Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது (edited)

FB_IMG_1605011224100.jpg

ஒயாத அலைகள் -1 முல்லைத்தள வெற்றிச்சமருக்கான கடினமான கடற்பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது, அதேவேளை உயரக்கடல் ஆயுத வினியோக நடவடிக்கையும் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

வினியோக நடவடிக்கைகளில் கொலின்ஸ், வினோத், தர்மன், தீபன் போன்ற அதிவேகப்படகுகள் ஈடுபடுத்தப்பட்டு நடுச்சாம வேளைகளில் இரகசியக் கடற்பயணங்கள் நடைபெற்றுவந்தது.

முதன்முதலாக எமது இயக்கத்துக்கு இரட்டைக்குழல் கனொன் பீரங்கிகள் இறக்கப்பட்டு சமவேளையில் அதற்கான பயிற்சிகளும் பிரமந்தனாறு காட்டுப்பகுதியில் லெப் கேணல் இரும்பொறை தலைமையினான பயிற்சியாசிரியர்களால் கடற்புலிகளின் விசேட அணியினருக்கு வழங்கப்பட்டுவந்தது.

முல்லைச்சமருக்கான விமான எதிர்ப்பு நடவடிக்கையில்கூட கடற்புலிகள் விசேட அணியினரே ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதில் லெப். கேணல் ஆதிமான்/ஒஸ்கார், லெப். கேணல் பிரசாந்தன் ஆகியோர் முதன்மையானவர்கள். இதுபற்றி வேறொரு பதிவில் முழுமையாக பதிவிடுகின்றேன்.

இவ்வாறான நெருக்கடியான கடல்வினியோகம் மற்றும் கனரகப்பயிற்சிகளில் ஈடுபடுவதற்காக வெறுமனே நூற்றுக்கும் குறைவான கடற்புலிகளே அனைத்தையும் மாறிமாறி செய்துவந்தனர்.

உயரக்கடல் வினியோக நடவடிக்கையில் ஆண் போராளிகள் மட்டுமே ஈடுபட்டுவந்த அக்காலத்தில் முதல் முறையாக பெண்போராளிகளையும் ஈடுபடுத்துவதுபற்றி யோசிக்கப்பட்டதும் அதற்கான வெள்ளோட்டமாக மேஜர் காந்தியும், இன்னொரு பெண் போராளியும் படகேற்றப்பட்டு உயரக்கடல் வினியோக நடவடிக்கையில் பெண்புலிகளின் கால்த்தடம் புதுப்பாய்ச்சலுடன் பதியத் தொடங்கியது. (இதுபற்றிய வரலாற்றுப்பதிவொன்றை முழுமையாக பதிவதற்கு முயற்சிக்கின்றேன்)

கடற்புலிகளின் பிரதான தளமான சாளைத்தளத்தின் ஆளணித் தட்டுப்பாட்டை நேரடியாக கண்ட தேசியத் தலைவர் அதனை நிவர்த்திசெய்யும் பொருட்டு தனது மெய்ப்பாதுகாவலர் அணியை ஆயுதங்களைக் கரையேற்றும் பணிகளில் ஈடுபடுத்திவந்தார். அதேவேளை கடற்சிறுத்தை மகளிர் அணியின் ஒரு தொகுதியையும் கடற்புலிகள் விசேட அணியில் இணைத்துச் செயற்படவைத்தார்.

கடற்புலிகளின் விசேட அணியோடு அன்று இணைக்கப்பட்ட பெண்புலிகளில் அணித்தலைவியாக எமக்கு அறிமுகமானவளே கடற்சிறுத்தைப் போராளி நாதினி அவர்கள்.

அன்றிலிருந்து ஓயாத அலையாக கடலேறி வலம்வரத்தொடங்கிய நாதினி பல கடற்சமர்களில் முன்னின்று போராடிய துணிகரப்போராளி.

கடற்புலிகளின் வளர்ச்சியில் நாதினியின் பெயரும் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய வரலாறு.

முள்ளிவாய்க்கால் இறுதிப்போர்வரை ஆழக்கடலில் ஓயாமல் சுழன்றடித்த இந்தச் சிறுத்தைப்பெண்புலி, நந்திக்கடலோரம் நடைபெற்ற இறுதிச்சமரில் ஆயுதவெடிபொருட்கள் தீர்ந்துவிட்ட நிலையில் தன்னைத்தானே அழித்து விழிமூடிக்கொண்டாள்.

 

நினைவுகளுடன்….
புலவர்
கடற்புலிகள்.

Edited by நன்னிச் சோழன்


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.