Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்ரேலில் ஜோ பைடன் சாதித்தது என்ன? அமெரிக்க போர்க்கப்பல்கள் அங்கே என்ன செய்கின்றன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஜோ பைடன் -நெதன்யாகு சந்திப்பு
படக்குறிப்பு,

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை இஸ்ரேல் சென்று நேரில் சந்தித்தார்.

3 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உண்மையான நண்பர் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். அமெரிக்க அதிபரின் இஸ்ரேல் பயணத்தின் போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கு பயணம் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசினார். போர் நடக்கும் நாட்டுக்கு அமெரிக்க அதிபர் பயணம் மேற்கொள்வது வழக்கமான ஒன்றல்ல. எனினும் தன்னுடைய நேரடி சந்திப்பு சில தீர்வுகளை கொண்டு வரும் என்ற நோக்கில் அமெரிக்க அதிபர் இந்த பயணத்தை மேற்கொண்டார்.

அரபு தலைவர்களுடனான பைடன் சந்திப்பு ரத்து

இஸ்ரேலுக்கு வெளிப்படையான ஆதரவையும் ஆயுதங்களையும் வழங்கி வருகிறது அமெரிக்கா. இந்த பயணத்தின் போது இஸ்ரேல் பிரதமர் மட்டுமல்லாமல் அரபு நாடுகளின் தலைவர்களையும் சந்திப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. காஸாவுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் வழங்கும் பாதையை இஸ்ரேல் திறக்கவும், இஸ்ரேல் பணய கைதிகளை ஹமாஸ் விடுவிக்கவும் இந்த சந்திப்புகளின் போது பேச திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் காஸாவில் நேற்று மருத்துவமனை மீது நடைபெற்ற தாக்குதலுக்கு பிறகு, அரபு நாட்டு தலைவர்களை அமெரிக்க அதிபர் சந்திப்பது ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்துக்கு வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமான நிலையத்துக்கு நேரில் சென்று அவரை கட்டி அணைத்து வரவேற்றார்.

ஜோ பைடன் -நெதன்யாகு சந்திப்பு
படக்குறிப்பு,

இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு வந்த அமெரிக்க அதிபரை விமான நிலையம் சென்று கட்டி அரவணைத்து வரவேற்றார் இஸ்ரேல் பிரதமர்.

 

“இருபது 9/11 தாக்குதல்களுக்கு சமம்”

பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது முதலில் பேச ஆரம்பித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபரின் வருகைக்கு நன்றி தெரிவித்தார்.

அமெரிக்க பிரதமர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு ஆதரவு அளிப்பதற்காகவும், ‘தெளிவான அறநெறி’யுடன் இருப்பதற்காகவும் பெஞ்சமின் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார்.

“நாகரிக சக்திகளுக்கும், காட்டுமிராண்டித்தனமான சக்திகளுக்கும் இடையே தெளிவான கோடு ஒன்றை நீங்கள் சரியாக வரைந்துள்ளீர்கள்” என்று அவர் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் பைடன் சில நாட்களுக்கு முன் X தளத்தில் ஹமாஸின் நடவடிக்கைகள் கொடூரமான தீமை என குறிப்பிட்டிருந்தது சரியே எனவும் நெதன்யாகு கூறினார்.

அக்டோபர் 7ம் தேதி நடைபெற்ற ஹமாஸ் தாக்குதலை அமெரிக்காவில் நடைபெற்ற 9/11 தாக்குதலோடு ஒப்பிட்டு பேசிய நெதன்யாகு, ஹமாஸ் தாக்குதல் இருபது 9/11 தாக்குதல்களுக்கு சமம் என்றார்.

ஜோ பைடன் -நெதன்யாகு சந்திப்பு
படக்குறிப்பு,

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் "உண்மையான நண்பர்" என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

 

“ஜோ பைடன் உண்மையான நண்பர்”

ஐஎஸ்ஐஎஸை எதிர்கொண்ட போது எப்படி உலகம் ஒன்றாக நின்றதோ அதே போன்று ஹமாஸை வீழ்த்த நாகரிக உலகம் ஒன்றிணைய வேண்டும் என நெதன்யாகு அறைகூவல் விடுத்தார்.

“நாம் ஹமாஸை வீழ்த்துவோம். நம் வாழ்விலிருந்து இந்த பயங்கர அச்சுறுத்தலை நீக்குவோம்” என்று பேசிய இஸ்ரேல் பிரதமர், இது எனது நாட்டுக்காக மட்டுமல்ல, அனைவருக்காகவும் தான்" என்றார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை “உண்மையான நண்பன்” என்று அழைத்த நெதன்யாகு போர் நேரத்தில் இஸ்ரேலுக்கு வருகை தரும் அவரது நெகிழ்ச்சியான முடிவை பாராட்டுவதாக தெரிவித்தார்.

பிறகு பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மோதல் நேரத்தில் அமெரிக்கா யாருடன் நிற்கிறது என்பதை காண்பிக்கவே தான் இஸ்ரேல் வந்ததாக தெரிவித்தார்.

அக்டோபர் 7 ஆம் தேதியன்று ஹமாஸ் நடத்திய படுகொலைகளை அவர் தொடர்ந்து விவரித்தார். 31 அமெரிக்கர்கள் உட்பட 1,300 பேரை, "கொன்று குவித்தனர்" என்று சொல்வது "மிகையானது அல்ல" என்று அவர் கூறினார்.

குழந்தைகள் உட்பட இஸ்ரேல் கைதிகள் பற்றியும் அவர் பேசினார். "ஹமாஸிடமிருந்து ஒளிந்திருந்த அந்த குழந்தைகள் என்ன நினைத்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். அது என் புரிதலுக்கு அப்பாற்பட்டது" என்றார்.

ஜோ பைடன் -நெதன்யாகு சந்திப்பு
படக்குறிப்பு,

காஸா மருத்துவமனை தாக்குதலை இஸ்ரேல் செய்யவில்லை, எதிரணி செய்தது போல் தெரிகிறது என ஜோ பைடன் கூறினார்.

 

'இஸ்ரேல் மக்களின் துணிவு ஆச்சர்யமானது' - பைடன்

அமெரிக்கா இஸ்ரேலை தொடர்ந்து ஆதரிக்கும் என்று அவர் உறுதியளித்தார். "இங்கிருந்து என்ன நடக்கிறது என்பது குறித்து விவாதிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்."

இஸ்ரேல் மக்களின் "துணிவு, அர்ப்பணிப்பு மற்றும் தீரம்" ஆச்சர்யம் தரக்கூடியது என்று அவர் கூறினார். "நான் இங்கு இருப்பதில் பெருமைப்படுகிறேன்" என்றும் அவர் கூறினார்.

நேற்று இரவு காஸாவில் மருத்துவமனை மீது நடைபெற்ற தாக்குதல் குறித்து பேசிய பைடன், இஸ்ரேல் பிரதமரை பார்த்து, அது “மற்றொரு குழுவினரால்” செய்யப்பட்டது போல தெரிகிறது என்றார்.

இந்த நிகழ்வால் "நான் மிகவும் வருத்தமடைந்து, கோபமடைந்துள்ளேன்" என்று பைடன் கூறினார்.

"நான் பார்த்ததன் அடிப்படையில் அது நீங்கள் இல்லை, வேறு யாரோ செய்ததாகத் தெரிகிறது. ஆனால் இதைப் பற்றி உறுதியாக தெரியாத பலர் இருக்கிறார்கள், எனவே நாம் பலவற்றை கடக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

அமெரிக்கா விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் என்ன செய்கின்றன?

காசா மீது தரைவழி தாக்குதலை நடத்த தயாராகும் இஸ்ரேல் மீது லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதேபோல், இஸ்ரேல் தரைவழி தாக்குதலை தொடங்கக் கூடாது என்று ஐ.நா வாயிலாக ஈரானும் எச்சரித்துள்ளது. மற்ற அரபு நாடுகளிலும் இஸ்ரேலின் தாக்குதல் ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிப்பது மக்களிடையே கொந்தளிப்பான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, இஸ்ரேலுக்கு தனது ஆதரவை உறுதிப்படுத்துவதுடன் அந்த பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கு தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி எச்சரிக்கும் விதத்தில் 2 விமானந்தாங்கி போர்க்கப்பல்களை மத்திய தரைக்கடலுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது. இஸ்ரேலுக்கு கூடுதல் ஆயுதங்களை கொடுக்கப் போவதாகவும் அமெரிக்கா ஏற்கனவே அறிவித்துள்ளது.

அமெரிக்கா, தனது நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேலுக்கு ஒவ்வொரு ஆண்டும் பலநூறு கோடி டாலர்கள் அளவிலான இராணுவ உதவியை அனுப்புகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இஸ்ரேல் அமெரிக்க வெளிநாட்டு உதவியைப் பெறும் மிகப்பெரிய நாடாக உள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cekmym4k33yo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா செய்த தவறுகளை செய்யக்கூடாது என இஸ்ரேலை வலியுறுத்திய ஜோ பைடன்

இஸ்ரேல், பாலத்தீனம், ஹமாஸ், காஸா

பட மூலாதாரம்,REUTERS

22 நிமிடங்களுக்கு முன்னர்

ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல்மீது நடத்தியிருக்கும் தாக்குதலை, 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது அல்-காயிதா அமைப்பு நடத்திய தாக்குதலுடன் ஒப்பிட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

மேலும், அந்தத் தாக்குதல் நடந்த பிறகு அமெரிக்கா ஆத்திரத்தில் எதிர்வினையாற்றியதாகவும், அதில் சில தவறுகள் நிகழ்ந்ததாகவும், இப்போது அதேபோன்ற ஆத்திரத்தின் பிடியில் இஸ்ரேல் சிக்கக்கூடாது என்றும் கூறினார்.

அதோடு, காஸா பகுதிக்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை அனுப்ப எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் அல்-சிசி ஏற்றுக்கொண்டதாக பைடன் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேல் சென்றுள்ளார்.

 

அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் குழுவினர் இஸ்ரேலில் தாக்குதல் நடத்தி 100க்கும் மேற்பட்டவர்களைப் பிணைக் கைதிகளாகக் கொண்டு சென்றபின் இஸ்ரேல் காஸாவின்மீது வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நிகழ்த்தியது. மேலும் காஸா பகுதிக்கு மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றை நிறுத்தியது. இதனால் அங்கு மனிதாபிமான சிக்கல் தீவிரமடைந்தது.

தொடர்ந்து செவ்வாய் இரவு (அக்டோபர் 17) காஸா பகுதியில் இருந்த அல்-அஹ்லி அரபு மருத்துவமனையில் நடந்த வெடிப்பில் 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த மனிதாபிமானச் சிக்கல் மேலும் மோசமானது.

இந்நிலையில், இஸ்ரேலில் பயணம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள் அனுப்பப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

இருபது டிரக்குகள் அளவிலான உதவிப் பொருட்களை காஸாவுக்கு அனுப்ப எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் அல்-சிசி ஏற்றுக்கொண்டதாக பைடன் கூறினார்.

மேலும் பாலத்தீனிய குடிமக்களுக்கு உதவ 83 கோடி ரூபாய் அமெரிக்க நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறினார்.

இந்நிலையில், இன்று (வியாழன், அக்டோபர் 19) பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேல் சென்றுள்ளார். அங்கு அவர் இஸ்ரேல் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார்.

இஸ்ரேல், பாலத்தீனம், ஹமாஸ், காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் இஸ்ரேலில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

‘வெள்ளிக்கிழமைக்குள் உதவி வழங்கப்படலாம்‘

இதுகுறித்து, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் பேசிய பைடன், இந்த உதவிப்பொருட்கள் வெள்ளிக்கிழமை வரை அனுப்பப்படமாட்டாது என்றார். இதற்குக் காரணமாக சாலை பழுதுகளை அவர் குறிப்பிட்டார்.

"சாலைகள் செப்பனிடப்பட உள்ளன. இந்தப் பணிகள் நாளை (வியாழக்கிழமை, அக்டோபர் 20) சுமார் எட்டு மணிநேரம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதுவரை எதுவும் அனுப்பப்படாமல் போகலாம்," என்று அவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும், இந்த 20 டிரக்குகள் ‘முதல் தவணைதான்' என்று கூறிய அவர், மொத்தம் சுமார் 150 டிரக்குகள் காஸாவுக்கு செல்லக் காத்திருக்கின்றன என்றார்.

அடுத்து வரும் சூழ்நிலையைப் பொறுத்தே இந்த வாகனங்கள் கடக்க அனுமதிக்கப்படுமா இல்லையா என்பது தெளிவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

புதனன்று சுமார் எட்டு மணிநேரம் டெல் அவிவ் நகரில் செலவிட்ட அவர், அமெரிக்கா திரும்பும்போது எகிப்து அதிபர் அல்-சிசியுடன் தொலைபேசியில் பேசினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.

 
இஸ்ரேல், பாலத்தீனம், ஹமாஸ், காஸா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

புதன் கிழமையன்று சுமார் எட்டு மணிநேரம் டெல் அவிவ் நகரில் செலவிட்ட அவர், அமெரிக்கா திரும்பும்போது எகிப்து அதிபர் அல்-சிசியுடன் தொலைபேசியில் பேசினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் இத்தகவல்களைத் தெரிவித்தார்.

‘அமெரிக்கா செய்த தவறை இஸ்ரேல் செய்யக்கூடாது’

நடந்துவரும் மோதல் குறித்துப் பேசிய அவர், சண்டையைத் தூண்டியது ஹமாஸ் என்றும், அந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என்றும் பேசினார்.

இஸ்ரேல் ‘மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது’ என்று கூறிய அவர், இருப்பினும் இஸ்ரேல் அந்தக் கோபத்தின் பிடியில் சிக்கிக்கொள்ளக் கூடாது என்றார்.

செவ்வாயன்று காஸா மருத்துவமனையில் நடந்த குண்டுவெடிப்பு இஸ்ரேலிய விமானத் தாக்குதலால் ஏற்படவில்லை என்ற இஸ்ரேலின் கூற்றை அவர் ஆதரித்தார்.

மேலும், பைடன் இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது நடந்த தாக்குதலுடன் ஒப்பிட்டார்.

"இதன் அளவு வித்தியாசமாக இருக்கலாம், ஆனால் அதேபோன்ற உணர்வுகளை இஸ்ரேலில் தட்டியெழுப்பியதாக நான் நம்புகிறேன்,” என்றார்.

மேலும், இந்த ஆத்திரத்தின் பிடியில் இஸ்ரேல் சிக்கக்கூடாது என்றும் கூறினார்.

"9/11 தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்கா கோபமடைந்தது. நாங்கள் நீதியைத் தேடினோம். நீதியைப் பெற்றோம். ஆனால் சில தவறுகளையும் செய்தோம்," என்றார்.

 
இஸ்ரேல், பாலத்தீனம், ஹமாஸ், காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ரஃபாவில் கூடியிருந்த மக்களுக்காகத் தயார் செய்யப்படும் உணவுப் பொட்டலங்கள்.

‘இஸ்ரேல் எல்லை வழியே உதவிகள் அனுப்பப்படாது’

எகிப்தில் இருந்து தெற்கு காஸாவில் உள்ள பொது மக்களுக்கு பொருட்கள் செல்வதை இஸ்ரேல் தடுக்காது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிபடுத்தினார்.

ஆயினும், ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்கும் வரை எந்தவொரு உதவியையும் தனது இஸ்ரேல் எல்லை மூலம் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று அவர் கூறினார்.

ஹமாஸ் குழுவினர் கிட்டத்தட்ட 200 இஸ்ரேலியர்களை கடத்தி வைத்திருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது.

 
இஸ்ரேல், பாலத்தீனம், ஹமாஸ், காஸா
படக்குறிப்பு,

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேல் சென்றிருக்கிறார்.

இஸ்ரேல் சென்றிருக்கும் பிரிட்டன் பிரதமர்

இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேல் சென்றிருக்கிறார். இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தில் இறங்கியதும் செய்தியாளர்களிடம் பேசுகையில், அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேலில் நடத்திய தாக்குதல் ‘விவரிக்க முடியாத பயங்கரவாதச் செயல்’ என்று கூறினார்.

மேலும் இங்கிலாந்து இஸ்ரேலுடன் நிற்கிறது என்று வலியுறுத்தினார்.

"(இஸ்ரேல்) பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடனான எனது சந்திப்புகளை நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அவை பயனுள்ள சந்திப்புகளாக இருக்கும் என்று நான் மிகவும் நம்புகிறேன்," என்று சுனக் கூறினார்.

ஆனால், பிபிசியின் அரசியல் செய்தியாசிரியர், சுனக்கின் இந்தப் பயணத்தில் இருந்து, அமெரிக்க அதிபர் பைடனின் பயணத்தில் நடந்தது போன்று பெரிய அறிவிப்பையோ முன்னேற்றத்தையோ எதிர்பார்க்க முடியாது என்கிறார்.

இந்தப் பயணம் இஸ்ரேலுக்கான ஆதரவைக் காட்டுவதற்கு முக்கியமானது, என்று சுனக்கை சுற்றியுள்ளவர்கள் கூறுவதாக அவர் கூறுகிறார். அதேபோல் காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைய அழுத்தம் கொடுப்பதும், இந்த விஷயத்தில் இஸ்ரேலின் அணுகுமுறை பொறுமையானதாக இருக்க வேண்டும் என்பதை நேருக்கு நேர் வலியுறுத்துவதும் இப்பயணத்தின் முக்கியமான நோக்கங்கள் என்கிறார் அவர்.

‘மனிதாபிமான உதவிகள் உடனடியாகத் தேவைப்படுகின்றன’

பாலத்தீன அகதிகளுக்கான ஐ.நா. ஏஜென்சியான UNWRA-இன் செய்தித் தொடர்பாளர் ஜூலியட் டூமா, தாம் முடிந்தவரை உதவிகளை வழங்கி வருவதாகக் கூறினார். ஆனால் அவர்கள் அதிகமான சுமையில் இருப்பதாகக் கூறினார்.

"எங்களிடம் உள்ள பொருட்கள் வேகமாகத் தீர்ந்து வருகின்றன," என்று அவர் கூறுகிறார். "எங்கள் ஊழியர்களும் மிகவும் சோர்வடைந்திருக்கின்றனர்,” என்றார்.

தங்கள் குழுவினரும் போரால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். “அவர்களில் பலர் அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக UNWRA 14 பணியாளர்களை இழந்துள்ளோம். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது," என்றார் டூமா.

காஸாவின் மீதான தாக்குதல்களால், தங்கள் குழு தெற்கு காஸாவுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதாகத் தெரிவித்தார். அங்கிருந்து உதவிகள் மிகவும் தேவைப்படும் மக்களுக்கு விரைந்து உதவும் சூழல் இல்லை என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c4nx5dy785do

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவிற்கு எகிப்து எல்லை ஊடாக மனிதாபிமான உதவிகள்- அமெரிக்க எகிப்து ஜனாதிபதிகள் இணக்கம்

Published By: RAJEEBAN

19 OCT, 2023 | 04:35 PM
image

இஸ்ரேல் ஹமாஸ் யுத்தத்தினால் உருவாகியுள்ள மனிதாபிமான நெருக்கடியை குறைப்பதற்காக காசாவிற்கு சிறிதளவு மனிதாபிமான உதவியை அனுப்புவது என  அமெரிக்காவும் எகிப்தும் இணங்கியுள்ளன.

இஸ்ரேலிற்கான விஜயத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பும்வேளை அமெரிக்க ஜனாதிபதி எகிப்திய ஜனாதிபதி அப்துல் பட்டா சிசியுடன் இது குறித்து ஆராய்ந்துள்ளார்.

210615-gaza-city-explosion-israeli-airst

காசாவிற்குள் 20 லொறிகளில் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்காக ரபா எல்லையை திறந்துவிடுவதற்கு எகிப்திய ஜனாதிபதி இணங்கியுள்ளார் என பைடன் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியான விதத்தில் காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது குறித்து அமெரிக்கா இணங்கியுள்ளதாக எனிப்து தெரிவித்துள்ளது.

எனினும் ரபா எல்லை எப்போது திறக்கப்படும் என்பது குறித்து பைடன் எதனையும் தெரிவிக்கவில்லை.

இதேவேளை வீதிகள் திருத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் நாட்களில் எல்லை திறக்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/167291

  • கருத்துக்கள உறவுகள்

கொஸ்பிடலுக்கு குண்டை போடு 
நான் வந்து சமாளித்து விடுகிறேன் !

அத்தனை ஊடகமும் இப்போ கப்சிப் 

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரவேலுக்கு உதவி செய்ய வேண்டிய கடப்பாடு அமெரிக்காவிட்க்கு இருக்கின்றது. இஸ்லாமிய நாடுகள் எல்லாம் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்யுமென்றால் , ஏன் மற்ற நாடுகள் இஸ்ரேவேலுக்கு உதவி செய்யக்கூடாது? இஸ்ரேல் மற்ற நாடுகளின் ஆதரவை கேட்க்கிறார்களே ஒழிய தங்களுடன் வந்து யுத்தம் செய்யும்படி கோரவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புட்டினை ஹமாசுடன் ஒப்பிட்டு பைடன் உரை - இஸ்ரேல் வெற்றி அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அவசியம் என தெரிவிப்பு

Published By: RAJEEBAN    20 OCT, 2023 | 06:32 AM

image

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஹமாஸ் அமைப்பினை ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் ஒப்பிட்டு கருத்து வெளியிட்டுள்ளார்

அமெரிக்க மக்களிற்கான தொலைக்காட்சி உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஹமாசும் புட்டினும் வேறுவேறு ஆபத்துக்கள் ஆனால் அவர்களிற்கு பொதுவான குணாதிசயம் உள்ளது அவர்கள் இருவரும் அருகில் உள்ள ஜனநாயகத்தை அழிக்கப்பார்க்கின்றனர் என பைடன் தெரிவித்துள்ளார்.

புட்டின் உக்ரைனின் இருப்iபே நிராகரிக்கின்றார் அவ்வாறான நாடு ஒருபோதும் இருந்ததில்லை என்கின்றார் என குறிப்பிட்டுள்ள பைடன் இஸ்ரேலும் உக்ரைனும் வெற்றிபெறுவது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு அவசியமானது என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் வான்வெளி பாதுகாப்பிற்கான நிதியை வழங்குமாறு அமெரிக்க காங்கிரசை கோரப்போவதாகவும் ஜோ பைடன்  தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/167318

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல், உக்ரைனுக்கு உதவுவது அமெரிக்க பாதுகாப்புக்கு இன்றியமையாதது- ஜோ பைடன்

ரஷ்யா- உக்ரைன் இடையிலான போரில் உக்ரைனுக்கும், இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரில் இஸ்ரேலுக்கும் அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது. இஸ்ரேல் சென்றிருந்த அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது. இஸ்ரேல் சென்றிருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போரை நிறுத்துவதற்கு வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இஸ்ரேலுக்கு துணை நிற்போம் எனத் தெரிவித்திருந்தார்.

தற்போது உக்ரைன் மற்றும் இஸ்ரேலுக்கு உதவுவது அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்க தலைமை உலகத்தை ஒன்றிணைத்து வைத்துள்ளது. இரண்டு முற்றிலும் மாறுபட்ட, கணிக்க முடியாத, ரத்தக்களரி போர்களுக்கு மத்தியில் உக்ரைன் மற்றும் இஸ்ரேலுக்கு உதவுவது, அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது.

பயங்கரவாதிகள் அவர்களுடைய தாக்குதலுக்கு விலை கொடுக்காதபோது, சர்வாதிகாரிகள், அவர்களுடைய ஆக்கிரமிப்புகளுக்கு விலை கொடுக்காத போது, அவர்கள் மேலும் குழப்பத்தையும், உயிரிழப்புகளையும், இன்னும் அதிகமான அழிவுகளையும் ஏற்படுத்துவார்கள் என்பதை வரலாறு நமக்கு கற்றுத்தந்துள்ளது.

அவர்கள் தொடர்ந்து செல்கிறார்கள். அதன் விளைவு மற்றும் அச்சுறுத்தல் அமெரிக்கா மற்றும் உலகிற்கு அதிகரித்து கொண்டிருக்கிறது” என்றார்.

மேலும், பாராளுமன்றத்தில் 105 பில்லியன் அமெரிக்க டொலர் கேட்க இருப்பதாக தெரிவித்துள்ளார். அதில் 14 பில்லியன் டொலர் இஸ்ரேலுக்கும், 10 பில்லியன் குறிப்பிடப்படாத மனிதாபிமான உதவிக்கும், 14 பில்லியன் அமெரிக்கா- மெக்சிகோ எல்லையை நிர்வகிக்கவும், 60 பில்லியன் டொலர் அளவில் உக்ரைனுக்கு முன்னதாக வழங்கிய ஆயுதங்களை மீண்டும் நிரப்பவும், 7 பில்லியன் டொலர் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கும் பயன்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/277827

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மத்தியகிழக்கில் அமெரிக்க படையினர் தாக்கப்பட்டால் பதிலடி - அன்டனி பிளிங்கன்

Published By: RAJEEBAN    23 OCT, 2023 | 11:54 AM

image

ஹமாஸ் இஸ்ரேல் மோதலின் போது அமெரிக்க படையினர் தாக்கப்பட்டால் அமெரிக்கா திருப்பி தாக்குவதற்கு தயார் என அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் போர் மேலும் பரவும் ஆபத்து அதிகரித்துள்ள நிலையிலேயே அன்டனி பிளிங்கென் இதனை தெரிவித்துள்ளார்.

என்பிசியின் மீட் த பிரசில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ள பிளிங்கென் ஈரான் ஆதரவு சக்திகளால் மத்திய கிழக்கில் போர் மேலும் தீவிரமடையலாம் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த மோதலின் போது அமெரிக்க படையினர் இலக்குவைக்கப்பட்டால் பதில் நடவடிக்கையில் ஈடுபட பைடன் நிர்வாகம்  தயாராகவுள்ளது எனவும் பிளிங்கென் தெரிவித்துள்ளார்.

ஹமாசுடான யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர்  காசாவை ஆட்சி செய்வதற்கு இஸ்ரேல் விரும்பவில்லை என தெரிவித்துள்ள பிளிங்கௌ ஆனால் யுத்தத்தின் பின்னர் ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு முன்னர் காணப்பட்ட நிலை காணப்படும் என எதிர்பார்க்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

காசா பள்ளத்தாக்கிலிருந்து ஹமாசின் தாக்குதலை எப்போதும் எதிர்கொள்ளும் நிலையில் இஸ்ரேல் இருக்கவேண்டும் என நீங்கள் எதிர்பார்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் மீண்டும் இதே நடவடிக்கைகளில் ஈடுபடாமலிருப்பதை உறுதி செய்யவேண்டும், அதே வேளை காசாவை மீண்டும் இஸ்ரேல் ஆட்சி செய்யாத நிலை வேண்டும், அவர்கள் அதனை விரும்பவில்லை எனவும் பிளிங்கென் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/167556

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.