Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

7ஆவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா vs பாகிஸ்தான்: சென்னையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மோதுவதால் ரசிகர்கள் உற்சாகம்

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி

பட மூலாதாரம்,HOCKEY INDIA

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 30 ஜூலை 2023

7ஆவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளன.

சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச ஹாக்கி விளையாட்டு போட்டி நடைபெறவுள்ளது ஹாக்கி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 25 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் இந்திய அணியும்- பாகிஸ்தான் அணியும் மோதவுள்ளதால் இந்த ஆட்டத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளதாக ஹாக்கி ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

சென்னையில் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன. தமிழ்நாடு ஹாக்கி பிரிவு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு அமைச்சகம் இணைந்து இத்தொடரை நடத்துகிறது.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி

பட மூலாதாரம்,SPORTS TAMIL NADU

ரசிகர்கள் அதிகம் வரவேண்டும் என்பதற்காக இந்திய அணி விளையாடும் ஆட்டங்கள் அனைத்தும் இரவு 8.30 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளன.

நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் நடைபெறும் சர்வதேச ஹாக்கி போட்டி என்பதால் தமிழ்நாடு அரசு போட்டியை பிரபலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. போட்டியின் இலச்சினையாக பொம்மன் என்ற யானை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஆசிய சாம்பியன்ஸ் போட்டிக்கான கோப்பை தமிழ்நாடு முழுவதும் எடுத்து செல்லப்பட்டு வருகிறது.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி

பட மூலாதாரம்,HOCKEY INDIA

படக்குறிப்பு,

ஆஸ்கர் விருது பெற்ற எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் இடம்பெற்றிருந்த பொம்மன் - பெள்ளி தம்பதியினர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையுடன்

தமிழ்நாடுக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி?

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரை நடத்த பலத்த போட்டி இருந்ததாகவும் தமிழ்நாடு அரசின் தொடர் நடவடிக்கையில் சென்னையில் போட்டி நடத்த வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறுகிறார் தமிழ்நாடு ஹாக்கி பிரிவின் தலைவரான சேகர் மனோகர்.

இந்தியாவைப் பொறுத்தவரை ஒடிசா மாநிலம் ஹாக்கிக்கு புகழ்பெற்றது. பல்வேறு ஹாக்கி போட்டிகள் அங்கு நடைபெற்றுள்ளன. ஹாக்கி உலகக் கோப்பை 2023ம் ஒடிசாவில்தான் நடைபெறவுள்ளது. அப்படியிருக்கையில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் நேரடியாக மோதக்கூடிய இந்த தொடரையும் தங்கள் மாநிலத்தில் நடத்தவே ஒடிசா விரும்பியது.

இந்நிலையில், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒடிசா முதலமைச்சர் நவின் பட்நாயக்கை நேரடியாக சந்தித்து பேசினார். அப்போது அங்கிருந்த உலக ஹாக்கி கூட்டமைப்பு, ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைவர்களிடன் கலந்துரையாடி இந்த தொடரை சென்னையில் நடத்தும் வாய்ப்பை பெற்றார்” என்றார்.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி

பட மூலாதாரம்,HOCKEY UNIT OF TAMILNADU

படக்குறிப்பு,

சேகர் ஜே. மனோகரன்- தமிழ்நாடு ஹாக்கிப் பிரிவின் தலைவர்

மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் புனரமைப்பு

இந்த ஹாக்கி தொடருக்காக மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் ரூ.16 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஒடிசாவின் ரூர்கி மற்றும் கலிங்கா மைதானங்களுக்கு தமிழக அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டிருக்கிறார்.

"பாரிஸில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் மைதானத்தில் பயன்படுத்தப்படவுள்ள டர்ஃப் போன்றே ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டர்ஃப் 80 சதவீதம் கரும்பில் இருந்து பெறப்படும் பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பராமரிக்க குறைந்த அளவு தண்ணீரே போதும்" என்று கூறுகிறார் சேகர் மனோகரன்

கிட்டத்தட்ட 90 நாட்களில் மொத்த ஸ்டேடியமும் புனரமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் தான் காரணம் என்று கூறுகிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் ஹாக்கி வீரரான பாஸ்கரன். 1980ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியை பாஸ்கரன் வழிநடத்தியுள்ளார்.

மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் குறித்த நினைவலைகள் நம்மிடம் பகிர்ந்துகொண்ட அவர், "கடைசியாக 2007ஆம் ஆண்டு சென்னையில் ஆசிய ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதே மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 7-2 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது" என்றார்.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி

பட மூலாதாரம்,HOCKEY INDIA

படக்குறிப்பு,

வி.பாஸ்கரன் - முன்னாள் ஹாக்கி வீர

தொடர்ந்து பேசிய அவர், " மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த மைதானம். 11 வயதில் இருந்தே அங்கு விளையாடியுள்ளேன். பள்ளி, கல்லூரி, மாநில அளவிலான போட்டிகள் என 5000 போட்டிகள் வரை நான் இந்த மைதானத்தில் விளையாடியுள்ளேன்.

ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் உள்ள எழும்பூரை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான ஹாக்கி அணிகள் இருந்தன. தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு வரும் ரசிகர்கள் கூட்டத்தை நாங்கள் அந்த காலத்திலேயே ஹாக்கி போட்டியில் பார்த்திருக்கிறோம். தற்போது மீண்டும் சென்னையில் சர்வதேச ஹாக்கி போட்டி நடைபெறுவது ஒரு உத்வேகத்தை அளிக்கும் " என்றார்.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி

பட மூலாதாரம்,HOCKEY UNIT OF TAMILNADU

படக்குறிப்பு,

புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம்

இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கு எகிரும் எதிர்பார்ப்பு

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரைப் பொறுத்தவரை இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் பலம் வாய்ந்த அணிகளாக திகழ்கின்றன. இதுவரை நடைபெற்ற 6 தொடர்களில் 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணியும் 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் பாகிஸ்தான் அணியும் வென்றுள்ளன.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டி மழையால் தடைபட்டதால் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்ற இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இரு அணிகளுமே தலா 3 முறை கோப்பையை வென்றுள்ளன. கடந்த ஆண்டு பங்களாதேஷ் தலைநகர் தாக்காவில் நடைபெற்ற தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்பானை வீழ்த்தி தென்கொரியா கோப்பையை வென்றது.

ஆசிய கோப்பையில் வெற்றிகரமாக அணிகளாக வலம்வரும் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் விளையாடும் ஆட்டம் ஆகஸ்ட் 9ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. கடைசியாக 1998ல் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இந்த மைதானத்தில் நேருக்கு நேர் எதிர்கொண்டு விளையாடின. 25 ஆண்டுகளுக்கு பின் இரு அணிகளும் சென்னையில் நேருக்கு நேர் சந்திக்கவுள்ள இந்த ஆட்டத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருப்பதாக பாஸ்கரன் கூறுகிறார்.

“1998ல் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதியபோது நான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தேன். இந்த போட்டியைப் பார்க்க 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டனர். கூடுதலாக இரண்டு கேலரிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அந்தளவு ரசிகர்கள் திரண்டு வந்து ஆட்டத்தை ரசித்தனர். எனவே தற்போது நடைபெறும் போட்டியிலும் ரசிகர்களின் ஆதரவை நாம் பார்க்க முடியும்” என்று அவர் தெரிவித்தார்.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி

பட மூலாதாரம்,SPORTS TAMILNADU

இந்திய அணியில் தமிழக வீரர்

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

கோல்கீப்பர்கள்: பி.ஆர்.ஸ்ரீஜேஷ், கிரிஷன் பஹதுர் பதக்

தடுப்பு ஆட்டக்காரர்கள்: ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), அமித் ரோஹிதாஸ், வருண் குமார், ஜர்மன்பிரீத் சிங், சுமித், ஜுக்ராஜ் சிங்,

நடுகளம்: ஹர்திக் சிங், விவேக் சாகர் பிரசாத், மன்பிரீத் சிங், நீலகண்ட சர்மா, ஷம்ஷேர் சிங்.

முன்களம்: கார்த்தி செல்வம், ஆகாஷ்தீப் சிங், மன்தீப் சிங், குர்ஜந்த் சிங், சுக்ஜீத் சிங்,

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹாக்கி பிளேயர் கார்த்தி செல்வம் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இது மிகவும் பெருமைமிக்கத் தருணம் அவரது ஆட்டத்தை பார்க்க ஆவலாக உள்ளேன் என்று கூறிய பாஸ்கரன்,

இந்த தொடரில் வெற்றி பெறுபவர்கள் அடுத்து நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற முடியும். அதேபோல், செப்டம்பர் மாதம் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள ஹாக்கி அணிகளுக்கு இந்த தொடர் உதவும். ஆசிய போட்டியில் வெல்லும் அணி ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல முடியும். எனவே, இந்த ஹாக்கி தொடர் மிகவும் முக்கியமான ஆட்டமாக பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c5149jrre8zo

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச அளவில் பாகிஸ்தான் வீரர்களை தயார் செய்யும் தமிழர் - யார் இவர்?

பாகிஸ்தான் அணியை தயார் செய்யும் தமிழர்
 
படக்குறிப்பு,

பாகிஸ்தான் ஹாக்கி அணி கேப்டனுடன் ராஜகமல் (இடது)

கட்டுரை தகவல்
  • எழுதியவர், அஷ்ஃபாக்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 8 ஆகஸ்ட் 2023, 12:12 GMT
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

கோப்பை வெல்லும் கனவோடு சென்னை வந்திறங்கிய, பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டியிருகிறார் தமிழர் ஒருவர். விசா பிரச்னை காரணமாக பிசியோதெராபிஸ்ட் (Physiotherapist) இல்லாமல் வந்திருக்கிறது பாகிஸ்தான் அணி. ஃபிசியோ இல்லாமல், போட்டியிலேயே பங்கேற்க முடியாத சூழல் . பல மாத கால வீரர்களின் உழைப்பு கேள்விக்குறியான போது, அவர்களின் கவலைகளுக்கு மருந்தளித்திருக்கிறார் இந்த தமிழர். யார் அவர்?

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர்

சென்னையில் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, கொரியா, மலேசியா, ஜப்பான் ஆகிய ஆறு நாடுகள் பங்கேற்றுள்ளன. ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்கிய இந்த தொடர், ஆகஸ்ட் 12ம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.

இந்த போட்டியில் பங்கேற்பதற்காக அடாரி வாகா எல்லை வழியாக ஜூலை 31ம் தேதி இந்தியாவுக்குள் வந்த பாகிஸ்தான் ஹாக்கி அணி, பிறகு அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது. கடைசி நேரத்தில் ஏற்பட்ட விசா பிரச்னையால் பாகிஸ்தான் ஹாக்கி அணியின் பிசியோதெராபிஸ்ட்டால் இந்தியாவுக்குள் நுழைய முடியவில்லை.

பாகிஸ்தான் அணியை தயார் செய்யும் தமிழர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

வாகா எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள்

ஃபிசியோதெராபிஸ்ட் ஏன் அவசியம்?

எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் ஒவ்வொரு அணியும் தங்களுக்கென ஃபிசியோதெரபிஸ்டை வைத்துக்கொள்வர். ஒவ்வொரு போட்டியும் எந்தளவுக்கு முக்கியமோ, அதேபோல் அதில் பங்கேற்கும் வீரர்களின் உடற்தகுதியும் முக்கியமான விஷயம். வீரர்களின் உடல்நிலை, அவர்களுக்கு காயம் ஏற்படும்போது தகுந்த சிகிச்சையளிப்பது, உடல் தகுதியை மேம்படுத்துவது உள்ளிட்டவை ஃபிசியோதெராபிஸ்ட்களின் முக்கிய பணியாகும். சர்வதேச தொடர்களில் ஃபிசியோதெராபிஸ்ட் இருந்தால் மட்டுமே ஒரு அணியால் போட்டிகளில் பங்கேற்க முடியும்.

தவித்த பாகிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்டிய தமிழர்

கடைசி நேரத்தில் தங்களின் ஃபிசியோதரபிஸ்டை பாகிஸ்தான் அழைத்து வர முடியாமல் போனது அந்த அணிக்கு நெருக்கடியாக மாறியது. இது தமிழ்நாடு ஹாக்கி கூட்டமைப்பின் கவனத்திற்கு வரவே, தமிழ்நாடு ஹாக்கி அணிக்கு பரிட்சயமான ராஜகமலை பாகிஸ்தான் அணிக்கு அறிமுகம் செய்து வைத்தது. உடனடியாக பாகிஸ்தான் அணியின் மேலாளர், பயிற்சியாளர் உள்ளிட்டோர் ராஜகமலை சென்னையிலேயே நேர்காணல் செய்தனர். தனது வேலைகளை குறித்து எடுத்துரைத்த ராஜகமலை தங்கள் அணியின் ஃபிசியோவாக இறுதி செய்தது பாகிஸ்தான் அணி.

பாகிஸ்தான் அணியை தயார் செய்யும் தமிழர்

யார் இந்த ராஜகமல்?

தமிழ்நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ள திருச்செந்தூரில், பால்குளம் எனும் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ராஜகமல். சொந்த ஊரிலும், சென்னையிலும் படிப்பை முடித்த ராஜகமல், 2016 முதல் ஃபிசியோதெரபிஸ்டாக பணி செய்து வருகிறார்.

தொடக்கத்தில் சிறியளவிலான விளையாட்டுத் தொடர்களில் ஃபிசியோவாக பணியாற்றிய அவர், 2018-ல் முதல் தர கிரிக்கெட் போட்டிகளுக்காகவும் வேலை செய்தார். 2019-ல் தமிழ்நாடு ஹாக்கி அணியின் ஃபிசியோவாக ஒப்பந்தமானார். இதுதவிர, 2019 முதல் தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் ஃபிசியோவாக வேலை செய்து வருகிறார்.

‘பாகிஸ்தான் வீரர்கள் நன்கு பழகக் கூடியவர்கள்’

பாகிஸ்தான் அணியுடன் பணியாற்றி வரும் ராஜகமலிடம் பேசினோம். விளையாட்டு வீரரைப் போலவே அவரது வார்த்தைகளிலும் உற்சாகத்தை பார்க்க முடிந்தது.

"திடீர்னுதான் அழைப்பு வந்துச்சு; விசா பிரச்னையால பாகிஸ்தான் டீமோட ஃபிசியோவும் அவரது அசிஸ்டண்டும், கடைசி நேரத்தில் வர முடியாம போச்சு. பாகிஸ்தான் கோச்சும் மேனேஜரும் என்னை கூப்பிட்டு பேசுனாங்க. நான் செஞ்ச வேலைகள் பற்றி எடுத்துச் சொன்னேன். அவங்களுக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு" என்கிறார் ராஜகமல்.

பாகிஸ்தான் என்று உச்சரித்தாலே உற்று நோக்கப்படும் சூழலில், ஒரு இந்தியராக, தமிழராக நீங்கள் அவர்களோடு இணைந்து பணியாற்றுவது எப்படி இருக்கிறது என கேட்டோம்.

"பாகிஸ்தான் டீம் ரொம்ப கூல்ங்க; நல்ல பழகுவாங்க. வழக்கமா சில டீம்களுக்குள்ள ஈகோலாம் இருக்கும். ஆனா இவங்க அப்படி இல்ல. ரொம்ப ஜாலியா பேசுவாங்க. நாம சொல்றத கேட்டுப்பாங்க. குடுக்குற அட்வைஸ்-ஐ ஏத்துப்பாங்க. இவங்களோட வேலை செய்றது ரொம்ப சந்தோசமாவும் பெருமையாவும் இருக்கு.

ஒவ்வொருத்தருக்கும் அவங்க அவங்க நாட்டு மேல பற்று இருக்கும். விளையாட்ட விளையாட்டா மட்டும்தான் பார்க்கணும். எல்லா இடங்களையும் பிரச்னைகள் இருக்கத்தான் செய்து. ஆனா விளையாட்டுல அப்படி இல்லை. ஸ்போர்ட்ஸ்னு வந்துட்டா, எல்லாத்தையும் மறந்து உதவி செய்யலாம்" என பேசினார் ராஜகமல்

ஃபில்டர் காஃபியும் பிரியாணியும்...

பாகிஸ்தான் அணியோடு நெருக்கமாக பணியாற்றுகிறீர்களே, சென்னை குறித்து என்ன சொல்கிறார்கள் என ராஜகமலிடம் கேட்டோம்.

"சென்னை அவங்களுக்கு ரொம்ப பிடிச்சுருக்கு. 16 வருஷம் கழிச்சு இங்க வந்துருக்காங்க. இங்க உள்ள உணவு, விருந்தோம்பல், ரசிகர்களுடைய வரவேற்பு எல்லாமே ரொம்ப நல்லா இருக்குனு சொல்லிருக்காங்க. உணவு விஷயம் குறித்து நிறைய பேசிருக்கோம். பிரியாணி நல்ல சாப்பிடுறாங்க. எங்க ஊர்லையும் பிரியாணிதான் ஃபேமஸ்னு சொல்லிருக்காங்க. பிரியாணி தவிர்த்து, ஃபில்டர் காஃபி, மசால் தோசையும் இங்க கிடைக்கிற மற்ற நல்ல உணவுகளையும் சாப்பிட்டு பார்க்குறாங்க" என்றார்.

பாகிஸ்தானோடு எதிர்காலத்தில் பயணிப்பேனா?

"பாகிஸ்தானியர்களோடு பேசும்போது ஆங்கிலத்துல பேசுவேன். புரிஞ்சுப்பாங்க. மொழி ஒரு பிரச்னையா இல்ல" என்கிறார் ராஜகமல்.

"எனக்கு டீம்தான் முக்கியம். வீரர்கள் முழு உடற்தகுதியோட விளையாடணும். என் வேலைகளையும் சில சவால்கள் இருக்கு. சில வீரர்களுக்கு காயமும் ஏற்பட்டிருக்கு. எல்லாத்தையும் நான் சமாளிச்சு அவங்கள தயார் பண்ணனும்" என்கிறார் ராஜகமல். ஒருவேளை பாகிஸ்தான் அணி உங்களை எதிர்காலத்தில் அவர்களுடன் பணியாற்றச் சொன்னால் அதனை ஏற்றுக்கொள்வீர்களா என கேட்டோம். "பார்க்கலாம்.. அப்போ எனக்கு வேற அசைன்மெண்ட் இல்லைனா யோசிக்கலாம்" என பதிலளித்தார்.

“நம்மள நம்பி வந்தவங்களுக்கு நாமதானே செய்யணும்”

பாகிஸ்தான் அணியை தயார் செய்யும் தமிழர்
 
படக்குறிப்பு,

சேகர் மனோகரன் (இடது)

பாகிஸ்தான் அணியில் தமிழரின் பங்களிப்பு குறித்து இந்திய ஹாக்கி சம்மேளனத்தின் பொருளாளரும் தமிழ்நாடு ஹாக்கி கூட்டமைப்பின் தலைவருமான சேகர் மனோகரனிடம் பேசினோம்.

"பாகிஸ்தான் அணிக்கு ஃபிசியோ இல்லாததால நம்மகிட்ட உதவி கேட்டாங்க. நம்மள நம்பி நம்ம ஊருக்கு மேட்ச் ஆட வந்துருக்காங்க. நாமதான அவங்களுக்கு ஏதும்னா செஞ்சி குடுக்கணும்" என்றார் சேகர் மனோகர்.

"ராஜகமல பற்றி பாகிஸ்தான் டீம்கிட்ட சொன்னோம். அவங்களுக்கும் பிடிச்சுப் போச்சு. ராஜகமலும் நல்ல பண்றார். அவ்ளோ பயிற்சி செஞ்சிட்டு மேட்ச் விளையாட வர்றாங்க. கடைசி நேரத்தில் ஃபிசியோ இல்லைன்னா ரொம்ப கஷ்டம். இப்போ பாகிஸ்தான் நம்ம பண்ண உதவியினால சந்தோசப்பட்டாங்க. இது ஒரு நல்ல விஷயம்" என்கிறார் சேகர் மனோகரன்.

‘ராஜகமல் கிடைத்தது அதிர்ஷடம்’

ராஜகமல் குறித்து சென்னையில் ஊடகங்களிடம் பேசிய தற்போதைய பாகிஸ்தான் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் முகமது சக்லைன், "ராஜகமல் தனது வேலைகளை மிகச்சிறப்பாகவே கையாளுகிறார். ஒரு உலகத்தரம் வாய்ந்த ஃபிசியோ எங்களுக்கு கிடைத்திருக்கிறார். தக்க சமயத்தில் அவர் எங்களுக்கு கிடைத்தது அதிர்ஷடமானது" என குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் அணியை தயார் செய்யும் தமிழர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தொடரில் பாகிஸ்தானின் செயல்பாடு எப்படி?

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் பாகிஸ்தான் 2012, 2013, 2018-ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

தற்போது சென்னையில் நடந்து வரும் இந்த தொடரில், இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் 1 வெற்றி, 1 தோல்வி, 2 டிராவைக் கண்டிருக்கிறது. இதன் மூலம் 5 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4ம் இடம் வகிக்கிறது.

பலம் வாய்ந்த இந்தியாவுடன் நாளை பலப்பரீட்சை நடத்துகிறது பாகிஸ்தான். இந்த போட்டிக்கான டிக்கெட்கள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. இந்தியா, மலேசியா ஆகிய அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் புள்ளிப் பட்டியலில் கடைசி இடங்களில் உள்ளதால், பாகிஸ்தான் அரையிறுதிக்குள் மிக எளிதாகவே நுழைந்துவிடும். அங்கிருந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதும், கோப்பையை உச்சி முகர்வதற்கும் பாகிஸ்தான் மிகக் கடுமையாகவே போராட வேண்டியிருக்கும்.

https://www.bbc.com/tamil/articles/cgl84mr2d6ro

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா vs பாகிஸ்தான்: சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு பலப்பரீட்சை

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி

பட மூலாதாரம்,SPORTS TAMIL NADU

9 ஆகஸ்ட் 2023, 14:10 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுவது ரசிகர்களுக்கு விருந்தையாக மாறியிருக்கிறது.

பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே நடைபெற உள்ள இந்த ஆட்டத்தில் 2016க்குப் பிறகு இந்தியாவை வீழ்த்தும் முனைப்பில் பாகிஸ்தான் களமிறங்குகிறது. அதே சமயம், பலம் வாய்ந்த இந்தியா பாகிஸ்தானை சொந்த மண்ணில் வீழ்த்தி ரசிகர்களுக்கு விருந்து படைக்க முயற்சிக்கும். டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்துவிட்டன. எப்படி இருக்கும் இன்றைய ஆட்டம்?

இந்தியா - பாகிஸ்தான் மோதல்

கிரிக்கெட்டைப் போலவே ஒருகாலத்தில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஹாக்கி ஆட்டங்கள் அனல்பறக்கும். மைதானத்தில் இருநாட்டு ரசிகர்களுமே தங்கள் தேசப்பற்றை விளையாட்டின் ஊடாக காட்ட போட்டிப்போடுவர். ஹாக்கியை பொறுத்தவரை இந்தியா - பாகிஸ்தான் இதுவரை ஆடிய போட்டிகளில் அதிகமுறை பாகிஸ்தானே வெற்றி கண்டிருக்கிறது.

ஆனால் இதுவே கடந்த 10 ஆண்டுகளில் தலைகீழானது. இந்தியாவின் கை ஓங்கியிருக்கிறது. கடைசியாக இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியது 2016ல் தான். தெற்காசிய ஹாக்கி போட்டியில் 1க்கு பூஜ்ஜியம் என்கிற கோல் கணக்கில் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றது. அதற்கு பின்னர் இதுநாள் வரை இந்தியாவை பாகிஸ்தானால் வீழ்த்தவே முடியவில்லை. 2016க்குப் பிறகு 14 போட்டிகளில் இந்தியா பாகிஸ்தான் விளையாடியுள்ளன.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி

பட மூலாதாரம்,SPORTS TAMIL NADU

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி

இதில் 12 முறை இந்தியா வெற்றி பெற்றது. 2 போட்டிகள் டிராவில் முடிந்தன. கடைசியாக இந்தியா - பாகிஸ்தான் சந்தித்துக் கொண்டது ஜகார்த்தாவில் நடைபெற்ற 2022 ஆசிய ஹாக்கி கோப்பை தொடரில். அந்த போட்டியில் 1 - 1 கோல் கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்த நிலையில், தற்போது சென்னையில் இரு அணிகளும் மோத இருப்பது முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக மாறியிருக்கிறது.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரைப் பொறுத்தவரை இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் பலம் வாய்ந்த அணிகளாக திகழ்கின்றன. இதுவரை நடைபெற்ற 6 தொடர்களில் 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணியும் 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் பாகிஸ்தான் அணியும் வென்றுள்ளன.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டி மழையால் தடைபட்டதால் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்ற இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இரு அணிகளுமே தலா 3 முறை கோப்பையை வென்றுள்ளன.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி

நடப்பு தொடரில் இரு அணிகளும் எப்படி?

சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி தொடரில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, தென் கொரியா, மலேசியா, ஜப்பான் ஆகிய ஆறு நாடுகள் பங்கேற்றுள்ளன. இதில் இந்தியா பலம்வாய்ந்த அணியாக புள்ளிப்பட்டியலில் முதல் இடம் வகிக்கிறது. நடப்பு தொடரில் தோல்வியே கண்டிராத இந்தியா, 3 வெற்றிகளையும் 1 டிராவையும் பதிவு செய்து, 10 புள்ளிகள் வைத்திருக்கிறது.

அதே சமயம், பாகிஸ்தான் 1 போட்டியில் தோல்வி, 2 போட்டியில் டிரா என தடுமாறி, ஒருவழியாக சீனாவை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. இந்தியா அரையிறுதிக்குள் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. பாகிஸ்தான் அணி 5 புள்ளிகளுடன் தற்போது 4வது இடத்தில் உள்ளது. இந்தியாவை வீழ்த்தும் பட்சத்தில் பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும். சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்களில் உள்ளன. அந்த அணிகள் அதே இடத்தில் நீடித்தால் பாகிஸ்தான் தகுதிபெறும்.

https://www.bbc.com/tamil/articles/cv210jd4234o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை மண்ணில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா - 16 ஆண்டுகளுக்குப் பிறகு அபாரம்

இந்தியா அபார வெற்றி

பட மூலாதாரம்,TWITTER/HOCKEY INDIA

கட்டுரை தகவல்
  • எழுதியவர், அஷ்ஃபாக் அகமது
  • பதவி, பிபிசி தமிழ்
  • 9 ஆகஸ்ட் 2023

சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதியது ரசிகர்களுக்கு விருந்தாக இருந்தது.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி முடிவில் 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்தியாவில் ஹாக்கிக்கு பெயர் போன ஒடிஷாவுக்கு நிகராக சென்னையிலும் ரசிகர்களின் கூட்டத்தைப் பார்க்க முடிந்தது. ஆட்ட இடைவேளையில் ஒலிக்கவிடப்பட்ட முஸ்தபா முஸ்தபா பாடலுக்கு ரசிகர்கள் உற்சாக நடனம் போட்டனர்.

இந்திய ஹாக்கி அணியில் ஒரே தமிழர்

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி

பட மூலாதாரம்,SPORTS TAMIL NADU

இந்தியா - பாகிஸ்தான் அணி வீரர்கள் ரசிகர்களுக்காக அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். பாகிஸ்தான் வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்ட போது, ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினர். தொடர்ந்து இந்திய வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அதில் இறுதியாக 'நம்ம பையன்' என குறிப்பிடப்பட்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார் கார்த்தி செல்வம்.

21 வயதான கார்த்தி செல்வம் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். முதல்முறையாக சென்னை மண்ணில் இந்திய அணிக்காக விளையாடுகிறார். உலகத்தரம் வாய்ந்த ஜெர்மனி, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக கோல்களை பதிவு செய்துள்ள கார்த்தி செல்வம் ஓர் இளம் முன்கள வீரர் ஆவார்.

பாக். முயற்சியை முறியடித்த இந்தியா

போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே பாகிஸ்தான் கோல் அடித்தது. ஆனால் பந்து பாகிஸ்தான் வீரரின் உடலில் பட்டதால் இந்தியா ரிவியூ செய்தது. கோல் இல்லை என கூறிய நடுவர், பாகிஸ்தானுக்கு பெனால்டி கார்னர் வழங்கினார். ஆனால் அதை முறியடித்தது இந்தியா.

இந்திய அணி அடுத்தடுத்து கோல்

முதல் கால் பகுதியில் கடைசி நிமிடங்களில் இந்திய அணி முதல் கோலை அடித்தது. இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் முதல் கோலை அடித்தார். பதில் கோலை திருப்ப பாகிஸ்தான் வீரர்கள் கடுமையாக போராடியும் பலன் கிடைக்கவில்லை. இந்திய வீரர்களின் தற்காப்பு அபாரமாக இருந்தது.

ஆட்டத்தின் பெரும்பகுதியில் இந்திய வீரர்களே ஆதிக்கம் செலுத்தினர். முதல் பாதி ஆட்டம் முடியும் தருவாயில் கேப்டன் ஹர்மன்பிரீத் இந்தியாவுக்கான அடுத்த கோலையும் அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அத்துடன் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்தியா அபார வெற்றி

பட மூலாதாரம்,TWITTER/HOCKEY INDIA

இடைவேளையில் ஒலித்த முஸ்தபா... முஸ்தபா...

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தின் இடைவேளையில் மைதானத்தில் காதல் தேசம் படத்தில் இடம் பெற்ற 'முஸ்தபா... முஸ்தபா... ' என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது. அதற்கு ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று உற்சாக ஆட்டம் போட்டனர். அதேபோல், வந்தே மாதரம் பாடலும் மைதானத்தில் ஒலிக்கச் செய்யப்பட்டது.

இரண்டாவது பாதியிலும் இந்தியா ஆதிக்கம்

இடைவேளைக்குப் பிறகு தொடங்கிய ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்ந்தது. இதன் பலனாக, இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதனைப் பயன்படுத்தி இந்திய வீரர் ஜக்ரத் சிங், அணிக்கான மூன்றாவது கோலை அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

பாகிஸ்தான் அணி தனது முதல் கோலை அடிக்க தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தது. ஆனால், இந்திய அணியின் தற்காப்பை மீறி அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்த நேரத்தில் இந்திய அணி நான்காவது கோலையும் அடித்தது. பாகிஸ்தான் வீரர்களால் கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை.

இதன் மூலம் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை அபாரமாக வீழ்த்தியது.

இந்தியா அபார வெற்றி

பட மூலாதாரம்,TWITTER/HOCKEY INDIA

ஹாக்கியில் ஒடிசாவுக்கு நிகராகிறதா சென்னை?

இந்திய அணி களத்திற்குள் வந்தது முதலே மேயர் ராதாகிருஷ்ணன் அரங்கம் அதிர்ந்தது. இந்தியா- பாகிஸ்தான் மோதும் முக்கிய லீக் ஆட்டம் என்பதால், அரங்கம் முழுவதுமே ரசிகர்கள் நிரம்பி வழிந்தனர். கைகளில் மூவர்ணக்கொடி, கன்னங்களில் மூவர்ண பெயிண்ட், மேள தாளம் என ரசிகர்களால் விழாக்கோலம் பூண்டிருந்தது மைதானம்.

இந்தியா.. இந்தியா.. என ரசிகர்களின் முழக்கத்திற்கு அணி வீரர்களும் கையசைக்க, அரங்கமே குலுங்கியது. இந்தியாவில் ஒடிசா மாநிலமே ஹாக்கியின் தற்போதைய கோட்டையாக திகழ்கிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு ஒரு சர்வதேச ஹாக்கி தொடரை நடத்துகிறது. பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட இதர மாநிலங்களில் இருந்து சென்னைக்கு ரசிகர்கள் படையெடுத்திருப்பதும் உள்ளூர் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பும் தமிழ்நாடு ஹாக்கி மீது கொண்டுள்ள பற்றுதலுக்கு வெளிச்சம் பாய்ச்சுகிறது.

ரசிகர்களில் ஒருவரான இந்திரஜித்திடம் பேசினோம். "ரொம்ப எனர்ஜெடிக்கா இருக்கு. தமிழ்நாட்டுல முதல்முறையா இப்படி ஒரு மேட்ச் பாக்குறேன். ரொம்ப வருஷம் கழிச்சு தமிழ்நாட்டுல ஒரு ஹாக்கி மேட்ச். எக்ஸைட்டிங்காக இருக்கு" என்றார்.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி

"இந்தியா வேற லெவல் ஆட்டம்"

இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பார்ப்பதற்காகவே நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து நண்பர்களுடன் வந்திருக்கிறார் கார் ஓட்டுநராக பணியாற்றி வரும் ஸ்ரீதர். "இந்த மேட்ச்ச எப்படியாவது நேர்ல பார்த்திரனும்னு நேத்து சென்னை வந்தோம். இங்க ரூம் எடுத்துருக்கோம். மேட்ச் பார்த்துட்டு நைட்டே கிளம்பிடுவோம்" என்றார். "பாகிஸ்தான் ஆரம்பத்துல நெருக்கடி கொடுத்தாங்க. இந்தியா கொஞ்சம் மெதுவாதான் ஆடுச்சு. கிடைச்ச பெனால்டி கார்னர் வாய்ப்புகளை இந்தியா பிரமாதமா ஆடுனாங்க. அதை கோலா மாத்துனதுலாதான் நாம ரிலாக்சா ஆட முடியுது" என பேசினார் ஸ்ரீதர்.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி தனது முழு திறனையும் வெளிப்படுத்தி விளையாடியதாக கூறுகிறார்சென்னை தனியார் கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் தாரண்யா.

நம்மிடம் பேசிய அவர், " மேட்ச் முழுமைக்கும் நம்ம கண்ட்ரால் தான்..நல்ல என்ஜாய் பண்ணோம். பாகிஸ்தானும் நல்லாவே ஆடுனாங்க. ஆரம்பத்துல கொஞ்சம் நெருக்கடி தந்தாங்க. மற்ற மேட்சில விளையாடினதை விட இந்தியாவோட நல்லாவே போராடுனாங்க" என தெரிவித்தார்.

இந்தியா அபார வெற்றி
 
படக்குறிப்பு,

ஆட்டத்தை நேரில் பார்க்க வந்த ஸ்ரீதர்(இடது) தனது நண்பர்களுடன்

மைதானத்தின் உள்ளே போட்டி நடைபெற்ற ஆடுகளத்தின் முன்பாக பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட பெண் காவல் ஆய்வாளர் (பெயர் வெளியிட விரும்பவில்லை) தனக்கு பக்கத்தில் உள்ள பெரிய திரையில் ஆட்டத்தை ரசித்துக் கொண்டிர்ந்தார். ரசிகர்களை கண்காணிக்கும்படி அவர்களை நோக்கி அமர்ந்திருந்ததால் களத்தில் நடப்பதை அவரால் அறிய முடியவில்லை. மாறாக அருகில் இருந்த பெரிய திரையில் ஆட்டத்தை அவ்வப்போது ரசித்த வண்ணம் இருந்தார்.

அவரிடம் போட்டி முடிந்த பிறகு பேசினோம்.. "டியூட்டி பார்க்க தான் வந்தோம். மேட்ச் ரொம்ப சூப்பரா இருந்துச்சு. இந்தியா செமையா விளையாண்டாங்க. இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல மாட்டேன்" என்றார் சிரித்தபடி.

இந்தியா அபார வெற்றி
 
நடப்பு தொடரில் இரு அணிகளும் எப்படி?

சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி தொடரில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, தென் கொரியா, மலேசியா, ஜப்பான் ஆகிய ஆறு நாடுகள் பங்கேற்றுள்ளன. இதில் இந்தியா பலம்வாய்ந்த அணியாக புள்ளிப்பட்டியலில் முதல் இடம் வகிக்கிறது. நடப்பு தொடரில் தோல்வியே கண்டிராத இந்தியா, 3 வெற்றிகளையும் 1 டிராவையும் பதிவு செய்து, 10 புள்ளிகள் வைத்திருக்கிறது.

அதே சமயம், பாகிஸ்தான் 2 போட்டிகளில் தோல்வி, 2 போட்டியில் டிரா என தடுமாறி, ஒருவழியாக சீனாவை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. இந்தியா அரையிறுதிக்குள் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. பாகிஸ்தான் அணி 5 புள்ளிகளுடன் தற்போது 4வது இடத்தில் உள்ளது. சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்களில் உள்ளன. அந்த அணிகள் அதே இடத்தில் நீடித்தால் பாகிஸ்தான் தகுதிபெறும்.

https://www.bbc.com/tamil/articles/cv210jd4234o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசிய ஹாக்கி போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா

ஆசிய ஹாக்கி போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், அஷ்ஃபாக் அகமது
  • பதவி, பிபிசி தமிழ்
  • 9 ஆகஸ்ட் 2023
    புதுப்பிக்கப்பட்டது 11 ஆகஸ்ட் 2023

சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் ஜப்பானை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வரும் 7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் தென்கொரியாவை வீழ்த்திய மலேசியா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

ஆகஸ்ட் 12ஆம் தேதியன்று இந்தியாவும் மலேசியாவும் இறுதிப்போட்டியில் மோதவுள்ளது.

இந்தியா அபார வெற்றி

பட மூலாதாரம்,TWITTER/HOCKEY INDIA

முன்னதாக கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதியது ரசிகர்களுக்கு விருந்தாக இருந்தது.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி முடிவில் 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்தியாவில் ஹாக்கிக்கு பெயர் போன ஒடிஷாவுக்கு நிகராக சென்னையிலும் ரசிகர்களின் கூட்டத்தைப் பார்க்க முடிந்தது. ஆட்ட இடைவேளையில் ஒலிக்கவிடப்பட்ட முஸ்தபா முஸ்தபா பாடலுக்கு ரசிகர்கள் உற்சாக நடனம் போட்டனர்.

இந்திய ஹாக்கி அணியில் ஒரே தமிழர்

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி

பட மூலாதாரம்,SPORTS TAMIL NADU

இந்தியா - பாகிஸ்தான் அணி வீரர்கள் ரசிகர்களுக்காக அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். பாகிஸ்தான் வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்ட போது, ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினர். தொடர்ந்து இந்திய வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அதில் இறுதியாக 'நம்ம பையன்' என குறிப்பிடப்பட்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார் கார்த்தி செல்வம்.

21 வயதான கார்த்தி செல்வம் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். முதல்முறையாக சென்னை மண்ணில் இந்திய அணிக்காக விளையாடுகிறார். உலகத்தரம் வாய்ந்த ஜெர்மனி, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக கோல்களை பதிவு செய்துள்ள கார்த்தி செல்வம் ஓர் இளம் முன்கள வீரர் ஆவார்.

பாக். முயற்சியை முறியடித்த இந்தியா

போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே பாகிஸ்தான் கோல் அடித்தது. ஆனால் பந்து பாகிஸ்தான் வீரரின் உடலில் பட்டதால் இந்தியா ரிவியூ செய்தது. கோல் இல்லை என கூறிய நடுவர், பாகிஸ்தானுக்கு பெனால்டி கார்னர் வழங்கினார். ஆனால் அதை முறியடித்தது இந்தியா.

இந்திய அணி அடுத்தடுத்து கோல்

முதல் கால் பகுதியில் கடைசி நிமிடங்களில் இந்திய அணி முதல் கோலை அடித்தது. இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் முதல் கோலை அடித்தார். பதில் கோலை திருப்ப பாகிஸ்தான் வீரர்கள் கடுமையாக போராடியும் பலன் கிடைக்கவில்லை. இந்திய வீரர்களின் தற்காப்பு அபாரமாக இருந்தது.

ஆட்டத்தின் பெரும்பகுதியில் இந்திய வீரர்களே ஆதிக்கம் செலுத்தினர். முதல் பாதி ஆட்டம் முடியும் தருவாயில் கேப்டன் ஹர்மன்பிரீத் இந்தியாவுக்கான அடுத்த கோலையும் அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அத்துடன் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்தியா அபார வெற்றி

பட மூலாதாரம்,TWITTER/HOCKEY INDIA

இடைவேளையில் ஒலித்த முஸ்தபா... முஸ்தபா...

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தின் இடைவேளையில் மைதானத்தில் காதல் தேசம் படத்தில் இடம் பெற்ற 'முஸ்தபா... முஸ்தபா... ' என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது. அதற்கு ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று உற்சாக ஆட்டம் போட்டனர். அதேபோல், வந்தே மாதரம் பாடலும் மைதானத்தில் ஒலிக்கச் செய்யப்பட்டது.

இரண்டாவது பாதியிலும் இந்தியா ஆதிக்கம்

இடைவேளைக்குப் பிறகு தொடங்கிய ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்ந்தது. இதன் பலனாக, இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதனைப் பயன்படுத்தி இந்திய வீரர் ஜக்ரத் சிங், அணிக்கான மூன்றாவது கோலை அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

பாகிஸ்தான் அணி தனது முதல் கோலை அடிக்க தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தது. ஆனால், இந்திய அணியின் தற்காப்பை மீறி அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்த நேரத்தில் இந்திய அணி நான்காவது கோலையும் அடித்தது. பாகிஸ்தான் வீரர்களால் கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை.

இதன் மூலம் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை அபாரமாக வீழ்த்தியது.

இந்தியா அபார வெற்றி

பட மூலாதாரம்,TWITTER/HOCKEY INDIA

ஹாக்கியில் ஒடிசாவுக்கு நிகராகிறதா சென்னை?

இந்திய அணி களத்திற்குள் வந்தது முதலே மேயர் ராதாகிருஷ்ணன் அரங்கம் அதிர்ந்தது. இந்தியா- பாகிஸ்தான் மோதும் முக்கிய லீக் ஆட்டம் என்பதால், அரங்கம் முழுவதுமே ரசிகர்கள் நிரம்பி வழிந்தனர். கைகளில் மூவர்ணக்கொடி, கன்னங்களில் மூவர்ண பெயிண்ட், மேள தாளம் என ரசிகர்களால் விழாக்கோலம் பூண்டிருந்தது மைதானம்.

இந்தியா.. இந்தியா.. என ரசிகர்களின் முழக்கத்திற்கு அணி வீரர்களும் கையசைக்க, அரங்கமே குலுங்கியது. இந்தியாவில் ஒடிசா மாநிலமே ஹாக்கியின் தற்போதைய கோட்டையாக திகழ்கிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு ஒரு சர்வதேச ஹாக்கி தொடரை நடத்துகிறது. பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட இதர மாநிலங்களில் இருந்து சென்னைக்கு ரசிகர்கள் படையெடுத்திருப்பதும் உள்ளூர் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பும் தமிழ்நாடு ஹாக்கி மீது கொண்டுள்ள பற்றுதலுக்கு வெளிச்சம் பாய்ச்சுகிறது.

ரசிகர்களில் ஒருவரான இந்திரஜித்திடம் பேசினோம். "ரொம்ப எனர்ஜெடிக்கா இருக்கு. தமிழ்நாட்டுல முதல்முறையா இப்படி ஒரு மேட்ச் பாக்குறேன். ரொம்ப வருஷம் கழிச்சு தமிழ்நாட்டுல ஒரு ஹாக்கி மேட்ச். எக்ஸைட்டிங்காக இருக்கு" என்றார்.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி

"இந்தியா வேற லெவல் ஆட்டம்"

இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பார்ப்பதற்காகவே நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து நண்பர்களுடன் வந்திருக்கிறார் கார் ஓட்டுநராக பணியாற்றி வரும் ஸ்ரீதர். "இந்த மேட்ச்ச எப்படியாவது நேர்ல பார்த்திரனும்னு நேத்து சென்னை வந்தோம். இங்க ரூம் எடுத்துருக்கோம். மேட்ச் பார்த்துட்டு நைட்டே கிளம்பிடுவோம்" என்றார். "பாகிஸ்தான் ஆரம்பத்துல நெருக்கடி கொடுத்தாங்க. இந்தியா கொஞ்சம் மெதுவாதான் ஆடுச்சு. கிடைச்ச பெனால்டி கார்னர் வாய்ப்புகளை இந்தியா பிரமாதமா ஆடுனாங்க. அதை கோலா மாத்துனதுலாதான் நாம ரிலாக்சா ஆட முடியுது" என பேசினார் ஸ்ரீதர்.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி தனது முழு திறனையும் வெளிப்படுத்தி விளையாடியதாக கூறுகிறார்சென்னை தனியார் கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் தாரண்யா.

நம்மிடம் பேசிய அவர், " மேட்ச் முழுமைக்கும் நம்ம கண்ட்ரால் தான்..நல்ல என்ஜாய் பண்ணோம். பாகிஸ்தானும் நல்லாவே ஆடுனாங்க. ஆரம்பத்துல கொஞ்சம் நெருக்கடி தந்தாங்க. மற்ற மேட்சில விளையாடினதை விட இந்தியாவோட நல்லாவே போராடுனாங்க" என தெரிவித்தார்.

இந்தியா அபார வெற்றி
 
படக்குறிப்பு,

ஆட்டத்தை நேரில் பார்க்க வந்த ஸ்ரீதர்(இடது) தனது நண்பர்களுடன்

மைதானத்தின் உள்ளே போட்டி நடைபெற்ற ஆடுகளத்தின் முன்பாக பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட பெண் காவல் ஆய்வாளர் (பெயர் வெளியிட விரும்பவில்லை) தனக்கு பக்கத்தில் உள்ள பெரிய திரையில் ஆட்டத்தை ரசித்துக் கொண்டிர்ந்தார். ரசிகர்களை கண்காணிக்கும்படி அவர்களை நோக்கி அமர்ந்திருந்ததால் களத்தில் நடப்பதை அவரால் அறிய முடியவில்லை. மாறாக அருகில் இருந்த பெரிய திரையில் ஆட்டத்தை அவ்வப்போது ரசித்த வண்ணம் இருந்தார்.

அவரிடம் போட்டி முடிந்த பிறகு பேசினோம்.. "டியூட்டி பார்க்க தான் வந்தோம். மேட்ச் ரொம்ப சூப்பரா இருந்துச்சு. இந்தியா செமையா விளையாண்டாங்க. இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல மாட்டேன்" என்றார் சிரித்தபடி.

இந்தியா அபார வெற்றி

நடப்பு தொடரில் இரு அணிகளும் எப்படி?

சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி தொடரில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, தென் கொரியா, மலேசியா, ஜப்பான் ஆகிய ஆறு நாடுகள் பங்கேற்றுள்ளன. இதில் இந்தியா பலம்வாய்ந்த அணியாக புள்ளிப்பட்டியலில் முதல் இடம் வகிக்கிறது. நடப்பு தொடரில் தோல்வியே கண்டிராத இந்தியா, 3 வெற்றிகளையும் 1 டிராவையும் பதிவு செய்து, 10 புள்ளிகள் வைத்திருக்கிறது.

அதே சமயம், பாகிஸ்தான் 2 போட்டிகளில் தோல்வி, 2 போட்டியில் டிரா என தடுமாறி, ஒருவழியாக சீனாவை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. இந்தியா அரையிறுதிக்குள் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. பாகிஸ்தான் அணி 5 புள்ளிகளுடன் தற்போது 4வது இடத்தில் உள்ளது. சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்களில் உள்ளன. அந்த அணிகள் அதே இடத்தில் நீடித்தால் பாகிஸ்தான் தகுதிபெறும்.

https://www.bbc.com/tamil/articles/cv210jd4234o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா 'சாம்பியன்' - கடைசி நிமிட கோலால் மலேசியாவை வீழ்த்தி அபாரம்

இந்திய அணி சாம்பியன்

பட மூலாதாரம்,TWITTER/ASIAN HOCKEY FEDERATION

12 ஆகஸ்ட் 2023

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இரசிகர்களை சீட் நுனிக்கே வரவைத்த பரபரப்பான இறுதிப்போட்டியில் மலேசிய அணியை 4-க்கு 3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோற்கடித்தது. ஆட்டத்தின் முதல் பாதியில் ஒன்றுக்கு மூன்று என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்த இந்திய வீரர்கள் பிற்பாதியில் எழுச்சி பெற்ற சமன் செய்தனர். வெற்றிக்கான கோல் கடைசி நிமிடத்தில் வந்ததது என்பது சிறப்பு. அந்த அளவுக்கு ஆட்டம் பரபரப்பானதாக இருந்தது. இந்திய அணியின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் 7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரி நடந்து முடிந்துள்ளது. அதன் இறுதிப் போட்டியில் இந்தியா - மலேசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

ஆட்டம் தொடங்கியதும் இந்தியா முன்னிலை

ஆட்டம் தொடங்கியதுமே மலேசிய வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தை கையில் எடுத்தனர். மலேசிய அணி வீரர்கள் ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே இந்திய கோல் பகுதியை நோக்கி அடித்த பந்து வலைக்கு சற்று வெளியே பறந்தது. இந்திய அணியின் தற்காப்பு வீரர்கள் செய்த சிறிய பிழையை சாதகமாக பயன்படுத்தி இந்திய கோல் பகுதியை அவர்கள் முற்றுகையிட்டனர். ஆனாலும் கோல் ஏதும் விழவில்லை.

ஆனால், ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் மலேசிய தற்காப்பில் விழுந்த ஓட்டையை பயன்படுத்திக் கொண்ட இந்திய வீரர் ஜூக்ராஜ் சிங் அபாரமாக கோல் அடித்து அசத்தினார். இதனால், இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

முதல் பாதியில் மலேசியா 3-0

இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் மலேசிய வீரர்கள் தங்களது தாக்குதலை இன்னும் தீவிரப்படுத்தினர். அதற்கு அடுத்த ஐந்தாவது நிமிடத்திலேயே பலன் கிடைத்தது. அஸ்ராய் அபு கமல் அந்த அணிக்கான முதல் கோலை அடித்தார். இதனால், இரு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டின.

ஆட்டத்தில் இரண்டாவது கால் பகுதியில், அதாவது 18-வது நிமிடத்தில் மலேசிய அணி மீண்டும் ஒரு கோல் அடித்தது. அந்த அணிக்காக 300-க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் ஆடியுள்ள அனுபவம் வாய்ந்த ரஸி ரஹிம் இந்த கோலை அடித்து இந்திய ரசிகர்களை திகைக்க வைத்தார்.

இந்திய அணி வீரர்கள் பதிலடி கொடுக்க போராடினால் பலன் கிடைக்கவில்லை. மலேசிய அணியின் தற்காப்பு சிறப்பாக இருந்தது. ஆட்டத்தின் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வருவதற்கு சற்று முன்னதாக மலேசிய வீரர் முகமது அமினுதீன் கோல் அடித்து அசத்தினார். இதனால், இந்தியாவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்த மலேசிய அணி முதல் பாதி ஆட்டம் முடிவில் 1-3 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்திய அணி சாம்பியன்

பட மூலாதாரம்,TWITTER/ASIAN HOCKEY FEDERATION

பிற்பாதியில் இந்திய அணி எழுச்சி

ஆட்டத்தின் பிற்பாதியில் முதல் நிமிடத்தில் இருந்தே இந்திய அணி தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியது. மலேசிய கோல் பகுதியை இந்திய வீரர்கள் முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர். ஆனால், அந்த அணியின் தற்காப்பு மிகச் சிறப்பாக இருந்ததால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. 41-வது நிமிடத்தில் இந்திய வீரர் ஆகாஷ்தீப் அடித்த கோலை நடுவர் நிராகரித்தார்.

ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் மலேசிய கோல் பகுதியில் இந்திய வீரர் சுக்ஜீத்தை அந்த அணி வீரர்கள் கீழே தள்ளிவிட, இந்திய அணிக்கு பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பு கிடைத்தது. அதனை கேப்டன் ஹர்மன்பிரீத் கோலாக்கினார். இதன் மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான கோல் இடைவெளி 3-2 என்ற வகையில் குறைந்தது.

இரண்டாவது கோல் கொடுத்த உத்வேகத்தில் ஆடிய இந்திய வீரர்கள் அடுத்த சில விநாடிகளிலேயே மூன்றாவது கோலையும் அடித்துவிட்டனர். இந்திய அணிக்காக இந்த கோலை குர்ஜந்த் அடித்தார். இதனால் உற்சாகம் அடைந்த இந்திய ரசிகர்கள் வந்தே மாதரம் என்று ஒன்றாக பாடத் தொடங்கிவிட்டனர்.

இந்திய அணி சாம்பியன்

பட மூலாதாரம்,TWITTER/ASIAN HOCKEY FEDERATION

கடைசி நிமிட கோலால் இந்தியா வெற்றி

இதையடுத்து, இரு அணிகளுமே வெற்றிக்கான கோலை அடிக்க தாக்குதலை தீவிரப்படுத்தின. இந்திய வீரர்களின் சில நல்ல முயற்சிகளை மலேசிய கோல் கீப்பர் சிறப்பாக செயல்பட்டு முறியடித்தார்.

ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருந்த போது இந்திய அணியின் வெற்றிக்கான கோலை ஆகாஷ்தீப் சிங் அடித்தார். மலேசிய கோல் பகுதியில் இருந்து பல மீட்டர் தொலைவில் இருந்து அவர் அடித்த பீல்ட் கோல் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. அதுவே இந்திய அணியின் வெற்றிக் கோலாக அமைந்தது. அதன் பிறகு இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை.

முடிவில் இந்திய அணி 4-க்கு 3 என்ற கோல் கணக்கில் வென்று ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்திய அணி முதல் பாதியில் 1-க்கு 3 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்து, இரண்டாவது பாதியில் எழுச்சி பெற்று அடுத்தடுத்து 3 கோல்களை அடித்து கோப்பையை தனதாக்கியுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cmmy3p024y5o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.