Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏ 9 நெடுஞ்சாலை அல்லது இந்த வழியே வாருங்கள்

Featured Replies

http://video.google.com/videoplay?docid=81...08422&hl=en

இத்திரைபடத்தை பற்றிய டிசே தமிழனின் விமர்சன பதிவு கீழே

இவ்வழியால் வாருங்கள் (A9 Highway) படத்தை முன்வைத்து-சக மனிதரை நேசிப்பதென்பதைப் போன்று இவ்வுலகில் அழகானது எதுவேமேயில்லை. இனங்களை, மொழிகளை, நிறங்களை மீறி மனிதாபிமானம் என்ற புள்ளி நம் எல்லோரையும் ஒரு புள்ளியில் இணைத்துவிடக்கூடும். எங்கோ ஒரு நாட்டில் தன் சொந்த ஊரை இழந்துகொண்டிருப்பவனின் துயரம்…, ஒடுக்கப்படும் மக்களின் இருப்பிற்காய் இரத்தம் சிந்திக்கொண்டிருக்கும் போராளியின் மனவுறுதி…, உயிர்களை, உடலுறுபுக்களை இழந்துகொண்டிருக்கின்ற மக்களின் அவலம்… இவையெல்லாம் போர் நடந்துகொண்டிருக்கும் எந்தப்பகுதியிற்கும் பொதுவானது. அதேபோல் அதிகாரமும் ஆயுதமும் வைத்திருப்பவர்களின் ஒடுக்குவதற்கான ஆதிக்கமும் சிந்தனைகளும் நாடுகளுக்கிடையில் அவ்வளவாய் வித்தியாசப்படுவதுமல்ல. இவ்வழியால் வாருங்கள் என்று ஏ9 நெடுஞ்சாலையை ஊடுருவிச் செல்லும் இப்படத்தில் எல்லா இன மக்களும் வருகின்றார்கள். போரை அவரவர்களின் பார்வைகளால் பார்க்கின்றார்கள். இறுதியில் தாம் நினைத்துக்கொண்டிருப்பது மட்டுமல்ல சரியான பார்வை; நாம் அறியாத இன்னும் பல விடயங்களும் இருக்கின்றன என்ற புரிதல்களையும் பெற்றுகொள்ளுகின்றார்கள்.

சமாதானம் வந்து, ஏ9 நெடுஞ்சாலை திறக்கப்படுவதிலிருந்து கதை ஆரம்பிக்கின்றது. சமாதானம் வந்து ஏ9 திறக்கப்பட்டாலும் தமது உரிமைகள் முற்றுமுழுதாக தரப்படாதபோது இந்நெடுஞ்சாலை திறக்கப்படக்கூடாது என்று -தன் சக போராளிகளின் இழப்புக்களை நினைத்தபடி- கதறும் ஒரு போராளியின் காட்சிகளோடு படம் ஆரம்பிக்கின்றது. புத்தர் வாழ்ந்திருக்கக்கூடும் என்ற நாகதீபத்தை(நயினாதீவை) பார்க்க ஒரு சிங்களக்குடும்பமும், 90களில் யாழிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு புத்தளத்தில் வாழும் ஒரு முஸ்லிம் குடும்பமும் ஏ9 பாதையினூடாக பயணிக்கின்றது. சிங்களக் குடும்பம் கிட்டத்தட்ட அரசாங்கத்தின் செய்திகளைக் கேட்டு தமக்கான அரசியலை வைத்துக்கொண்டிருப்பவர்கள். அவர்களின் மகள் பlகலைக்கழக இறுதியாண்டு மாணவி, ஜே.வி.பி சார்பு நிலைகொண்டவர். அவரது தம்பியோ சராசரி இளைஞன். அக்காவின் புரட்சிக்கனவுகளை தொடர்ந்து பகிடி செய்துகொண்டேயிருப்பவன். அவனுக்கு கல்பனா என்று பாடுகின்ற ஒரு சிங்களப்பெண்ணின் மீது ஈர்ப்புண்டு. இவர்கள் ஏ9 பாதையின் இடைநடுவில் முஸ்லிம் குடும்பத்தைச் சந்திக்கின்றார்கள். முஸ்லிம் குடும்பம் தாம் தமது பூர்விக நிலங்களிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட துயர்களை பகிர்கின்றார்கள். நதி (வளாக மாணவி) தான் தமிழர்களைப் பற்றி நினைத்தது சரியென்ற இன்னும் தீர்க்கமான முடிவுக்கு வருகின்றார்.

இரவில் தங்க இடமில்லாது சிங்களக்குடும்பம் யாழ்ப்பாணத்தில் தவிக்கையில், நதியோடு கொழும்பு வளாகத்தில் படித்து சில வருடங்களில் படிப்பை நிறுத்திவிட்டு யாழ் போன தனது (தமிழ்)தோழன் ஒருவரை வீதியில் நதி காண்கின்றார். அந்த இளைஞன் நதியுடன் பேசுகின்றபோதும், அவர் தமிழரென்றபடியால் நதிக்கு -அவரில் நம்பிக்கையில்லாது- அவரின் வீட்டில் போய் தங்கவிரும்பமில்லாது இருக்கின்றார். அந்த இளைஞர் NGO ஒன்றில் வேலை செய்துகொண்டு ஒரு ஆசிரியரின் வீட்டில் தங்கியிருக்கின்றார். ஆசிரியரின் மகன் இயக்கத்துப்போய் சமாதானம் வந்ததால் -இயக்கத்திலிருந்து விலகி- வீட்டுக்கு வருகின்றார். போராளியாக இருந்தவருக்கு இப்படி சிங்களக் குடும்பம் தங்கள் வீட்டில் வந்து நிற்பது அவ்வளவு உவப்பானதில்லை. எனவே அவர் தொடர்ந்து வீறாப்பாய் திரிந்துகொண்டிருக்கின்றார்.

அந்த ஆசிரியரின் மகளுக்கு NGO வில் வேலை செய்யும் இளைஞர் மீது ஈர்ப்புண்டு. ஆசிரியரின் மகள் பக்கத்து வீட்டில் இருக்கும் சிறுமிக்கு நடனம் சொல்லிக்கொடுக்கின்றார். நடனப்போட்டியில் பங்குபற்றுவதற்கான கனவில் இருக்கும் சிறுமிக்கு, மிதிவெடியில் கால் போகின்றது. அந்தக் காட்சியை நேரடியாகப் பார்க்கின்ற சிங்களக் குடும்பத்தினருக்கு -முக்கியமாய் ஜேவிபி ஆதரவாய் இருக்கும் நதிக்கு- தனது போர் குறித்த பார்வைகளை மீளாய்வு செய்யவேண்டிய அவதி வருகின்றது. தமிழ் ஆசிரியரும், அந்த சிங்கள குடும்பத்தலைரும் தொடர்ந்து அரசியல் குறித்து உரையாடிக்கொண்டிருக்கின்றார

Edited by மோகன்

என்னவொரு அருமையான படைப்பு.அனைவரும் பார்க்க வேண்டிய படம்.இயக்குனாருக்கு பாரட்டுக்கள்.

என்ன....... எம்மவர்கள் எவராலும் இப்படியானதொரு உணர்வுபூர்வமான் படைப்பெதையும்

எடுக்க முடியாமல் இருப்பதை நினைக்கும் போது எங்கேயோ இடிக்கிறது.அத்துடன் தொடர்ந்தும் குண்டு சட்டிக்குள்ளேயே

குதிரை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் .

எப்போது வெளியே வருவார்களோ??????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படத்தை பார்த்தேன்.. நீண்ட நாட்களுக்கு முன்பு..!

படத்தின் அமைவு- நெறியாள்கை -வசன அமைப்பு -ஒளிப்படம் - என்று அனைத்துமே நன்றாகவே இருந்தது. உண்மையில் மற்றவர்கள் சொன்னத போல இப்படியான படங்கள் எம்மவர்களிடமிருந்து இது வரை வரவில்லை. இப்படியான படங்களை எடுக்கும் பட்சத்தில் தென்னிந்திய படங்களையே விஞ்சும் நிலைக்கு எம் படைப்புக்கள் மேலெளும் என்பதில் ஐயமில்லை.

இருப்பினும்...!

விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்ட சில கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. எமது தேசியம:, உரிமை என்பதற்க்குள் மட்டுமே நாம் தற்போது சிந்திக்க முடியும். அது மட்டுமன்றி, சிங்கள், முஸ்லீம் மக்களை ஒதுக்கி அல்லது புறந்தள்ளி விட்டு இந்திய இராணுவத்தை தமிழர்கள் அழைக்கவில்லை. மாறாக இந்திய இராணுவம் சிங்கள் ஆட்சியாளர்களின் துணையுடனே எம் தேசத்துக்குள் புகுந்து கொண்டது. எம்மகள் அவர்கள் மீது நம்பிக்கை வைத்தார்கள் என்பது தவறல்ல ஆனால் "அமைதி" என்ற பெயரில் வந்தவர்கள் மீது நம்பிக்கை வைப்பதை தவிர அன்றைய சூழலில் எம் மக்களுக்கு என்ன தெரிவிருந்திருக்கும்?

புhந்துணர்வை ஊட்டக்கூடிய வகையில் சிங்கள மக்களையும், முஸ்லீம்களையும் நாம் நேசிக்க தயாராய் இருந்தால் மட்டும் போதாது, அவர்களும் எம்மை நேசிக்க வேண்டும்.

அவர்களுக:குள்ளும் நல்லவர்கள் இருக்கின்றனர் இல்லை என்று சொல்ல வில்லை. ஆனால் அதே அளவு இனவாதிகள் இருக்கின்றனர். ஆனால் என்ன ஒரு விடயம், நல்லவர்களின் குரல்கள் இனவாதத்தின் நெருப்புக்குள் பொசுங்கி போய்விடுகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் பார்த்தனான்..... :unsure: படம் நல்லர எடுத்திருக்கினம்..... ஆனால் பார்த்து கவலையா இருந்தது.... இப்பிடி இனங்களுக்குள்ள இருக்கிற புரிந்துணர்வ வளக்க ...... சாதாரணமான மக்களுக்கும் விளங்கிற மாதிரி படங்கள எடுத்தால் நல்லம்.... தொடந்து இப்பிடி படங்கள் வரணும்....

இன்றுதான் இப்படத்தை பார்த்தேன். நல்லதொரு படைப்பு. ஆமா இதை இணையத்தில் தான் பார்க்கலாமா? இறுவட்டில் வெளியாகல்லையா? வெளியானால் எல்லா மக்களும் பார்ப்பார்கள். பார்த்தால் தானே புரியும்

  • 4 weeks later...

லிங் தந்தால் நானும் பார்பேனே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.