Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனடா பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளது - இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என ட்ரூடோ பொய்சொன்னார் - அலிசப்ரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

26 SEP, 2023 | 10:40 AM
image
 

கனடா பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளது என நியுயோர்க்கில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

ஏஎன்ஐக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கனடா இந்திய இராஜதந்திர முறுகல் நிலை குறித்து கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ள அலிசப்ரி  உறுதியான ஆதாரங்கள் இன்றி இந்தியாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்தமைக்காக கனடா பிரதமரை கடுமையாக சாடியுள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ ஆதாரமற்ற பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர் என்பதால்  அவரது கருத்துக்கள் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

சில பயங்கரவாதிகள் கனடாவில் அடைக்கலம் பெற்றுள்ளனர் என குறிப்பிட்டுள்ள அவர் ஆதாரங்கள் அற்ற கடும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சுபாவம்  கனடா பிரதமருக்குள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரத்திலும் கனடா பிரதமர் அவ்வாறு நடந்துகொண்டார், இலங்கையில்  இனப்படுகொலை இடம்பெற்றதாக பெரும் பொய்யை சொன்னார் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்பதுஅனைவருக்கும் தெரியும் எனவும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கனடாவில் சீக்கிய செயற்பாட்டாளர் ஒருவர் கொல்லப்பட்டமையின் பின்னணியில் இந்திய அரசாங்கம் உள்ளது என்ற கனட பிரதமரின் குற்றச்சாட்டினால் இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையில் இராஜதந்திர முறுகல் நிலை உருவாகியுள்ள நிலையிலேயே இலங்கை வெளிவிவகார அமைச்சரின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/165449

  • கருத்துக்கள உறவுகள்

பகைவனுக்கு பகைவன் நண்பன் என்பதுபோல இந்த அலியும் அள்ளி விட்டிருக்கிறார். இன்னும் கொஞ்சம் விடடாள் சிங்களவர்கள் இல்லை , தமிழர்கள்தான் இனவழிப்பு செய்தார்கள் என்றும் சொல்லுவார். அனுபவிக்கும் சுகபோகங்களுக்கு இப்படி எல்லாம் சொல்லத்தானே வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி, இலங்கையில் இனப்படுகொலை நடைபெறவில்லையென்றால் சர்வதேச விசாரணைக்கு அஞ்சுவதேன்? ஐ. நா. வுக்கு வருடா வருடம் அறிக்கை கொண்டு செல்வதுமேன் என விளக்குவீர்களோ? பூனை கண்ணை மூடிக்கொண்டு விட்டது என்பதற்காக  உலகம் இருண்டு விடாது. உன் நண்பனை பற்றி சொல்லு, உன்னைப்பற்றி நான் சொல்லிறேன் என்பது உங்கள் இருவருக்கும் ரொம்பப் பொருத்தம். 

  • கருத்துக்கள உறவுகள்

ஆதே போல்..

சீன - ஹிந்திய விவகாரத்தில்.. தாங்கள் யார் பக்கம் என்பதையும் சொல்லி விடுவது நல்லது.

அதுபோக.. சொறீலங்கா சனாதிபதியின் ரஷ்சிய சார்ப்பு.. மற்றும் இவரின் ஹிந்திய சார்பு.. சீனச் சார்பு விடயங்களை மையப்படுத்தி.. ஈழத்தமிழர்கள் மேற்குலக கொள்கை வகுப்பாளர்களுக்கு ஒரு தெளிவை ஊட்ட வேண்டும்.

அப்போது தான் அவர்களுக்கு ஈழத்தமிழரின் இருப்பும் விடுதலையும் உரிமையும் ஏன் அவசியம் என்பது புரிய நேரிடும். 

இது ஈழத்தமிழினத்துக்கு பூகோள ராஜதந்திர செயற்பாடுகளுக்கான நல்ல நேரம் என்பதே எங்கள் கணிப்பு.

இதையும்.. ஹிந்திய சிங்கள விசுவாசத்திற்கு.. சாதமாக்கிவிட்டு குறட்டை விட்டால்.. ஈழத்தமிழனம்.. தேற வாய்ப்பே இருக்காது. 

2 minutes ago, satan said:

அது சரி, இலங்கையில் இனப்படுகொலை நடைபெறவில்லையென்றால் சர்வதேச விசாரணைக்கு அஞ்சுவதேன்? ஐ. நா. வுக்கு வருடா வருடம் அறிக்கை கொண்டு செல்வதுமேன் என விளக்குவீர்களோ? பூனை கண்ணை மூடிக்கொண்டு விட்டது என்பதற்காக  உலகம் இருண்டு விடாது. உன் நண்பனை பற்றி சொல்லு, உன்னைப்பற்றி நான் சொல்லிறேன் என்பது உங்கள் இருவருக்கும் ரொம்பப் பொருத்தம். 

இவங்களிடம் விளக்கம் கேட்டு விளங்கி விளக்கம் வரும் என்று நினைக்கிறீர்கள்..??!

ஆனால்.. கண்ணை மூடிக்கொண்டால்.. உலகம் இருட்டென்று நினைத்து வாழும் மேற்குலகின் கண்களை எம்மை நோக்கி எமது அநியாயங்களை நோக்கி திறக்க வைப்பதற்கு இவர்களின் இந்த மொழிவுகள்.. நல்ல ராஜதந்திர வாய்ப்புக்களை அளிக்கின்றன.

அதனைப் பயன்படுத்திக் கொள்ள ஈழத்தமிழினம் தவறக் கூடாது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கு நிஞாயம் அநிஞாயம் என்றால் என்னவென்று தெரியாது, சொன்னாலும் புரியாது. ஆனால்  இவ்வளவு காலமும் அழுதோம், அரற்றினோம், கெஞ்சினோம் யாரும் கண்டு கொள்ளவில்லை எங்களை. இடையனால மடையன் கெட்டானாம் என்பதுபோல் இலங்கை எடுக்கும் இந்தியா சார்பால், இந்தியாவின் போலி முகமும், இந்தியா எடுக்கும் இலங்கை சார்பால் இலங்கையின் கொடூர முகமும் வெளிவருகிறது. தாங்களாகவே தங்களை காட்டிக்கொடுத்து கொண்டிருக்கிறார்கள், கைதட்டி வரவேற்போம், அவர்களின் எதிரிகளோடு கைகோர்ப்போம்! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அலிசப்ரி ஏன் இலங்கையை இந்திய கனடா மோதலிற்குள் இழுக்கின்றார்? - டெய்லிமிரர்கேள்வி

Published By: RAJEEBAN

27 SEP, 2023 | 10:46 AM
image
 

இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி ஏன் இலங்கையை இந்திய கனடா மோதலிற்குள் இழுக்கின்றார் என டெய்லிமிரர் கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து டெய்லிமிரர் மேலும்  தெரிவித்துள்ளதாவது,

இலங்கை அரசியல்வாதிகள் ஆச்சரியமளிப்பவர்கள். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தவேளை நாடு அரசியல்நெருக்கடியில் சிக்குண்டிருந்தவேளை நாடு பணம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்ட வேளை இலங்கையின் அரச தலைவர்கள் சர்வதேச சமூகம் உதவவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

நல்லெண்ண நடவடிக்கையாக பல நாடுகள் உதவ முன்வந்தன-சில நாடுகள் தங்கள்  சொந்த நலன் அடிப்படையில் உதவ முன்வந்தன- சில நாடுகள் நட்புறவின் அடிப்படையில் உதவ முன்வந்தன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  தான் அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை பேணவிரும்புவதாகவும் பக்கம் சாயவிரும்பவில்லை எனவும் தெரிவித்துவரும் அதேவேளை எதிர்பாராத நடவடிக்கையாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு தொடர்பற்ற  இந்தியா கனடா முறுகல் நிலை குறித்து சர்வதேச ஊடகத்திற்கு கருத்து தெரிவித்துள்ளமை ஆச்சரியமளித்துள்ளது.

இலங்கையின் நிலைப்பாடு என்பதை விட கோபத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்து போலதோன்றும் அந்த கருத்தில் அலிசப்ரி இந்தியாவிற்கு எதிரான கனடா பிரதமரின் கருத்திற்காக கனடா பிரதமருக்கு எதிராக கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்- இது இலங்கைக்கு தொடர்பற்ற விடயம்.

சில பயங்கரவாதிகள் கனடாவில் புகலிடம் பெற்றுள்ளனர் 

கனடா இந்திய இராஜதந்திர முறுகல் நிலை குறித்து கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ள அலிசப்ரி  உறுதியான ஆதாரங்கள் இன்றி இந்தியாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்தமைக்காக கனடா பிரதமரை கடுமையாக சாடியுள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ ஆதாரமற்ற பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர் என்பதால்  அவரது கருத்துக்கள் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

சில பயங்கரவாதிகள் கனடாவில் அடைக்கலம் பெற்றுள்ளனர் என குறிப்பிட்டுள்ள அவர் ஆதாரங்கள் அற்ற கடும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சுபாவம்  கனடா பிரதமருக்குள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரத்திலும் கனடா பிரதமர் அவ்வாறு நடந்துகொண்டார் இலங்கையில்  இனப்படுகொலை இடம்பெற்றதாக பெரும் பொய்யை சொன்னார் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கைவிவகாரங்களில் அலிசப்ரி கனடா பிரதமருக்கு எதிராக போர்கொடி தூக்குவது ஏற்றுக்கொள்ளக்கூடியவிடயம் -ஆனால் இந்திய- கனடா விவகாரங்களில் இந்த தருணத்தில் தலையிடுவது அர்த்தமற்றது போல தோன்றுகின்றது.

மேலும் இலங்கைக்கு தொடர்பற்ற விடயத்தில் தலையிட்டு  உறவுகளை மேலும் சீர்குலைப்பது போலவும் தோன்றுகின்றது.

இலங்கை அரசாங்கத்துடன் தொடர்பில்லாத மோதல் குறித்து அலிசப்ரி வெளியிட்டுள்ள கருத்துகளை இலங்கை ஜனாதிபதியும் ஏற்றுக்கொள்கின்றாரா அல்லது இலங்கை இந்தியாவின் பக்கமோ அல்லது கனடாவின் பக்கமோ சாயாது என தெரிவிக்குமாறு அலிசப்ரியை கேட்டுக்கொள்கின்றாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இலங்கை தான் தீர்வுகாணவேண்டிய சொந்தமோதல்கள் உள்ளன தனக்கு கரிசனையை ஏற்படுத்தாத மோதலில்களில் தலையிடாமல் இலங்கை அதனை செய்யலாம் என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/165542

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - கனடா மோதலில் இலங்கை யார் பக்கம்? தமிழர் படுகொலை விவகாரம் மீண்டும் பேசப்படுவது ஏன்?

ரணில், மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண்பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 27 செப்டெம்பர் 2023, 04:47 GMT
    புதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்

இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு இடையில் ராஜதந்திர மோதலொன்று தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்த விவகாரத்தில் கனடாவுக்கு எதிராகவும் இந்தியாவுக்கு ஆதரவாகும் இலங்கை கருத்துத் தெரிவித்துள்ளது.

காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும், இந்தியாவிற்கும் இடையில் தொடர்பிருக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த கருத்தை அடுத்தே இந்த ராஜதந்திர மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த ராஜந்திர மோதல் காரணமாக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவில் தற்போது பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் இலங்கை யார் பக்கம் என்ற ஒரு பேச்சும் பலரது மத்தியில் ஆரம்பமாகியுள்ளது.

மேலும், கனடா - இந்தியா இடையிலான ராஜதந்திர மோதல் குறித்து, இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

தமக்கு பாதுகாப்பான இடமாக தீவிரவாதிகள், கனடாவை அடையாளம் கண்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கனடா பிரதமர் எந்தவித ஆதாரங்களுமின்றி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கனடா பிரதமர் தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும், அது குறித்து ஆச்சரியப்படத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் இனப் படுகொலை இடம்பெற்றுள்ளதாக கனடா பிரதமர் வெளியிட்ட கருத்தை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மறுத்துள்ளார். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என அவர் கூறுகின்றார்.

இறையாண்மை கொண்ட நாட்டின் உள்விவகாரத்தில் தலையீடு செய்ய வேண்டாம் என கனடா பிரதமரிடம் கேட்டுக்கொள்வதாகவும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கோரிக்கை விடுத்துள்ளார். அவரது இந்தப் பேச்சால் இலங்கையில் உள்நாட்டுப்போரின் போது தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.

 
இந்தியாவுக்கு ஆதரவளிக்கும் இலங்கை

பட மூலாதாரம்,MOF MEDIA

படக்குறிப்பு,

தீவிரவாதிகள் தங்களுக்குப் பாதுகாப்பான நாடாக கனடாவைக் கருதுவதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த கருத்து சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

இந்தியா - கனடா விவகாரத்தில், கனடாவிற்கு எதிராக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வெளியிட்ட கருத்தானது, இலங்கை - கனடாவிற்கு இடையில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் சர்வதேச அரசியல் ஆய்வாளரும், ஊடகவியலாளருமான ராஜகோபால் யசிஹரனிடம், பிபிசி தமிழ் வினவியது.

இலங்கை வெளிவிவகார அமைச்சரின் இந்த கருத்தானது, கனடா வாழ் இலங்கை தமிழர்கள் மத்தியில் மேலும் கோபத்தை ஏற்படுத்த வாய்ப்பாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

''அடிப்படையில்லாமல் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது பிழை என்ற அடிப்படையிலும், ஆதாரங்கள் இருந்தால் இந்தியா மீது குற்றஞ்சுமத்தலாம் என்ற விதத்திலும் ராஜதந்திர ரீதியில் ஒரு வெளிவிவகார அமைச்சர் பேசியிருப்பாராக இருந்தால், அது ஒரு விதமான ஆரோக்கியமான நிலைப்பாடாக இருந்திருக்கும்."

"ஆனால், அலி சப்ரி தன்னிலை மறந்து பேசியிருக்கின்றார். இதற்கு முன்னரும் நிறைய சந்தர்ப்பங்களில் காணாமல் போனோர், போர் குற்றங்கள் தொடர்பான பிரச்னைகள் சர்வதேசத்தினால் எழுப்பப்பட்ட சந்தர்ப்பத்தில் இவரின் கருத்துகள் மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. காணாமல் போனோரை இனி தேட முடியாது. அவர்கள் இறந்து விட்டார்கள் என நேரடியாகவே சொல்லியிருந்தார்."

 
இந்தியாவுக்கு ஆதரவளிக்கும் இலங்கை

பட மூலாதாரம்,SIKH PA

படக்குறிப்பு,

காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஜுன் மாதம் கனடாவில் படுகொலை செய்யப்பட்டார்.

"இதில் கூட கனடா பிரதமர் இலங்கை மீது முன்வைத்த குற்றச்சாட்டை கையில் எடுத்துக்கொண்டு, இலங்கையில் போர் குற்றம் இடம்பெற்றதாக கனடா பிரதமர் போலி குற்றச்சாட்டுக்களை சொன்னார் என்று சொல்லி, இந்தியாவிற்கு வலு சேர்க்கும் வகையில் தனது நிலைப்பாட்டை முன்வைத்தாலும் கூட, மறுபக்கம் இலங்கை - கனடா என்ற உறவில் இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்." என்றார் அவர்.

"போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் போரின் பின்னரான காலத்தில் புலம்பெயர்ந்து சென்ற பல இலங்கை தமிழர்கள், கனடாவில் இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள். இன்றைக்கும் தமக்கான நீதியை கேட்டு நிற்கின்ற போது, இனப்படுகொலை நடக்கவில்லை என்று சொல்வதானது, தமிழர்களை ஒரு பக்கத்தில் காயப்படுத்தும் செயலாக காணப்படுகின்றது. அதேசமயம், கனேடிய தமிழர்களை இன்னும் கோபப்படுத்தும் செயற்பாடாக அமைகின்றது. இலங்கை - கனடாவிற்கு இடையிலான உறவு, மிக பலமான உறவாக தான் இருக்கிறது" என அவர் கூறுகின்றார்.

 
இந்தியாவுக்கு ஆதரவளிக்கும் இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இந்திய ஏஜெண்டுகள் உள்ளனர் என்பதற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.

இந்தியாவை இலங்கை ஆதரிப்பது ஏன்?

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஏன் இந்தியாவிற்கு ஆதரவாக பேசினார் என்பது தொடர்பிலும் ராஜகோபால் யசிஹரன் கருத்து வெளியிட்டார்.

''இலங்கை வெளிவிவகார அமைச்சர், தாங்கள் குற்றவாளிகள் இல்லை என்பதை நிரூபிப்பதற்கு எடுத்த முயற்சியாக இருக்கலாம். மறுபக்கத்தில் இந்தியா தம்மை பாதுகாக்கும் என்ற நிலைப்பாட்டில் அதனை சொல்கின்றாரா என்பது கேள்வி தான். இந்த சந்தர்ப்பத்தில் தாம் இந்தியாவுடன் இருக்கின்றோம் என்றால், ஜெனீவா விவகாரங்களில் இந்தியா தம்முடன் இருக்கும் என்ற எண்ணத்தில் இப்படி சொல்லியிருக்கின்றாரா என தெரியவில்லை."

 
இந்தியாவுக்கு ஆதரவளிக்கும் இலங்கை

பட மூலாதாரம்,YASIHARAN

படக்குறிப்பு,

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரின் பேச்சு, கனடாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என ஊடகவியலாளர் ராஜகோபால் யசிஹரன் தெரிவிக்கிறார்.

"இலங்கை விடயத்தில் காரசாரமாக பேசக்கூடிய வாய்ப்புகள் தான் எதிர்காலத்தில் அமையும். அதில் சந்தேகம் இல்லை. இலங்கை விடயங்கள் தொடர்பில் இலங்கை தமிழரான கனடாவின் அமைச்சர் ஏற்கனவே எதிரான கருத்துக்களை சொல்லியிருந்தார். இது இலங்கை போர் குற்றங்கள் - கனடா தமிழர்கள் விவகாரத்தில் மேலும் வலுப் பெறும். ஒரு வேளை, தற்போதுள்ள கனடா பிரதமருக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்றாலும் கூட, வரக்கூடிய கனடா பிரதமர்கள் தமிழர்கள் விவகாரத்தில் ஒரே நிலைப்பாட்டை தான் கொள்வார்கள்."

"காரணம், அங்குள்ள தமிழர்களின் செல்வாக்கு, பண பலம் அதிகமாக காணப்படுகின்றது. அதனால், எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், புலம்பெயர் தமிழர் விவகாரத்தில் கனடா அரசாங்கத்தின் நிலைப்பாடு மாறாது. இதனால், இலங்கை வெளிவிவகார அமைச்சரின் கருத்து, முரண்பட்ட கருத்தாகத்தான் இருக்கும். இந்த விவகாரத்தில் இலங்கைக்கு எதிராக இதுவரை எவ்வாறு கனடா செயற்பட்டதோ, அந்த விடயம் இனியும் தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை" என ராஜகோபால் யசிஹரன் தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/articles/c28vkrgex7zo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.