Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலவில் இன்னும் அழியாத ஆம்ஸ்ட்ராங் கால் தடம் - மனிதனின் அடுத்த காலடி எப்படி இருக்கும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஆர்டிமிஸ் என்ற திட்டத்தின் மூலம் 2025ஆம் ஆண்டு நான்கு புதிய விண்வெளி விரர்கள் நிலவில் கால்பதிக்கவுள்ளனர்.

பட மூலாதாரம்,NASA

 
படக்குறிப்பு,

ஆர்டிமிஸ் என்ற திட்டத்தின் மூலம் 2025ஆம் ஆண்டு நான்கு புதிய விண்வெளி விரர்கள் நிலவில் கால்பதிக்கவுள்ளனர்.

11 ஜூலை 2023, 06:03 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

நிலவில் 1969 மற்றும் 1972 ஆம் ஆண்டுகளின் வாக்கில் கால் பதித்த 12 விண்வெளி வீரர்களின் கால்தடங்கள் இன்னும் அழியவில்லை.

அந்த கால்தடங்களை அழிப்பதற்கு அங்கு காற்றோ மழையோ இல்லை; எனவே மேலும் பலநூறு ஆண்டுகளுக்குக்கூட அந்த கால்தடம் அழியாமல் இருக்கலாம்.

தற்போது நாசா நிலவின் தென் துருவத்திற்கு புதிய விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதால் மேலும் சில அழியா கால்தடங்கள் நிலவில் பதியக்கூடும். ஆனால் 50 வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக நிலவில் பதியப்போகும் கால் தடம் எப்படி இருக்கும்? அப்பலோ விண்வெளி வீரர்களின் கால்தடங்களில் இருந்து அவை எவ்வாறு மாறுபடும்?

நாசா மற்றும் அதன் வர்த்தக கூட்டணி நிறுவனம் அடுத்த தலைமுறைக்கான நிலவில் அணியக்கூடிய காலணிகளை (பூட்ஸ்களை) தயாரிப்பதில் பல வருடங்களை செலவிட்டன. ஆர்டிமிஸ் என்ற திட்டத்தின் மூலம் 2025ஆம் ஆண்டு நான்கு புதிய விண்வெளி விரர்கள் நிலவில் கால்பதிக்கவுள்ளனர்.

 

அவர்கள் அணியும் காலணிகள் அப்போலோ விண்வெளி வீரர்களின் பூட்ஸ்களைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்பட வேண்டும். அதுவே அதிக பள்ளம் மேடுமாக இருக்கக்கூடிய நிலவின் தென் துருவத்தில் விண்வெளி வீரர்களுக்கு சௌகரியத்தையும், பாதுகாப்பையும் வழங்கும்.

விண்வெளி வீரர்களின் கால்தடங்களில் புதுவிதமான சாதனங்களையும் தொழில்நுட்பங்களையும் பொருத்துவதில் பொறியாளர்கள் எந்த அளவிற்குக் கவனம் செலுத்தி வருகிறார்களோ அந்த அளவிற்கு அந்த காலணிகள் ஏற்படுத்தும் தடத்தின் மீதும் கவனம் செலுத்துகின்றனர். முன்னர் சொன்னதுபோல இந்த கால்தடங்களும் பல நூறு ஆண்டுகளுக்கு நிலவின் மேற்பரப்பில் நிலைத்திருக்கக்கூடியது அல்லவா!

முதன்முறையாக நிலவில் கால்பதித்தவர்களின் தடங்கள் எப்படி சட்டென கண்டறியும்படி உள்ளதோ அதேபோல இதுவும் இருக்க வேண்டும் என்றும் பொறியாளர்கள் பல பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 
“ஒவ்வொரு தனிநபர்களுக்கும் பொருந்தும் காலணிகளை உருவாக்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்” என சாக் ஃபெஸ்டர் தெரிவித்தார்.

பட மூலாதாரம்,NASA

 
படக்குறிப்பு,

“ஒவ்வொரு தனிநபர்களுக்கும் பொருந்தும் காலணிகளை உருவாக்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்” என சாக் ஃபெஸ்டர் தெரிவித்தார்.

இருப்பினும் காலணிக்கென்று இருக்கும் சில அடிப்படை அம்சங்கள் நிச்சயமாக அதில் இருக்கும் என்கிறார் நாசா ஜான்சன் விண்வெளி மையத்தின் விண்வெளி ஆடை வடிவமைப்பு பொறியாளர் சாக் ஃபெஸ்டர். இவர்தான் விண்வெளி வீரர்களின் காலணியை வடிவமைக்கும் திட்டத்தை வழிநடத்துகிறார்.

“இந்த காலணிகள் 'க்ரிப்' ஆக இருக்க வேண்டியது மிக அவசியம்; நிலவின் கரடுமுரடான பரப்பில் மட்டுமல்ல, உலோக பரப்பில், ஏணிகளில், ரோவர்களிலும் கூட ‘க்ரிப்’ஆக நடப்பதற்கு ஏற்ற மாதிரிதான் இந்த காலணிகள் வடிவமைக்கப்படும் ஆனால் அதே சமயத்தில் இந்த காலணிகளின் தடங்கள் நீண்ட வருடங்களுக்கு அழியாமல் இருக்கும் ஒரு நினைவுச் சின்னமாக இருக்கும் என்பதையும் நாங்கள் மனதில் வைத்து கொள்கிறோம்,” என்கிறார் சாக்.

ஆர்டிமிஸ் திட்டத்தில் விண்வெளி வீரர்கள் அணியும் மொத்த உடையையும் ஆக்சியம் ஸ்பேஸ் என்ற நிறுவனமே வடிவமைக்கவுள்ளது.

இந்த ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனம் இந்த வருடத்தின் தொடக்கத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தனியார் விண்வெளி வீரர்களை இரண்டாவது முறையாக அனுப்பியது. இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட புதிய விண்வெளி ஆடைகளில் முக்கிய அம்சம் அதில் சேர்க்கப்பட்டிருந்த காலணிகள்தான். இருப்பினும் அந்த காலணிகள் எவ்வாறு இருக்கும் என்ற விரிவான படம் இனிமேல்தான் வெளியிடப்படும்.

ஆனால் இந்த காலணிகளில் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என நாசாவால் வெளியிடப்பட்ட ஆய்வு சில தகவல்களை நமக்கு அளிக்கின்றன.

நிலாவில் மனித காலடி தடம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

நிலவில் 1969 மற்றும் 1972 ஆம் ஆண்டுகளின் வாக்கில் கால் பதித்த 12 விண்வெளி வீரர்களின் கால்தடங்கள் இன்னும் அழியவில்லை

அப்போலோ திட்டத்துடன் ஒப்பிட்டால் இந்த விண்வெளி வீரர்கள் எதிர்கொள்ள வேண்டிய வெப்பநிலைதான் மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஏனென்றால் அப்பலோ திட்டம் நிலவின் துருவப் பகுதியில் சம தளமாக இருக்கும் பகுதியில்தான் பெரும்பாலும் செயல்படுத்தப்பட்டது. ஆனால் அர்டிமிஸ் 3 நிலவில் தரையிறங்கும்போது விண்வெளி வீரர்கள் நிலவில் உள்ள தென் துருவத்தில் ஒரு வித்தியாசமான சூழலை அடைய வேண்டி வரும்.

அதில் சில பகுதிகள் நிரந்தரமாக நிழல் படர்ந்த பகுதிகள். அதாவது ஆயிரம் ஆண்டுகளாக அங்கு சூரியனின் பார்வையே படவில்லை. என்கிறார் சாக் ஃபெஸ்டர். அதில் சில பகுதிகளின் வெப்பநிலை 48 டிகிரி கெல்வினுக்கும் அதாவது மைனஸ் 225 செல்ஷியஸ் வரை செல்லக்கூடும்.

எனவே காலணிகள் கதகதப்பாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்படும். இதற்கான ஆராய்ச்சிகளை நாசாவும் ஆக்ஸியம் நிறுவனமும் மேற்கொண்டு வருகின்றன.

"அப்போலோ சமயத்தில் இல்லாத புதிய நவீன சாதனங்கள் தற்போது வடிவமைக்கப்பட்டு காலணியில் பயன்படுத்தப்படும்," என்கிறார் ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ரசல் ரால்ஸ்டன்.

“நிலவின் தென் துருவத்தில் நிலவும் அதீத குளிரான சூழ்நிலையை தாங்கும் நோக்கில் பல தனித்துவமான பொருட்களைக் காலணிகளின் தயாரிப்பில் பயன்படுத்தியுள்ளோம்.”என்றார் அவர்.

அதேசமயம் பூட்ஸ்களை கதகதப்பாக வைத்துக்கொள்ளும் செயல்முறைகளுக்காக பேட்டரிகள் போன்ற அதிக எடை கொண்ட சாதனங்களை அதில் பொருத்தினால் காலணிகளின் எடை கூடி அது வீரர்களுக்கு சுமையை ஏற்படுத்தும் என்கிறார் சாக் ஃபெஸ்டர்.

விண்வெளி வீரர்கள் நிலவில் நீண்ட நாட்கள் தங்க வேண்டும் என்ற காரணத்தினாலும், எதிர்கால திட்டங்களுக்கு அங்கு ஒரு நிரந்தர தலத்தை அமைக்க வேண்டும் என்பதாலும் கூடுதலான எடை விண்வெளி வீரர்களுக்கு சிரமத்தையே கொடுக்கும்.

ஆர்டிமிஸ் திட்டத்தில் முதன்முறையான பெண் விண்வெளி வீரர் களமிறங்குகிறார். இதன் பொருள் வெவ்வேறு அளவுகளில் காலணிகள் தயாரிக்கப்பட வேண்டும் என்பதாகும். அப்போலோ திட்டத்தில் கிட்டதட்ட அனைத்து வீரர்களும் ஒரே உயரத்தில், வயதில் எடையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“ஒவ்வொரு தனிநபர்களுக்கும் பொருந்தும் காலணிகளை உருவாக்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்” என சாக் ஃபெஸ்டர் தெரிவித்தார்.

அப்போலோ சமயத்தில் பயன்படுத்தியதைக் காட்டிலும் தற்போதைய காலணிகள் அதிக சௌகரியமாகவும், அணிவதற்கு எளிதாகவும் இருக்கும் என ரால்ஸ்டன் தெரிவித்தார். திட்டம் தொடங்குவதற்கு முன்பாக இந்த காலணிகளை அணிந்து வீரர்களுக்கு பல நாட்கள் பயிற்சிகளும் வழங்கப்படும்.

“அதேபோல அனைத்து நேரங்களிலும் தொழில்நுட்ப ரீதியாகத்தான் தீர்வை பெற வேண்டும் என்பதில்லை. தனிப்பட்ட முறையில் ஆறு மணிநேரங்களுக்கு மேலான பணி என்றால் நான் இரண்டு சாக்ஸை அணிந்து கொள்வேன்,” இம்மாதிரியாக தனிநபர்களுக்கு ஏற்ற மாதிரி தீர்வுகளை கண்டறியலாம்”. என்கிறார் ஃபெஸ்டர்

அதேபோல மற்றொரு சவாலான விஷயமும் விவாதிக்கப்படுகிறது. அதாவது நிலவில் சமதளமற்ற பரப்பில் படிந்துள்ள தூசி வெவ்வேறு வடிவங்களில் கூர்மையானதாக இருக்கும். எனவே மேற்பரப்பு மிகவும் சொறசொறப்பாக இருக்கும். அதேபோல அந்த தூசிகள் மின்னூட்டத்தை கொண்டிருக்கும். இதனால் அந்த தூசிகள் எளிதாக ஒட்டிக் கொள்ளும். மின் சாதனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

ஆர்டிமிஸ் திட்டத்தில் விண்வெளி வீரர்கள் அணியும் மொத்த உடையையும் ஆக்சியம் ஸ்பேஸ் என்ற நிறுவனமே வடிவமைக்கவுள்ளது.

பட மூலாதாரம்,NASA

 
படக்குறிப்பு,

ஆர்டிமிஸ் திட்டத்தில் விண்வெளி வீரர்கள் அணியும் மொத்த உடையையும் ஆக்சியம் ஸ்பேஸ் என்ற நிறுவனமே வடிவமைக்கவுள்ளது.

எனவே தற்போது காலணிகளில் மின்னூட்டங்கள் கொண்ட தூசிகள் ஒட்டாமல் இருக்கும் வகையில் காலணிகள் வடிவமைக்கப்படுகின்றன.

சரி அப்படி என்றால் இந்த காலணிகள் ஏற்படுத்தும் தடங்கள் எப்படி இருக்கும்?

அப்பலோ விண்வெளி வீரர்கள் கனமான ஓவர்பூட்ஸ்களை அணிந்திருந்தனர். அவை அவர்களின் விண்வெளி ஆடையின் ஒரு பகுதியாக இருந்த மெல்லிய ஷூவுடன் இணைக்கப்பட்டிருந்தது. இந்த பூட்ஸ்கள்தான் நிலவில் கால்தடங்களை ஏற்படுத்தியது. இந்த பூட்ஸ்கள் நிலவிலேயே விட்டு விடப்பட்டது.

தற்போதைய திட்டத்திற்கான காலணிகள் ஓவர்பூட்ஸ்களை போல வடிவமைக்கப்படுமா என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்த காலணிகள் குறித்து ரால்ஸ்டன் எந்த தகவல்களையும் வெளிப்படையாக செல்லவில்லை என்றாலும் க்ளூ ஒன்றை கொடுத்துள்ளார். அது, நிலவுக்கு மனிதர்கள் திரும்பி வந்ததைக் குறிக்கும் வகையில் ஏதேனும் உருவங்கள் காலணியின் அடிப்பகுதியில் பதிக்கப்படலாம் என அவர் தெரிவித்தார்.

ஆனால் அது எம்மாதிரியான உருவம் என அவர் தெரிவிக்கவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி. நிலவில் பதியப்போகும் அடுத்த கால்தடமும் இதற்கு முந்தைய கால்தடத்தைப் போல வரலாற்று நிகழ்த்தும். விண்வெளி ஆராய்ச்சியில் அது மற்றொரு மைல்கல்லாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

https://www.bbc.com/tamil/articles/c89r0e9x1wzo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிலவில் கொடி 'பறந்தது' ஏன்? ஆம்ஸ்ட்ராங் தரையிறங்கும் காட்சி ஹாலிவுட்டில் படமாக்கப்பட்டதா?

நிலா, அமெரிக்கா, சந்திரயான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

13 ஜூலை 2023, 05:06 GMT
புதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர்

அமெரிக்கா 1969-ம் ஆண்டு முதன்முதலில் அப்போலோ 11 எனும் விண்வெளி விமானத்தின் மூலம் நிலவில் மனிதர்களை தரையிறங்கியது.

அப்போதிருந்தே இது நிகழவே இல்லையென்றும், நிலவில் தரையிறங்குவது போன்ற காட்சிகள் போலியாகச் சித்தரிக்கப்பட்டவை என்றும் பலரும் சொல்லி வந்தனர்.

ஆனால் அது உண்மையா இல்லையா என்று எவ்வாறு அறிந்துகொள்வது?

அமெரிக்கா நிலவில் தரையிறங்கிய 1969-ம் ஆண்டு அதனைச் சித்தரிப்பதற்கான தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்படவில்லை, என்கிறார் அறிவியல் எழுத்தாளரான டலாஸ் கேம்ப்பெல். “ஆனால் நிலவுக்குச் செல்லும் தொழில்நுட்பம் நம்மிடம் இருந்தது,” என்கிறார்.

 

நட்சத்திரங்கள் ஏன் தெரியவில்லை?

அப்போலோ 11 நிலவில் தரையிறங்கியது போலி என்று சொல்பவர்கள், அதற்காக முதலில் சொல்லும் காரணம், ‘அக்காட்சிகளில், பின்னணியில் நட்சத்திரங்கள் தெரியவில்லை,’ என்பதுதான்.

இதற்குக் காரணம், ‘High Contrast’ எனப்படும் ஒளியில் இருக்கும் உச்சபட்ச மாறுபாடு என்கிறார் திரைப்படம் மற்றும் புகைப்பட தொழில்நுட்பங்களின் நிபுணரான மார்க் ஷூபின்.

“மிகவும் வெளிச்சமாக இருக்கும் பட்டப்பகலில், ஒரு வீட்டின் கதவைத்திறந்து உள்ளே பார்த்தால், அங்கு இருப்பவற்றை நம்மால் சரியாகப் பார்க்க முடியாது. இது ஏனெனில் நாம் நிற்கும் இடத்தில் வெளிச்சம் அதிகமாக இருப்பதனால்,” என்கிறார் ஷூபின்.

இதே விளைவினால்தான் நிலாவில் தரையிறங்கும் காட்சிகளிலும் நம்மால் நட்சத்திரங்களைப் பார்க்க முடியவில்லை என்கிறார் அவர்.

இது ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டதா?

நிலா, அமெரிக்கா, சந்திரயான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நிலவில் தரையிறங்கியதை பொய் என்று சொல்வபர்கள், முக்கியமாக முன்வைக்கும் இன்னொரு விளக்கம், அக்காட்சிகள் ஹாலிவுட்டில் இருக்கும் ஒரு ஸ்டூடியோவில் ‘செட்’ அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு எடுக்கப்பட்டன என்பது.

ஆனால், நிபுணர்கள் இக்கருத்தில் மாறுபடுகிறார்கள். நிலவில் இருக்கும் குறைந்த புவியீர்ப்பினைப் போன்று ஒரு படப்பிடிப்பு ஸ்டூடியோவுக்குள் உருவாக்குவது சாத்தியமற்ற ஒன்று என்கிறார்கள்.

“காற்று இருக்குமிடத்தில் தூசியும் மண்ணும் ஒரு வகையில் நடந்துகொள்ளும். அதுவே நிலவைப்போல சுத்தமாக காற்றே இல்லாத இடத்தில் அவை முற்றிலும் வேறு மாதிரி நடந்துகொள்ளும். அதனால், அக்காட்சிகளை ஒரு ஸ்டூடியோவில் ‘செட்’ அமைத்து காட்சிப்படுத்தியிருக்க வேண்டுமென்றால், அங்கு இருக்கும் காற்றை முழுதுமாக வெளியேற்றி, அங்கு ஒரு வெற்றிடத்தை (vacuum) உருவாக்க வேண்டும்,” என்கிறார் ஷூபின்.

சோவியத் ஒன்றியம் என்ன செய்துகொண்டிருந்தது?

அமெரிக்கா நிலவில் தரையிறங்கிய 1969-ம் ஆண்டு அமெரிக்க-சோவியத் பனிப்போர் உச்சத்திலிருந்த காலகட்டம்.

அக்கால கட்டத்திலேயே சோவியத் யூனியனிடம் மேம்பட்ட கண்காணிப்புத் தொழில்நுட்பம் இருந்தது என்கிறார் லண்டன் பல்கலைகழகத்தில், சர்வதேச ராஜீய உறவுகள் துறையின் மூத்த பேராசிரியர் அந்த்வான் பூஸ்கே.

“அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சோவியத் யூனியனால் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும், செயற்கைக் கோள்களையும் கண்காணித்திருக்க முடியும். எனவே, அமெரிக்கா நிலவில் தரையிறங்கியது போலியானதாக இருந்தால், சோவியத் யூனியனால் அதனை கண்டறிந்திருக்க முடியும். மேலும், அவர்கள் அப்படியொரு விஷயத்தைக் கண்டறிந்தால், அதனை வெளிப்படுத்தி அமெரிக்காவுக்கு எதிரான ஒரு பிரசாரத்தைச் செய்திருப்பார்கள்,” என்கிறார் பூஸ்கே.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்கிறார் பூஸ்கே.

நிலவிலிருந்து என்ன கொண்டு வரப்பட்டது?

நிலா, அமெரிக்கா, சந்திரயான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நிலவில் இருந்து கற்கள் கொண்டுவரப்பட்டன. இவை முக்கியமான சான்றுகள் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இந்தக் கற்கள் இன்றளவும் ஆராய்ச்சி செய்யப்படுகின்றன என்கிறார், இங்கிலாந்து விண்வெளி அமைப்பின் இயற்பியலாளரான லிப்பி ஜாக்சன்.

“அவற்றில் சில கற்கள் இன்றளவும் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. யாரும் அவற்றைத் தொட்டதுகூட இல்லை,” என்கிறார்.

1960கள், 1970களிலேயே எதிர்காலத்தில் தொழில்நுட்பம் மேம்படும் என்றும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழும் என்றும் விஞ்ஞானிகள் அறிந்திருந்தனர், என்கிறார் ஜாக்சன்.

நிலவில் மனிதர்கள் விட்டு வந்த அடையாளம்

நிலவில் தரையிறங்கிய விண்வெளி வீரர்கள் அங்கு சில ரிஃப்ளெக்டர்களைப் பொருத்தியிருக்கின்றனர்.

பூமியில் இருந்து லேசர் ஒளிக்கற்றைகளை நிலவின்மீது பாய்ச்சினால், அந்த ரிஃப்ளெக்டரிகளில் பட்டுப் பிரதிபலிக்கும், என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இதன் மூலம்தான் நிலவின் சுழற்சியில் நிகழும் மாற்றங்கள் ஆராயப்படுவதாகச் சொல்கிறார்.

கொடி எப்படி அசைந்தது? கால் தடம் எப்படிப் பதிந்தது?

நிலா, அமெரிக்கா, சந்திரயான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இவற்றுக்குமேல், காற்றில்லாத நிலவில், கொடி எப்படி அசைந்தது, நீரில்லாத போது கால்தடம் எப்படிப் பதிந்தது போன்ற கேள்விகளும் அடிக்கடி எழுப்பப்படுகின்றன.

இவற்றுக்கான விடையை அறிந்துகொள்ள பிபிசி தமிழ் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரனுடன் பேசியது.

அதற்கு அவர், இவற்றுக்கு எளிய அறிவியல் விளக்கங்கள் உள்ளன என்று கூறினார்.

கொடி அசைந்ததை, inertia எனும் விளைவின் மூலம் விளக்கலாம் என்றார்.

“அதாவது, ஓடும் பேருந்தில் திடீரென ப்ரேக் செலுத்தப்பட்டால், நின்றுகொண்டிருப்பவரகள் முன்னால் தள்ளப்படுவார்கள் அல்லவா, அதேபோல்தான் உராய்வு இல்லாத இடத்தில் சுருட்டிவைத்திருந்த கொடியைப் பிரித்த போது அந்த உந்துவிசையால் கொடி படபடத்தது,” என்றார்.

அதேபோல் நிலவில் பதிந்த கால்தடம் பற்றிச் சொல்லும்போது, பூமிக்கு இருப்பதுபோல் வளிமண்டலம் இல்லாததால், நிலவில் விண்கற்கள் மோதியவண்ணம் இருக்கும் என்றார்.

“இப்படி மோதிக்கொண்டே இருப்பதால், அவை பொடியாகி, நிலவின் பரப்பு முழுவதும் ஒரு அடிக்கு குவிந்திருக்கிறது. இது regolith எனப்படுகிறது. இதில் கால் வைத்ததால்தான் கால்தடம் பதிந்தது,” என்றார்.

மேலும், 1969-ம் ஆண்டு அமெரிக்கா முதன்முதலில் நிலவில் மனிதர்களை தரையிறக்கியபோது குறிப்பிட்ட ஒரு சிறிய குழு மட்டுமே அதனைச் சந்தேகித்தது, அதனால் அமெரிக்கா அதைப்பற்றிப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை என்றார். “மேலும் இதுபோன்ற எளிய அறிவியல் விளக்கங்களின் மூலம் அவற்றை எதிர்கொண்டனர்,” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/cv21xrje091o

  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்கேற்ற இணைப்பிற்கு நன்றி. இதைப் பற்றி சில மேலதிகத் தகவல்கள்.

அமெரிக்கா நிலவில் மனிதர்களை இறக்கவில்லை என்ற சதிக்கதையை முதலில் ஆரம்பித்தவர் "நான் நாசாவில் வேலை செய்தேன்" என்ற முகவரியோடு அறிமுகமான பில் கேசிங் (Bill Kaysing) என்ற நபர்.

யார் பில் கேசிங்?

இவர் ஒரு முன்னாள் அமெரிக்க கடற்படை வீரர். இவர் ஒரு விஞ்ஞானத் துறை சார் நிபுணர் அல்ல. ஆங்கில மொழியில் பட்டம் பெற்ற பில் கேசிங்கை, தொழில் நுட்ப தொடர்பாளராக, எழுத்தாளராக நாசாவின் ஒரு பிரிவு பணியில் வைத்திருந்தது உண்மை. ஆனால், நிலவிற்கு நீல் ஆம்ஸ்ட்ரோங்க் உட்பட்ட அமெரிக்கர்களை அனுப்பிய திட்டத்திற்கும் இவருக்கும் தொழில் நுட்ப ரீதியாக தொடர்புகள் இல்லை. பில் கேசிங் அபொலோ திட்டத்தின் கட்டுப் பாட்டு (control room) அறைக்குக் கூட சென்றிருப்பாரா என்பதே சந்தேகம், அந்தளவுக்கு நிலவுப் பயணத் திட்டத்தில்  அவருக்கு ஒரு பெரிய பங்கும் இருக்கவில்லை.

ஏன் சதிக்கதை கிளப்பினார்?

இதற்கு பிரபலம், பணம் உழைக்கும் நோக்கம் தவிர வேறு காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. 1976 இல் தனது புத்தகம் மூலம் தான் தனது சதிக்கதையை முதலில் வெளியிட்டார். இணைய வெளி இல்லாத அந்தக் காலத்தில், இதனால் வருமானம் பெற்றிருப்பார்.

தற்போது, இது இணைய வெளி மூலம், பல மடங்கு வேகத்தில் சதிக்கதைகளை நம்பும் மக்களிடையே பரவுகிறது. இதை நம்புவோரின் வீதம் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது:

ஒரு  கணக்கெடுப்பின் படி: அமெரிக்கர்கள் நிலவில் இறங்கவில்லை என நம்பும் வீதத்தினர்: அமெரிக்காவில் 5 - 10%, பிரிட்டனில் 12%, இத்தாலியில் 20%. ரஷ்யாவில் 57%.

தற்போது, ரஷ்ய ஆதரவு மன நிலை கொண்ட சமூகங்களிடையே, ஏன் இந்தச் சதிக்கதை மீள வலம் வருகிறது என்பது  புரிகிறது! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Neil Armstrong நிலவில் கால்பதித்தது Shooting-ஆ? உண்மை என்ன? அறிவியல் பூர்வ விளக்கம் இது தான்

அமெரிக்கா 1969-ம் ஆண்டு முதன்முதலில் அப்போலோ 11 எனும் விண்வெளி விமானத்தின் மூலம் நிலவில் மனிதர்களை தரையிறங்கியது. அப்போதிருந்தே இது நிகழவே இல்லையென்றும், நிலவில் தரையிறங்குவது போன்ற காட்சிகள் போலியாகச் சித்தரிக்கப்பட்டவை என்றும் பலரும் சொல்லி வந்தனர். ஆனால் அது உண்மையா இல்லையா என்று எவ்வாறு அறிந்துகொள்வது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.