Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கரீபியன் பிரீமியர் லீக் (CPL) 2023 – ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டியில் ஓவர்களுக்கான நேரத்தை வீணடிப்பதற்கான அபராதங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் சிவப்பு அட்டை போன்ற அமைப்பு உள்ளது. கடுமையான விதியின்படி, ஒரு இன்னிங்ஸின் 20வது ஓவரின் தொடக்கத்தில் களத்தடுப்பு தரப்பு கால அட்டவணைக்கு பின்தங்கியிருந்தால் ஒரு வீரர் நீக்கப்படுவார்.

ESPNcricinfo இன் அறிக்கையின்படி, இன்னிங்ஸின் 17வது ஓவரை 72 நிமிடம் 15 வினாடிகளிலும், 18வது ஓவரை 76 நிமிடங்கள் 30 வினாடிகளிலும், 19வது ஓவரை 80 நிமிடங்கள் 45 வினாடிகளிலும் முடிக்க வேண்டும், அதே நேரத்தில் கடைசி ஓவரை 85 நிமிடங்களுக்குள் முடிக்க வேண்டும்.

தவறின் களத்தடுப்பு அணியில் இருந்து ஒரு வீரர் சிவப்பு அட்டை குறி காண்பித்து வெளியேற்றப்படுவார்.

ஓவரின் தொடக்கத்தில்


கிரிக்கெட்டில் சிவப்பு அட்டை - புதிய விதியை அறிமுகப்படுத்தும் சிபிஎல் | Red Card In Cricket Cpl To Introduce New Rule

 

20 ஆவது ஓவரின் தொடக்கத்தில் களத்தடுப்பு தரப்பு தேவையான விகிதத்திற்குப் பின்தங்கியிருந்தால், அணித்தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வீரர் மைதானத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதே இதன் விதிமுறையாகும்.

சிபிஎல் 2023 இல் துடுப்பெடுத்து ஆடும் அணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

துடுப்பெடுத்து ஆடும் வீரர்களுக்கு நடுவர்களிடமிருந்து நேரத்தை வீணடிப்பதற்காக எச்சரிக்கை விடுக்கப்படும். நேர விரயம் மீண்டும் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் அணிக்கு ஐந்து ஓட்டங்கள் அபராதம் விதிக்கப்படும்.

எங்கள் டி20 போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நீண்டு கொண்டே செல்வதால் நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம், மேலும் இந்த போக்கை தடுக்க எங்களால் முடிந்ததைச் செய்ய விரும்புகிறோம். விளையாட்டு தொடர்ந்து நகர்வதை உறுதி செய்வது கிரிக்கெட்டில் ஈடுபடுபவர்களின் கடமையாகும்” இவ்வாறு சிபிஎல் இன் போட்டிச் செயற்பாடுகளின் இயக்குனர் மைக்கல் ஹால் மாற்றங்கள் குறித்த தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டபோது கூறினார்

மூன்றாவது நடுவரால்
 

கிரிக்கெட்டில் சிவப்பு அட்டை - புதிய விதியை அறிமுகப்படுத்தும் சிபிஎல் | Red Card In Cricket Cpl To Introduce New Rule

“ஓவர் விகிதங்கள் மூன்றாவது நடுவரால் கண்காணிக்கப்படும் மற்றும் ஒவ்வொரு ஓவரின் முடிவிலும் களத்தில் உள்ள நடுவர்கள் மூலமாக அணித்தலைவர்களுக்கு தெரிவிக்கப்படும். அதே போல் பார்வையாளர்களுக்கு, அவர்கள் எவ்வளவு பின்தங்கியிருக்கிறார்கள் அல்லது முன்நோக்கியிருக்கிறார்கள் என்பதைக் காட்டும் திரையமைப்புகளும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஆண்களுக்கான சிபிஎல் 2023 சுற்றுப்போட்டியானது எதிர்வரும் ஒகஸ்ட் 17 ஆம் திகதி ஆரம்பமாகிறது, அதே நேரத்தில் பெண்களுக்கான போட்டியானது ஒகஸ்ட் 31 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டிகளில் இந்த புதிய சிவப்பு அட்டை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

https://thinakkural.lk/article/268175

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அணி க‌ப்ப‌ட‌ன் அணிய‌ ச‌ரியா வ‌ழி ந‌ட‌த்தினால் சிவ‌ப்பு அட்டைக்கு வேலை இல்லை

 

ப‌த‌ட்ட‌மான‌ நிலையில் அணி க‌ப்ட‌ன் ப‌ந்து வீச்சாள‌ருக்கு ஆலோச‌னை சொல்ல‌ அதிலையே பாதி நேர‌ம் போய் விடும்.............

 

கிரிக்கேட் விளையாட்டுக்கு சிவ‌ப்பு அட்டை தேவை இல்லை

இது ஒன்றும் கால் ப‌ந்து இல்லை

அணியின் க‌ப்ட‌ன் அணிய‌ ச‌ரியான‌ நேர‌த்தில் வ‌ழி ந‌ட‌த்தாட்டி அணியின் க‌ப்ட‌ன் இர‌ண்டு அல்ல‌து மூன்று விளையாட்டில் விளையாட‌ த‌டை விதி முறைய‌ கொண்டு வ‌ந்தால் க‌ப்ட‌ன் அணிய‌ ச‌ரியா வ‌ழி ந‌ட‌த்துவார்😁......................



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிரித்தானிய பிரென்சு கூட்டு முயற்சியில் உருவானதும் தற்போது சேவையில் இல்லாதததுமான  concorde விமானம் Mach 2 வேகத்தில் (அண்ணளவாக  2200 km/h) பறந்து நியூயோர்க்/இலண்டன் பயண தூரத்தை சுமார் 2 மணி 45 நிமிடங்களில் கடந்தது. மஸ்க்கின் திட்டப்படி  சுரங்கவழிப்பாதையில்  இது போன்ற மிகை ஒலி வேகத்தில் மக்கள் பயணஞ் செய்வதற்கு தேவையான  விஞ்ஞான  தொழில் நுட்பம் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும்.
    • இலங்கையின் கடல் எல்லைக்குள் வந்து எமது மீன்வளத்தைச் சூறையாடிவிட்டு, நேவி துரத்துகிறது என்று இந்தியக் கடல் எல்லைக்குள் ஓடி ஒளிந்துவிட்டு மீண்டும் நேவி அகன்றவுடன் இலங்கை எல்லைக்குள் வந்து மீண்டும் சூறையாடலில் ஈடுபடுவார்களாம். இவர்கள் பண முதலைகள். அரசியல் செல்வாக்குள்ளவர்கள். இவர்களுக்கும் சாதாரண தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் தொடர்பில்லை. இதனை தடுப்பதைத்தவிர வேறு வழியில்லை. இவர்களின் கடற்கலங்கள் அழிக்கப்பட்டால் ஒழிய இவர்கள் நிற்கப்போவதில்லை.  இதற்கு இனச்சாயம் பூசத்தேவையில்லை. கடற்கொள்ளை கடற்கொள்ளைதான். 
    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.