Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: VISHNU

15 AUG, 2023 | 12:19 PM
image
 

குமார் சுகுணா

ஆடி மாதம் என்றாலே அது இறைவனுக்கு உரிய மாதமாக கருதப்படுகின்றது. அது மட்டும் அல்லாது நமது முன்னோர்களான பித்ருக்களுக்கும் இம்மாதம் உரிய மாதமாக கருதப்படுகின்றது. இம் மாதத்தில் வருகின்ற அமாவாசை தினமானது பித்ருக்களுக்கு மிக முக்கியத்துவம் மிக்கதாகும்.

image.png

தை மாதம் வருகின்ற அமாவாசை ஆடி மாதம் வருகின்ற அமாவாசை புரட்டாசி மாதம் வருகின்ற அமாவாசைகள் என்பன இந்துக்களுக்கு முக்கியமானவைகளாகும். அதாவது பித்ருக்களை வழிபட கூடிய முக்கியமான அமாவாசைகளாகும். அந்த வகையில் இன்று ஆடி அமாவாசை நாளாகும்.

இந்த மாதம் தட்சிணாயினப் புண்ணியகாலத்தின் தொடக்கமாகும். மேலும் மாதந்தோறும் பித்ரு வழிபாட்டுக்குரிய தினமான அமாவாசை இருந்தாலும் இந்த மாதத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில்  ஆடி அமாவாசை தினத்தன்று பித்ரு உலகத்தில் இருக்கும் ஆத்மாக்கள், அதாவது முன்னோர்கள்,  பூமிக்கு புறப்பட்டு  வருகிறார்கள் என்பது ஐதீகம். இதனால் அவர்களை வரவேற்கும் வழிபாடுகள் ஆடியில் செய்யப்படுகின்றன. இன்று புறப்படும் அவர்கள் புரட்டாசி அமாவாசையில் பூமியை வந்தடைவார்கள் என்று கூறப்படுகின்றது.

அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது அதாவது ஒன்றையன்று சந்தித்துக்கொள்கிறது.  இவ்வாறு ஒரு மாதத்தில் ஓர் அமாவாசை ஒரு பெளர்ணமி தான் வரும். ஆனால் இந்த மாதம் இரண்டு அமாவாசைகள் வருகின்றன.

மூன்று வருடத்திற்கு ஒரு முறை தான் இது போல ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசையோ இரண்டு பௌர்ணமியோ நிகழக்கூடிய வாய்ப்பு உண்டு. தமிழ் மாதத்தில் 31 அல்லது 32 நாட்கள் வரக்கூடிய மாதத்தில் மட்டுமே இவ்வாறு நிகழும் வாய்ப்பு உண்டு. இந்நிலையில் இம்மாதம் ஆடி அமாவாசையானது ஆடி மாதம் 1ஆம் திகதியிலும் 31-ஆம் திகதியிலும் வருகின்றது. இதனால் எதனை நாம் கடைப்பிடிப்பது என்ற குழப்பமும் வரவே செய்தது.

பொதுவாக இதுபோன்று இரண்டு அமாவாசைகள் வரும் மாதத்தை அதிக மாதம் என்பார்கள். அதிக மாதங்கள் அனைத்துமே முன்னோர்கள் வழிபாட்டுக்கானவை. இந்த மாதத்தில் செய்யும் பித்ரு வழிபாடுகள், ஏழைகளுக்கு வழங்கும் தான தர்மங்கள் ஆகியன மிகுந்த பலன்களைக் கொடுக்கும் என்கிறது சாஸ்திரம்.

இந்த சூழ்நிலையில் இரண்டு அமாவாசை தினங்களில் எது ஆடி அமாவாசை என்றால் இரண்டுமே முன்னோர் வழிபாடுகளுக்கு உரிய அமாவாசை தினங்கள்தான் என்றாலும் ஆடி அமாவாசை என்னும் சிறப்பினைப் பெறுவது இரண்டாவதாக வரும் அமாவாசை தினமே. அந்த அடிப்படையில், இன்று 15ஆம் திகதி வரும் அமாவாசையையே ஆடி அமாவாசையாகக் கருதி முன்னோர் களுக்கு சிறப்பு வழிபாடு செய்யவேண்டும் . இன்று  நமது முன்னோர்கள் புண்ணிய லோகத்தில் இருந்து பூமிக்கு புறப்படுகிறார்கள் என்பது ஐதிகம்.

இந்த நாளில் நமது முன்னோர்களுக்கு  நாம் பித்ரு தர்பணம் செய்து வழிபட்டால்  அவர்களின் ஆசி நமக்கு கிடைக்கும். இதனால் சகல வளங்களும்  செல்வங்களும் எம் இல்லங்களில் பெருகும் என்று கூறப்படுகின்றது. அத்தோடு ஆடி அமாவாசை அன்று விரதம் இருந்து, முன்னோர்கள் வழிபாடு செய்வது குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக இருந்து வந்த தடைகள் மற்றும் சாபங்கள் நீங்கும் என்பது உறுதி.

அத்தோடு ஆடி என்பது  இறைவழிபாட்டுக்கு உரிய மாதமாகும். அம்மனுக்கான சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும் மாதமாகும். இந்த மாதம் முழுவதுமே அம்மன் ஆலயங்களில் பல சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். ஆடி செவ்வாய் ஆடி வெள்ளி ஆகிய நாட்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.

இந்த மாதம், அதாவது ஜூலை 22 - ஆம் திகதி ஆடிப்பூரம். அதேபோல ஆடி மாதமான   ஒகஸ்ட்  மாதத்தில்  1 -ஆம் திகதி ஆடித் தபசு, 3 ஆம் திகதி ஆடிப்பெருக்கு, 9 ஆம் திகதி ஆடிக்கிருத்திகை ஆகிய விசேட தினங்களும் வந்தன. இந்த மாதம் இறைவனுக்குரிய புனித மாதமாக கருதப்படுவதால் தான்  திருமணம் போன்ற சுபகாரியங்களை யாரும் ஆடியில்  செய்வதில்லை.

இறைவழிபாட்டில் மாத்திரமே ஈடுபடுவர். நாமும் இறைவழிபாடு செய்து இந்த ஆடி மாதத்தில் சகல நன்மைகளையும் பெறுவோம். அத்தோடு எம் முன்னோர்களை நினைத்து இந்த ஆடி அமாவாசையில் பூஜித்து பலன் பெறுவோம். ஆடி அமாவாசை தினம் கோடி சூரிய கிரகணத்திற்கு சமம் என்று கூறப்படுகின்றது.

எனவே நீர் நிலைகளுக்கு சென்று பித்ரு தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி, வீட்டிலோ அல்லது சிவன் கோயிலிலோ வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும். வருடத்தில் வரும் மற்ற அமாவாசை தினங்களில் விரதம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாவிட்டாலும், ஆடி அமாவாசை அன்று முன்னோர் வழிபாடு செய்து பித்ரு தர்ப்பணம் கொடுத்தால் பித்ரு தோஷம் நீங்கி முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும். நம் இல்லங்களில் சகல நன்மைகளும் நடக்கும் என்பது ஐதிகம்.

https://www.virakesari.lk/article/162400



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா?; வல்வெட்டிதுறையில் மக்கள் போராட்டம் யாழ்ப்பாணம் – பொன்னாலை - பருத்தித்துறை வீதியை புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நீண்ட காலமாக புனரமைக்கப்படாது, கடல் அரிப்புக்கு உற்பட்டு வரும் சுமார் 12.8 km நீளமான வீதியினை புனரமைக்கக் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த போராட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு தமது கையொப்பத்தை இட்டுச் செல்கின்றனர். இதன்போது எமது வீதி எமக்கானது, புதிய அரசே புது வீதி அமைத்து தா?, ஓட்டுக்காக வீடு வந்தவரே வந்த வீதியை மறந்தது ஏன்?, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மேலும், தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா? என்று குறிப்பிடப்பட்டுள்ள பதாகைகளையும் போராட்ட காரர்கள் ஏந்தியிருந்தனர். https://thinakkural.lk/article/314000
    • 22 DEC, 2024 | 09:49 PM   இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரபாகரனின் பிறந்த நாளுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தவரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் (ரி.ஐ.டி) விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தன்று சமூக வலைத்தளம் ஒன்றில் அவருடைய படத்தை பிரசுரித்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் நபர் ஒருவரால் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த படத்திற்கு கீழ் அந் நபரின சமூக வலைத்தளத்தின் நட்பு வட்டத்தில் இருந்த சிலர் பிறந்த நாள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தனர்.' இவ்வாறு பிறந்த நாள் வாழ்த்துக்களை பதிவு செய்த வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரிடமே பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்தில் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, இம்முறை வடக்கு, கிழக்கு பகுதியில் பிரபாகரனின் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வுகள் அரசாங்கத்தின் கெடுபிடிகளற்று இடம்பெற்ற நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இடம்பெற்ற இச் சம்பவத்திற்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.  https://www.virakesari.lk/article/201905
    • ஆளணிப்பற்றாக்குறையே சுகாதாரத் தொண்டர்கள், தொண்டராசிரியர்கள் ஆகியோருக்கு வாய்ப்பாக அமைகிறது. தற்போது தொண்டராசிரியர் நியமனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலுள்ள திரியிலும் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெளிவாக நிலைமைகளை எடுத்துச் சொல்கிறார்.
    • இலங்கையில் சீனாவின் மிதக்கும் மருத்துவமனை கப்பல் ‘மஹா சயுரே’ மருத்துவமனை என அழைக்கப்படும் சீனாவின் ‘பீஸ் ஆர்க்’ இராணுவ மருத்துவமனை கப்பல் தற்போது கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. மேலும், ‘பீஸ் ஆர்க்’ என்ற கப்பல், கடற்படையின் இசைக்குழு வரவேற்புக்கு மத்தியில் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டதும் சிறப்பு. உலகின் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட .ராணுவ மருத்துவமனைக் கப்பலாக இதைக் கருதலாம். கிழக்கு சீனாவின் Zhejiang மாகாணத்தில் Zhoushan இல் அமைந்துள்ள இராணுவ துறைமுகத்தில் இருந்து ஜூன் 16 அன்று கப்பல் தனது பயணத்தைத் தொடங்கியது. உலகெங்கிலும் உள்ள அவசரகால சூழ்நிலைகளுக்கு உடனடி மனிதாபிமான நிவாரணம் வழங்குவதே இந்த கப்பலின் முக்கிய பணியாகும். இந்த கப்பல் சீன மக்கள் குடியரசால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது. இந்த கப்பல் 2008 முதல் மருத்துவ உதவி வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. 178 மீட்டர் நீளமும் 24 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பலில் 386 பணியாளர்கள் உள்ளனர். அவர்களில் 106 பேர் மருத்துவர்கள். கப்பலில் சிறிய படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்களும் பொருத்தப்பட்டுள்ளன. கப்பலில் 17 மருத்துவ துறைகள் மற்றும் 5 துணை நோயறிதல் துறைகள் உள்ளன. கொழும்பு துறைமுகத்தில் ஒருவாரம் தங்கியிருக்கும் கப்பல் சிங்கப்பூர் வழியாக சீனா திரும்பும். கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள ஒரு வாரத்தில் இலங்கை மக்களுக்கும், சீன நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உள்ளிட்ட சீன பிரஜைகளுக்கும் இலவச நோயறிதல் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/313997
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.