Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழ விடுதலைப்புலிகளின் தகட்டு இலக்கங்களும் சீருடைகளும் - கொக்குத்தொடுவாய் ஏனைய மனித புதை குழி அகழ்வுகளிற்கு உதவுவதற்காக சர்வதேச அமைப்பு அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN    14 NOV, 2023 | 10:27 AM

image

கொக்குத்தொடுவாயிலும் எதிர்காலத்தில் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் மனித புதைகுழி அகழ்வில் ஈடுபடவுள்ளவர்களிற்கு உதவியாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தகட்டு இலக்கங்களும் சீருடைகளும் எனும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது

வட இங்கையின் போர்நடந்த பகுதியில் நீர்வழங்கல் பணிக்காக தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள்

கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் மனிதப் புதைகுழி ஒன்றினை கடந்த 2023 யூன் 29 அன்று கண்டுபிடித்தார்கள். 1990கள் முதல் இப்பகுதியில் பல இராணுவ முகாம்கள் அமைந்திருந்தன. அவர்கள் உடனடியாகவே முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு தகவல்தெரிவித்தார்கள். நீதிமன்றம் அப்பகுதியை பூட்டிவைத்ததுடன் அகழ்வுப்பணிக்கும் உத்தரவிட்டது. யூலை 6ஆம் திகதிஆரம்பிக்கப்பட்ட முதலாம்கட்ட அகழ்வுப்பணியின்போது சீரற்ற முறையில் போடப்பட்டிருந்த 17 பெண்களதும் ஒரு ஆணினதும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்  தெரிவித்துள்ளது.

 

இப்புதைகுழிகளில் மீட்கப்பட்ட சீருடைகள் தமிழீழ விடுதலைப்புலிகளின் சீருடைகளை ஒத்தவையாக இருந்தன. அத்துடன் பிளாஸ்டிக் மற்றும் கம்பிகளும் மீட்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.

யூலை 12ஆம் திகதி முல்லைத்தீவில் காணாமற்போனவர்களின் குடும்பங்கள் நடைபெற்றுவரும் அகழ்வுப்பணிகளுக்கு 'சர்வதேசமேற்பார்வை வேண்டுமென்று' கோரிக்கை விடுத்தனர். கடந்த யூலை 29ம் திகதிஇ புதைகுழிக்கு நீதிகோரி சிறிலங்காவின் வடக்கிலும் கிழக்கிலும் கர்த்தால் கடைப்பிடிக்கப்பட்டது என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்  தெரிவித்துள்ளது.

kokuthoduvai_human_remains.jpg

பல தசாப்த்தங்களாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் உள்ள ஒரு பாரிய மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டிருந்த பல விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளது சடலங்கள் எனத் தோன்றும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதானது சிறிலங்காவிலும்புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் பெரிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. நிலைமாற்று நீதி கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்றசிறிலங்கா அரசாங்கம் நீண்டகாலமாக வாக்குறுதி வழங்கும் நிலையில் இராணுவம் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் மனித உரிமை மீறல் வழக்கொன்றினை அரசாங்கம் எவ்வாறு கையாள்கின்றது என்பதற்கான ஒரு பரிசோதனையாகவே இப்புதைகுழி அகழ்வுப்பணி மாறியுள்ளது என சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

 

itjf அண்மையில் வெளியிட்ட பாரிய மனிதப் புதைகுழிகள் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டது போன்று சிறிலங்காவில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணிகளில் பெரும் பிரச்சினைகள் நிறைந்திருந்தன என சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

 

சிறிலங்காவின் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சீருடைகள் மற்றும் அடையாளத் தகடுகள் தொடர்பானதே இச்சிறுஅறிக்கை. தற்போதும் எதிர்காலத்திலும் சிறிலங்காவின் பாரிய மனிதப் புதைகுழிகளை அகழ்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வல்லுநர்களுக்கு உதவியாக இருக்கும் என்னும் நம்பிக்கையிலேயே இது வெளியிடப்படுகின்றது. போர் நடந்த சிறிலங்காவின் வடக்குப் பகுதியிலுள்ள முல்லைத்தீவுக்கு அருகிலுள்ள கொக்குத்தொடுவாயிலுள்ள மனிதப் புதைகுழியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போர் வீரர்களது மனித எச்சங்கள் இவ்வாண்டில் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னணியிலேயேஇக்குறிப்பு வெளிவருகின்றது என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்  தெரிவித்துள்ளது.

 

இவ்வெளியீட்டிலுள்ள தகவல்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு கொக்குத்தொடுவாய் புதைகுழி எந்தக் காலப்பகுதியைச்சேர்ந்தது என்பது தொடர்பில்  எந்தக் கருத்தையும் வெளியிட முடியாது. இப்புதைகுழியின் காலப்பகுதியைத் தீர்மானிப்பதுகளத்திலுள்ள தடயவில் மற்றும் இதர வல்லுனர்களையே  சாரும். இதர தொடர்புபட்ட தகவல்களை உறுதிப்படுத்துவதற்கு அல்லது சில கோட்பாடுகளை நிராகரித்துவிடுவதற்கு அவர்களுக்கு உதவியாக இருக்கக்கூடிய தகவல்களையே இவ்வெளியீட்டில்என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்  தெரிவித்துள்ளது.

 

சுவிற்சர்லாந்து நோர்வே பிரான்ஸ் சிறிலங்கா மற்றும் பிரித்தானிய ஆகிய நாடுகளில் வசிக்கும் முன்னாள் ஆண் பெண்போராளிகள் 25 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்களின் அடிப்படையாகக்கொண்டே இதிலுள்ள தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

நேர்காணப்பட்டவர்களில் விடுதலைப் புலிகளின் சிறுத்தைப் படையணி, இம்ரான் பாண்டியன் படையணி, தலைமைச் செயலகம், அரசியல்துறை, நிதித்துறை, சாள்ஸ் அன்ரனி படையணி, ராதா படையணி மற்றும் கடற்புலிகள் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்  தெரிவித்துள்ளது. இவர்களில் 1995 யூலையில் கொக்குத்தொடுவாயிலிருந்த சிறிலங்கா இராணுவ முகாம்கள்மீது விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டு தோல்வியில் முடிவடைந்த தாக்குதலில் பங்கு பற்றி உயிர்தப்பிய ஒருவரும் உள்ளடங்குவார். 1990களின் நடுப்பகுதியில் உடலங்கள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக விடுதலைப்புலிகளிடம் ஒப்படைக்கப்பட்ட விடுதலைப் புலிப் போராளிகளின் உடலங்களை நேரில் பார்த்ததாக முன்னாள் ஆண் போராளி ஒருவரும் பெண் போராளி ஒருவரும் கூறினர். அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட ஆண் பெண் இருபாலாரது உடலங்களது பால் உறுப்புக்கள் சிதைக்கப்பட்டிருந்தாக அவர்கள் விபரித்தார்கள் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்  தெரிவித்துள்ளது.

 

போரிலிருந்து தப்பி தற்போது வெளிநாடுகளில் அல்லது சிறிலங்காவிற்குள் வாழும் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் தங்களது கடந்த காலத்தின் இவ்விபரங்கள் பற்றி உரையாடுவதால் நிச்சயமாக பாதுகாப்புப் பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள் என்பதை இவ்வறிக்கை ஏற்றுக்கொள்கின்றது. வெளிநாடுகளில் வசிப்பவர்களில் பலர் தங்கள் பாதுகாப்புத் தொடர்பாக அச்சம் கொண்டதுடன் தாங்கள் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டாம் என்றே விரும்பினார்கள் என்பதைக் குறிப்பிடுவது முக்கியமானதாகும். எனினும் முன்னாள் போராளிகளது சடலங்களை அடையாளம் காண்பதற்கு உதவுவதற்கும் முடிந்தால் சில குடும்ப உறுப்பினர்களின் தேடுதலுக்கு முடிவு கட்டவும் இவர்கள் ஒவ்வொருவரிடமும் உள்ள இவ்வாறான பெறுமதியான தகவல்கள் எவ்வளவு முக்கியமாவை என்ற கேள்வி எழத்தான் செய்கின்றது என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்  தெரிவித்துள்ளது.

தங்களுக்குத் தெரிந்த விடயங்களை எங்களிடம் பகிர்ந்துகொள்வதற்கு முன்வந்த முன்னாள் போராளிகளுக்கு எங்களது பெருநன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம். சில சந்தர்ப்பங்களில் தற்போது சிதைக்கப்பட்டுள்ள கடந்த கால உலகத்தினையும் இறந்து போன தங்கள் தோழர்களது நினைவுகளையும் மீட்டுப்பார்ப்பது சிலருக்கு கவலையினை ஏற்படுத்தியிருந்தது. அகழ்வுப்பணிகளில் ஈடுபடும் சிறிலங்காவிலுள்ள சமூகங்களுக்கு தம்மால் உதவக்கூடும் மற்றும் நீதிக்கானபோராட்டத்தில் தம்மாலான பங்களிப்பினை வழங்க முடியும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொருவரும உடனடியாக உதவ முன்வந்தார்கள் என சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

 

குறிப்பிட்ட அறிக்கையின் முழுவிபரம் வருமாறு

விடுதலைப் புலிகளின் அடையாளப்படுத்தல் முறைகள்

ஒருவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணையும்போது தலைமைச் செயலகத்தைச் சேர்ந்தவர்களால் 8-12 பக்க சுயவிபரத்திரட்டல் எடுக்கப்படும். இவ்விபரங்கள் பின்னர் இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு அனுப்பி உறுதிப்படுத்தப்படும்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் இணையும்போது அனைவருக்கும் இயக்கப்பெயர் வழங்கப்படும். அமைப்பில் இருக்கும்போது அவர்கள் தங்கள் சொந்தப் பெயரைப் பயன்படுத்தமாட்டார்கள். பல பேராளிகளுக்கு ஒரே பெயர் இருக்கும் அதனால் அவர்களை அடையாளப்படுத்துவதற்கு அவர்களது தகட்டு இலக்கங்கள் அத்தியாவசியமானதாக இருக்கும்.

அவர்கள் அடிப்படைப் பயிற்சி நிறைவின்போது புதிய உறுப்பினர்களுக்கு தகடும் குப்பியும் வழங்கப்படும். அவர்களது சொந்தப் பெயர்களும் தனிப்பட்ட விபரங்களும் தலைமைச் செயலகத்திலேயே வைக்கப்பட்டிருக்கும் வேறு எவரும் அவ்விபரங்களைப் பார்க்க முடியாது. 

ltte_tags.jpg

தகடுகள்

விடுதலைப் புலிப் போராளிகளிடம் ஒரே இலக்கத்தைக் கொண்ட 3 தகடுகள் இருக்கும் - ஒன்று கழுத்தில் அணிவார்கள், இது அனைவருக்கும் கட்டாயமானது. அத்துடன் சண்டைக்குச் செல்லும் போராளிகளுக்காக ஒன்று இடுப்பிலும் (நீண்டதும் குறுகியதாகவும் இருக்கும்) மூன்றாவது மணிக்கட்டில் கட்டுவதற்காக மெல்லிய நீண்ட தகடும் அணிவார்கள். சண்டையின்போது உடல் சிதைவடைந்தால் அவற்றை அடையாளம் காண்பதற்கு வசதியாகவே கையிலும் இடுப்பிலும் தகடு அணியப்பட்டது.

பொதுவாகவே இத்தகடுகள் கறுப்பு நிற நூலில் தொங்கவிடப்படும் - ஆனால் சிலர் குறிப்பாக புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர்கள் சங்கிலியில் அணிவார்கள். கழுத்துத் தகட்டில் ஒரு துளையும் மற்றைய இரண்டிலும் இரு துளைகளும் இருக்கும்.

இம்மூன்று தகடுகளிலும் ஒரே இலக்கமே இருக்கும்.

பெரும்பாலான நேரங்களில் போராளி ஒருவருடைய குருதி வகை அவருடைய இலக்கத் தகட்டில் பதியப்பட்டிருக்கும்.

காலப்போக்கில் படையணிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் விடுதலைப் புலிகளிள் படையணிகளின் தகட்டு இலக்கங்களுக்கு வழங்கப்பட்ட முதல் எழுத்துக்கள் காலப்போக்கில்மாற்றமடைந்தன. 1992 காலப்பகுதியில் வன்னி மாவட்ட இராணுவப் பிரிவு என்றும் எழுத்தினைப் பயன்படுத்திய அதேவேளையில் மன்னார் மாவட்டப் படையணிக்கு ஊ வழங்கப்பட்டிருந்தது.

 

1991-1995 வரை யாழ்ப்பாண மாவட்ட மகளிர் படையணி எ என்னும் இலக்கத்தைப் பயன்படுத்தியது. 1995 இன் பின்னர்இப்படையணி மாலதி படையணி மற்றும் சோதிய படையணியாக மாற்றப்பட்டது.

2002இல் சமாதான முயற்சிகள் தொடங்கிய பின்னர் விடுதலைப் புலிகள் தங்களது இராணுவக் கட்டமைப்பில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தார்கள். முகமாலையில் வடபோர்முனைக் கட்டளைப்பணியகத்தையும் வவுனியா புளியங்குளத்தில் தெற்கு கட்டளைப் பணியகத்தையும் ஆரம்பித்தார்கள். வடபோர்முனைக் கட்டளைப் பணியகத் தளபதியாக கேணல். தீபன் நியமிக்கப்பட்டார். இவர் ஆரம்பத்தில் வன்னி மாவட்டப் படையணியில் இருந்தார். இவர்கள் வன்னி மாவட்டம் பயன்படுத்திய எழுத்தையே தொடர்ந்தும் பயன்படுத்தினார்கள்.

 

2009 பெப்ரவரி மார்ச்சின் பின்னர் விடுதலைப் புலிகளால் தங்களது தகட்டினை உலோகத்தில் தயாரிக்க முடியவில்லை. ஆனால் அவர்கள் லமினேட் செய்யப்பட்ட கடதாசித் தகடுகளையே புதிய போராளிகளுக்கு வழங்கியதாகச் சொல்லப்படுகின்றது. அத்துடன் 2009 மே இல் போர் முடிவடைந்த நிலையில் கடைசியாக எதுவரை தகடுகள் வழங்குவதை நிறுத்திக்கொண்டார்கள் என்பது தொடர்பில் தெளிவாகத் தெரியவில்லை. 

 

இலக்கம் வழங்குதல்

சில இலக்கத் தகடுகளில் தமிழ் முன்னெழுத்துக்குப் பதிலாக பூச்சியம் எண் (0) காணப்படுவதுடன் அதற்குப் பின்னர் போராளிகளின் உறுப்பினர் எண்கள் உள்ளன.

ஒவ்வொரு படையணிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட இலக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன. 0: 1-5000 வரையான இலக்கங்கள் இம்ரான் பாண்டியன் படையணிக்கும், 0: 5000-6000 வரையான எண்கள் தலைமைச் செயலகத்திற்கும், 0: 6000 - 9000 வரையான எண்கள் அரசியல்துறைக்கும் வழங்கப்பட்டிருந்தன. 2002 ஆம் ஆண்டில் இம்ரான் பாண்டியன் படையணி மூன்று அலகுகளாகப் பிரிக்கப்பட்டனது: இம்ரான் பாண்டியன் படையணி, ராதா படையணி, படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரி ஆகியவையே அவையாகும். ராதா படையணிக்கும் 0:0001 - 5000 வரையான இலக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன. 4

தகட்டு இலக்கம் அவர் எப்போது விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தார் என்பதை சுட்டிக்காட்டவேண்டிய அவசியம் இல்லை.

ஆயினும் ஒவ்வொரு பிரிவுகளிலும் அவர்களது சேவைக்காலத்தில் வரிசையிலேயே தகட்டு இலக்கங்கள் வழங்கப்படும்.

விடுதலைப் புலிகள் மரணமடைந்த அல்லது இயக்கத்தை விட்டு விலகிச்சென்றவர்களுக்கு வழங்கப்பட்ட இலக்கங்களை மீளவும்

பயன்படுத்தினார்களா என்பது தொடர்பில் மாறுபட்ட தகவல்கள் உள்ளன. படையணிகளுக்கு ஒதுக்கப்பட்ட இலக்கங்கள்

முடிவடைந்ததும் அவை மீளவும் பயன்படுத்தப்பட்டன என சிலர் கூறுகின்றார்கள். அத்துடன் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை தகட்டு

இலக்கங்கள் மீள் ஒழுங்குபடுத்தப்பட்டன. அவர்களது மீள் ஒழுங்குபடுத்தல் நடைபெற்றபோது ஒருவர் மரணமடைந்து அல்லது

இதர பிரிவுகளுக்கு மாற்றலாகிச் சென்றிருந்ததால் இயக்கத்தில் இணைந்த கால வரிசையில் அவ்விலக்கங்கள் வேறு நபர்களுக்கு

வழங்கப்பட்டன.

4 முன் எழுத்தானது தமிழ் எழுத்தில்லாமல் பூச்சியமாக இருப்பதைப் பார்க்கவும்.

8

போர்முடிவடைந்த பின்னர் சிறிலங்கா அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்ட விடுதலைப் புலிப் போராளிகள் தங்களது தகட்டு இலக்கத்தைப் படையினர் கேட்டுப் பதிவுசெய்தார்கள் என்றும் தாம் தங்களுக்கு இறுதியாக வழங்கப்பட்ட தகட்டு இலக்கத்தையே தாம் வழங்கியதாகவும் தெரிவித்தார்கள். 

https://www.virakesari.lk/article/169231

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.