Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹரியானா வன்முறை: குருகிராமில் மசூதி எரிப்பு, இமாம் கொலை - நடந்தது என்ன? நேரடி ரிப்போர்ட்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
குருகிராமில் மசூதிக்கு தீ - இமாம் கொலை
 
படக்குறிப்பு,

குருகிராமில் தீ வைத்து எரிக்கப்பட்ட மசூதி மற்றும் கொல்லப்பட்ட இமாம் முகமது சாத்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், தில்நவாஸ் பாஷா
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஹரியானாவின் மேவாத்தில் திங்களன்று நடந்த வகுப்புவாத வன்முறையைத் தொடர்ந்து, குருகிராமின் 57 வது செக்டரில் உள்ள ஒரு மசூதிக்கு நள்ளிரவில் தீவைக்கப்பட்டது. இந்த தாக்குதலில் மசூதியின் இமாம் உயிரிழந்துள்ளார். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

 

"இந்த தாக்குதலில் மசூதியின் இமாம் முகமது சாத் உயிரிழந்துவிட்டார்," என்று மசூதியின் நிர்வாகக் குழுவின் தலைவர் அஸ்லம் கான் பிபிசியிடம் கூறினார்.

குருகிராமின் டிசிபி(கிழக்கு) நிதீஷ் அகர்வால், இந்த தாக்குதலை பிபிசியிடம் உறுதிப்படுத்தினார்.

 

“மசூதியின் நாயப் இமாம் தாக்குதலில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.

“மசூதி தாக்கப்பட்ட நேரத்தில் போலீஸ் படைகள் அங்கு பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தன. ஆனால் தாக்குதல் நடத்தியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அவர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களை போலீசார் சேகரித்துவருகின்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் என சந்தேகிக்கப்படும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என்று டிசிபி மேலும் கூறினார்.

 

முன்னதாக திங்களன்று ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் உள்ள மேவாத் பகுதியில் சமய யாத்திரையின் போது இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் சுமார் 20 பேர் காயமடைந்தனர் மற்றும் இரண்டு ஊர்க்காவல் படையினர் கொல்லப்பட்டனர்.

குருகிராமில் உள்ள இந்த மசூதி தாக்குதலுக்கு உள்ளானது.
 
படக்குறிப்பு,

குருகிராமில் உள்ள இந்த மசூதி தாக்குதலுக்கு உள்ளானது.

 

நேற்றிரவு நடந்த இந்த சம்பவத்திற்குப்பிறகு குருகிராம் முழுவதிலும் இருந்து வகுப்புவாத வன்முறை பற்றிய வேறு எந்தச்செய்தியும் இல்லை என்று டிசிபி தெரிவித்தார்.

 

"என் சகோதரரின் முகத்தை மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. நாங்கள் இப்போது சவக்கிடங்கில் இருக்கிறோம். கடந்த ஏழு மாதங்களாக இந்த மசூதியின் இமாமாக எனது சகோதரர் இருந்தார். அவரின் வயது வெறும் 22 மட்டுமே,” என்று இமாம் சாத்தின் சகோதரர் ஷதாப் அன்வர் பிபிசியிடம் கூறினார்.

 

நேற்று இரவு சுமார் 11:30 மணிக்கு சாதிடம் ஷதாப் பேசினார்.

”எங்களது பூர்வீகம் பீகார். இன்று என் சகோதரர் வீடு திரும்புவதாக இருந்தது. அவரிடம் டிக்கெட் இருந்தது. நான் அவரை தொலைபேசியில் அழைத்து இப்போது நிலைமை சரியில்லை என்று விளக்கினேன். நிலைமை சீராகும் வரை மசூதியை விட்டு வெளியே வரவேண்டாம் என்றேன். இதுதான் நான் அவருடன் கடைசியாகப்பேசிய வார்த்தைகள்,” என்று ஷதாப் குறிப்பிட்டார்.

மசூதியின் நாயப் இமாம் முகமது சாத்,

பட மூலாதாரம்,HANDOUT

 
படக்குறிப்பு,

மசூதியின் நாயப் இமாம் முகமது சாத்,

’பாதுகாப்பு அளிப்பதாக காவல்துறை உறுதி'

மேவாத்தில் நடந்த வன்முறைக்குப் பிறகு, திங்கள்கிழமை மாலை ஒரு போலீஸ் குழு எங்களை அணுகி எங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக நம்பிக்கை அளித்தது," என்று மசூதியை நிர்வகிக்கும் ஹரியானா அஞ்சுமன் அறக்கட்டளையின் தலைவர் முகமது அஸ்லம் கான் பிபிசியிடம் தெரிவித்தார்.

“உள்ளூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் குழு எங்களிடம் வந்தது. மசூதியின் பாதுகாப்பை போலீஸார் செய்வார்கள் என்று எங்களிடம் கூறினர். போலீஸ் குழு மசூதியிலேயே இருக்கும் என்று எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. மசூதியின் இமாம் மற்றும் இங்கு வசிக்கும் இரண்டு ஊழியர்களைப் பற்றி நாங்கள் பேசியபோது, கவலைப்பட ஒன்றுமில்லை என்று போலீசார் தெரிவித்தனர்,” என்கிறார் அஸ்லம் கான் .

மசூதி கமிட்டியிடம் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டதாக டிசிபி நிதிஷ் அகர்வாலும் பிபிசியிடம் தெரிவித்தார்.

”மக்ரீப் தொழுகையை முடித்துவிட்டு நாங்கள் மசூதியிலிருந்து திரும்பியிருந்தோம். போலீசாரும் உடனிருந்தனர். நள்ளிரவு 12 மணி முதல் 12.30 மணிக்கு இடையே மசூதி திடீரென தாக்கப்பட்டது. முதலில் மசூதியின் கேமராக்கள் உடைக்கப்பட்டன. பின்னர் தீ வைக்கப்பட்டது,” என்று அஸ்லம் கான் கூறினார்.

மேவாத்தில் நடந்த வன்முறை
 
படக்குறிப்பு,

மசூதி கமிட்டியிடம் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டதாக டிசிபி நிதிஷ் அகர்வாலும் பிபிசியிடம் தெரிவித்தார்.

 

“பீகாரை சேர்ந்த மசூதியின் இமாம் சாத், தாக்குதல் நடத்தியவர்களால் கொல்லப்பட்டார். குர்ஷித் என்ற நபர் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். மேலும் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

2004 ஆம் ஆண்டில் ஹரியானா அரசு குருகிராமில் 17 கோவில்கள், 2 குருத்வாராக்கள், ஒரு தேவாலயம் மற்றும் ஒரு மசூதி கட்டுவதற்கு நிலம் ஒதுக்கியது.

இந்த மசூதி அந்த நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. ந்யூ குருகிராமில் உள்ள ஒரே மசூதி இதுவாகும். அருகில் வசிக்கும் முஸ்லிம்கள் தொழுகை நடத்த இங்கு வருகிறார்கள்.

“போலீசார் எங்களை மசூதிக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. தாக்குதல் நடந்ததற்கான தடயங்கள் இங்கு தெளிவாகத் தெரிகிறது. மசூதி கட்டிடம் நிறைய சேதம் அடைந்துள்ளது” என்று தாக்குதலுக்குப் பிறகு மசூதியை அடைந்த ஒரு செய்தியாளர் பிபிசியிடம் கூறினார்.

விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் இணைந்து திங்கள்கிழமை மேவாத்தில் சமய யாத்திரை மேற்கொண்டன. இந்த யாத்திரையின் போது இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதன்பின் பல இடங்களில் வன்முறை வெடித்தது.

 

பிபிசி செய்தியாளர் நேரில் பார்த்தவை

மேவாத் வன்முறை
 
படக்குறிப்பு,

திங்கள்கிழமை மாலை சோஹ்னாவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், அதில் தனக்குத்தெரிந்த பலர் காயமடைந்துள்ளதாகவும் அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள்.

 

குருகிராமில் உள்ள சோஹ்னா பகுதியிலும் திங்கள்கிழமை மாலை வன்முறை ஏற்பட்டது. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களின் கடைகள் குறிவைக்கப்பட்டன.

பிபிசி செய்தியாளர் அபினவ் கோயல் சோஹ்னா பகுதிக்குச்சென்றார்.

சோஹ்னாவில் உள்ள சாலைகளில் தற்போது போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். சாலையின் இருபுறமும் தள்ளு வண்டிகளும், முஸ்லிம்களின் கடைகளும் எரிக்கப்பட்டுள்ளன. ’தி அர்பன் க்ரோசர்’ என்ற கடையும் கொளுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து இன்னும் புகை வெளியேறுவதை பார்க்க முடிகிறது,” என்று அபினவ் கோயல் கூறுகிறார்.

“சாலையின் இருபுறமும் எரிந்துபோன வாகனங்கள் மற்றும் கடைகள் காணப்படுகின்றன. சில கடைகளில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது,” என்றார் அவர்.

"நேற்று மதியத்திற்குப் பிறகு, இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடைகளைத் தாக்கி தீவைக்கத் தொடங்கினர்." என்று பிபிசியிடம் பேசிய சோஹ்னாவில் வசிக்கும் ஜெம்ஷெத் தெரிவித்தார்.

இந்த தாக்குதலில் ஜெம்ஷெத்தின் சித்தப்பா பலத்த காயம் அடைந்தார். “அவரது தலையில் பதினைந்துக்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டுள்ளன. சம்பவத்திற்குப் பிறகு அவர் சோஹ்னாவை விட்டு பாதுகாப்பான இடத்திற்குச் சென்றுவிட்டார்,” என்று ஜெம்ஷெத் கூறினார்.

திங்கள்கிழமை மாலை சோஹ்னாவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், அதில் தனக்குத் தெரிந்த பலர் காயமடைந்துள்ளதாகவும் ஜெம்ஷெத் கூறுகிறார்.

சோஹ்னாவிலிருந்து நூஹ் நோக்கிச்சென்றால் சாலைகள் முற்றிலுமாக வெறிச்சோடி காணப்படுகின்றன.

“சாலைகள் முற்றிலும் வெறிச்சோடி உள்ளன, ஒவ்வொரு இரண்டு கிலோமீட்டருக்கு பிறகும் போலீஸ் தடுப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினரின் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் சாலைகளில் காணப்படுகின்றன. நூஹ் பகுதியில் மத்திய ரிஸர்வ் போலீஸ் படையினர் காணப்படுகின்றனர்,” என்று பிபிசி செய்தியாளர் அபினவ் கோயல் கூறுகிறார்.

சோஹ்னாவிலிருந்து நூஹ் நோக்கிச்சென்றால் சாலைகள் முற்றிலுமாக வெறிச்சோடி காணப்படுகின்றன.
 
படக்குறிப்பு,

சோஹ்னாவிலிருந்து நூஹ் நோக்கிச்சென்றால் சாலைகள் முற்றிலுமாக வெறிச்சோடி காணப்படுகின்றன.

 

 

எங்களுடைய ஆட்கள் தாக்கப்பட்டனர்: வி.எச்.பி

விஷ்வ ஹிந்து பரிஷத் திங்கள்கிழமையன்று மேவாத்தில் ஒரு சமய யாத்திரைக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்தப் பேரணியின் மீது அப்பகுதியைச் சேர்ந்த ஜிகாதி விஷமிகள் திடீரென தாக்குதல் நடத்தியதாக விஷ்வ ஹிந்து பரிஷத் குற்றம் சாட்டியுள்ளது.

“எங்கள் அமைப்பைச் சேர்ந்த பலர் காயமடைந்துள்ளனர். சில உயிரிழப்புகள் பற்றிய செய்திகளும் வந்துள்ளன. இருப்பினும் நாங்கள் அதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. தரவுகளை சேகரித்து வருகிறோம்,” என்று பிபிசியிடம் பேசிய விஷ்வ ஹிந்து பரிஷத் செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சல் தெரிவித்தார்.

“நன்கு திட்டமிட்ட சதியின் ஒரு பகுதியாக எங்கள் யாத்திரை மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. ஏராளமான மக்கள் அங்கு சிக்கிக்கொண்டனர். அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவது நள்ளிரவு வரை தொடர்ந்தது,” என்றார் வினோத் பன்சல்.

“எங்கள் ஆட்கள் யாரும் இப்போது அங்கு சிக்கியிருக்கவில்லை. நிர்வாகமும், காவல்துறையும் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டனர்” என்று வினோத் பன்சல் குறிப்பிட்டார்.

மசூதி மீதான தாக்குதல் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த பன்சல், “எங்களுக்கு இதுபற்றித் தெரியாது. அது நடந்திருந்தால் அது மிகவும் வருத்தப்பட வேண்டிய ஒன்றாகும். இதன் பின்னணியில் சதி உள்ளதா என நிர்வாகம் விசாரிக்க வேண்டும்,” என்றார்.

மறுபுறம் ஹரியானாவில் நடந்த வன்முறைக்குப் பிறகு பேசிய மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ், “இந்த அளவுக்கு நடந்துள்ள வன்முறை, திடீரென்று நடந்தது அல்ல. இரு சமூகத்தினரும் நூஹ் பகுதியில் நீண்ட காலமாக அன்புடன் வாழ்ந்து வருகின்றனர். இங்கு யாரோ விஷத்தை விதைத்துள்ளனர். சிலர் திட்டமிட்டு சதி செய்துள்ளனர். நுழைவாயில் மற்றும் கூரைகளில் கற்கள், ஆயுதங்கள், தோட்டாக்கள் அனைத்தும் வைக்கப்பட்டிருந்ததை பார்க்கும்போது இது திடீரென்று நிகழ்ந்து அல்ல என்றே தோன்றுகிறது,” என்று கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/c97vn5n30q0o

  • கருத்துக்கள உறவுகள்

சண்டிகர், ஆக.1- ஹரியானா மாநிலத்தில் விஎச்பி நடத்திய மதக் கலவரத்திற்கு பலி யானோர் எண்ணிக்கை 5 ஆக அதி கரித்துள்ளது.  குர்கான் மாவட்டத்திலுள்ள நூஹ் என்ற பகுதியில் விஸ்வ ஹிந்து  பரிஷத்தும், அதன் இளைஞர் பிரி வான பஜ்ரங் தள் அமைப்பினரும் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா  என்ற பேரணியை ஜூலை 31 அன்று  நடத்தினர். பேரணியில் வந்தவர் கள், குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக  வெறுப்புக் கோஷங்களை எழுப்பி யபடியே சென்றுள்ளனர். இது  மற்றொரு பிரிவினரை ஆத்திர மூட்டும் நடவடிக்கையாக அமைந் துள்ளது. குர்கான் - ஆல்வார் இடையே கேட்லா மோட் பகுதியில்  பேரணி வந்தபோது, இதுதொடர் பாக சிலர் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இதையே தங்களுக்கு கிடைத்த  கலவர வாய்ப்பாக எடுத்துக் கொண்ட விஎச்பி கூட்டத்தினர், உட னடியாக மதவன்முறையில் இறங்கி யுள்ளனர். ஒருவருக்கொருவர் கற்  களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ள னர். வாகனங்கள், கடைகள், வீடு களை அடித்து நொறுக்கி தீவைத் துள்ளனர்.  கலவரக்காரர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டதில், ஊர்க்காவல் படை வீரர்கள் 2 பேர், உள்ளூர்காரர் ஒருவர் மற்றும் அடை யாளம் காணப்படாத ஒருவர் என  மொத்தம் 4 பேர் கொல்லப்பட்டனர்.

சுமார் 20-க்கும் மேற்பட்டோர் காய மடைந்தனர். வன்முறை கட்டுக்  கடங்காமல் போனதை அடுத்து,  போலீசார் கண்ணீர் புகைக் குண்டு களை வீசி கலவரக்காரர்களை கலைத்தனர். வன்முறை மேலும் பர வாமல் தடுக்கும் வகையில், நூஹ்,  குர்கான், பல்வால், பரிதாபாத் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தர வும் பிறப்பித்தனர்.   பள்ளிகள், கல்லூரிகள் மற்றும்  பயிற்சி மையங்கள் உள்ளிட்ட  அனைத்து கல்வி நிறுவனங்க ளுக்கும் மாவட்ட ஆட்சியர் நிஷாந்த்  குமார் யாதவ் செவ்வாயன்று விடு முறை அறிவித்தார். அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு, பல்வேறு பகுதிகளில் இணையதள சேவைகளும் 3 நாட்க ளுக்கு தடை செய்யப்பட்டன. இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருந்த போதிலும், செக் டார் 57-இல் உள்ள அஞ்சுமான் ஜமா  மசூதி செவ்வாய்கிழமை அதி காலை தீ வைக்கப்பட்டதுடன், அந்த  மசூதியில் இமாமாக பணியாற்றி வந்த 19 வயதேயான ஹபீஸ் சாத்  மற்றும் அவருடன் இருந்த மற் றொரு நபர் என இரண்டு பேர் கொடூரமாக தாக்கப்பட்டனர்.  இதில் 19 வயதேயான ஹபீஸ்  சாத் பரிதாபமான முறையில் இறந்தார். 80 பேர் கொண்ட கும்பல்,  செவ்வாயன்று அதிகாலை 12.10  மணியளவில் இந்த கொலைவெறி யாட்டத்தை நடத்தியுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலவரப் பலி எண்ணிக்கையும் 5 ஆக உயர்ந்துள்ளது.

https://theekkathir.in/News/states/ஹரியானா/5-killed-in-vhp-communal-riots-in-haryana

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தேர்தல் நெருங்கி கொண்டு இருப்பதால் அதட்கான பிஜேபி வேட்ப்பாளர் தேர்வுகள் நடந்துகொண்டிருக்கிறது. இந்தியாவில் நடக்கும் கலவரங்களில் கொலை , கொள்ளை, கட்பளிப்பு  போன்றவற்றில் ஈடுபடுவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதால் இப்படியான சம்பவங்களை தடுக்க முடியாது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹரியாணா கலவரம்: தலைமறைவான பசு பாதுகாவலர் மோனு யாதவ் மீது புகார்

03 AUG, 2023 | 12:47 PM
image
 

ஹரியாணாவில் வெடித்து வரும் மதக்கலவரத்துக்கு தலைமறைவாகி உள்ள பசு பாதுகாவலர் மோனு யாதவ்(30) காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஹரியாணாவின் மானேஸர் கிராமத்தை சேர்ந்தவர் மோனு மானேஸர் என்றழைக்கப்படும் மோஹித் யாதவ். இவரை மோனு யாதவ் என்று அழைக்கின்றனர். இவர் மேவாத்தின் பஜ்ரங்தளம் பசு பாதுகாவலர் படைக் குழுவின் தலைவராக உள்ளார்.

2 பேர் எரித்துக் கொலை: கடந்த 2016 பிப்ரவரியில் ராஜஸ்தானைச் சேர்ந்த நசீர் (27), ஜுனைத்(35) என்ற இருவர் எரித்துக் கொல்லப்பட்டனர். இவர்கள் பசுக்களை கடத்தியதாகக் கூறி, மோனு தலைமையிலான கும்பல், இருவரையும் கொன்றதாக வழக்கு பதிவாகி நடைபெறுகிறது. இது மட்டுமல்லாமல் ஹரியாணாவின் பட்டோடி கிராமம், குருகிராமிலும் இவர் மீது 2 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன.

மோனு யாதவ், தனது பாலிடெக்னிக் கல்வி முதல் பஜ்ரங் தளம் அமைப்பில் இணைந்து பணியாற்றி வருகிறார். இவர் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கு சுமார் 2 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர்.

முகநூலில் பிரபலம்: மேலும் இவரது முகநூல் பக்கத்தை சுமார் 83,000 பேர் பின்தொடர்கின்றனர். இதன் முகப்புகளில் மோனு துப்பாக்கி ஏந்தியபடியே காட்சி தருகிறார்.

இந்தச் சூழலில், கடந்த திங்கள்கிழமை குருகிராம்,  நூவில் நடைபெற்ற மதக்கலவரத்திலும் மோனு மீது புகார் கிளம்பி உள்ளது. இதற்கு அவர் விஎச்பியின் ‘ஷோபா யாத்ரா’ ஊர்வலம் துவங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக சமூகவலை தளங்களில் பதிவிட்ட காட்சிப்பதிவு காரணமாகிவிட்டது.

இதில் மோனு, விஎச்பி ஊர்வலத்துக்கு தன்னுடன் தம் மதத்தினர் திரளாகக் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்திருந்தார். எனினும், கடைசி நேரத்தில் மோனு இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

இருப்பினும், ஏற்கெனவே மோனு மீது அப்பகுதியின் முஸ்லிம்களுக்கு கடும் கோபம் நிலவி வந்தது. இந்த ஊர்வலத்துக்கு அவர் வரும் காட்சிப்பதிவு தகவலால், பதற்றம் உருவானது. இதையும் மீறி போலீஸார் அந்த ஊர்வலத்துக்கு அனுமதி அளித்திருந்தனர். தற்போது, கலவரம் தொடர்பான விசாரணைக்கு வராமல் மோனு யாதவ், தலைமறைவாக இருந்தபடி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.

எம்எல்ஏ.தான் காரணம்: இதுகுறித்து தனது மறுப்பில் மோனு யாதவ் கூறும்போது, ‘நான் வெளியிட்ட காட்சிப் பதிவில் நான் தவறாக எதுவும் கூறவில்லை. இப்பகுதியின் எம்எல்ஏவான சவுத்ரி அப்தாப் அகமதுவின் தூண்டுதல்தான் கலவரத்துக்குக் காரணம். 2019-ல் இருவர் கொலையிலும் என் மீது கொலை வழக்குப்பதிவாகி உள்ளது. நம் தாயான பசுக்களைப் பாதுகாப்போம். ஆனால், அதற்காக சட்டத்தை கையில் எடுக்க மாட்டோம். இங்கு எலி பலியானாலும் அதற்கு இந்த மோனுதான் காரணம் என்கிறார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கலவரத்தை கண்டித்து விஎச்பியினர் அருகில் உள்ள உ.பி.யின் காஜியாபாத், நொய்டா, பல்வால் மற்றும் டெல்லியின் சில பகுதிகளிலும் அனுமதியின்றி ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடத்தி உள்ளனர்.

இதனால், அப்பகுதிகளிலும் பதற்றம் நிலவுகிறது. ஹரியாணாவின் எல்லையில் அமைந்துள்ள டெல்லியின் மாவட்டப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

https://www.virakesari.lk/article/161546

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹரியாணா வன்முறை வெடித்தது எப்படி? 'பஜ்ரங் தள்' யாத்திரையில் நடந்தது என்ன? கள ஆய்வு

முக்கிய சாராம்சம்
  • ஜூலை 31 ஆம் தேதி ஹரியாணாவில் உள்ள நூஹ் நகரில் பஜ்ரங் தள் அமைப்பு ஒரு சமய ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
  • ஆயிரக்கணக்கான ஹரியாணா பஜ்ரங் தள் தொண்டர்களும், பக்தர்களும் இதில் பங்கேற்றனர்.
  • இந்த ஊர்வலம் நூஹ் பகுதியில் உள்ள கோவிலைக் கடந்தபோது கல்லெறிதல் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தீயிடல் ஆரம்பமானது.
  • நகரின் தெருக்களிலும் கோவிலுக்கு வெளியேயும் கும்பல் துப்பாக்கிச் சூடும் நடத்தியது
  • ஏராளமான மக்கள் கோயிலுக்குள் சிக்கியிருந்தனர், அவர்கள் நிர்வாகத்தின் உதவியுடன் பாதுகாப்பாக வெளியே அழைத்துச்செல்லப்பட்டனர்.
  • வன்முறையில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர், இதில் இரண்டு போலீசாரும் அடங்குவர்.
  • இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 90 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஹரியாணா வன்முறை வெடித்தது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

நல்ஹட்டில் உள்ள சிவன் கோவிலுக்கு வெளியே உள்ள சாலையில் ஒரு கும்பல் திங்கள்கிழமை பல வாகனங்களுக்கு தீ வைத்தது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், அபினவ் கோயல்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 4 ஆகஸ்ட் 2023

ஹரியாணாவின் நூஹ் மாவட்டத்தின் தெருக்கள் பொதுவாக பரபரப்புடன் காணப்படும். ஆனால் தற்போது தெருக்கள் வெறிச்சோடியுள்ளன. துணை ராணுவப் படைகள் ரோந்து செல்லும் ஓசை மட்டும் அங்கு கேட்கிறது.

தீயில் எரிந்த வாகனங்களை நிர்வாகம் சாலைகளில் இருந்து அகற்றிவிட்டபோதிலும், அவற்றின் அடையாளங்கள் நகரம் முழுவதும் பரவியுள்ளன. இது திங்களன்று வெடித்த வகுப்புவாத வன்முறைக்கு சாட்சியமளிக்கிறது.

அங்கு அமல் செய்யப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மூன்று நாட்களாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். கடைகளுக்கு வெளியே பூட்டுகள் தொங்குகின்றன. வெள்ளிக்கிழமை மதியம் ஊரடங்குச் உத்தரவு சிறிது நேரம் தளர்த்தப்பட்டது.

நூஹ்வில் வகுப்புவாத வன்முறை முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் சுற்றியுள்ள நகரங்களில் இருந்து தீயிடல் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாக நகரத்தில் இன்னும் பதற்றம் நீடிக்கிறது.

ஜூலை 31, திங்கட்கிழமையன்று, நூஹ் நகரம் நாள் முழுவதும் எரிந்து கொண்டிருந்தது. கூட்டத்தில் சிலர் வாள்கள், தடிகள் மற்றும் துப்பாக்கிகளை அசைப்பதைக் காண முடிந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நகரத்தின் தெருக்களில் அங்கும் இங்கும் ஓடுவதைக் காண முடிந்தது.

இந்த காட்சிகளை இங்குள்ளவர்கள் இதுவரை பார்த்ததில்லை. சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக இந்த பகுதியில் வெடித்த வகுப்புவாத வன்முறை, நூஹ்வின் பரஸ்பர சகோதரத்துவத்தின் மீது கரும்புள்ளிகளை ஏற்படுத்தியுள்ளது. அதை மறப்பதும், மனதில் இருந்து அழிப்பதும் அத்தனை சுலபமாக இருக்காது.

நகரில் திடீரென இந்த வன்முறை இவ்வளவு பெரிய அளவில் வெடித்தது எப்படி என்பதுதான் இப்போதைய கேள்வி.

இது நன்கு திட்டமிடப்பட்ட சதியா? இது எப்போது, எப்படி தொடங்கியது? இப்படி நடக்கும் என்ற சந்தேகம் நிர்வாகத்திற்கு இருந்ததா? உயிர், உடமை இழப்புகளைத் தடுத்திருக்க முடியுமா?

ஹரியாணா வன்முறை வெடித்தது எப்படி?

வகுப்புவாத வன்முறை எப்படி தொடங்கியது?

வகுப்புவாத வன்முறை வெடித்த நூஹ், ஹரியாணாவில் உள்ள ஒரு மாவட்டமாகும். இது ராஜஸ்தானுடன் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இந்த மாவட்டம், மேவாத் என்று அழைக்கப்படும் பெரிய பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும்.

மேவாத் பகுதியில் ஹரியாணா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தின் சில பகுதிகள் வருகின்றன. இவற்றில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.

இந்தப்பகுதி பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்தங்கிய பகுதிதான். ஆனாலும் வகுப்புவாத வன்முறை அல்லது கலவரம் போன்ற சம்பவங்கள் இங்கு நிகழ்ந்ததில்லை. ஆனால் திங்கட்கிழமை நடந்தது எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.

முதலில் என்ன நடந்தது என்று தெரிந்துகொள்வோம்.

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் (ஆர்எஸ்எஸ்) தொடர்புடைய அமைப்பான பஜ்ரங் தள் அழைப்புவிடுத்ததன் பேரில், பிரஜ்மண்டல் (மேவாத்) ஜலாபிஷேக யாத்திரைக்கு ஜூலை 31 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த யாத்திரையில் நல்ஹட் சிவன் கோவிலிலிருந்து 35 கிமீ தொலைவில் உள்ள ஃபிரோஸ்பூர் ஜிர்காவின் ஜிர் கோவிலையும், அங்கிருந்து 30 கிமீ தொலைவில் உள்ள புன்ஹானா கிருஷ்ணர் கோவிலையும் சென்றடைய திட்டமிடப்பட்டிருந்தது.

பஜ்ரங் தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகள், ஹரியாணா மாநிலத்தின் எல்லா மாவட்டங்களில் இருந்தும் தங்கள் தொண்டர்கள் மற்றும் பக்தர்களை இந்த யாத்திரையில் பங்கேற்க அழைத்திருந்தன.

நூஹ் நகரில் இருந்து 180 கிமீ தொலைவில் உள்ள பானிபத்தில் இருந்து காலை 6 மணிக்கு பேருந்தில் 50 பேர் புறப்பட்டோம். காலை 11 மணியளவில் நல்ஹட்டில் உள்ள சிவன் கோவிலை அடைந்தோம். ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு வந்திருந்தனர். 12 மணி வரை உணவு விநியோகம் மற்றும் ஜலாபிஷேக நிகழ்ச்சி நடந்தது,” என்று யாத்திரையில் பங்கேற்ற பானிபத்தில் வசிக்கும் பஜ்ரங் தள் தொண்டர் மகேஷ் குமார் கூறினார்.

மதியம் கோவிலுக்கு உள்ளேயும் வெளியேயும் கூட்டம் அதிகமாக இருந்தது. 50க்கும் மேற்பட்ட பேருந்துகள், கார்கள் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்தன. மக்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தனர்.

 
ஹரியாணா வன்முறை வெடித்தது எப்படி?

பட மூலாதாரம்,MANISHJALUI/BBC

 
படக்குறிப்பு,

நூஹ் பகுதியில் நல்ஹட்டில் உள்ள சிவன் கோவில்

'நாங்கள் முன்னோக்கிச் சென்றவுடன் கல்வீச்சு தொடங்கியது'

”பிற்பகல் 12.30 மணியளவில் பிரஜ்மண்டல் யாத்திரை ஃபிரோஸ்பூர் ஜிர்காவில் உள்ள ஜிர் மந்திருக்கு புறப்பட்டது. பேருந்துகளிலும் கார்களிலும் அமர்ந்து மக்கள் வெளியேறத் தொடங்கினர். நூற்றுக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் இதில் இருந்தனர். ஊர்வலம் சுமார் 2 கிலோமீட்டர் முன்னே சென்று பிரதான சாலையை அடைந்ததும் கல்வீச்சு ஆரம்பமானது,” என்று மகேஷ் குறிப்பிட்டார்.

"யாத்திரையில் ஈடுபட்டிருந்த மக்கள் பிரதான சாலையை அடைந்து மோனு மானேசர் ஜிந்தாபாத் என்ற கோஷங்களை எழுப்பினர். அதன் பிறகு வன்முறை வெடித்தது," என்று நூஹ்வின் உள்ளூர்வாசி முஸ்தஃபா கான் தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில் வைரலான யாத்திரையின் பல வீடியோக்களில் சிலர் 'மோனு மானேசர் ஜிந்தாபாத்' என்ற கோஷங்களை எழுப்புவதை பார்க்க முடிகிறது.

மோனு மானேசர் மீது மக்களுக்கு கோபம் இருந்தது. யாத்திரையில் ஈடுபட்டவர்கள் சமய முழக்கங்களை எழுப்பியதாகவும், இது சூழலைக் கெடுத்துவிட்டதாகவும் நூஹ்வின் உள்ளூர்வாசியான வாசிம் கான் கூறுகிறார்.

மோனு மானேசர் ஒரு வீடியோவை வெளியிட்டு வன்முறை குற்றச்சாட்டுகள் குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.

மேவாத்தின் சிறிய யூடியூபர்கள் சூழலை கெடுத்துவிட்டனர். மோனு மானேசர் வரமாட்டார் என்று காவல்துறை ஏற்கனவே செய்தியாளர்களிடம் கூறியது. அப்படி இருந்தும்கூட உள்ளூர் யூடியூபர்கள் சூழலைக் கெடுத்தனர்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

வன்முறைக்கு மூன்று நாட்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில் ஒரு வார்த்தை கூட தான் தவறாகப் பேசவில்லை என்றும் கடந்த ஆண்டுகளைப்போலவே யாத்திரையில் பெரிய அளவில் பங்கேற்க வேண்டும் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் மோனு மனேசர் கூறினார்.

பஜ்ரங் தள் ஆட்கள் மதியம் 1.30 மணியளவில் இங்கு வரத் தொடங்கினர். திடீரென்று கல் வீச்சு தொடங்கியது, சிலர் வாள்களுடன் என் கடைக்குள் நுழைந்து பொருட்களை அடித்து உடைக்கத்தொடங்கினர். என் ஊழியர்கள் எப்படியோ தங்கள் உயிரை காப்பாற்றிக்கொண்டனர். அந்தக் கும்பல் கடைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரைக் கொளுத்தியது,” என்று கல் வீச்சு தொடங்கிய இடத்தில் கடையை நடத்தும் சஞ்சய் குமார் தெரிவித்தார்.

மதியம் இரண்டு மணியளவில், நூஹ் தெருக்களில் தீ வைப்பு தொடங்கியது. யாத்திரையில் முன்னால் சென்றவர்கள் பிரதான சாலையில் சிக்கிக் கொண்டதால், நூற்றுக்கணக்கானோர் கோயிலுக்கு திரும்பிச் செல்லத்தொடங்கினர்.

 
ஹரியாணா வன்முறை வெடித்தது எப்படி?
 
படக்குறிப்பு,

கோயிலுக்கு வெளியே குண்டடிப்பட்ட காரணத்ததால் அபிஷேக் இறந்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் மரணம் என்ற குற்றச்சாட்டு

சாலையில் முன்னே போகும் வழியின் சூழல் மோசமாக உள்ளது என்று தெரிந்தவுடன் பேருந்தை மீண்டும் கோயில் நோக்கி திருப்பினோம். எங்கள் கண் எதிரில் வாகனங்கள் எரிக்கப்பட்டன. துப்பாக்கிச்சூடு நடந்தது. எப்படியோ உயிரைக் காப்பாற்றிக் கொண்டு கோவிலை நெருங்கினோம்,” என்று யாத்திரையில் கலந்துகொண்ட அனூப் கூறினார்.

பிற்பகலில் தொடங்கிய இந்த வன்முறை மாலை 5 மணியளவில் மீண்டும் தீவிரமடைந்ததாகவும், இம்முறை மக்கள் கூட்டம் சிவன் கோவிலை சூழ்ந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

"மாலையில் சூழ்நிலை இன்னும் மோசமாக மாறியது. வெளியே துப்பாக்கிச் சூடு நடந்தது, மக்கள் கோவிலில் தஞ்சம் அடைந்தனர்.அந்த நேரத்தில் கோவிலுக்குள் இரண்டாயிரம் முதல் இரண்டாயிரத்து ஐநூறு பேர் இருந்தனர்,”என்று நல்ஹட் சிவன் கோவிலின் பூசாரி பிபிசியிடம் தெரிவித்தார்.

அந்த நேரத்தில் தனது மாமா மகன் அபிஷேக்குடன் கோயிலுக்கு வெளியே இருந்ததாகவும், துப்பாக்கிச் சூட்டில் அபிஷேக் கொல்லப்பட்டதாகவும் பானிபத்தில் வசிக்கும் மகேஷ் கூறுகிறார். அதேநேரம் பிரேத பரிசோதனைக்கு பின்னரே மரணத்திற்கான காரணம் உறுதி செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவிலுக்கு அக்கம்பக்கம் முஸ்லிம்கள் பெரும்பான்மை எண்ணிக்கையில் வாழும் கிராமங்கள் உள்ளன. வன்முறைக்குப் பிறகு அங்கு நிசப்தம் பரவியது. காவல்துறை நடவடிக்கையின் அச்சம் காரணமாக பல முஸ்லிம் குடியிருப்புகள் காலியாகிவிட்டன. “வெளியில் இருந்து சில விஷமிகள் உள்ளூர் மக்கள் கூட்டத்திற்குள் நுழைந்தனர். இங்குள்ளவர்கள் யாரையும் துப்பாக்கியால் சுடவில்லை,” என்று துப்பாக்கிச்சூடு குறித்த கேள்விக்கு உள்ளுர் மக்கள் பதில் அளித்தனர்.

நூஹ்வில் தொடங்கிய வன்முறை பின்னிரவில் ஹரியாணாவின் சோஹ்னா மற்றும் குருகிராம் ஆகிய இடங்களை அடைந்தது. அங்கு கும்பல் பொருட்களை சேதப்படுத்தி, தீயிடலில் ஈடுபட்டது. மசூதியின் 22 வயதான நாயப் இமாம் முகமது சாத், இந்த வன்முறை கும்பலால் கொல்லப்பட்டார்.

இந்த வகுப்புவாத வன்முறையை ‘நன்கு திட்டமிடப்பட்ட சதி’ என்கிறார் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தச் சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரிந்தவுடன், டிஜிபி, ஏடிஜி, டிஜிபி சட்டம்-ஒழுங்கு மற்றும் அருகிலுள்ள மாவட்ட காவல்துறையினர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு அனுப்பினோம்,” என்றார்.

“சிலர் சதித்திட்டம் தீட்டி, யாத்திரை மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். யாத்திரை மட்டுமல்ல, காவல்துறையினரும் குறிவைக்கப்பட்டனர். அதன்பின் யாத்திரைக்கு இடையூறு ஏற்படுத்தினர். பல இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடந்தன. நிச்சயமாக இது ஒரு பெரிய சதித்திட்டத்தின் பகுதியாகவே தெரிகிறது."என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

அமைதியை நிலைநாட்டும் பொருட்டு, நூஹ்வில் துணை ராணுவப் படையின் 14 பிரிவுகளும், பல்வலில் 3, குருகிராமில் 2 மற்றும் ஃபரிதாபாத்தில் ஒரு பிரிவும் நிறுத்தப்பட்டுள்ளன என்று ஹரியாணா அரசு தெரிவித்தது.

வன்முறையில் இதுவரை 6 பேர் இறந்துள்ளனர். இதில் இரண்டு போலீசாரும் அடங்குவர். அதேநேரம் 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 90 பேர் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்,” என்றும் முதல்வர் கூறினார்.

இந்த வன்முறை தொடர்பாக காவல்துறை மற்றும் நிர்வாகம் மீது விஷ்வ ஹிந்து பரிஷத்தின் செயல் தலைவர் ஆலோக் குமார் கேள்வி எழுப்பியுள்ளார். “பிரிஜ் மண்டல் யாத்திரை ஆண்டுதோறும் நடக்கிறது. இருபதாயிரம் பேர் பங்கேற்கிறார்கள், இது அனைவருக்கும் தெரியும். காவல்துறை இதற்கு சரியான ஏற்பாடுகள் செய்யவில்லை. ஆனால் முஸ்லிம்கள் செய்தார்கள். பல நாட்களாக கற்கள் சேகரிக்கப்பட்டு வந்துள்ளது. திட்டம் தீட்டப்பட்டு வந்தது. யாத்திரை ஒரு கிலோமீட்டர் மட்டுமே செல்வதற்குள் தாக்குதல் நடந்தது. இது உளவு அமைப்புகளின் பெரிய தோல்வி,” என்று அவர் குறிப்பிட்டார்.

 
ஹரியாணா வன்முறை வெடித்தது எப்படி?
 
படக்குறிப்பு,

நூஹ்விலிருந்து தொடங்கிய வன்முறையின் மையமாக ஒரு பெயர் குறிப்பிடப்படுகிறது. அது மோனு மானேசர்.

வன்முறைக்கான காரணம் என்ன?

இந்த வகுப்புவாத வன்முறை தொடங்குவதற்கு முன்பே நூஹ் மக்களிடையே மிகுந்த கோபம் இருந்தது. சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்களும் இதற்கான காரணங்களில் ஒன்று. இந்த வீடியோக்கள் பஜ்ரங்தளத்தின் ஹரியாணா பசு பாதுகாப்பு அமைப்பின் தலைவர் மோனு மானேசர், பிட்டு பஜ்ரங்கி மற்றும் ஃபெரோஸ்பூர் ஜிர்காவின் காங்கிரஸ் எம்எல்ஏ மாமன் கான் ஆகியோர் வெளியிட்டவை.

“மேவாத் பிரஜ்மண்டல் யாத்திரை ஜூலை 31, திங்கட்கிழமை நடைபெறும் என்று எல்லா சகோதரர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொள்கிறேன். எல்லா சகோதரர்களும் இதில் பெரும் எண்ணிக்கையில் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும். மேவாத்தின் எல்லா கோவில்களுக்கும் அதிக எண்ணிக்கையில் வருகை தர வேண்டும். நானும் யாத்திரையில் கலந்துகொள்வேன். என் முழு குழுவும் இதில் ஈடுபடும்,” என்று ஒரு வீடியோவில், மோனு மானேசர் கூறுகிறார்.

மோனு மானேசர் மீது, மேவாத்தை சேர்ந்த நாஸிர் மற்றும் ஜுனைத் ஆகிய இரு இளைஞர்களின் கொலை உட்பட பல கடுமையான கிரிமினல் வழக்குகள் உள்ளன. மோனு மானேசரின் வீடியோக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவர் தலைமறைவாக இருப்பதாக காவல்துறை கூறுகிறது.

அத்தகைய ஒரு வீடியோ தன்னை பசு பாதுகாவலர் என்று கூறிக்கொள்ளும் பிட்டு பஜ்ரங்கியுடையது. அதில் அவர், “நான் வரும் இடத்தை முழுமையாக தெரியப்படுத்துவேன். இல்லையென்றால் நான் தெரிவிக்கவில்லை என்று சொல்வார்கள். இப்போது நான் பாலியில் இருக்கிறேன். சீக்கிரமே புறப்படுவேன். மலர் மாலையை தயாராக வைத்திருங்கள். எந்த பிரச்சனையும் இல்லை,” என்று அதி அவர் கூறியுள்ளார்.

இந்த வீடியோவில் பின்னால் இருந்து ' உங்கள் அண்ணன் வருகிறார்’ என்று ஒரு குரல் கேட்கிறது. அதை பிட்டு பஜ்ரங்கி ஒப்புக்கொள்வது போலத்தெரிகிறது.

ஒரு வீடியோவில், ஃபெரோஸ்பூர் ஜிர்காவின் காங்கிரஸ் எம்.எல்.ஏ மாமன் கான், சட்டப்பேரவையில் மோனு மானேசரை மிரட்டுகிறார். வன்முறைக்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய அவர் தனது அறிக்கையை தெளிவுபடுத்தினார். “நான் இந்த விஷயத்தை பகிரங்கமாகச் சொல்லவில்லை. சகோதரத்துவம் கெட்டுவிடாமல் இருக்க அவரை (மோனு மானேசர்) அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று நான் இதை அரசிடம் கூறியிருந்தேன்,” என்று அவர் சொன்னார்.

 
ஹரியாணா வன்முறை வெடித்தது எப்படி?

பட மூலாதாரம்,MANISH JALUI/BBC

 
படக்குறிப்பு,

திங்கட்கிழமை நூஹ் பகுதியில் தொடங்கிய வன்முறைக்குப்பிறகு மாலையில் சோஹ்னாவில் தீயிடல் சம்பவங்கள் நிகழ்ந்தன.

வன்முறைக்கு முன்பு இருந்த பயம்

வன்முறைக்கு முன்பாக இந்த மூன்று வீடியோக்களும் நூஹ் முழுவதும் விவாதிக்கப்பட்டன.

"மோனு மானேசர் மீது இங்குள்ள மக்களிடையே கோபம் உள்ளது. மூன்று நாட்களுக்கு முன் அந்த வீடியோவை வெளியிட்டு நான் யாத்திரைக்கு வருகிறேன் என்று கூறியிருந்தார். அவர் சூழலை சீர்குலைக்கும் வேலையைச் செய்துள்ளார்,"என்று பெயர் வெளியிடப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் ஒரு உள்ளுர்வாசி தெரிவித்தார்.

நூஹ் நகரில் வசிக்கும் உள்ளூர் மக்கள் இந்த பதற்றத்தை முன்பே உணர்ந்தனர்.

"இதுபோன்ற வீடியோக்களை வெளியிடுவதன் மூலம் சூழலைக் கெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வன்முறைக்கு முன்பே மக்கள் நிர்வாகத்திடம் கூறியுள்ளனர். ஆனால் காவல்துறை காட்டவேண்டிய உஷார்தன்மை ஏதும் காணப்படவில்லை,”என்று உள்ளூர்வாசி முஸ்தஃபா கான் தெரிவித்தார்.

யாத்திரை நாளில் எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க இரு தரப்பினரையும் உட்கார வைத்து நாங்கள் பேசினோம். மோனு மானேசர் யாத்திரையில் பங்கேற்கவில்லை என்றும் பத்திரிகைகள் வாயிலாக செய்தி வெளியிட்டோம்,” என்று நூஹ் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

வன்முறை வெடித்த நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தின் முன் காவல்துறையினரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது என்று அவர் கூறினார். இந்த சம்பவத்தில் பல போலீசாரும் காயம் அடைந்துள்ளனர்.

வன்முறையை தூண்டியதாக மோனு மானேசர் மீது சாட்டப்படுகிறது. அவரது பதிலைப் பெற பிபிசி பலமுறை தொலைபேசியில் அவரை தொடர்பு கொள்ள முயன்றது. ஆனால் அவர் பேசவில்லை.

ஹரியாணா வன்முறை வெடித்தது எப்படி?

பட மூலாதாரம்,MANISH JALUI/BBC

 
படக்குறிப்பு,

நூஹ்

மேவாத் ஏன் எரிகிறது?

மேவாத் மக்கள் மோனு மானேசர் மற்றும் பஜ்ரங் தள் குறித்து கோபத்தில் உள்ளனர். இதற்குக் காரணம் கடந்த பல ஆண்டுகளாக அப்பகுதியில் பசு பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய சம்பவங்கள் அதிகரித்து வருவதுதான்.

பிப்ரவரி மாதத்தில், ராஜஸ்தானின் பரத்பூரில் வசிக்கும் நாஸிர் மற்றும் ஜுனைத், சில பசு பாதுகாவலர்களால் எரித்துக் கொல்லப்பட்டனர்.

இதற்குப்பின்னணியில் மோனு மானேசரின் கை இருப்பதாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

இந்நிலையில் மோனு மானேசரை கைது செய்ய ராஜஸ்தான் போலீசார் பல மாதங்களாக முயற்சி செய்தும் அது பலனளிக்காத நிலையில் மோனு ஊடகங்களுக்கு வெளிப்படையாக பேட்டி அளித்து வருகிறார்.

இந்த சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு ஜனவரி மாதத்தில், நூஹ்வில் வசிக்கும் 21 வயதான வாரிஸ் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்தார். இந்த சம்பவத்திலும் பாதிக்கப்பட்ட குடும்பம் மோனு மானேசர் மீது கொலைக்குற்றம் சாட்டியது. சம்பவம் நடந்த அந்த இடத்தில், அந்த நேரத்தில் மோனு மானேசர் இருந்ததைக்காட்டும் படங்கள் வெளியாகியுள்ளன.

அப்போது பிபிசியிடம் பேசிய மோனு, "வாரிஸ் பசு மாடு கடத்தல் செய்து வந்தார். எங்கள் தொண்டர்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் சாலை விபத்தில் இறந்தார். விபத்து நடந்த சிறிது நேரத்திற்குப்பிறகு நான் சம்பவ இடத்தை அடைந்தேன். வாரிஸுக்கு டீ கொடுத்தேன். மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன்,” என்று கூறியிருந்தார்.

இந்த இரண்டு சம்பவங்களும் மேவாத் மக்களின் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்தியுள்ளன. அதை அவர்களால் மறக்க முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளாக, மோனு மானேசர் உள்ளிட்ட பசு பாதுகாவலர்கள் மீது தாக்குதல் மற்றும் வன்முறை குற்றச்சாட்டுகள் தொடர்ந்து சுமத்தப்பட்டு வருகின்றன. பஜ்ரங் தளத்துடன் தொடர்புடைய பசு பாதுகாவலர்கள் ஹரியாணா மாவட்டங்களில் தங்களுடைய சொந்தக் குழுக்களை உருவாக்கியுள்ளனர். கிடைக்கும் தகவலின் பேரில் அவர்கள் இரவு இருட்டில் பசு கடத்தல்காரர்கள் என்று சொல்லப்படுபவர்களை பிடிக்கிறார்கள்.

பசு பாதுகாவலர்களின் இலக்குகள் எப்போதும் முஸ்லிம்கள்தான் என்றும், இதனால் அப்பகுதியில் நீண்ட காலமாக அச்சத்தின் சூழல் நிலவுவதாகவும் மேவாத் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

பசு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மசோதாவை ஹரியாணா அரசு 2015ல் கொண்டு வந்தது. இது மிகவும் கடுமையான சட்டமாகும். இதில் 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும். எந்தச் சட்டத்தையும் அமல்படுத்துவது அரசு மற்றும் காவல்துறையின் பொறுப்பு. ஆனால் இதில் பசு பாதுகாவலர்களின் உதவியை அரசு எடுத்து வருகிறது. ஹரியாணா அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பசு பணிக்குழுவை உருவாக்கியுள்ளது. அதில் அரசு அதிகாரிகளுடன் இதுபோன்ற பசு பாதுகாவலர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்,” என்று மூத்த செய்தியாயாளர் ஹேமந்த் அத்ரி குறிப்பிட்டார்.

"பசு பாதுகாவலர்கள் என்று கூறப்படுபவர்கள் தொடர்பான சம்பவங்கள் மட்டுமல்லாது குருகிராமில் திறந்த வெளியில் நமாஸ் செய்து சூழல் சீர்குலைக்கப்பட்டதும் கூட, மேவாத்தின் அமைதிச் சூழலைக் கெடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்,” என்றார் அவர்.

 
ஹரியாணா வன்முறை வெடித்தது எப்படி?

பட மூலாதாரம்,MANISH JALUI/BBC

யாத்திரையில் விஎச்பியின் பங்கு

நூஹ்வில் உள்ள நல்ஹட் சிவன் கோவிலில் இருந்து மேவாத் பிரஜ் மண்டல் யாத்திரை தொடங்குவது இது முதல் முறையல்ல. இந்த யாத்திரை பல தசாப்தங்களாக நடந்து வருகிறது.

இந்த பகுதியில் மூன்று பெரிய இந்து கோவில்கள் இருப்பதாக உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக, உள்ளூர் இந்துக் குடும்பங்கள் இந்த மூன்று கோயில்களுக்கும் யாத்திரை செல்கின்றன. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த யாத்திரையின் வடிவம் மாறிவிட்டது.

இந்த யாத்திரை உள்ளூர் இந்துக் குடும்பங்களுடன் தொடர்புடையது. அது அவர்களின் நம்பிக்கை. ஆனால் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக இங்குள்ள முஸ்லிம்கள் மீது அழுத்தம் கொடுக்கும் விதமாக விஎச்பி மற்றும் பஜ்ரங்தளம் இந்த யாத்திரையில் வெளியில் இருந்து மக்களைத் திரட்டத் தொடங்கியது,” என்று மூத்த செய்தியாளர் ஹேமந்த் அத்ரி குறிப்பிட்டார்.

இந்த யாத்திரை மேவாத் மக்களுடையது. பானிபத், ஹிசார், பிவானி மற்றும் குருக்ஷேத்ரா போன்ற தொலைதூர மாவட்ட மக்கள் இதில் என்ன செய்கிறார்கள்? இது சதித்திட்டத்தின் கீழ் செய்யப்படுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் திரட்டப்படுகின்றனர்,” என்றார் அவர்.

முன்பும் யாத்திரை நடந்தது. ஆனால் நாங்கள் இந்த யாத்திரைக்கு ஒரு அமைப்பு வடிவத்தை அளித்தோம். மேவாத் இந்துக்கள் மட்டுமே இதில் செல்ல முடியும் என்று யாராவது சொன்னால், அது புனித யாத்திரைகளின் முக்கியத்துவத்தை அவமதிப்பதாக நான் நினைக்கிறேன்,” என்று விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச இணைப் பொதுச் செயலர் டாக்டர் சுரேந்திர ஜெயின், பிபிசியிடம் தெரிவித்தார்.

சுரேந்திர ஜெயின் யாத்திரை நாளில் கோவிலில் ஆத்திரமூட்டும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு உள்ளது.

"யாத்திரைக்கு முன், கோவில் வளாகத்தில் ஆத்திரமூட்டும் உரை நிகழ்த்தப்பட்டது. யாத்திரையில் கலந்துகொண்டவர்கள் ஏதாவது போருக்கு வந்தவர்களா, கையில் ஆயுதங்களுடன் அவர்கள் ஏன் வரவேண்டும்,” என்று மூத்த செய்தியாளர் ஹேமந்த் அத்ரி வினவினார்.

“நான் எந்த ஆத்திரமூட்டும் உரையையும் நிக்ழ்த்தவில்லை… பசுவைப் பாதுகாப்போம் என்றுதான் சொன்னேன்” என்கிறார் சுரேந்திர ஜெயின்.

ஒரு சமய யாத்திரையில் யாரும் ஆயுதங்களை எடுத்துச் செல்வதில்லை. ஆனால் உரிமம் உள்ளவர்கள் அவற்றைத் தங்களுடன் எடுத்துச் செல்கிறார்கள். உரிமம் பெற்ற ஆயுதங்களை மக்கள் வைத்திருந்தனர். அவர்கள் அதை பயன்படுத்தாமல் இருந்திருந்தால் பலர் இறந்திருப்பார்கள்,” என்று அவர் குறிப்பிட்டார்.

மேவாத்தின் சூழல் திட்டமிட்டு கெடுக்கப்படுகிறதா என்பதே இப்போதைய கேள்வி.

அது உண்மையானால் அதைத் தடுக்க அரசு என்ன செய்கிறது? அதைத் தடுக்க அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறதா?

https://www.bbc.com/tamil/articles/cm5jk2mvzpmo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நூஹ் வன்முறை: முஸ்லிம்களின் கட்டடங்களை இடிக்கும் 'அரசாங்க புல்டோசர்கள்' - கள நிலவரம்

நூஹ் கள நிலவரம்
 
படக்குறிப்பு,

பத்து பேர் கொண்ட குடும்பத்துக்கு வாழ்வளித்து வந்த முடிதிருத்தும் கடையை புல்டோசர் மூலம் மாவட்ட நிர்வாகம் இடித்துவிட்டதாக சமன்லால் கூறினார்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், தில்நவாஸ் பாஷா
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 28 நிமிடங்களுக்கு முன்னர்

கடந்த ஜூலை மாதம் 31ஆம் தேதியன்று, பஜ்ரங்தள் அமைப்பு ஹரியானாவின் நூஹ் என்ற இடத்தில் ஒரு மத யாத்திரைக்கு ஏற்பாடு செய்தது.

இந்த யாத்திரையில் ஆயிரக்கணக்கான பஜ்ரங்தள தொண்டர்களும் பக்தர்களும் கலந்து கொண்டனர்.

நூஹ் நகரில் உள்ள கோவிலில் இருந்து யாத்திரை சென்றபோது, சிறிது நேரத்தில் கல் வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் தொடங்கின.

நகரின் தெருக்களிலும் கோவிலுக்கு வெளியேயும் ஒரு கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

கோவிலுக்குள் ஏராளமானோர் சிக்கியிருந்த நிலையில், காவல்துறை உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டனர்.

நூஹ் நகரிலிருந்து தொடங்கிய வன்முறைக்குப் பிறகு உருவான பதற்றம், அதே நாள் மாலையில் ஹரியானாவில் சோஹ்னா மற்றும் குருகிராம் போன்ற பகுதிகளிலும் தொற்றிக்கொண்டது.

வன்முறையில் இதுவரை 2 ஊர்க்காவலர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து, இதுவரை 56 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தப் பகுதியில் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை இணையதள சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 
நூஹ் - கள நிலவரம்

பட மூலாதாரம்,PARVEEN KUMAR/HINDUSTAN TIMES VIA GETTY IMAGES

 
படக்குறிப்பு,

வன்முறை நடந்தபோது கற்கள் வீசப்பட்ட கட்டடங்களை, அவை விதிமீறிக் கட்டப்பட்டிருந்தால் புல்டோசர் மூலம் அழித்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குருகிராமில் வழக்கம் போல் நிலைமை கட்டுக்குள் இருக்கும் நிலையில், சோஹ்னாவை நோக்கி மேலும் நகர்ந்தால், அங்கே சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன.

நூஹ்வை அடைந்ததும் அங்கு அமைதி நிலவியது நன்றாகத் தெரிந்தது. ஆனால் பல்வேறு இடங்களில் ஆர்பிஎஃப், உள்ளூர் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நூஹ் பேருந்து நிலையத்தின் முன் புல்டோசர்களின் சத்தம் அங்கே நிலவிய அமைதியைக் குலைத்தது. இங்கும், சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், சாலையோரம் கட்டப்பட்டிருந்த தற்காலிக கடைகள் அனைத்தையும் நிர்வாகம் அகற்றியுள்ளது.

தகரம் மற்றும் இரும்புக் கம்பிகளால் ஆன சிறிய கடைகளை அழிக்க புல்டோசர் ஓட்டுநர் தயங்கியபோது, அங்கிருந்த ஒரு போலீஸ்காரர் அவரிடம், "இவையெல்லாம் அந்த யாத்திரையின்போது கற்களை வீசி வன்முறையைத் தூண்டியவர்களின் கடைகள். யாருக்கும் கருணை காட்டவேண்டாம். அவற்றை முழுவதுமாக அழித்துவிடு," என்று கூறினார்.

 

பக்கத்து கிராமத்தில் வசிக்கும் சமன்லால், தனது முடி வெட்டும் கடையை புல்டோசர் கொண்டு அகற்றியதை கண்ணீருடன் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அங்கிருந்து புல்டோசர் நகர்ந்து சென்ற பின்னர், சமன்லால் தனது முற்றிலும் உடைந்த கடையில் மீதமுள்ள பொருட்களை சேகரிக்கத் தொடங்கினார்.

"இந்தக் கடையை வட்டிக்குக் கடன் வாங்கி நான் நடத்தி வருகிறேன். இதில் வரும் வருமானத்தைக் கொண்டு பத்து பேர் கொண்ட குடும்பம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. கடையை இழந்ததன் காரணமாக நாங்கள் ரோட்டிற்கு வந்துவிட்டோம்.

இந்தக் கலவரத்தில் எங்கள் பங்கு என்ன என்பதற்காக இந்தத் தண்டனை எங்களுக்குக் கிடைத்துள்ளது?" என்று கேள்வி எழுப்பினார் சமன்லால்.

ஆனால், சட்டவிரோத கட்டுமானங்கள் மட்டுமே இடிக்கப்படுவதாக நூஹ் அதிகாரிகள் கூறுகின்றனர்.

நூஹ் மாவட்ட ஆட்சியர் திரேந்திர கத்கதா கூறுகையில், "காவல்துறையினர் அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சட்டவிரோதமான கட்டுமானங்கள் மட்டுமே இடிக்கப்படுகின்றன," என்றார்.

இந்த நடவடிக்கை தொடரும் என்று திரேந்திரன் கூறுகிறார்.

மறுபுறம், நூஹ் மாவட்ட திட்ட அதிகாரி வினேஷ் சிங் கூறுகையில், "கல்வீச்சு சம்பவம் நடந்த இடங்களில், எங்கிருந்து கற்கள் வீசப்பட்டனவோ, அந்த இடங்கள் குறிக்கப்பட்டுள்ளன. கல் வீச்சில் ஈடுபட்டவர்களின் கட்டுமானங்கள் இடிக்கப்படுகின்றன," என்றார்.

வினேஷ் சிங் கூறுகையில், சனிக்கிழமையன்று இங்கு 45 முழுநேர கடைகள், பல தற்காலிக கடைகள் மற்றும் சில வீடுகள் இடிக்கப்பட்டன என்றார்.

நூஹ் - கள நிலவரம்
 
படக்குறிப்பு,

பத்து பேர் கொண்ட குடும்பத்துக்கு வாழ்வளித்து வந்த முடிதிருத்தும் கடையை புல்டோசர் மூலம் மாவட்ட நிர்வாகம் இடித்துவிட்டதாக சமன்லால் கூறினார்

"நாங்கள் அழிக்கப்படுகிறோம். அடுத்து என்ன செய்வது என்றே எங்களுக்குத் தெரியவில்லை," என்றார் நூஹ் பேருந்து நிலையத்தின் முன் தண்ணீர், குளிர்பானங்கள் விற்று வந்த யூசுஃப் அலி.

நூஹ்வில் உள்ள மோர் மருத்துவக் கல்லூரி அருகே ஒரு மூன்று மாடி வீடு மற்றும் பள்ளி கட்டடத்தையும் புல்டோசர்கள் இடித்துத் தள்ளின.

இதுபற்றி வினேஷ் சிங் கூறியபோது, "இந்த கட்டடத்தில் இருந்து கற்கள் வீசப்பட்டன. அத்தகைய கட்டடங்கள் அனைத்தும் அடையாளப்படுத்தப்பட்டு அழிக்கப்படுகின்றன," என்றார்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தகர்க்கப்பட்ட கட்டடத்தில் ஒரு உணவு விடுதியும் செயல்பட்டு வந்தது.

இந்த கட்டடத்தின் உரிமையாளர்கள் தற்போது பரிதாபகரமான நிலையில் உள்ளனர். கட்டட உரிமையாளரின் இளைய சகோதரரான சர்ஃபராஸ் பிபிசியிடம் பேசியபோது, " கட்டடத்தை இடிப்பது தொடர்பாக நிர்வாகத்திடம் இருந்து எங்களுக்கு எந்த அறிவிப்பும் அளிக்கப்படவில்லை. 2016இல் கட்டட விதிமீறல் குறித்து எங்களுக்கு ஒருமுறை நோட்டீஸ் வந்தது. அதன்பிறகு மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அபராதம் செலுத்தினோம். அதன்பிறகு எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல்தான் இருந்தது," என்றார்.

சர்ஃபராஸ் மேலும் பேசியபோது, "இந்த கட்டடத்தை வாடகைக்குக் கொடுத்துள்ளோம். இங்கு உணவகம் நடத்தி வரும் ஜாவேத், கல் வீச்சுக்காரர்களை கட்டடத்தின் மீது ஏறவிடாமல் தடுத்ததாக எங்களிடம் கூறியுள்ளார். ஆனால், அந்த வன்முறைக் கும்பல் அவரை மீறி கட்டடத்தின் மீது ஏறி கல்வீச்சில் ஈடுபட்டது," என்றார்.

"எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த யாராவது வன்முறையில் ஈடுபட்டிருந்தால், நிர்வாகத்தின் இதுபோன்ற செய்கையைச் சரியானது எனக் கருதலாம். ஆனால் நாங்கள் வன்முறையில் ஈடுபடவில்லை.

யாரோ சிலர் இந்த கட்டடத்தின் மீது ஏறி கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும்? நிர்வாகம் ஒருதலை பட்சமாக நடவடிக்கை எடுத்து எங்கள் கட்டடத்தை இடித்துள்ளது," என்று அவர் கூறினார்.

நூஹ் - கள நிலவரம்
 
படக்குறிப்பு,

எந்தவித முன்னறிவிப்பும் கொடுக்காமல் கட்டடங்கள் இடிக்கப்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஆனால், நிர்வாகத்தின் இந்த கட்டட இடிப்பு நடவடிக்கைக்கு எதிராக, பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் கதவைத் தட்டுவார்களா?

இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க சற்றுத் தயங்கிய சர்ஃபராஸ், "காவல்துறை, நிர்வாகம், நீதிமன்றங்கள், அரசியல்வாதிகள் அனைவரும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையைத்தான் எடுக்கிறார்கள். இதில் ஏதாவது நம்பிக்கை இருந்திருந்தால், நீதிமன்றத்தை நாட முடிவெடுத்திருக்கலாம். ஆனால் இந்த மோசமான சூழ்நிலையில் நாங்கள் எங்கே போவது? எங்கள் பேச்சை யார் கேட்பார்கள்?" எனக் கேள்வி எழுப்பினார்.

நல்ஹர் மருத்துவக் கல்லூரிக்கு வெளியே உள்ள சந்தை தற்போது தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

இங்கு சுமார் 45 கடைகள் இருந்தன. இவையனைத்தும் சனிக்கிழமை காலையிலேயே இடிக்கப்பட்டன. தற்போது இங்கு எஞ்சியுள்ள குப்பைகளில் இருந்து மக்கள் தங்கள் உடைமைகளைத் தேடி வருகின்றனர்.

முசைப் என்ற 20 வயது நபர் இங்கு ஹைப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார். அவருடைய விற்பனையகமும் இடிக்கப்பட்ட செய்தியை ஊடகங்கள் மூலம் அவர் தெரிந்துகொண்டார்.

அவர் இங்கு வருவதற்குள், அவரது கடை முற்றிலும் தகர்க்கப்பட்டு சேதத்துக்கு உள்ளாக்கப்பட்டது.

"எனது தந்தை தனது சேமிப்பை முதலீடு செய்து இந்தக் கடையை உருவாக்க எனக்கு உதவினார். இந்தக் கடை மூலம் மாதம் 20 முதல் 30 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்தது. இந்த கடையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இருந்தன. இப்போது அனைத்தும் நாசமாகிவிட்டன," என்று முசைப் வேதனை தெரிவித்தார்.

"ஜூலை 31ஆம் தேதி அந்த யாத்திரை இங்கு வருவதற்கு முன்பாகவே, நாங்கள் கடையை மூடிவிட்டு கிளம்பிவிட்டோம். இங்கு எந்த வன்முறையும் இல்லை. இருப்பினும், நிர்வாகம் இந்த சந்தையை இடித்துவிட்டது," என்று முசைப் கூறினார்.

அடுத்து அவர் என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து எதுவும் தெரியவில்லை என்று கூறும் முசைப்பின் கண்களில் கண்ணீரும், மனதில் கோபமும் தெரிகிறது.

சிறிது இடைவெளி விட்டு மீண்டும் பேசிய அவர், "இந்தக் கடையைத் திறப்பதற்காக நான் என் படிப்பை விட்டுவிட்டு வந்தேன். இப்போது எல்லாம் நாசமாகிவிட்டது, அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை," என்றார்.

நூஹ் - கள நிலவரம்
 
படக்குறிப்பு,

இடிக்கப்பட்ட தனது கடையில் மிச்சமிருக்கும் பொருட்களை சேகரித்துக்கொண்டிருந்தார் முசைப்

ஹதினில் வசிக்கும் ஹர்கேஷ் ஷர்மா என்பவர், நூஹ் நகரில் ஹாரி ஜெர்ரிஸ் பீசாவின் கிளையைத் தொடங்கி அதை நடத்தி வந்தார். அவரது அந்த உணவகம் வன்முறையாளர்களால் சூறையாடப்பட்டது.

தற்போது மருத்துவக் கல்லூரி எதிரில் உள்ள இந்த உணவகத்தை நிர்வாகம் புல்டோசர் மூலம் இடித்துள்ளது.

ஹர்கேஷ் ஷர்மா கூறுகையில், "இந்த கட்டடம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது என்று கூறி, புல்டோசர் மூலம் அரசு இடித்துத் தள்ளியுள்ளது. ஆனால் இதுதொடர்பாக எந்த முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை," என்றார்.

"முறையாக முன்னறிவிப்பு வழங்கப்பட்டிருந்தால் குறைந்தபட்சம் எனது உடைமைகளையாவது இங்கிருந்து நான் எடுத்துச் சென்றிருப்பேன். இந்த கட்டடம் சட்டத்திற்குப் புறம்பானது என்றால், இங்கு ஒரு மின் மீட்டரை பொருத்த அரசு எந்த அடிப்படையில் அனுமதி அளித்தது? இந்த கட்டடத்தின் மீது வாடகை ஒப்பந்தம் ஏற்படுத்தியதை அரசு எப்படி ஏற்றுக்கொண்டது?"

இந்த வகுப்புவாத வன்முறையில் ஹர்கேஷ் ஷர்மாவுக்கு இரண்டு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த பாதிப்புகளைக் கடந்து, "கலவரக்காரர்களை அடையாளம் கண்டு, சம்பந்தப்பட்டவர்களையோ அல்லது கல் வீசியவர்களையோ மட்டும் அரசு தண்டித்திருந்தால், அரசு சரியாகச் செயல்படுகிறது என்று நாம் கருத முடியும். ஆனால், இங்கே அரசு எதையும் சரிபார்க்காமல் அனைத்தையும் நாசமாக்கியுள்ளது," என்றார் அவர்.

நூஹ் - கள நிலவரம்
 
படக்குறிப்பு,

குறைந்தது முன்னறிவிப்பு கொடுத்திருந்தால் தமது பொருட்களை முன்கூட்டியே எடுத்துச் சென்றிருக்க முடியும் என்கிறார் உணவக உரிமையாளர் ஹர்கேஷ் ஷர்மா.

'இங்கு கடந்த பத்து ஆண்டுகளாக வழக்கறிஞர் கான் என்பவர் தனது அலுவலகத்தை நடத்தி வருகிறார். கட்டட இடிப்பு குறித்து ஊடகங்கள் மூலம் தெரிந்துகொண்டு இங்கு அவர் வந்து பார்த்தபோது, அவரது அலுவலகமும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டிருந்தது.

அந்த இடிபாடுகளின் மீது வேதனையுடன் நின்றுகொண்டிருந்த வழக்கறிஞர் கான், "எங்களுக்கு அவகாசம் கொடுத்திருந்தால், எங்களது பொருட்களை அகற்றியிருப்போம். நாங்கள் வாடகைக்குத்தான் இந்த கட்டடத்தைப் பயன்படுத்தி வந்தோம். இதில் எங்கள் தவறு என்ன இருக்கிறது?" எனக் கேட்டார்.

வழக்கறிஞர் கான் பேசியபோது, "எனக்கு பெரிய அளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்று கூடக் கருதமுடியாது. ஆனால் இங்கிருந்த 6 மருந்து கடைகளும் இடிக்கப்பட்டுள்ளன. அந்தக் கடைகளில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் இருந்தன.

அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மையம் ஒன்றும் இடிக்கப்பட்டது. அதில் விலை உயர்ந்த இயந்திரங்கள்கூட இருந்தன. இதேபோல் ஒரு எக்ஸ்ரே மையமும் இடிக்கப்பட்டது. அங்கே இருந்த ஒரு விலையுயர்ந்த இயந்திரமும் உடைக்கப்பட்டுள்ளது. நிர்வாகம் யாருக்கும் எந்த கால அவகாசமும் கொடுக்கவில்லை," என்றார்.

மருத்துவக் கல்லூரிக்கு வெளியே இடிக்கப்பட்ட கடைகள் வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டவை என்று நிர்வாகம் கூறுகிறது.

மாவட்ட ஆட்சியர் திரேந்திர கர்கடா கூறுகையில், "இது வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்ட கட்டுமானம். இந்த கட்டட உரிமையாளர்களுக்கு ஏற்கெனவே போதுமான முன்னறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது," என்றார்.

நூஹ் - கள நிலவரம்
 
படக்குறிப்பு,

வழக்கறிஞர் கானின் கட்டடமும் மாவட்ட நிர்வாகத்தால் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது.

அதே நேரம், இங்கு இடிக்கப்பட்ட பதினைந்து கடைகளின் உரிமையாளர்களான முகமது சவுதி மற்றும் அவரது தம்பி நவாப் ஷேக் ஆகியோர், அவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்ட கட்டடங்களும் வன்முறைகளைக் காரணம் காட்டி இடிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

"இன்று காலை எட்டு மணிக்கு கடைகள் இடிக்கப்பட்டன. எங்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இவை எங்கள் குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்ட கடைகள். நிர்வாகம் தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டு, இந்தக் கடைகளை இடித்துள்ளது," என்றார் முகமது சவுதி.

சவுதி பேசியபோது, "எங்களிடம் சொத்து குறித்த உரிய ஆவணங்கள் உள்ளன. இங்கு எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ஏற்கெனவே அரசுக்குத் தடை விதித்திருந்தன.

ஆனால், தற்போது வன்முறை என்ற அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நிர்வாகம் எங்கள் கடைகளை இடித்துள்ளது. சொத்து ஆவணங்களை காட்டக்கூட எங்களுக்கு அவகாசம் கொடுக்கப்படவில்லை," என்றார்.

இந்த நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்போவதாக சவுதி தெரிவித்துள்ளார். சவுதியின் இளைய சகோதரர் நவாப் ஷேக் தனது கடைகள் இடிக்கப்படுவதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

நவாப் ஷேக் திணறிய குரலில் கூறினார், "கலவரத்தின்போது எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இங்கு இல்லை. அரசாங்கம் எங்களை அழித்துவிட்டது. கட்டடங்களை இடித்த நபர்களைத் தடுக்க நான் முயன்றபோது, காவல்துறை என்னை இங்கிருந்து இழுத்துச் சென்றது. இதை வைத்து தான் நாங்களும், எங்கள் குழந்தைகளும் வாழ்க்கையை நடத்தி வந்தோம். இப்போது நாங்கள் எங்கு செல்வது?"

ஷேக் தொடர்ந்து கூறுகையில், "எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கவில்லை. நாங்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுகிறோம். பொது மக்களுக்கு அரசு நல்லது செய்யவேண்டும். ஆனால் இங்கே அரசு எங்களை அழிக்கிறது.

இந்த அரசு எங்களை அழித்துவிட்டது. இதனால் எங்கள் வீட்டில் துயரம் பீடித்துள்ளது. நாங்கள் இனி சாப்பாட்டிற்கு என்ன செய்வோம்? இந்தக் கடைகளை மீண்டும் கட்டுவதற்கு எங்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கும்?" என்று கேட்கிறார்.

நூஹ் - கள நிலவரம்
 
படக்குறிப்பு,

வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்கள் மட்டுமே இடிக்கப்பட்டன என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உடைந்து கிடக்கும் கடைகளைப் பார்க்க நகரிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வருகின்றனர். அசோக்குமார் தனது நண்பர்கள் சிலருடன் இங்கு வந்திருந்தார்.

புல்டோசர்களின் கட்டட இடிப்புக்கு ஆதரவு தெரிவித்த அசோக் குமார், "அரசு செய்தது முற்றிலும் சரி. இந்த கலவரக்காரர்களுக்கு இதுபோன்ற பாடம் கற்பிக்கப்படுவதுதான் சிறந்த நடவடிக்கையாக இருக்கும்," என்று கூறினார்.

தொடர்ந்து பேசுகையில், "இதைக் கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்துக்களுக்கு சொந்தமான எந்த சொத்துகளும் சேதப்படுத்தப்படவில்லை. ஆனால் அவர்கள் வாடகைக்கு இருந்த கட்டடங்கள் மட்டுமே சேதப்படுத்தப்பட்டன," என்றார்.

நூஹ் - நல்ஹார் இணைப்பு சாலையில் வகுப்புவாத வன்முறை நடந்துள்ளது. மேலும் இந்த சாலையில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் நிர்வாகம் கட்டடங்களை இடித்து வருகிறது.

இந்த சாலையில் 100% நிலையான சொத்துகள் முஸ்லிம்களுக்கு சொந்தமானவை. இந்த கட்டடங்களில் இந்துக்களும் வாடகைக்கு வியாபாரம் செய்து வந்தனர்.

அசோக்குமாருடன் வந்த பிரமோத் கோயல், "இதுவரை இதுபோல் ஒரு கலவரம் நடந்ததே இல்லை. அப்படி இதுவரை நடக்காத கலவரம் தற்போது நடந்துள்ளது. அது ஒரு திட்டமிட்ட கலவரம் என்பதே உண்மை. விதிகளை மீறி கட்டப்பட்ட கடைகளை மட்டுமே நிர்வாகம் இடித்துள்ளது. நிர்வாகம் இதுபோன்ற நடவடிக்கை எடுப்பதில் மிக்க மகிழ்ச்சி," என்றார்.

ஞாயிற்றுக்கிழமையும் நூஹ் நகரில் புல்டோசர் மூலம் கட்டட இடிப்பு பணிகள் நடந்துகொண்டிருந்தன. இந்த நடவடிக்கை தொடரும் என மாவட்ட ஆட்சியர் திரேந்திர கர்கடா தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cz7j96954n5o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹரியாணா: முஸ்லிம்களை காத்த சீக்கியர்கள் - தாக்கப்பட்ட மசூதிக்குள் பெண்களை பாதுகாத்தது எப்படி?

முஸ்லிம்களை காத்த சீக்கியர்கள்
 
படக்குறிப்பு,

சோஹ்னாவின் ஜமா மசூதி

கட்டுரை தகவல்
  • எழுதியவர், தில்நவாஸ் பாஷா
  • பதவி, பிபிசி செய்தியாளர், சோஹ்னாவிலிருந்து
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
முஸ்லிம்களை காத்த சீக்கியர்கள்
 
படக்குறிப்பு,

மசூதியின் இமாம் கலீம் காஷ்ஃபியின் குடும்பத்தினர் அருகில் உள்ள கிராமங்களில் தஞ்சமடைந்துள்ளனர்

ஜூலை 31 ஆம் தேதி ஹரியாணா மாநிலம் நூஹ் பகுதியில் நேரிட்ட வகுப்புவாத வன்முறையைத் தொடர்ந்து சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது.

இங்கிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோஹ்னாவிலும் நிலைமை பதற்றமாக இருந்தது.

நகரின் மிகப் பெரிய மசூதியும், இந்த வட்டாரத்தில் உள்ள மிகப்பழமையான மசூதிகளில் ஒன்றுமான ஷாஹி ஜமா மசூதியின் இமாம் கலீம் காஷ்ஃபிக்கு, ஏதோ நடக்கப் போகிறது என்ற உள்ளுணர்வு ஏற்பட்டது.

ஆனால் தனது குடும்பம் பல தசாப்தங்களாக வாழும் பகுதியில் தங்களுக்கு ஏதாவது நடக்கக்கூடும் என்பதை நம்புவதற்கு அவரது இதயம் தயாராக இல்லை.

நூஹ்வின் நிகழ்வுகளுக்குப் பிறகு கலீம் காஷ்ஃபி எச்சரிக்கையானார். சில நாட்களுக்கு வேறு பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு சுற்றியிருந்தவர்களும் அறிவுறுத்தினர்.

ஆனால் ஆகஸ்ட் 1 ஆம் தேதி சோஹ்னாவில் அமைதிக் குழுவின் (பல்வேறு மதங்களின் தலைவர்கள் மற்றும் காவல்துறை நிர்வாகத்தின் தலைவர்கள் அடங்கிய குழு) கூட்டம் நடைபெற்றது. நகரத்தில் சகோதரத்துவத்தை பராமரிக்க ஒன்றிணைந்து செயல்பட அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இமாம் கலீம் காஷ்ஃபியின் குடும்பத்தை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்ப வேண்டும் என்று இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிராந்திய கவுன்ஸிலரின் கணவர் குர்வச்சன் சிங் முன்பே எச்சரித்திருந்தார்.

ஆனால் 'இப்போது நிலைமை மேம்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன' என்று கூட்டத்திற்குப்பிறகு கலீம் காஷ்ஃபியிடம் அவர் கூறினார்.

 
முஸ்லிம்களை காத்த சீக்கியர்கள்
 
படக்குறிப்பு,

தாக்குதலில் சேதமடைந்த வாகனம்.

கும்பல் மசூதியைத் தாக்கிய போது நடந்தது என்ன?

இமாம் மற்றும் அவரது சகோதரர்களின் குடும்பங்கள் ஷாஹி மசூதி வளாகத்தின் ஒரு பகுதியில் வசிக்கின்றன.

நூஹ்வில் நடந்த சம்பவத்தையடுத்து மசூதியின் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

நிர்வாகமும் சுற்றியிருந்த மக்களும் எங்களுடைய பாதுகாப்பிற்கு உறுதியளித்தனர். போலீஸாரும் அங்கே இருந்ததால் எங்கள் பயத்தை ஒதுக்கிவிட்டு நாங்கள் குடும்பத்துடன் இங்கே தொடர்ந்து இருந்தோம்,” என்று கலீம் காஷ்ஃபி கூறினார்.

சோஹ்னாவில் குறைந்த அளவு முஸ்லிம்களே உள்ளனர். ஷாஹி ஜமா மசூதியைச் சுற்றி முஸ்லிம்களின் சில வீடுகளே உள்ளன.

மசூதியின் இமாமின் கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 40 பேரைத் தவிர அக்கம்பக்கத்தில் ஒரு சில முஸ்லிம்கள் மட்டுமே உள்ளனர்.

ஷாஹி ஜமா மசூதியின் சரியான வரலாறு கிடைப்பதற்கு இல்லை. ஆனால் கட்டிடத்தைப் பார்த்தால், இந்த மசூதி பல நூற்றாண்டுகள் பழமையானது என்று தெரிகிறது.

 

முஸ்லிம்களை காத்த சீக்கியர்கள்
 
படக்குறிப்பு,

மசூதி தாக்கப்பட்டபோது அங்கு சிக்கியிருந்தவர்களைக் காப்பாற்ற சீக்கியர்கள் வந்தனர் என்கிறார் குர்வச்சன் சிங்.

இந்த மசூதி பேரரசர் அலாவுதீன் கில்ஜியின் உத்தரவின் பேரில் கட்டப்பட்டது என்று இமாம் கலீம் காஷ்ஃபி தெரிவிக்கிறார்.

மூன்று பெரிய குவிமாடங்கள் கொண்ட இந்த மசூதி உயரமான இடத்தில் கட்டப்பட்டுள்ளது.

அதன் ஒரு பக்கத்தில் பன்னிரெண்டு தூண்களைக் கொண்ட ஒரு பெரிய குவிமாடம் மற்றும் அதை ஒட்டி கல்லறை போன்ற ஒரு கட்டிடம் உள்ளது. அதில் இமாமும் அவரது குடும்ப உறுப்பினர்களும் இப்போது வசிக்கின்றனர்.

செவ்வாய்கிழமை மதியம் சுமார் ஒரு மணியளவில் இமாம் காஷ்ஃபிக்கு, மசூதி தாக்கப்படலாம் என்ற தகவல் வர ஆரம்பித்தது.

அவர் தனது குடும்பத்தினரை அறைகளில் பூட்டி வைத்தார்.

மதியம் ஒரு மணியளவில் சில இளைஞர்கள் மசூதிக்குள் நுழைய முயன்றபோது போலீசார் அவர்களை விரட்டியடித்தனர்.

இரண்டு மூன்று இளைஞர்கள் மசூதியின் சுவரைத் தாண்டி குதித்து உள்ளே வந்தபோது போலீஸார் அவர்களை விரட்டியடித்தனர். இது குறித்து உடனடியாக உள்ளூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தோம். காவல் நிலைய உயர் அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து மசூதியைத் தாக்க வந்த இளைஞர்களின் சிறிய குழுவை விரட்டியடித்தார்,” என்று கலீம் காஷ்ஃபி தெரிவித்தார்.

 
முஸ்லிம்களை காத்த சீக்கியர்கள்
 
படக்குறிப்பு,

சோஹ்னாவின் ஜமா மசூதி.

ஆனால் சில நிமிடங்களுக்குப்பிறகு ஒரு பெரிய கூட்டம் மறுபக்கத்திலிருந்து மசூதியைத் தாக்கியது. போலீஸாரால் எதுவுமே செய்ய முடியவில்லை.”

இளைஞர்கள் கூட்டம் முன்னோக்கி நகர்ந்தபோது மசூதி வளாகத்தில் காஷ்ஃபியின் சகோதரரின் மகன் சாதிக் இருந்தார்.

கூட்டத்தை பார்த்ததும் அவர் குடியிருப்பு பகுதியின் கதவை மூடிவிட்டார். கும்பல் தாக்குவதை தனது வீட்டின் சமையலறையில் போடப்பட்டிருந்த வலை ஜன்னல் வழியாக அவர் பார்த்துக் கொண்டிருந்தார்.

வீட்டின் பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பற்றி நாங்கள் கவலைப்பட்டோம். தாக்குபவர்கள் அவர்களைப் பார்க்க முடியாதபடி உள்ளே இருந்து கதவை மூடி அவர்களை குவிமாடத்தின் மேல் ஒளித்து வைத்தோம். உள்ளே யாரும் இல்லை என்று கூட்டம் நினைக்கும் வகையில் வெளியில் இருந்து கதவைப் பூட்டிவிட்டோம்” என்று சாதிக் தெரிவித்தார்.

முஸ்லிம்களை காத்த சீக்கியர்கள்
 
படக்குறிப்பு,

தாக்குதலுக்குப் பிறகு சாதிக் அலுவலகம் செல்வதில்லை

மசூதி மீது நடத்தப்பட்ட தாக்குதலின் ஒரு சிறிய வீடியோவையும் சாதிக் எடுத்தார். தாக்குதல் நடத்தியவர்கள் கைகளில் ஆயுதங்களுடன் மசூதியை சேதப்படுத்துவதை இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.

இதற்குள் இமாம் மற்றும் அவரது குடும்பத்தினர் மசூதியில் சிக்கியுள்ள செய்தி உள்ளூர் கவுன்ஸிலரின் கணவர் குர்வச்சன் சிங்குக்கு தெரியவந்தது.

அவர் உடனே அருகிலிருந்த சீக்கிய இளைஞர்களை திரட்டி மசூதியை நோக்கிச் சென்றார்.

'உயிர்களைக் காப்பாற்றுவது எங்கள் மிகப்பெரிய கடமை'

உள்ளூர் போலீஸார் கலவரக்காரர்களின் கும்பலை கலைக்க முயன்றனர். ஆனால் போலீஸாரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. நாங்கள் முன்னேறிச் செல்வதைப் பார்த்து போலீஸாரும் உற்சாகமடைந்தனர். நாங்கள் மசூதி வளாகத்திற்குள் நுழைவதற்குள், கலவரக்காரர்கள் தப்பி ஓடிவிட்டனர்,” என்று குர்வச்சன் விளக்கினார்.

நாங்கள் போலீஸாருடன் சேர்ந்து இமாம் மற்றும் அவரது குடும்பத்தினரை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றோம். இமாம் எங்களுடன் இருக்க விரும்பினால் அவர் தாராளமாகத் தங்கலாம் என்று கூறினோம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் போது குர்வச்சன் சிங்கிற்கு பயம் ஏற்பட்டதா?

இந்தக்கேள்விக்கு பதிலளித்த அவர், “உயிர்களைக் காப்பாற்றுவது எங்கள் மிகப்பெரிய கடமை. சிறு வயதிலிருந்தே இமாமையும் அவரது குடும்பத்தினரையும் எங்களுக்குத் தெரியும். நாங்கள் எங்கள் கடமையைச் செய்தோம்,” என்றார்.

மசூதியில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் கணிசமான எண்ணிக்கையில் சீக்கியர்கள் வாழ்கின்றனர். இங்கு சுமார் 300 சீக்கிய குடும்பங்களும் ஒரு பெரிய குருத்வாராவும் உள்ளது.

முஸ்லிம் சகோதரர்களின் உயிருக்கு ஆபத்து என்பதால் இங்குள்ள சீக்கியர்கள் அவர்களுக்கு உதவச் சென்றனர். அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முக்கியமில்லை. அவர்களின் உயிர் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே முக்கியம்,” என்று தனது பெயர் வெளியிடப்படக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் ஒரு சீக்கியர் தெரிவித்தார்.

 
முஸ்லிம்களை காத்த சீக்கியர்கள்

இந்த சம்பவத்தை உறுதி செய்த சாதிக், “கலவரக்காரர்களை போலீசார் துரத்திக் கொண்டிருந்த போது, அருகில் வசிக்கும் சீக்கியர்கள் இங்கு வந்து எங்களின் நலம் விசாரித்தனர். யாருக்கும் காயம் ஏதும் இல்லையே என்று வினவினர். எங்காவது செல்ல விரும்பினால் தங்கள் வாகனங்கள் உள்ளன என்றும் குறிப்பிட்டனர். ஆனால் நிர்வாகம் பின்னர் பேருந்துக்கு ஏற்பாடு செய்தது. எனவே போலீஸாருடன் சேர்ந்து அவர்களும் எங்களுடன் பயணம் செய்து எங்கள் குடும்பத்தை பத்திரமான இடத்திற்கு அழைத்துச்சென்றனர்,” என்று குறிப்பிட்டார்.

எங்கள் அண்டை அயலார் எங்களுடன் துணை நிற்பார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்பினோம். தாக்குதலின் போது சீக்கிய சகோதரர்கள் இங்கு வந்தனர். பக்கத்தில் ராணுவ மருத்துவமனை உள்ளது. அங்கிருந்தவர்களும் எங்களிடம் வந்து எங்கள் நிலை குறித்துக் கேட்டறிந்தனர்,” என்று இமாம் கலீம் காஷ்ஃபி கூறினார்.

கடந்த 50 ஆண்டுகளாக எங்கள் குடும்பம் இங்கு வசித்து வருகிறது. 1947 பிரிவினைக்குப் பிறகு இந்த மசூதி மூடிக் கிடந்தது. என் தாத்தா இங்கு வந்து அதைத் திறந்தார். 1992ல் கலவரம் நடந்தது ஆனால் இங்கு எதுவும் நடக்கவில்லை. பதற்றமான சூழ்நிலை முன்பும் பலமுறை ஏற்பட்டுள்ளது. ஆனால் எப்போதுமே மசூதி தாக்கப்பட்டதில்லை,” என்றார் அவர்.

இந்த தாக்குதலின் போது மசூதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் பிற வாகனங்களை கலவரக்காரர்கள் உடைத்தனர்.

மசூதியில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் குளிரூட்டிகள், நாற்காலிகள், மின்விசிறிகளும் உடைக்கப்பட்டன. தாக்குதலுக்குப் பிறகு மசூதி சுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தாக்குதலின் தடயங்கள் இப்போதும் காணப்படுகின்றன.

பிரசங்க மேடை (இமாம் நின்று பிரசங்கம் செய்யும் இடம்) இடிந்து கிடக்கிறது.

மின் பலகைகள் பிடுங்கப்பட்டுள்ளன. வலுவான கதவுகளிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. மசூதியில் உள்ள கடிகாரம் தடியால் அடிக்கப்பட்ட அந்த நேரத்தில் நின்று போயுள்ளது. அது இப்போதும் மதியம் 1:30 மணியைத்தான் காட்டுகிறது.

முஸ்லிம்களை காத்த சீக்கியர்கள்
 
படக்குறிப்பு,

சோஹ்னாவில் உள்ள குருத்வாரா.

’போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தாமல் விட்டிருந்தால் என்ன நடந்திருக்குமோ?’

“தாக்குதல் நடத்தியவர்கள் தங்களால் முடிந்ததைச் செய்தனர். எங்கள் வீட்டுப் பெண்கள் உள்ளே சிக்கியிருந்தனர். எல்லோரும் பயத்தில் இருந்தனர். நாங்கள் உள்ளே இருப்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தால் கதவை உடைக்கக்கூட அவர்கள் முயற்சித்திருப்பார்கள்,” என்று சாதிக் கூறுகிறார்.

சாதிக் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தாக்குதல் சமபவத்திற்குப்பிறகு அவர் அலுவலகத்திற்கு செல்லவில்லை.

அவர் இப்போது வீட்டிலிருந்து வேலை செய்கிறார்.

இந்த தாக்குதலால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு ஈடுசெய்யப்பட்டுவிடும். ஆனால் எங்கள் மனதில் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவது அவ்வளவு எளிதல்ல” என்கிறார் சாதிக்.

சாதிக்கின் அத்தையின் மகன் சுஹைலும் அதே வளாகத்தில் வசிக்கிறார். அவர் குருகிராமில் வேலை செய்கிறார்.

தாக்குதலின் போது சுஹைலும் இங்கு இருந்தார். இப்போது அவர் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்.

இந்த சம்பவத்தை மறப்பது அவ்வளவு எளிது அல்ல. போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தாமல் இருந்திருந்தால் என்ன வேண்டுமானாலும் ஆகியிருக்கும்,” என்று சுஹைல் தெரிவித்தார்.

 
முஸ்லிம்களை காத்த சீக்கியர்கள்
 
படக்குறிப்பு,

சாதிக்கின் அத்தையின் மகன் சுஹைல்.

"எனக்கு பல முஸ்லிம் நண்பர்கள் உள்ளனர். அவர்கள் இப்போது குருகிராமில் இருந்து திரும்பிச்சென்றுவிட்டனர்," என்கிறார் அவர்.

ஜமா மசூதியில் தற்போது போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இங்கு தற்போது பதற்றமான அமைதி நிலவுகிறது.

இமாமின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இங்கிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்கள் ஒரு கல்வி அமைப்பின் வளாகத்தில் தங்கியுள்ளனர்.

"கூடிய விரைவில் குடும்பத்துடன் வீடு திரும்ப நான் விரும்புகிறேன்," என்கிறார் கலீம் காஷ்ஃபி.

ஆனால் அவரது மனதில் இருந்து பயம் போகுமா?

இந்த தாக்குதல் நாங்கள் நினைத்துப் பார்க்காத ஒன்று. மரணம் கண் முன்னே கடந்து செல்லும் போது பயம் இருக்கத்தான் செய்யும். ஆனால் மசூதியை விட்டு எங்கே செல்வது? இந்தப் பாரம்பரியத்தை யாரிடம் ஒப்படைப்பது?,” என்று கலீம் வினவினார்.

இந்த தாக்குதல் தொடர்பாக குருகிராம் போலீசார் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.

இப்போது நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று கூறுகிறார் சோஹ்னாவின் காவல்துறை துணை ஆணையர் நவீன் சிந்து.

https://www.bbc.com/tamil/articles/cz93eeeq4x3o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹரியாணா வன்முறை: எதிர்ப்புகளை 'புல்டோசர் தண்டனை' மூலம் நசுக்கும் பாஜக அரசின் அணுகுமுறை சரியா?

புல்டோசர் தண்டனை
 
படக்குறிப்பு,

சவுதின் சகோதரர் நவாப் ஷேக், இடிக்கப்பட்ட கடைகளைப் பார்த்து கதறி அழுதார்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சோயா மதீன் & தில்னாவாஸ் பாஷா
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 12 ஆகஸ்ட் 2023, 03:48 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

"அவர்கள் சில வினாடிகளில் அனைத்தையும் அழித்துவிட்டனர்," என்று கண்களில் கண்ணீருடன் இடிக்கப்பட்ட தமது கடைகளுக்கு முன்பாக, இடிபாடுகளுக்கு இடையே நின்றிருந்த முகமது சவுத் கூறினார்.

அவரும், அவருடைய இளைய சகோதரர் நவாப் ஷேக்கும் அந்த இடிபாடுகளில் இருந்து அவர்களுடைய பொருட்களில் சிலவற்றையாவது மீட்க முடியுமா எனத் தேடிக்கொண்டிருந்தனர்.

அவர்கள் ஹரியாணா மாநிலத்தின் நூஹ் மாவட்டத்தில் சில கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டிருந்தனர். கடந்த சனிக்கிழமையன்று அவர் பிபிசியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, மஞ்சள் நிறத்தில் ஒரு புல்டோசர் வாகனம், அவருக்குப் பின்னால் அதிக சத்தத்துடன் கட்டடங்களை இடித்துக்கொண்டிருந்தது.

"எங்கள் குடும்பத்திற்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டிருந்த 15 கடைகள் எங்களுக்கு இருந்தன. இந்தக் கடைகளுக்கான அனைத்து சட்டப்பூர்வ ஆவணங்களையும் காட்டியும்கூட அவர்கள் (போலீசார்) இந்த கட்டடங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டிருந்ததாகத் தெரிவித்தனர்," என்றார் சவுத்.

டெல்லியின் புறநகர்ப் பகுதிகளை ஒட்டியுள்ள ஹரியாணா மாநிலத்தின் நூஹ் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு மதக்கலவரம் நடந்தது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நூஹ் மாவட்டத்தில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து நூஹ் நகரில் ஏராளமான கடைகளும் வீடுகளும் இடிக்கப்பட்டன.

 

இந்துக்கள் நடத்திய மதரீதியிலான ஊர்வலம் ஒன்று நூஹ் நகரின் வழியாகச் சென்றபோது அவர்கள் மீது கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து அங்கு இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே தொடங்கிய சண்டை மிகப்பெரும் வன்முறையாக மாறியது.

இது தொடர்பான செய்திகள் பரவத் தொடங்கிய பிறகு, குருகிராம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் வன்முறைகள் பரவின. அப்போது, வழிபாட்டுத் தலங்கள், கட்டடங்கள் மற்றும் வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டன.

அதன் பிறகு சில நாட்கள் கழித்து, பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெறுவதைப் போலவே, நூஹ் நகரிலும் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டடங்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஏராளமான கட்டுமானங்கள் புல்டோசர்கள் மூலம் இடித்து நொறுக்கப்பட்டன. நான்கு நாட்களுக்குப் பின்னர், இந்த விஷயத்தில் தாமாகத் தலையிட்ட உயர்நீதிமன்றம் மாநில அரசைக் கண்டித்த பின்னரே கட்டடங்கள் இடிக்கப்படுவது நிறுத்தப்பட்டது.

"கட்டுமானங்களை இடிப்பதற்கான உத்தரவு அல்லது எந்தவிதமான முன்னறிவிப்புகளும் இன்றி வன்முறையை மட்டும் காரணம் காட்டி புல்டோசர்களை கொண்டு வந்து சட்டவிரோதமாக இந்தச் செயலில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது," என உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

முஸ்லிம்களுக்கு சொந்தமான கட்டடங்களைப் பெரும்பாலும் குறிவைத்து இடித்ததன் மூலம் "ஒரு சமூகத்தையே அழிக்க மாநில அரசு முயன்றதா," என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

புல்டோசர் தண்டனை
 
படக்குறிப்பு,

நூஹ் மாவட்டத்தில் முகமது சவுதின் கடைகள் கடந்த சில தினங்களுக்கு முன் அதிகாரிகளால் இடிக்கப்பட்டன.

கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய பிரதமராக பாரதீய ஜனதா கட்சியின் நரேந்திர மோதி பதவியேற்ற பிறகு முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சுகளும், வன்முறைகளும் அதிகரித்துவிட்டதாக எதிர்க்கட்சிகளும், அரசு சாரா அமைப்புகளும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

பாஜக-வின் ஆட்சி நடத்தும் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், அசாம் போன்ற மாநிலங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சொந்தமான கட்டடங்களை புல்டோசர் கொண்டு இடிப்பது ஒரு வழக்கமாக மாறியுள்ளது.

இதற்கான காரணமாக, விதி மீறிக் கட்டப்பட்ட கட்டடங்கள் என மாநில அரசுகள் கூறினாலும், சட்ட நிபுணர்கள் இது குறித்துக் கேள்வி எழுப்புகின்றனர். இந்த மாநிலங்களின் முதலமைச்சர்கள், குற்றங்களைத் தடுக்க இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அடிக்கடி கூறுகின்றனர்.

இந்துக்களுக்குச் சொந்தமான கட்டடங்களும் இடிக்கப்படும் நிலையில், குறிப்பாக மதக் கலவரங்களுக்குப் பிறகு பெரும்பாலும் முஸ்லிம்களின் கட்டுமானங்கள்தான் குறிவைக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர்களும் பல்வேறு அமைப்புக்களும் குற்றம் சாட்டுகின்றன.

நூஹ்வில் இருக்கும் அதிகாரிகளிடம் இது குறித்துக் கேள்வி எழுப்பியபோது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைத் தருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் திரேந்திர கட்கடா பிபிசியிடம் பேசியபோது, விதி மீறிக் கட்டப்பட்ட கட்டடங்கள் மட்டுமே இடிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

இருப்பினும் மாவட்ட திட்ட அலுவலரான வினேஸ் சிங்கிடம் கேட்டபோது, கலவரங்கள் ஏற்படுவதற்கு முன்பாக எந்த கட்டடங்களில் இருந்து கற்கள் வீசப்பட்டனவோ, அந்த கட்டடங்களை மட்டும் இடித்ததாகத் தெரிவித்தார்.

 
புல்டோசர் தண்டனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

நூஹ் நகரில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் புல்டோசர்களை கொண்டு இடிக்கப்பட்டன

இப்படி கட்டுமானங்களை இடிப்பது குழந்தைகள் மற்றும் பெண்களை வீடற்றவர்களாக மாற்றும் என்பதால் இது ஒரு கொடூரமான நடவடிக்கை என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

"ஒருவரது வீட்டை அல்லது கடையை தன்னிச்சையாக இடிப்பது மிகவும் மோசமானது. இடைக்காலத்தில் இருந்த கூட்டு தண்டனையைப் போன்றது இது, " என்கிறார் அரசியல் திறனாய்வாளர் ஆஸிம் அலி. "இது போன்ற நடைமுறைகள் இக்காலகட்டத்திலும் நடைமுறையில் உள்ளன என்பது நமது சட்டங்கள் தோற்றுவிட்டதையே காட்டுகின்றன."

இதுபோல் கூட்டு தண்டனை முறையை நாம் இன்னும் பின்பற்றி வருவது மனிதத் தன்மையற்றது மட்டுமல்ல, சட்டவிரோதமானதும்கூட என்கின்றனர் சட்ட நிபுணர்கள்.

"எந்த விசாரணையும் இன்றி, உண்மையைக் கண்டுபிடிக்காமல், அரசு எப்படி அனைவரையும் ஒன்று திரட்டி அவர்களை ஒரே கூடையில் அடைக்கமுடியும்?

மதங்களைக் கடந்து, இது போன்ற கூட்டு தண்டனை முறை என்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்பதுடன் மனித உரிமைகளுக்கும் எதிரானது," என்கிறார் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான மதன் லோகுர்.

"கட்டட உரிமையாளர்களுக்கு முறையான முன்னறிவிப்பு வழங்கப்படவில்லை. அவர்களுடைய உடைமைகளை எடுத்துக்கொள்ள அவகாசம் அளிக்கவில்லை. அந்த இடத்துக்கு மாற்றாக வேறு இடத்தைத் தேர்வு செய்ய ஒரு நாள் அவகாசம்கூட அளிக்கப்படவில்லை," என்பதையும் அவர் குறிப்பிடுகிறார்.

பொதுமக்களின் உள்கட்டமைப்பை வேண்டுமென்றே தகர்ப்பதை எந்தச் சட்டமும் அனுமதிக்கவில்லை என்கிறார் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஷதன் ஃபராஸட்.

"ஒருவர் மீது குற்றச்சாட்டைச் சுமத்துவதற்கு அரசு விரும்பினால், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் வழக்கு நடத்த முடியும். எதேச்சதிகாரமாக ஒரே நாளில் அவருடைய வீட்டை இடிக்க அதிகாரமில்லை."

 
புல்டோசர் தண்டனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

நூஹில் உள்ள பலர் தங்களுடைய கட்டடங்கள் சட்டவிரோதமானவை அல்ல என்பதை நிரூபிக்கும் ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாகக் கூறுகிறார்கள்

சட்டவிரோத கட்டடங்களை இடிக்கும் அதிகாரம் அரசுக்கு இருக்கிறது என்றாலும், அதற்கான சட்ட நடைமுறைகளும் உள்ளன என நீதிபதி லோகுர் கூறுகிறார்.

மேலும், கட்டட உரிமையாளருக்கு ஒரு நோட்டீஸ் அளிக்கும்போது அவரால் அபராதம் கட்ட முடியும் அல்லது அந்த நோட்டீஸை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியும் என்றும், அதற்குப் பிறகும் ஒரு கட்டடத்தின் எப்பகுதியில் விதிமீறல் இருக்கிறதோ, அப்பகுதியை மட்டுமே இடிக்கமுடியும் என்றும் அவர் கூறுகிறார்.

ஒரு கட்டுமானம் முழுமையாக விதிமீறிக் கட்டப்பட்டிருந்தால், அதை இடிப்பதற்கு முன் அதன் உரிமையாளரிடம் இருந்து விளக்கம் கேட்கவேண்டும் என்கிறார் நீதிபதி லோகுர். "இங்கே எல்லா இடிப்பு நடவடிக்கைகளும் தன்னிச்சையாக மேற்கொள்ளப்படுகின்றன. இது அரசமைப்புச் சட்டத்தை அப்பட்டமாக மீறுவதே ஆகும்," என்கிறார் அவர்.

நூஹ் நகரில் ஆக்கிரமித்த நிலத்தில் கட்டுமானங்களை மேற்கொண்டிருந்தவர்களுக்கு ஏற்கெனவே முறையான அறிவிப்பு வழங்கப்பட்டதாக காவல் துறையினர் கூறுகின்றனர். ஆனால் ஏராளமான குடும்பத்தினர்கள் அதுபோல் எந்த நோட்டீசும் அளிக்கப்படவில்லை என பிபிசியிடம் தெரிவித்தனர்.

வன்முறை நடந்த போது அவர்கள் அங்கேயே இல்லை என்றும், இருப்பினும் செய்யாத குற்றத்துக்குத் தண்டனை கிடைத்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இருபது வயதான முசைப் தனது அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் கட்டட இடிப்பு நடவடிக்கையை பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார். அந்த கடையை அவர் தனது தந்தையின் சேமிப்பிலிருந்து ஒரு வாரத்துக்கு முன்புதான் அமைத்திருக்கிறார்.

"அதை மீண்டும் எப்படி நான் கட்டமைப்பேன்?" என அவர் கேட்கிறார்.

அவரைப் போலவே இந்துக்கள் உள்பட வேறு பலரும் கேள்விகளை முன்வைக்கின்றனர். சமன்லால் என்ற முடிதிருத்தும் தொழிலாளியின் கடையும் இதேபோல் இடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கும் அவர், கடன் வாங்கி அந்தக் கடையை நிறுவியதாகக் கூறுகிறார்.

"பத்து பேர் அடங்கிய எங்கள் குடும்பம் அந்தக் கடையை நம்பித்தான் இருந்தது. இப்போது நாங்கள் அனைவரும் தெருவில் நிற்கிறோம்," என்றார் அவர்.

 
புல்டோசர் தண்டனை
 
படக்குறிப்பு,

முன்னறிவிப்பின்றி தனது கடை இடிக்கப்பட்டது என்கிறார் சமன்லால் என்ற முடிதிருத்தும் தொழிலாளி.

நூஹ் நகரில் பல காலமாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்த இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே இதுபோல் பகை உணர்வு ஏற்பட்டுள்ளது நல்லதல்ல என பலர் அச்சம்கொள்கின்றனர்.

தற்போதைக்கு கட்டட இடிபாடுகள் நிறுத்தப்பட்டிருந்தாலும், முஸ்லிம்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறுகின்றனர்.

"நாங்கள் ஒவ்வொரு நாளும் ஒடுக்கப்படுகிறோம். இதுபோல் மீண்டும் ஏதாவது ஒன்று நடந்தால் நங்கள் எங்கே போவோம்?" எனக் கேட்கிறார் ஷேக்.

இருப்பினும் எல்லோருமே அதிகாரிகளைக் குறை கூறுகின்றனர் என நாம் கருத முடியாது.

"அரசு சரியான நடவடிக்கையைத்தான் எடுத்துள்ளது. இந்த வன்முறையாளர்களுக்கு ஒரு பாடம் புகட்டப்பட வேண்டும்," என்றார் கட்டிடங்கள் இடிக்கப்பட்ட போது அங்கே நண்பர்களுடன் வந்திருந்த அஷோக் குமார்.

தனது பீஸா கடையை இழந்த ஹர்கேஷ் ஷர்மாகூட, "அரசின் நடவடிக்கை சரியானதுதான். ஆனால் தப்பு செய்தவர்களுக்கு மட்டும் இதுபோன்ற தண்டனையை அளித்திருக்க வேண்டும்," என்றார்.

https://www.bbc.com/tamil/articles/cg6edpg6k97o

  • கருத்துக்கள உறவுகள்

மணிப்பூரை தொடர்ந்து  பற்றி எரியும் ஹரியானா..  என்னதான் நடக்கிறது..?

 
ha1-1024x767.gif
இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடித்த மணிப்பூர் வன்முறை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அதன் சுவடுகள் மறையும் முன்பே ஹரியானா மாநிலம் பெரும் கலவரத்தால் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது

மே மாதம் 3ம் திகதி தொடங்கிய மணிப்பூர் கலவரம் பெரும் வன்முறையாக மாறி இரண்டு மாதங்கள் நீடித்த நிலையில் நூற்றுக்கணக்கானோரை பலி கொடுத்து , ஆயிரக்கணக்கானோரை நிற்கதியாக்கி இருக்கிறது. நாடாளுமன்ற மழை கால கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் மணிப்பூர் பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மணிப்பூர் விவகாரம் நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டிலும் பெரும் விவாதப் பொருளானது.மணிப்பூர் விவகாரத்தின் சுவடுகள் இன்னும் மறையாத நிலையில் அடுத்ததாக ஹரியானா மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

என்னதான் நடக்கிறது ஹரியானாவில்..??

ஹரியானா மாநிலம்  நூஹ் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் ‘பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா’ எனும் பெயரில் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பேரணி குருகிராம் பகுதியில் உள்ள அனைத்துக் கோயில்களையும் சென்றடையும் விதமாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பேரணியை குருகிராம் பாஜக மாவட்டத் தலைவர் கார்கி கக்கார் தொடங்கிவைத்தார்.

பேரணி தொடங்கி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஊர்வலமாக வந்து கொண்டிருந்தபோது சில சர்ச்சைக்குரிய முழக்கங்கள் எழுப்பியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் ஊர்வலக்காரர்களை நோக்கி கற்களை வீசியதாகவும் இதனையடுத்து பேரணி நடத்தியோருக்கும், எதிர் தரப்பினருக்கும் இடையே வன்முறை வெடித்தது.

இதனையடுத்து வன்முறை நீடித்த நிலையில் ஆங்காங்கே தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட வாகனங்கள் , பைக்குகள் தீவைக்கப்பட்டுள்ளன. நூஹ் பகுதிவாசிகளின் வீடுகள் மீதும் தாக்குதல் நடைபெற்றுள்ளன. நிலைமை மோசமடைந்ததும் காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தது.
 

கண்ணீர் புகை வீச்சு , காவலர்கள் மீது தாக்குதல்…,

காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கலவரக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியும் , தடியடி நடத்தியும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். ஆனால் காவலர்கள் மீது கலவரக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் இதுவரை ஊர்க்காவல்படையைச் சேர்ந்த நீரஜ் மற்றும் குர்சேவக் ,  குருகாம் அஞ்சுமான் மசூதியின் துணை மதகுரு முகமது ஹாபிஸ் சயீத் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளன.  பெண்கள் குழந்தைகள் உட்பட 2,500க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள காவல் நிலையங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தளங்களில் தஞ்சமடைந்திருக்கின்றனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

கலவரத்திற்கு காரணமான வீடியோ..!

ஹரியானா கலவரத்திரற்கு மிக முக்கியமான காரணமாக சொல்லப்படுவது ஒரு வீடியோதான். கடந்த பெப்ரவரி மாதம் பிவானி மாவட்டத்தில் பசு பாதுகாவலர்களின் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடையவராக குற்றம் சாட்டப்பட்டுள்ள மோனு மானேசர் என்பவர் தானும் ”ஜலாபிஷேக யாத்ரா” ஊர்வலத்தில் பங்கெடுக்க உள்ளேன் என சில நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன் பின்னர்தான் பதற்றம் அதிகரித்ததாக சொல்லப்படுகிறது. மோனு மானேசர் பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுக்கடங்காத கலவரம் : மத்திய படைகள் வருகை ..!

கலவரம்., தீவைப்பு என தொடங்கிய பதற்றம் பக்கத்து மாவட்டங்களுக்கும் பரவியது.குருகிராமுக்கு அருகில் உள்ள மாவட்டங்களான பரிதாபாத் உட்பட பல இடங்களுக்கு பரவியதால் காவல்துறை பல இடங்களில் இணைய சேவை மற்றும் எஸ்.எம்.எஸ் சேவையை துண்டித்தது. கலவரத்தின் பின்னனியில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட வெறுப்பு செய்திகள்தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.

கலவரத்தை கட்டுப்படுத்த ஹரியானா மாநில முதலமைச்சர் மனோஹர்லால் கட்டார் மத்திய படை மற்றும் துணை ராணுவ படைகளை அனுப்புமாறு மத்திய அரசிட கேட்டுக்கொண்டார். இதனையடுத்து 20 கம்பெனி மத்திய படைகள் வந்திறங்கின. அவற்றில் 14 படைகள் நூஹ் மாவட்டத்திலும்,3 படைகள் பல்வாலிலும், 2 படைகள்  குருகிராமிலும், ஒன்று ஃபரிதாபாத்திலும் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளன.

hari.jpg

இதுவரை 119க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 90க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடியுடன் குர்கான் எம்.பி. சந்திப்பு :

ஹரியானா கலவரம் தொடர்பாக குர்கான் எம்.பி.யும் மத்திய அமைச்சருமான ராவ் இந்திரஜித் சிங் பிரதமர் மோடியைச் சந்தித்தார். ”கலவரத்தில் ஈடுபட்ட இரண்டு தரப்பினரிடையேயும் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொது வெளியில் ஆயுதங்களை எடுத்துச் செல்ல இவர்களுக்கு யார் அனுமதித்தது..? இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது” என இந்திரஜித் சிங் தெரிவித்தார்.

கலவரத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு சமூக வலைதளங்களில் பதிந்த பதிவுகளை ஆய்வு செய்து வருவதாகவும், கலவரம் நடைபெற்ற பகுதிகளில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் ஹரியானா காவல்துறை தெரிவித்துள்ளது.

அமைதி திரும்ப வலியுறுத்தி இருதரப்பு பேச்சுவார்த்தை :

ஹர்யானாவில் ஏற்பட்ட கலவரத்தினால் பெரும் பதற்றம் ஏற்பட்ட நிலையில் குர்கானில் உள்ள சோனா நிர்வாகத்தின் சார்பில் இருதரப்பின் முக்கியஸ்தர்களை அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது. இந்த பேச்சு வார்த்தையில் மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் நிசாந்த் குமார் யாதவ் இருதரப்பினரிடையே அமைதியை கடைபிடிக்குமாறு வலியுறுத்தினார்.

https://thinakkural.lk/article/267354

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.