினைவிருக்கா!

2021ஆம் ஆண்டு பிரிஸ்பேனில் நடந்த டெஸ்ட் போட்டியில் 328 ரன்களை சேஸிங் செய்தபோது ரிஷப் பந்த், களத்தில் அட்டைபோல் ஒட்டிக்கொண்டு பேட் செய்து 89 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

அப்போது ஹேசல்வுட், கம்மின்ஸ், ஸ்டார்க் ஆகியோர் பந்துவீசியும் ரிஷப் பந்த் விக்கெட்டை எடுக்க முடியவில்லை. ஏராளமான அடிகளை உடலில் தாங்கிக்கொண்டு வலியோடு பேட் செய்து, ரிஷப் பந்த் அந்த வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.

அதேபோன்ற வலி தாங்கிய ஒரு வெற்றியை, விராட் கோலி, ரஹானே மற்றும் அவர்களுக்கு அடுத்து வரும் பேட்ஸ்மேன்கள் பெற்றுக் கொடுத்தால் இந்திய அணி வரலாற்று வெற்றி பெறும்.

ஷமியின் நம்பிக்கை

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி கூறுகையில், “2021இல் நியூசிலாந்திடம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இழந்துவிட்டோம். இந்த முறை நிச்சயம் தவறு செய்யமாட்டோம்," என்று கூறினார்.

மேலும், "கடைசி நாளில் சிறப்பாக பேட் செய்து 100 சதவீதம் போட்டியை வெல்வோம் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. 280 ரன்கள் பெரிய இலக்கு அல்ல. பேட்ஸ்மேன்கள் பந்தை மட்டும் கவனித்து சிறப்பாக ஆடினால் போதும், இலக்கை பற்றி யோசிக்கத் தேவையில்லை.

இதை ஏன் இவ்வளவு நம்பிக்கையுடன் கூறுகிறேன் என்றால், வெளிநாடுகளில் இதுவரை நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டுள்ளோம். குழுவாக ஒன்று சேர்ந்து நம்பிக்கையுடன் அணுகிவிட்டால் அதில் வெற்றி கிடைத்துவிடும்,” எனத் தெரிவித்தார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

444 ரன்கள் இலக்கு

நான்காவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸில் 84.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 270 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.

இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் 173 ரன்கள் முன்னிலையுடன் சேர்த்து இந்திய அணி வெற்றி பெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. முன்னதாக ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்களுக்கும், இந்திய அணி 296 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

நெருக்கடி தரும் பந்துவீச்சு

இரண்டாவது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 3வது நாள் ஆட்ட நேர முடிவில், 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் சேர்த்து. 296 ரன்கள் முன்னிலையுடன் இருந்தது. லாபுஷேன் 41, கிரீன் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் நேற்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், காலை நேரத்தில் ஆடுகளத்தின் ஈரப்பதம், புதிய பந்தைப் பயன்படுத்திய உமேஷ் யாதவின் பந்துவீச்சு போன்ற காரணிகளால் லாபுஷேன் 41 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த அலெக்ஸ் கேரே, க்ரீனுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடினர்.

முதல் இன்னிங்ஸைவிட 2வது இன்னிங்ஸில் இந்திய பந்துவீச்சாளர்கள் கட்டுக் கோப்புடனும், நெருக்கடியாகவும் பந்துவீசியதால், ரன் சேர்க்க ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சிரமப்பட்டனர். சிங்கில் ரன் எடுக்கவும், பவுண்டரி அடிக்கவும் சரியான தருணத்தை எதிர்பார்த்தனர், இந்திய பந்துவீச்சாளர்கள் மிகக் குறைவாகவே பந்துவீச்சில் தவறுகளைச் செய்தனர்.

ரவீந்திர ஜடேஜா வீசிய ஓவரில் பந்தை “லீவ்” செய்த கேமரூன் க்ரீன், பேட்டை உயரே தூக்கிப் பிடித்தார். ஆனால் பந்து, பேட்டின் ஓரத்தில் பட்டு, அவரின் கால் கேப்பில் பந்து ஸ்டெம்பில் பட்டு போல்டாகியது. கிரீன் 25 ரன்னில் துரதிர்ஷ்டமாக ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடுத்து வந்த ஸ்டார்க், கேரேயுடன் சேர்ந்தார். இருவரும் சேர்ந்து வேகமாக ரன்களைச் சேர்க்கத் தொடங்கினர். அலெக்ஸ் கேரே அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க இந்தியப் பந்துவீச்சாளர்கள் நீண்டநேரம் போராடினர். ஆனால், ஸ்டார்க் தன்னுடைய பேட்டிங் திறமையால் 7 பவுண்டரிகள் விளாசி ரன்களை சேர்த்தார்.

ஏழாவது விக்கெட்டுக்கு இருவரும் 93 ரன்கள் சேர்த்தநிலையில் பிரிந்தனர். கடைசி வரிசையில் ஓரளவுக்கு பேட் செய்யக்கூடிய ஸ்டார்க் 41 ரன்களில் ஷமி பந்துவீச்சில் ஸ்லிப்பில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கேப்டன் கம்மின்ஸ் 5 ரன்கள் சேர்த்த நிலையில் ஷமி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தவுடன் ஆட்டத்தை டிக்ளேர் செய்ய முடிவு செய்தார். கேரே 66 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸில் 84.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்து, இந்திய அணிக்கு 444 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், ஷமி, உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரோகித் சர்மா நல்ல தொடக்கம்

இந்திய அணி 444 ரன்கள் என்னும் இமாலய இலக்கைத் துரத்தி 2வது இன்னிங்ஸை தொடங்கியது. ரோகித் சர்மா, கில் இருவரும் நல்ல தொடக்கம் அளித்தனர்.

முதல் இன்னிங்ஸை போல் இல்லாமல் ரோகித் சர்மா கால்களை நகர்த்தி அழகான கவர்டிரைவ் ஷாட்களையும், பேக்ஃபுட்டில் புல்பேக் ஷாட்களையும் ஆடினார்.

இடுப்புக்கு மேலே வந்த பந்துகளை லாகவமாக லெக் திசையில் தள்ளி பவுண்டரிகளை சேர்த்தார். ரோகித் சர்மாவின் ஆட்டம் 2வது இன்னிங்ஸில் பார்க்க அழகாக இருந்தது.

கில் அவுட் சர்ச்சை

சுப்மன் கில் தனது இயல்பான ஆட்டத்துக்கு வந்து இரு பவுண்டரிகளை விளாசினார். போலந்து வீசிய ஓவரில் பவுன்ஸராக வந்த பந்தை கில் பேட்டில் பட்டு ஸ்லிப்பில் இருந்த க்ரீன் கேட்ச் பிடித்தார். ஆனால் இந்த கேட்ச் சர்ச்சைக்குரியதாக இருந்தது.

கேமரூன் கிரீன் பந்து தரையில் பட்டபின் அதை கேட்ச் பிடிக்காமல் எடுத்தாரா அல்லது, தனது கைவிரல்களை அடியில் தாங்கி, கேட்ச் பிடித்தாரா என்பது சந்தேகத்துக்குரியதாக இருந்தது.

பந்து தரையில் பிட்ச் ஆவதற்கு முன்பாகவே கிரீன் கேட்ச் பிடித்தாரா அல்லது தரையில் பிட்ச் ஆன பின் பிடித்தாரா என்பதற்கு முழுமையான ஆதாரங்கள் இல்லை.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

சந்தேகத்தின் பலன் யாருக்கு

சந்தேகத்தின் பலனை எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே வழங்கிட வேண்டும். ஏனென்றால், பேட்ஸ்மேன்களுக்கு அடுத்த வாய்ப்பு என்பது இல்லை, பந்துவீச்சாளர்களுக்கு அடுத்தடுத்து ஓவர்கள் இருப்பதால், பலன் பெற வேண்டியது பேட்ஸ்மேன்தான்.

ஆனால் கீரின் கைவிரல்கள் தரையில் இருப்பதால், பந்தை தாங்கிப் பிடித்து கேட்ச் பிடித்தார் என்று தீர்மானித்து 3வது நடுவர், கில்லுக்கு அவுட் வழங்கினார். இதைப் பார்த்த கேப்டன் ரோகித் சர்மா “நோ” என்று கூறி அதிருப்தி அடைந்தார்.

மேலும் ஆட்டமிழந்து சென்ற சுப்மன் கில் ட்விட்டரில், “கேமரூன் கிரீன் கேட்ச் பிடித்த காட்சி புகைப்படத்தைப் பதிவிட்டு, இன்னும் அதிகமாக ஆய்வு செய்திருக்க வேண்டும் என்ற ரீதியில் ஸ்கேனிங் அடையாளத்தைப் பதிவிட்டு அதிருப்தியை வெளியிட்டார்.

கில் ஆட்டமிழந்து சென்றதற்கு அரங்கில் இருந்த இந்திய ரசிகர்கள் மிகுந்த அதிருப்தி தெரிவித்து “சீட்”(ஏமாற்றுவேலை) “சீட்” என்று அரங்கில் அமர்ந்தவாறு சத்தமிட்டனர். அதிலும் கேமரூன் க்ரீன் பந்துவீச வந்தபோது ரசிகர்கள் “சீட், சீட்” என்று அவரைப் பார்த்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கில் அவுட் பற்றி இவர்கள் என்ன சொல்கிறார்கள்

ஆட்டத்தை வர்ணித்த வர்ணனையாளர்கள் சஞ்சய் மஞ்சரேக்கர், பிராட் ஹேடின் இருவரும் இரு வேறு கருத்துகளைத் தெரிவித்தனர். சஞ்சய் மஞ்சரேக்கர் கூறுகையில், “கிரீன் பிடித்தது அருமையான கேட்ச்தான் என்றாலும், பந்து தரையில் பிட்ச் ஆகி பிடிக்கப்பட்டதா என்பதை காட்சியை உறைய வைத்துத் தெரிவித்திருக்கலாம். பல்வேறு கோணங்களில் டிவி நடுவர் ஆய்வு செய்திருக்க வேண்டும்,” எனத் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹேடின் “,கிரீன் பிடித்தது உண்மையான கேட்ச். தரையில் அவரின் விரல்கள் இருக்கும் நிலையில்தான் கேட்ச் பிடித்தார்” எனத் தெரிவித்தார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறுகையில், “இந்தக் காட்சியை நேரில் பார்த்தபோதும், டிவி ரீப்ளேவில் பார்த்தபோதும் அற்புதமான கேட்சாக இருந்தது.

ஆனால், டிவி ரீப்ளே காட்சியைப் பார்த்தபோது, என்னால் இது சிறந்த கேட்சா அல்லது தரையில் பிட்ச் ஆன பின் பிடிக்கப்பட்டதா என்று கூற முடியவில்லை. பந்தின் சில பகுதி தரையிலும், மற்ற பகுதிகள் கேமரூன் க்ரீன் கைவிரல்களிலும் இருந்தன. இதை டிவி நடுவர் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்திருக்கலாம்,” எனத் தெரிவித்தார்.

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில், “க்ரீன் கேட்ச் பிடித்தபோது, பந்து தரையில் பட்டுள்ளதாகவே நான் நம்புகிறேன். அவரது கைவிரல்கள் தரையில் இருந்தன, பந்து விரல்களில் இருந்தது என்றாலும், பந்து தரையில் படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

பட்டுவிட்டது என்றாலே பந்து தரையில் பட்டுவிட்டது என்றுதான் அர்த்தம். ஆனால் 3வது நடுவர் முடிவெடுப்பதில் சிரமப்பட்டார்,” எனத் தெரிவித்தார்.

 

தேவையில்லாத ஷாட்டில் ஆட்டமிழந்த புஜாரா

அடுத்து வந்த புஜாரா, ரோகித் சர்மாவுடன் இணைந்தார். இருவரும் சீராக ரன்களை சேர்த்தனர். புஜாராவும் பந்துகளை வீணடிக்காமல் ரன்களை சேர்த்ததால் ரன் சேர்ப்பு வேகமெடுத்தது. ரோகித் சர்மா அவ்வப்போது பவுண்டரிகளை விளாசினார், ஒரு சிக்ஸரும் அடித்து அரை சதம் நோக்கி நகர்ந்தார். இருவரின் பார்ட்னர்ஷிப் 50 ரன்களைக் கடந்தது.

கம்மின்ஸ் வீசிய பந்தை புஜாரா எதிர்கொண்டார். பவுன்ஸராக வீசப்பட்ட அந்தப் பந்தை மேல் நோக்கி தட்டிவிட்டு பவுண்டரிக்கு அனுப்ப புஜாரா முயன்றார். ஆனால், பந்து வேகமாக பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் தஞ்சமடைந்து. புஜாரா தேவையில்லாமல் ஷாட் ஆடி 25 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

அடுத்த சில நிமிடங்களில் நேதன் லேயன் பந்தில் ஸ்வீப் ஷாட் ஆட ரோகித் சர்மா முயன்று கால் கேப்பில் வாங்கி 43 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இருவரும் 5 பந்துகள் வேறுபாட்டில் ஆட்டமிழந்து சென்றதால் இந்திய அணி லேசாகச் சறுக்கியது.

நான்காவது விக்கெட்டுக்கு விராட் கோலி, ரஹானே ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். குறிப்பாக கோலி தனது வழக்கமான கவர் டிரைவ் ஷாட்களில் சில பவுண்டரிகளை விளாசினார்.

கடைசிநாளில் கோலி ‘கிங்’ தான்! ஆனால்...

விராட் கோலி எப்போதுமே கடைசிநாளில் பேட் செய்வதை விரும்பக்கூடியவர். கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து 9 இன்னிங்ஸ்களில் கடைசிநாளில் பேட் செய்து 584 ரன்களை கோலி குவித்துள்ளார்.

இதில் அவரது சராசரி 93.33 ஆகும். கடைசிநாளில் பேட் செய்து கோலி இதுவரை 3 சதங்களையும், 3 அரைசதங்களையும் விளாசியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால் கோலியின் கடும் பிரயத்தனம் ஒருமுறைகூட வெற்றியில் முடியவில்லை, 3 முறை இந்திய அணி தோல்வியையும், 6 முறை ஆட்டத்தை டிராவும் செய்திருக்கிறது.

ரஹானேவை பொறுத்தவரை கடைசிநாளில் இதுவரை 13 இன்னிங்ஸ் ஆடி 220 ரன்கள் சேர்த்துள்ளார். ஆனாலும் முதல்நாளில் ரஹானே சேர்த்த 89 ரன்கள்தான் இந்திய அணியை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகிறது. ஆகையால், ரஹானேவின் ஆட்டம் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

1979 வரலாறு திரும்புமா

இந்தியா, இங்கிலாந்துக்கு எதிராக 1979ஆம் ஆண்டு விளையாடிய டெஸ்ட் போட்டியை வரலாற்றில் மறக்க முடியாது.

சுனில் கவாஸ்கரின் இரட்டை சதம் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தரும் நிலையில் ஆட்டம் டிரா ஆனது. 1979, ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 4ம் தேதிவரை இதே ஓவல் மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து இடையே டெஸ்ட் போட்டி நடந்து.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 305 ரன்களிலும், இந்தியா 202 ரன்களிலும் ஆட்டமிழந்தன. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

438 ரன்கள் இலக்கோடு பயணித்த இந்திய அணிக்கு சுனில் கவாஸ்கர் இரட்டை சதம் அடித்து 221 ரன்கள் சேர்த்தார். சேட்டன் சவுகான் 80, வெங்சர்க்கர் 52 ரன்கள் எனக் கைகொடுக்க இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 429 ரன்கள் சேர்த்தது.

வரலாற்று வெற்றிக்கு இந்திய அணிக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆட்டம் டிரா ஆனது. இதுபோல் இந்த முறையும் டிரா ஆகுமா அல்லது இந்திய அணி கோப்பையை வெல்லுமா என்பது கோடிக்கணக்கான இந்தியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/c88xk5vn884o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுப்மன் கில் அவுட்டா? இல்லையா? இந்தியா vs ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சர்ச்சை

இந்தியா vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

10 ஜூன் 2023
புதுப்பிக்கப்பட்டது 10 ஜூன் 2023

உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு 444 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்துள்ளது. மிகப்பெரிய இலக்கைத் துரத்தும் இந்திய அணியும் சரியான பதிலடி கொடுத்து வருகிறது. எனினும், இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்க வீரர் சுப்மான் கில் ஆட்டமிழந்த விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் அது தொடர்பான வாத, விவாதங்களை இப்போதே தொடங்கி விட்டனர்.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்களைக் குவிக்க, அடுத்து ஆடிய இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் 173 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. வார்னர், கவாஜா, முதல் இன்னிங்சில் சதம் கண்டு அசத்திய டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரின் விக்கெட்டுகளை அந்த அணி இழந்திருந்தது.

இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 444 ரன்

அதன் தொடர்ச்சியாக, 4வது நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி கவனமாக ஆடியது. விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்துவிடக் கூடாது என்பதில் அந்த அணி கவனம் செலுத்தியதால் ரன்கள் வேகமாக வரவில்லை.

126 பந்துகளை சந்தித்த லபுசேனே 41 ரன்களை எடுத்தார். ஐ.பி.எல்.லில் மும்பை அணிக்காக கலக்கல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேமரூன் கிரீன், டெஸ்ட் போட்டிக்கே உரித்தான பொறுமையைக் கையாண்டு 95 பந்துகளில் 25 ரன்களை எடுத்தார்.

 

இறுதிக்கட்டத்தில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் காரேவும், மிட்செல் ஸ்டார்க் ஜோடி அதிரடியாக விளையாடியது. குறிப்பாக, ஸ்டார்கின் ஆட்டம் ஒருநாள் போட்டிகளைப் போலவே அதிரடியாக இருந்தது. அவர் 57 பந்துகளில் 41 ரன்களை எடுத்தார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். பின்னர் வந்த கம்மின்ஸ் 5ரன்களில் ஆட்டமிழந்தார். 8 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் எடுத்த போது ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அப்போது, அலெக்ஸ் காரே 105 பந்துகளில் 66 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கேமரூன் கிரீன் கேட்ச் பிடித்தாரா? நழுவ விட்டாரா?

இதையடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வெல்ல 444 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கியது. கேப்டன் ரோகித் சர்மாவும், ஐ.பி.எல்.லில் அசத்திய, இந்தியாவின் அடுத்த ரன் மெஷின் என்று வர்ணிக்ப்படும் சுப்மான் கில்லும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். முதல் இன்னிங்சில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துவிட்ட இருவரும் இம்முறை அதிரடி ஆட்டத்தை கைக்கொண்டார்கள். ஏதுவான பந்துகளை தேர்வு செய்து பவுண்டரிக்கு விரட்டினார்கள்.

அந்த வகையில் சுப்மன் கில் 2 பவுண்டரிகளை விளாசி, 19 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்திருந்த வேளையில்தான் அந்த நிகழ்வு நடந்தேறியது. ஸ்காட் போலண்ட் வீசிய பந்து சுப்மன் கில் பேட்டில் பட்டு, ஸ்லிப்பில் நின்றிருந்த கேமரூன் கிரீன் கையில் கேட்சாக மலர்ந்தது. 6 அடி உயர அஜானுபாகுவான வீரரான கேமரூன் கிரீன் இடது புறம் தாழ்வாக பந்த பந்தை அவர் அபாரமாக பிடித்தார். இதையடுத்து, சுப்மன் கில் அவுட்டாகி விட்டதாக கருதி ஆஸ்திரேலிய வீரர்கள் உடனே ஆரவாரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

 

நடுவர் முடிவில் இந்திய அணி அதிருப்தி

ஆனால், சுப்மன் கில்லோ, கேமரூன் கிரீன் கேட்ச் பிடித்த விதத்தை திருப்தி அடையாமல் சந்தேகத்தில் களத்திலேயே நின்று கொண்டிருந்தார். இதையடுத்து, சுப்மன் கில் அவுட்டா இல்லையா என்பதை தீர்மானிக்க கள நடுவர் மூன்றாவது நடுவரின் உதவியை நாடினார்.

மூன்றாவது நடுவரான ரிச்சர்ட் கேட்டில்பாரோ அனைத்து கோணங்களிலும் அந்த கேட்சை ரீப்ளே செய்து பார்த்தார். அதன்படி, அந்த கேட்சின் போது பந்தின் கீழ்ப் புறம் கிரீனின் கை விரல்கள் இருப்பதை அவர் உறுதி செய்தார். அந்த கேட்சை கிரீன் தனது இடது கையால் பிடித்திருந்தார். சில கோணங்களில், அவரது கை தரையில் பட்டாலும் பந்தை உறுதியுடன் பற்றியிருப்பது போல் தோன்றியது.

ஆனால், மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள், சுப்மன் கில்லுக்கு அவுட் கொடுக்கப்படாது என்று கருதினர். ஆனால், சுப்மன் கில் அவுட் என்று மூன்றாவது நடுவர் கெட்டில்பாரோ அறிவித்தார். இதையடுத்து, சுப்மன் கில் அவுட் விஷயத்தில் ஏமாற்றப்பட்டுவிட்டதாக கருதிய பார்வையாளர்கள் 'cheat-cheat-cheat' என்று ஆரவாரம் செய்ததை காண முடிந்தது.

சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சனம்

நடுவரின் முடிவை ஏற்று சுப்மன் கில், பெவிலியனுக்குத் திரும்பிய பிறகும் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அதுகுறித்து கள நடுவர்களிடம் பேசினார். மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த அகன்ற திரையில் 'அவுட்' என்ற வார்த்தை வந்ததுமே, ரோகித் சர்மாவின் உதடுகள் 'இல்லை' என்று உரைத்தன. நடுவரின் முடிவில் அவர் உடன்படவில்லை.

ஓவல் மைதானத்தல் இந்த நாடகம் அரங்கேறிய அந்த தருணத்தில், சமூக வலைதளங்களில் நோபால் ஹேஷ்டேக் டிரென்டாகத் தொடங்கிவிட்டது. சுப்மன் கில் கேட்சை கிரீன் சரிவர பிடிக்கவில்லை என்றே இந்திய ரசிகர்கள் கருதினர். அதேநேரத்தில் ஆஸ்திரேலிய ரசிகர்களோ, கிரீன் சரியாக கேட்ச் பிடித்துவிட்டதாக கருதினர்.

அந்த வீடியோ பதிவை மூன்றாவது நடுவர் சற்று பெரிதாக்கிப் பார்த்திருந்தால், பந்து தரையில் படுவது தெளிவாகத் தெரியும் என்று சில ரசிகர்கள் விமர்சித்தனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

சுப்மன் கில் அவுட் பற்றி சேவாக் ட்வீட்

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரரான, ஓய்வு பெற்ற அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக்கும், சுப்மன் கில் அவுட்டை விமர்சித்துள்ளார். சந்தேகத்தின் பலனை எப்போது பேட்ஸ்மேனுக்கு சாதகமாகவே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், தனது விமர்சனத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 4
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 4

சுப்மன் கில் நாட் அவுட் தான் என்றும் , நடுவரின் தவறான முடிவு அது என்றும் கூறி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர். மிகவும் முக்கியமான உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்திற்கான போட்டியில் இதுபோன்ற சர்ச்சைகளை அனுமதித்திருக்கக் கூடாது என்று முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் நிபுணர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/c19p49lk1mko

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தவறான முடிவுகளால் தோல்வியை தானே தேடிக் கொண்டதா இந்திய அணி?

இந்திய அணி சறுக்கியது எங்கே?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 11 ஜூன் 2023, 14:29 GMT
    புதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலிய அணி பட்டத்தை வென்றுள்ளது. ஐந்தாவது நாளில் விக்கெட்டுகளை மளமளவென வீழ்த்தி, குறைந்த நேரத்திலேயே இந்திய பேட்ஸ்மேன்களின் சவாலை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டனர். இந்திய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த விராட் கோலி, அஜிங்கிய ரஹானே ஜோடி ஏமாற்றத்தையே பரிசளித்தது.

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் முறையே 469, 296 ரன்களை எடுத்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து 444 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணி நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்திருந்தது. கோலி 44 ரன்களுடனும், ரஹானே 20 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐந்தாவது மற்றும் கடைசி நாளில் 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணியின் கைவசம் 7 விக்கெட்டுகளே இருந்தன. எனினும், கோலி - ரஹானே ஜோடி கைகொடுக்கும், இந்திய அணி வரலாறு படைக்கும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியதுமே நிலைமை வேறு வகையில் இருந்தது. தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்ந்துவிடக் கூடாது என்று கோலி - ரஹானே கூட்டணி நிதானம் காத்தது. தேவையின்றி பந்துகளை அடித்தாடக் கூடாது என்பதில் அந்த ஜோடி உறுதியாக இருந்தது. இதனால், இந்திய அணியின் ரன் ரேட் மிகவும் மந்தமாகவே இருந்தது.

   

கம்மின்ஸ் வகுத்த வியூகத்தில் வீழ்ந்த கோலி

இந்திய ஜோடி நிதானமாக ஆடினாலும், எது நடந்துவிடக் கூடாது என்று நேற்றிரவெல்லாம் இந்திய ரசிகர்கள் வேண்டிக் கொண்டிருந்தார்களோ அது வெகு சீக்கிரத்திலேயே நடந்துவிட்டது.

உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்திற்கு ஆஸ்திரேலியாவுக்கும் குறுக்கே நிற்பது விராட் கோலி என்று கிரிக்கெட் நிபுணர்கள் வர்ணித்துக் கொண்டிருந்த வேளையில், அந்த தடையை ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் விரைவிலேயே உடைத்தெறிந்தார். மிகவும் நிதானமாக ஐந்தாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய இருவருமே ஆமை வேகத்தில்தான் ரன்களை சேர்த்தனர். அதிலும், முதல் 39 பந்துகளில் கோலி வெறும் 9 பந்துகளை மட்டுமே சந்தித்திருந்தார். பெரும்பாலும் நான்-ஸ்டிரைக்கர் முனையிலேயே அவர் நிற்க வேண்டியிருந்தது.

இந்திய அணி சறுக்கியது எங்கே?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கோலியை அடித்தாடத் தூண்டும் வகையில், அவருக்குப் பிடித்தமான கிளாசிக் கவர் டிரைவுக்கு முயற்சிக்கச் செய்யும் நோக்கில் கவர் பகுதியில் பீல்டர்களையே கம்மின்ஸ் நிறுத்தவில்லை. பெரும்பாலும் நான்-ஸ்டிரைக்கர் முனையிலேயே நின்றிருந்த கோலி சந்தித்த ஒருசில பந்துகளையும், சரியான லென்த்தில் வீசி ரன்களை எளிதில் எடுக்க விடாமல் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் அவரை கட்டிப்போட்டனர். அதனால்தானோ என்னவோ, போலண்ட் வீசிய அந்த பந்தை கோலி அடித்தாட முயற்சிக்க, ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் நினைத்தபடியே அது இரண்டாவது ஸ்லிப்பில் நின்றிருந்த ஸ்டீவன் ஸ்மித் கையில் கேட்சாக மலர்ந்தது.

ஆஸ்திரேலிய அணி வைத்திருந்த பொறியில் அவர்கள் நினைத்தபடியே வலியச் சென்று சிக்கிய கோலி, தான் அவுட்டான விதத்தில் அதிருப்தி கொண்டு வேதனையுடன் வெளியேறினார். இந்தியாவுக்கு சாதனை வெற்றியைப் பெற்றுக் கொடுப்பார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு அவரது அவுட் பேரிடியாக அமைந்தது.

ரவீந்திர ஜடேஜா டக் அவுட்

இந்திய ரசிகர்களின் வேதனை அத்துடன் நிற்கவில்லை. அடுத்த இரண்டாவது பந்திலேயே ரவீந்திர ஜடேஜாவையும் வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார் போலண்ட். ஜடேஜாவுக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள் கச்சிதமாக திட்டத்தை வகுத்து, அதனை வெற்றிகரமாக நிறைவேற்றியும் விட்டார்கள்.

ஜடேஜா வந்தவுடனே, ரவுண்ட் தி விக்கெட் முறையில் பந்துவீசத் தொடங்கிய போலண்ட், முதல் பந்தில் சரியான லென்த்தை தவறவிட்டார். எனினும், சுதாரித்துக் கொண்டு அடுத்த பந்தை ஃபுல் லென்த்தில் போலண்ட் வீச, பந்து ஜடேஜாவின் பேட்டில் எட்ஜாகி விக்கெட் கீப்பர் அலெக்ஸ் காரேவிடம் தஞ்சம் புகுந்தது. ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்த ஜடேஜா ரன் ஏதும் எடுக்காமலேயே ஆட்டமிழந்தார்.

இந்திய அணி சறுக்கியது எங்கே?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரஹானே செய்த இமாலய தவறு

ஒரே ஓவரில் கோலி, ஜடேஜா விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி அதே உத்வேகத்துடன் இந்திய அணியை விரைந்து காலி செய்ய எத்தனித்தது. அதற்கு உடனே பலனும் கிடைத்தது.

இம்முறை ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சுக் கூட்டணி வைத்த பொறியில் சிக்கியது ரஹானே. ஐ.பி.எல்.லில் கலக்கல் ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்த டெஸ்டின் முதல் இன்னிங்சிலும் இந்தியாவைக் காத்த ரஹானே இம்முறை பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் ஏமாற்றம் தந்தார். முதல் இன்னிங்சின் போது, ஸ்டம்பில் இருந்து விலகிச் செல்லும் பந்துகளை தொடாமலேயே தவிர்த்து வந்த ரஹானே இம்முறை இமாலய தவறு ஒன்றைச் செய்தார்.

ரவுண்ட் தி விக்கெட் முறையில் ஸ்டார்க் வீசிய முந்தைய ஓவர்களில் பவுலரின் தலைக்கு நேரே 2 பவுண்டரிகளை அடித்திருந்தார் ரஹானே. ஆனால், அதைப்பற்றி கவலைப்படாமல் அவரை அடித்தாடச் செய்து தவறு செய்ய தூண்டும் வகையில் அதே முறையில் ஸ்டார்க் தொடர்ந்து பந்து வீசினார். அவர் எதிர்பார்த்தபடியே, ரஹானே அந்த தவறைச் செய்ய பந்து அவரது பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் காரேவின் கைகளில் கேட்ச்சாக மாறியது.

இந்திய அணி சறுக்கியது எங்கே?

பட மூலாதாரம்,GETTY IMAGES

சீட்டுக்கட்டு போல் சரிந்த இந்திய பேட்டிங் வரிசை

ஐந்தாவது நாளின் போது பிட்ச்சில் பந்து நன்றாக திரும்பியதை ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் நன்றாக பயன்படுத்திக் கொண்டார்கள். கோலி அவுட்டான போதே தோல்வி உறுதி என்றெண்ணிய ரசிகர்கள், கொஞ்சம் நம்பிக்கை வைத்திருந்த ஜடேஜா, ரஹானே ஆகியோரும் அடுத்தடுத்து வெளியேறியதால் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்திய பேட்ஸ்மேன்களை எளிதாக வெளியேற்றிவிட்ட ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பாரத் மற்றும் பந்துவீச்சாளர்களை அவுட்டாக்குவது ஒன்றும் அவ்வளவு சிரமமான காரியமாக இருக்கவில்லை. ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு கஷ்டம் கொடுக்காமல் அவர்கள் விரைவிலேயே சரணடைந்துவிட்டனர். இந்திய அணி 234 ரன்களில் ஆல்அவுட் ஆகிப் போனது. ஐந்தாவது மற்றும் கடைசி நாளில் இந்திய அணி வெறும் 70 ரன்களை எடுப்பதற்குள்ளாக 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை படுதோல்வியடையச் செய்த ஆஸ்திரேலிய அணி, உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது. இதன் மூலம் ஒருநாள், இருபது ஓவர், சாம்பியன்ஸ் டிராபி போன்ற ஐ.சி.சி. நடத்தும் அனைத்து தொடர்களிலும் சாம்பியன் பட்டம் வென்ற ஒரே அணி என்ற சாதனையை ஆஸ்திரேலிய அணி படைத்துள்ளது.

இந்திய அணி சறுக்கியது எங்கே?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணி கோட்டை விட்டது எங்கே?

உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்கும் முன்னரே இந்திய அணி தவறான முடிவுளால் தனது விதியை தானே தேடிக் கொண்டது என்றே கிரிக்கெட் நிபுணர்களும், ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதாவது, புற்கள் நிறைந்த ஆடுகளத்தில் நான்காவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்வது மிகவும் கடினம். அப்படி இருக்கையில், இந்திய அணி டாஸை வென்றும் பீல்டிங்கை தேர்வு செய்து மாபெரும் தவறிழைத்துவிட்டது என்று ரசிகர்கள் மட்டுமின்றி, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீசும் குறிப்பிட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

அடுத்தபடியாக, லண்டன் ஓவல் மைதானம் கடைசி 2 நாட்களில் சுழற்பந்துவீச்சுக்கு கைகொடுக்கக் கூடியது எனும் போது, டெஸ்டில் நம்பர் ஒன் பந்துவீச்சாளரான அஸ்வினை ஆடும் லெவனில் சேர்க்காமல் இந்திய அணி தவறிழைத்துவிட்டதாக கிரிக்கெட் நிபுணர்கள் பலரும் கூறுகின்றனர்.

நான்காவது இன்னிங்சில் அதாவது இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

அதுமட்டுமின்றி, கோலி, ரஹானே போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் கூட தவறான ஷாட்களை தேர்வு செய்து அவுட்டாகி வெளியேறியதுடன் அணியின் சரிவுக்கும் வித்திட்டுவிட்டனர்.

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தயாராகாமல் ஐ.பி.எல் தொடருக்கு முன்னுரிமை கொடுத்ததே இதற்குக் காரணம் என்றும் சில ரசிகர்கள் விமர்சனக் கருத்துகளை சமூக வலைதளங்களில் முன்வைத்துள்ளனர்.

ஐ.பி.எல். தொடரில் அதிக ரன் குவித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றிய சுப்மன் கில்லும், அதிக விக்கெட் வீழ்த்திய வீரருக்கான நீலநிறத் தொப்பியை வசப்படுத்திய முகமது சிராஜூம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் எதிர்பார்த்த அளவுக்கு ஜொலிக்கவில்லை என்றும் சில ரசிகர்கள் குறைபட்டுக் கொண்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள் குவிகின்றன

உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, முதல் இன்னிங்சில் அதிரடி சதம் கண்டு இந்திய அணியின் தோல்வியை நிச்சயித்து ஆட்டநாயகன் விருதை வென்ற டிராவிஸ் ஹெட்டை கிரிக்கெட் ஜாம்பவான்களும், விளையாட்டு நிபுணர்களும் பாராட்டியுள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/c848pd1qkn5o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐ.பி.எல்.லை மனதில் கொண்டு ஆடுகளங்களை உருவாக்குவதே இந்தியாவின் படுதோல்விக்கு காரணமா?

இந்தியா படுதோல்வி ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 11 ஜூன் 2023

இந்திய அணி தொடர்ந்து 2வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு வந்து கோப்பையை வெல்லாமல் இங்கிலாந்திலிருந்து வெளியேறுகிறது. கடந்த முறை நியூசிலாந்து அணியிடம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இந்தியா பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில் கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஒரு பேட்ஸ்மேன்கூட அரைசதம் அடிக்காத குறையை ரஹானே, ஷர்துல் தீர்த்து வைத்தனர். இந்த முறை 2வது இன்னிங்ஸிலும் ஒரு பேட்ஸ்மேன்கூட அரைசதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி நாளான இன்று 280 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வெறும் 55 ரன்களுக்கு கடைசி 7 விக்கெட்டுகளை தாரை வார்த்தனர்.

இந்திய வீரர்களிடம் போராட்டக் குணம் இல்லை

இந்திய அணி பேட்ஸ்மேன்கள் கடைசிநாளான இன்று எந்த ஒரு போராட்டக் குணத்தையும் வெளிப்படுத்தாமல் சீட்டுக்கட்டுபோல் சரிந்தனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டம், அதில் தோற்றாலும், கடைசிவரை சண்டை செய்ய வேண்டும் என்ற போராட்ட குணம்கூட இல்லாமல் கடைசி 55 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்து தோல்வி அடைந்தது.

 

இந்திய அணி கடந்த 6 செஷன்களாக கடுமையாகப் போராடியதன் விளைவாக கடைசிநாளில் வெற்றி பெற்றுவிடும் என்று நம்பிக்கை ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால், இந்திய அணியின் போராட்டத்தை ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களும், ஒற்றை சுழற்பந்துவீச்சாளர் லேயனும் சேர்ந்து சுக்குநூறாக உடைத்துவிட்டனர்.

இந்தியா படுதோல்வி ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆஸ்திரேலிய அணியை கடந்த 4 டெஸ்ட் தொடர்களில் இந்தியாவில் நடந்த 2 தொடர்களிலும், ஆஸ்திரேலியாவில் நடந்த 2 டெஸ்ட் தொடர்களிலும் இந்திய அணி வென்றுள்ளது. இருப்பினும் இங்கிலாந்து மண்ணில் தாங்கள்தான் “ராஜா” என்று ஆஸ்திரேலிய அணியினர் இந்திய அணியினருக்கு வெளிப்படுத்திவிட்டனர்.

அடுத்ததாக ஆஷஸ் தொடருக்காக இங்கிலாந்து அணியுடன், இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலிய அணியினர் விளையாட உள்ளனர்.

இந்திய அணி 3வது மற்றும் 4வது நாளில் வெளிப்படுத்திய போராட்டக் குணத்தை, முனைப்பை தொடக்க இரு நாட்களில் வெளிப்படுத்தி இருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும். ஆனால் முதல் இரு நாட்களில் இந்திய அணி வீரர்கள் செய்த தவறு, கடைசி நாளில் குறைந்தஅளவே வெற்றிக்கான நம்பிக்கை வைக்க முடிந்தது.

அதிலும் ஓவல் ஆடுகளத்தில் 5-வது நாளில் ஆடுகளம் சுமாரான நிலையில் இருக்கும். இந்த ஆடுகளத்தில் பேட்ஸ்மேன் பேட்செய்வதே கடினமாக இருக்கும் சூழலில் மணிக்கு 145 கி.மீ வேகத்தில் வீசும் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சை எதிர்கொள்வது சிரமம். அதுமட்டும்லாமல் புழுதி பறக்கும் ஆடுகளத்தில் சுழற்பந்துவீசினால் எந்தப் பக்கம் பந்து திரும்பும் என்பதும் தெரியாது ஆகியவை இந்திய அணிக்கு பெருத்த பின்னடைவாக இருந்தது.

ஆஸ்திரேலியா புதிய சாதனை

அதேசமயம், பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் பொறுப்பேற்றபின் அந்த அணிக்கு ஆஷஸ் கோப்பையை ஏற்கெனவே வென்றுகொடுத்துவிட்டார். தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையையும் பெற்றுக்கொடுத்து சாதனை புரிந்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி மட்டுமே ஐசிசி சார்பில் நடத்தப்பட்ட அனைத்துப் போட்டிகளிலும் கோப்பையை வென்றுள்ள ஒரே அணி. அந்த அணி 9-வது ஐ.சி.சி. கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. இதுவரை 5 ஒருநாள் போட்டி உலகக் கோப்பைகள், 2 ஒருநாள் சாம்பியன்ஸ் டிராபிகள், ஒரு டி20 உலகக் கோப்பை, இப்போது டி20 சாம்பியன்ஸ் கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது.

இந்தியா படுதோல்வி ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

திருப்புமுனை கூட்டணி

ஆட்டநாயகன் விருது முதல் இன்னிங்ஸில் 163 ரன்கள் சேர்த்து ஆட்டத்துக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய டிராவிஸ் ஹெட்டுக்கு வழங்கப்பட்டது. டிராவிஸ் ஹெட்(163), ஸ்டீவ் ஸ்மித்(128) ஆகியோர் இணைந்து 285 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

இந்த கூட்டணியை இந்தியப் பந்துவீச்சாளர்கள் உடைத்திருந்தால், நிச்சயம் ஆட்டம் வேறுபட்ட திசையில் பயணித்திருக்கும்.

வேகப்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம்

இந்தப் போட்டியில் மொத்தம் 38 விக்கெட்டுகள் இரு அணிகளிலும் சேர்த்து வீழ்த்தப்பட்டுள்ளன. அதில் 20 விக்கெட்டுகளை முழுமையாக இந்திய அணி இழந்துள்ளது. இதில் 15க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களே வீழ்த்தியுள்ளனர். நாதன் லேயான் மட்டும் 5 விக்கெட்டுகளை இரு இன்னிங்ஸிலும் சேர்த்து கைப்பற்றியுள்ளார்.

இந்த ஓவல் ஆடுகளத்தில் முதலில் பேட் செய்த அணிகளே பெரும்பாலும் வென்றுள்ள என்று வரலாறு இருந்தநிலையில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பீல்டிங் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா படுதோல்வி ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இந்திய அணியின் தோல்விக்குக் காரணமான ஹெட் - ஸ்மித் ஜோடி

இந்திய அணி செய்த தவறுகள் என்ன?

இந்திய அணி நிர்வாகம் மட்டுமின்றி, பேட்ஸ்மேன்களும், பந்துவீச்சாளர்களும் இந்தத் தொடரில் பல்வேறு தவறுகளைச் செய்தனர். குறைவான தவறுகளைச் செய்த ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது, அதிகமாகச் செய்த இந்திய அணி 2வது இடம் மட்டுமே கிடைத்தது.

முதல் இன்னிங்ஸில் சுப்மான் கில், புஜாரா இருவரும் பந்தை லீவ் செய்யத் தெரியாமல் கையை மேலே தூக்கி விக்கெட்டை பறிகொடுத்தனர். ஆப்-ஸ்டெம்பை மறைக்காமல் பந்தை லீவ் செய்தும் பலன் இல்லை, பந்து எந்தப் பக்கம் ஸ்விங் ஆகிறது என்பது தெரியாமல் பந்தை லீவ் செய்தும் பயன் இல்லை. இருவரின் விக்கெட் முதல் இன்னிங்ஸில் மிகவும் முக்கியமானது இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

2வது இன்னிங்ஸில் புஜாரா ஆட்டமிழந்ததும் தேவையற்றது. அப்பர்-கட் ஷாட்டை புஜாரா பெரும்பாலும் ஆடமாட்டார், ஆனால், ரன்நெருக்கடியில் அப்பர்கட் ஷாட்டை புஜாரா ஆடி தேவையில்லாமல் விக்கெட்டை இழந்ததும் பெரிய தவறாகும்.

இந்தியா படுதோல்வி ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

சுப்மான் கில்லுக்கு கிரீன் பிடித்த கேட்ச் சரியென்று 3வது நடுவர் தீர்ப்பளித்தாலும், அந்த முடிவு இந்திய அணியின் தோல்வியிலும் எதிரொலித்துள்ளது. கில்லுக்குப் பிடித்த கேட்ச் கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருப்பதும் தோல்விக்கான காரணமாகும்.

விராட் கோலி உலக அரங்கில் ‘கிங்’காக இருந்தாலும் அவரின் ஆப்சைட் பலவீனத்தை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். ஆப் சைட் விலக்கி வீசப்படும் பந்தை கையாள்வதிலும், அரவுண்ட் ஸ்டெம்பில் இருந்து வீசப்படும் பவுன்ஸரை எதிர்கொள்ளவும் கோலி கணிக்கத் தவறுகிறார் என்பதைத் தெரிந்து அவரை கட்டம் கட்டி தூக்கினர். 2வது இன்னிங்ஸில் வைடு சக்கர் பந்தை வீசி போலந்து விக்கெட் வீழ்த்தியது கோலியின் பலவீனத்தை வெளிச்சம் போட்டு காட்டியது.

இந்தியா படுதோல்வி ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கேப்டன் ரோஹித் சர்மா உள்நாட்டுப் போட்டிகளில் ஆடி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இங்கிலாந்தின் கவுண்டி போட்டிகள், உள்நாட்டில் ரஞ்சிக் கோப்பை, துலீப் டிராபி போன்றவற்றில் ரோஹித் சர்மா சில மாதங்கள் விளையாடினால்தான் அவரால் டெஸ்ட் போட்டிக்கு தன்னை சிறந்தவராக மாற்ற முடியும். இன்னும் டி20 பேட்ஸ்மேனிலிருந்து ரோஹித் சர்மா வெளியே வரவில்லை என்பது அவரின் ஷாட் தேர்வுகளில் இருந்தே தெரிந்துவிட்டது.

ரஹானே தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை முதல் இன்னிங்ஸிலும் சிறப்பாகப் பயன்படுத்தினால், 2வது இன்னிங்ஸிலும் கவுரவமான ஸ்கோரை எட்டினார். 18 மாதங்களுக்குப் பின் கிடைத்த டெஸ்ட் வாய்ப்பை ரஹானே அருமையாகப் பயன்படுத்தியுள்ளார்.

பந்துவீச்சில் சிராஜ், ஷமியைத் தவிர உமேஷ் யாதவ், ஷர்துல் பந்துவீச்சு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு தொல்லையாக இரு இன்னிங்ஸ்களிலும் அமையவில்லை. அதிலும், 2வது இன்னிங்ஸில்தான் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு லைன் லென்த் பிடிபட்டு துல்லியமாகவீசத் தொடங்கினர். முதல் இன்னிங்ஸில் இதைச் செய்திருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும்.

இந்தியஅணியில் அஸ்வின் இருந்தும் அவரை ப்ளேயிங் லெவனில் சேர்க்காதது தவறு என்பது இந்த தோல்விக்கான காரணங்களில் ஒன்று என்பதை மறுக்க முடியாது. அஸ்வின் இருந்திருந்தால் முதல் இன்னிங்ஸில் டிராவிஸ் ஹெட், ஸ்மித் கூட்டணியை உடைத்திருப்பார், 2வது இன்னிங்ஸில் ஆடுகளத்தின் தன்மையை நன்கு பயன்படுத்தியிருப்பார். அஸ்வின் அணியில் இல்லாதமைக்கு கொடுத்த விலையாகவே தோல்வி இருக்கிறது.

"சூழலுக்கு ஏற்பவே பீல்டிங் செய்ய தீர்மானித்தோம்"

இந்தியா படுதோல்வி ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

தோல்விக்குப்பின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் “ இங்கிலாந்தில் உள்ள சூழலுக்கு ஏற்ப நாங்கள் டாஸை வென்று பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தோம். முதல் செஷனில் நன்றாகவே பந்துவீசினோம், ஆனால், சில இடங்களில் எதிர்பார்த்த பந்துவீச்சு இல்லை.

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் வெற்றிக்கு உரித்தானவர்கள். குறிப்பாக டிராவிஸ் ஹெட் சிறப்பாக பேட் செய்தார். இவரின் பேட்டிங்கால் நாங்கள் கடும் சிரமத்தை உணர்ந்தோம். சரியான லைன் லென்தில் பந்துவீசுவது குறித்து அதிகமாக ஆலோசித்தோம், ஆனால், எதுவுமே பலனிக்கவில்லை.

முதல் இன்னிங்ஸில் ரஹானே, ஷர்துல் சிறப்பாக பேட் செய்து அணியை மீட்டனர். 2வது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் நன்றாகப் பந்துவீசினர், ஆனால்பேட்டிங்கில் மீண்டும் கோட்டைவிட்டோம். 5 நாட்களும் ஆடுகளம் அருமையாக இருந்தது, நாங்கள் பயன்படுத்தவில்லை.

கடந்த 4 ஆண்டுகளாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குச் செல்ல கடுமையாக உழைத்தோம். எங்களுக்கு இந்தத் தோல்வி வேதனையளிக்கிறது. ஏராளமான வீரர்கள் சாம்பியன்ஷிப்புக்காக உழைத்துள்ளனர். அடுத்த சாம்பியன்ஷிப்பில் இன்னும் சிறப்பாக விளையாடுவோம்” எனத் தெரிவித்தார்.

"போலந்து என் ஃபேவரேட் ப்ளேயர்”

வெற்றிக் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறுகையில் “ டாஸ் வென்றிருந்தால்கூட பந்துவீச்சைத்தான் தேர்ந்தெடுத்திருப்போம். ஸ்மித், டிராவிஸ் ஆட்டம் எங்களை கடும் அச்சத்திலிருந்து காப்பாற்றியது. இந்த சீசன் முழுவதும் டிராவிஸ் சிறப்பாக பேட் செய்துள்ளார். எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு எப்போதுமே அழுத்தத்தை அளிப்பவர் டிராவிஸ்.

முதல் நாளில் இருந்தே நாங்கள் ஆட்டத்தை கையில் எடுத்துவிட்டோம். ஆனால் இந்திய அணி எங்களிடம் இருந்து ஆட்டத்தை கைப்பற்ற முயன்றபோதிலும் நாங்கள் விடவில்லை. ஆட்டத்தின் பெரும்பகுதி நாட்கள் எங்கள் வசம் இருந்தது. போலந்து எனக்கு பிடித்த வீரர். தொடர்ந்து என்னுடன் பயணிப்பார், ஒவ்வொரு வீரரும் அவர்களின் பங்களிப்பை செய்தனர். அடுத்து எங்களின் பார்வை ஆஷஸ் மீது திரும்பும்” எனத் தெரிவித்தார்.

இந்தியா படுதோல்வி ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

என்ன மாதிரி ஆடுகளங்கள்?

இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லாவிட்டாலும்கூட டிரா செய்யக்கூட இந்திய பேட்ஸ்மேன்கள் முயன்றிருக்கலாம். ஆனால், கடைசி 55 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது என்பது தோல்வியை அப்பட்டமாக ஒப்புக்கொண்டதற்கும், போராட்டக்குணம் இல்லை என்பதையும் வெளிப்படுத்துகிறது.

இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான ஆடுகளங்கள் ஐபிஎல் போட்டி ரசிப்புக்காகவும், ஸ்வாரஸ்யத்தை அதிகப்படுத்தவும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும் அமைக்கப்பட்டவை.

இந்த ஆடுகளங்கள் தகுதிவாய்ந்த இளம் பேட்ஸ்மேன்களை உருவாக்குவது கடினம். தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மே.இ.தீவுகள் ஆகிய நாடுகளில் உள்ள வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் பந்தை எதிர்கொண்டு இந்திய பேட்ஸ்மேன்கள் ஆடும்போது அவர்களின் திறமையின் உறைகல் தெரிந்துவிடும். இந்தியாவில் உள்ள பேட்ஸ்மேன் சாதகமான ஆடுகளங்களை மாற்றினால்தான் டெஸ்ட் போட்டியில் ஆடும் திறமையான பேட்ஸ்மேன்கள் உருவாகுவார்கள்.

இந்திய அணியில் செய்ய வேண்டிய மாற்றம் என்ன?

இந்தியா படுதோல்வி ஏன்?

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

ஐ.பி.எல். இறுதிப்போட்டி நடைபெற்ற ஆமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம்

இந்திய அணியில் உள்ள டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எந்த ஆடுகளத்திலும் தங்களால் விளையாட முடியும் என்ற மாயையில் உள்ளனர். முதலில் அதிலிருந்து வெளியே வர வேண்டும்.

இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களின் வசதிக்காக, ஐபிஎல் தொடரில் பார்வையாளர்களைக் கவர்வதற்காக உருவாக்கப்பட்ட ஆடுகளங்கள், இதில் விளையாடிவிட்டு, ஓவல், மெல்போர்ன், பிரிஸ்பேன், அடிலெய்ட் ஆடுகளங்களில் இந்திய டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பேட் செய்வதும், வேகப்பந்துவீச்சை எதிர்கொள்வதும் இயலாத காரியம்.

ஆதலால், முதலில் சர்வதேச தரத்துக்கு பிசிசிஐ ஆடுகளங்களின் தரத்தை மேம்படுத்தி, இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடப் பழகிவிட்ட இந்திய வீரர்கள், திடீரென 5 நாள் போட்டிகளுக்கும், களத்தில் நீண்டநேரம் பீல்டிங் செய்யவும், பந்துவீசவும், பேட்டிங் செய்யவும் உடலை வளைப்பது கடினம்தான். ஆதலால், இனிமேல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கென தனியாக பேட்ஸ்மேன்களை உருவாக்க வேண்டும், அல்லது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையை இரக்கமின்றி மாற்றி அமைக்க வேண்டும்.

அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் கடைசி வரிசை பேட்ஸ்மேன்களையும், பந்துவீச்சாளர்களை மட்டும் நம்பி இந்திய அணி களமிறங்கினால் நிச்சயம் கரை சேராது. பிசிசிஐ அமைப்பு, இந்திய ஆடுகளங்களின் தரத்தை மேம்படுத்துவதிலும், 5 நாட்களுக்குமேல் ஆடுகளங்கள் தாங்கும் வகையில் க்ரீன் டாப் ஆடுகளங்களை அமைக்க முயல வேண்டும்.

அப்போதுதான், இ்ந்திய பேட்ஸ்மேன் ஒருமுழு நாள் அல்லது முழு செசன் பேட்டிங் செய்யவும், பந்துவீசவும் தகுதியுடையவர்களாக மாறுவார்கள். இல்லாவிட்டால், சர்வதேச தரத்துக்கு வடிவமைக்கப்பட்ட சவாலான ஆடுகளங்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் இதுபோன்று எளிதாக எதிரணியிடம் சரண்டராவது தொடர்கதையாகிவிடும்.

https://www.bbc.com/tamil/articles/cd1wvw61k3eo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முழு ஊதியத்தையும் இழந்தது இந்தியா! ஆஸிக்கு 80 சதவீத அபராதம்

Published By: SETHU

12 JUN, 2023 | 02:42 PM
image
 

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்குபற்றிய இந்திய, அவுஸ்திரேலிய அணிகள் குறித்த நேரத்துக்குள் பந்துவீசி முடிப்பதற்குத் தவறியமையால் இரு அணிகளும் ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

லண்டனில் நடைபெற்ற இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி 209 ஓட்டங்களால் வெற்றியீட்டி சம்பியனாகியமை குறிப்பிடத்கத்கது.

நேற்று முடிவடைந்த இப்போட்டியில் குறித்த நேரத்துக்குள் பந்துவீசி முடிக்கத் தவறியமைக்காக இந்திய வீரர்களுக்கு அவர்களின் ஊதியத்தில் 100 சதவீதமும் அவுஸ்திரேலிய வீரர்களுக்கு ஊதியத்தில் 80 சதவீதமும் 

அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்திய அணியினர் இப்போட்டிக்கான தமது முழு ஊதியத்தையும் இழந்துள்ளனர். 

இந்தியா குறித்த நேரத்துக்குள் 5 ஓவர்கள் குறைவாகவும் அவுஸ்திரேலியா 4 ஓவர்கள் குறைவாகவும் வீசியதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா, அவுஸ்திரேலிய அணிததலைவர் பெட் கமின்ஸ் ஆகியோர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் மேலதிக விசாரணை நடைபெறவில்லை என ஐசிசி தெரிவித்துள்ளது.

இதேவேளை, தனது ஆட்டமிழப்புக்கு காரணமான பிடி குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்ட இந்திய வீரர் சுப்பன் கில்லுக்கு போட்டி ஊதியத்தில் மேலும் 15 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவருக்கு ஒரு ஒழுக்கமீறல் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. (சேது)

https://www.virakesari.lk/article/157542

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோலி, ரோஹித், புஜாரா - இந்திய அணியின் மூன்று முக்கிய தூண்களுக்கு மாற்று தேடும் நேரம் வந்துவிட்டதா?

கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

4 மணி நேரங்களுக்கு முன்னர்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் தோல்வி குறித்து விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக, இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களான விராத் கோலி, ரோஹித் ஷர்மா, சேட்டேஸ்வர் புஜாரா ஆகியோர் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தாதது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

இந்த மூவரும் பேட்டிங்கில் சோபிக்கத் தவறியது, இறுதிப் போட்டியில் இந்தியா வலுவிழக்க முக்கியக் காரணமாக இருந்தது. இந்த மூவருக்கும் மாற்று தேட வேண்டிய நேரம் வந்துவிட்டதா?

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில், விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் சத்தேஸ்வர் புஜாரா ஆகிய மூவரில், சத்தேஸ்வர் இதில் புஜாராவின் ஆட்டம் ரசிகர்களை பெரிதும் ஏமாற்றியது.

இதற்கு முக்கிய காரணம் புஜாராவிற்கு கவுண்டி கிரிக்கெட்டில் நல்ல அனுபவம் இருக்கிறது. அதில் அவர் அதிக ரன்களை குவித்திருக்கிறார். இங்கிலாந்தில் நடைபெறும் போட்டிகளில் அவர் அதிகமாக விளையாடிருப்பது இதில் முக்கியபங்காக கருதப்படுகிறது.

 

ஆனால் புஜாராவும் ஏமாற்றமளிக்க துவங்கியிருக்கிறார்.

2022ஆம் ஆண்டு சிட்டகாங்கில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில், இரண்டு இன்னிங்ஸ்களில் 90 மற்றும் 102 ரன்கள் குவித்ததைத் தவிர்த்துப் பார்த்தால், கடைசியாக 2021-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 77 ரன்கள் குவித்ததே அவரின் அதிகபட்ச ஸ்கோராக இருக்கிறது.

2021- 2023 இடைப்பட்ட காலத்தில் புஜாரா, 17 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். இந்த 17 போட்டிகளில் மொத்தம் 928 ரன்களை அவர் குவித்திருக்கிறார். இது சராசரியாக ஒரு போட்டிக்கு 32 ரன்கள் என்ற கணக்கின் வீதம் வருகிறது.

இந்த ஒட்டுமொத்த போட்டிகளில் அவர் ஒரே ஒருமுறைதான் சதம் அடித்தார். இந்திய அணியின் நம்பர் 3 பேட்ஸ் மேன் என்று கருதப்படும் ஆட்டக்காரர் இப்படியான ஒரு நிலையில் இருப்பது வருத்தமளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

புஜாரா இல்லையென்றால் வேறு யார்?

கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

சத்தேஸ்வர் புஜாரா

நம்பர் 3 ஆக விளையாடுவதற்கு சத்தேஸ்வர் புஜாராவிற்கு பதிலாக இந்திய டெஸ்ட் அணி, வேறு ஒரு வீரரை தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால், யாருடைய பெயர்கள் எல்லாம் உங்களுடைய நினைவுக்கு வருகிறது?

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சொந்த மண்ணில் நடந்த தொடரின் போது, ஹனுமா விஹாரி இந்த நிலையில் மூன்று இன்னிங்ஸ்களில் ஒரு அரை சதம் அடித்தார்.

ஆனால் கடந்த ஆண்டு வங்கதேசத்தில் புஜாரா மீண்டும் அணிக்கு திரும்பிய பிறகு, ஹனுமா விஹாரி அணியில் பங்குபெறும் வாய்ப்பை இழந்தார்.

ஹனுமா விஹாரியை தவிர்த்து பார்த்தால், அவரை தவிர வேறு யாரும் 3ஆம் இடத்தில் விளையாடுவதற்கான தகுதியில் இல்லை.

ஆனால் இந்தியாவின் பிரச்னை இங்கே நம்பர் 3 மட்டுமல்ல. அதற்கு மேலாக, இங்கே பேட்டிங் வரிசையிலும் பிரச்னைகள் இருக்கின்றன.

பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் இருப்பவரான விராட் கோலி, இந்த தசாப்தத்தின் தவிர்க்க முடியாத தலைசிறந்த வீரராக இருக்கிறார்.

கடந்த தசாப்தத்தை திரும்பி பார்க்கும்போது, விராட் கோலி போன்று ஒரு சில வீரர்களே சிறப்பாக இருக்கிறார்கள். ஒரு காலத்தில் உலக நாடுகளில் உள்ள பந்து வீச்சாளர்களையெல்லாம் மிரள வைத்த விராட் கோலி, தற்போது அவருடைய சிறந்த வடிவத்தின் நிழலாக மட்டுமே பார்க்கப்படுகிறார்.

டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் கோலி மீண்டும் பளிச்சிடத் தொடங்கியிருக்கிறார். இருப்பினும், டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் அவர் ஃபார்முக்கு வர வேண்டும்.

உண்மையில், தற்போது டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் தேவை இந்திய அணிக்கு இருக்கிறது.

அடுத்த மாதம், 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளை இந்தியா மேற்கிந்திய தீவுகளில் இருந்து தொடங்குகிறது. இந்த நேரத்தில், அணியை எல்லா பிரச்னைகளிலிருந்தும் மீட்டெடுக்கும் திறனைக் கொண்டிருந்த அந்த பழைய கோலிதான் இந்தியாவுக்கு இப்போது தேவை.

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் (2021-23), விராட் கோலி 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 32.13 என்ற சராசரியில் 932 ரன்கள் எடுத்தார். இதில் அவர் ஒரே ஒரு சதம் மட்டுமே அடித்திருந்தார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற அகமதாபாத் போட்டியில் கோலி இந்த சதத்தை அடித்தார். ஆனால் இந்த காலகட்டத்தில் கோலியின் சராசரி 25.25 ஆக குறைந்துள்ளது.

கோலிக்கு மாற்று இருக்கிறதா?

கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

விராட் கோலி

அணியின் நான்காவது இடத்திற்கு ஸ்ரேயாஸ் ஒரு நல்ல தேர்வாக இருப்பார். ஆனால் அவர் தற்போது காயமடைந்துள்ளதால் ஓய்வில் இருக்கிறார். ஆனால் எதிர்காலத்தில் நான்காம் இடத்திற்கு அவர் நல்ல தேர்வாக இருப்பார். இருப்பினும் அவர் தன்னுடைய ஆட்டத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும்.

ஷார்ட் பிட்ச் பந்துகள் மீதான வெறுப்பையும் ஸ்ரேயாஸ் சமாளிக்க வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அவரது உடலை நேரடியாக குறிவைத்து வரும் ஷார்ட் பிட்ச் பந்துகளால் , அவர் அடிக்கடி சிரமப்படுவதைக் காணலாம்.

அதேபோல் சர்பராஸ் கான் மற்றொரு வாய்ப்பாக இருக்கிறார்.

கடந்த உள்நாட்டு சீசனில் சர்பராஸ் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் உயர்தர வேகப்பந்து வீச்சுக்கு முன்னால் அவர் இன்னும் சோதிக்கப்படவில்லை.

அதிக வேகம் கொண்ட பந்துகளில், சர்பராஸ் அசௌகரியமாக இருப்பதாக சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதேபோல் இந்திய ஏ அணிக்காக ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பைப் பெற்ற சர்பராஸ் கானால், ஒரு சதம் கூட அடிக்க முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரோஹித் ஷர்மாவுக்கு மாற்று யார்?

கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா இந்தியாவுக்காக 50 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். ஆனால் நாட்டின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் என்று பட்டியலிடும் போதெல்லாம், அவரது பெயர் கண்டிப்பாக அதில் இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த 2021-23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில், ரோஹித் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். அதில் இரண்டு சதங்கள் உட்பட, 42.11 என்ற சராசரியில் 758 ரன்கள் அவர் எடுத்திருக்கிறார்.

இந்த காலகட்டத்தில் வெளிநாட்டு மண்ணிலும் அவரது ஆட்டம் சிறப்பாகவே இருந்தது. அவரது சராசரி இந்தியாவில் 36.88 ஆகவும், வெளிநாடுகளில் 52.57 ஆகவும் இருந்தது.

ஆனால் தற்போது ரோஹித் சர்மாவுக்கு 36 வயதாகிறது. 2025 வரை அவரால் விளையாட முடியுமா என்பதுதான் நம்மிடையே இருக்கும் மிகப்பெரும் கேள்வி.

ஷுப்மான் கில் ஒரு நல்ல தொடக்க வீரராக காணப்படுகிறார், ஆனால் அவருக்கு ஒரு நல்ல பார்ட்னர் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

மயங்க் அகர்வால் ஒரு நல்ல தேர்வாக இருந்தாலும், 2022 இல் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான பெங்களூர் டெஸ்டுக்குப் பிறகு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவேயில்லை.

இதுதவிர அபிமன்யு ஈஸ்வரனும் இருக்கிறார். அவர் வலுவான தொடக்க ஆட்டக்காரராக இருந்தாலும், அவர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் போட்டியிட வேண்டியிருக்கலாம்.

ஆனால் இத்தகைய போட்டிகள் அனைத்துமே இந்திய அணிக்கு நன்மையையே பயக்கும்.

அடுத்த ஆண்டு இங்கிலாந்து அணி இந்தியா வரவிருக்கிறது. அதன் பிறகு 2025ல் மீண்டும் ஒருமுறை இங்கிலாந்து இந்தியாவில் விளையாடவுள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அடுத்த சுற்றில் வெற்றிபெற இந்த சுற்றுகள் அனைத்திலும் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு இருக்கிறது.

இந்திய அணியின் மூன்று முக்கிய தூணாக விளங்கும் விராட், ரோஹித் ஷர்மா மற்றும் புஜாரா ஆகியவர்களை நீக்கிவிட்டு, மாற்று வீரர்களை தேர்வு செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆனால் காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் தேவைப்பட்டால் செய்துதான் ஆக வேண்டும். இந்த விஷயத்தில் இந்திய அணி நிர்வாகம் என்ன நினைக்கிறது என்பதைப் பொறுத்துதான் அனைத்து மாற்றங்களும் ஏற்படும்.

https://www.bbc.com/tamil/articles/ce9w7w4d79qo



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் கடல் எல்லைக்குள் வந்து எமது மீன்வளத்தைச் சூறையாடிவிட்டு, நேவி துரத்துகிறது என்று இந்தியக் கடல் எல்லைக்குள் ஓடி ஒளிந்துவிட்டு மீண்டும் நேவி அகன்றவுடன் இலங்கை எல்லைக்குள் வந்து மீண்டும் சூறையாடலில் ஈடுபடுவார்களாம். இவர்கள் பண முதலைகள். அரசியல் செல்வாக்குள்ளவர்கள். இவர்களுக்கும் சாதாரண தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் தொடர்பில்லை. இதனை தடுப்பதைத்தவிர வேறு வழியில்லை. இவர்களின் கடற்கலங்கள் அழிக்கப்பட்டால் ஒழிய இவர்கள் நிற்கப்போவதில்லை.  இதற்கு இனச்சாயம் பூசத்தேவையில்லை. கடற்கொள்ளை கடற்கொள்ளைதான். 
    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.