Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீதி நிலைநாட்டப்பட வேண்டும் - தினேஸ் சாப்டர் குடும்பம் வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN    05 NOV, 2023 | 11:55 AM

image

பிரபல வர்த்தகர் தினேஸ் சாப்டரின் மரணம் குறித்து வழங்கப்பட்டுள்ள நீதிமன்ற தீர்ப்பினை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் பின்வரும் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்

அவர்கள் அதில் தெரிவித்துள்ளதாவது

நவம்பர் முதலாம் திகதி கௌரவத்திற்குரிய நீதிபதி தினேஸ்சாப்டரின் மரணவிசாரணை குறித்து இடம்பெற்ற நீதிமன்ற நடவடிக்கைகளில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்தார்.

நீண்டகால வலிமிகுந்த காத்திருப்பு முடிவிற்கு வந்தமை குறித்து தினேசின் குடும்பத்தவர்களாகிய நாங்கள் நிம்மதியடைகின்றோம்.அந்த விசாரணைகளில் இறுதியாக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.

கடந்த பல மாதங்களாக தினேஸ் சாப்டர் தற்கொலை செய்துகொண்டார் என்ற பிழையான கதையாடல்களால் இழைக்கப்பட்ட அநீதியை தவிர்ப்பதற்கு நாங்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டோம்.

கடந்த பல மாதங்களாக தினேசின் உடல் அகழப்பட்டு ஒய்வுமறுக்கப்பட்டு நாங்கள் கல்லறையின்றி அந்த துயரத்தை அனுஸ்டித்தோம்.

தற்போது இறுதியாக தினேஸ் கொலைசெய்யப்பட்டார் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அவரது மரணம் குறித்த உண்மையை உறுதிப்படுத்துவதற்காக பாடுபட்டவர்களிற்கு நாங்கள் நன்றியை தெரிவிக்கின்றோம்.

மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்தியது ஒரு ஆரம்பம் மாத்திரமே என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.

தினேஸ் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது மேலும் அநீதி இழைக்கப்படுவதை தவிர்த்துள்ளது அவ்வளவு மாத்திரமே -இதன் மூலம் நீதிநிலைநாட்டப்பட்டு விட்டதாக கருத முடியாது.

நீதித்துறையினர் தொடர்ந்தும் தினேசின் மரணத்திற்கு நீதியை நிலைநாட்டுவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

தினேஸ் எங்களின் பல சுமைகளை சுமந்ததுடன் நலிந்தவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் கைவிடப்பட்டவர்கள்  நோக்கி தனது கரங்களை நீட்டினார்.எங்கெல்லாம் அநீதியை பார்த்தாரே அங்கெல்லாம் அதற்கு எதிராக போரிட்டார்.என தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/168547

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தினேஷ் ஷாப்டரின் காப்புறுதித் தொகையை செலுத்துவதை ஒருவார காலத்துக்கு இடைநிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு!

08 NOV, 2023 | 05:21 PM
image

மர்மமான முறையில் உயிரிழந்த தினேஷ் ஷாப்டரின் காப்புறுதித் தொகையை செலுத்துவதை ஒரு வார காலத்துக்கு  இடைநிறுத்துமாறு சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவன அதிகாரிகளுக்கு கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்திர ராஜசூரிய இன்று புதன்கிழமை (08) உத்தரவிட்டுள்ளார்.

ஷாப்டரின் மரணம் குற்றம் என உறுதி செய்யப்பட்டுள்ளதால், இது தொடர்பில் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவு,  சம்பந்தப்பட்ட நபர்களுக்கு காப்புறுதி இழப்பீட்டை வழங்குவதை நிறுத்தி வைக்குமாறு  காப்புறுதி நிறுவன அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்தே ஒரு வார கால அவகாசம் வழங்கி நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

https://www.virakesari.lk/article/168844

  • கருத்துக்கள உறவுகள்
On 5/11/2023 at 15:39, ஏராளன் said:

Published By: RAJEEBAN    05 NOV, 2023 | 11:55 AM

image

பிரபல வர்த்தகர் தினேஸ் சாப்டரின் மரணம் குறித்து வழங்கப்பட்டுள்ள நீதிமன்ற தீர்ப்பினை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் பின்வரும் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்

அவர்கள் அதில் தெரிவித்துள்ளதாவது

நவம்பர் முதலாம் திகதி கௌரவத்திற்குரிய நீதிபதி தினேஸ்சாப்டரின் மரணவிசாரணை குறித்து இடம்பெற்ற நீதிமன்ற நடவடிக்கைகளில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்தார்.

நீண்டகால வலிமிகுந்த காத்திருப்பு முடிவிற்கு வந்தமை குறித்து தினேசின் குடும்பத்தவர்களாகிய நாங்கள் நிம்மதியடைகின்றோம்.அந்த விசாரணைகளில் இறுதியாக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.

கடந்த பல மாதங்களாக தினேஸ் சாப்டர் தற்கொலை செய்துகொண்டார் என்ற பிழையான கதையாடல்களால் இழைக்கப்பட்ட அநீதியை தவிர்ப்பதற்கு நாங்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டோம்.

கடந்த பல மாதங்களாக தினேசின் உடல் அகழப்பட்டு ஒய்வுமறுக்கப்பட்டு நாங்கள் கல்லறையின்றி அந்த துயரத்தை அனுஸ்டித்தோம்.

தற்போது இறுதியாக தினேஸ் கொலைசெய்யப்பட்டார் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அவரது மரணம் குறித்த உண்மையை உறுதிப்படுத்துவதற்காக பாடுபட்டவர்களிற்கு நாங்கள் நன்றியை தெரிவிக்கின்றோம்.

மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்தியது ஒரு ஆரம்பம் மாத்திரமே என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.

தினேஸ் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது மேலும் அநீதி இழைக்கப்படுவதை தவிர்த்துள்ளது அவ்வளவு மாத்திரமே -இதன் மூலம் நீதிநிலைநாட்டப்பட்டு விட்டதாக கருத முடியாது.

நீதித்துறையினர் தொடர்ந்தும் தினேசின் மரணத்திற்கு நீதியை நிலைநாட்டுவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

தினேஸ் எங்களின் பல சுமைகளை சுமந்ததுடன் நலிந்தவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் கைவிடப்பட்டவர்கள்  நோக்கி தனது கரங்களை நீட்டினார்.எங்கெல்லாம் அநீதியை பார்த்தாரே அங்கெல்லாம் அதற்கு எதிராக போரிட்டார்.என தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/168547

ஆனாலும் நீதி அமைச்சர் இவரின் மரணம் குறித்து நேற்று பாராளுமன்றில் தெரிவித்த கருத்து சில சந்தேகங்களை எழுப்புகிறது. சயனைடு உடம்பில் இருந்ததாக அறிக்கையில் தெரிவித்திருப்பதாக கூறினார். மேலு இது பற்றி விரிவான அறிக்கையை வெளியிடுவதாகவும் கூறினார். இவர்கள் எதோ சதி செய்வது போலத்தான் தோன்றுகிறது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வர்த்தகர் தினேஷ் சாப்டரின் உடலில் சைனட் கலக்கப்பட்டிருந்தமை பரிசோதனை அறிக்கையில் உறுதி - நீதியமைச்சர்

Published By: VISHNU    08 NOV, 2023 | 07:45 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வர்த்தகர் தினேஷ் சாப்டரின் உடலில் சைனட் கலக்கப்பட்டிருந்தமை பரிசோதனை அறிக்கை ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

சைனட் உடலில் கலந்ததுடன் மரணம் சம்பவிக்கும். மரணமடைந்ததன் பின்னர் கழுத்து மற்றும் முக பகுதிகளில் அழுத்தம் பிரயோகிப்பதற்கான அவசியம் என்னவென்பதை துறைசார் நிபுணர்கள் நீதிமன்றத்துக்கு எடுத்துரைக்க வேண்டும். 

இந்த அறிக்கைகள்  சட்டமா அதிபருக்கு இதுவரை அனுப்பி வைக்கப்படவில்லை. அறிக்கை கிடைத்ததன் பின்னர் வழக்கு தாக்கல் செய்யப்படும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.  

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) இடம்பெற்ற அமர்வின் போது வர்த்தகர் தினேஷ் சாப்டரின் மரணம் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

அவர் மேலும் உரையாற்றியதாவது,

வர்த்தகர் தினேஷ் சாப்டரின் மரணம்  நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்தால் பகிரங்கப்படுத்தப்பட்ட மற்றும் பொதுப்படுத்தப்பட்ட விடயங்களை மாத்திரமே  என்னால் குறிப்பிட முடியும்.

வர்த்தகர் தினேஷ் சாப்டரின் மரணம் தொடர்பில் பேராசிரியர் அசேல மென்டிஸ் தலைமையிலான ஐவர் அடங்கிய குழுவினர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த குழுவில் நால்வர் ஒருமித்த கருத்தை முன்வைத்துள்ள நிலையில் பேராசிரியர் ருவன்புர மாறுப்பட்ட கருத்தை முன்வைத்துள்ளார்.

தினேஷ் சாப்டரின் கழுத்து மற்றும் முக பகுதியில் பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் அல்லது நெரித்தல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளது என நால்வர் முன்வைத்த கருத்துக்கு மாறுப்பட்ட வகையில் பேராசிரியர் ருவன்புர சாப்டரின் மரணம் சூட்சமமான ஒரு கொலை  என்று குறிப்பிட்டுள்ளார்.

சாப்டரின் உடல் கூறுகளை கொண்டு முதல் குருதி பரிசோதனை, இரண்டாம் குருதி பரிசோதனை, வயிற்றுப் பகுதி மற்றும் வயிற்றுப் பகுதியில் இருந்த உணவுகூறுகள் மற்றும் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட பிளாஸ்டிக் கோப்பை இரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் சமர்ப்பித்த பரிசோதனை அறிக்கையில் முதல் குருதி பரிசோதனையில் 6.9 மில்லிகிராம் சைனட் குருதியில் கலக்கப்பட்டிருந்ததாகவும், இரண்டாம் குருதி பரிசோதனையில் 2.9 சைனட் குருதியில் கலக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் வயிற்று பகுதியில் இருந்து உணவு மற்றும்  ஏனைய பகுதிகளில் 4.9 சைனட் கலக்கப்பட்டிருந்ததாகவும், பிளாஸ்டிக் கோப்பையில் சைனட் அல்லது வேறு விஷ பதார்த்தங்கள் இருக்கவில்லை என்று அறிக்கை ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வர்த்தகர் தினேஷ் சாப்டரின் உடலில் சைனட் கலக்கப்பட்டிருந்தமை பரிசோதனை அறிக்கை ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.சைனட் உடலில் கலந்ததுடன் மரணம் சம்பவிக்கும்.மரணமடைந்ததன் பின்னர் கழுத்து மற்றும் முக பகுதிகளில் அழுத்தம் பிரயோகிப்பதற்கான அவசியம் என்ன என்பதை துறைசார் நிபுணர்கள் நீதிமன்றத்துக்கு எடுத்துரைக்க வேண்டும். இந்த அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. அறிக்கை கிடைத்ததன் பின்னர்  வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/168854

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயுள் காப்புறுதி பங்கீடு தொடர்பான உத்தரவு தளர்வு!

dinesh.jpg

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சார்பாக அவரின் பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய ஆயுள் காப்புறுதி பலன்களை ஒரு வாரத்துக்கு இடைநிறுத்துமாறு இரண்டு காப்புறுதி நிறுவனங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவு நீதிமன்றத்தால் தளர்த்தப்பட்டுள்ளது.

குறித்த தரப்பினருக்கான காப்புறுதி கொடுப்பனவை நிறுத்த வேண்டிய தேவைப்பாடு தொடர்ந்தும் இல்லையென கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்ரா ஜயசூரிய நேற்று அறிவித்துள்ளார்.

அத்துடன் நட்டயீட்டை பெற்றுக் கொள்ள சில தரப்பினர் முயற்சிப்பது குறித்து எந்தவித ஆதாரங்களும் கிடைக்கப்பெறவில்லை எனவும் நீதவான் அறிவித்துள்ளார்.

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் குற்றச்செயல் என உறுதியாகியுள்ளது.

இந்தநிலையில், வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சார்பாக அவரின் தரப்பினருக்கு காப்புறுதி நட்டயீடு வழங்கப்படுவதை ஒரு வார காலத்திற்கு கைவிடுவதற்கான உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு பொலிஸார் அண்மைய வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தை கோரியிருந்தனர்.

ஜனசக்தி குழுமத்தின் முன்னாள் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டர், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி பொரளை பொது மயானத்துக்கு அருகில் தமது காரில் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டார்.

பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

https://thinakkural.lk/article/281396

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.