Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்ய ஜனாதிபதி புட்டீனிடம் கலாநிதி தயான் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
08 OCT, 2023 | 01:47 PM
image

(ஆர்.ராம்)

20ஆவது வால்டாய் இன்டர்நேஷனல் கலந்துரையாடல் கழகத்தின் வெளிநாட்டுக்கொள்கைகள் மற்றும் மூலோபாயங்கள் பற்றிய கலந்துரையாடல் கடந்தவாரம் ரஷ்யாவின் சூச்சி நகரில் அக்கழகத்தின் ஆராய்ச்சிப் பணிப்பாளர் ஃபியோடர் லுக்யானோவ் தலைமையில் நடைபெற்றது. 

இதன்போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், சர்வதேச அளவில் நேட்டோ, முதன்மையானது, அது, அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் ஒரு கருவியாகும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். மாறாக அது உலக சமாதானத்துக்கான கட்டமைப்பு அல்ல. 

பாதுகாப்புத் துறையில் நாங்கள் சீனாவுடனான தொடர்புகளை விரிவுபடுத்துவோம். நாங்கள் யாருக்கும் எதிராக எந்தக் கூட்டங்களையும் உருவாக்கவில்லை, ஆனால் எங்கள் மாநிலங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதற்கு நாங்கள் எதிர்வினையாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

ஜி-20 ஒரு காலத்தில் அரசியல் பிரச்சினைகளை விட பொருளாதாரத்தை விவாதிப்பதற்கான தளமாக உருவாக்கப்பட்டது. ஜி 20 இன் அரசியல்மயமாக்கல் அதன் உண்மையான இலக்கை நோக்கிச் செல்வதை தவிர்த்துவிட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சம்பந்தமாக குறிப்பிட்டார்.

rashya-2.png

இதன்போது, 42நாடுகளில் இருந்து பங்கேற்ற 120 இராஜதந்திரிகள் மற்றும் வெளியுறவு கொள்கை வகுப்பாளர்கள் கலந்துகொண்டிருந்ததோடு கேள்விகளையும் தொடுத்திருந்தனர். இலங்கையிலிருந்து குறித்த கலந்துரையாடலில் இராஜதந்திரியும், அரசியல் விமர்சகருமான கலாநிதி.தயான் ஜயதிலக்க பங்கேற்றிருந்தார்.

அவர், ரஷ்ய ஜனாதிபதி புட்டீனிடத்தில், ஏகாதிபத்தியத்தால் நாம் கூறுபோடப்பட்டு தாக்கப்படுகிறோம் என்பதாலும், வரலாற்றில், கம்யூனிஸ்டுகள் போராடி தோற்கடிக்கப்பட்டவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ள நிலையில், 1917 பற்றி குறைத்து விமர்சித்து அதன் வரலாற்று நிலையை மீட்டெடுக்க இது சரியான நேரமா? உதாரணமாக, அமெரிக்க புரட்சி, ஐரோப்பிய புரட்சி, சீனப் புரட்சி ஆகியவற்றுக்கு நிகரானதாக அந்த முயற்சியை முன்னெடுக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டீன், நீங்கள் குறிப்பிட்ட ஆண்டில் நடைபெற்ற நிகழ்வுகள் சம்பந்தமான நாங்கள் அதாவது ரஷ்யா குறைந்தளவான விமர்சனங்களையே முன்வைத்துள்ளது. நீங்கள் கூறுகின்ற விடயம் சரியானது. வரையறுக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் விமாசனங்களைக் குறைத்து நடைமுறைச்சாத்தியமான விஞ்ஞான பூர்வமான ஆய்வுகளை ஆழமாகச் செய்ய வேண்டும். 

நீங்கள் கூறுவது மிகவும் சரியானது. நாங்கள் மீளாய்வினைச் செய்வதோடு, கருத்தியல் ரீதியான அம்சங்கள் சம்பந்தமாக ஆழமாக கலந்துரையாட வேண்டியுள்ளது. நீங்கள் அனைவரும் இந்த சபையில் கூடியிருக்கின்றீர்கள். என்னுடன் நீங்கள் தர்க்க ரீதியான வாதத்தினையும் முன்வைக்க முடியும். 

நாங்கள் நிச்சயமாக, கருத்தியல் ரீதியான அம்சங்கள் சம்பந்தமாக ஆழமான கலந்துரையாடலைச் செய்ய வேண்டியவர்களாக உள்ளோம். விசேடமாக, நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும், பூகோள அரசியல் நிலைமைகள் சம்பந்தமாக கவனம்  செலுத்த வேண்டியுள்ளது. அதற்கும் அப்பால், ஏகாதிபத்திய வகுப்புவாத முரண்பாடுகள் சம்பந்தமாகவும் கவனம் உரையாட வேண்டியுள்ளது.

1991ஆம் ஆண்டு சோவித் யூனியனின் உடைவுக்குப் பின்னர் இப்பூகோளமானது வகுப்புவாத கருத்தியலுக்குள் தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். நாங்கள் பூகோள நலன்களை கருத்திற்கொள்ளவில்லை.

உதாரணமாக, சீனாவின் நிலையைப் பார்க்கின்றபோது அந்நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும், மேற்குலகத்துக்குமான உறவு நிலைமைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் சீனாவையும், ரஷ்யாவையும் மையப்படுத்தி முரண்பாடுகளை ஏற்படுத்த முனைந்தார்கள். ஆனால் கருத்தியல் ரீதியாக சீனாவின் பலம் ஜனாதிபதி ஷியின் கீழ் வேகமாக அதிகரிக்கின்றது.

rashya3.png

இதானால், அமெரிக்காவும், மேற்குலகமும் தங்களுக்குள் காணப்படுகின்ற வேற்றுமைகளை மறந்து செயற்பட ஆரம்பித்துள்ளார்கள். தற்போது சீனாவின் தேசிய சிறுபான்மை இனம் சம்பந்தமாக கரிசனை செய்கின்றார்கள். மனித உரிமைகள் சம்பந்தமாக பேசுகின்றார்கள். ஆனால் இவையெல்லாம் உள்ளார்ந்தமான வெளிப்பாடுகளாக இருக்கின்றனவா என்றால் இல்லை. 

ஆகவே நீங்கள் குறிப்பிட்ட 1917ஆம் ஆண்டு காலத்தில் எமக்கு இழைக்கப்பட்ட தீங்குகள் தொடர்பில் நினைவில் கொள்ள வேண்டும். எமது கடந்தகால வரலாற்றை மையப்படுத்திய மீளாய்வும் கருத்தியல் ரீதியான ஆழமான மறுசீரமைப்பும் அவசியமாகின்றது என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன் என்றார்.

https://www.virakesari.lk/article/166379

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.