Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலின உறவுகளை விருத்தி செய்யும் பிரசாரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலின உறவுகளை விருத்தி செய்யும் பிரசாரம்

[18 - September - 2007] [Font Size - A - A - A]

மொய்கா நுதுறு

பெண்கள் மிக இளம் வயதில் திருமணம் செய்யாதிருத்தல், தங்களால் சமாளிக்க முடியாத அளவுக்கு அதிக பிள்ளைகளை பெற்றெடுக்காதிருத்தல், பிரசவத்தின் போது மரணிக்காதிருத்தல், சிறு தொகையினரே எச்.ஐ.வி. கிருமியினால் பாதிக்கப்படுதல் போன்றவற்றை உறுதிப்படுத்துவதில் பொதுவான ஒரு காரணி என்னவென்ற வினாவுக்கு பதில் ஆண்களே ஆகும்.

"தாய்மை சுகாதாரத்தில் ஆண்கள் பங்காளிகள்" என்ற தொனிப் பொருளுடன் 2007 ஆம் வருட உலக சனத்தொகை தினத்திற்கான (ஜூலை 11) செய்தி இதுவாகும்.

ஆண்களின் ஈடுபாடும் பங்களிப்பும் அனைத்து வித்தியாசங்களையும் ஏற்படுத்திவிடும் என்பதை அனுபவம் காண்பிக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தொறாயா அஹமத் ஒபாயித் உலக சனத்தொகை தினத்தை முன்னிட்டு வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளார்.

மிக இளவயது திருமணத்தை அதைரியப்படுத்துவதன் மூலமும் இளம் பெண்களின் கல்வியை ஊக்குவிப்பதன் மூலமும் சம உறவை ஆதரிப்பதன் மூலமும் பெண்களின் மகப்பேற்று சுகாதாரம், உரிமைகள் ஆகியவற்றை ஊக்குவிப்பதன் மூலமும் முன்னேற்றம் காணப்படுகிறது.

ஆண்கள் அவர்களது துணைவியரின் வாழ்க்கையில் மேலும் ஆக்கபூர்வமான பங்களிப்பை செய்வதற்கு வசதியாக அவர்களை விடுவிக்க பாலின பிடிவாதங்களை அகற்றுவதில் உள்ள சிரமங்கள் நன்கறியப்பட்டவை.

ஆனால், ஆண்களுக்கு உதவ நிறுவனங்கள் எந்த அளவுக்கு சீரமைக்கப்படுகின்றன?

இன்னும் செய்வதற்கு சில வழிகள் உண்டு என்று ஜொஹனஸ்பேர்க்கில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள அரச சார்பற்ற ஸ்தாபனமொன்றின் இணை ஸ்தாபகர் பவானா குமாலோ கூறுகிறார்.

உதாரணமாக, பாலியல் மகப்பேற்று சுகாதாரம் பற்றி பேசும்போது, நீங்கள் மருத்துவமனைக்கு சென்றால் அங்குள்ள ஒழுங்கு முறைகளின்படி பெண்களே கவனிக்கப்படுகிறார்கள். அந்த சூழ்நிலை ஆண்களுக்கு சாதகமாக இல்லை. தாதிமாரில் அதிகமானோர் பெண்களே என்று அவர் ஐ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்தார்.

சில ஆண்கள் மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்த தங்களை தாதிமார் விரட்டிவிட்டதாக முறைப்பாடு தெரிவிக்கிறார்கள். அது ஆண்களுக்கான இடமல்ல என்று தாதிமார் கூறியதாக இந்த ஆண்கள் தெரிவிக்கின்றனர்.

பாலின உறவுகளை விருத்தி செய்யும் முயற்சியில் தென்னாபிரிக்கா முழுவதிலும் கிரமமாக கருத்தரங்குகளை வலையமைப்பு நடத்திவருகிறது.

பிரசவத்திற்கு முந்திய மருத்துவ சோதனைகளின் போது தங்கள் துணைவியருடன் சிகிச்சை நிலையங்களுக்கு செல்லுமாறு தாங்கள் ஆண்களை ஊக்குவிப்பதாக குமாலோ தெரிவித்தார். துணைவியர் குழந்தையை பிரசவிக்கும் வரை அவர்களுடன் சிகிச்சை நிலையங்களுக்கு செல்லுமாறு ஆண்களை தாங்கள் வற்புறுத்துவதாகவும் அவர் கூறினார்.

நடைமுறைகளையும் மனப்போக்கையும் நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

எனினும், மனப்போக்கை மாற்றிக் கொள்வதில் முன்னிற்கும் பெண்கள் பல தடங்கல்களை எதிர்நோக்கலாம் என்று பொருளாதார மையமான ஜொஹனஸ்பேர்க்கில் தளத்தைக் கொண்டுள்ள பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதற்கான சட்ட நிறுவனத்தின் ஆய்வாளரான லிசா வெற்றென் தெரிவித்தார்.

ஆண்களுடன் பேசிக்கொள்வது குறிப்பாக பெண்கள் ஆண்களுடன் பேசிக்கொள்வது சிரமமானது என்று அவர் ஐ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்தார். ஆனால், எல்லா ஆண்களும் ஒரே மாதிரி இல்லை. வயது முதிர்ந்த ஆண்களுடன் பேசுவதில் சில சமயங்களில் ஒருவர் வெற்றிபெறலாம். ஏனெனில், அவர்களுக்கு தங்கள் துணைவியரை, பிள்ளைகளை சொத்துக்களை இழந்துவிடுவோமோ என்ற அச்சம் உண்டு.

அந்த முன்னேற்றம், வட லிம்போபோ மாகாணத்தில் உள்ள கிராமிய விவசாய சமுதாயம் ஒன்றில் செயல்படும் அமைப்பு ஒன்றின் மூலம் காண்பிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் (ஆண் பண்ணைத் தொழிலாளர்கள்) தற்போது உணவு விடயத்தில் உதவுகிறார்கள். வீட்டை சுத்தம் செய்கிறார்கள். மேலும், பல ஆண்கள் இவர்களுடன் சேர்ந்து கொள்ள விரும்புகிறார்கள். இதன் விளைவாக, அந்த சமூகத்தை சேர்ந்த பெண்கள் எங்களை அழைத்து தங்கள் ஆண்களுக்கு நாங்கள் என்ன செய்துவிட்டோம் என்று எம்மிடம் கேட்கிறார்கள்' என்று குமலோ சிரித்துக் கொண்டே தெரிவித்தார்.

தென்னாபிரிக்க மொழியில் `உபுந்து' (மனிதநேய) நடைமுறை மூலம் பாரம்பரிய தலைவர்களை அதன் பணியில் ஈடுபடுத்துவதற்கும் வலையமைப்பு முயற்சி செய்கிறது. மேலும், விரிவாகக் கூறின், மற்றவர்களின் மனிதநேயம் மதிக்கப்படுமளவிற்குத்தான் ஒருவரது மனிதநேயம் கணிக்கப்படுகிறது என்ற பாரம்பரிய நம்பிக்கையை இது குறிக்கிறது.

ஆனால், தலைவர்களை அணுகுவதற்கு நல்ல சாதுரியம் தேவை என்று அரசாங்க சார்பற்ற நிறுவனத்திற்கு தெரியவந்துள்ளது.

அவர்களது வாழ்க்கை முறை பின்தங்கியது என்று விமர்சிப்பதன் மூலம் நீங்கள் ஆரம்பிப்பதில்லை. அப்படியானால், அவர்கள் உங்களுடன் பேச மறுப்பார்கள். உதாரணமாக, திருமணம் செய்த வீட்டிலிலிருந்து விரட்டப்பட்ட பெண்களின் பிரச்சினைகள் குறித்து வயது வந்தவர்களுடன் பேசுவது பாதுகாப்பானது. பெண்களை இவ்வாறு விரட்டுவது `உபுந்து' நடைமுறைக்கு விரோதமானது என்று குமாலோ கூறுகிறார்.

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் 2005 ஆம் ஆண்டுக்கான வருடாந்த உலக சனத்தொகையின் நிலைமை என்ற தலைப்பிலான அறிக்கையை இந்த வருட உலக சனத்தொகை தினத்தின் தொனிப் பொருள் பிரதிபலிக்கிறது.

மிலேனியம் அபிவிருத்திக் குறிக்கோள்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ள மகப்பேற்று சுகாதாரத்தையும் உரிமைகளையும் மேம்படுத்துவதற்கு ஆண்களுடன் பங்காளியாக இருப்பது ஒரு முக்கிய தந்திரமாகும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத் திட்டமிடல், மனைவியரின் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் மருத்துவக் கட்டணம், பாடசாலைக் கட்டணம் ஆகியன உட்பட வீட்டு வளங்களைப் பயன்படுத்துதல் போன்ற விடயங்களில் கணவன்மாரே தீர்மானம் எடுக்கிறார்கள் என்றும் அறிக்கை கூறுகிறது.

தென் ஆபிரிக்காவில் 84 சதவீதமான பிரசவங்கள், சிக்கல்கள் காரணமாக மரணம் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்தக்கூடிய திறமைப் பயிற்சி பெற்ற சுகாதார உத்தியோகத்தர்கள் முன்னிலையில் இடம்பெறுகின்றன என்று ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டப் பிரிவின் 2006 ஆம் வருட மனித அபிவிருத்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல பெண்கள் அபாயகரமான சூழலில்தான் குழந்தைகளை பிரசவிக்கிறார்கள் என்ற உண்மை பிரசவ மரண புள்ளிவிபரங்களிலிருந்து தெரியவருகிறது. தென்னாபிரிக்காவில் 100,000 குழந்தைகள் உயிருடன் பிறந்தால் 150 தாய்மார் மரணிக்கிறார்கள் என்று வருடாந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மனித அபிவிருத்தி சுட்டியில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ள நோர்வேயில் இந்த மரண விகிதம் 100,000 இற்கு 6 ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கையையும் அறிவையும் மதிப்பான வாழ்க்கைத் தரத்தையும் வழங்குவதில் எவ்வாறு வெற்றி அடைகின்றன என்ற அடிப்படையில் உலக நாடுகளை தரம்பிரித்து மனித அபிவிருத்தி சுட்டியில் வெளியிடப்பட்டுள்ளது.

15 வயதிற்கும் 45 வயதிற்கும் இடைப்பட்ட திருமணமான தென்னாபிரிக்க பெண்களில் 56 சதவீதமானோர் கருத்தடை சக்தியை கொண்டவர்களாக இருக்கிறார்கள். மனித அபிவிருத்தி சுட்டியில் முதல் 10 இடத்தை பிடித்துள்ள நாடுகளில் சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் முறையே 82, 79, 76 சதவீத கருத்தடை சக்தியை கொண்டுள்ளன.

2006 ஆம் ஆண்டில் 177 நாடுகள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட கருத்தடை சக்தி மதிப்பீட்டில் தென்னாபிரிக்கா 121 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

தென்னாபிரிக்காவில் எச்.ஐ.வி./ எயிட்ஸுடன் வாழும் 5.3 மில்லியன் மக்களில் அரைவாசிக்கும் அதிகமான 3.1 மில்லியன் பேர் பெண்களாவர் என்று எச்.ஐ.வி/எயிட்ஸ் தொடர்பான கூட்டு ஐக்கியநாடுகள் திட்டப்பிரிவு தெரிவிக்கிறது.

http://www.thinakkural.com/news/2007/9/18/...s_page36301.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.