Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசிய விளையாட்டு போட்டிகள்: இந்தியா பதக்கங்களை குவிக்க வாய்ப்புள்ள விளையாட்டுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஆசிய விளையாட்டு போட்டிகள்: இந்தியாவின் பார்வை எந்த விளையாட்டின் மீது இருக்கும் மற்றும் இந்த போட்டிகள் பற்றிய முக்கியமான விஷயங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கடந்த 2018ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிருக்கான ஹெபடாத்லான் பிரிவில் இந்தியாவுக்காக ஸ்வப்னா பர்மன் தங்கப்பதக்கம் வென்றார்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், அபய் குமார் சிங்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

சீனாவின் ஹாங்சோ நகரில், 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

இந்த விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆண்டே நடத்தப்பட இருந்தன. ஆனால் கோவிட் -19 காரணமாக அது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கு முன் 1951 முதல் 2018 வரை 18 முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த முறை அனைவரின் கவனமும் எந்த விளையாட்டு மற்றும் வீரர் மீது இருக்கும்? எல்லா விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்வோம்.

ஆசிய விளையாட்டு போட்டிகள்-2023 எங்கே, எப்போது தொடங்குகிறது?

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் இன்று முதல் அக்டோபர் 8 வரை நடைபெற உள்ளன.

இது தவிர நிங்போ, வென்சோ, ஹூசோ, ஷவோக்ஸிங், ஜின்ஹூவா ஆகிய ஐந்து நகரங்களிலும் இந்த நிகழ்வுகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

 

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் எத்தனை நாடுகள் பங்கேற்கின்றன?

ஆசிய விளையாட்டு போட்டிகள்

பட மூலாதாரம்,VCG/GETTY IMAGES

இந்தப் போட்டியில் மொத்தம் 40 விளையாட்டுகள் இடம்பெறுகின்றன. இந்த விளையாட்டுகளின் 61 கிளைகளுடன் மொத்தம் 481 போட்டிகள் நடத்தப்படும்.

இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, வடகொரியா, இரான், இந்தோனீசியா உட்பட மொத்தம் 45 நாடுகள் இந்தப் போட்டிகளில் பங்கேற்கின்றன. இதற்காக சுமார் 12 ஆயிரம் வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து எத்தனை வீரர்கள் பங்கேற்கிறார்கள்?

இந்தியாவில் இருந்து 38 விளையாட்டுகளில் மொத்தம் 634 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் தடகள போட்டிக்கான அணி பெரியது. மொத்தம் 65 வீரர்கள் அனுப்பப்பட உள்ளனர்.

2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்து அணியில் 44 வீரர்களும், படகோட்டும் போட்டியில் 33 பேர், துப்பாக்கி சுடுவதில் 30 பேர், பேட்மின்டன் விளையாட்டில் 19 பேர் கொண்ட அணி பங்கேற்க உள்ளது.

இந்தியாவுக்கு பதக்க நம்பிக்கை உள்ள விளையாட்டு மற்றும் வீரர்கள்

18வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் ஆட்டம் இன்று வரையிலான சிறப்பான ஒன்றாக் கருதப்படுகிறது. இந்தியா மொத்தம் 69 பதக்கங்களை வென்றது. 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலப் பதக்கங்கள் இதில் அடங்கும்.

1951 முதல் 2018 வரையிலான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் செயல்திறனைப் பார்த்தால், தடகளப் போட்டியில் இந்திய வீரர்கள் அதிகபட்சமாக 240 பதக்கங்களை வென்றுள்ளனர்.

இந்த ஆண்டின் இந்திய அணிக்கு ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தலைமை தாங்குகிறார். ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவர் தங்கப் பதக்கம் வென்றார்.

 

பதக்கம் வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் இந்திய வீரர்கள்

ஆசிய விளையாட்டு போட்டிகள்: இந்தியாவின் பார்வை எந்த விளையாட்டின் மீது இருக்கும் மற்றும் இந்த போட்டிகள் பற்றிய முக்கியமான விஷயங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தடகளம் (ட்ராக் அண்ட் ஃபீல்ட்)

  • நீரஜ் சோப்ரா – ஆடவர் ஈட்டி எறிதல்
  • முகமது அனஸ் யஹியா – 4x400மீ இருபாலர் தொடர் ஓட்டம், ஆடவர் 400மீ, ஆடவர் 4x400மீ தொடர் ஓட்டம்
  • ஜோதி யாராஜி - மகளிர் 100 மீ தடை ஓட்டம், மகளிர் 200 மீ
  • மன்பிரீத் கெளர் – மகளிர் ஷாட் புட்
  • ஷைலி சிங் – மகளிர் நீளம் தாண்டுதல்

பேட்மிண்டன்

  • கிடாம்பி ஸ்ரீகாந்த் – ஆடவர் ஒற்றையர்
  • லக்ஷ்யா சென் – ஆடவர் ஒற்றையர்
  • பிவி சிந்து – மகளிர் ஒற்றையர்
  • காயத்ரி கோபிசந்த் – மகளிர் இரட்டையர்
  • எச்எஸ் பிரணாய் – ஆடவர் ஒற்றையர்
  • த்ரிஸா ஜாலி - மகளிர் இரட்டையர்

குத்துச்சண்டை

  • நிகத் ஜரீன் - மகளிர் 50 கிலோ
  • ப்ரீத்தி பவார் – மகளிர் 54 கிலோ
  • பர்வீன் ஹூடா – மகளிர் 57 கிலோ
  • ஜாஸ்மின் லம்போரியா - மகளிர் 60 கிலோ
  • லவ்லீனா போர்கோஹைன் - மகளிர் 75 கிலோ

சதுரங்கம்

  • பிரக்ஞானந்தா - ஆடவர்
  • கோனேரு ஹம்பி - மகளிர்
  • ஹரிகா துரோணவல்லி – மகளிர்
  • வைஷாலி ரமேஷ் பாபு – மகளிர்
  • குகேஷ் டி – ஆடவர்
  • விதித் குஜராத்தி – ஆடவர்

ஃபென்சிங்

  • பவானி தேவி
 
ஆசிய விளையாட்டு போட்டிகள்

பட மூலாதாரம்,VCG

கோல்ஃப்

  • அதிதி அஷோக் – மகளிர்

ஸ்குவாஷ்

  • ஜோஷ்னா சின்னப்பா - மகளிர்
  • தீபிகா பல்லிகல் – மகளிர்
  • அனாஹத் சிங் - மகளிர்

பளு தூக்குதல்

  • மீராபாய் சானு – மகளிர் 49 கிலோ

துப்பாக்கி சுடுதல்

  • மனு பாக்கர் – மகளிர் 25 மீ ஸ்போர்ட்ஸ் பிஸ்டல்
  • ரிதிம் சங்வான் – மகளிர் 25 மீ ஸ்போர்ட்ஸ் பிஸ்டல்
  • சிஃப்ட் கெளர் சம்ரா – மகளிர் 50மீ ரைபிள் 3-பொசிஷன்

மல்யுத்தம்

  • அந்திம் பஞ்சால் - மகளிர் 53 கிலோ
  • பஜ்ரங் புனியா – ஆடவர் 65 கிலோ
  • தீபக் புனியா

டேபிள் டென்னிஸ்

  • ஷரத் கமல் - ஆடவர் ஒற்றையர், இரட்டையர்
  • ஜி சத்யன் – ஆடவர் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர்
  • மனிகா பத்ரா – மகளிர் ஒற்றையர், இருபாலர் இரட்டையர்

வில்வித்தை

  • அதனு தாஸ்
  • அதிதி கோபிசந்த் சுவாமி
  • பர்னீத் கெளர்

ஹாக்கி, கிரிக்கெட், கால்பந்து மற்றும் கபடி விளையாட்டுகளிலும் பதக்கங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

 

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2023 கிரிக்கெட் பற்றிய முக்கிய விஷயங்கள்

ஆசிய விளையாட்டு போட்டிகள்: இந்தியாவின் பார்வை எந்த விளையாட்டின் மீது இருக்கும் மற்றும் இந்த போட்டிகள் பற்றிய முக்கியமான விஷயங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டி20 முறையில் கிரிக்கெட் விளையாடப்படும். முதன்முறையாக ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகளை அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடைபெறும் இந்தப் போட்டிகளுக்கு இம்முறை சர்வதேசப் போட்டிகள் என்ற அந்தஸ்தையும் ஐசிசி வழங்கியுள்ளது.

ஆடவர் மற்றும் மகளிர் அணிகளில் தலா 20 பேர் கொண்ட குழு அனுப்பப்படும். 5-5 வீரர்கள் காத்திருப்பில் (stand by) வைக்கப்படுவார்கள்.

ஆடவர் கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 28ஆம் தேதி தொடங்கி, இறுதிப் போட்டி அக்டோபர் 7ஆம் தேதி நடைபெறும்.

மகளிர் கிரிக்கெட் போட்டிகள் ஷெஜியாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக கிரிக்கெட் மைதானத்தில் செப்டம்பர் 19 முதல் 28 வரை நடைபெறும்.

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி: ரிதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், ராகுல் திரிபாதி, ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், சிவம் மாவி, சிவம் துபே, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்)

காத்திருப்பு வீரர்கள்: யஷ் தாக்கூர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, சாய் கிஷோர், சாய் சுதர்ஷன்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி: ஹர்மன்பிரீத் கெளர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தானா (துணை கேப்டன்), ஷெஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், அமன்ஜோத் கெளர், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), அஞ்சலி சர்வானி, தேவிகா வைத்யா, ராஜேஸ்வரி கெய்க்வாட், மின்னு மணி, கனிகா அஹுஜா, திதாஸ் சாது, அனுஷா பாரெட்டி, உமா சேத்ரி (விக்கெட் கீப்பர்)

காத்திருப்பு வீரர்கள்: காஷ்வி கெளதம், சினேஹ் ராணா, ஹர்லீன் தியோல், பூஜா வஸ்த்ராகர், சைகா இஷாக்

 
ஆசிய விளையாட்டு போட்டிகள்

பட மூலாதாரம்,OLYMPIC COUNCIL OF INDIA ARCHIVES

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் எந்தெந்த நாடுகள் முன்னணியில் உள்ளன?

முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 1951ஆம் ஆண்டு புதுடெல்லியில் நடைபெற்றது. இந்த விளையாட்டுகள் முன்னரே தீர்மானிக்கப்பட்ட அட்டவணையின்படி 1950இல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஏற்பாடுகளில் தாமதம் காரணமாக அது 1951க்கு ஒத்திவைக்கப்பட்டது.

லண்டனில் 1948ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ஜப்பான் அனுமதிக்கப்படவில்லை. மேலும் ஆசிய விளையாட்டு கூட்டமைப்பின் நிர்வாக கூட்டத்தில் பங்கேற்கவும் அந்த நாடு அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அது இந்த விளையாட்டுகளில் பங்கேற்றது.

முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் அதிக பதக்கங்களை வென்று ஜப்பான் முதலிடத்தைப் பிடித்தது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ஜப்பானும், சீனாவுமே முதலிடத்தில் இருந்துள்ளன.

சீனா, ஜப்பான், தென் கொரியா, இரான் மற்றும் இந்தியா அதிக வெற்றிகளைப் பெற்ற முதல் 5 நாடுகள்.

 

1951 முதல் இந்தியாவின் செயல்பாடு எப்படி உள்ளது?

ஆசிய விளையாட்டு போட்டிகள்: இந்தியாவின் பார்வை எந்த விளையாட்டின் மீது இருக்கும் மற்றும் இந்த போட்டிகள் பற்றிய முக்கியமான விஷயங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

1951, புது டெல்லி, இந்தியா

முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கப் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தது. இந்தியா 15 தங்கம், 16 வெள்ளி என மொத்தம் 31 பதக்கங்களை வென்றது. இதுவே இதுவரையிலான இந்தியாவின் சிறந்த தரவரிசையாகும்.

மணிலா, பிலிப்பைன்ஸ்

இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. இந்தியா 5 தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை வென்றது.

டோக்கியோ, ஜப்பான்

மூன்றாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 7வது இடத்தில் இருந்தது. இந்தியா 5 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை வென்றது.

ஜகார்த்தா, இந்தோனேஷியா

நான்காவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 10 தங்கம், 13 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 33 பதக்கங்களை வென்றது.

பாங்காக், தாய்லாந்து

ஐந்தாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 7 தங்கம், 3 வெள்ளி, 11 வெண்கலம் வென்றது. இந்தியா ஐந்தாவது இடத்தில் இருந்தது.

பாங்காக், தாய்லாந்து

ஆறாவது ஆசிய விளையாட்டுப் போட்டியும் பாங்காக்கில் நடைபெற்றது. இந்தியாவுக்கு 6 தங்கம், 9 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்கள் கிடைத்தன.

 
ஆசிய விளையாட்டு போட்டிகள்: இந்தியாவின் பார்வை எந்த விளையாட்டின் மீது இருக்கும் மற்றும் இந்த போட்டிகள் பற்றிய முக்கியமான விஷயங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தெஹ்ரான், இரான்

ஏழாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா ஏழாவது இடத்தைப் பிடித்தது. இந்தியா 4 தங்கம், 12 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களை வென்றது.

பாங்காக், தாய்லாந்து

இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 26 பதக்கங்களை வென்றது. இதில் 10 தங்கம், 11 வெள்ளி, 5 வெண்கலம் அடங்கும்.

புது டெல்லி, இந்தியா

ஒன்பதாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. இந்தியா 13 தங்கம், 19 வெள்ளி, 25 வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களை வென்றது.

சியோல், தென் கொரியா

பத்தாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 37 பதக்கங்களை வென்றது.

பெய்ஜிங், சீனா

பதினோராவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா டாப்-10இல் இருந்து 12வது இடத்திற்குத் தள்ளப்பட்டது. இந்தியா ஒரு தங்கம், 8 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்களை மட்டுமே பெற்றது.

ஹிரோஷிமா, ஜப்பான்

பன்னிரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 8வது இடத்தில் இருந்தது. இந்தியா 4 தங்கம், 3 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்களை வென்றது.

பாங்காக், தாய்லாந்து

பதிமூன்றாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 7 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்களை வென்றது. இந்தியா 9வது இடத்தை பிடித்தது.

 
ஆசிய விளையாட்டு போட்டிகள்: இந்தியாவின் பார்வை எந்த விளையாட்டின் மீது இருக்கும் மற்றும் இந்த போட்டிகள் பற்றிய முக்கியமான விஷயங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

புஸான், தென் கொரியா

பதினான்காவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா ஏழாவது இடத்தைப் பிடித்தது. இந்தியா 11 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 36 பதக்கங்களை வென்றது.

தோஹா, கத்தார்

பதினைந்தாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா மொத்தம் 52 பதக்கங்களை வென்றது. இதில் 10 தங்கம், 16 வெள்ளி, 26 வெண்கலம் அடங்கும்.

க்வான்சோ, சீனா

பதினாறாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 14 தங்கம், 17 வெள்ளி, 34 வெண்கலம் என மொத்தம் 65 பதக்கங்களை வென்றது. இந்த விளையாட்டுகளில் கிரிக்கெட் அறிமுகமானது. இருப்பினும் இந்தியா அதில் பங்கேற்கவில்லை.

இன்சியான், தென் கொரியா

இன்சியான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா மொத்தம் 57 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 11 தங்கம், 10 வெள்ளி, 36 வெண்கலப் பதக்கங்கள் உள்ளன. இந்தியா எட்டாவது இடத்தில் இருந்தது.

ஜகார்த்தா, இந்தோனேஷியா

பதினெட்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 69 பதக்கங்களை வென்றது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரையிலான இந்தியாவின் சிறந்த செயல்பாடு இதுவாகும். இந்தப் போட்டியிலும் இந்தியா எட்டாவது இடத்தையே பிடித்தது.

https://www.bbc.com/tamil/articles/crg8gmkp4lzo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசிய விளையாட்டு விழாவை சீன ஜனாதிபதி ஆரம்பித்துவைத்தார் : இலங்கை தேசிய கொடியை அநுர, கயன்திகா ஏந்திச்சென்றனர்

24 SEP, 2023 | 06:49 AM
image

(நெவில் அன்தனி)

சீனாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஸெஜியாங் மாகாணத்தின் தலைநகரான ஹங்ஸோ நகரில் 19 ஆவது  ஆசிய விளையாட்டு விழா வண்ணமயமான தொடக்கவிழா வைபவத்துடன் சனிக்கிழமை (23) ஆரம்பமானது.

top_photo_asian_games_opening_ceremony.p

ஆசியாவின் 45 நாடுகளினதும் விளையாட்டு வீர, வீராங்கனைகளின் ஆற்றல்களை வெளிக்கொண்டுவரப்போகும் 19ஆவது ஆசிய விளையாட்டு விழாவை சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் சம்பிரதாயவூர்வமாக தொடக்கி வைத்தார்.

அணி வகுப்பில் இலங்கை தேசிய கொடியை கோல்வ் வீரர் அநுர ரோஹனவும் மத்திய தூர ஓட்ட வீராங்கனை கயன்திகா அபேசேகரவும் கூட்டாக ஏந்திச் சென்றனர்.  

1_asian_games_opening_ceremony_sri_lanka 

எதிர்காலத்தில் இதயத்திற்கு இதயம் என்ற கருப்பொருளில் நடத்தப்படும் ஹங்ஸோ 2022 ஆசிய விளையாட்டு விழாவின் ஆரம்ப விழாவுக்கு முன்பதாக கலைஞர்களின் இசை நடனம் இடம்பெற்றது.

மேலும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க நாள், சீனாவின் 24 சூரிய சொற் தொகுதிகளில் ஒன்றான இலையுதிர் உத்தராயணத்துடன் ஒத்துப் போகிறது. இது சீன கலாசாரத்தில் அறுவடை மற்றும் மீள் இணைவை குறிக்கிறது.

கோரோனா - 19 காரணமாக ஒரு வருடத்தால் பிற்போடப்பட்ட ஆசிய விளையாட்டு விழா, ஹங்ஸோ 2022 ஆசிய விளையாட்டு விழா என்ற அதே பெயரில் இவ் வருடம் அரங்கேறுகிறது.

ஹங்ஸோ ஒலிம்பிக் விளையாட்டரங்கில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஆரம்ப விழாவில் வழமைபோல் விளையாட்டு வீர, வீராங்கனைகளின் அணிவகுப்பு, ஆசிய விளையாட்டு விழா தீபம் ஏற்றல் உட்பட 15 வகையான கலை, கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

6_asian_games_opening_ceremony_A_digital

ஆசிய விளையாட்டு விழா தீபம் டிஜிட்டல் முறையில் ஏற்றி வைக்கப்பட்டது சிறப்பம்சமாகும்.

ஆப்கானிஸ்தான் அணிவகுப்பை ஆரம்பித்து வைத்ததுடன் யேமனைத் தொடர்ந்து வரவேற்பு நாடான சீனா அணிவகுப்பை முடித்து வைத்தது.

அணி வகுப்பில் இலங்கை தேசிய கொடியை கோல்வ் வீரர் அநுர ரோஹனவும் மத்திய தூர ஓட்ட வீராங்கனை கயன்திகா அபேசேகரவும் கூட்டாக ஏந்திச் சென்றனர்.

விசேடமாக அமைக்கப்பட்ட இரண்டு வாயில்களில்  ஒன்றின் வழியாக வீரர்கள் அரங்கினுள் நுழைந்து அணிவகுத்துச் சென்று அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட 5000 ஆசனங்களில் அமர்ந்து கலாசார நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தனர்.

செப்டெம்பர் 23ஆம் திகதி முதல் அக்டோபர் 8ஆம் திகதிவரை நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றும் 45 நாடுகளினதும் தேசிய ஒலிம்பிக் குழுக்களைச் சேர்ந்த வீரர்களும் அதிகாரிகளும் தமது பதிவுகளைப் பூர்த்தி செய்துள்ள வீரர்கள் கிராமத்தில் தங்கியுள்ளதாக ஹங்ஸோ ஆசிய விளையாட்டு விழா ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.

எவ்வாறாயினும் இலங்கை குழுவினர் கட்டம் கட்டமாகவே ஹங்ஸோ செல்லவுள்ளனர். கிரிக்கெட் வீர, வீராங்கனைகள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளதுடன் ஏனைய வீர, வீராங்கனைகள் வீரர்கள் கிராமத்தில் தங்குவர் என இலங்கை குழுவின் தலைமை அதிகாரி நிஷான்த பியசேன தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து மகளிர் கிரிக்கெட் அணியினர், படகோட்டிகள், கடற்கரை கரப்பந்தாட்ட வீராங்கனைகள் ஏற்கனவே சீனா சென்று முன்னோடி போட்டிகளில் கலந்துகொண்டனர்.

படகோட்டம் மற்றும் கடற்கரை கரப்பந்தாட்டத்தில் பங்குபற்றிய இலங்கையர்கள் முதல் சுற்றுகளில் தோல்வி அடைந்து வெளியேறினர்.

மகளிர் இருபது 20 கிரிக்கெட்  கால் இறுதிப் போட்டியில் தாய்லாந்தை 8 விக்கெட்களால் வெற்றிகொண்ட இலங்கை, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள அரை இறதியில் பாகிஸ்தானை சந்திக்கவுள்ளது.

19ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் மெய்வல்லுநர், வில்வித்தை, நீச்சல், பெட்மின்டன், குத்துச்சண்டை, சதுரங்கம், ஈ ஸ்போர்ட்ஸ், ஜூடோ, கராத்தே, ஸ்கொஷ், டய்க்வொண்டோ, பழுதூக்கல், மல்யுத்தம், வூஷு, படகோட்டம், துடுப்புப் படகோட்டம், கோல்வ், கடற்கரை கரப்பந்தாட்டம், றக்பி, கிரிக்கெட் (ஆண்கள் மற்றும் பெண்கள்) ஆகிய 20 வகையான விளையாட்டுக்களில் இலங்கை சார்பாக 95 வீர, வீராங்கனைகள் பங்குபற்றுகின்றனர்.

இம்முறை ஹங்ஸோ ஆசிய விளையாட்டு விழாவில் சுமார் 12,500 வீர, வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர். ஆசிய விளையாட்டு விழா வரலாற்றில் இவ்வளவு பெருந்தொகை பங்குபற்றுவது ஒரு சாதனையாகும்.

இந்தோனேசியாவில் 2018இல் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் சுமார் 11,300 வீர, வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர்.

 

ஆசிய ஒலிம்பிக் பேரவை வீரர்கள் செயற்குழு

ஆசிய ஒலிம்பிக் பேரவை வரலாற்றில் முதல் தடவையாக 10 பேர் கொண்ட வீரர்கள் செயற்குழு, வீரர்களின் வாக்குகள் மூலம் தெரிவுசெய்யப்படவுள்ளது.

இதுவரை 1100 வீரர்கள் வாக்களித்துள்ளதாகவும் இன்னும் 92 வீதமானவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஆசிய ஒலிம்பிக் பேரவையின் பதில் பணிப்பாளர் நாயகம் விநோத் குமார் திவாரி தெரிவித்தார்.

உணவறையில் இருக்கும்போது வீரர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் எனவும் அக்டோபர் 6ஆம் திகதிவரை வாக்களிக்க முடியும் எனவும் அவர் கூறினார்.

5_asian_games_opening_ceremony_Chinese_P

2_asian_games_opening_ceremony.png

3_asian_games_opening_ceremony.png

4_asian_games_opening_ceremony.png

asian_games_lighting......jpg

https://www.virakesari.lk/article/165291

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெக்ஸ்வெல் 2010இல் முன்வைத்த யோசனைக்கு அமைய ஆசிய விளையாட்டு விழாவில் பட்டாசு வெடிகள் நீக்கம்

25 SEP, 2023 | 10:46 AM
image
 

(நெவில் அன்தனி)

இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா 13 வருடங்களுக்கு முன்னர் அக்காபல் கோவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் முன்வைத்த யோசனைக்கு அமைய 19ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்ப வைபவத்தில் பட்டாசுகளின் பயன்பாடு நீக்கப்பட்டிருந்தது.

ஆனால், டிஜிட்டெல் சுடர்களுக்கு பஞ்சம் இருக்கவில்லை.

max-de.jpg

விளையாட்டு விழாக்களின் ஆரம்பம் மற்றும் முடிவு வைபவங்களில் பட்டாசுகளின் பயன்பாட்டை குறைக்குமாறு அல்லது முற்றாக தடை செய்யுமாறு இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா முன்வைத்த யோசனை ஹங்ஸோ 2022 ஆசிய விளையாட்டு விழாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

13 வருடங்களுக்கு முன்னர் தான் முன்வைத்த யோசனை நிறைவேற்றப்பட்டதையிட்டு இலங்கையர் என்ற வகையில் பெருமை அடைவதாக மெக்ஸ்வெல் டி சில்வா கூறினார்.

19ஆவது ஆசிய விளையாட்டு விழாவுக்கான தொடக்க விழா ஹங்ஸோவில் சனிக்கிழமை (23) இரவு நடைபெற்றபோது ஆசிய விளையாட்டு விழா தீபத்தை ஒரு பெரிய டிஜிட்டல் மனிதனுடன் இணைந்து ஒலிம்பிக் தங்கப் பதக்க வீரர் வாங் ஷுன் ஏற்றிவைத்தார்.

தொடக்க விழாக்களில் வானவேடிக்கைகளின் பாரம்பரிய பயன்பாடு இடம்பெறவில்லை. பட்டாசு வெடிகள் காட்சியைக் கண்டுபிடித்த நாடுகளுக்கு குறிப்பாக சீனாவுக்கு இது பெரும் ஆச்சரியமாக இருந்தது. அத்துடன் அரங்கில் திரண்டிருந்த 50,000 பார்வையாளர்களையும் தொலைக்காட்சிகளில் ஆரம்ப விழா வைபவத்தை பார்வையிட்டவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

pattasu-2.jpg

 

பதக்கங்கள் பட்டியலில் சீனா ஆதிக்கம்

சீன பட்டாசுகள் வெடிக்காதபோதிலும் போட்டிகளின் முதலாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (24) சீன விளையாட்டு வீரர்கள் தங்கப் பதக்கங்களில் மிதந்து அசத்தினர்.

முதல் நாளன்று வழங்கப்பட்ட முதலாவது தங்கப் பதக்கங்களை வரவேற்பு நாடான சீனா சுவீகரித்தது.

இரண்டு வாரங்கள் நீடிக்கவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் படகோட்டம், குறிபார்த்து சுடுதல், வூஷு ஆகிய நிகழ்ச்சிகளில் வழங்கப்பட்ட முதலாவது தங்கப் பதக்கங்களை சீனர்கள் தமதாக்கிக்கொண்டனர்.

இரட்டை துடுப்பு படகோட்டப் போட்டியிலேயே சீனாவுக்கு முதலாவது தங்கப் பதக்கம் கிடைத்தது. அப் போட்டியில் ஸூ ஜியாக்கி, கியு ஸியுபிங் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து முதலாதம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்தனர்.

தொடர்ந்து பதக்க மழையில் மிதந்த சீனா முதலாம் நாள் போட்டிகள் நிறைவில் 20 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடத்தில் இருந்தது.

தென் கொரியா, ஜப்பான், ஹொங் கொங் சீனா, உஸ்பெகிஸ்தான், சைனீஸ் தாய்ப்பே ஆகியன தங்கப் பதக்கங்கள் வென்ற ஏனைய நாடுகளாகும்.

https://www.virakesari.lk/article/165363

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசிய விளையாட்டு விழா : கிரிக்கெட்டில் இலங்கைக்கு வெள்ளி

25 SEP, 2023 | 03:20 PM
image
 

(நெவில் அன்தனி)

சீனாவின் ஹங்ஸோவில் நடைபெற்றுவரும் 19ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் மகளிர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வெள்ளிப் பதக்கம் வென்று திருப்தி அடைந்தது.

இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை வென்றெடுத்த முதலாவது பதக்கம் இதுவாகும்.

உதேஷிகா ப்ரபோதனி, இனோகா ரணவீர, சுகந்திகா குமாரி ஆகிய பந்துவீச்சாளர்கள் பலம்வாய்ந்த இந்திய துடுப்பாட்டத்தைக் கட்டுப்படுத்தியபோதிலும் இலங்கை வீராங்கனைகள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியமை இலங்கையின் தோல்விக்கு காரணமானது.

ஹங்ஸோ விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (25) நடைபெற்ற மகளிர் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் 9 ஓட்டங்களால் தோல்வி அடைந்ததால் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம் சொந்தமானது.

இன்ச்சொன் 2014 ஆசிய விளையாட்டு விழாவில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கைக்கு மகளிர் கிரிக்கெட்டில்  கிடைத்த 2ஆவது ஆசிய விளையாட்டு விழா பதக்கம் இதுவாகும்.

இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 117 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

அனுஷ்கா சஞ்சீவனி (1), விஷ்மி குணரட்ன (0), அணித் தலைவி சமரி அத்தபத்து (12) ஆகிய மூவரும் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் ஆட்டம் இழக்க, இலங்கை 14 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

எனினும் ஹசினி பெரேரா (25), நிலக்ஷி டி சில்வா ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 36 ஓட்டங்களைப் பகிர்ந்து வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தினர்.

தொடர்ந்து நிலக்ஷி டி சில்வா (23), ஓஷாதி ரணசிங்க (19) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 28  ஓட்டங்களைப்   பகிர்ந்து இந்தியாவுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர். ஆனால் இருவரும் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்ததால் இலங்கை மீண்டும் அழுத்தத்தை எதிர்கொண்டது.

அதன் பின்னர் ஓட்டங்களைப் பெறுவதில் சிரமத்தை எதிர்கொண்ட இலங்கை, வெள்ளிப் பதக்கத்தை வென்று திருப்தி அடைந்தது.

  பந்துவீச்சில் டிட்டாஸ் சாந்து 6 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ராஜேஷ்வரி கயக்வாட் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.  

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட இந்தியா சார்பில் ஸ்ம்ரித்தி மந்தனா (46), ஜெமிமா ரொட்றிகஸ் (42) ஆகிய இருவரே திறமையை வெளிப்படுத்தி சுமாரான ஓட்டங்களைப் பெற்றனர்.

அவர்கள் இருவரும் 2ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 73 ஓட்டங்களே ஆட்டத்தில் திருப்பு முனையாக அமைந்தது.

ஏனைய வீராங்கனைகள் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளையே பெற்றனர்.

இந்தியாவின் பிரபல மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளான ஷபாலி வர்மா (9), ரிச்கா கோஷ் (9), அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர் (2), ஆமன்ஜோத் கோர் (1) ஆகியோர் இலங்கை பந்துவீச்சில் துவண்டு போயினர்.

பந்துவீச்சில் உதேஷிகா ப்ரபோதனி 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் இனோக்கா ரணவீர 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சுகந்திகா குமாரி 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

w-1.jpg

w-3.jpg

w-2.jpg

https://www.virakesari.lk/article/165406

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசிய விளையாட்டில் இலங்கைக்கு முதலாவது தங்கம்

Published By: VISHNU

04 OCT, 2023 | 05:48 PM
image
 

(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஆசிய விளையாட்டு விழாவின் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியை 2 நிமிடங்கள் 3.20 செக்கன்களில் நிறைவு செய்த இலங்கை வீராங்கனை தருஷி கருணாரட்ண முதலிடம் பிடித்து இலங்கைக்கான முதலாவது தங்கம் பதக்கம் வென்று கொடுத்தார். 

சீனாவின் ஹாங்சுவில் நடைபெற்று வரும் 19 ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் மெய்வல்லுநர் போட்டி நிகழ்வின் பெண்களுக்கான 800 மீற்றர் இறுதிப் போட்டி  புதன்கிழமை (4) இலங்கை நேரப்படி மா‍லை 4.55 மணிக்கு நடைபெற்றது.

இப்போட்டியில் பங்கேற்றிருந்த இலங்கை வீராங்கனையான தருஷி கருணாரட்ண 2 நிமிடங்கள் 3.20 செக்கன்களில் போட்டித் தூரத்தை நிறைவு செய்து தங்கம் பதக்கம் கைப்பற்றி இலங்கைக்கு பெருமை சேர்த்தார்.

இப்போட்டியின் இரண்டாவது இடத்தை பிடித்த இந்தியாவின் ஹார்மில்ன் பெய்ன்ஸ் ( 2 நிமிடங்கள் 3.75 செக்கன்கள்) வெள்ளிப் பதக்கத்தையும், மூன்றாவது இடத்தை பிடித்த சீனாவின்  வேங்க் சுன்யு (2 நிமிடங்கள் 3.90 செக்கன்கள்) வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இப்போட்டியில் பங்கேற்ற மற்றுமொரு இலங்கை வீராங்கனையான கயன்திக்கா அபேரட்ண 2 நிமிடங்கள் 5.87 செக்கன்களில் நிறைவு செய்து 8 ஆவது இடத்தை பிடித்தார்.

தருஷி கருணாரட்ன கைப்பற்றிய தங்கப் பதக்கமானது, ஆசிய விளையாட்டு விழா வரலாற்றில் இலங்கை கைப்பற்றிய 12 ஆவது தங்கப்பதக்கம் ஆகும். 

https://www.virakesari.lk/article/166099

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

17 வருடங்களின் பின் இலங்கைக்கு கிடைத்த பதக்கம்!

Nadeesha-696x522.jpg

இவ்வாண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று (03) இடம்பெற்ற பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த நதீஷா தில்ஹானி லேகம்கே (Nadeesha Dilhani Lekamge) 61.57 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

17 வருடங்களின் பின்னர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு கிடைத்த முதல் தடகள பதக்கம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் இந்தியா தங்கப் பதக்கத்தையும், சீனா வெண்கலப் பதக்கத்தையும் வென்றது. இதேவேளை ஆசிய விளையாட்டுப் போட்டி நடத்தும் சீனா 161 தங்கம், 90 வெள்ளி, 46 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 297 பதக்கங்களை வென்று முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஜப்பான் 33 தங்கம், 47 வெள்ளி, 50 வெண்கலம் என 130 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், 32 தங்கம், 42 வெள்ளி 65 வெண்கலம் என 139 பதக்கங்களை வென்று தென்கொரியா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

மேலும் இந்தியா 15 தங்கம், 26 வெள்ளி, 28 வெண்கலம் என 69 பதக்கங்களுடன் 4 ஆவது இடத்தைப் பிடித்துள்ள இதேநேரம் இலங்கை இரண்டு வெள்ளிப் பதக்கங்களுடன் 26 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

sp-news-sl-1.jpg

https://thinakkural.lk/article/275537

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.