Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாறு தெரியாது விளாசுகிறார் அமைச்சர் விதுரர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வரலாறு தெரியாது விளாசுகிறார் அமைச்சர் விதுரர்
 
தெற்கிலங்கையில் சைவக் கோயில்கள் இருக்கின்றன. எனவே வடக்குக் கிழக்கு இலங்கையில் புத்த விகாரைகளை அமைத்தால் என்ன? அறிவை அடகு வைத்த பின்பு வினவுகிறார் மாண்புமிகு அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கர்.
புத்தர் இலங்கைக்கு வந்த நாளில் முருகனுக்குத் தைப்பூச விழா. இலங்கை மக்கள் அனைவரும் கூடி எடுத்த விழா. மாணிக்கக் கங்கையில் விழா. இலங்கையின் ஆதிகுடிகள் சைவர்களே புத்தரை வரவேற்றார்கள். தைப்பூச நாளில் வரவேற்றார்கள்.
கதிர்காமத்தில் இருந்து காங்கேயன்துறை வரை நீண்ட, சிலாவத்தில் இருந்து மட்டக்களப்பு வரை அகன்ற, 66,000 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள இலங்கைத் தீவு முழுவதிலும் பல்லாயிரம் சைவக் கோயில்களே இருந்தன. இலங்கை சிவபூமி.
புத்தர் வரும் பொழுது இருந்தன சைவக் கோயில்கள்.
அப்பொழுது இருந்த கோயில்களே இன்று வரை தொடர்கின்றன. புதிதாக யாரும் தென்னிலங்கையில் சைவக் கோயில்களைக் கட்டவில்லை. பழைய சைவக் கோயில்களையே திருப்பணி செய்து புதுப்பிக்கின்றார்கள்.
மதவாச்சிக்கு வடக்கே ஈரற்பெரிய குளத்தில் பிள்ளையாருக்கு அருமையான கருங்கல் கோயிலை இக்காலத்தில் எழுப்பியவர் சைவத்தமிழர் அல்ல. புத்தராகிய சிங்களவர். நீங்கள் போய்ப் பாருங்கள்.
மூஷிக வாகன... எனத் தொடங்கும் கணபதித் தெய்யோ மந்திரத்தைத் தன் பிள்ளைக்குச் சொல்லிக் கொடுக்காத புத்த சிங்களத் தாய் ஒருவர் இருந்தால் எனக்குச் சொல்லுங்கள்.
புத்தர் வரும் முன்பும் வந்த பின்பும் பல நூற்றாண்டுகளுக்கு இலங்கையில் விகாரைகள் இல்லவே இல்லை.
விசயன் வந்த பின்பும் அநுராதபுரம் சைவ சமயப் பிரதேசம். ஆண்ட அரசர்களின் பெயர்கள்: சிவன், மூத்த சிவன், மகாநாகன். முற்று முழுதாகச் சைவத் தமிழ்ப் பெயர்கள்.
சைவர்களின் தயவில் கட்டியவையே இப்பொழுது தென்னிலங்கையின் புத்த விகாரைகள். ஏதோ போகட்டும் என்று சைவர் ஆகிய நாங்கள் விகாரைகளைக் கட்ட உரிமம் தந்தோம். படிப்படியாகப் புத்தர்கள் விகாரைகளைக் கட்டத் தொடங்கினீர்கள்.
புத்த விகாரைகளைக் கட்டினாலும் அங்கே சிவலிங்கம் வேண்டும். திருமால் வேண்டும் இலட்சுமி, சரசுவதி, துர்க்கை, காளி வழிபட வேண்டும் வைரவர் வழிபட வேண்டும். தமிழ்ப் பெண்ணாகிய பத்தினியை வழிபட வேண்டும்.
எனவே நீங்கள் விகாரைக்குள்ளே சைவக் கோயில்களைக் கட்டி வைத்திருக்கிறீர்கள்.
ஏனென்றால் உங்களுக்குத் தெரியும் இலங்கை சிவ பூமி. இச் சிவ பூமியில் சைவக் கோயில் இல்லாத இடம் இருக்க விடக்கூடாது. இவ்வாறு புத்தராகிய நீங்களே உளமாரக் கருதுகிறீர்கள்.
சைவத் தமிழ்ப் பெண்ணான பத்தினியைப் புத்த விகாரைகளுள் அமைத்தவன் முதலாம் கயவாகு.
இலங்கையில் நீங்கள் கணபதி தெய்யோ என்று நாளும் மனதாலும் உடலாலும் நெக்குருகி வழிபடுகின்ற போற்றுகின்ற பிள்ளையார் வழிபாட்டைப் புத்தரிடையே பரவலாக்கியவன் நரசிம்ம பல்லவனின் யானைப்படைத் தளபதி மாறவர்மன். வாதாபி சென்று வெற்றியோடும் பிள்ளையார் சிலைகளோடும் இலங்கை வந்தவன்.
அதே நரசிம்மம் பல்லவன் தெற்கே தேவேந்திர முனையில் தென்னாவரம் சிவன் கோயிலைப் பல்லவ பாணியில் கட்டு வித்தான் என்பதை நான் சொல்லவில்லை. மேலைநாட்டு வணிகப் பயணி Cosmas Indicopleustuas சொல்கிறார். அறிவை அடகு வைத்து விளாசுகின்ற உங்களுக்கு இந்தச் செய்தி தெரிய வாய்ப்பில்லை
முதலாம் விசயபாகு, பின் விக்கிரமபாகு, மகன் இரண்டாம் கயவாகு, பின் முதலாம் பராக்கிரமபாகு யாவரும் சைவத்தைப் பேணிய அரசர். சைவத்தமிழ்ப் பாண்டிய சந்திரகுல வம்சத்தினர் எனக் குல வமிசமே பூசா வழியே கூறுவதைப் படித்தது உங்களுக்கு நினைவில்லையா?
கந்தளாயில் சதுர் வேதி மங்கலத்தில் அடைக்கலமாகிய இரண்டாம் கயவாகுவை நீங்கள் மறந்துவிட முடியுமா?
அதற்குப் பின், இரண்டாம் நான்காம் ஆறாம் பராக்கிரமபாகு காலங்களில் இலங்கையின் தென்முனையில் தென்னாவர நாயனார் கோயிலையும் அங்கு சதுர்வேதி மங்கலங்களையும் அம்மன்னர்கள் ஆதரித்ததைச் செப்பேடுகளாகக் கல்வெட்டுகளாகக் காணலாமே. நீங்கள் படிக்கவில்லையா?
-
வழிபாட்டிடங்களைப் பாதுகாக்கும் முச்சிங்கள தம்பதெனியா, கம்பளை, கோட்டை மன்னர்களின் கல்வெட்டுகளில் முதலில் புத்த விகாரை, பின் சதுர்வேதி மங்கலம், பின் சைவத் தேவாலயம் யாவையும் முறையாகப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என எழுதியதை நீங்கள் படிக்கவில்லையா
சீனப் பயணி செங்கோ வழிபட்டுத் தமிழில் போற்றிக் கல்வெட்டு எழுதிய கோயிலே தென்னவரம். அந்தக் கல்வெட்டு இன்றும் கொழும்பு அருங்காட்சியகத்தில் இருக்கிறதே நீங்கள் பார்க்கவில்லையா?
மொரொக்கோ நாட்டுப் பயணி முகமதியரான இபன் பட்டுட்டா கண்டு ஆரவாரித்த கோயிலன்றோ தென்னவரம். பயணக் குறிப்புகளைப் படிக்கவில்லையா?
இலங்கையில் தமிழ்ச் சைவர்கள் எவராவது புத்த விகாரையை இடித்த வரலாறை நீங்கள் சொல்ல முடியுமா?
ஆனால் கோட்டை அரசன் மாயாதுன்னையின் மகன் முதலாம் இராசசிம்மன் எத்தனை புத்த விகாரைகளை இடித்தான்? தலதா மாளிகையை இடிக்க முயன்றான் - என அங்கே இன்றும் ஓவியம் இருக்கின்றமை உங்களுக்குத் தெரியாதா?
தென்னிலங்கையில் உள்ள சைவக் கோயில்கள் ஆதியான கோயில்கள். அவற்றை இப்பொழுது யாரும் கட்டவில்லை. அங்கு சைவர்கள் இருப்பதால் அக் கோயில்கள் தொடர்கின்றன.
வடக்கு கிழக்கில் புத்தர்கள் 1948 வரை 4%. அவர்களுக்கான புத்த விகாரைகள் இருந்தன. சைவத்தமிழ்த் தாயகத்தில் அத்துமீறிய அரச குடியேற்றங்களின் பின்பு அங்கும் விகாரைகளைப் புதிதாக அமைத்தீர்களே!
புத்தர்கள் இல்லாத இடத்தில் புத்த விகாரைகளைக் கட்ட வேண்டாம். சைவத் தமிழர்களின் மனத்தை நோகடிக்க வேண்டாம். இவ்வாறு வட மாகாணப் புத்த பீடத் தலைவரும் நாக விகாரைப் புத்த பிக்குவும் உங்களுக்கு எடுத்துக் கூறிய செய்தி வந்த அச்சு மை காயவில்லையே. அதற்குள் வேகமாக உங்கள் அறியாமையை விளாசுகிறீர்களே.
தென்னிலங்கையில் சைவக் கோயில்கள் இருப்பதால் தமிழர் பகுதிகளில் புத்த விகாரைகளைக் கட்ட வேண்டும் என்று சொல்லுகின்ற உங்களுக்கும் அறிவை அடகு வைத்த புத்தர்களுக்கும் சொல்கிறேன் -- தென் இலங்கையில் சைவக் கோயில்கள் அநாதியானவை. அவற்றை இன்றைய தமிழர் தாயகச் சைவர்கள் அமைக்கவில்லை.
தவறான வரலாற்றைத் திணிக்காதீர்கள். போரில் வென்ற வீறாப்பில் புத்த மேலாதிக்கத்தைத் திணிக்காதீர்கள்.
கத்தோலிக்கரும் கிறித்தவரும் கடந்த சில நூற்றாண்டுகளில் போரில் வென்ற பின்பு சைவக் கோயில்களை உடைத்தார்கள். கிறித்தவத் தேவாலயங்களைக் கட்டி எழுப்பினார்கள்.
கத்தோலிக்கரும் கிறித்தவரும் சைவத்தமிழ்த் தாயகத்தில் சைவர்களை அழிக்க முயன்றது போல், இப்பொழுது போரில் வென்ற புத்தர்களாகிய நீங்களும் சைவத்தமிழ் தாயகத்தில் சைவர்களை அழிக்க முயல்கிறீர்கள்.
சைவர்களை அடக்க ஒடுக்க அழிக்க நினைக்காதீர்கள். வெற்றி பெற மாட்டீர்கள்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.