Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யோசிமசா அயாஸி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2019 ம் ஆண்டுக்கு பின்னர் ஜப்பான் நாட்டு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதற் தடவையாகும். தற்போது இடம்பெற்று வரும் கடன்மறுசீரமைப்பு திட்டம் தொடர்பில் இதன்போது ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கவனம் செலுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜப்பான் மற்றும் இலங்கை இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 28 மற்றும் 29 ம் திகதிகளில் 24 பேர் அடங்கிய தூதுக்குழுவினருடன் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இலங்கையில் தங்கியிருப்பார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமர் தினேஸ் குணவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/264742

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வரும் ஜப்பான் உயர் மட்ட குழு

Published By: VISHNU

25 JUL, 2023 | 08:24 PM
image
 

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொஷிமசா ஹயாஷி தலைமையிலான உயர் மட்ட பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 29 ஆம் திகதி சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்கிறது. 

இரு நாடுகளுக்கு இடையில் தற்போது ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த விஜயம் இடம்பெறுவதாக அரச தரப்பு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜப்பான் உயர் மட்ட குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரை சந்தித்து கலந்துரையாட உள்ளது. 

இதன் போது கொழும்பில் இலகு ரயில் சேவை திட்டத்தை ஆரம்பித்தல் உட்பட  பல புதிய முதலீட்டு திட்டங்கள் குறித்து இறுதி தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளன.  

இலங்கையின் நீண்ட கால நட்பு நாடான ஜப்பான்  முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட சில தீர்மானங்களினால் அதிருப்திக்கு உள்ளானது

குறிப்பாக கொழும்பு துறைமுகத்தின்  கிழக்கு முனைய அபிவிருத்தி திட்டத்தை தன்னிச்சையாக இரத்து செய்தமையானது ஜப்பான் - இலங்கை உறவில் கடுமையாக தாக்கல்  ஏற்படுத்தியது.

எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்  அண்மைய ஜப்பான் விஜயத்தின் போது, அங்கு முன்னெடுக்கப்பட்ட உயர்மட்ட  கலந்துரையாடல்களின் பின்னர் இருதரப்பு உறவுகளில் மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 

ஜப்பான் உட்பட எந்தவொரு நட்பு நாடுகளுடனான ஒப்பந்தங்களையும்  அமைச்சரவை  அனுமதியின்றி நிறுத்துவதற்கு இனிவரும் காலங்களில் இடமளிக்காது இருக்கும் வகையில் சட்டங்கள்  உருவாக்குவதாக இதன் போது ஜனாதிபதி ரணில் அறிவித்திருந்தார்.  

தற்போது ஏற்பட்டுள்ள பரஸ்பர நம்பிக்கைகளின் அப்படையில் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைவாகவே ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொஷிமசா ஹயாஷி தலைமையிலான உயர் மட்ட பிரதிநிதிகள் குழு இலங்கை வருகிறது. இவர்களின் இந்த விஜயமானது இலங்கைக்கு பல வழிகளில் நன்மை பயக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/160914

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று இலங்கை வருகிறார் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்

Published By: NANTHINI

28 JUL, 2023 | 10:55 AM
image
 

ப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா இரு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று வெள்ளிக்கிழமை (28) இரவு இலங்கை வருகிறார்.

இலங்கையுடன் தற்போதுள்ள இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசாவின் விஜயம் அமையவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/161098

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை வந்தடைந்தார் ஜப்பான் வெளியுறவு அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா

29 JUL, 2023 | 06:38 AM
image
 

ஜப்பான் வெளியுறவு அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டை வந்தடைந்தார் .

வெள்ளிக்கிழமை (28) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை ஜப்பான் வெளியுறவு அமைச்சர் ஹயாஷி யோஷிமாசாவுடன் 20 பேர் கொண்ட தூதுக்குழுவினர் வந்தடைந்தனர்.

வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட விருந்தினர் அறைக்கு வருகை தந்த ஜப்பான் வெளியுறவு அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா உள்ளிட்ட குழுவினரை வரவேற்றனர்.

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் 06 நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருந்ததுடன், இந்த குழுவினர் இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு சனிக்கிழமை ( 07/29 இரவு) திரும்பவுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பான் உயர் மட்ட குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரை சந்தித்து கலந்துரையாட உள்ளது. 

இதன் போது கொழும்பில் இலகு ரயில் சேவை திட்டத்தை ஆரம்பித்தல் உட்பட  பல புதிய முதலீட்டு திட்டங்கள் குறித்து இறுதி தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளன.  

இலங்கையின் நீண்ட கால நட்பு நாடான ஜப்பான்  முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட சில தீர்மானங்களினால் அதிருப்திக்கு உள்ளானது. 

குறிப்பாக கொழும்பு துறைமுகத்தின்  கிழக்கு முனைய அபிவிருத்தி திட்டத்தை தன்னிச்சையாக இரத்து செய்தமையானது ஜப்பான் - இலங்கை உறவில் கடுமையாக தாக்கத்தை ஏற்படுத்தியது.

எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்  அண்மைய ஜப்பான் விஜயத்தின் போது, அங்கு முன்னெடுக்கப்பட்ட உயர்மட்ட  கலந்துரையாடல்களின் பின்னர் இருதரப்பு உறவுகளில் மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 

ஜப்பான் உட்பட எந்தவொரு நட்பு நாடுகளுடனான ஒப்பந்தங்களையும்  அமைச்சரவை  அனுமதியின்றி நிறுத்துவதற்கு இனிவரும் காலங்களில் இடமளிக்காது இருக்கும் வகையில் சட்டங்கள்  உருவாக்குவதாக இதன் போது ஜனாதிபதி ரணில் அறிவித்திருந்தார்.  

தற்போது ஏற்பட்டுள்ள பரஸ்பர நம்பிக்கைகளின் அப்படையில் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைவாகவே ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொஷிமசா ஹயாஷி தலைமையிலான உயர் மட்ட பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இவர்களின் இந்த விஜயமானது இலங்கைக்கு பல வழிகளில் நன்மை பயக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

WhatsApp_Image_2023-07-29_at_04.36.01.jp

WhatsApp_Image_2023-07-29_at_04.36.04.jp

WhatsApp_Image_2023-07-29_at_04.36.07__1

WhatsApp_Image_2023-07-29_at_04.36.06__1

WhatsApp_Image_2023-07-29_at_04.36.06.jp

https://www.virakesari.lk/article/161175

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா ஜனாதிபதி ரணிலை சந்தித்தார்

29 JUL, 2023 | 10:38 AM
image
 

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று சனிக்கிழமை (29) காலை கொழும்பில் சந்தித்தார்.

364433396_1022124268942642_2767606294278

ஜப்பானின் வெளியுறவு அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை (28) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

ஜப்பான் வெளியுறவு அமைச்சர் ஹயாஷி யோஷிமாசாவுடன் 20 பேர் கொண்ட தூதுக்குழுவினரும் இலங்கை வந்துள்ளனர்.

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று சனிக்கிழமை (29) காலை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட விருந்தினர் அறைக்கு வருகை தந்த ஜப்பான் வெளியுறவு அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா உள்ளிட்ட குழுவினரை வரவேற்றனர்.

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் 06 நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருந்ததுடன், இந்த குழுவினர் இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு சனிக்கிழமை ( 07/29 )இரவு திரும்பவுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/161186

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலகு ரயில் திட்டம் விரைவில் !

Japanese-Forine-Minister-05.jpg

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா இன்று (29) கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார்.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை நினைவு கூர்ந்து இந்தக் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டதுடன், பல்வேறு துறைகளில் அந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இரு தரப்பும் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்படுவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

இலங்கையில் கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டிற்கு ஜப்பான் அரசாங்கம் வழங்கும் ஆதரவிற்கு இதன்போது நன்றி தெரிவித்த ஜனாதிபதி, கடன் மறுசீரமைப்பு தொடர்பான பொதுவான தளத்தை மேம்படுத்தும் மற்றும் செயல்முறையை விரைவுபடுத்தும் நோக்கில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனுடன் நடைபெற்ற கலந்துரையாடல் குறித்தும் விளக்கினார்.

மேலும், ஜப்பான்-இலங்கை ஒத்துழைப்பின் முக்கிய விடயமான இலகு ரயில் திட்டம் (LRT), துறைமுக கிழக்கு முனையம், கண்டி அபிவிருத்தித் திட்டம், மத்திய அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டங்களை துரிதப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்து சமுத்திர பிராந்தியத்தை அமைதியான மற்றும் நிலையான பிராந்தியமாக பேணுவதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதுடன், பிராந்திய மற்றும் பல்வேறு உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதியும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரும் கலந்துரையாடினர்.

தொழில் சந்தை சார்ந்த பொருளாதாரத்தில் இருந்து உயர் தொழில்நுட்ப பொருளாதார மாற்றத்தை எதிர்பார்த்துள்ள இலங்கையின், உயர் தொழில்நுட்ப கைத்தொழில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருக்கு தெளிவூட்டியதோடு அதற்காக ஜப்பானிய முதலீட்டாளர்களை ஊக்குவிக்க அவசியமான பணிகளை மேற்கொள்வதாக ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/265927

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளிப்படைத்தன்மை வாய்ந்த கடன்மறுசீரமைப்பின் அவசியத்தை அரசாங்கத்திடம் வலியுறுத்தினார் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்

29 JUL, 2023 | 06:14 PM
image
 

(நா.தனுஜா)

அனைத்துக் கடன் வழங்குனர் நாடுகளையும் உள்ளடக்கிய வெளிப்படைத்தன்மை வாய்ந்த செயன்முறையின் அவசியம் குறித்து இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யொஷிமஸா, கடன்மறுசீரமைப்பு செயன்முறையில் மேலும் முன்னேற்றத்தை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யொஷிமஸா மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரின் கூட்டு ஊடக சந்திப்பு  சனிக்கிழமை (29) கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் ஹயாஷி யொஷிமஸா மேலும் கூறியதாவது:

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் கடந்த 4 வருடங்களில் முதற்தடவையாகவும், எனது வாழ்வில் முதன்முறையாகவும் இலங்கைக்கு விஜயம் செய்வதையிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். எமது இருநாடுகளுக்கும் இடையிலான உறவு 19 ஆம் நூற்றாண்டிலேயே ஆரம்பமாகிவிட்டது. 

அக்காலப்பகுதியில் நவீன ஜப்பானைக் கட்டியெழுப்பிய பல முக்கிய நபர்கள் ஐரோப்பாவுக்கான தமது விஜயத்தின்போது கொழும்பிலேயே தங்கிச்சென்றனர். இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னர் 1951 ஆம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோ நகரில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன ஆற்றிய உணர்வுபூர்வமான உரையை ஜப்பானியர்களால் மறக்கமுடியாது. அது சர்வதேச அரங்கினுள் ஜப்பான் மீண்டும் பிரவேசிப்பதற்கான அடித்தளமாக அமைந்தது. அப்போதிருந்து ஜப்பான் இலங்கையுடன் மிகநெருக்கமாகப் பணியாற்றிவருகின்றது. எதிர்வருங்காலங்களிலும் இலங்கைக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஜப்பான் விரும்புகின்றது.

அதன்படி சனிக்கிழமை (29)  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தேன். ஓராண்டுக்குள் அவர் ஜப்பானுக்கு இருமுறை விஜயம் மேற்கொண்டமையானது இருநாடுகளுக்கும் இடையில் ஆழமடைந்துவரும் நல்லுறவுக்கான அடையாளமாகக் காணப்படுவதாக நான் அவரிடம் கூறினேன். மேலும் ஜப்பான் - இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து அமைச்சர் அலி சப்ரியுடன் விரிவாகக் கலந்துரையாடினேன்.

இலங்கை இந்து சமுத்திரப்பிராந்திரத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்திருக்கின்றது. அதுமாத்திரமன்றி 'சுதந்திரமான மற்றும் திறந்த இந்திய - பசுபிக் பிராந்தியத்தை' உறுதிப்படுத்துவதில் இலங்கை முக்கிய பங்காளியாகத் திகழ்கின்றது. அதன்படி ஜப்பான் பிரதமரால் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட சுதந்திரமான மற்றும் திறந்த இந்திய - பசுபிக் பிராந்தியம்' குறித்த புதிய திட்டம் பற்றி அமைச்சர் அலி சப்ரியிடம் விளக்கமளித்தேன். அதேபோன்று எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கை தலைமைதாங்கவுள்ள இந்து சமுத்திரப் பிராந்திய ரிம் அமைப்புடனான ஜப்பானின் ஒத்துழைப்பு தொடர்பிலும் எடுத்துரைத்தேன்.

மேலும் கடன்மறுசீரமைப்புச் செயன்முறையில் அடுத்தகட்ட முன்னேற்றத்தை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்ததுடன், அனைத்துக் கடன்வழங்குனர் நாடுகளையும் உள்ளடக்கிய வெளிப்படைத்தன்மை வாய்ந்த கடன்மறுசீரமைப்புச் செயன்முறையின் அவசியத்தை வலியுறுத்தினேன்.

ஊழல் ஒழிப்புக்கான முயற்சிகள் மற்றும் கொள்கை வகுப்புச் செயன்முறையில் வெளிப்படைத்தன்மை என்பன உள்ளடங்கலாக சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் கீழ் இலங்கையால் முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் வரவேற்கத்தக்கவையாகும். அதே போன்று தேசிய நல்லிணக்கம் தொடர்பான இலங்கையின் முயற்சிகள் பாராட்டத்தக்கவை என்பதுடன், அம்முயற்சிகளுக்கு ஜப்பான் ஒத்துழைப்பு வழங்கத்தயாராக உள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போதைய நெருக்கடிகளிலிருந்து இலங்கை வெகுவிரைவில் மீட்சியடையும் என்றும், பொருளாதார அபிவிருத்தி மற்றும் இந்து சமுத்திரப்பிராந்தியத்தின் மத்திய நிலையம் ஆகியவற்றை நோக்கிய பாதையில் மீண்டும் பயணிக்கும் என்று நம்புகின்றோம் என்று தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/161221

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரப்பகிர்வு மற்றும் உண்மை, நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் ஜப்பான் வெளிவிவகார அமைச்சருக்கு அரசாங்கம் எடுத்துரைப்பு

29 JUL, 2023 | 06:00 PM
image
 

(நா.தனுஜா)

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின்கீழ் அதிகாரப்பகிர்வு என்ற ஜனாதிபதியின் முன்மொழிவு மற்றும் உண்மை, நல்லிணக்க ஆணைக்குழு என்பன உள்ளடங்கலாக தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யொஷிமஸாவுக்கு இலங்கை அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யொஷிமஸா மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரின் கூட்டு ஊடக சந்திப்பு  சனிக்கிழமை (29) கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் அலி சப்ரி கூறியதாவது:

இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஆழமான பிணைப்பு அண்மையகாலத்தில் பரஸ்பரம் நிகழ்ந்த உயர்மட்ட விஜயங்களின் மூலம் மேலும் வலுவடைந்துள்ளது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் இருமுறை ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டதுடன் அந்நாட்டுப் பிரதமர் ஃபியூமியோ கிஷிடாவுடன் விரிவான கலந்துரையாடல்களையும் முன்னெடுத்திருந்தார். 

கடந்த பெப்ரவரி மாதம் கொண்டாடப்பட்ட இலங்கையின் 75 ஆவது சுதந்திரதின நிகழ்வுக்கு ஜப்பான் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வருகைதந்திருந்தார்.

இலங்கை கடந்த ஆண்டு மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில் ஜப்பான் வழங்கிய உதவிகள் மற்றும் வெளிப்படுத்திய ஒருமைப்பாடு என்பவற்றை நாம் பெரிதும் வரவேற்கின்றோம்.

 அதேவேளை இலங்கை - ஜப்பானுக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை தொடர்ந்து முன்கொண்டு செல்வதற்கு அவசியமான சில முக்கிய செயற்திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடியுள்ளோம். 

அதன்படி ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஜப்பானிய முதலீட்டு செயற்திட்டங்களை ஆரம்பிக்குமாறும், மின்சாரம், துறைமுகம் மற்றும் நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள், டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய துறைகளில் புதிய முதலீடுகளை மேற்கொள்ளுமாறும் ஜப்பானுக்கு அழைப்புவிடுத்துள்ளோம்.

அதேபோன்று பொருளாதார மீட்சி மற்றும் நிலைபேறான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை அடைந்துகொள்வதற்கு தற்போது முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளமை குறித்தும், நாட்டிலுள்ள பின்தங்கிய சமூகப்பிரிவினருக்கு அவசியமான உதவித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருவது குறித்தும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சருக்கு விளக்கமளித்துள்ளோம். 

அதுமாத்திரமன்றி அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின்கீழ் அதிகாரப்பகிர்வு என்ற ஜனாதிபதியின் முன்மொழிவு மற்றும் உண்மை, நல்லிணக்க ஆணைக்குழு என்பன உள்ளடங்கலாக தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் எடுத்துரைத்தோம்.

தற்போது நாட்டின் பொருளாதாரம் மீட்சியை நோக்கிய பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது. அதன் நீட்சியாக எதிர்காலத்தில் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நல்லுறவு மேலும் வலுவடைவதற்கு ஏதுவான சிறந்த வாய்ப்புக்கள் உருவாகும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/161220

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.