Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சித்தாண்டியில் சட்ட விரோத குடியேற்றத்தை தடுத்தும் மயிலத்தமடு மேச்சல் நிலத்தை மீட்டுத் தருமாறு கோரியும் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

17 SEP, 2023 | 01:23 PM
image
 

மட்டக்களப்பு சித்தாண்டி பிரதேச கால்நடை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (17) 3ஆவது நாளாக சித்தாண்டியில் தொடர்கிறது. 

பண்ணையாளர்களும், கால்நடைகளும் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் அநீதிக்கு எதிரான அறவழிப் போராட்டமாக இத்தொடர் போராட்டம் இடம்பெறுகின்றது.

 

IMG_20230916_105846_504.jpg

மட்டக்களப்பு செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் எல்லையில் உள்ள தங்களது மேய்ச்சல் தரைப் பிரதேசமான மயிலத்தமடு, பெரியமாதவனைப் பரப்பில் தொடரும் சட்ட விரோத குடியேற்றம் தடுக்கப்பட்டு மேய்ச்சல் தரைகளை தங்களுக்கு மீட்டுத் தருமாறு கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

IMG_20230916_105802_805.jpg

இவ் அறவழிப் போராட்டத்தினை மயிலத்தமடு, பெரியமாதவனை கால்நடை வளர்ப்போர் அமைப்பு மற்றும் மட்டக்களப்பு கமநல அமைப்புக்களால்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

IMG_20230915_122428_095.jpg

கடந்த 15.09.2023 அன்று காலை சித்தாண்டி பிரதான வீதியில் ஒன்று கூடியவர்கள் தங்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி வழியாக கோஷங்களை எழுப்பியவாறும் பதாதைகளை தாங்கியவாறும் சித்தாண்டி முற்சந்தி பிள்ளையார் ஆலயத்தினை வந்தடைந்தனர்.

IMG_20230915_112445_930.jpg

அங்கு பிள்ளையாரை வணங்கி தங்களது அறவழிப் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என சிதறு தேங்காய் உடைத்து அறவழிப் போராட்டத்தினை ஆரம்பித்தனர். தங்களுக்கு நீதி கிடைக்கும் வரை இவ் போராட்டமானது சுழற்சியான முறையில் தொடருமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த பிரதேசத்தில் தொடர்ச்சியான முறையில் கால்நடைகள் பெரும்பான்மை சமூகத்தினரால் துப்பாக்கி சூடு நடாத்தி கொல்லப்படுவதும், இறைச்சிக்காக வெட்டப்படுவதும் களவாடப்படுவதுமான நிலை காணப்படுவதுடன் பண்ணையாளர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

பொலநறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்தோர் அப் பிரதேசத்திற்கு வருகை தந்து அத்துமீறிய குடியேற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தங்களது பயிர் செய்கை நடவடிக்கைக்காக கால் நடை உணவாக உட்கொள்ளும் புற்களை உழவடித்து அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் கால் நடைகளுக்கு மேய்ச்சல் தரை அழிவடைந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். இவர்களது இச் செயற்பாட்டினால் பால் உற்பத்தி குறைவடைந்துள்ளதுடன் கால் நடைகளை விற்று விட்டு பிரதேசத்தினை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

போராட்டத்திற்கு வலு சேர்கும் வரையில் சித்தாண்டி பிரதேசத்தின் பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிகள், கமக்கார அமைப்புக்கள், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக ப.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், முன்னாள் மாகான சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், முன்னாள் மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர்களும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளான சிவலோகநாதன், கு.வி.லவக்குமார் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பவானந்தனும் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/164750

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேய்ச்சல்தரை பிரச்சினையை தீர்க்க வந்த பிள்ளையானிடம் போராட்டக்காரர்கள் முன்வைத்த நிபந்தனை !

Published By: VISHNU

27 SEP, 2023 | 12:44 PM
image
 

பண்ணையாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு உத்தரவாதம் வழங்குவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்த போதும் எமது நிலம் ஆக்கிரமிப்பு செய்வதுடன் எங்களது கால்நடைகளுக்கு தீங்கு விளைவிப்போர் அவ்விடத்தில் இருந்து வெளியேறிய பின்பே நாம் எல்லோரும் மேச்சல் தரைக்கு செல்வோம். அதுவும் அரச அதிகாரிகளே எங்களை அழைத்துச் செல்லவேண்டும் அதுவரை அங்கு செல்லமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பண்ணையாளர்கள் இராஜங்க அமைச்சரிடம் பதில் தெரிவித்தனர்.

WhatsApp_Image_2023-09-27_at_11.03.10_AM

மயிலத்தமடு, மாதவனை கால்நடை மேய்ச்சல் தரை விடயமாக ஜனாதிபதியின் செயலாளர் மூலம் ஜனாதிபதியுடன் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு மகாவலி அதிகார சபையுடன் பேசியதையடுத்து அங்கிருப்பவர்களை வெகு விரைவாக வெளியேற்றுவது என்றும் பண்ணையாளர்களுக்கு வந்திருக்கின்ற நம்பிக்கையீனத்தை குறைப்பதற்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதாகவும் அதற்கு அவ்விடத்தில் தற்காலிக பொலிஸ் சோதனைச் சாவடி அமைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சித்தாண்டியில் பண்ணையாளர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான அறவழிப் போராட்டத்திற்கு பொருத்தமான தீர்வொன்றை பெற்று கொடுக்கும் வகையில் செவ்வாய்கிழமை (26) மாலை பண்ணையாளர்களுடன் கலந்துரையாடிய பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில் கிழக்கு மாகாணத்தில் சிங்கள, தமிழ் மக்களிடையே முரன்பாடுகள் ஏற்படாமல் தவீர்த்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பண்ணையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கால் நடைகளை குறித்த பிரதேசத்திற்கு எடுத்துச் சென்று இருசாராருக்கும் பிணக்குகள் ஏற்படாதவகையில் நிர்வாக செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் தான் மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவராக இருப்பதாலும் மக்கள் கனிசமான அளவு வாக்கழித்துள்ளனர் என்ற அடிப்படையில் இவ்விடயம் தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் சிங்கள, தமிழ் மக்களிடையே முரன்பாடுகள் ஏற்படாமல்  தவீர்த்து பொருளாதாரத்தை மேம்படுத்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கான உத்தரவாதம் வழங்குவதாக தெரிவித்தார்.

இவ்வியடத்தில் நம்பிக்கையிருந்தால் தங்களது போராட்டத்தை கைவிடுமாறும் இல்லையென்றால் தங்களது ஜனநாயக போராட்டத்தை தொடரமுடியும் என்றும் தெரிவித்தார்.

தற்போது பெரும்போக வேளான்மை செய்கைக்காக உழவு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் கால் நடைகளை அகற்றவேண்டிய தேவை உள்ளதாகவும் அதற்கு நீங்கள்தான் உதவிபுரிய வேண்டும் என்று பண்ணையாளர்களினால் கோரிகை விடுக்கப்பட்டது.

அத்துடன் அங்கு சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு செய்வதுடன் எங்களது கால்நடைகளுக்கு தீங்கு விளைவிப்போர் அவ்விடத்தில் இருந்து வெளியேறிய பின்பே நாம் எல்லோரும் மேச்சல் தரைக்கு செல்வோம்.

அதுவோம் அரச அதிகாரிகளே எங்களை அழைத்துச் செல்லவேண்டும் அதுவரை அங்கு செல்லமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பண்ணையாளர்கள் அமைச்சரிடம் பதில் தெரிவித்தனர்.

கால்நடை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் இன்றுடன் 13 ஆவது நாளாக சித்தாண்டியில் பால் பண்ணைக்கு முன்பாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

https://www.virakesari.lk/article/165550

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மயிலத்தமடு ஆர்ப்பாட்டங்கள் குறித்து செய்தி வெளியிட்ட இரு ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் - பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு

Published By: RAJEEBAN   09 NOV, 2023 | 09:43 AM

image

மட்டக்களப்பில் மயிலத்தமடு  ஆர்ப்பாட்டம் குறித்த செய்திகளை வெளியிட்ட இரண்டு சுயாதீன ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு கவலை வெளியிட்டுள்ளது.

புண்ணியமூர்த்தி சசிகரன், வலசிங்கம் கிருஸ்ணகுமார் என்ற இரண்டு சுயாதீன  ஊடகவியலாளர்களிற்கு எதிரான விசாரணைகளை அதிகாரிகள் உடனடியாக கைவிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான அவர்களின் செய்தியறிக்கையிடலிற்காக பழிவாங்கும் நோக்கில் இது இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர்கள் இடையூறு இன்றி பணியாற்றுவதற்கு அனுமதிக்கப்படவேண்டும் என  சிபிஜே வேண்டுகோள் விடுத்துள்ளது.

https://www.virakesari.lk/article/168867

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.