Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது (edited)

piraisoody-funeral-ltte-flag-2.jpg


மறவர் படைதான் தமிழ்படை
குலமானம் ஒன்றே அடிப்படை
வெறிகொள் தமிழர் புலிப்படை - அவர் 
வெல்வார் என்பது வெளிப்படை

கவிஞர் காசிஆனந்தன்(1956)

 

1974ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னைக்கு தம்பி என்றபெயருடன் வந்து தமிழினவிடுதலைக்காக இயங்கிக்கொண்டிருந்த தலைவர்பிரபாகரன் சந்தித்துக்கொ ண்ட அற்புதமான மனிதர்தான் தியாகி ஆ.இராசரத்தினமாகும். சாவகச்சேரி மட்டு விலை சொந்தஇடமாக கொண்டஇவர் 04.05.1926இல் பிறந்திருந்தார். அரசஊழியராக இருந்தபோதும் ஈழத்தமிழருக்கு தனிநாடு(அரசு) வேண்டும் என்பதற் காக இவர் எப்பொழுதும் போராடிவந்தவர் என்பத னை இவரது வாழ்கைவரலாற்றைப் பார்ப்பவர்கள் புரிந்துகொள்ளலாம். செல்வநாயகத்தின் தலைமை யில் அகிம்சைப்போராளியாக முன்முகம் காட்டிய பொழுதிலும் இவர் எப்பொழுதும் தீவிரமான போராட் டக்குணத்துடன் தீவிரவாதியாகவே இயங்கிவந்துள் ளதை தமிழீழவரலாற்றில் நாம் காணலாம். 1959இல் இலங்கைத்தமிழ் எழுதுவினைஞர்சங்கத்தை ஸ்தா பிப் பதில் திரு.கோடீஸ்வரன் திரு. சிவானந்தசுந்தரம் திரு.ஆடியபாதம் என்பவர்களுடன் இணைந்து செய லாற்றியவரே மேற்படி ஆ.இராசரெத்தினமாகும்.

1961 மார்ச் 4இல் சிங்களஸ்ரீக்கு எதிராக திருகோண மலை கச்சேரிவாயிலில் மறியல்செய்த சத்தியாக் கிரகிகள்மீது பொலிசார் தடியடிநடத்தினர். இத் தாக்குதலில் காயமடைந்த மூதூர் பாராளுமன்ற உறுப்பினரான ஏகாம்பரம் 23 மார்ச் 1961 இல் காலமானார். இவருடைய இறுதிச்சடங்கு மிகவும் உணர்ச்சி கொந்தளிப்புடன் திருமலையில் நடந்தேறியது. இதனைத்தொடர்ந்து தமிழரசுக் கட்சியின் அகிம்சாவழி தமிழர்கட்கு விமோசனத்தை ஈட்டித்தராது எனும்கருத்து இதில் கலந்துகொண்ட சிலரால் முன்வைக்கப்பட்டது. அத்துடன் வன்முறை க்கு வன்முறையே வழியென்ற முடிபில் ‘புலிப்படை’ எனும் அமைப்பொன்றும் கோபாவேசத்துடன் அவ் வுணர்வாளர் களினால் உடனடியாக ஆரம்பிக்கப் பட்டது. மேற்படி உணர்வுபூர்வமான நிலையில் அன்று ஆரம்பிக்கப்பட்ட தீவிரவாதம் கொண்ட அமைப்பான ‘புலிப்படை’ யில் ஏறத்தாள இருபதுபேர்வரை இணைந்திருந்ததாக மூத்தபத்திரிகையாளரான சபாரத்தினம் குறிப்பிட்டுள்ளார்.piraisoody-funeral-ltte-flag.jpg

1950களில் இல் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை எழுதிய சங்கிலி(1950) துரேகிகள் (1956) மற்றும் தவறானஎண்ணம் என்பன ஈழத்தமிழரின் வரலாற் றில் குறிப்பிடக் கூடிய வையாகும். இவரது சங்கிலி நாடகத்திற்கு இவரெழுதிய முன்னுரையே ஈழத் தமிழரின் குறிப்பாக யாழ்ப்பாண அரசவம்சா வழியை முழுமையாக எடுத்துக்கூறியது. மேற்படி சங்கிலிநாடகம் முதன்முறையாக 1956இல் அச்சிடப் பட்டபோதே குறிப்பிட்ட இம்முன்னுரை எழுதப்பட்ட தென பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிடுகின்றார். ‘இலங்கை வாழ் தமிழர் வரலாறு’ எனும் பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் குறிப்பிட்ட நூலின் 2003 ஆண்டுபதிப்பின்(குமரன் புத்தகஇல்லம் வெளியீடு) முன்னுரையில் இவர் இதனை பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

1949இல் திரு செல்வநாயகத்தால் தமிழரசுக்கட்சி உருவாக்கப்பட்டது. ‘இத் தமிழரசுக்கட்சியின் தோற்றம். அதனையொட்டி மேற்கிளம்பிய தமிழ் நிலைப்பட்ட அரசி யற்பிரக்ஞை அக்காலத்தில் முதன்மை பெறத்தொடங்கியது. தமிழரசுக்கட்சி யினர் குறிப்பாக முருகேசன் திருச்செல்வம் தமிழரசுக்கட்சியின் இறமைக்கொரிக்கைக்கு ஆதர வாக யாழ்ப்பாணஅரசின் வரலாற்றை மிகவன்மை யாக எடுத்துக்காட்டிவந்தார். அக்காலத்தில் திரு கோணமலையில் ஒருதமிழ்ப்பல்கலைக்கழகம் நிறுவுவதற்காக ஒரு இயக்கமும் முன்னிலைப் படத்தொடங்கிற்று(இது1954-60) இக்காலத்தில் தமிழ் இறமை பற்றிய கருத்துக்கள் முக்கியஇடம் வகித்தன.

ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் அரசியல் மட்டத்தில் ‘பெடரல்’ கட்சியென அழை க்கப்பட்டதெனினும் இதன் உத்தியோகபூர்வமான பெயர் தமிழரசுக் கட்சியேயாகும். இத்தமிழரசுக் கோரிக்கைக்கு பின்புலத்திலேயே தமிழரசு என்ற எண்ணக்கரு தோற் றம்பெற்றது. அக்கருத்துநிலையை ஆதரித்த பேராசிரியர் யாழ்ப்பாணவரலாற்றின் ஒரு முக்கிய கட்டமாக அமைந்த சங்கிலிமன்னன் பற்றிய நாடகத்தை எழுதினார்.’இதுபோன்றதே பேராசிரியர் கணபதிப்பிள்ளை எழுதிய ‘துரோகிகள்’என்றநாடகம் 1956 இலேயே இளைஞர்புரட்சியை எடுத்துக் காட்டியது. அத்துடன் தேசிய இனவிடுதலை எனும் முக்கிய அரசியல்கருத்துக்கள் இந்நாடகத்தில்தான் முதன்முறையாக உரக்ககூறப்பட்டன. குறிப்பாக இந்நாடகம் புலிநாட்டிற்கும் மந்தைநாட்டிற்கும் நடை பெற்ற போரினை சித்தரிப்பதாயிருந்தது.
இவ்வகையில் புலிநாடு என்பதன் முதல்கருவாக்கத்தை இலங்கைத்தமிழர்மத்தியில் உருவாக்கியவராக பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை வரலாற்றில் பதிவாகின்றார். இக் காலத்திலேயே(1956) முன்குறிப்பிட்ட ‘தமிழர்படைதான் புலிப்படை’ எனும் பாடல் வரிகள் கவிஞர் காசிஆனந்தனால் எழுதப்பட்டமையும் இவ்விடத்தில்குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தனிச்சிங்களச்சட்டம் உருவாக்கப்பட்ட 1956இல் புலி மற்றும் புலிநாடு எனும் வார்த்தைப் பயன்பாடு உருவாக்கப்பட்டது. இதுபோன்றதே ‘சிங்களசிறி’ க்கு எதிரான போராட்டகாலமான 1961 இல் புலிப்படை எனும் அமைப்பு முதன்முதலாக உருவாகி உள்ளமையும் வரலாறு நமக்குத்தரும் பெரும் செய்தியாகும்.

இவ்வாறு 1961இல் ஆரம்பிக்கப்பட்ட புலிப்படை எனும் தீவிரவாதஅமைப்பில் முன் னின்று திருகோணமலை ‘கோணேஸ்வரத்தில்’ உறுதியெடுத்தவர்களில் மேற் கூறிய இராசரத்தினமும் ஒருவராவார். இவருடன் உறுதியெடுத்த புலிப்படையின் ஏனைய உறுப்பினர் களாக தமிழ்எழுதுவினைஞர் சங்கத்தலைவரா யிருந்த வல்வெட்டித்துறையைச்சேர்ந்த சிவானந்த சுந்தரம் மற்றும் வவுனியாவின் முன்னால் அரச அதிபரான இராசதுரை என்போர் பெயர் குறிப்பிடத்த க்கவர்கள். (Tigers Of Lanka N.R.Nar ayanaswamy Page24) இவர்களுடன் உறுதியெடுத்த புலிப்படையின் ஏனைய உறுப்பினர்களாக வட்டுக்கோட்டை பாராளு மன்றஉறுப்பினர் அமிர்தலிங்கம் சாவகச்சேரி பாராளு மன்றஉறுப்பினர் ஏ.நவரத்தினம் மற்றும் கொழும்பு மாநகரசபை உறுப்பி னராக இருந்த நீதிராஜா என்போரும் பெயர் குறிப்பிடத்தக்கவர்கள். குறிப்பிட்ட புலிப்படையில் இணைந்த சிலஇளை ஞர்கள் ஆயுதப்பயிற்சி பெறும்நோக்கில் கண்டிக்கு சென்று துப்பாக்கிசுடும் பயிற்சியினையும் அக்காலத் தில் மேற்கொண்டனர். அத்துடன் கொழும்பு கொட்டாஞ் சேனையில் தற்பாதுகாப்பு பயிற்சிகளை யும் இவர்கள் தொடர்ந்து பெற்றுவந்தனர். இவ்வாறு அன்றையதமிழர்களின் முதன்மையான ஆயுதக் குழு வாக இவர்கள் தம்மை மாற்றிக்கொள்ள முனைந்த னர். எனினும் 1965 இல் ஏற் பட்ட ஆட்சிமாற்றத்துடன் குறிப்பிட்ட புலிப்படை தனதுகனவினை இழந்து சிதைந்து போனது. காரணம் புலிப்படையில் தீவிரவாதம்காட்டிய தமிழரசுக்கட்சியினரான அமிர்த லிங்கம் மற்றும் நவரத்தினம் என்போர் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்த கூட்டாச்சியில் சிங்களஅரசுடன் சோரம் போயிருந்தனர். எனினும் இராசதுரை சிவானந்தசுந்தரம் இராசரெத்தினம் என்போர் தமது இறுதிக்காலம்வரை தனித்தமிழரசு என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவந்ததே அவர்களின் தூயவரலாறு ஆகும். ஈழத்தமிழர்கள் தனித்துவமாக வாழ்வதற்கு அவர்களின் நிலமும் பொருளாதாரமும் காப்பாற்றப்பட வேண்டு மென்பதில் இராசதுரையும் சிவானந்தசுந்தரமும் முனைப்புடன் செயற்பட மற்றொரு வரான இராசரெத்தினம் ‘தமிழர்களுக்கு தனியான இராணுவம்’ வேண்டும் என்பதனை சிந்னையாகக்கொண்டு அன்று முனைப்புடன் செயற்படலானார். இவர்களில் சிவானந்தசுந்தரம் இராசரெத்தினம் என்போர் பின்நாட்களில் தமிழீழத்தின் முதலாவது மாமனிதர்களாக தமிழீழ விடுதலைப்புலிகளால் பெருமைப்படுத்தப்பட்டனர். 1990 இல் இராசரெத்தினத்தின் தொகுதியான சாவகச்சேரியில் நடந்த முத்தமிழ்விழாவில் தேசியத் தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரனால் இவர்க ளுக்கு இவ்உயரிய கௌரவம் அவர்களின் குடும் பத்தினரிடம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.piraisoody-funeral-ltte-flag-3.jpg

இவர்களில் மாமனிதராக கௌரவிக்கப்பட்டடு பெருமைபெற்றவார்களில் ஒருவராகிய சிவானந்த சுந்தரம் வல்வெட்டித்துறையை சேர்ந்தவராவார். இவர் தமிழில் பெரும் பாண்டித்தியம்மிக்கவராக திகழ்ந்தவரும் கொழும்பு தமிழ்ச்சங்கத் தலைவரா யிருந்த வித்துவான் கனகசுந்தரத்தின் மகனாவார். தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இல்லாதபோதும் அதன் நிர்வாககாரியதரசியாக விளங்கிய பெருமைக்குரியவர். அதற்கேற்ப சிங்க ளம்மட்டும் சட்டத்தை எதிர்த்து தனது அரசபதவியை இவர் அன்று துறந்திருந்தார். இலங்கைத்தமிழ் எழுது வினைஞர் சங்கத்தின் ஸ்தாபகரில் ஒருவராகவும் அதன் ஆரம்பசெயலாளராகவும் விளங்கியவர். பின்னாட்களின் தமிழரசுக்கட்சியின் போலித்தன மான செயற்பாட்டில் வெறுப்புற்று விலகிய ‘காவலூர்’ நவரத்தினத்தின் தமிழர் சுயாட்சிக்கழகத்தின் தூணாக செயற்பட்டார்.

தலைவர் பிரபாகரனது தலைமையையும் விடுதலைப்புலிகளின் பாதையையும் மானசீகமாக ஏற்றுக்கொண்டு பின்னாட்களில் அதற்காக செயற் பட்டவர்களில் திரு சிவானந்தசுந்தரமும் ஒருவரா வார். 29.07.1987 இல் ஈழத்தமிழர்மீது திணிக்கப்பட்ட இந்தியஇலங்கை ஒப்பந்தத்தினால் ஏற்படுத்தப்பட்ட வடகிழக்கு மாகாணசபையின் தற்காலிக இடைக் கால நிர்வாகசபைக்குதலைவராக பரிந்துரைக் கப்பட்ட மூன்று பெயர்களில் இவரதுபெயரும் விடு தலைப்புலிகளால் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. எனி னும் புலிகள்இந்திய மோதலின்பின் இந்தியஇராணு வம் தமிழீழப்பகுதிகளை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என இவர் தொடர்ந்து பிரச் சாரம் புரிந்துவந்தார். இவ்வாறே இந்திய இராணு வத்தின் அடாவடித்தனங்களை நேர்சென்று எதிர்த்த இவரின் துணிவுமிக்க செயல்கள் இவரை இந்திய அரசின் முதன்நிலை எதிரியாக்கியது. குறிப்பாக யாழ் கச்சேரியில் நடந்த இந்தியஅதிகாரிகளுடனான சந்திப்பொன்றில் காந்தியவழியில் உண்ணா நோன் பிருந்த திலீபனின் உண்ணாவிரதத்தை இந்தியஅரசு உதாசீனப்படுத்தியது பெரும்தவறு. எனவே புலி களிடம் பெற்றுக்கொண்ட ஆயுதங்களை அவர்க ளிடமே கையளித்துவிட்டு இந்தியப்படை உடனடி யாக வெளியேற வேண்டும் எனச்சத்தமிட்டவாறு இந்தியத்தூதுவர் தீட்சித்திடம் நேரடியாக மோதி விட்டு அச்சந்திப்பிலிருந்து வெளியேறினார். இதன் காரணமாக அடுத்த சிலநாட்களில் 21.10. 1988 இல் வல்லைவெளியில் இந்தியப்படை முகாமிற்கு முன் பாக அவர்களின் கைக் கூலிகளாக விளங்கிய EPRLF பைச்சேர்ந்த சங்கர் என்பவரினால் திரு.சிவானந்த சுந் தரம் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். சிறந்த அறிவாற்றல்கொண்ட இவர் ; Srilanka Ethnic Conflict எனும் நூலொன்றை எழுதி 2.4.1988 இல் வெளியிட்டி ருந்தார்.praba-friend-piraisoodi-3.jpg

புலிப்படையில் அங்கம்வகித்திருந்த இரண்டாமவர் முன்கூறிய திரு.இராசரத்தினம் ஆவார். 1965 இல் இலங்கைத்தமிழ் எழுதுவினைஞர் சங்கத்தின் இணைப் பொதுச் செயலாளராக இவர்கடமை யாற்றியிருந்தார். எனினும் தமிழரசுக்கட்சியின் தீவிரம் போதாது என கொள்கைரீதியாக அதனுடன் முரண்பட்டு 1969இல் திரு எ.நவரத்தினத்தால் தோற்றுவிக்கப்பட்ட தமிழர் சுயாட்சிக்கழகத்தில் இணைந்து அதன் தீவிர விசுவாசியாக இவரும் விளங்கினார்;. 1970இன் இறுதியில் தோன்றி தமிழ் இன உணர் வுடன் இளைஞர்களை ஆயுதப்போரிற்கு அணிதிரட்டிய தமிழ்மாணவர் பேரவை யினருக்கு தன்னால் இயன்ற அளவிற்கு இவரும் ஆதரவுடன் உதவிகளைப் புரிந்து வந்தார். 1972 பெப்ரவரியில் தமிழ்நாட்டுத்தலைவர்களை சந்திப்பதற்காக இந்தி யா சென்றிருந்த தமிழர்கூட்டணியின் அன்றைய தலைவரான செல்வநாயகம் தளபதி அமிர்தலிங்கம் என்பவர்களுக்கு முன்பாகவே அங்கு சென்று அவர்க ளின் பயண ஏற்பாட்டிற்கு ஆவணபுரிந்த செயல்வீரர் இவராவர். 1973 தை 15இல் வேலணைக்கு வருகை தந்த குமாரசூரியரை குறிவைத்து நடந்த மண்கும் பான் குண்டு வெடிப்பு முயற்சியைத்தொடர்ந்து தமிழ்மாணவர் பேரவையின் தலைவர் சத்தியசீலன் உட்பட அதன் பெரும்பாலான அங்கத்தவர்களும் அவர்களிற்கு ஆதரவளித்த பலரும் தொடர்ச்சியாக கைதுசெய்யப்பட்டனர். இவ்வகையில் பொட்டாசியம் என்னும் இரா சயனப் பொருளை மாணவர் பேரவை யினருக்கு கொழும்பில் இருந்து அனுப்பினார் என்ற குற்றச்சாட்டில் இவரையும் கைதுசெய்ய பொலிசார் தேடியலைந்தனர். இதனால் தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்ற இராசரத்தினம் அங்கேயே தொடர்ந்து தங்க நேர்ந்தது. தான்சார்ந்த தமிழரசுக் கட்சியினரால் கைவிடப்பட்டு குறிப்பாக தான்சார்ந்த சாவகச் சேரிதொகுதியின் நாடாளுமன்றஉறுப்பினரும் புலிப்படையில் தன்னுடன் சத்தியப் பிரமாணம் எடுத்த சகஉறுப்பினரான ஏ.நவரத்தினத்தின் துரோ கத்தனத்தினாலும் பாராமுகத்தினாலும் இவர் மிகவும் மனம் வருந்தியிருந்தார். ஆஸ்துமாநோயினால் வருந்திய நிலையில் மிகுந்த பொருளாதார கஸ்டத் தின் மத்தியில் சென்னையில் வாழ்ந்த இவர் திரு இரா.ஜனார்த்தனம் மற்றும் மணவைத்தம்பி போன்ற வர்களின் தயவில் தனது காலத்தைக் கழித்துவந்தார்.praba-friend-piraisoodi.jpg

ஈழத்தில் ஆயுதப்போராட்டத்தில் நாட்டம்கொண்ட குழுவினர்கள் பலரும் 1972 ஆம் ஆண்டின் பல்வேறு நிலைகளைக் கடந்து 1973 — 1974 காலப்பகுதிகளில் சென்னையிலேயே கழிக்கநேர்ந்தது. 1974ஆகஸ்டில் ஆயுதப்போராளிகளின் முதல் தலைவரான பெரிய சோதி என்னும் சோதிலிங்கம் மற்றும் முன்ணணிப் போராளிகளான தங்கத்துரை நடேசுதாஸன் என்ப வர்களுடன் வேதாரணியத்திலிருந்;து சென்னைக்கு வந்த தலைவர் பிரபாகரனும் சென்னையின் கோடம் பாக்கத்திலேயே தங்கியிருந்தார்.

தமிழ்இனம் மற்றும் தமிழர்களின்விடுதலை என்று ஒரேநோக்கத்தை கொண்ட இளை ஞர்கள் பலரும் பல்வேறுகுழுக்களாக பிரிந்து இயங்குவதைக்கண்ட வயதிலும் அனுபவத்திலும் மூத்தபோராளியான இராசரெத்தினம் மிகுந்த வேதனைப்பட்டார்.

இதனால் ஈழவிடுதலைக்காக போராடமுன்வந்த எல்லோரையும் இணைத்து தனியான ஒரு விடுத லைப்படையை உருவாக்க வேண்டுமென்ற நன்நோக்கில் சென்னையில் தங்கியிருந்த இளை ஞர்களிடம் தனது பரப்புரையை மேற்கொண்டு வந்தார். தமிழரின்படைக்கு தனியானநிறம் தனி யான சீருடை கொண்டதான ஒரு இராணுவக் கட்டமைப்பை பற்றியும் தனதுநோக்கில் ஐம்பதி னாயிரம் தமிழ் இளைஞர்களை சேர்க்கவேண்டு மென்ற தனது உள்ளக்கிடக்கைகளையும் மேற்படி போராட்ட இளைஞர் களிடம் விதைக்கமுயன்றார். இதனைவிட பல இனவிடுதலை சம்பந்தமான நூல் களை படித்தும் சேகரித்தும் அவைபற்றி மேற்படி இளைஞர்களிடம் கூறிவந்தார். இக்காலத்தில்தான் குறிப்பாக 1974 ஆகஸ்டில் வேதாரணியத்திலிருந்து சென்னை க்குவந்த தலைவர் பிரபாகரனும் பெரியவர் இராசரத்தினத்துடன் பழகஆரம்பித்தார். ஈழத் தமிழர்களின் உரிமைகள் அல்லது விடுதலை என்பதுபற்றிய தூயசிந்னையுடன் கருத்தொற்றுமை கொண்ட இருவரும் விரைவிலேயே மிகஅந்நியோன் னி யமாகினர். இதனால் மனம்திறந்த நட்புடன் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு பழகிவந்தனர். தந்தை மகன் போன்ற வயதுடன் காணப்பட்ட இவர் கள் தமது பசிபட்டினியை மறந்து கன்னிமாரா நூல் நிலையத்தில் பலமணி நேரங்களை இக்காலத்தில் செலவிட்டனர்.

இக்காலத்தில் The History of Thamiraparni எனும் ஈழத் தமிழர்களின் வரலாறு கூறும் நூலொன்றையும் இராசரத்தினம் எழுதிவந்தார். (இவரது மறைவின்பின் இப்புத்தகம் இரா.ஜனார்தனத்தினால் வெளியிடப் பட்டது) இந்நூலின் மூலம் இலங்கையின் அல்லது ஈழத்தின் புரதானபெயரான ‘தாமிரபரணி’ எனும் பெயரை இவர் உள்வாங்கிக்கொண்டுள்ளார் எனலாம். ஏனேனில் 1974 யூன் 1ந் திகதி தான் வாசித் ததாக தனதுடயரியில் இவர் குறிப்பிட்டிருக்கும் Notices of South India From Magesthens To Mahun என்னும் நூலில் ஈழத்தின் மூத்தகுடியினர் தமிழர்கள் என்பதற்கான பலஆதாரங்கள் இருந்ததாகவும் அதைக்கண்டு தான் மகிழ்வடை வதாகவும் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக் காட்டத்தக்கது. இங்கு Magesthens (மொகஸ்தனிஸ்) என குறிப்பிடப்பட்டுள்ளவர் கிறிஸ்துவிற்கு முன் மூன்றாம் நூற்றா ண்டைச் சேர்ந்த சந்திரகுப்த மௌரி யரின் அரசசபையில் கிரேக்கதூதராக இருந்தவர். கிரேக்கமொழியில் இவர் எழுதிய அக்கால குறிப்புகளில் இலங்கையை ‘தப்ரபேன்’ என இவர் குறித்துள்ளார். இதனையே பாளிமொழியில் எழுத ப்பட்ட பின்வந்த மகா வம்சம் ‘தம்பபண்ணி’ என குறிப்பிடுகின்றமையும் இங்கே நோக்கத்தக்கது. ஈழம் என முழுமையான பெயரைக் குறிப்பிடும் முத லாவது தமிழ்இலக்கிய சான்று கிபி இரண்டாம் நூற்றாண்டில் கரிகாலன் காலத்தில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ப வரால் எழுதப்பட்ட ‘பட்டினப்பாலை’ எனும் நுலில் காணப்படு கின்றது. மேற்படியுள்ள பலகாரணிகளால் ஈழம் என்பதற்கு முந்தையபெயரான தாமிரபரணி என்னும் பெயரை ஈழத்தமிழர்களின் தனிநாட்டிற்கான பெயராக திரு.ஆ.இராசரத்தினம் முதலில் எடுத்துக் கொண்டுள்ளார் எனலாம். அத்துடன் 1961இல் திருகோண மலையில் ஆவேசத்துடன் தாம் உருவாக்கிய புலிப்படை என்ற அமைப்பிலிருந்த ‘புலி’ என்ற கருத்துடன் கூடியபெயரினையும் இணைத்து தான் உருவாக்க நினைத்த புதிய இராணுவ கட்ட மைப்பிற்கு ‘தாமிரபரணி புதியபுலிகள்’ என இராசரத்தினம் 1974 இலில் பெயரை சூட்டிக் கொண்டார். புலிஎன்பது தமிழர்களின் அரசவம்ச த்தில் முதன்மையானவர்களாக கருதப்படும் சோழ அரசவம்சத்தின் இலச் சினையாகும். இத்தகைய தாமிரபரணி மற்றும் புலி எனும் கருத்துப்பொதிந்த சொற்களை இணைத்து ‘தாமிரபரணி புதியபுலிகள்’ என்னும் பெயரை இராசரத்தினம் உருவாக்கினார். இவர் தனது 1974 செப்டெம்பர் 04ந் திகதிக்கான நாட் குறிப்பில் ‘தாமிரபரணி புதியபுலிகள்’ என்னும் பெயரை உருவாக்கிக் கொடுத்தேன். அதன் உள்ளா ர்த் தத்தை விளக்கித் தங்கத்திடம் கூறினேன். எனக் குறிப்பிட்டுள்ளார். இங்கு தங்கம் எனக்குறிப்பிடப் படுபவர் யாரிடமும் மனம்கோளாமல் நடப்பவரும் தங்கண்ணா என தலைவர் பிரபாகரனினால் அழைக்கப்பட்ட போராட்ட முன்னோடியான தங்கத்துரை ஆவார். தாமிரபரணி புதிய புலிகள் என்பதன் ஆங்கிலவார்த்தையின் சுருக்க குறியீடு; TNT என்பதேயாகும்

ஈழத்தமிழர்களிற்கான விடிவு தனிநாடு தான் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் உலகவரலாறு இந்தியவரலாறு இலங்கை வரலாறு எனப்பல வரலாற்று நூல்களில் மூழ்கிய இராச ரத்தினமும் தம்பி என்றழைக்கப்பட்ட தலைவர் பிரபாகரனும் வரலாற்றிலிருந்தே தமக்கான மாற்று(இயக்க)ப் பெயர்களையும் தேடிக்கொண்டனர். இக்காலத்தில் தலைவர்பிரபாகரன் தனதுபெயராக சோழமன்னன் ‘கரி காலன்’ என்பதையும் இராச ரத்தினம் ஈழமன்னன் எல்லாளன்(ஈழாளன்) என்ப தனையும் தமது மாற்றுப்பெயர்களாக வகுத்துக் கொண்டனர். குறிப்பாக 1982 ஆயல 19 இல் சென்னை யின் பாண்டிபஜாரில் உமாமகேஸ்வரனுடனான மோதலின்போது தலைவர் முதன்முதல் கைதானார். தன்னைக் கைதுசெய்த தமிழககாவல்துறை அதிகாரியிடம் தனதுபெயராக தலைவர் முதலில் கூறியபெயர் வேலுப்பிள்ளை ‘கரிகாலன்’ என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இராசரத் தினத்தின் தனிநாடு பற்றிய கருத்துக்களை மானசீகமாக உள்வாங்கிக் கொண்ட தலைவரின் மனத்திலும் ‘தாமிரபரணி புதிய புலிகள்’ என்றபெயர் விருப்பத்திற்குரியதாகியது.

இதன்வழியில் தமிழினஉணர்வில் உந்தப்பட்டு தொடர்ச்சியாக வழிநடந்த தலைவர் பிரபாகரன் விடுதலைப்போராட்டத்திற்கான ஆயதஇயக்கத்தை 1975 இல் முதன்முதல் தனது தலைமையில் உரு வாக்கினார். தாமிரபரணி என்னும் தாயகப் பிர தேசத்தின் பெயரால் தியாகி இராசரத்தினத்தால் உருவாக்கப்பட்ட இயக்கப்பெயரின் ஆங்கிலக் குறி யீடு TNT என்பதாகும. இதற்கேற்ப தனதுஆசானின் மனம்கோணாமல் ஆங்கிலத்தில் T.N.T எனும் அதேகுறியீட்டினை உடையதான சொல்லும் பொருளும் சிதை வுறாமல் TAMIL NEW TIGERS என இனத்தின் பெயரால் தான் உருவாக்கிய இயக்கத் திற்கு ‘புதிய தமிழ்ப்புலிகள்’ என்பதனை பெயராக்கிக்கொண்டார். ஏனெனின் எப்பொழுதும் தீவிரவாத செயற்பாடுகளில் முன்னின்ற தலைவரால் நேசிக்கப்பட்ட வெடிமருந்தின் பெயரும் TNT என்ப தாகும். மேற்படி தாமிரபரணி புதியபுலிகள் மற்றும் புதிய தமிழ்ப்புலிகள் எனும் இரண்டு பெயர் களின் ஆங்கிலகுறியீடுகள் எவ்வித மாறு பாடுமின்றி T.N.T என வருவதனால் தலைவரால் இப்பெயர் பெரிதும் விரும்பப்பட்டது.

இப்பெயரினையே 27.07.1975 ஞாயிற்றுக்கிழமை பொன்னாலையில் துரையப்பாவை எதிர்பார்த்து தலைவர் பிரபாகரனுடன் காத்திருந்த முதன்நிலைப் போராளியான கலாபதி T.N.T என எழுதிவைத்தார்.

TNTஎன்ற பெயரினை அப்பழுக்கின்றி முன் மொழிந்த இராசரெத்தினம் அப்பெயர் கொண்ட அமைப்பினால் 27.07.1975 இல் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார். என்ப தை அறிந்து மகிழ்வடைந்த நிலையில் மூன்றுவாரம் கடந்து 19.08.1975 இல் ஆஸ்துமா நோயின் தாக்கத்தால் சென்னையில் இயற்கையெய்தினார். சென்னையில் பரிதாபத்திற்கு உரியவராக வாழ்ந்த அவரை தமிழ்நாடு சென்;ற வேளைகளிலெல்லாம் தமிழரசுக்கட்சித் தலைவர்கள் சந்திக்க மறுத்திருந்தனர். எனினும் தியாகவாழ்வு வாழ்ந்த அவர் மறைந்தபின் பின்னாட்களில் ‘ஈழத்து நேதாஜி’ எனப்பட்டமளித்து தமக் குரிமை கொண்டா டினர். மானசீகமாக தனக்கேற்ற அறிவுரைகள் வழங்கி ‘புலி’ என்ற பெயரினையும் தமிழர்வரலாற் றுடன் பிணைந்திருக்கும் அதன் பெருமையினையும் தனக்குணர்த்திய பெரியவர் இராசரத்தினத்தை 1990 யூன்மாதத்தில் அவருடைய சொந்தஇடமான சாவகச் சேரியில் நடந்த முத்தமிழ்விழாவில் தமிழ்ஈழத்தின் முதலா வது ‘மாமனிதர்’ என பட்டமளித்து தலைவர் பிரபாகரன் இவரைப் பெருமைப்படுத் தியிருந்தார். இப்பட்டமளிப்பின் பட்டோலையை இவருடைய மனைவியார் தலைவரிடம் நேரடியாக பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி இராசரெத்தினத்தின் மகளே 1991மே21 இல் நடைபெற்ற இராஜீவ் காந்தி கொலைவழக்கில் தற் கொலைக் குண்டுதாரியாக குற்றம் சாட்டப்பெற்ற தனு என நம்பப்படுகின்றது.)

மேற்குறிப்பிட்ட புலிப்படைபற்றி இவர்களுடன் நட்பாகவிளங்கிய பிரபலபத்திகையாளராக திகழ்ந்த த.சபாரத்தினம் தனது ‘ஓயாதஅலைகள்’ தொடரில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

‘1965இல் தமிழரசுக்கட்சி டட்லிசெனநாயக்காவின் தேசிய அரசாங்கத்தில் சேர்ந் ததுமே புலிப்படை தானாகவே சிதைந்துவிட்டது. அதில் தீவிரபங்கு வகித்தவர்கள் அரசியலிலிருந்து ஒதுங்கினர். அவர்களில் ஒருவரான இராசரத்தினம் சென்னைக் குப் போய் ஏழ்மையில் உழன்று காலமானார். மற் றொருவரான சிவானந்தசுந்தரம் தமிழீழ விடுத லைப்புலிகளின் தீவிரஆதரவாளரானார். 1988இல் ஈபிஆர்எல்எவ் குழு அவரை சுட்டுக்கொன்றது. மற்றவர்கள் கனடாவிற்கும் பிரிட்டனிற்கும் பிரான் சிற்கும் அவுஸ்ரேலி யாவிற்கும் புலம்பெயர்ந்தனர்.

கப்பல் கம்பனியொன்றை ஆரம்பித்தமை புலிப் படையினர் எடுத்த மூன்றாவது நடவடிக்கை. 1960ம் ஆண்டுகளில் கடற்றொழில் அமைச்சு மீன்பிடித் தொழிலை ஊக்குவித்தது. புலிப்படையினரில் சிலர் சிவில்சேவை அதிகாரியின் தலைமையில் டிரோலர் ஒன்றைவாங்கினர். ஆயுதங்களை கடத்துவதே அதன் பிரதானநோக்கம் கப்பல்கம்பனி சிலகாலத்தில் தரை தட்டிவிட்டது’

சபாரத்தினம் மேற்கண்டவாறு குறிப்பிடும் சிவில் சேவை அதிகாரியே வவுனியாவின் அரச அதிபராக விளங்கிய T.இராசதுரையாவார். இவரே புலிப்படையின் காரியவாதி யாகவும் அனைவ ரையும் ஒன்றிணைத்து வழிநடத்திய பெருமைக் குரியவர். ஏனோ இவரின் பங்களிப்பு இன்றுவரை நேரிடையாக பேசப்படாமலே இருந்து வந்துள்ளது.

1958 தமிழ் இனப்படுப்கொலையை தொடர்ந்து வவுனியா அரசஅதிபராக கடமையாற்றிய இராசது ரை பலதமிழர்களுக்கு அரசகாணிகளை பகிர்ந் தளித்தார். தனது அதிகாரத்தை பயன்படுத்தி இவர் மேற்கொண்ட இம்முயற்சியால் சீற்றம்கொண்ட சிங்களஅரசினால் இவர் வவுனியா அரசஅதிபர் பதவியில் இருந்து புகையிரத திணைக்களத்திற்கு பந்தாடப்பட்டார். இவருடைய காணிவழங்கலகள் யாவும்; இடை நிறுத்தப்பட்டு; அன்றைய பாராளு மன்றத்திலும் இது பிரஸ்தாபிக்கப்பட்டது. அரச அதிகாரத்தை இழந்தபோதும் மனம்தளராமல் தமிழர்களின் சுயபொருளாதார முயற் சியாக இவர் ஆரம்பித்த Rose Brand Sweet’s தொழிற்சாலை மற்றும் Ceylon Trawlers Limited என்பன என்றும் குறிப்பிடத் தக்கன. இவரால் 1970 இன் ஆரம்பத்தில் தயாரிக் கப்பட்ட ரொபி ஒன்றின் பெயர் ரைகர் (Riger) பிராண்ட் ரொபி என்ப தாகும். இந்த ரொபி மஞ்சளும் கறுப்பு நிறமும் இணைந்ததாளினால் சுற்றப் பட்டிருந்தது. மஞ்சள்நிற பின்ணணியில் கறுப்பு நிறத்தில் புலியின் தலையும் Tiger Brand என்ற எழுத்தும் இதில் அச்சிடப்பட்டிருந்தன.

இதுதவிர மூத்தபத்திரிகையாளாரான சபாரத்தினம் முன்கூறிவாறு இவர்தலை மையில் 271 Sea Street Colombo 11 ஐ அலுவலகமாக கொண்டியங்கிய Ceylon Trawlers Limited டுiநிறுவனமும் மேற்படி புலிப்படை யினரின் செயற்பாட்டில் குறிப்பிடத்தக்கது. நான்கு பக்கமும் கடல்சூழ்நத இலங்கையில் கப்பல்போக்கு வரத்து மிகஇன்றியமையாதது என்ற பிரிட்டிஸ்கால கடற்படைஅதிகாரியான E.Sanmuga ratnam என்ப வரின் ஆலோசனையுடன் இந்நிறுவனம் ஆரம் பிக்கப்பட்டிருந்தது. இந்நிறு வனத்திற்கு பொறுப்பான முகாமையாளராக முன்கூறிய சிவானந்தசுந்தரம் கடமையாற்றிவந்தார்.

இவர்கள் கொள்வனவு செய்யத்திட்டமிட்ட மூன்று கலங்களில் முதலாவது கடற்கலத் தின் பெயர் Boston Spit fire ஆகும். இது ஒரு மீன்பிடி றோலராகும். இது 1965 இல் இலண்டனில் கொள்வனவு செய்யப்பட்டு இலங்கைக்கு எடுத்துவரப்பட்டது. இக் கப்பலின் பங்கு கள் குறிக்கப்பட்ட பலருக்கும் விற்பனை செய்யப்பட்டு இதன்சேவை பரவலாக்கப்பட்டது. கொழும்பு கொச்சிக்கடை; புனிதஅந்தோனியார் ஆலயத்திற்கு முன்பான இறங்குதுறையுடன் கட்டப் படும் இந்தறோலரில் கொண்டுவரப்பட்ட மீன்கள் இதனுடன் இணைந்திருந்த பலருக்கும் அன்றன்றே பிரித்து டெலிவரி செய்யப்பட்டன. இவ்வாறு ஆரம் பத்தில் மீன்பிடிறோலராகவும் பின்னர் கொழும்பு தூத்துக்குடி பயணிகள் கப்பலாகவும் 1973 ஆண்டு வரை இதுசேவையில் ஈடுபட்டது. இந்தறோலரில் வல்வெட் டித்துறையை சேர்ந்த 40பேர்வரை பயிற்சி பெற்று முன்ணணி கப்பல் மாலுமிகளாகியமை இதன்பெருமைக்கு சான்றாகும்.

1965 மார்ச்சில் இல் இக்கப்பலில் முதன்முதல் பயிற்சியாளராக இணைந்த இருவர்களில் ஒருவர் கப்டன் சிவலிங்கமாவார். அடுத்தவரே கப்டன் டேவிட் என் அழைக் கப்பட்ட அமரர் திரு பிறைசூடி அவர் களாவார். பருத்தித்துறையின் ஹாட்லிக் கல் லூரியின் பெருமைக்குரிய மாணவனான இவர் Samos Grannries எனும் அரசாங்க கூட்டுநிறுவன மொன்றில் கொழும்பில் கடமையாற்றி வந்தார். அக்காலத்தில் நண்பர் களுடன் கூட்டாகவாழும் சமறி எனும் அறைவாழ்கையில் வல்வெட்டித்துறையை சேர்ந்த திருநாவுக்கரசு வேலுப்பிள்ளை வைத்தீஸ் வரன்சகோதரர்கள் மற்றும் சிவலிங்கம் என்போருடன் இணைந்திருந்தார். தனது அரசகூட்டுத்தாபன இரண்டாம் நிலைப் பதவியை உதறிவிட்டேBoston Spit fire இல் கடல்மாலுமியாகும் பயிற்சியாளராக இவர்இணைந்து கொண்டார். குறிப்பிட்ட இக்க டற்கலமே பின்பு ஈஸ்வரி என்னும் பெயரில் கொழும்பு தூத்துக்குடி வரையான பயணிகள் கப்பலாக செயற்பட்டது. சிறிது காலத்தில் முன்கூறிய புலிப்படையின் ஆலோசகராக விளங்கிய நு.ளுயnஅரபயசயவ யெஅ எனும் கடற்படை அதிகாரியின் தலைமையிலான பாகிம்(Fahim) றோலரில் பயிற்சியாளராக இணைந்து கொண்டார். இங்கு குறிப்பிடப்படும் சண்முகரத்தினம் இலங்கை யின் வரலாற்றில் நீண்டகாலம் கடற் படைத்தள பதியாக பெருமையுடன் பணியாற்றிய இராஜன் கதிர்காமரின் சகாவானவர். இந்த குயாiஅ றோலரில் முதன் நிலைஅதிகாரியாக விளங்கிய வல்வெட்டித் துறையின் புகழ்பெற்ற ஸ்கிப்பர் தர சான்றிதழ் பெற்றிருந்த குணசுந்தரத்திடம்மாஸ்டரிடம் நேரடி யாக பெற்ற பயிற்சியினால் சிறந்த கடலோடியாக திரு.பிறைசூடி மிளிர்ந்துகொண்டார். பலபடி நிலை களைக்கடந்த இவர் இலண்டனில் கப்பல் தலை வருக்கான(Ship caption) சான்றிதழை பெற்றுக் கொண்டவர்.

கப்பல்தலைவரான இவர் ‘திரைகடலோடி திரவியம் தேடு’ முதுமொழியை ஆதார மாகக்கொண்டு வளர்ந்துவந்த நிலையில் சமூகத்தில் கனவானாக முன்னிலைப் படுத்தப்பட்டார். 14அறைகள் கொண்ட இவரால் கட்டப்பட்ட மாளிகையில் கண்வைத்த மாற்றியக்கத்தினர் மனிதர்களின் பெருமையறியாது திறமையறியாது இவரை கப்பம் கேட்டு தொந்த ரவுக்குள்ளாக்கினர். உயிராபத்தானநிலையில் தலைவர் பிரபாகரனது தீவிர ஆதரவாளரான இவர் முழுமையாக 1984 இல் விடுலைப்புலிகள் இயக் கத்துடன் தன்னை இணைத்துக்கொண்டார். தகுந்தவரின் தகமையறியும் தலைவர்பிரபாகரன் தனது நெடுநாள் கனவான விடுதலைப்புலிகளின் கப்பல்கனவினை அமரர் பிறை சூடியின் திறமையில் நம்பிகைவைத்து ஆரம்பித்தார். 1976 இல் புதிய தமிழ்ப்புலிகள் தமிழீழ விடுதலைப்புலிகளாக பெயர்மாற்றம் பெற்றது முதல் ‘நாங்களும் கப்பல் ஓடுவோம்’ என தலைவர் திடசங்கற்பம் பூண்டி ருந்த மை இவ்விடத்தில் நினைவூட்டத்தக்கது. இவ் வாறுதான் 1984 ஆண்டின் இறுதியில் தலைவர் பிரபாகரன் ஆரம்பித்த விடுதலைப்புலிகளின் முதலாவது கப்பல்நிறுவனமான (Arasu Maritime (SDN BHD) இன் நிர்வாகஇயக்குனராகவும் முதலாவது கப்பலான ‘சோழன்’ கப்பலில் கப்டனாகவும் திரு.பிறைசூடி பொறுப்பேற்றுக்கொண்டார்.

பல(12) கப்பல்களை வைத்து தூரகிழக்கு ஆசியநாடுகளுடன் வர்த்தகம்புரிந்ததுடன் வல்வெட்டித்துறையின் சமூகத்தலைவராகவும் விளங்கியர் பெரியவர் திருமேனியார் வெங் கடா சலமாவார். இவரின் வழிவந்த தலைவர் பிரபா கரனின் கப்பலோடும் எண்ணத் திற்கு உயி ரும்உருவமும் கொடுத்தபெருமை கப்டன் பிறை சூடியையே சாரும். 1965 இல் புலிப்படையின் கப்பலில் பயிற்சியாளராகி 1985இல் விடுதலைப் புலிகளின் கடல் சார்ந்த வர்த்தகத்திற்கும் அதனதுகப்பல்களுக்கும் முதலாவது பொறுப் பாளராகி அத்துறையை வளர்த்து வரலாறு படைத்தவர் இவரேயாவார். 1961இல் புலிப்படை பெய ரளவில் ஆரம்பிக்கப்பட்டபோதும் 1975இல் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் அமைப்பே பின்னாட்களில் ‘புலிப்படை’ என்றபெயரில் அழைக் கப்பட்டு பெயருக்கு ஏற்ப பெருமையும் வீறும் கொண்டியங்கியது ஈழத்தமிழரின் வீரவரலாறு ஆகும். இவ்வாறு தலைவர் பிரபாகரன் போட்ட கோடு களொன்றில் பெரும்றோடு போட்டவர் கப்டன் பிறை சூடி ஆவார். இவர்போட்ட றோட்டிலேயே பின்வந்த பலரும் ஊர்வலம் வந்தனர். குறிப்பாக இவரது ஓய்வின் பின்னரே கேபி என்ற குமரன் பத்மநாதன் விடுதபைபுலிகளின் கப்பல்களுக்கு பொறுப் பாளரானது பலரும் அறியாக ஒன்று.

திரு பிறைசூடி அவர்கள் தலைவர் பிரபாகரனுடன் இணைந்து விடுதலைப்புலிகளின் சர்வதேசகப்பல் கட்டமைப்பை உருவாக்கியிருந்தார். MV Cholan என்ற சிறிய கப்பலில் தொடங்கிய இவர்களது பயணம் உலகளாவியது. இத்தயை பெருமைமிக்க கப்டன் பிறைசூடிக்கு வரலாற்றைத்தேடும் வர்ண குலத்தானின் தலைசாய்தத கண்ணீர் அஞ்சலிகள் உரித்தாகட்டும்.

ஈழத்தமிழரின் கடலாளுமைக்கு சான்றாக விளங்கிய அமரர் பிறைசூடியின் வழியில் ஆழக்கடலெங்கும் பிரபாகரனின் பெயர்கூறிய கப்பல்கள் சிலவற்றின் பெயர்கள் பின்வருமாறு.

வர்ணகுலத்தான்

https://eelamaravar.wordpress.com/2019/01/06/cap-piraisoody/

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
  • நன்னிச் சோழன் changed the title to புலிப்படை முதல் விடுதலைப்புலிகள் வரை கப்டன் பிறைசூடி!


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922  
    • வவுனியாவில் முதலை தாக்கி முதியவர் பலி Published By: Vishnu 23 Dec, 2024 | 03:28 AM   வவுனியாவில் முதலை தாக்கியதில் சூடுவெந்தபுலவை சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக உலுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, நேற்றையதினம் மாடுகளை மேய்ப்பதற்காக பாவற்குளம் - சூடுவெந்தபுலவு பகுதிக்கு சென்ற வேளை அப்பகுதியில் காணப்பட்ட ஆற்றுப்பகுதியில் இறங்கிய போதே முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ளார். இச்சம்பவத்தில் சூடுவெந்தபுலவினை சேர்ந்தமூன்று பிள்ளைகளின்  தாயான 67 வயதுடைய ஆதம்பாவா முசிறியா என்பவரே பலியாகியுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உலுக்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.    
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.