Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

Palestinian Movies

தன் வீட்டிற்குள் மாட்டிக்கொள்ளும் ஃபர்ஹா, சுவர் ஓட்டைகள் வழியாக இஸ்ரேல் படையின் கோர முகத்தைப் பார்க்கிறார். இப்படத்திற்கு எதிராக இஸ்ரேல் அமைச்சர்களே களமிறங்கினார்கள்.

 

ஏகாதிபத்திய நாடுகளுடன் கூட்டுச்சேர்ந்து பாலஸ்தீன மண்ணை ஆக்கிரமித்ததோடு, அம்மண்ணின் பூர்வகுடிகளான இஸ்லாமிய மக்கள் மீதும் தொடர்ந்து வன்முறையை நிகழ்த்தி வருகிறது இஸ்ரேல் அரசு. இதற்கு எதிராகப் பல ஆண்டுகளாக பாலஸ்தீனம் போராடி வரும் நிலையில், செப்டம்பர் 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிக்குழுவானது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. அத்தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலும் பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. 

பாலஸ்தீன - இஸ்ரேல் வரலாறு, பாலஸ்தீன மக்களின் இழப்புகள், போராட்டக் குணங்கள் போன்றவற்றை பல திரைப்படங்கள் பதிவு செய்திருக்கின்றன. அதன் வரலாற்றையும் சூழலையும் செய்திகளாகவும் கட்டுரையாகவும் மட்டுமல்லாமல், ரத்தமும் சதையுமான திரைப்படங்கள் மூலமாகவும் உணர்ந்துக்கொள்ளலாம்.

 
 
 
அவ்வகையில், பாலஸ்தீனத்தில் அழுகுரலையும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக ஓங்கும் கைகளையும் உலக அரங்கில் பதிவு செய்த முக்கியமான பாலஸ்தீனப் படங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். 

200 மீட்டர்ஸ் (200 Meters)

200 Meters
 
200 Meters

இஸ்ரேல் அரசால் கட்டப்பட்ட இஸ்ரேல் வாலின் (இஸ்ரேல் சுவர்) ஒருபுறம் உள்ள வீட்டில் கதாநாயகனான தந்தை இருக்கிறார். மறுபுறம் உள்ள வீட்டில் அவருடைய மனைவியும் மகனும் வாழ்கிறார்கள். ஒருநாள் தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, வெறும் 200 மீட்டர் தொலைவில் கண்ணுக்கெட்டும் தூரத்தில் உள்ள தன் மகனைக் காண கிளம்புகிறார்.

இஸ்ரேல் ராணுவம் அனுமதிச்சீட்டு வழங்க மறுக்கவே, பல கிலோமீட்டர் பயணம் செய்து, தன் உயிரைப் பணயம் வைத்து அந்தச் சுவரைக் கடக்கப் போராடும் அந்தத் தந்தையின் கதையைப் பேசுகிறது '200 மீட்டர்ஸ்' திரைப்படம். தன் வாழ்கையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் அமீன் நெய்ஃபாவின். 

ஓமர் (Omar)

Omar
 
Omar

அதே இஸ்ரேல் சுவருக்கு இடையே சிக்கிக்கொள்ளும் பாலஸ்தீன இளைஞனான ஓமரின் காதலைப் பேசுகிறது 'ஓமர்' திரைப்படம். பிரபல பாலஸ்தீன திரைப்பட இயக்குநர் ஹானு அபு அசாத் இயக்கிய இந்தத் திரைப்படம் பல உலகத் திரைப்பட விழாக்களில் பாராட்டைப் பெற்றது. 

சால்ட் ஆஃப் திஸ் சீ (Salt of this Sea)

1948-ம் ஆண்டு இஸ்ரேல் நடத்திய நக்பா பேரளிவு காரணமாக பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். பல லட்சம் மக்கள் பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். பாலஸ்தீனத்தின் பெரும் பகுதியை தன் ஏவுகனைகளால் கைபற்றியது இஸ்ரேல். 

சால்ட் ஆஃப் திஸ் சீ (Salt of this Sea)
 
சால்ட் ஆஃப் திஸ் சீ (Salt of this Sea)

அச்சூழலில் அமெரிக்காவிற்குச் சென்ற ஒரு பாலஸ்தீன குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த பெண், தனது தாய் நாட்டையும் தனது மூதாதையர்களின் வீட்டையும் காண பாலஸ்தீனம் வருகிறார். அவரின் நாடும் வீடும் இப்போது என்னவாக இருக்கின்றன என்பதை நம் கண்முன் காட்டுகிறது இத்திரைப்படம். பாலஸ்தீன பெண் கவிஞரும் எழுத்தாளருமான அன்னேமரியாதான் இதன் இயக்குநர். 

ஃபர்ஹா (Farha)

ஃபர்ஹா (Farha)
 
ஃபர்ஹா (Farha)

நக்பா பேரளிவு காலகட்டத்தில் பாலஸ்தீன கிராமம் ஒன்றுக்குள் நுழையும் இஸ்ரேல் படைக்குப் பயந்து, ஃபர்கா என்ற தன் மகளை வீட்டிற்குள் ஒளித்து வைத்துவிட்டு, வீட்டைப் பூட்டிவிட்டு செல்கிறார் அவளது தந்தை. தன் வீட்டிற்குள் மாட்டிக்கொள்ளும் ஃபர்ஹா, சுவர் ஓட்டைகள் வழியாக இஸ்ரேல் படையின் கோர முகத்தைப் பார்க்கிறார். இப்படத்திற்கு எதிராக இஸ்ரேல் அமைச்சர்களே களமிறங்கினார்கள். 

 

இதே மாதிரியான பூட்டப்பட்ட வீட்டிற்குள் இருந்து, தன் குடும்பத்தையே கொன்ற ஜெர்மன் படைகளின் அட்டூழியங்களை எழுத்தாக தன் டைரியில் வடித்தார் யூதச் சிறுமி அன்னா ஃப்ராங்க். அன்னா ஃப்ராங்கின் வலியை உலகறிய செய்த இஸ்ரேலுக்கு, ஃபர்ஹாவின் வலிக்கு நீதி தர முடியவில்லை.

வென் ஐ சா யூ (When I Saw You)

When I Saw You
 
When I Saw You

இஸ்ரேலின் தாக்குதல் உச்சத்திலிருந்த 1967-ம் ஆண்டு, பாலஸ்தீன மக்கள் பல்லாயிரம் பேர் அண்டை நாடான ஜோர்டானுக்கு அகதிகளாகச் சென்றனர். அச்சூழலில், ஜோர்டன் நாட்டு அகதிகள் முகாமில் இருக்கும் தரேக் என்கிற 11 வயது சிறுவன் தனது தந்தையைத் தேடிச் செல்லும் கதையைப் பேசுகிறது அன்னேமரியாவின் இத்திரைப்படம்.

பார்ன் இன் காசா (Born in Gaza)

Born in Gaza
 
Born in Gaza

பல நூறு பாலஸ்தீன குழந்தைகளின் உயிரைக் குடித்தது இஸ்ரேலின் '2014 காசா தாக்குதல்'. உலகை அதிர வைத்த அத்தாக்குதலால் உருக்குழைந்துப் போன காசா நகர கட்டடங்களுக்கு நடுவே நின்றுகொண்டு காசா நகர சிறுவர்கள் ஒவ்வொருவராக தங்களின் கதையைச் சொல்கிறார்கள். இதை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறது பிரபல ஆவணப்பட இயக்குநர் ஹெர்னன் ஜின் பார்ன் இன் காசா ஆவணப்படம்.

இந்தத் திரைப்படங்கள் அனைத்தையும் இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.
Palestinian Movies: 200 Meters, Omar - பாலஸ்தீன மக்களின் வலியைச் சொல்லும் உலகத் திரைப்படங்கள்! | Top movies about Palestinian and Israel war (vikatan.com)
Edited by பிழம்பு
  • Like 2


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.