Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

2006-ல் சிறுமிகள் உட்பட 19 பெண்கள் கொடூரமாகக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை, மேல்முறையீட்டில் வழக்கிலிருந்து விடுத்திருக்கிறது அகமதாபாத் உயர் நீதிமன்றம்.

 

இந்தியா மட்டுமல்லாமல் உலகையே உலுக்கிய சம்பவங்களில் ஒன்று 2006-ம் ஆண்டு நடந்த நிதாரி கொடூரம். உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் சிறு கிராமம் நிதாரி. இந்த கிராமத்தில் இருந்த ஓர் வீட்டின் பின்புறமுள்ள சாக்கடையில், மனித உடல் பாகங்கள் கிடப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், டிசம்பர் 29, 2006 அன்று, அந்தச் சாக்கடையிலிருந்து எட்டு சிறுமிகளின் எலும்புக்கூடுகளை கண்டெடுத்தனர். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 
 
 
உடல் பாகங்கள் மீட்கப்பட்ட சாக்கடை
 
உடல் பாகங்கள் மீட்கப்பட்ட சாக்கடை

மீட்கப்பட்ட உடல் பாகங்களை பிரேத பரிசோதனைக்கு காவல்துறை அனுப்பிவைத்தது. மேலும், அந்த வீட்டைச் சுற்றியுள்ள பகுதியில் வடிகால் பகுதிகளைத் தோண்டி, ஆய்வு நடத்தியதில் மேலும் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்தச் சோதனையின் முடிவில், அங்கிருந்த மனித எச்சங்கள் அனைத்தும் பெண்கள், சிறுமிகள் என 19 பேருடையது எனத் தெரியவந்தது. இவற்றில் பெரும்பாலானவை அந்தப் பகுதியிலிருந்து காணாமல்போன ஏழைக் குழந்தைகள், இளம்பெண்களின் எச்சங்கள் என்பதும் வெளிச்சத்துக்கு வந்தது.

 

மேலும், கொலையானவர்கள் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது. இந்த விவகாரம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வீட்டின் உரிமையாளர் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறைக்கு, அது தொழிலதிபர் மொனிந்தர் சிங் பந்தேர் என்பவரது வீடு எனத் தெரியவந்தது. சம்பவம் நடந்த 10 நாள்களுக்குப் பிறகு, இந்த வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ விசாரணையில் மொனிந்தர் சிங் வீட்டின் பணியாளர் சுரேந்திர கோலி, குழந்தைகள், இளம்பெண்களைக் கொலைசெய்ததாக வாக்குமூலம் கொடுத்து, ஒப்புக்கொண்டார். மேலும், தனது முதலாளி `பெண் பித்துப்பிடித்தவர்' என்றும் தெரிவித்தார்.

நிதாரி கொலை வழக்கு
 
நிதாரி கொலை வழக்கு

இதனையடுத்து சிறுமிகள் மற்றும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்ததாக தொழிலபதிபர் மொனிந்தர் சிங் பந்தேர், சுரேந்திர கோலி ஆகியோருக்கு எதிராக சி.பி.ஐ வழக்கு பதிவுசெய்தது. இதில் அவரது வீட்டில் பணிபுரிந்த பெண்ணும் பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்யப்பட்டிருக்கிறார் என்பது விசாரணையில் வெளிவந்தது. அது தொடர்பாக வழக்கில் இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்து, தூக்கு தண்டனை விதித்தது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம்.

 

மேலும், அவர்களின் வீட்டிலிருந்து சிறுவர் ஆபாசப் படங்கள்- வெப்கேமருடன் இணைக்கப்பட்ட லேப்டாப், ஆபாச நூல்களையும் கைப்பற்றினர். 7 வயது சிறுமியை, கோலி கொலைசெய்தது உறுதி செய்யப்பட்டு, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

நிதாரி கொலை வழக்கு
 
நிதாரி கொலை வழக்கு

இதேபோல் மற்ற பெண்கள் கொலை தொடர்பான வழக்குகளிலும் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இப்படி 12 வழக்குகளில் சுரேந்தர் கோலியும், 2 வழக்குகளில் மொனிந்தர் சிங்கும் குற்றவாளிகள் என்பது உறுதி செய்யப்பட்டு, 2017-ம் ஆண்டே இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அந்த நிலையில், அவர்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

 

நேற்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது 12 வழக்குகளில் குற்றவாளி எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பணியாளர் சுரேந்திர கோலி, 2 வழக்குகளில் குற்றவாளி எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தொழிலதிபர் மொனிந்தர் சிங் பந்தேர் ஆகியோரை உயர் நீதிமன்றம் விடுவித்தது.

அலகாபாத் உயர் நீதிமன்றம்
 
அலகாபாத் உயர் நீதிமன்றம்

2005-2006 நொய்டா தொடர் கொலைகள் என்றும் அழைக்கப்படும் `2006 நிதாரி' வழக்கிலிருந்து பிரதான சந்தேக நபர் சுரேந்திர கோலியை அலகாபாத் உயர் நீதிமன்றம் நேற்று விடுவித்தது. மேலும், மற்றொரு குற்றம்சாட்டப்பட்ட மொனிந்தர் சிங் பந்தேரை, நீதிமன்றம் மரண தண்டனை விதித்த இரண்டு வழக்குகளிலிருந்து விடுத்திருக்கிறது.

இந்த நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து, தங்கள் குழந்தைகளைப் பறிகொடுத்தப் பெற்றோர், ``இந்த இருவரும் குற்றவாளிகள் இல்லை என்றால், எங்கள் வீட்டுக் குழந்தைகள் எங்கே... அவர்களின் கொலைக்கு யார் காரணம்... எங்களுக்கு நீதி வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

Nithari case: இந்தியாவை உலுக்கிய 19 பெண்களின் கொலை; மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் விடுவிப்பு! | Nithari serial killings case: Allahabad HC acquits Surendra Koli, Moninder Singh Pandher - Vikatan

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல நீதி, இன்னும் பலருக்கு ஊக்குவிப்பு🙏



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கஜேந்திரகுமரின் மைன்ட வொய்ஸ்.  சாத்தியமான விடயங்களை பேசினால் இணைந்து செயற்பட வேண்டும். அரசியலமைப்பு வரைவு என்று  அழைப்பார்கள். மிகுந்த வேலைப்பழு இருக்கும்.  அதை விட சாத்தியமற்ற வரட்டு தேசியம் பேசினால் ஒரு வேலையும் இருக்காது.  பாராளுமன்றம் சென்று வந்து ஜாலியாக உறங்கலாம்.   நான் என்று யார் மலையக மக்களின் வாக்குரிமையை பறித்த பொன்னற்ற பேரன் எல்லோ. 
    • வாழ்துக்கள் ஐலண்ட், தமிழ் தேசிய கொள்கையின் ஆதரவாளர் போல காட்டி கொள்ளும் பச்சோந்திகளுக்கு மத்தியில் நேர்மையாக அதை எதிர்க்கும் நீங்கள் எவ்வளவோ திறம். தேர்தலுக்கு முதல் நாள் “உங்கள் அரசியல் வெல்லும் நாள் கனிகிறது என்றேன்”. அது இதைத்தான். அனுரவில் ஒரு மிக சிறந்த தந்திரமான தலைவரும் உங்களுக்கு கிடைத்துள்ளார். 2009 க்கு பின் பிறந்த தமிழர்களின் எண்ணிக்கை கூட, கூட உங்கள் கொள்கை அவர்கள் மத்தியில் அடையும் வெற்றியும் கூடும்.     இல்லை அவர் புதிதாக ஒரு மொழியை கற்று கொள்ள விரும்புவதால் ஜேர்மனிதான் சரிபட்டு வரும்🤣.
    • கண்டியில் மற்றுமொரு சொகுசு வாகனம் மீட்பு கண்டியில் (Kandy) தொடர்ந்து பல சொகுசு வாகனங்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வந்தநிலையில் மற்றுமொரு நவீன சொகுசு டிஃபென்டர் ஜீப் வண்டி ஒன்று கண்டுபடிக்கப்பட்டுள்ளது. குறித்த வாகனமானது நேற்று (16)  கண்டி தலைமையக காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த சொகுசு வாகனம் கண்டியில் உள்ள முன்னணி மீன் விற்பனை வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரடி முறைப்பாடு பதில் காவல்துறை மா அதிபருக்கு கிடைத்த நேரடி முறைப்பாடுக்கமைய இந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.   மேலும், கடந்த 12 ஆம் திகதி தங்காலையில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் மூன்றரை கோடி ரூபா பெறுமதியான லான்ட் குரூஸர் ரக சொகுசு ஜீப் வாகனமொன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/luxury-vehicle-seized-in-kandy-1731826577#google_vignette
    • அமசோனில் கிடைக்ககூடிய 110 கார் பாவனை உபகரணங்கள்,  நீண்ட வீடியோவாக இருந்தாலும் ஒவ்வொன்றாக பார்க்கும்போது நேரம்போவது தெரியாமல் சுவாரசியமாக உள்ளது.    
    • அமெரிக்காவின்(United States) - கலிபோர்னியா கடற்கரையில் அழிவின் முன்னோடி என்று அழைக்கப்படும் அழிவு நாள் மீன் மீண்டும் கரை ஒதுங்கியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒர்ஃபிஷ்(Oarfish) என அழைக்கப்படும் இந்த மீனினம் சுனாமி அல்லது பூகம்பம் போன்ற பேரழிவுக்கு அறிகுறியாக அமைந்துள்ளமையாகும். புராண நம்பிக்கை ஜப்பானிய புராணக்கதையின் படி,  இந்த மீன் வரவிருக்கும் பேரழிவை குறிக்கும் சின்னமாக அமைந்துள்ளது.  கடந்த 2011ஆம் ஆண்டில் பூகம்பம் மற்றும் சுனாமிக்கு சில மாதங்களுக்கு முன்பு, இந்த மீன் கடற்கரையில் 20க்கும் மேல் தோன்றிய பிறகு, ஜப்பானிய கோட்பாடு பிரபலமடைந்துள்ளது.  இந்த நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரையில் அழிவு நாள் மீன் (Oarfish) கரை ஒதுங்கியுள்ளது.  குளிர்ச்சியான உயிரினம் சுமார் 9 முதல் 10 அடி நீளம் கொண்ட இந்த குளிர்ச்சியான உயிரினம், ஓராண்டிற்குள் இரண்டாவது முறையாக கரை ஒதுங்கியுள்ளது.  வெள்ளி நிற மற்றும் அகலமான கண்கள் கொண்ட இந்த உயிரினம், மிகவும் குறைவான வெளிச்சம் உள்ள மெசோபெலாஜிக் மண்டலத்தில் ஆழமாக வாழுகின்றனவையாகும்.  அழிவு நாள் மீன்கள் சில புராணக்கதைகள் இந்த மீன் இயற்கை பேரழிவுகள் அல்லது எதிர்கால பூகம்பங்களை முன்னறிவிக்கும் என்று நம்புகின்றன. ஸ்கிரிப்ஸ் நிறுவனத்தின்(The Scripps Institution) கூற்றுப்படி, 1901 முதல் கலிபோர்னியா கட்டுரையில் 21 அழிவு நாள் மீன்கள் தென்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.  ஆராய்ச்சியாளர் பென் ஃப்ரேபிள்(Ben Frable), இந்த மீன்கள் இறந்து மிதப்பதற்கான காரணம் சரியாக தெரியவில்லை. எனினும், அவற்றை மேலும் ஆராய்ச்சி செய்ய இது ஒரு நம்ப முடியாத வாய்ப்பு. கடலின் நிலைமைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு காரணமாக இருக்கலாம்" என்று கூறியுள்ளார். இதேவேளை, கடந்த முறை சான் டியாகோ (San Diego) நகரின் லா ஜொல்லா கோவ்வில் 12 அடி நீளம் கொண்ட அழிவு நாள் மீன்(Oarfish)தென்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/doomsday-fish-found-on-california-beach-1731836529#google_vignette
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.